Sunday, December 03, 2006

(72) ஈவேரா.சாமியுடன் குவைத்தில் நேரடி சந்திப்பு பகுதி-3

நன்கு ஓய்வெடுத்தபின்பு எழுந்த ஈவெரா குளிர்காலம் என்றாலும் சுடுநீர்க்காக கேய்சர் இருந்தும் அதனைப் பயன் படுத்தி நல்ல சுடுநீர்மழைக்குளியல் செய்யாமல் புறக்கணிக்கிறார்! காலை உணவுக்கு இட்லியும் பெல்லாரியினைக் கொண்டு செய்த சாம்பாரும், நெய்யில் வழுக்கும் வெண்பொங்கல் + கெட்டிச்சட்னி கொஞ்சமாகப் பாயாசம் (வெள்ளிக்கிழமை காலைநேர பூஜையில் நைவேத்தியம் செய்யப்பட்டது) என காலைப் பசியாறினார்.

ஈவெரா: உணவெல்லாம் நல்ல சுவையோடு இருந்தது.

ஹரி: நன்றி மை ப்ரண்ட். பாரம்பரியமான உணவுதானே சுவையாய் இருப்பது புதிதல்லவே! முன்னோர்க்கு இம்மாதிரி மன நிறைவான் ரெசிப்பிகளை கண்டுபிடித்த எனது முன்னோர்க்குத்தான் நன்றி சொல்லவேண்டும். "தி பெஸ்ட் வே டு ரீச் ஒன்ஸ் ஹார்ட் இஸ் த்ரூ த ஸ்டமக்" என்பதை எந்த ஆய்வுக்கூடத்திலும் சென்று பகுத்தறிவு சர்டிபிகேட் வாங்காமல் உணர்வு பூர்வமாக உணர்ந்திருந்திருக்கிறார்கள்!

ஈவெரா: என்ன பெரிய வெங்காய உணர்வு, புரிதல்கள்! ஆராய்ச்சிமாதிரி பகுத்தறிவுக்கு என்றேனும் வேலை தந்திருக்கின்றானா? இமய மலையில் தவம்புரியத் தெரிந்த அறிவிலிக்கு அதன் உயரம் தெரிந்திருந்ததா? நடராசரின் நாட்டியத்திற்கு வெலாவாரியா வெளக்கம் தரத்தெரிந்த இவனால் இந்த ஒலிபெருக்கியினைக் கண்டுபிடிக்க முடிந்ததா?

ஹரி: (மனதுக்குள்) ஒலிபெருக்கி...ஒலிபெருக்கி... பெருசு சரியான கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரியே பகுத்தறிவைப் பேசுதே! நறுக்குன்னு போஸ் சவுண்ட் சிஸ்டம் உதாரணத்துடன் சொன்னாப் புரியாது இனி வெலாவாரியா வெளக்கவேண்டியது அவசியமாகிறது.

மை பிரண்ட். இந்திய இண்டஸ்வேலி சிவிலைசேஷனுக்கும் மேற்கத்திய ஐரோப்பிய சிவிலைசேஷனுக்கும் இருக்கும் அடிப்படை மாறுபாடுகள் தெரியுமா?

ஈவெரா: ஆங்... சமாளித்தபடியே மேற்கத்தியர்கள் அறிவாளிகள், கண்டுபிடிப்பாளிகள்... இந்தியர்கள் "கண்டிரி ப்புரூட்ஸ்" மற்றும் பார்பாரிக் பீப்புள்....

ஹரி: (மனசுக்குள்) அட அட என்ன ஒரு சுயமரியாதை தன் தேசத்தின் மீதும் தனது பாரம்பர்யத்தின் மீதும்! மை பிரண்ட்... உண்மையான கலந்துரையாடல் செய்யலாம் இப்படியான க(லப்)பட கலந்துரையாடலால் பயனில்லை!

இந்திய சிவிலைசேஷன் எனப்படும் இண்டஸ்வேலி சிவிலைசேஷனில் வாழ்ந்த மக்கள் மனிதர்களாக வாழ இயற்கை பெரும் உதவிபுரிந்தது. சமவெளியில் பாய்ந்தோடும் ஆறுகள், என்ன விதைபோட்டாலும் வளரும் வளமான மண், முப்போகம் விளைந்த விளைச்சல்... வாழ்க்கையை வாழ அடுத்தவனை சுரண்டி, அச்சுறுத்தி, திருடி, கொள்ளையடித்து, எளியவனை அடிமைப்படுத்தி என்று வாழ வேண்டிய அவசியமில்லை.

