Tuesday, December 26, 2006

(91) வர்ணாஸ்ரம வர்ணனை & பகுத்தறிவு சுயமரியாதை

பிராமணன் தலையினின்று தோன்றியவன், ஷத்திரியன் மார்பினின்று தோன்றியவன், வைசியன் தொடையினின்று தோன்றியவன், சூத்திரன் கால் பாதத்தினின்று தோன்றியவன் என்பதாக விஸ்வரூப நாராயணனை வர்ணிக்கிறதை வைத்து தமிழகத்தில் சுயமரியாதை இயக்கங்கள் பகுத்தறிவோடு கும்மியடித்த மாதிரி எவரும் அடித்திருக்க முடியாது!

பிராமணன், ஷத்திரியன்,வைசியன் என இவர்களெல்லாம் தலை, மார்பு, தொடையில் இருந்து தோன்றியதால் கூடுதல் சிறப்பு என்றும் சூத்திரன் கால்பாதத்தில் இருந்து தோன்றியதால் இழுக்கு என்றும் என்னவெல்லாம் பேசக்கூடாதோ அவ்வளவுக்கு நாகூசும் அளவுக்குப் பகுத்தறிவு,சுயமரியாதை, இறைவன் இல்லை எனும் இயக்கங்கள் தமிழகத்தில் பேசியாச்சு!

இந்துமதத்தில் இருப்போர் இறைவன் திருவுருவங்களை வழிபடும் போது இறைவனின் பாதங்களைத் தொட்டுத்தான் வணங்குவார்கள். அதுதான் பாரம்பர்யம். பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு தலைமீது வைக்கப்படும் சடாரி எனும் கிரீடத்தின் மீது பெருமாளின் பாதங்கள் தான் இருக்கும்.

வீட்டில் பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் போதும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து அவர்கள் கால் பாதங்களைத் தொட்டு வணங்கித்தான் ஆசிர்வாதம் பெறுவது இந்து மதப் பாரம்பர்யம். காரணம் அவர்கள் தங்கள் கால் பாதங்கள் தேய ஓடியாடி உழைத்து குடும்பத்தினரைத் தாங்கி நிற்பதால், அவர்கள் முன் நாம் "தான்" என்கிற ஈகோ விடுத்து
விழுந்து வணங்கிச் செய்யும் பணிவு, மரியாதை வெளிப்படுத்தும் விதமான செயல்.


இவ்வளவு என்ன பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என இவர்கள் எவரும் உயிர்துறந்தால் இறைவன் அடி சேர்ந்தார் என்றுதான் சொல்வது இந்துப் பாரம்பரியம்.

சமூகத்தில் உள்ள சூத்திரன் என்கிற வகுப்பினர் அவர்களது உடல் உழைப்பால் சமூகத்தினைத் தாங்குகிறவர்கள். அப்படிச் சமூகத்தினைத் தாங்குபவர்க்ளுக்குச் செய்கின்ற மரியாதையாக, சமூகத்தின் இதர பிரிவினராகிய பிராமணன், ஷத்திரியன், வைசியன் என்கிற அனைவரும் தொட்டு, வழிபடும் விஸ்வரூப நாரயண ரூபத்தின் பாதங்களாக வர்ணித்த வர்ணாசிரம வருணனை என்பது தாங்கிநிற்கும் பாதங்களுக்குத் தரப்பட்ட மரியாதை, கூடுதல் பெருமையே அன்றி இழுக்கு எப்படி?


ஆக வர்ணாசிரம வருணனையாக இன்னின்ன பாகங்களில் இருந்து இன்னின்னவர் தோன்றினார் என்பது முதலில் வருணனையாகப் பார்க்கவேண்டும். இரண்டாவது கால்பாதம் என்பது இருப்பதிலேயே உயர்வானதன்றி இழிவானதல்ல!

கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை... கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்கிற தெய்வமறுப்புக் கொள்கையோடு வர்ணாசிரமத்தினை அணுகும்போது அடிப்படை அறிவும் செயலிழந்து முட்டாளாகிறான்... காட்டுமிராண்டியே பரவாயில்லை என்கிற அளவுக்கு வெறுப்பும் மூர்க்கமும் கட்டவிழ்ப்பு என்கிற வெறியில் நாகரீகம் கட்டவிழ்ந்து போகிறது!

வர்ணாசிரமம் வகுப்புபேதம் பாரட்டிச் சொல்லப்பட்டதல்ல. சமூகம் பகுக்கப்படும் விதங்கள் நான்கு என்பதே வர்ணாசிரமம். அரசில் நிர்வாகத்தில் கூட கிளாஸ் 1, கிளாஸ்2, கிளாஸ்3 கிளாஸ்4 என்று நான்காக நிர்வாகம் பகுக்கப்பட்டே ஆகவேண்டும்.

நமது பகுத்தறிவு, சுயமரியாதைச் சிந்தனையோடு இருப்பவர்கள், கிளாஸ் 4 வேலையில் இருப்பவர் நாட்டின் ஜனாதிபதியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லத்தெரிந்த பகுத்தறிவு தனது வேலையில் தான் எப்படி இருந்து செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளாமலே ரிடையர் ஆகியும் விடுகிறார்!

