Sunday, December 24, 2006

(89) (ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ சாமி

தமிழ் செம்மொழி(ளி)(லி) யாகியது ஓல்டு பேஷன். இப்போ லேட்டஸ்ட் டிறண்டு தமிழிசை!

சில சமயம் ஒரு பொருளை விற்கும் நிறுவனத்தின் நேரடிக் கிளையில் நடக்கும் விற்பனையை விட அந்த நிறுவனத்தின் ஏஜெண்ட் / டிஸ்டிரிப்யூட்டர் சில பரபரப்பு யுக்திகளோடு செய்கின்ற விற்பனையில் வியாபாரம் மிகுந்து காணப்படும் சூழல் சில இடங்களில் இருக்கும்.

அந்தமாதிரி அரைநூற்றாண்டாக கோபாலபுரத்தில் கலிஞரு திருக்குறள், தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கியத்தை எல்லாம் ஓபன் புக் ஸ்கீம் மாதிரி பார்த்து திரும்பி பொழிப்புரை எழுதி தமிழை கழகத்தின் முப்பெரும்/ஐம்பெரும் விழாக்காலங்களில் லகர, ளகர, ழகரம், வல்லின, மெல்லினப் பயன்பாடுகள் அறியாத இடையினமான கழகக் கண்மணிகளிடம் ஹோல்சேல் வியாபாரம் செய்து நாலு காசு சம்பாதிக்கப் பயன்படுத்தி வந்தார்!

இப்போ இந்த மும்முரமான முத்தமிழ் வியாபாரம் கோபாலபுரத்தினின்று கலிஞரு கையை விட்டு திண்டிவனத்துக்கு தமிழ்க்குடிதாங்கி மருந்து ராமதாசு கைக்கு வந்தாச்சு! கலிஞரு செம்மொழியாக்கி தமிழ்த்தாயின் அணிகலன்கள் (அணி)வித்து அழகு சேர்த்ததை விட குடிதாங்கியால் தமிழ்த்தாயின் அணிகலன்கள் (அணி)வித்தல் இனிக் கூடுதல் வேகம் பெறும் என நம்பலாம்!

மல்லுவேட்டியை வரிஞ்சுகட்டி வரிவரியாக் கோடுபோட்ட அண்டிராயர் தெரிய உடுத்துவது தமிழ்நாட்டு நாட்டுப்புறத் தமிழனின் உடை உடுத்தும் பாவனை.

மல்லுவேட்டி வாங்கிய கடை பெயர் : மம்மிடாடி
கோடுபோட்ட அண்டிராயர் வாங்கிய கடை பெயர்: ஆண்டி அங்கிள்


இப்படித் தமிழன் தமிழைக் கிழிஞ்ச கோவணம் மாதிரி ஆண்டியாக்கி தினசரியாக வாழ்கின்ற செம்மொழியாகத் தமிழன் தமிழ்மொழியைப் பேணுகிற நிதர்சனத்தில், புது ரூட்டுல தமிழிசைன்னு கிளம்பியிருக்கிறது என்னத்துக்கு?

காசுமேல காசுவந்து கொட்டுகிற நேரமிது.... குடிதாங்கி ஹம் பண்ணும் தமிழிசைப்பாடல்!

கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்கிற இந்தச் சுயமரியாதை, பகுத்தறிவுக் காட்டுமிராண்டிகளுக்கும் கடவுளை உணர்ந்து, உருகிப் போற்றித் துதிக்கின்ற தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற இறைத்தமிழ்,இசைத்தமிழ் இலக்கியங்களுக்கும் என்ன சம்பந்தம்?

பறை அடித்தலும், கொம்பு ஊதுவதும் மட்டுமே இனிமைதரும் தமிழிசையாகுமா? காவடிச்சிந்து என்பது நடந்து பயணிக்கும் நெடுந்தொலைவுப் பயணத்திலே களைப்பு வராமல் இருக்க வழிப்போக்கன் பாடும் பாடல்கள்! இசைஅரங்கிலே பாடப்படும் இசை அதைக் கேட்கும் ரசிகமக்களிடையே இனிமையான தாக்கத்தினை ஏற்படுத்த பழுதற்ற பல்சுவை வடிவம் வேண்டும்!