மேற்கத்திய சிவிலைசேஷன்!!?? என்பதும் அம்மக்களின் எண்ணங்களும் Might is Right என்ற அடிப்படையில் அமைந்தது. கடுமையான குளிர்காலம் என்ற ஆண்டின் பாதிக்காலம் மனிதன் வாழ எதைவேண்டுமானாலும் செய்து பிழைத்துக் கிடக்கவேண்டிய அவலம் நிரம்பியது. இவர்கள் அவர்களது நாட்டின் கடுமையான குளிர் தாளாமல் கடலோடிகளாக வெளியே கிளம்பி வளமாக இயற்கை வளத்துடன் வாழ்ந்த இந்தியாவினை தேடித்தேடியே உலகம் முழுதும் Might is Right என்று அடிமையாக எளியவனை வலியவன் நடத்தும் சித்தாந்தத்தைத் திணித்தவர்கள்.

மேற்கத்திய வீடுகளில் குளிர்காலத்தில் ஊரே மூன்றடிப் பனியில் முழுகியிருக்க, கதவு சன்னல் சாத்தியபடி ஏதாவது ஒரு அறையை தீமூட்டி வெப்பபடுத்தியபடி முடங்கிக்கிடக்கும் மேற்கத்தியவனை வெளியே பொதுவாகக் கூட்டம் கூடி பேசி விவாதிக்க இயலாத இயற்கை சீதோஷ்ணநிலையில் இருப்பவன் ஒரு கருத்தைப் பரப்ப, உரத்து ஒலிக்க மனிதனால் இயலாத சூழலில் இயந்திரக் கருவிகளைக் கண்டுபிடித்தான்.

நமது இந்தியாவில் காத்துக்காக ஜன்னல் கதவைத் திறந்து வைத்தவாறே, கயிற்றுக்கட்டிலில் மரத்தடியில், வீட்டின் வெளியே திண்ணைகளில் படுத்துறங்கியவர்கள் கூட சலசலப்புக்கு உடனே எழுந்து தெருமுனையில் கூடி விவாதிப்பவர்களுக்கு "ஒலிபெருக்கி" என்பது இன்றைக்கும் Must சாதனம் அல்ல! இந்தியாவில் சாமானியனிடம், பொதுமக்களிடம் Might is Right என்ற மனோபாவமே இம்மாதிரியான கலாச்சாரத்திற்குச் சம்பந்தமில்லாத இசுலாமியர்கள் படையெடுப்பு, ஆங்கிலேயர்கள் வரவுக்குப் பின்னரே அப்படி ஒரு சமாச்சாரமே இருப்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

போரில் வட இந்தியமன்னன் படையெடுத்து வந்து நிராயுதபாணியான இசுலாமியனை இந்திய தர்மப்படி தாக்காமல் திரும்பிச்செல்ல அனுமதித்ததும், இராமயணத்தில் இந்துமன்னன் இராவணன் இன்றுபோய் நாளைவா என பணிக்கப்பட்டது என்பதிலிருந்து இந்துமதமும் வேத நெறியும் என்றைக்கும் Might is Right என்பதை முன்னிருத்திச் செயல்படாததை மிகத்தெளிவாகச் சுட்டும் சம்பவங்கள்.ஈவெரா: என்னத்தைப் பெரிசா வெங்காயத்தை சொல்லுற?

ஹரி: மை பிரண்ட் பகுத்தறிவு...பகுத்தறிவுன்னு உங்க சிஷ்யகோடிகளும், பக்தர்களும் உங்களது வார்த்தைகளாக குடியரசு, விடுதலை, உண்மைன்னு 1926 முதல் 1967 வரை சொன்னதை மட்டுமே விரைந்து சுட்டத் தெரிந்த நபர்கள் அதில் எதையுமே இன்றுவரை உருப்படியாக பின்பற்றாமல் 2006ல் இருப்பதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

ஈவெரா: பகுத்தறிவு என்பதே சோதனை செய்யப்பட்ட பின்னரே எதையும் ஏற்றுக் கொள்ளுவது என்பது தெரியுமா வெங்காயம்? நீ சொல்லுவதை சோதனை செய்யாமல் எப்படி பகுத்தறிவைப் பின்பற்றவில்லை என்பதற்கு எப்படி என் பெரிய வெங்காயக் கருத்தைச் சொல்லுவது?

