(102) ஈவெரா ஆதரவாளர்கள் மெய்மறந்து ஆத்மாவை ஆமென்றது
இழப்பை எதிர் கொள்ளும் போது மனம் தத்துவரீதியாகத் தயாராகி எத்தனை பெரிய இழப்பையும் நேரடியாக எதிர்கொண்டு உள்வாங்கி ஜீரணிக்கத் தேவையான மனோதைரியத்தை மனிதனுக்கு அளிக்கிறது. இந்துமத வாழ்வியல் வேத நெறிகள் அப்படியானவையே!
ஈவெரா மற்றும் இந்துக் கடவுள் / வேதநெறி மறுப்பு என்பதில் தீவிரமாக இருக்கும் நண்பர் முத்துக்குமரனின் இந்தப்பதிவில் வரும் இந்த வார்த்தைகள் " இன்று காலை 8.17, மணி அளவில் எனது அப்பத்தா மரணம் அடைந்தார்கள். நீண்ட காலமாய் உடல்நலன் குன்றியிருந்த அவர்கள் இன்று தனது வாழ்க்கைப்பயணத்தை நிறுத்தி கொண்டுவிட்டார்கள்.....நீண்ட வருடங்களால குழந்தை பேறில்லாமல் இருக்கும் என் அக்காவின் மகளாக மறுபடியும் எங்களிடம் வருவார்கள் என்ற பிராத்தனையோடு என் அஞ்சலிகளை அவர்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்."
சனாதன தருமம் எனப்படும் இந்து வேத நெறி வாழ்வியல் தத்துவத்தில் இறப்பு என்பதே கிடையாது என்பது வலியுறுத்தப்படுகிறது. ஆத்மா என்பது அணிந்திருக்கும் சட்டையே உடல், ஆத்மாவைப் பிரதிபலிக்க இயலாத அளவுக்கு உடல் தளர்ந்து போகும் போது ஆத்மா விடுபட்டு புதிய தகுதியுடைய பிரதிபலிப்புத் தளமாக புதிய உடலைத் தெரிவுசெய்கிறது என்பது இந்துமத தத்துவம்.
தத்துவம் என்பதே தத் + வம், தத்= இறை, வம்= நான் இறையும் நானும் இணைந்தது என்பதே தத்துவம்.
செயல் ஒன்றில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து ஈடுபடும் போது தான் என்கிற உடல் பற்றிய, அந்த உடலுடன் தொடர்புடைய அனுபவங்களின் தொகுப்பாகிய மனம் ஏற்படுத்தும் சஞ்சலங்கள் தாண்டித் தன்னுள் இருக்கும் இறைசக்தியாகிய ஆன்மாவின் பிரதிபலிப்பாக அச்செயல் பூரணமாக அமைந்துவிடும்.
ஒரு இசைக்கலைஞன் தான் என்கிற நிலையினின்றும், தனது என்பதான நினைவுகள் தரும் கர்வத்தினின்று விடுபட்டு இசையோடு இணைந்து அர்ப்பணித்துச் சாதகமாக, வேள்வியாக இசைக்கருவிகளோடு தன் விரல்கள் மூலம் ஆன்மாவைப் பிரதிபலிக்கும்போது அது மிக அருமையான இசையாகி, கேட்போர் உள்ளம் உருக்கி எழுந்து நின்று "ஸ்டேண்டிங் ஓவேஷன்" பாராட்டைப் பெற்றுத்தரும்.
மெய்மறத்தல் என்பது உடலை மறந்து லயித்தல் என்பது. இறைவனிடம் பக்தி கொள்ளும்போது மெய் மறந்து இறையொடு ஒன்றாகியதாக உணர்வது பேரானந்தம்.
முத்துக்குமரனின் பதிவில் வரும் மேற்சொன்ன வரிகள் அவர் மெய்மறந்த நிலையில் வரது ஆழ்மனதில் அவர் மானசீகமாகப் பின்பற்றும் இந்துதருமம் வார்த்தைகளாக வந்து வெளிப்பட்டிருக்கிறது. மெய்மறத்தல் விடுதலை செய்த உண்மை கறுப்புச்சட்டை போட்டு கடவுள் இல்லை என்பவர் தனது அப்பத்தாவின் ஆத்மா அக்காவின் மகளாக மீண்டும் தம்மிடம் வரவேண்டும் என்கிற அவாவாக வெளிப்பட்டு இருக்கிறது.
முத்துக்குமரனின் அந்தப் பதிவில் பின்னூட்டங்கள் வாயிலாக, ஈவெரா ஆதரவாளர்களாக வலம் வரும் பலர் ஆத்மாவை அது மீண்டும் வேறு வடிவமாக வரும் என்பதை ஒப்புதல் அளித்து இருப்பது கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்பது வெறும் உதட்டளவில் எழுப்பப்படுவது மட்டுமே என்பதை உறுதிப்படுத்துகிறது.
