(80) இன்னிக்கு எம்மனசே சுத்தமாச் சரியில்லீங்க...
சே! மனசே சுத்தமாச் சரியில்லீங்க... வம்பு தும்புக்குப் போவாத என்னைப் பற்றி இப்படியா? யாருக்குமே நான் கெடுதல் நினைச்சதில்லீங்க என்னை இப்படி அசிங்கப்படுத்தலாமா? இதுநாள் வரைக்கும் நான் உண்டு என் வேலை உண்டுன்னு ஒதுங்கி தொந்தரவு செய்யாம நாம்பாட்டுக்குச் சிவனேன்னு வாழ்க்கை நடத்துறேங்க... என்னைப்போய் கூட்டமாச் சேர்ந்து குப்பை குப்பையா கூறுகெட்டுப் பேசித் திரிகிறார்கள்... தினசரி இப்படியான எத்தனையோ புலம்பல்கள்..
இன்னும் நிறையப் பேர் ஆ.. ஊன்னா மூட் அவுட் ஆகிவிடுகிறார்கள்! ஒரு நாளைக்கு சாலையில் இருக்கும் குண்டு குழிகளைக்கூட கணித்துவிடலாம். இவர்களது சிந்தனை பயணப்படும் மனச்சாலையில் மூட் அவுட் குழிகள் எத்தனை எப்போது வரும் என்பது அவருக்கே தெரியாது...
புது லூயி பிலிப் சட்டை 1800 ரூபாய்க்கு டவுசர் டவுனில் வ்ரிங்கிள் ஃப்ரீ டிரவுசர் 2500 ரூபாய்க்கு வாங்கிப் போட்டுக்கொண்டதை இன்னிக்கு ஆபிஸில் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் எவனுமே கண்டுக்கவே இல்லை... டவுசர் பாண்டியின் புலம்பல் இது.
அடிப்படையில் இப்படி ஒரு சிந்தனை.... எழக் காரணம் உள்ளே ஊறிப்போன தாழ்வு மனப்பான்மை. அடுத்தவர் அங்கீகரிப்புக்கு கிடையாய் கிடந்து அலைவது! அங்கீகாரப் பிச்சையெடுப்பது! அன்றைய தினம் திருவோட்டில் அங்கீகாரப் புன்முறுவல், பொய்யாகவேனும் பாராட்டுக்கள், என்று எதிர் பார்த்து அது கிடைக்காமல் போய்விடும் போது அதன் விளைவாய் எழும் வார்த்தையே வெகுபிரபலாமான... மனசே சுத்தமாச் சரியில்லீங்க!
பகுத்தறிவுப் பாசறையில் தேர்ந்த எந்தக் கழகம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் ஆனால் நிரந்தரமாக ஆறாக ஓடுவது சாராயம். இன்றைய அரசுத்துறை டாஸ்மாக்குகளாகிய நேற்றைய ஏ.பி.சி.... ஒயின்ஷர்ப்புகளின் வலிமையான பிஸினஸுக்கு வலியுடனான இந்த மகா வாக்கியமான " மனசே சுத்தமாச் சரியில்லீங்க" என்பது பிரதான காரணம்.
ஈர்ப்பின் காரணமாகவும், முழுமையான அறிவுடனும் யோசித்துச் செய்கின்ற காதல் பம்ப் பூர்வமானதாக ஆரம்பித்து ( இதயம் = ரத்த பம்ப்) முறிகிற போது ஒடிந்து போகிறதோ அப்பாவியான மனசு! அம்மாதிரியே உன்னதமான காதல் வெற்றியானால் உடல் வெறி அடங்கியதும் மகிழ்ச்சி ஓட்டமாக முதலில் ஓடிப்போகிறது! இப்போது மீண்டும் வெறுமையாக "வெறிச்"சோடிப் போவதும் மனசு!
எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் பெரும்பான்மையானவர்களால் தொடர்ந்து உணரப்படுவது என்று பொருள்சார் உலகியல் சமூக மகாவாக்கியமாக " மனசே சுத்தமாச் சரியில்லீங்க" என்பது வாக்கெடுப்பு, கருத்துக்கணிப்பு நடத்தப்படாமலே இந்தியா டுடேவையும், இட்லி வடையையும் சோகப்படுத்திவிட்டு "அன்-அப்போஸ்டாக" வெற்றிவாகை சூட்டப்பட்டுவிடுகிறது!