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகாலமாய் இறைவனே இல்லை என்கிற பகுத்தறிவு, சுயமரியாதை முட்டாள் கொள்கையைத் தாங்கியதில் குத்துப்பாட்டு மட்டுமே தமிழ் என்கிற அளவிற்கு குறுகிப் போனது வெகுதியான தமிழர்களால் விளைந்த சுய அழிவே அன்றி எவராலும் திணிக்கப்பட்டு குறுகிப்போனதாக மருகுவது ஒரிஜினல் கூத்தாடிகளையும் மிஞ்சும் நயமான நடிப்பு!

இசையும் உளவியலும் ஒன்றுக்கொன்று பெரிய தொடர்புள்ள விஷயங்கள். கரும்பாறையாக கடினப்படுத்தப்பட்ட மனம் மென்மையான விஷயங்களில் ஈடுபடாது! மென்மையான கலைகள் பெண்மைத்தனம் என்று மார்தட்டிவிட்டு இப்போது தமிழிசை என்று செல்லாக்காசுச் சிந்தனையோடு கிளம்பி இருக்கின்றார்கள்!

இதிலே தனித்துத் தமிழிசைக்கருவிகள் என்பதை மட்டும் இசைத்துத் தமிழிசை காக்கக் கிளம்பியிருக்கும் வெற்று ஆரவார சுயமரியாதை, பகுத்தறிவுப் பாசறை கும்பல் மெய்யாகத் தமிழ் இசை என்பதன் விரிந்த தளத்தினை இறைமறுப்பு என்று முட்டாள்தனமாக 95% இசைத்தமிழ் இறைத்தமிழாக இருப்பதால் மறுதலித்ததாலேயே வெகுதியான மக்களிடையே விரும்பி தினசரியாக பயன்பாட்டில் இல்லாது சிறுத்துப்போனதை உணரவேண்டும்!

இசைக்கு மொழிபுரிதல் என்பது மட்டுமே அது வளர, வெகுதியாக மக்களிடையே பரவ காரணமாகிவிடாது. தேவாரம் எத்தனைபேர் அறிந்திருக்கின்றார்கள்? தேவாரம் ஓதுவோரது வாழ்க்கை ஏன் நொடித்து ஜீவனின்றி ஆனது? மொழி தமிழ்தானே? இந்துமத இறைவனே இல்லை என்று அரசாள்வோர் கொள்கையாக கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாக இருக்கிறதால் இறைத்தமிழ் எனும் இசைத்தமிழ் காலாவதியாகின்ற நிலை!

சென்னையிலேயே தெலுங்குமக்கள் நடத்தும் சூப்பர்மார்க்கெட் "அம்மா-நாணா" என்று பெயரிலிருக்கும். தெலுங்குமக்கள் தியாகராஜர் அருளிய தெய்வகீர்த்தனைகளை, இசையை வாழ்க்கையில் தினசரி பயன்படுத்துபவர்கள்!

தமிழ்நாட்டில் தமிழன் கோவணம் வாங்கும் "கடை மம்மி-டாடி, ஆண்டி-அங்கிள்" என்று இருக்கிறது! தமிழன் தமிழகத்தில் இந்து தெய்வீக இசையை சுயமரியாதை, பகுத்தறிவு காட்டுமிராண்டிகள் தலைமையில் நடைமுறை தினசரியில் பயன்படுத்துவதே கிடையாது!

இந்து தெய்வமே இல்லை என்பது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கங்களின் பிரதானக் கொள்கையாக இருக்கும்வரை பாரம்பரிய இசையில் தமிழ்மொழிப் பாடல்கள் வழக்கத்தில் வெகுதியாக வரப்போவதில்லை!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை போன்ற நாகூர் ஹனீபாவின் இசையும், எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே என்கிற இயேசு துதிகளும் பல்கிப் பெருகித் தமிழிசையாகி இருப்பதன் அடிப்படைக் காரணம் அரசியல் திரா'விட' பெத்தடின் இயக்கங்களின் இந்து இறைவன் மறுப்புக் கொள்கையே!

