Saturday, December 09, 2006

(79) சிவம் என்பது சிற்றின்பம் என சிறுமைப்படுத்திய சிறுமதி

அதென்ன நமீதா படம்? செந்தழல் ரவி கேட்டுக்கொண்டார் அதனாலேயே! முழுக்கப்படியுங்கள்!
தாம்பத்யம் என்கிற பரப்பிரம்ம விஷயம் இன்றைக்கு சிற்றின்பம் என்கிற அளவில் சிறுமதியாளர்களால் சிறுமைப் படுத்தப்பட்டு நாற்றமெடுப்பது மாதிரியான கெடுதியான சமூகச் சீரழிவு வேறில்லை!

ஒரு யாகசாலைக்கு ஒப்பான தெய்வீகத்தன்மை உடைய உன்னதமான தாம்பத்யம் என்கிற விஷயம் அநாகரீகமான புலன்சார் சிற்றின்பமாக உருத்திரிந்து அதன் விளைவாக பெண்கள் என்றாலே முகம் பார்த்து உள்ளம் அறிந்து பேசுவது விடுத்து உடல் நோக்கிப் பேசி, பெண்களை கேவலமாக வருணிப்பது என்பதாகிய பகுத்தறிவோடு இருத்தல் என்று திரிந்து நாற்றமெடுக்கிறது.

இந்தியாவில் இன்றைக்குத் தமிழகத்தில் மட்டுமே பேருந்தில் சக பெண் பயணி ஆணின் அருகே அமர்ந்து பயணித்திடும் நிலையிருக்கிறதா? சமத்துவம், சீர்திருத்தம், பகுத்தறிவுக் கூப்பாடுகள் வந்தபின்பு பெண்கள் பேருந்தில் கூறுகட்டப்பட்டு, கூண்டுமாதிரி பேருந்தின் முன்புறம் மிகவும் முன்னேறிய நிலை அடைந்திருக்கிறார்கள்.

ஆணுக்கில்லாத பெருமை சிறப்பு பெண்ணுக்கு இயற்கையாகவே இருக்கிறது. பெண்ணின் கர்ப்பப்பையும் கோவிலின் கர்ப்பக்கிரஹமும் மிகப்புனிதமானவை. பெண்ணின் உயிர் சக்தியோடு ஆணின் உயிர் சக்தி இணைகின்றபோது முதலில் அது கருவாக ஆணுமற்ற பெண்ணுமற்ற பரப்பிரம்மமாகவே இருக்கிறது.


தாம்பத்யம் என்கிற செயலினால் பெண்ணின் கர்ப்பப்பையில் ஆணின் உயிரணுவும் பெண்ணின் உயிரணுவும் இணைந்து நிலையில் இருக்கும் உயிரற்ற கருவானது அமைதிநிலையான ஆணுமற்ற பெண்ணுமற்ற பரப்பிரம்மமாகவே ஆரம்பநிலையில் இருக்கிறது. இறைசக்தி ஆத்மா உள்நுழைந்து அது பிற்பாடு வாஸனா கர்மா பேலன்ஸ்ஷீட் இவைகளினால் ஆணாகவோ பெண்ணாகவோ உயிர்பெற்று கருவானது மேலும் வளர்ந்து குழந்தையாகப் பிறக்கிறது.

இன்னொரு உயிரை இறைவன் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையின் உட்புகுந்து உருவாக்கியதனாலேயே.. இறைவன் வந்து செல்கின்ற இடமான கர்ப்பப்பையைத் தாங்குகிறதாலேயே தாயைத் தொழுவது, வழிபடுவது எல்லாம் இதனாலேயே. சமூகத்தின் நாம் பார்க்க இறைவன் வந்து செல்கின்ற இடம் தாய்!

இந்துக் கோவிலைச் சுற்றி சிவப்பு வெள்ளைப் பட்டை அடிப்பதன் காரணமும் இதுவே!

சிவப்பு பெண்ணின் உயிரணுவையும் , வெண்மை ஆணின் உயிரணுவையும் குறிக்கிறது. இந்த இரண்டும் கலக்கும்போது எப்படி அமைதியான பரப்பிரம்மம் உருவாகிறது அதுவே கடவுள்!