சரி...சிறிய பொது அறிவு / சிறு வேத நெறி அறிவுடனான ஆராய்ச்சியை மேற்கொள்வோம்.
மனசே சுத்தமாச் சரியில்லை என்று ஆரம்பிக்கும் வேள்வி விடையறிய பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் போவதனால் எடை கூடி அடுத்த கட்டமாக சே!மனசே பாரமாகிப் போச்சு, மனசே கனமாகிப் போச்சு என்று பரிணாம வளர்ச்சி அடைகிறது!
மனசுங்கிறது முதலில் என்னங்க? அதன் நிறமென்ன, வடிவம் என்ன? எடை என்ன?
மனதின் பிறப்பிடம் உடல். வெறும் உடல் மட்டும் எனில் அது சவம்! தனித்து சவத்தினால் என்ன செய்ய முடியும்? நாள்பட்டு அழுகி நாறுவதைத்தவிர தானாக வெற்று உடல் ஏதும் செய்ய முடியாது?
ஆக உடல் இயங்க உயிர்சக்தி இன்றியமையாததாகிறது. உயிரோடு புதிய உடல் பிறப்பது ஆண்குழந்தை என்றும் பெண் குழந்தை என்றும் அறிகிறோம்.
உடல் வெளியேறி அதன் நடமாட்டம் குறைவாக இருந்து அதன் காரணமாக வெளிப்புற உலக அறிவு குறைவாக இருக்கும். குழந்தைக்கு மனதில் எதுவும் தங்காது! மனசு சரியில்லாமலோ, பாரமாகி கனத்து என்று எந்தக் குழந்தையும் இருப்பதில்லை. கிடைத்தால் சிரிக்கும்... இல்லை என்றால் அழும் அடுத்த ஐந்தாவது நிமிடம் எதுவுமே நடக்காதமாதிரி அழுவதற்கு காரணமானதுடனேயே மீண்டும் சிரித்து விளையாடும்!
தனது எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக எது நடந்தாலும் அதனின்று உடனே மீண்டுவிடும் சக்தியை குழந்தைக்கு இறைவன் தந்திருக்கிறான். குழந்தையும் தெய்வமும் அதனாலேயே ஒன்று என அறியப்படுகிறது. பரப்பிரம்மமும் அது தான். குழந்தையும் அது தான்! ஆண், பெண் என்கிற பாகுபாடு இந்த நிலையில் கிடையாது! உள்குத்து, வெளிக்குத்தெல்லாம் தெரியாத நபர் இதனாலேயே குழந்தை மனதுக்காரர் என அழைக்கப்படுகிறார்!
நம் இந்தியாவில் குழந்தையாய் இருக்கிற போது உடல் ஒரு பாரம்பர்யமான,நெறிப்படுத்தப் பட்ட கட்டுப்பாட்டு வளையத்தில் சுற்றிவருவதால் தேவையற்ற இடங்களுக்குச் சென்று உழல்வது குறைவு!
வயதாக வயதாக குழந்தை பருவமாகி வாலிபமாகி அவனது உடம்பைச் சுமந்து எந்த மாதிரி சூழலுக்குத் தன் உடலை அதிகம் எக்ஸ்போஸ் செய்கிறதோ அந்த்ச் சூழலின் தரம் தாக்கங்கள் நினைவாக உருவெடுக்கிறது! ஸ்வீட் மெமரீஸ் என்றும் பேட் நைட்மெர், அன்பிளசண்ட் மெமரீஸ் என்றும் தனது எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு முழுமை அடைந்ததோ அதை அளவுகோலாகக் கொண்ட முந்தைய அனுபவங்களின் டேட்டா பேஸோடு ஒப்பிட்டு மனம் நிகழ்வுகளை அவைகள் நடந்து முடிந்ததும் Classification செய்கிறது!
