Tuesday, December 26, 2006

(92) பெண்கள் இந்துக்கோவிலில் அர்ச்சகராக்கப் படாதது ஏன்?

கடவுளே இல்லை என்கிற சுயமரியாதை பகுத்தறிவு இயக்கங்கள் தற்போது எழுப்புவது இந்துமதத்தில் பெண்கள் கோவில் அர்ச்சகர்களாக்கப்படவில்லை எனவே இந்துமதம் பெண்ணுரிமைக்கு எதிரான மதம் என்கிற பிரச்சாரம் சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கங்கள் தமிழ்நாட்டில் எழுச்சியாகப் பேசுகிற முக்கியமான பெண்களுக்கான சுயமரியாதைப் பிரச்சினை.

ஈவெரா ஒட்டுமொத்த தமிழனுக்கும் ரெகமெண்ட் செய்த இஸ்லாமில் இதே பெண்ணுரிமை பற்றியோ வாயே திறக்கமாட்டார்கள், பங்குத்தந்தையாக கிறித்துவத்தில் பெண்கள் ஏன் இல்லை என்கிற பெண்ணுரிமை பற்றி கூடுதலான சுயமரியாதை, பகுத்தறிவு எச்சரிக்கை செய்ய அமைதி காப்பார்கள்.


சரி இந்து மதத்தில் ஏன் பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம்:

பெண்களுக்கு இயற்கையான மாதவிடாய் நிகழ்வு நாட்களில் உடல் உபாதை கூடியிருக்கும் பெண்களில் பலருக்கு தாளமுடியாத வலி என்று சரியாக உட்காரக்கூட முடியாமல் வலியால் துடிப்பது என்பது சாதாரணமான பொதுஅறிவுடைய வெகுதியானவர்கள் அறிந்த உண்மை.

கோவில்களில் கருவறையில் இறைவனைப் பூஜிக்கின்ற செயல் என்பது ஆறுகால பூஜை என்கிற இடைவிடாது நின்ற நிலையிலேயே இறைவன் உருவச்சிலைகளுக்கு அபிஷேக, அலங்காரம் என்கிற குனிந்து நிமிர்ந்து செய்யும் செயல்களைச் செய்யவேண்டிய கட்டாயம் உடையது.

மேற்படியாக கடுமையான வலியில் இந்தக் காலகட்டத்தில் அவதியுறும் பெண்கள் குழந்தைகள், கணவன், குடும்பத்தார் மீதே எரிந்து விழுந்து, பொறுமையிழந்தவர்களாய் கிட்டத்தட்ட "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" நபர்கள் மாதிரி நடந்து கொள்வார்கள்.

மேலும் பண்டைய காலத்தில் இந்துக் கோவிலில் இறைவனுக்குச் சேவை செய்தபடியே வேதம் சொல்லித் தந்த ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள், அந்தந்த ஊர் வழக்குகளில் நீதியும் சொல்லியிருந்து இருக்கின்றார்கள்.

நீதி சொல்லும் நபர் நிதானத்துடன் நியாய அநியாயம் உணர்ந்து சொல்லவேண்டியது கடமை ஆதலால், உடல் உபாதை, வலி காரணமாக மாதத்தில் சில நாள் நிதானம் இழக்கும் பெண்கள் ஆலய அர்ச்சகர்களாக இந்தப் பணிக்கு உகந்தவர்களாக கருதப்படாததில் சமூக அக்கறையே பிரதானம்.

சமூக அக்கறையோடு சீர்தூக்கிப்பார்த்து வழக்கத்தில் நடைமுறைப் படுத்திய நம் முன்னோர்கள் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தந்தே வந்திருக்கின்றார்கள். வீட்டை நிர்வகிப்பதில் இன்றளவும் பெண்கள் பங்கு மிக முக்கியமானதும் அலாதியானதும் ஆகிறது.