இறைவனை, இந்துமதத்தினை மறுக்கும் கூட்டத்தினர் எழுப்பும் ஆரவார ஒலிகள் தமிழிசை என்கிற மாய்மாலத்தினால் தமிழ் ஒருபோதும் இனிய இசையாக வளர்ந்து பெரும்பான்மையோர் பயன்பாட்டில் வந்துவிடப் போவதில்லை!

அப்போ தமிழ்க்குடிதாங்கியின் தமிழிசை மீட்பு என்பதெல்லாம்?

"காசுமேல காசுவந்து குடிதாங்கிக்கு கொட்டுகிற நேரம் இது... தைலாபுர வாசக்கதவை தமிழிசை ராசலட்சுமி தட்டுகிற நேரமிது"


சிங்கப்பூர்ல கூத்தாடிகள் சங்கத்தலைவர் விஜய்காந்து கூத்தாடியா இருந்துட்டே தமிழர் குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தின மாதிரி, தமிழிசை மீட்பு நிகழ்வில் சேர்ற காசைக் கோணியில கட்ட பாமகவின் 15 பிரதிநிதிகள் சகிதம் மருத்துவர் தமிழ்க் குடிதாங்கி கோபாலபுரத்து / கோடம்பாக்கத்துக் கூத்தாடிகளை மிஞ்சிக் கட்டுகிற கூத்து!

தமிளிசை தமிளு யாவாரத்தின் புதிய பரிணாமம்! டங்கு டங்கு...டணக்கு டணக்கு என்கிற இறைச்சல் சத்தம் மட்டுமே தமிழிசை என்று தமிழர்களுக்குப் போடப்படும் இன்னொரு அரசியல் திரா"விட"ப் பெத்தடின் ஊசி!

புதுசா மார்க்கெட்டுக்கு வந்திருக்கிற (ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ சாமியோவ்.......
ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ...

அய்யோ பாவம் தாய்த்தமிழ் இந்த வியாபாரிகளினால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் ஆப்புகளின் மீது வலிந்து அமரவைக்கப்படுகிறது! தமிழ்க்கடவுளே காப்பாய் தமிழன்னையை இந்தச் சுயநல, பிழைப்புவாத, சுயமரியாதை, பகுத்தறிவு பேசியபடி தமிழ் வியாபாரம் செய்யும் நபர்களிடமிருந்து!

அன்புடன்,

ஹரிஹரன்

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

ச.சங்கர் said...

அன்புள்ள ஹரிஹரன்
மக்கள் தொலைக்காட்சி நடத்தும் விதம் பார்த்தால் ராமதாஸிடம் ஒரு சின்ன நேர்மை இருப்பதை பார்க்க முடிகிறது..அதனால் தமிழிசை நிகழ்ச்சி என்றெல்லாம் ஆரம்பித்தால் அதில் குத்துப்பாட்டு ...சினிமா போன்ற அம்சங்கள் இருக்காது என்றே நம்புகிறேன்...அதனால் அப்பட் நடத்தப் படும் நிகழ்ச்சி கலெக்ஷனுக்காக என்றாலும் இருந்து விட்டுப் போகட்டுமே...கோபாலபுரத்துக் காரர்களது இரட்டை வேட கயமைத்தனம் மற்றும் சூரிய தொலைக்காட்சி பண்ணும் கலாச்சார சீரழிவு இதெல்லாம் பார்க்கும் போது ராமதாஸு தேவலை

Hariharan # 03985177737685368452 said...

வாங்க விசித்திரகுப்தன்,

ராமதாஸ் + அவர் குடும்பத்தினர் அரசியலில் எந்தவிதமான பதவியும் வகிக்கமாட்டார்கள் அப்படி வகித்தால் முச்சந்தியில் வைத்து சவுக்கடி தண்டனை தரப்படவேண்டும் என்று சத்தியம் செய்து தந்த நேர்மையாளர் தானே!

அன்பு மணி கொல்லைப்பக்கமாக ராஜ்ஜியசபா எம்பி யாகி மத்திய அமைச்சர் பதவி சம்பவம் எவ்வளவுக்கு நேர்மையானது என்று ராமதாஸை நேர்மையாளர் என்று கருதும் நீங்கள் தான் சொல்லவேண்டும்!