இப்படிக் கருவாக இருந்த பரப்பிரம்மம் ஆணாகவோ பெண்ணாகவோ அதன் 50% இழந்து பிறந்து வளர்ந்து வந்தநிலையில் ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் திருமணம் செய்து வைத்து அவர்கள் மீண்டும் முதன்முறையாக தாம்பத்தியம் மூலமாக கூடுவதற்கு "சாந்தி"முகூர்த்தம் என்று பெயர்! பரப்பிரம்மத்தில் 50% இழந்து அமைதியற்று இருந்த ஆண், பெண் மீண்டும் கூடி பரப்பிரம்மத்தை ஏற்படுத்தி என்று மனிதனின் உயிர்ச்சுழற்சி நடக்கிறது!

அன்று பிறந்த குழந்தை இறைவனிடதிலிருந்து நேரடியாக வந்த அற்புதம். பெரிய தலைவர், நட்சத்திரமான நடிகன் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்து அதில் மிச்சமிருக்கும் சூட்டை அனுபவித்துப் பேரானந்தம் அடைகிற பகுத்தறிவின் உதவியோடு இறைவனை குழந்தையின் மூலம் பார்க்க முடிவதில்லை!

குழந்தை சிற்றின்பத்தின் விளைவு என்று அறிவியல் பேசி பெண் சுமை என்று பரப்பிரம்மத்தைக் கருவிலேயே பகுத்தறிவோடு கலைத்து சமூகத்தில் கேட்டை பிரதானப் படுத்தியிருக்கிறது! இந்தமாதிரி ஆக்கமான பகுத்தறிவுச் சிந்தனையோடு இருப்பவர்களால் தாம்பத்தியம் மீறி சிவத்தினை மறந்து சிற்றின்பமாக மட்டுமே கருதி உடல்-புலன் இன்பம் மட்டுமே பிரதானம் என்று செயல்படும் நவயுக பகுத்தறிவு அறிவியல் விஞ்ஞானிகள் அதாவது எந்த உடல் முறையற்ற புலன் ஆசையால் சிற்றின்பமே சிறப்பானது என்று கூப்பாடு போட்டு அறிவிலியாக வேதநெறிக் கலாச்சாரத்தினை கழுத்தை நெறித்து நடப்பவர்களுக்கு அதே உடலின் எதிர்ப்பு முற்றாக முடக்கி எத்தனை ட்யூரக்ஸ்கள் உபயோகித்தாலும் "எய்ட்ஸ்" என்பதில் முழுக்கப் புதைத்திருக்கிறது!

வெகுஜன தமிழ்பத்திரிக்கை, புத்தகமெங்கும் கவர்ச்சி போட்டோக்கள், அடுத்த இளைய தலைமுறையை "வழிநடத்தும் " தமிழ் சினிமாவில் டூ பீஸில் நங்கைகளின் கண்டிப்பான குத்தாட்டம், தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர்களுக்காகவே கேரளத்தில் எடுக்கப்படும் "அஞ்சரைக்குள்ள வண்டி" ...இன்பவெறி படங்களுக்காக தலையில் துண்டுபோட்டும், போடாமலும் ஊருக்கு ஒதுக்குப்புறமான தியேட்டர்களில் வெள்ளித்திரையில் கண்டுகளித்து பெரிய சிந்தனாவாதிகளாக மாற சிற்றின்ப பகுத்தறிவு சமூகத்தைச் சின்னா பின்னமாக்கியிருக்கிறது!

சிற்றின்பச் சிந்தனைகளைச் சரி என்கிற சிறுமதியாளர்கள் சிவத்தினை சிறுமைப்படுத்துவதாக சிக்கலில் சிக்கித் தவிப்பது நிதர்சனம். இந்தியாவில் தமிழகம் எய்ட்ஸில் முன்ணணி வகிக்க முழுமுதல் காரணம் வேத நெறியை கழுத்தை நெறித்து மறுத்தலே!

சிற்றின்பத்தைச் சிவமென தொங்கிக்கொண்டு நிற்பவர்கள் ஆன்ம எழுச்சியோடு சிவத்தைச் சிந்தித்தாலே சீர்கெட்ட சமூகம் சீர்படும்!

சர்வம் சிவமயம்! இந்தியாவில் தமிழகத்தில் மீண்டும் வேத நெறி வெகுஜன நெறியாகவேண்டும்!

அன்புடன்,

ஹரிஹரன்

6 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

Hariharan # 26491540 said...