பெண்ணுரிமை என்று கண்மூடித்தனமாக முட்டாள் தனத்தினை சுயமரியாதை, பகுத்தறிவு என்று இந்துமத ஆன்றோர்கள் வழிமுறைப்படுத்தவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் அறிவியல்பூர்வமாக சீர்தூக்கி சமூக அக்கறையுடனேயே செயல்முறைப்படுத்தி வந்திருக்கின்றார்கள்.

இன்றைக்கு சுயநலமும், பச்சையான பிழைப்புவாதமும் கொள்கைகளாக அதையே மக்களை ஏமாற்றி சுயமரியாதை என்றும், பகுத்தறிவு என்றும் எத்தனை காலம் ஏமாற்றுவார்கள்?

பகுத்தறிவு வேண்டாம். பொது அறிவு போதும்! சிந்திப்பீர்!

அன்புடன்,

ஹரிஹரன்

17 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

ஜெயக்குமார் said...

சன் டிவியில் கிரிஸ்துமஸுக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்காதது ஏன்?

சன் டிவியின் மத வெறியா? அல்லது வியாபார தந்திரமா?

முத்துகுமரன் said...

ஆண் நிதானமே இழப்பதில்லை என்று வரையறுத்தது யார்? எந்த அளவீடுகளில் விளக்குங்களேன் ஹரிஹரன்.

Hariharan # 26491540 said...

//ஆண் நிதானமே இழப்பதில்லை என்று வரையறுத்தது யார்? எந்த அளவீடுகளில் விளக்குங்களேன்//

வாங்க முத்துக்குமரன்,

ஆண் நிதானமே இழப்பதில்லை எனச் சொல்லவிழையவில்லை.

ஆண்களுக்கு கட்டாயமாக உடலியல் காரணமாக மாதத்தில் சிலநாள் அசௌகர்யம் இல்லை என்பதும் உடலியல் அசௌகர்யம் காரணமாக வரும் உளவியல், செயல்பாட்டு மாற்றங்கள் இல்லாததும் இயற்கை ஆணுக்களித்த சிறப்பு.

இவ்வாறாக இயற்கை மனிதனுக்கு அளித்த சிறப்புக்களை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு வழிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

நிதானம் இழக்கும் சூழலை ஏற்படுத்தாமல் தவிர்ப்பது விவேகம்!

எல்லாவற்றுக்கும் மேலாக புறத்தூய்மை என்பது இறைவனின் ஆலயங்களில் உடலியல் காரணங்களால் இந்தக் காலகட்டத்தில் பெண்களால் முழுதுமாகப் பேணாமல் போகும் சாத்தியங்கள் அதிகம்!

Hariharan # 26491540 said...

//சன் டிவியில் கிரிஸ்துமஸுக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்காதது ஏன்?

சன் டிவியின் மத வெறியா? அல்லது வியாபார தந்திரமா?//


ஜெயகுமார்,

நேரடியாப் பதிவுக்கு சம்பந்தமில்லாதது எனினும் சுவையானது.

டாவின்ஸி கோட் திரைப்படத்துக்கு கிறித்துவர்களே எதிர்ப்பு தெரிவிக்காதபோதும் தாவிச்சென்று தடை விதித்து சிறுபான்மை கிறித்துவர்களை மகிழ்வித்தது கருணாநிதிதானே!

அரசியல் மதசார்பின்மை மதத்தில் நம்பிக்கைவைத்த செக்யூலர் அரசியல் சாணக்கியன் தானே கருணாநிதி!

நாள் முழுக்க எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் ஏசுவே போடலாம்தான்!
ஸ்பான்ஸர் யார் செய்வாங்க? பங்குத்தந்தைகள் ஸ்பான்ஸர்ஷிப் பங்களிப்பு ஃபார்மாலிட்டீஸ் செய்யணுமில்லியா! ஒரே பேமெண்டில் எல்லா இஷ்யூவும் கவராகாது!