கடந்த செப்டம்பரிலேயே உடனே இதுபற்றி எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன். என்றபோதும் அது அப்போது எழுதப்பட்டால் அநாகரீகம் என்பதால் தவிர்த்தேன்.
நண்பர் முத்துக்குமரன் அவரது பதிவின் வரிகளை, இந்தப் பதிவில் சுட்டிக் கையாண்டதை தவறாக எண்ணமாட்டார் என்று கருதுகிறேன்.
அன்புடன்,
ஹரிஹரன்
29 comments:
டெஸ்ட் மெசேஜ்!
ஒரு அஞ்சலி செய்தியில் கூட தன் தரப்புக்கு லாபம் பார்க்கும் நோக்கம் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது. தோழர் ஹரிஹரனும் அதற்கு விதிவிலக்கல்ல :-(
இப்போ இது தேவையில்லாது.
அரிகரனய்யா,
இறைமறுப்பினருக்கு இறைக்கருத்தை அறியும் ஆவலுமில்லை, அறிவுமில்லை.
அறிந்தே அதை ஆகாதென ஒதுக்குகிறார்களென ஆரும் நினைக்க முடியாத படி அவர்களை தங்களின் அசட்டுத்தனங்களை என்றும் பிட்டுவைக்கிறார்கள். அதில் ஒரு துணுக்கே நீங்கள் சுட்டியது...
திரைப்படத்தை வெறுத்த ஈ.வே.ராவின் திரைப்படத்தை, கற்பு கழிசடைகள் போடும் களியாட்டத்தில் படமெடுத்து, பதவிவெறியேறிகள் இவர்களென பெரியார் சொன்ன திமுகவினரால் பாராட்டுவிழா நடத்தி, அதில் ஈ.வே.ரா இடையறாது ஏசிய கண்ணகியையும், திருக்குறளையும் கட்டிப்பிடித்து காசு பண்ணும் தமிழ்க்கிழ(வ)ர் அந்த விழாவில் "இந்தப் படத்தில் சத்தியராஜ் நடிப்பது அவர் செய்த தவத்தின் பலனே" என்று சொல்கிறார்.
தவமாம. அதை சத்தியராசு பண்ணிணாராம். அதற்கு பலன் வருமாம். இது பகுத்தறிவாம்.
இதற்கு தலையாட்டும் ஆட்டுக்கூட்டங்கள் வேறு....
இன்னொரு உதாரணம். "பொங்கல் கொண்டாடுங்கள், தீபாவளி கொண்டாதீர்கள்" என்று பண்டிகையிலும் பச்சைவெறியை தூண்டும் இவர் சொல்வது, "பொங்கல் விவசாயி நன்றி படைக்கும் பண்டிகை" என்று.
யாருக்கு நன்றி சொல்கிறான் விவசாயி என்று எனக்கு புரியவில்லை. இயற்கைக்கா? அதற்கு உயிருண்டா? அப்படியாயின் சுனாமிக்கு தண்டிக்கவேண்டாமா?
கடவுளுக்குத்தானே நன்றிசொல்கிறான், விவசாயி.
அப்புறமென்ன இறைமறுப்பு.
இந்த இறைமறுப்பு மாமன் குடும்பத்தின் விவரம் வெங்காயம் போல உறிந்தால் ஒன்றுமில்லாமல் போகிறது...
நண்பர் ஹரி,
ஆத்மாவாவது வெங்காயமாவது! எல்லாம் பசப்பு வார்த்தைகள். மனிதன் இறந்து விட்டால் வெறும் பிணம்தான். இதான் பெரிய தத்துவம்.
சரி அது கிடக்கட்டும். இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாண்டான்னு கூட்டாளிங்க சொன்னாங்க. அதான் போட்டு நொங்கு எடுத்திருக்கேன். என்னோட லேட்டஸ்ட் பதிவ பாத்தீங்களா?
மறுபிறவி உண்டா இல்லையா என்பது பற்றி விஜய் தொலைக்காட்சியில் விவாதம் நடந்தபோது மறுபிறப்பு இல்லை என்று பேசியவர் சொன்ன ஒரு விசயம் இங்கே பொறுந்தி வரும்...
"பேரன் பொறக்கும் போது தாத்தா உயிரோட இருந்தா பேரன் தாத்தா மாதிரி பொறந்திருக்கான்னு சொல்லுவாங்க அதே தாத்தா உயிரோட இல்லைனா தாத்தாவே பொறந்திருக்காருனு சொல்லுவாங்க"
எங்க சித்தி பையனை நாங்கெல்லாம் தாத்தா மாதிரி இருக்கான்னு சொல்வோம், ஆனா எங்க சித்தப்பா தாத்தாவே பொறந்திருக்காருடானு சொல்லுவார்....
சுதந்திரத்திற்குமுன் 30கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை இப்போ 100கோடிக்கு மேலே, இதே நிலைதான் எல்லா நாடுகளிலும் அதே நிலைதான், 100 வருடங்களுக்கு முன் 1 பில்லியனாக இருந்த மக்கள் தொகை இப்போ 6 பில்லியன், இந்த கூடுதலான 5 பில்லியன் ஆத்மாக்கள் அந்த 1 பில்லியன் ஆத்மாக்களிலிருந்து வட்டி குட்டி போட்டதா?