கிளாஸ்4 வேலையில் இருப்பவர் ஜனாதிபதியாகக்கூடாது என்பதில்லை! ஜனாதிபதியாக கிளாஸ்4 சிந்தனை எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை. அப்படியே கிளாஸ்4 சிந்தனையோடு இருக்கும் அரசியல் வாதிகள் நாட்டின் தலைமை ஏற்றால் என்ன ஆகும் என்பதற்கு இந்திய அரசியல் இன்றைக்கு இருக்கும் சூழலினை விட பொருத்தமான உதாரணம் கிடையாது!

வாழ்க ஒழிக கூப்பாடுகள் மட்டும் சமத்துவத்தினை சமூகத்தில் ஏற்படுத்தாது. சமநிலையான சமூகம் என்பது ஜனாதிபதியும் கக்கூஸ்கழுவும் நபரும் தனிவாழ்க்கையில் சமம் என்று கருதிப் பழகும் மனோபாவம் எல்லோரிடமும் வருவது!

தமிழகத்தின் தலையாய மூத்த,சுயமரியாதைச் சிங்கம், பகுத்தறிவுப்புயல், கருணாநிதியை பத்திரிக்கையாளர்கள் மிஸ்டர் கருணாநிதி என்று விளித்துக் கேள்விகேட்டால் தமிழகத்தின் முதல்வரை பெயர்சொல்லி அழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டதே என்று கடுப்போடு கருத்து தெரிவித்தவர் தலைமையில் சமத்துவபுரம், சமூகநீதி, வர்ணாசிரம எதிர்ப்பு என்கிற பிழைப்புவாதம் சுயநலக் கொள்கையில் இருப்பவர்கள், வழி நடப்பவர்கள், இந்துமத வர்ணாசிரமம் என்றதும் கூடுதல் சிரமத்துடன் சாணியடிக்க ஓடி வருபவர்கள் பொது அறிவை சிறிது பயன்படுத்தினாலே இந்துமத வேதத்தில் வர்ணாசிரமம் என்பது என்ன சொல்கிறது, வர்ணாசிரம வர்ணனையில் விஷ்ணுவின் அங்கங்களாக வர்ணிக்கப்பட்டதின் உள்ள மேன்மையான அர்த்தம் என்பது எளிதில் விளங்கும்!

இந்து வேதநெறி வாழ்வியல் நெறி அப்பழுககற்றது! காலங்கள் தாண்டி நிற்கும் நேர்மையான தத்துவங்களை அறிவியல் நோக்கோடு தினசரி வாழ்வியலின் அங்கமாக்கிய எவர்க்ரீன், எவர்மாடர்ன் சமூக வாழ்க்கை நெறி!

சுயமரியாதை, பகுத்தறிவு இறைவன் இல்லை என்று சமூகவியல் பேசும் இயங்கங்களின் அடிப்படையே சுயநலம், பிழைப்புவாதம். இது எப்போதுமே குறுக்குவழிச் சிந்தனையே அன்றி நேர்மையான தத்துவங்கள் என்று எதுவுமே இதில் கிடையாது!

இனியானும் வர்ணாசிரமம், வர்ணாசிரம வருணனை இவைகளின் பொருள் அறிய பொதுஅறிவினைப் பயன்படுத்துவீர்களாக!

அன்புடன்,

ஹரிஹரன்

9 comments:

bala said...

//அப்படியே கிளாஸ்4 சிந்தனையோடு இருக்கும் அரசியல் வாதிகள் நாட்டின் தலைமை ஏற்றால் //

ஹரிஹரன் அய்யா,

கழகக் கண்மணிகளின் பகுத்தறியும் திறமை ஒரு மூணாம் கிளாஸ் லெவெலோட நின்று விட்ட ஒன்று.
அதனாலத்தான் third rate கழிசடைகளாக காட்சி அளிக்கிறார்கள்.

பாலா

Anonymous said...

Makalai yamathura valai ithu , you r trying to fool others. In which scenario, u r telling that a person who is doing GRADE 4 job should only look after the GRADE 4 job only. If he is interested and make him capable, he may become President of INDIA.

Don't try to fool others by giving your own explanation about the birth place of various cast people, when general view is different.

Basically, This Birth place regarding issue is a "imaginary story” included by these culprit forward community people.
So dear friend, don’t go behind these kinds of nonsense issues.

Hariharan # 03985177737685368452 said...

//In which scenario, u r telling that a person who is doing GRADE 4 job should only look after the GRADE 4 job only.//

so long as a person's thinking capacity remains to the simple level of Grade 4 he remains in that level alone as he confines his thinking in that level.


//If he is interested and make him capable, he may become President of INDIA.//

To helphimeself to move ahead in the hierarchy to reach and function effectively as Grade-1, It is his "Purushaarth" which means "Self-effort" alone can support him to inculcate the required mind-set and advanced thinking to progress further!