இஷ்யூ பேஸ்டு சப்போர்ட்ன்னு கேள்விப்பட்டு இருப்பீர்கள் அது மாதிரி இதுவும்! காசு-காரியத்தில் கண்ணா இருக்குறது கருணாநிதியோட ஸ்டிரிக்ட் பாலிஸி!

Vajra said...

ஹரிஹரன்,

பெண்களுக்கு கிட்டத் தட்ட உலகில் உள்ள எல்லா மதங்களிலும் Raw deal தான் கிடைத்துள்ளது. இதனை மறுக்கமுடியாது.

இந்து மதம் செய்வது ஒன்றும் ஞாயம் அல்ல. மற்ற ஆபிரஹாமிய மதங்களைப் பார்க்கையில் எவ்வள்வோ அறிவுடன் தான் இந்து சமூகம் இதனை ஏற்றுள்ளது.

மாதவிடாய் என்பது பென்களுக்கு இயற்கையான உடல் நிகழ்வு. அதை தீட்டு அசிங்கம் அதனால் ஏற்படும் உடல் வலி, மன அழுத்தம், ஹார்மோன்களால் ஏற்படும் மன மாற்றம் என்று எதைச் சொல்லியும் தள்ளி வைப்பது தவறு.

பெண்ணும் ஆணுக்குச் சமமாக உடல் திறனுடன் வாழக்கூடிய வாழ்க்கைத் தரம் இப்போது இருக்கையில் இதெல்லாம் பழங்கதை என்றே பார்கத் தோன்றுகின்றது.

பெரியார் சொன்னது மாபெரும் முட்டாள்தனம் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. அதற்காக ஆன்றோர் சொன்னது எல்லாம் சரி என்ற நிலைப்பாடு தவறு. அதில் நல்லவைகளை ஏற்று காலத்திற்கேற்ப மாறி வாழவேண்டியது நமது கடமை. அதைச் செய்வதே உண்மையான "பகுத்தறிவு". பெர்யார் சொன்னது "pseudo-secularism" மாதிரி பொய்ப் பகுத்தறிவு.

somberi said...

this is a very bad reason for women unable to conduct poojas at temples..if that is the reason..why can't they take days off on those days???
accept that we treated women badly untill last decade...still we treat women badly..atleast some of them are coming up...

Hariharan # 26491540 said...

ஷங்கர்,

நான் தந்திருக்கும் விளக்கம் எதன் காரணமாக பெண்களுக்கு ஆலய அர்ச்சகர் பணிகளில் முன்னுரிமை இந்துமதத்தில் தரப்படவில்லை என்பதையே.

இந்து மதப் பழக்க வழக்கங்கள் குறிப்பாக பெண்களுக்கான பழமையான வழக்கங்கள் எவ்வளவோ மாற்றம் கண்டிருக்கின்றன. கணவனை இழந்த பெண்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு தலைமயிர் வழித்து, வெள்ளைச்சேலை அணிந்து என்கிற மோசமான பழக்கம் இன்று இருக்கிறதா?

வேலைக்கு இன்று பெண்கள் போகவில்லையா? இந்துமதம் வாழ்வியலுக்கு ஒவ்வாததை மாற்றிக்கொள்ளும் டைனமிக்கான வாழ்வியல் முறைதான்.

கோவில் அர்ச்சகர் பணிக்கு எத்தனை இந்துப் பெண்கள் விரும்பி அந்த வேலை மறுக்கப்பட்டதாக வெம்பி மனம் வருந்துகிறார்கள்? இது பெண்கள் அளவில் ஒரு பெரிய தீவிரத் தேவை என்று முன்னுரிமையில் இருக்கும் விஷயமாக இல்லை என்பதுதான் உண்மை.

வெறும் அரசியல் சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கங்களாக உலாவருபவை செயலற்று உறைந்து விடாமல் இருக்க எழுப்பும் சத்தம் என்பது சமூகத்தில் பெண்களின் அவசரத் தேவை / விருப்பம் ஆகிறது என்று எண்ண முடியவில்லை!