உடனே மற்ற உயிரினங்கள் மனிதனாக மாறிவிட்டது என்று ஜல்லியடிப்பதாக இருந்தால் அதெப்படி கடவுள் 100 வருசத்துல 500கோடி ஆத்மாக்களுக்கு மனிதனாக மாற புரமோசன் கொடுத்துட்டாரோ?
//உடனே மற்ற உயிரினங்கள் மனிதனாக மாறிவிட்டது என்று ஜல்லியடிப்பதாக இருந்தால் அதெப்படி கடவுள் 100 வருசத்துல 500கோடி ஆத்மாக்களுக்கு மனிதனாக மாற புரமோசன் கொடுத்துட்டாரோ?//
புல்லாய், பூண்டாய்,புழுவாய்,பாம்பாய்,பறவையாய், பல்மிருகமாகி எல்லாப்பிறப்பும் பிறந்திளைப்பது உலகின் உயிர்ச்சுழற்சித் தத்துவம்.
மனிதனுக்குக்கீழான மிருகமாக பிறந்து அடுத்த பிறப்பில் மனிதராக புரொமோஷன் பெறுவதும், தற்போது மனிதனாய்ப் பிறந்து தனது கீழான செயல்களால் அடுத்த பிறப்பில் கீழிறக்கப்படும் டி-புரொமோஷனும் உயிர்ச் சுழற்சியில் இல்லாமல் என்ன?
இவ்வாறானவர்கள் KFC, McDonald கடைகளில் மில்லியன் கோழிகளாக இறங்குமுகமாகப் பிறந்திளைக்கவும் நேரிடும்தான்!
//மனிதனுக்குக்கீழான மிருகமாக பிறந்து அடுத்த பிறப்பில் மனிதராக புரொமோஷன் பெறுவதும்
//
அட அதெப்படிங்க சிங்கமாக பொறந்தா மானை அடித்து தான் சாப்பிடவேண்டும், இல்லையென்றால் அது பட்டினியால் சாக வேண்டியது தான், இப்போ சிங்கத்தோட நடத்தையின் அளவுகோல் என்ன? சிங்கம் மனுசனாக புரமோசன் கிடைக்க சிங்கம் என்ன செய்யவேண்டும், மானுக்கு மசாஜ் செய்துவிடனுமா? அல்லது முயலின் மூட்டுவலிக்கு மூலிகை மருந்து தடவி விடனுமா? மானுக்கு மனித புரமோசன் கிடைக்க அது புல் போன்ற உயிருள்ள பச்சை தாவரங்களை சாப்பிடாமல் இருக்கனும்? சிங்கத்துலயும் மானிலும் நல்ல சிங்கம், கெட்டசிங்கம்னு எப்படி பிரிப்பது, இதுங்கெல்லாம் எங்கே தத்துவம் பித்துவமெல்லாம் படிக்குது, எந்த இடத்தில் கோவில் கட்டி ஆத்மா, பரமாத்மா, ஜீவாத்மாவை தேடுதுங்க...
அப்புறம் மிருகங்களும் சனாதான தர்மத்தை கடைபிடித்து மனிதனாக பிறக்க புரமோசன் கிடைக்குதா?
காமெடி தாங்கலை போங்க....
மிருகங்களுக்கான வாழ்வு முறை இன்ஸ்டிங்ட் சார்ந்தது. மனிதனுக்கு மட்டுமே இன்டலக்ட் சார்ந்தது.
மிருகம் சிந்திப்பதில்லலை. இறையை உணர்வது, அணுகுவது என்பது மிருகங்கள் அறியாதது.
எனவே மிருகத்தின் இன்ஸ்டிங்ட் சார் செயல்கள் கர்மா-பலன் என்கிற விஷயத்தில் வருவதில்லை. அது தோன்றி அதற்கான வாழ்வு வாழ்ந்து மடியும்.
மிருகங்கள் சுயநலமாகக் கயமைகள் என்று செய்வதில்லை.
மனிதனுக்கு மட்டுமே அவனது படைப்பைப் பற்றி, ஏன், எதனால் எப்படி என்று அவனுள் சென்று அறியும் சிந்தனை இண்டலெக்டாக உதவுகிறது.
ஆத்மா உண்டா இல்லியா என்பதில் உண்டு, பாவபலன்கள் தன்னை அடுத்தபிறவியிலும் பாதிக்கும் என்கிற எண்ணம் இப்பிறவியில் வாழும் போது நெறிமுறைகளுடன் இன்னொருவருக்கு இடர்கள் தராமல் வாழ ஒருவனைச் செலுத்தும்.