ஹரி: எனக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை. சோதனை செய்ய இங்கிருந்தே மறத்தமிழர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் நவீன கணிணியுக வலைப்பூக்கள், வலைத்தளங்களுக்கு சூ மந்திரகாளி என மந்திரம் போடாமல் அழைத்துச்செல்கிறேன்.

ஈவெரா: அது என்ன வெங்காயம் என்பதையும் பார்த்துவிடலாம்.

ஹரி: இது தமிழ்மணம், இது தேன்கூடு இவை இரண்டின் வழியாக தமிழர் சிந்தனையை ஓரளவுக்கு அறியலாம். தமிழ் இலக்கியத்தில் வருகின்ற கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு மாதிரி நேரில் பார்க்காமலே நேரில் பேசாமலே தத்தம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.

மடிப்பாக்கத்தில் பகுத்தறிவுப் பகலவன், உதிக்கும் சூரியன் செய்யாததை மாயூர மருத்துவ ஆத்திக விளக்கு சாதித்திருக்கிறது சமீபமாக... சிம்பிளாக கவிதை வழியாக அன்பை அக்கரையிலிருந்து அக்கறையாக இப்படிக் காட்டி:

உன் சிகையலங்காரம் ஒத்திருக்கிறது மகேந்திர சிங் தோனியை
உன் வலையலங்காரம் மேம்பட மாற்றிடு உன் சண்டையிடும் தொனியை
- என்று.. முப்பது நாள் கழித்துப் புத்தாண்டின் முதல் தேதியன்றிலிருந்து இந்த அரிய அறுபத்தைந்தாவது ஆயகலையான அனைவருக்கும் நல்லவனாயிருப்பதை அறிய இதுவரையிலும் எல்லோருக்குமே கெட்டவன், நல்லவனுக்கு நல்லவன், எவனாயிருந்தா எனக்கென்ன என்று இதற்கெல்லாம் ஆசைப்பட்ட பல பாலகுமாரன்கள் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றனர்!

ஈவெரா: ம்ம்ம் சரி ஏதோ வெங்காயம் இருந்து விட்டுப்போகிறது.

ஹரி: இங்க பேசாத பேச்சோ டச்சாத சப்ஜெக்டோ கிடையவே கிடையாது. முக்கியமா ஒலிபெருக்கி என்பதெல்லாம் இல்லாமலே காரசாரமான, காமாசோமாவான பகுத்தறிவு விவாதங்கள், உள்குத்து, வெளிக்குத்து, என எல்லாவகையான மார்ஷல் ஆர்ட்ஸும் விர்ச்சுவலாக உலவும் வெளி இது!

நாலஞ்சு மாசத்துக்கு ஒரு பேட்ச் ஆட்கள் பெரிசா ஒருரவுண்ட் வலம் வருவாங்க! வாரத்துக்கு ஒரு நட்சத்திரம் மின்னுர இடம் இது!

ஈவெரா: இப்படியும் ஒரு பெரிய வெங்காய சந்தையா?

ஹரி: இங்கே உலகின் புதிய கடவுள் உண்டு, உன் வழி உனக்கு என் வழி எனக்கு என்றிருப்போர் உண்டு, கீழே ஏழு மேலே ஏழு என்பதைத்தாண்டி ஒரே நபருக்கே கூட பல உலகங்கள் இங்கு உண்டு, இங்கு அகப்பயணத்தில் ஞானம் வெட்டுவோர் ஏராளம், இந்தியா சகோதரனின் கையில் மலத்தினைத் தந்ததென்று எண்ணுவோர் சிலர் உண்டு, சிவப்பு நெருப்பாய் வேலைவாய்ப்பு விஷயம் சொல்வோர் உண்டு, 42வயதில் 40கி.மீ கச்சைகட்டி சைக்கிள் மிதித்த இன்றும் தேனீமாதிரி 60வயது மொழியாளர்கள், ரொம்பவே திரும்பிப் பார்க்கின்ற பெரியவர்கள் உலவுகின்ற இடம் இது.

ஈவெரா: பெரிய வெங்காயம் மாதிரி சுவையான இடம்தான் அப்போ!