டிமாண்ட் கூடினால் தயங்காமல் சப்ளைக்கான வழிமுறைகள் இந்துமதம் ஏற்படுத்திக்கொள்ளும்.

ravi srinivas said...

வெள்ளி, மார்ச் 11, 2005
பெண் அர்ச்சகர்கள்

தமிழக அரசின் நிலைப்பாடு,அதாவது பெண்களும் அர்ச்சகர்களாகலாம் என்பது வரவேற்கப்பட வேண்டியது. விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகம விதிகளை காரணம் காண்பித்து இதை ஏற்க மறுக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வரவேற்கவேண்டும்.தமிழக அரசு இதற்காக முழு முயற்சி எடுக்க வேண்டும், இதை பரவலாக மக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்ய வேண்டும். இது குறித்த பி.பி.சி செவ்வி

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/03/050310_lady_priest.shtml
from
http://ravisrinivas.blogspot.com/2005_03_01_ravisrinivas_archive.html

I am all for women becoming priests in temples.

Hariharan # 26491540 said...

வாருங்கள் ரவி சீனிவாஸ்,

பெண்கல்வி 50 ஆண்டுகளுக்கு முன்பாக இந்துக்களின் வீடுகளில் எப்படி இருந்தது? 8ம்வகுப்பு தாண்டினாலே பெரிய விஷயம்.

இன்றைக்கு எங்கள் வீட்டை உதாரணமாகக் கொண்டு சொன்னால் பெண்கள் எல்லோருமே போஸ்ட் கிராஜூவேட்கள் ஆண்களையும் விட கூடுதலாக எல்லா இந்துக்கள் வீட்டிலும் பெண்கள் கல்வி கற்கின்றார்கள்!

பொட்டக் கழுதைக்குப் படிப்பு என்னத்துக்கு என்று இருந்த நடைமுறை மாறிவிடவில்லையா?

ஒரு பழைய பழக்கம் மாற்ற சாக்குபோக்கு ஏதாவது சொல்வார்கள். ஆனால் இந்துமத வாழ்வியலில் மாற்றங்கள் காலத்தை ஒட்டி அவசியமான புதிய மாற்றங்கள் நடந்தேறியபடியேதான் இருக்கின்றன!

எனது தனித்த அபிப்ராயம் பெண்களுக்கு இது உகந்ததல்ல. பல கோவில்களில் அதிகாலை /மாலை நேரங்களில் ஆளே இல்லாமல் தனித்து பாதுகாப்பில்லாமல் இருக்க நேரிடும்!
பொருள் வரவும் இல்லாத பணி இன்றைக்கு!

MeenaArun said...

pothuvaga nann ungaluku pinnutum poduvathilaai.ithu than ennoutya muthal(kadasiyam) pinnutom.


entha kalathila neengal irukirrikal enru theriyavillai.ithu 2006 ,
""பல கோவில்களில் அதிகாலை /மாலை நேரங்களில் ஆளே இல்லாமல் தனித்து பாதுகாப்பில்லாமல் இருக்க நேரிடும்!""
aada thriyathava medai konal enralam.athu polatha irukku ungal pechu

Hariharan # 26491540 said...

//pothuvaga nann ungaluku pinnutum poduvathilaai.ithu than ennoutya muthal(kadasiyam) pinnutom.//

வாருங்கள் மீரா அருண்,

சரிங்க தங்கள் விருப்பம். :-)))

//entha kalathila neengal irukirrikal enru theriyavillai.ithu 2006 ,
""பல கோவில்களில் அதிகாலை /மாலை நேரங்களில் ஆளே இல்லாமல் தனித்து பாதுகாப்பில்லாமல் இருக்க நேரிடும்!""
aada thriyathava medai konal enralam.athu polatha irukku ungal pechu //

நகர்ப்புறம் மட்டுமே கருத்தில் கொண்டு நீங்கள் பேசுகின்றீர்கள்.