மற்றபடி சுயநலத்துக்காக தமிழக அரசியலில் ரஜினி/விஜய்காந்துக்காக குடிதாங்கி ராமதாஸ் எதிர்க்கும் தமிழ் இளைஞர்கள்-சினிமா ரசிகர்கள் மன்றங்களில் ஆற்றலை வீணாக்குவதை சுட்டுவதால் சினிமாவை எதிர்க்கும் அரசியல்வாதி எனும் முறையில் வரவேற்பவன் நான்!

குடிதாங்கி ராமதாஸ் கோபாலபுரத்துக் கருணாநிதியை மிஞ்சிடும் சாதி மற்றும் தமிழ் வியாபாரியே!

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான ஆக்கமான கனவுகளோ திட்டங்களோ இல்லாத இன்னொரு குடும்பப் பிணைப்புள்ள சுயநல கயமை செயப்பாட்டு வளரும் அரசியல் வாதியே குடிதாங்கி!

ஐயங்கார் said...

நீ திருந்தவே போறதில்லடா அம்பி!

வடுவூர் குமார் said...

ஹரி
இந்த நாகூர் ஹனிபா அவர்களின் "இறைவனிடம் கையேந்துங்கள்" என்ற பாட்டு இன்றும் எங்காவது கேட்டால் சற்று நின்று அனுபவித்து போகும் மாதிரி இருக்கும்.அதன் வரிகளும், இசையும் அப்படியே கட்டிப்போட்டுவிடும்.

இங்கு நடந்த வானொலி நிகழ்ச்சியில் "இந்த பொங்கிசை தமிழ்" பற்றி திருமதி மீனாக்ஷி சபாபதி படைத்துக்கொண்டிருந்தார்.
அதில் ஒருவரை (பெயர் ஞாபகம் இல்லை) பேச அழைத்தபோது,இங்கு பலர் எழுதுவதை(பாட மறுக்கும்...) கருத்தை விடாமல் சொல்லிமுடித்தார்.அதில் என்ன விசேஷம் என்றால்,நிகழ்ச்சி படைக்கும் படைப்பாளியை பேச விடாமல் ஏதோ மேடையில் தனியாளாக பேசுவது போல் பேசினார்.பொறுக்க முடியாமல் வானொலியை அடைத்தேன்.நிறையவே உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்.
வானொலியிலேயே இப்படி என்றால் "நேரில் எப்படியோ" என்று போகாமல் இருந்துவிட்டேன்.
அதைப்பற்றி கோவி.கண்ணன் எழுதிவிட்டார்.
இழப்பொன்றும் இல்லை

VSK said...

எப்படியோ, எங்கிருந்தோ இந்தத் தமிழிசை அரங்கேற்றம் நடந்தாக வேண்டும்.

அதை திரு. ராமதாஸ் செய்வதில் தப்பில்லை எனப் படுகிறது....அது ஒரு வியாபாரமக இருப்பினும்!

ஒருவர் சில, பல தவறுகள் செய்தார், செய்கிறார் என்பதற்காக, ஒட்டுமொத்தமாக அனைத்தையும் பழிப்பது முறையாகப் படவில்லை, திரு.ஹரிஹரன்!

வரவேற்போம் தமிழிசையை....அது எந்த வடிவில் வரினும்..

இதை ஒரு முன்னோடியாகக் கொண்டு மற்றவர்கள் இதனை மேம்படுத்த முயற்சிக்கலாமே அல்லது, ஆக்கபூர்வ ஆலோசனைகள் தரலாமே!

புத்தாண்டு வாழ்த்துகள்!

Hariharan # 03985177737685368452 said...

மகேந்திரன்,

//நீ திருந்தவே போறதில்லடா அம்பி! //

உங்கள் மகிழ்ச்சிக்காக:
"மருத்துவக்குடிதாங்கி ராமதாசு ஐயா வாழ்க"

சந்தோஷமா இருங்க! ராகவன் ஐயங்கார் ((எ) மகேந்திரன்!