அய்யா கருப்பு,

வந்து பின்னூட்டம் போட நேரத்தைச் செலவு செய்து என்மீது தனிப்பட்ட வசவு பாடுவதை விட்டு விட்டு பதிவு பற்றிக் கருத்துச் சொன்னால் சரியாக இருக்கும்!

வெளிகண்ட நாதர் said...

//தாம்பத்யம் என்கிற பரப்பிரம்ம விஷயம் இன்றைக்கு சிற்றின்பம் என்கிற அளவில் சிறுமதியாளர்களால் சிறுமைப் படுத்தப்பட்டு நாற்றமெடுப்பது மாதிரியான கெடுதியான சமூகச் சீரழிவு வேறில்லை!//சரியாக சொன்னீர்கள்! வாழ்வில் மறந்த சிற்றின்ப சந்தோஷத்தை இந்த பதிவில்! சொல்லி இருக்கிறேன்!

Krishna (#24094743) said...

ஹரி: பட்டையைக் கிளப்புகிறீர்கள். அற்புதமான கருத்துக்கள். கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது - உங்களிடமிருந்து.

பகவலன்கள் யாரும் உங்கள் பதிவுகள் பக்கம் வருவதாகவே தெரியவில்லை. அந்தக் குறையை நீக்க குதர்கமாக
உங்களுக்காகவே ஒரு பகுத்தறிவுக் கேள்வி:

எங்கள் ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செவப்பு, வெள்ளை பெயிண்ட் தான் அடிச்சிருக்காங்க. அப்போ கோவிலும் அதுவும் ஒண்ணா? :-)

Hariharan # 26491540 said...

கிருஷ்ணா,

//பகவலன்கள் யாரும் உங்கள் பதிவுகள் பக்கம் வருவதாகவே தெரியவில்லை. //

எப்போதுமே கருவாட்டு நாத்தத்திலேயே இருப்பவர்களுக்கு பூக்கடையின் பூவாசம் குமட்டத்தானே செய்யும்! ஆச்சர்யப்பட ஏதுமில்லையே!

//எங்கள் ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செவப்பு, வெள்ளை பெயிண்ட் தான் அடிச்சிருக்காங்க. அப்போ கோவிலும் அதுவும் ஒண்ணா? //

அதெப்படி ஒண்ணாகும்? கோவிலின் சிவப்பு வெள்ளை இணைப்பை, ஆக்கத்தைக் காட்டுவது!

போலீஸ் ஸ்டேஷன் சிவப்பு வெள்ளை பகுத்தறிவுப் போலீஸ் பொய்கேசில் உள்ளெ தள்ளி அடிபின்னி எடுப்பதினால் அப்பாவி பொதுஜனம்/நேர்மையாளன் சிந்தும் இரத்தத்தின் சிவப்பணு வெள்ளையணு சிதறிய ஆக்கங்கெட்டதைக் குறிப்பால் உணர்த்துவது!

கோவிலுக்குப் போனால் மனநிம்மதி கிடைக்கும்.

போலீஸ்ஸ்டேஷனுக்குப் போனால் இருக்கிற நிம்மதியும் போகும்!

நிறம் மட்டுமே ரெண்டையும் சமமாக்கிவிடும் என்று பகுத்தறிவு வேண்டுமானால் கருதலாம்! :-)))

✪சிந்தாநதி said...

//தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர்களுக்காகவே கேரளத்தில் எடுக்கப்படும் "அஞ்சரைக்குள்ள வண்டி" ...இன்பவெறி படங்களுக்காக தலையில் துண்டுபோட்டும், போடாமலும் ஊருக்கு ஒதுக்குப்புறமான தியேட்டர்களில் வெள்ளித்திரையில் கண்டுகளித்து பெரிய சிந்தனாவாதிகளாக மாற சிற்றின்ப பகுத்தறிவு சமூகத்தைச் சின்னா பின்னமாக்கியிருக்கிறது!//

எழுதிய விஷயத்துக்கு தேவையேயில்லாமல் இது தேவையா? இதுக்கு பதில் சொல்ல ஆரம்பித்து தான் ஊர் இரண்டு பட்டி கிடக்கு. இருக்கிற அறிவை ஏனய்யா இப்படி வீண்டிக்கிறீர்? இப்படித்தான் கறுப்புகளும் சிவப்புகளும் உருவாக நீங்களே வழிவகை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

இதைத்தான் அய்யா சொந்த செல்வில் சூனியம் என்று வலைஉலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.