என்னமோ நான் பெண்ணைப் பூட்டி வைக்கிற ஆள் மாதிரி கடுங்கோபம் கொள்ள வேண்டாம்.

வீட்டில் பூரிக்கட்டையை எதிர்கொள்ளும் எலிதானுங்க! ஆணுரிமை தேவைப்படும் அபலை நபர்களில் அடியேனும் ஒருவன் :-)))

Krishna (#24094743) said...

ஹிந்து சன்மார்க்கம் பெண்களை மிகவும் உயர்ந்த இடத்திலேயே வைத்துக் கொண்டாடியுள்ளது. அன்னை சாரதாவை, ராமகிருஷ்ணர் தொழவில்லையா? மேலும் ஆதிகாலத்திலிருந்தே, கோவில்களை பராமரிப்பதில், பெண்கள் மிக முக்கியப் பங்கு பெற்றுள்ளார்கள். சூடிக் கொடுத்த சுடர்கொடியை விடவும், அவ்வைப் பாட்டியை விடவும், பெரும் சேவை செய்தவர்களும் உண்டோ? பெண்களும், மற்ற தகுதியுள்ளவர்களும் (ஜாதி பேதமின்றி), இறைவன் சேவைக்குத் தங்களை முற்றிலும் அர்பணித்து ஆலயங்களின் பாரம்பரியங்களை காப்பாற்ற உறுதி கொண்டிருக்கும் யாரும் அர்ச்சகராகலாம். மேற்கூறிய தகுதிகள் இல்லாத யாரும் அர்ச்சகராயிருக்க தகுதியிழக்கிறார்கள்.
ஹிந்து சன்மார்க்கம் மட்டுமே மாற்றங்களை வரவேற்று தன்பால் அரவணைத்துக் கொள்ளும் நெகிழ்ச்சியுடையது. காலம் காலமாக, பாரம்பரியமும், புதுமையும் கலந்தே ஹிந்து சன்மார்க்கம் வளர்ந்து வந்திருக்கிறது. மதராஸக்களில், குத்த வைத்து, குல்லா போட்டு குர்ரானை மனனம் செய்வது எவ்வளவு சரியோ, அவ்வளவுக்கு குடுமி வைத்து, ப்ரம்மச்சரியம் கடைபிடித்து வேத பாரயணம் செய்யும் மாணாக்கர்களும், மடங்களும், அதன் முறைகளும் சரியே.

இதைப் புரிந்து கொள்ள ஒரு தகுதி வேண்டும், அறிவு வேண்டும். அது இல்லாத குஞ்சுகள் பொறுக்கித் துப்புவதை அலட்சியம் செய்து, ஹிந்து சன்மார்க்கம் தழைத்தோங்கும்.
அதற்கு ஹரிஹரன், ஜடாயு, வஜ்ரா போன்றவர்களின் பதிவுகள் ஒரு தூண்டுகோலாகும்.

தங்கள் முன்னோர்களை தங்கள் வாயாலேயே வசைபாடி, அவர்களை அடிமக்கள், மலம் அள்ளியவர்கள், சாக்கடையில் உழன்றவர்கள் என் சுயதம்பட்டம் அடித்து, அவர்களின் பெருமைகளை மறந்து ஒப்பாரியிடும் இன்றைய குஞ்சுகள் இறுதி வரை குஞ்சுகளாகவே இருந்து மறைவர். இவர்களால் இவர்களின் முன்னோருக்கும் பெருமையில்லை, இவர்களைப் பார்த்து வளரும் இவர்கள் சந்ததியினருக்கும் பெருமையில்லை. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்பதை யோசிக்க புத்தி வளர்ச்சியும் கிடையாது/கிடைக்காது. சதைப் பற்றாளர்களின் பகுத்தறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.

Hariharan # 26491540 said...