ஹரி: சுவையான சுதந்திரமான, சுறுசுறுவென்ற புதிய புதிய தகவல்கள் தினம் கொட்டும் இடம்தான். நசுக்கி அழிக்கப்பட்ட யூதர்களது யூதநாட்டிலிருந்து நேரடியாக விஷயமறியலாம், வளைகுடா வரலாறு அறியலாம், ஈழத்தமிழன் அவல நிலை நித்தம் அறியலாம்,

ஈவெரா: என்ன வெங்காயம் எல்லாம் நல்லதாத்தானே இருக்கு என்னத்தைச் சோதிக்க பகுத்தறிவு?

இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அரசியல் திரா"விட"ப் பகுத்தறிவுப் பெத்தடினில் ஊறிப்போன திரா(வை)விடத் தமிழர்கள் சிலரின் "அரசியல் திரா'விட'த் தமிழ்ப் பின்னூட்டங்கள்" சில வருகின்றன. அவற்ரைப் பிரித்து ஈவெராவையே படிக்கச் சொன்னேன்! ...ங்கோத்தா..... ....தி.... ற்பழிப்பு....வடியாமவனே... ள்ளன் ..றையன்... ட்டியான்...ழுக்க... இப்படிக்கு 1) திரா"விட"வெறியன்... 2)உரிச்சவெங்காயம்....3)சாணி"ந"க்கியன் ...4)"பகுத்தறிவு"த்தமிழ்ப்பாசறை...etc..etc

ஈவெரா: (பதறியபடியே என்னிடம்) என்னைச் சொன்னாயே தமிழ் காட்டுமிராண்டி பாசை என்று சொன்னதற்கு.... பார் தமிழ் எப்படி பலாத்காரப் படுத்தப்படுகிறது என்று..

ஹரி: இதுதான் உங்கள் சிஷ்யகோடிகள் செய்வது... 40 ஆண்டு தமிழக அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கொள்கையின் தாக்கம் இது. தமிழக அரசியல் இயக்கங்களில் ஈடுபாடுகொண்ட எல்லோரும் ஈவெரா ..பகுத்தறிவு என்ற முகமூடியோடு எதிர்க்கருத்தினை எதிர்கொள்ளத் திராணியில்லாத, நேர்மையில்லாத காரணத்தினால் இப்படித்தான் இயங்குகின்றனர்.
பகுத்தறிவுப் பாசறையில் ஈவெராவிடம் இதைத்தன் பயின்றார்களா? இதைத்தான் சொல்லிக் கொடுத்தீர்களா?

ஈவெரா: நிஜமான வெட்கம் வேதனையோடு முகபாவம் காட்டுகிறார்!

ஹரி: சரி நீங்கள் தமிழ்மணம், தேன்கூட்டில் வலைமேயுங்கள் நான் சில ஏற்பாடுகளைப் பார்வையிட்டுவிட்டு சில நிமிடங்களில் வந்து உங்களுடன் இணைந்துகொள்கிறேன். இந்த அறைக்கதவு திறந்தே இருக்கட்டும். நான் அடுத்த அறையில் தான் இருக்கிறேன் என்று சொல்லி வெளியே வருகிறேன்.

ஈவெராவின் குரல் மட்டும் கேட்கிறது.... ஐயோ... என் பகுத்தறிவு.. ஆ என் பகுத்தறிவு... அச்சச்சோ என் பெண்மேம்பாட்டுச்சிந்தனை... ஆஆஆ.. ஐயோ தாளலியே சாதீ..சாதீ...சாதீ 1926ல் கூட இவ்வளவு இல்லியே.... ஐயய்யோயோ மை பகுத்தறிவு கான்சப்ட் டோட்டல் டாமஜ் டோட்டல் டாமஜ்...அய்யோயோ ஹரிஹரா உனக்கு மனச்சாட்சியே இல்லையா தனியா தமிழ் இணையத்துல என்னை இப்படி விட்டுட்டுப் போயிட்டியே...

சத்தமே வரவில்லை சரி ஈவெரா வேற ஏதோ நல்லதாப் படிக்கிறாரு போலிருக்கிறது என்று எண்ணியவாறே அவருக்கு ஒரு ஸ்பெஷல் காபிக்கு ஆவன செய்கிறேன்.