ஆத்மா என்கிற ஒன்றே இல்லை எனவே பாவ புண்ணியம் புண்ணாக்கு என்கிற எண்ணம் கட்டுடைப்பில் கிடைக்கும் சுதந்திரம் கட்டற்ற சிந்தனைகளோடு அடுத்தவரைப் புண்படுத்தி வாழ ஒருவனைச் செலுத்தும்.
ஆத்மா உண்டென்கின்ற நம்பிக்கைசார் வாழ்க்கை மனிதனுக்கு சமூகத்துக்கு நல்லது.
ஹரிஹரன்,
முத்துகுமரனது பதிவை படித்து இந்த 'பதிவையும்' படிக்கும் போது பல கேள்விகள் எழுகின்றன. அதை கேட்க வேண்டிய இடம் இதுவல்ல என்பதால் கேட்காமலே தவிர்க்கிறேன் :). சில மட்டும் இங்கே:
ஒருவர் தனது அப்பத்தா மறைந்த துயரத்தில், இன்னொரு குழந்தை வடிவில் அவர்கள் வருவார்களா என ஏங்குவது கடவுள் நம்பிக்கை சார்ந்ததா? இழப்பை தாங்கும் இதயத்தை மனிதன் எதிர்கொள்ளுவதில் கூட அழுக்கான மனதின் வெளிப்பாடுகள் "ஆன்மீக விளக்கம்" தருவது வேடிக்கை.
இந்த சாதாரண ஏக்கத்தை பார்ப்பனீய மறுபிறப்புடன் முடிச்சு போட்டு நியாயம் கற்பிக்க முயலும் இந்துத்துவ முகம் கிழிகிறது. பார்ப்பனீய இருபிறப்பாளர்கள் உயர்நிலையில் பிறந்தவர்கள். சூத்திரனாக, தாழ்த்தப்பட்டவனாக பிறந்தவர்கள் தங்களது பாவங்களிலிருந்து விடுபட மீண்டும் பிறந்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற சாதி சாக்கடை தத்துவத்தை தந்த சனாதான இந்து(த்துவ) தர்மமும் இந்த ஏக்கமும் ஒன்றா?
செத்த பின்னர் வரும் ஆன்மாவாவது புண்ணாக்காவது. உயிருடன் இருக்கும் மனிதர்களை எப்படி நடத்துகிறோம் என இந்துத்துவவாதிகள் முதலில் சிந்திக்கட்டும்.
//ஆத்மா உண்டா இல்லியா என்பதில் உண்டு, பாவபலன்கள் தன்னை அடுத்தபிறவியிலும் பாதிக்கும் என்கிற எண்ணம் இப்பிறவியில் வாழும் போது நெறிமுறைகளுடன் இன்னொருவருக்கு இடர்கள் தராமல் வாழ ஒருவனைச் செலுத்தும்.
//
அப்படியா.... அப்படியென்றால் காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோவில் உள்ளேயே சங்கரராமன் கொலை நடந்திருக்காதே, அனுராதார ரமணன் குமுறி குமுறி அழுது பேட்டி கொடுக்கும் நிலை வந்திருக்காதே....
இன்றைக்கு கடவுளை நம்பாதவர்களை விட நம்புகின்றவர்கள் தான் அதிகம், ஆனால் கடவுளை நம்புகின்றவர்கள் செய்யாத கொலைகளா?, கொள்ளைகளா? கற்பழிப்பா? அவர்கள் வாங்காத லஞ்சமா? எல்லாவற்றையும் செய்துவிட்டு கடவுளுக்கு இலஞ்சம் கொடுத்து பாவங்களை கழுவிவிடலாமென்று தான் இத்தனையும் கடவுள் பக்தர்களால் நடக்குதோ...
//ஆத்மா உண்டென்கின்ற நம்பிக்கைசார் வாழ்க்கை மனிதனுக்கு சமூகத்துக்கு நல்லது. //
இது ஒன்றைத் தவிர ஆன்மா என்ற கருத்தாக்கத்தை உருவாக்க வேறு எந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை..
சரி, ஹரி, நீங்க எப்போ போய் புலிப் பால் எடுத்துட்டு வரப் போறீங்க?
அதான் சார், உங்க பேரோ ஹரிஹரன், நீங்க போய் புலிப்பால் எடுத்திட்டு வரலையின்னா நீங்க சனாதன தர்மத்தைக் கடைபிடிக்கிறீங்கன்னு நாங்க எப்படி நம்புறது?
அத்தோட உங்க இன்டலக்ட் படி, ஒருவர் மறக்க விரும்பும் இழப்புகளை, இறப்புகளை நினைவுப்படுத்துவது நூறு பசுக்களைத் தானம் செய்த பலனைத் தரும் புண்ணிய காரியமோ?
இங்கே மறுபிறவி என்ற கருத்தாக்கத்தை போதிப்பதே மனுதர்மத்தை காக்கத்தான், நானும் மனிதன் தானே பிறகு ஏன் நான் தலித், எதற்காக இந்த உரிமை மறுப்புகள், ஏன் பிறப்பால் பிராமணர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் என்ற கேள்விகளுக்கு நியாயமான விடை சொல்ல முடியாது.