//Don't try to fool others by giving your own explanation about the birth place of various cast people, when general view is different.//

The general view in Germany by the ill propaganda of Hitler was unique and the Hitler's hate policy brought no prosperity but only deep Destruction to Germany!

//Basically, This Birth place regarding issue is a "imaginary story” included by these culprit forward community people.//

"Might is right" and "divide and rule" are the key factors adopted by the Foreign invaders of Hindustan, which over few hundreds of years time influnced into the interpretations of our Hindu vedic system's.

சீனு said...

அட! இப்படி கூட இருக்கா!!

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

ரொம்ப நாளா எங்க நம்ம பதிவுப்பக்கமே காணோம்?

இவர்களது கடைநிலைச் சிந்தனை, செயல்பாடு, வழிகாட்டுதலில் இந்திய தேசமே , தமிழ்நாடே ஒட்டுமொத்த கட்டமைப்பு,முன்னேற்றத்தில் கிளாஸ்4 என்கிற அளவில் ஆக்கிவைத்துக் கூத்தாடுகிறார்கள்! :-)))

Hariharan # 03985177737685368452 said...

//அட! இப்படி கூட இருக்கா!! //

வாங்க சீனு,

போர்க்களத்தில் தன்னைக் கொன்று வென்றால் நாட்டைக் கொள்ளையிட்டு ஆக்ரமிக்கும் எண்ணத்துடன் வந்த அந்நிய இசுலாமிய மன்னன் தனது போர்த்திறமைக் குறைவால் போர்க்களத்தில் நிராயுதபாணியாகிய போது இந்து தர்மப் படி இந்திய ராஜபுத்திர அரசன் அவனை உயிரோடு செல்ல அனுமதிக்க மனிதத்துடன் போர் வழிமுறைகள் சொன்னது இந்து மத வேத நெறி!

கொலை, கொள்ளை என்பதை நோக்கமாகக் கொண்டவனையே தர்மப்படி போர்க்களத்தில் நிராயுதபாணியாகியதால் தாக்காது நேர்மையாக நடந்துகொள்ள அரசனை வழிநடத்தியது இந்துமத வேதநெறி.

தன் உழைப்பால் சமூகத்தினைத் தாங்கும் தனது மக்களை இவன் உசத்தி, இவன் தாழ்த்தி என்று இந்து வேத வாழ்வியல் நெறி சொல்லியிருக்குமா?

ஆங்கிலேயனின்,இசுலாமிய ஆக்கிரமிப்பாளர்களான் அந்நியனின் கொள்கைகளான "Might is Right" என்பதும் "divide and Rule" என்பதும் சில நூற்றாண்டுகளாக நமது இந்தியாவில் இருந்ததன் விளைவு இந்து மத வேத நெறி வாழ்க்கைமுறையினை தன்னலத்துக்காக திரித்துப் பொருள்காணும் பாங்கு ஏற்பட்டது! இது மனிதர்களின் குறைபாடே அன்றி வாழ்வியல் நெறி தத்துவங்களின் பொருள் குறைபாடல்ல!

Hariharan # 03985177737685368452 said...

ஸுஸர்ல ராமசந்த்ர ஸர்மா has left a new comment on your post "(91) வர்ணாஸ்ரம வர்ணனை & பகுத்தறிவு சுயமரியாதை":

பகுத்தறிவு தேவையில்லை. பொதுஅறிவு போதும்.. அரிய வரிகள். பின்னொரு சமயம்.. பகுத்தறிவையும்,பொதுஅறிவையும், அலசி ஆராய்ந்து ஒரு தீவிரமான (serious) பதிவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் குத்திக்காட்டவோ அல்லது படிப்பிக்கவோ அல்ல, அது பற்றிய உங்களது பார்வையை அறிந்துகொள்ளும் ஒரு சிறு முயற்சி. அவ்வளவே.

நன்றி.
--------------------------------
திரு.ராமச்சந்திரன்,

நேரடியாக இந்தப் பின்னூட்டம் பப்ளிஷ் செய்ய இயலவில்லை. தெரியவில்லை என்ன காரணம் என்று. உங்களது புதிய பிளாக்கர் டூ எனது பழையபிளாக்கர் என்பதால் இருக்கலாம்!-ஹரிஹரன்

enRenRum-anbudan.BALA said...

Hariharan,

இப்பதிவை தெளிவாக எழுதியுள்ளதாக அறிகிறேன் ! பாராட்டுக்கள்

இன்று பேசப்படும் 'பகுத்தறிவு' சுயநலம் பேணுவது என்பது சரியே !

dondu(#11168674346665545885) said...

தான் போதித்த பகுத்தறிவை உபயோகித்து தனக்கு எதிராக தனது கட்சித் தொண்டர்களே வாதம் செய்ததைப் பொறுக்க இயலாமல்தான் ஈ.வே.ரா. அவர்கள் "எனக்கு புத்திசாலிகள் தேவையில்லை, முட்டாள்கள் போதும் என்று ஜூலை 1949-க்கு பிறகு கூறலானார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்