இப்போது ஈவெராவுடன் வந்த நபரின் கூக்குரல் பெரிதாகக் கேட்கிறது.... அய்யோ அய்யோ...எப்படி இப்படிப் பண்ண எப்படி உங்களுக்கு மனசு வந்தது என்று... நான் பாய்ந்தோடிப் போனால் அங்கே ஈவெரா மேஜை மீதேறி அறையின் சரவிளக்கில் பலராலும் வேஸ்ட் என எண்ணியிருந்த தனது நீளமான வெண்தாடியால் சுருக்கிட்டுத் தொங்க முற்படுகிறார். அவசரமாக அவரை விடுவித்து சோபாவில் அமரவைத்து என்ன முட்டாள்தனம் இது? என்ன ஆச்சு? ஏனிந்த பகுத்தறிவற்ற செயல்?

ஈவெரா: கதறியபடியே Shame blood? எப்படி பகுத்தறிவற்ற அழுகிநாறிப்போன வெங்காயங்களான~ஆப்பு~ மற்றும் டூன்டு-வைச் சமாளிக்கிறாய்?

ஹரி: நான் தான் உங்களிடம் குறிப்பாக முன்னமே சொல்லிவிட்டுத்தானே சென்றேன் இங்கு செல்லவேண்டாம் என்று! பகுத்தறிவு என்ன சாதரண அறிவிருந்தாலே இங்கெல்லாம் போகவே போகக்கூடாது.

அரசியல் திரா"விட'ப் பெத்தடின் பகுத்தறிவு இப்படித்தான் நாற்றத்துடன் பொங்கி மேடைகளில் வர வளர்ந்தவன் நான். மேலும் உண்மையான பகுத்தறிவு anxiety ஆர்வத்தினை மட்டுமே தரும். நான் வேத நெறிப்படி மனதை ஓரளவுக்குப் பழக்கி இருக்கிறேன். தேவையற்ற தளங்களுக்குச் செல்வதே இல்லை! எனவே மனமுடைந்து கவலையும் கொள்வதில்லை! so No same blood suffering for me! கிரிமினல்கள் வீட்டிலுள்ளோர் தகவல் கிடைத்தால் அதை அவர்கள் ஈவெரா பகுத்தறிவுப்பாசறையில் அரசியல் திரா'விட' இயக்கங்கள் கற்றுத்தந்த பாலபாடங்களின் துணையோடு விஷுவலைஸ் செய்து எழுதுவதற்கு அரசியல் திரா'விட'த் தமிழர்கள் கடல்கடந்து வாழ்ந்தபடியே ஈவெரா பெண்ணைப் பற்றி உயர்வாகச் சிந்திக்கச் சொன்னமுறையிலேயே படிக்கிறார்கள். நீங்கள் சொன்னதை..பாசறையில் சொல்லித்தந்ததைத்தானே கணிணிப் படிப்பு படித்தும் காட்டுமிராண்டியாக இருக்கின்றார்கள். கல்வி மட்டுமே பகுத்தறிவைத் தரவில்லையே?

ஈவெரா: (அவரையும் அறியாமல்) அடக் கடவுளே! விநாயகா?

ஹரி: மை பிரண்ட் என்ன சொன்னீர்கள்? யாரைக் கூப்பிட்டீர்கள் தற்போது தங்களது துணைக்கு? நீங்கள் வீட்டில் வைத்து வழிபட்டதாகச் சொல்லப்படும் விநாயகரைத்தானே?

மனிதன் மேம்படவே கடவுள், மத சடங்குகள் எல்லாம். இதை முழுமையாக அறியாமல் இந்துமத வேதம், இந்துக் கடவுள், இந்து வழிபாட்டும்முறை, இந்துமத சடங்குகள் மட்டுமே தமிழனின் மேம்பாட்டைத் தடுக்கிறதாக தவறாக சந்தர்ப்பவாத, பிழைப்புவாதத்தினால் உந்தப்பட்டுத் தெய்வத்திருவுருவங்களினைச் செருப்பால் அடித்து அவமதித்துக் கட்டுடைத்ததன் பலனே காட்டுமிராண்டித்தனம் இன்று பகுத்தறிவுப் போர்வையில் அரசியல் திரா'விட"மாக அதிகாரத்துடன் வலம் வருவது. வேத நெறி, திருக்குறள் போன்ற உயர்தத்துவமெல்லாம் உபயோகிக்கப்படாமல் சுயநலம் மட்டுமே மிஞ்சி தனிமனித ஒழுக்கம் குன்றி "Might is Right" என்ற ஆங்கிலேயன் விட்டுச்சென்ற மேற்கத்திய சிவிலைசேஷன் எச்சம் இன்று பகுத்தறிவாகி காட்டுமிராண்டித்தனமாக ஆட்டம் போடுகிறது! இதற்கு மை பிரண்ட் யூ ஆர் பிரைமரிலி ரெஸ்பான்ஸிபிள்!