இது மனித உரிமை மீறல், இது ஏமாற்று வேலை ஆதிக்கம் செய்வதற்காக செய்யப்பட்ட சதிவேலை என்பதை மறைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த மறுபிறப்பு விவகாரம்,
//மனிதனுக்குக்கீழான மிருகமாக பிறந்து அடுத்த பிறப்பில் மனிதராக புரொமோஷன் பெறுவதும், தற்போது மனிதனாய்ப் பிறந்து தனது கீழான செயல்களால் அடுத்த பிறப்பில் கீழிறக்கப்படும் டி-புரொமோஷனும் உயிர்ச் சுழற்சியில் இல்லாமல் என்ன?
//
குளு குளு வசதி, கறி சோறு, நல்ல சாப்பாடு, பாசம் காட்ட ஆட்கள் என நடிகை வீட்டில் நாயக பிறந்த ஆத்மா உயர்ந்ததா? மனிதனாக பிறந்தும் மனித உரிமைகள் கிடைக்காமல் நாயைவிட கேவலமாக நடத்தப்படும் மலம் திணிக்கப்படுபவராக பிறந்த ஆத்மா உயர்ந்ததா? நடிகை வீட்டு நாயாக பிறந்தது டீ புரமோசன? புரமோசனா ?மலம் திணிக்கப்படும் மனிதனாக பிறந்தது புரமோசனா?
மகா பாதகனான அஜாமிளன் தான் சாகும் தருவாயில் தன் மகனைக் கூப்பிடும் சாக்கில் நாராயண நாமத்தை உச்சரித்தது முக்தி அடைந்ததாக புராணம் கூறுகிறது.
தன் அன்புக்குரியவரின் மரணமும் சில சமயம் இது போன்ற உணர்ச்சிகளைக் கொண்டுவரும். அதைக் கண்டு பிடித்து, மனம் உறுத்தாத வகையில் காலம் கழிந்து பதிவு செய்யும் உங்களைப் பாராட்டுகிறேன் ஹரி.
மறுபிறவித் தத்துவம் பற்றி அறிவியல் உலகில் பல ஆராய்ச்சிகள் செய்யப் பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றையாவது குழலி போன்ற வெங்காய ஆசாமிகள் படித்து விட்டு இது பற்றி வாதம் செய்யட்டும். ஒரு உயிரின் ஒட்டுமொத்த கர்மவினை தான் அதன் மறுபிறவியின் வித்தாக encode செய்யப் படுகிறது என்பது ஜீன் ஆராய்ச்சிகள் கூட ஒத்துக்கொள்ளும் வகையில் இருக்கிறது..
மக்கள் தொகைக் கணக்குப் போட்டுப் பார்த்து மறுபிறவியைப் புரிந்து கொள்ள முற்படுவது ஈவெராயிசத்துக்கே உரித்தான பகுத்தறிவு மடத்தனத்தைத் தான் காட்டுகிறது!
//பார்ப்பனீய மறுபிறப்புடன் முடிச்சு போட்டு நியாயம் கற்பிக்க முயலும் இந்துத்துவ முகம் கிழிகிறது. பார்ப்பனீய இருபிறப்பாளர்கள் உயர்நிலையில் பிறந்தவர்கள். சூத்திரனாக, தாழ்த்தப்பட்டவனாக பிறந்தவர்கள் தங்களது பாவங்களிலிருந்து விடுபட மீண்டும் பிறந்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற சாதி சாக்கடை தத்துவத்தை தந்த சனாதான இந்து(த்துவ) தர்மமும்//
//செத்த பின்னர் வரும் ஆன்மாவாவது புண்ணாக்காவது. உயிருடன் இருக்கும் மனிதர்களை எப்படி நடத்துகிறோம் என இந்துத்துவவாதிகள் முதலில் சிந்திக்கட்டும்.//
திரு,
நீங்கள் அரசியல் பேசுகின்றீர்கள். நான் பதிவில் பொருளாகக் கொண்டது அரசியல் அல்ல.
//இன்றைக்கு கடவுளை நம்பாதவர்களை விட நம்புகின்றவர்கள் தான் அதிகம், ஆனால் கடவுளை நம்புகின்றவர்கள் செய்யாத கொலைகளா?, கொள்ளைகளா? கற்பழிப்பா? அவர்கள் வாங்காத லஞ்சமா? எல்லாவற்றையும் செய்துவிட்டு கடவுளுக்கு இலஞ்சம் கொடுத்து பாவங்களை கழுவிவிடலாமென்று தான் இத்தனையும் கடவுள் பக்தர்களால் நடக்குதோ... //
மக்கள் தொகையில் கடவுள் நம்பிக்கையாளர்கள் 95% கடவுள் மறுப்பாளர்கள் 5% எனவே குற்றஞ்செய்பவர்கள் ஸ்டாடிஸ்டிக்ஸ்டில் இது பிரதிபலிக்கப்படும்.