சோம்பேறி,

சுறுசுறுப்பா படிச்சு பின்னூட்டியதற்கு நன்றி!

வேதம் பெண்களை சமமாக சொல்லப்போனால் உயர்வாகவே கருதுகிறது.

நமது சமூகத்தில் சில நூற்றாண்டுகளாகப் பெண்கள் பின்ணணியிலேயே வைக்கப்பட்டதற்கு இசுலாமிய, வெள்ளைக்கார அந்நியர்கள் ஆக்கிரமிப்பும் பிரதான காரணி.

அந்நியர்களின் காமப்பார்வைகளில், இச்சைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள உயிரை மாய்த்துக்கொள்ளுதல், சதி என்று கணவனின் சிதையில் குதித்து மாளும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டௌ இருந்தது.

இன்னிக்கு நாம் நமது பெண்களை சதியில் சாக விடுவதில்லை. காரணம் அந்நியர் தொல்லை இல்லை! சும்மா ஒரு சட்டத்தினால் சரியாகிவிடவில்லை. அடிப்படையில் ஆபத்தான அந்நியர்களால் நம் பெண்களுக்கு பாதுகாப்பின்மை என்கிற சூழல் முக்கியமான காரணி.

இந்திய சரித்திரம் உண்மையாக எழுதப்பட்டு அறியப்படவேண்டும். எதெடுத்தாலும் நடுவில் நடந்த வரலாற்றினை விட்டுவிட்டு வேதத்தை நொட்டை சொல்வது இந்திய வரலாறு உண்மையாக அறிந்தால் பெரிதளவு குறையும்.

சும்மா வேதம் பின்னாடி வச்சதுன்னு சொல்லுவதெல்லாம் பொய்.

arunagiri said...

ஹரிஹரன்,

ஏன் அப்படிச்செய்தார்கள் என்பதற்கு நீங்கள் சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. இரவில் தனியாக வர முடியாது என்பதெல்லாம் வலுவற்ற சப்பை வாதங்கள்.

நல்லவை எடுத்து அல்லவை களைந்து முன்னேறும் இந்து மரபில், பெண்கள் அர்ச்சகர்களாவது முழுவதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. காரைக்குடியிலிருந்து பழனிக்கு நடக்கும் பெண்மணிகளை நீங்கள் பார்த்ததில்லை?

வயலிறங்கி களையறுத்து உடல் களைக்க வேலை செய்து- வெயிலில் உலர்ந்து, பஸ்ஸினில் வெம்பி, ஞாயிற்றுக்கிழமையும் வீட்டு வேலை செய்து- பண்டிகை காத்து, பண்பாடு காத்து, பட்டினி கிடந்தும் குடும்பம் காத்து- இப்படி நம் குடும்பம் மற்றும் சமூக நிமிர்தலின் ஒவ்வொரு அணுவிலும் பங்கு வகிக்கும் அம்மனின் அம்சமான பெண்கள், கோவிலுக்குள் பூசை செய்வதற்கான உடலுழைப்பைத் தர முடியாமலா போய்விடும்? அபத்தமாக இல்லை?

ஜடாயு said...

ஹரிஹரன்,

இது தர்மத்தின் மீதான உங்கள் பற்றையும், அன்பையும் மிகவும் மதிக்கிறேன்.

ஆனால் இந்த விவகாரத்தில், பிற்போக்குத் தனமான ஒரு கொள்கையை ஒரு சப்பைக் காரணம் காட்டி தாங்கள் நியாயப் படுத்துவதாகவே தோன்றுகிறது.

பெண்கள் ஒரு காலத்தில் நாடு முழுவதும் ரிஷிகளாகவும், அர்ச்சகர்களாகவும் தெய்வ ஆராதனம் செய்பவர்களாவும் இருந்தவர்கள் தான்.