ஈவெரா: வெங்காயம்...! பகுத்தறிவே ஒரு சிறப்பான சிவிலைசேஷன் தானே!

ஹரி: அப்படியானால் தமிழ் இணையத்தில் நீங்கள் கண்ட திரா'விட'ப் பகுத்தறிவுச் சிங்கங்களின் கருத்தாக்கங்களை சிவிலைசேஷன் என்று உங்கள் பகுத்தறிவாலேயே ஏன் ஒப்புக்கொள்ள முடியவில்லை? சிறுவர்களாய் இவர்கள் வளர்கையில் இவர்தம்வீட்டிலே எதைச்சொல்லிக் கேட்டு வளர்ந்தார்களோ அதுவே அவர்கலது எண்ணமாய், சிந்தனையாய் வடிவெடுக்கிறது. "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" இவர்கள் தந்தையர் தமிழர்தந்தையான் உமது சிந்தனையாக, பகுத்தறிவாக அறிந்து சொல்லித்தந்த மந்திரங்கள் எப்படி என்று அறிந்தீர்களா மை ஓல்ட் பிரண்ட்? வேதம் பெண்ணை தெய்வத்தின் வடிவாகவே பார்க்கிறது பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகள் இருந்தாலும் சரஸ்வதி,லக்ஷ்மி,பார்வதியோடு கூடுதலாக சர்வ வல்லமையுடைய பெண் தெய்வமாக துர்க்கையை தொழுது பெண்ணை மிக உயரத்தில் வைப்பது ஆத்திகம்.

நாத்திகம் பகுத்தறிவு பேசுவோர் பெண்களை எப்படி ஏசுகின்றனர் எப்படி பார்க்கின்றனர் என்பது இவர்கள் மாற்றுக்கருத்துச் சொல்லும் நபர்களது வீட்டுப் பெண்டிரை பகுத்தறிவோடு பார்க்கும் பார்வை விளங்குகிறதா மை ஓல்ட் ப்ரண்ட்? அரசியல் திரா"விட" பகுத்தறிவு = சர்வநாசம்! என நான் கூறிவருவது காழ்ப்புணர்ச்சியால் அல்ல அக்கறையால் என்று இப்போது புரிகிறதா?

புரிந்துகொள்ளத் திறமை இல்லாத ஒரே காரணத்திற்காக இந்துமத வேதம் மாதிரி மிகச்சிறப்பானது எதையும் உடைக்க மிக எளிதாக வரும் எவருக்கும். வேத நெறிமாதிரி உருப்படியானதை உருவாக்க பன்நெடுங்காலம் பிடிக்கும். மிக அரிதானவர்களால், தெய்வத்தன்மையோடு பிறந்து வாழ்பவர்களால் மட்டுமே மக்கள் நலனுக்காக சுயநலம் இல்லாமல் கோவணத்துடன் வாழ்ந்து வழிகாட்ட இயலும்! மற்றவர்களால் மக்கள் நிதியைச் சுரண்டிப் பெரிய ஆளாக வேண்டுமானால் வரலாம்!

ஈவெரா: மனதை மாற்ற சற்று வெளியே சென்று வர ஆசைப்படுகிறேன். போகலாமா?

(ஈவெராவுடன் அடுத்த சுற்றுப் பேச்சு தொடரும்)

அன்புடன்,

ஹரிஹரன்

9 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

நன்மனம் said...

//...மற்றவர்களால் மக்கள் நிதியைச் சுரண்டிப் பெரிய ஆளாக வேண்டுமானால் வரலாம்!...//

புரியும்கரீங்க.... ஹுஹும்...

Hariharan # 26491540 said...

நன்மனம்,

புரியாதமாதிரி நடிக்கிறவங்களுக்கு என்னிக்குமே புரியாது!