உண்மையில் குற்றமிழைத்தவர்களில் கடவுள் மறுப்பாளர்களின் சதவீதம் பல நூறு மடங்குகள் அதிகரித்துக் காணப்படுவது நிதர்சனம்.
உண்டியலிலே காசுபோட்டுவிட்டு, அ,ஆ,இ பரிகாரம் செய்துவிட்டுக் குற்றம் தொடர்கிற நபரை கடவுள் நம்பிக்கையாளர் என நீங்கள் சொல்வது தெரிகிறது. உண்மைக்கும் பரிகாரம் என்பதே ஒருமனிதனை அவனது பழையதவறுகள் தரும் குற்ற உணர்ச்சியில் இருந்து உளவியலாக மீண்டு புதிய இன்னிங்க்ஸை வாழ்வில் துவக்கி தவறுகள் நீங்கிய நல்வாழ்வு வாழ ஏற்படுத்தப்பட்ட வழிமுறை!
//அப்படியா.... அப்படியென்றால் காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோவில் உள்ளேயே சங்கரராமன் கொலை நடந்திருக்காதே, அனுராதார ரமணன் குமுறி குமுறி அழுது பேட்டி கொடுக்கும் நிலை வந்திருக்காதே.... //
இதிலே எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது வரதராஜப் பெருமாளுக்கே வெளிச்சம். என்றபோதும் சம்பந்தப்பட்ட காஞ்சி ஆச்சாரியாரின் புகழுடம்பு கேள்விக்குட்பட்டு சிதிலமானது,
பூத உடம்பு வேலூரில் சிறைப்படுத்தப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நீதிவேண்டி நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்த ஜென்மம் வரை நீளாமல் பாவ பலன்கள் இவ்விஷயத்தில் வேலை செய்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.
//அத்தோட உங்க இன்டலக்ட் படி, ஒருவர் மறக்க விரும்பும் இழப்புகளை, இறப்புகளை நினைவுப்படுத்துவது நூறு பசுக்களைத் தானம் செய்த பலனைத் தரும் புண்ணிய காரியமோ?//
பொன்ஸ்,
இழப்பல்ல. இது வாழ்வின் சுயற்சி. எதைக்கொண்டுவந்தாய் அதை நீ இழந்தாய் என்பதற்கு எனும் கீதையுரை எதையுமே இழக்கவில்லை என்பதை உணர்த்தும்.
இந்துமதத்தில் மரணமே அதீதமான கற்பனை. பழுதாகிப் போனதால் ஆத்மா வேறு சட்டை / உடை மாற்றுவதற்கு ஈடான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
நான் சுட்டியதால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் மனதில் அந்த உறவு பற்றிய நினைவு வரும் என்பது மிக அதீத கற்பனை.
நான் நினைவுபடுத்தியது தேர்ந்தெடுத்துக்கொண்ட கொள்கையால் மறக்கப்பட்ட நிலையிலும் மறைக்கப்படாத ஆழ்மனத்தில் உறைகின்ற இந்துமத ஆன்மீகதத்துவத்தினையே.
அதுவும் அது கருத்தாக வெளிப்பட்ட பலகாலம் கழித்து.
//இங்கே மறுபிறவி என்ற கருத்தாக்கத்தை போதிப்பதே மனுதர்மத்தை காக்கத்தான், நானும் மனிதன் தானே பிறகு ஏன் நான் தலித், எதற்காக இந்த உரிமை மறுப்புகள், ஏன் பிறப்பால் பிராமணர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் என்ற கேள்விகளுக்கு நியாயமான விடை சொல்ல முடியாது.//
நீங்கள் சாதி பிராமணர்களை, ஆங்கிலேயரின் பிரித்தாளும் "divide and rule" என்பதன் வீச்சிற்கு பாரதத்தில் இருந்த வாழ்வியல் தத்த்டுவத்தினை அவர்களுக்கு வசதியாக Interpret செய்து அவர்களது வாழ்வியல் தத்துவக் கொள்கையான "Might is Right" என்பதை அவர்களுக்கு மன அளவில், சிந்திப்பில் அடிமைப்பட்டுக் கட்டுப்படும் , தனது ஹெரிடேஜ்களை வெறுக்கும் அடிப்படையிலான மெக்காலே கல்வியின் வெளிப்பாடு இக்கேள்வி.
மனிதர்கள் அழுத்தம் தரும் சூழல்களின் தாக்கத்தில் தவறுகள்/ தவறான முன்னுரிமை முடிடுகள் என எடுத்திருக்கக்கூடும்.
மனு, வர்ணாசிரமம் வகைப்படுத்துவது மனிதனின் மனோபாவங்களே அன்றி மனிதனை அல்ல. பிறக்கின்ற சூழல் குறிப்பிட்ட மனோபாவத்தினைப் பெற ஒரு காரணியாகிறது என்ற போதும் அதுமட்டுமே ஒரே காரணி அல்ல.