ஆக தச இந்திரியாஸ் எனப்படுகின்ற Five sense organs + Five organs of Actions ஐந்து உணர்வு புலன்களின் வழிநடத்தலில் ஐந்து கர்ம இந்திரியங்களின் செயல்பாட்டில் கட்டுப்பாடற்று மூழ்கிய உடல் நல்ல சம்பவங்களினை, தரமான நிகழ்வுகளினை சந்திக்காத உடல் நிறைவான அமைதியான மகிழ்ச்சியான நினைவுகளை உள்ளடக்கிய மனத்தினை உருவாக்கிவிடாது!
மனம் என்பது வெறும் mere compilation of effects! இந்த effectகளின் மூல காரணமான Causes என்பது உடலை வலிந்து சூழல்களுக்கு உட்படுத்துபவையே!
ஆக உடலைத் தகாத சூழலுக்கு புலன்களின் உதவியோடு சிந்திக்காமல் தினசரி தள்ளிவிட்டு விட்டு
குவார்ட்டர் அடித்தால் சுத்தமாச் சரியில்லாத /பாரமான மனசுக்குநல்லது என்று தினசை குவார்ட்டர் கோவிந்தனாக இருந்து சிந்திப்பதை ஆஃப் செய்துவிட்டு ஃபுல் மனதுடன் எல்லாம் வல்ல இறைவன் கோவிந்தனைத் தினசரி ஒவ்வொரு நொடியும் தியானியுங்கள்.
இன்னொருவாட்டி வெட்டியா சுத்தமாக மனசே சரியிலீங்க என்றோ மனசே பாரமாக இருக்குங்கன்னு வெட்கமில்லாமல் உடலின் தவறுக்கு மனதின் மீது பழிபோடாதீர்கள்!
பாவங்க மனசு! அது ரொம்ப மென்மையானது! ஒடிஞ்ச மனசை ஒழுங்காக்க ஓம்காரமான இறைவனால் இயலும். அதுமேல டாஸ்மாக்/ வெளிநாட்டு சரக்கு சாராயத்தை ஊத்தி எரிக்கிறது சரியில்லீங்க! இது பகுத்தறிவா? இதுதான் சுயமரியாதையான செயலா?
வேத நெறியின் வழியில் செல்லும் ஒரு மனம் "பிரஸாத புத்தி" மற்றும் "ப்ரதி பக்ஷ பாவனையோடு" தாழ்வுமனப்பான்மை ஊறலில் ஊறாமல், கலங்காமல் உறுதியோடு இருக்கும்.. நிறைவாக எதையும் திடமாய் எதிர்கொள்ளும் மனோதிடம் கிட்டும்!
*ப்ரஸாத புத்தி = குறைகூறாமல் ஏற்றுக்கொள்ளும் மனம். இந்துக்கோவில்களில் பூஜைப் பிரஸாதத்தின் இனிப்பு,உப்பு,காரம் எனச் சுவையைக் குறைகூறாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிற சாத்வீகமான புத்தி
*ப்ரதிபக்ஷ பாவனா = உள்ளதை உள்ளபடியே பார்த்து ஏற்றுக்கொள்ளும் பாவனை!
வேதநெறி வெற்றிக்கான செறிவான நெறி! முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமான எக்காலத்துக்கும் உகந்த 100% அக்மார்க் இந்தியப் பாரம்பர்ய தினசரி வாழ்வியல் வழி! வேதவழி பின்பற்றினால் வழக்கறிஞர்கள், சைக்யாட்ரிஸ்ட் எனப்படும் மனோவியல் நிபுணர்கள் தொழில் வருமானம் இழக்கும் அபாயம் உள்ளது!
அன்புடன்,
ஹரிஹரன்
15 comments:
டெஸ்ட் மெசேஜ்!
நல்ல பதிவு ஹரி..! இது மாதிரி பதிவுகளை படிப்பது மனசுக்கு இதம்
நல்லா எழுதி இருக்கீங்க ஹரி.
உண்மைதான் உடம்பு சலிப்புறும்போது மனசு ரிப்பேர் ஆவதைத் தவிர்க்கணும்.
உற்சாக பானம் இன்னும் எத்தனைபேரைக் குழியில் தள்ளுமோ?
போன பதிவில்தன் சொன்னேன், உங்களால் மிகச் சிறந்த கருத்துள்ள படைப்புகள் கொடுக்கமுடியும் என!