வடுவூர் குமார் said...

ஹரி
சும்மா அட்டகாசமாக போகுது,உங்களுக்கும் பெரியவர்க்கும் நடக்கிற கற்பனை பேச்சு.
உங்கள் அக்கரையை நன்றாகவே உணர்த்தியிருக்கிறீர்கள்.
பல விஷயங்கள்,மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள வித்தியாசங்களை போட்டுடைக்குது.(Might is Right )
உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து "கருத்தாக" மட்டும் விழுந்தால் உங்கள் வலைப்பூ இன்னும் அழகாக இருக்கும்.
அவுங்க அவுங்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதை எப்படி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் மறைமுகமாக சொல்லியிருக்கிறீர்கள்.அதெல்லாம் ஒரு வயது வரை தான் எடுத்துக்கொள்ளலாம், அதற்குப்பிறகு சுய அறிவு,சிந்தனை,பட்டறிவு. இதெல்லாம் வரவில்லை என்றால்..?ஒன்றும் செய்யமுடியாது.வரும் வரை காத்திருக்க வேண்டும்.
தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற திரட்டிகள் உலகத்தமிழரை பக்கத்தில் கொண்டு வந்துள்ளது என்றால் மிகையாகாது.அதை இன்னும் ஆக்கப்பணிகளில் கொண்டுபோனால், இன்னும் நம் சமூகம் உயர இதுவே காரணமாக இருக்கம் என்பது என் ஆவல்.

Hariharan # 26491540 said...

குமார்,

பொதுஅறிவோடும் அக்கறையோடும் இருப்பவர் எவராலும்
வெறுமனே பகுத்தறிவு பகுத்தறிவு கூக்குரலிடுவதனால் பெரிய ஆட்டுமந்தையில் பகுத்தறிவுக் கூப்பாடுபோடும்+ வெறுப்பை உமிழும் ஆட்டுமந்தை என்ற இன்னொரு பிரிவு என்பதுமட்டுமே இதுவரையில் விளைந்த சமூக மாற்றம் என்பதை அறிய முடியும்.

Hate பாலிசி இவர்களது fateஐ மாற்றும்தான் ஆக்கமாகஏறுமுகமாக அல்ல! விரைவான் கூட்டுச் சிதைவுக்கு மட்டுமே!

Krishna (#24094743) said...

ஹரி: முதல் பதிவைப் படித்ததும் சற்று கவலைப் பட்டேன் - உங்கள் 'language'-ப் பார்த்து. இப்பதிவுகள் மிகவும் அருமை. இதையெல்லாம் படிக்கும் தைரியமாவது சிஷ்ய கேடிகளுக்கு இருக்குமா என்பதே சந்தேகம் தான். மேலும் வர இருக்கும் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Hariharan # 26491540 said...

விடாது கருப்பு,

எனக்கு எப்படி விதிக்கப்பட்டிருக்கிறதோ அப்படித்தான் மரணம் ஏற்படும் என்பதை நம்புகிறவன்.

எனவே கருப்பு எனக்குக் கொலைமிரட்டல் விடுவதை விட்டுவிட்டு பூனைக்கு தின்னக்கொடுத்த மூளையை இனியாவது பயன்படுத்தவும்.

Hariharan # 26491540 said...

விடாதுகருப்பு has left a new comment on your post "(72) ஈவேரா.சாமியுடன் குவைத்தில் நேரடி சந்திப்பு பகுதி-3":

உயிரோட ஊர் வந்து சேரமாட்டே போல இருக்கு. எவனோ போட்டுத் தள்ள போறான். பாவம் ரெண்டு புள்ளைங்க வேற!

Hariharan # 26491540 said...

//முதல் பதிவைப் படித்ததும் சற்று கவலைப் பட்டேன் - உங்கள் 'language'-ப் பார்த்து. இப்பதிவுகள் மிகவும் அருமை. இதையெல்லாம் படிக்கும் தைரியமாவது சிஷ்ய கேடிகளுக்கு இருக்குமா என்பதே சந்தேகம் தான். மேலும் வர இருக்கும் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//

கிருஷ்ணா படித்து ஒரு பூனைப் புண்ணாக்கு அரசியல் திரா"விட" பெத்தடின் பித்தம் தலைக்கேறி கொலை மிரட்டல் விட்டுச்சென்றிருக்கிறதே!