//இது மனித உரிமை மீறல், இது ஏமாற்று வேலை ஆதிக்கம் செய்வதற்காக செய்யப்பட்ட சதிவேலை என்பதை மறைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த மறுபிறப்பு விவகாரம்//
இது இவ்விஷயம் பற்றிய தற்போதைக்கான தங்கள் புரிந்து கொள்ளல். இது இப்படியே இருக்கும் என நான் நினக்கவில்லை.
//குளு குளு வசதி, கறி சோறு, நல்ல சாப்பாடு, பாசம் காட்ட ஆட்கள் என நடிகை வீட்டில் நாயக பிறந்த ஆத்மா உயர்ந்ததா? மனிதனாக பிறந்தும் மனித உரிமைகள் கிடைக்காமல் நாயைவிட கேவலமாக நடத்தப்படும் மலம் திணிக்கப்படுபவராக பிறந்த ஆத்மா உயர்ந்ததா? நடிகை வீட்டு நாயாக பிறந்தது டீ புரமோசன? புரமோசனா ?மலம் திணிக்கப்படும் மனிதனாக பிறந்தது புரமோசனா?//
மனிதனாகப் பிறந்தவனுக்கு மனிதனாக வாழ உரிமைகளை மறுப்பவர்கள் டீபுரொமோஷனுக்குத் தங்களைத் தயார் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
மலம்திணிக்கப்படும் கொடுமையச் செய்பவர்களுக்கு "You will be treated the way you have treated them" இப்பிறவியில் அரசியல் செல்வாக்கினால் இக்கொடுமைக்கு உடனடி தண்டனை இல்லை எனினும். தெய்வம் நின்று கொல்லும்! அடுத்து உனக்குத் தரப்படும் மலம் மட்டுமே உண்டு வாழும் பன்றியாகப் பிறக்கவைக்கப் படுவார்கள்!
//நீங்க எப்போ போய் புலிப் பால் எடுத்துட்டு வரப் போறீங்க?
அதான் சார், உங்க பேரோ ஹரிஹரன், நீங்க போய் புலிப்பால் எடுத்திட்டு வரலையின்னா நீங்க சனாதன தர்மத்தைக் கடைபிடிக்கிறீங்கன்னு நாங்க எப்படி நம்புறது? //
புலிப்பால் எடுப்பது என்பது புலியை எதிர்கொள்ளும் வீரியமான வீரத்துடன், புலியையும் கொல்லாமல் நயத்துடன் பால் கறந்து வருவதாகிய பல்வேறு குணாதிசயங்களாகிய வீரம், விவேகம், அன்பு என்பவை ஒருங்கிணைந்த செயல்.
நாரவசை தனிப்பட்டு என்மேல் பொழியும் ஈவெரா ஆதரவாளர்களாகிய நாத்திகத்தினை வீரத்துடன் எதிர் கொள்வதாலேயே இணையத்தில் நீடிக்கிறேன், அவர்களது வசைமொழி என்னைப் பாதிக்காது அவை வெறும் எழுத்துக்கள் என்கிற விவேகத்துடன் இருப்பதால் வருத்தம் இல்லை. இதைச் செய்தவர்கள் யாரென்று அறிகின்ற போதும் வெறுப்பின்றி இருக்க மனதில் இருக்கும் நமச்சிவாயமாகிய அன்பே உதவுகிறது.
மனிதருக்கு ஆக்கம் தரும் இந்துமத வேதநெறியாகிய சனாதன தருமம் என்னால் பின்பற்றப்படுகிறது என்பதற்கு
இதுவே சான்று.
(காட்டுப்புலிகள் பசித்தேவைக்காக மனித உடலுக்கு ஊறு விளைக்கும், தேவையேதுமே இல்லாது இணையக் கணினிப்புலிகள் கீழான கொடும் வசவுகளால் மனிதனின் மனதிற்கு ஊறு விளைக்கும்)
//மலம்திணிக்கப்படும் கொடுமையச் செய்பவர்களுக்கு "You will be treated the way you have treated them" இப்பிறவியில் அரசியல் செல்வாக்கினால் இக்கொடுமைக்கு உடனடி தண்டனை இல்லை எனினும். தெய்வம் நின்று கொல்லும்! அடுத்து உனக்குத் தரப்படும் மலம் மட்டுமே //
ஹரிஹரன் அய்யா,
40 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் எம் மக்கள் கையில் மலம் தான் திணிக்கப்படுகிறது என்பது கண்கூடு.அப்படியானால்,திராவிட கும்பல் பன்றிகளாக, மறு பிறவி எடுப்பது தவிர்க்க முடியாததா?
பாலா
hariharan,
Great Post! I appreciate your patience and tenacity in responding to the utterly stupid posts from the periarist apologists.
//நான் சுட்டியதால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் மனதில் அந்த உறவு பற்றிய நினைவு வரும் என்பது மிக அதீத கற்பனை.//
அது சரி!