அதை இந்த பதிவின் மூலம் நிரூபித்து, என்னை மகிழ வைத்து விட்டீர்கள், திரு.ஹரிஹரன்!
மிகவும் அருமையாக இருக்கிறது!
ஹரி
இதற்கு தம்பி சிகரெட்.முதலுக்கு மனசு என்றால் சிகரெட்க்கு டென்சன் .
பூக்குட்டி,
//நல்ல பதிவு ஹரி..! இது மாதிரி பதிவுகளை படிப்பது மனசுக்கு இதம்//
ஆஹா இந்தப் பாராட்டும் மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு!
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
வல்லிசிம்ஹன்,,
//நல்லா எழுதி இருக்கீங்க ஹரி.
உண்மைதான் உடம்பு சலிப்புறும்போது மனசு ரிப்பேர் ஆவதைத் தவிர்க்கணும்.
உற்சாக பானம் இன்னும் எத்தனைபேரைக் குழியில் தள்ளுமோ? //
உண்மைதானுங்க இந்த உற்சாகபானத்தில் காட்டும் உற்சாகத்தை ஆக்கமான விஷயங்களில் காட்டினால் குழியில் வீழ்ந்து கிடக்கும் தான் தனியாக மேம்பட்டு சமூகத்தை நாட்டை மேம்படுத்திவிடலாம்!
வருகைக்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி!
தேவையற்ற வம்புகளை விட்டு நல்ல மாதிரி தொடர்ந்து எழுதுங்கள்! வரவேற்கிறேன்.
எரியும் மனதிற்கு துனையாய்,
இதயத்தையும் எரிக்கிறான்
குடிக்கும் மனிதன்.
நல்ல பதிவு.
முதல் பாராவ படிக்கும் போது, என்னாடா இது விவகாரமா இருக்குமோ, அப்புடியே எஸ்கேப் ஆயிடலாமான்னு நினைச்சேன்.
ஆனா, இது நல்ல விவகாரமால்ல இருக்கு.
எஸ்கே சார்,
//போன பதிவில்தன் சொன்னேன், உங்களால் மிகச் சிறந்த கருத்துள்ள படைப்புகள் கொடுக்கமுடியும் என!
அதை இந்த பதிவின் மூலம் நிரூபித்து, என்னை மகிழ வைத்து விட்டீர்கள், திரு.ஹரிஹரன்!
மிகவும் அருமையாக இருக்கிறது! //
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்!
தங்களை இப்பதிவு மகிழவைத்தது என்பதை அறிந்து மிகவும் மகிழ்கிறேன்!
:-)))
குமார்,
//இதற்கு தம்பி சிகரெட்.முதலுக்கு மனசு என்றால் சிகரெட்க்கு டென்சன் .//
சிகரெட்டை விட எனக்கு உதவிய சீக்ரெட்டை முன்னமே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்!
//தேவையற்ற வம்புகளை விட்டு நல்ல மாதிரி தொடர்ந்து எழுதுங்கள்! வரவேற்கிறேன்.//
சிந்தாநதி,
வேண்டுமென்றே வம்புக்கெல்லாம் தேவையில்லாமல் நான் போவதில்லை. சில சீர்கேடுகளைச் சுட்டுவது வம்பில்லை என்றே கருதுகிறேன். தங்கள் வரவேற்புக்கு நன்றிகள்!
வெங்கட் ராமன்,
//முதல் பாராவ படிக்கும் போது, என்னாடா இது விவகாரமா இருக்குமோ, அப்புடியே எஸ்கேப் ஆயிடலாமான்னு நினைச்சேன்.
ஆனா, இது நல்ல விவகாரமால்ல இருக்கு. //
ஓட நினைத்தும் படித்துப் பின்னூட்டியதற்கு நன்றி :-)))
வெவகாரமான விஷயத்துக்கு வேணுமின்னு போகிற ஆள் இல்லைங்க நான்!
நல்ல கருத்துக்கள்.
//வெவகாரமான விஷயத்துக்கு வேணுமின்னு போகிற ஆள் இல்லைங்க நான்!//
:-)
Post a Comment