இது பற்றி நான் சொல்ல நினைத்த பல விஷயங்களை நீலகண்டன் ஏற்கனவே தனது பதிவில் கூறி விட்டார். தயவு செய்து அதனைப் படிக்கவும்:

http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_28.html

அதிலிருந்து சில துளிகள்:

// இந்து சமுதாயம் இத்தனை தேக்க நிலை அடைந்திருந்தும் கூட பெண் பூசாரிகள் பெண் வேதவேள்வியாளர்கள் நூற்றுக்கணக்கில் சமுதாய இயக்கமாகவே உருவாகியுள்ளார்கள்
என்பதுதான் இங்கு சொல்லப்பட வேண்டிய முக்கியமான விஷயம்.

.....

பூனாவில் மட்டும் மூன்று அமைப்புகள் பெண்களை வேத வேள்விச்சடங்குகளை செய்விக்கும் பயிற்சிகளை அளிக்கிறது. அவை உத்யான் பிரசாத் மங்கள காரியாலயம், சங்கர சேவா
சமிதி மற்றும் வேதாந்த மண்டல் ஆகியவை. இன்றைக்கு பூனாவில் மட்டும் 500க்கும் அதிகமான பெண் அர்ச்சகர்கள் இருக்கின்றனர். 1976 இல் இருந்து அனைத்து சாதிகளையும்
சார்ந்த பெண்கள் 7000 பேருக்கு மேல் வேதவேள்வி செய்யும் பயிற்சி அளித்துள்ளனர். இவர்கள் இன்றைக்கு தமக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை மலர் பாதையில் நடந்து
பெற்றிட வில்லை. பூக்குழி இறங்கித்தான் பெற்றிருக்கின்றனர். ஆனால் போராட்டங்களுக்கு அப்பால் இந்து சமுதாயம் முன்னகர்ந்திருக்கிறது. ஷீரடி சாயிபாபாவின் சீடரான குரு
உபாசினி பாபாவால் உருவாக்கப்பட்ட உபாசினி கன்யா குமாரி ஸ்தான் அமைப்பு யக்ஞங்களை பெண்களால் நடத்துவித்து வருகிறது. 1994 இல் ஆஸ்திரேலியாவின் விஸ்வநாதர் கோவிலில் பூசைகளை செய்தவர்கள் மூன்று சகோதரிகள் ஆவர். அவர்கள் சாந்தா மனோகரி ஸ்ரீகணேசன், கௌரிமனோகரி கந்தராஜா மற்றும் ஜெய மனோகரி பொன்னம்பலம் என்பவர்கள் என அறிகிறேன். வாராணாசியிலேயே பெண்கள் வேள்வித்தீ வளர்த்து யக்ஞம் செய்விக்கின்றனர். பாணினி கன்யா மகாவித்தியாலயா இந்த சேவையினை செய்துவருகிறது.அண்மையிலிருக்கும் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தினைச் சேர்ந்த கொடுங்கல்லூர் குருபதம் மையத்தில் அந்தணரல்லாத 47 பெண்கள் வேத சடங்குகள் செய்விக்கும் தகுதியுடன் பயிற்சி பெற்றுள்ளனர். மாதா அமிர்தானந்தமயி ஏற்படுத்தியுள்ள பிரம்மஸ்தான கோவில்களில் எந்த சாதியை சேர்ந்தவராயினும் பெண்கள் அர்ச்சகராகவே சேவை ஆற்றுகின்றனர். ஞான ப்ரபோதினி அமைப்பு பெண்கள் வேள்விமுதலான இதுவரைஆண்களே நடத்திட்ட சடங்குகளை முன்னின்று நடத்திட எட்டுமாத பாடத்திட்டத்தினை நடத்துகிறது. //

Amala Singh said...

மீனாட்சி அம்மனுக்கு மாத விடாய் வந்து என்னைக்காவது பக்தர்கள் மேலே எரிஞ்சி விழுந்திருக்காளா? முட்டாள் பாப்பாத்தி மவனே