ஒரு பின்னூட்டத்துக்கு ரெண்டு பகுதியா பதிலா? பி.கவில் நல்லாவே தேறிட்டீங்க..:)
பெரியாரின் தமிழ் படிக்கக் கஷ்டமா இருக்கு என்று என்னுடைய இடுகை ஒன்றில் குறிப்பிட்டிருப்பேன். உண்மையில் உங்களுடைய நீள நீள composite வாக்கியங்களையும் படித்து பொருள் கொள்ள எனக்கு மிக மிக கஷ்டமாக இருக்கிறது..
அதனால அப்படியே அப்பீட்..
என்னவாவது செய்யுங்க.. இன்னும், நிறைய பேர் தன்னுடைய நண்பர்கள், உறவினர்களின் இரங்கற்செய்திகளைப் போட்டிருப்பாங்க.. எடுத்து நினைவுப்படுத்தி ரெண்டு போஸ்ட் போட்டு உங்க சனாதன தர்மத்தை நிலை நிறுத்துங்க..
எனக்கு வாழ்வியல் நெறி கத்து கொடுத்தவங்க, "அடுத்தவங்க மனம் புண்படும்படியான எந்தக் காரியத்தையும் செய்யாதே"ன்னு சொல்லிக் கொடுத்தாங்க.. அதுபடி இந்த இடுகையில் என்னால் இதுவரை வந்திருக்கும் நான்கு பின்னூட்டங்களே ஒருவருக்குத் தன் வீட்டுத் துக்கத்தை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி இருக்கும் என்பது வருத்தமா இருக்கு..
தயவு செய்து இதுக்குப் பதில் சொல்லும் போது வேற யாருக்காவது சொல்லும் பதிலில் ஒரு பகுதியாக சேர்த்துடுங்க... நாலோட போகட்டும் என்னோட பாவக் கணக்கு :((((((
[இது உங்களுக்கு இன்னும் அதீதமா தெரியும்.. dont care.. அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்பதும் உங்களிடம் இருந்து கற்றது தான் ;) ]
வாழ்த்துகள் ஹரிஹரன். மாபெரும் உண்மையை கண்டறிந்து வெளிக்காட்டியமைக்கு. வார இறுதி என்பதாலும் என் கல்லூரி நண்பன் துபாய் வந்திருப்பதாலும் இந்தப்பதிவை கவனிக்க இயலவில்லை. இன்றுதான் எதேச்சையாக வாசித்தேன்.
என் அஞ்சலிப்பதிவை எடுத்தாண்டிருப்பதில் வருத்தமேதுமில்லை. நேரடியாக பேசுபவர்களை நான் எப்போதும் மதிப்பேன். விரும்புவேன்.
கொஞ்சம் விரிவாக விளக்க வேண்டும். என் தளத்தில் பதிவாக இடுகிறேன்.
நன்றி
//உண்மையில் உங்களுடைய நீள நீள composite வாக்கியங்களையும் படித்து பொருள் கொள்ள எனக்கு மிக மிக கஷ்டமாக இருக்கிறது..
அதனால அப்படியே அப்பீட்.. //
அவ்வளவுக்கும் கஷ்டமாகவா இருக்கிறது? உயர் நெறிகளும் அது சொல்லும் தத்துவங்கள் இவை கடினமே ஏற்றுக்கொள்ள.
இனிமேல் இன்னும் மிக எளிமையாகப் புரியும் படியான தமிழ் நடையில் எழுதுகிறேன்.
என்மீதான தங்களது இதர கருத்துக்களாகச் சொல்லியிருப்பவை உங்களது பார்வை அது. நான் அதுபற்றிச் சொல்வதற்கொன்றுமில்லை.
பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.
//40 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் எம் மக்கள் கையில் மலம் தான் திணிக்கப்படுகிறது என்பது கண்கூடு.அப்படியானால்,திராவிட கும்பல் பன்றிகளாக, மறு பிறவி எடுப்பது தவிர்க்க முடியாததா?
பாலா
//
இப்போ என்னா ? அனானிமஸ்ன் "கருப்பான" எழுத்துகளை பாருங்க , சந்தேகமே வராது .
//என் அஞ்சலிப்பதிவை எடுத்தாண்டிருப்பதில் வருத்தமேதுமில்லை. நேரடியாக பேசுபவர்களை நான் எப்போதும் மதிப்பேன். விரும்புவேன்.//
என் மனமார்ந்த நன்றிகள் முத்துக்குமரன்.
பொன்ஸ்,
உங்களது பின்னூட்டத்தில் ஏமாறாதவன் என்கிறவர்க்கு பதிலாகச் சொன்னது பதிவு பொருளுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாததாலும் குறிப்பிடப்பட்ட என்னால் யூகிக்க, அறியாத தனிநபர் பெயர்கள் இருப்பதாலும் தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கவேண்டி வெளியிடமுடியவில்லை.
உங்கள் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி. இங்கே கரும்பு கொஞ்சம் காய்ந்து,உலர்ந்த நிலையில் துண்டுகளாகக் கிடைக்கும் :-))
Post a Comment