Tuesday, January 23, 2007

(108) அனைவரும் அர்ச்சகராகலாமா?

கோவிலின் உள்ளே தெய்வங்கள் உடைகளின்றி இருப்பதை விட வெங்காயம் உடையோடு சிலையாகி இருப்பது நாகரீகமானது என்று திருவாய் மலர்ந்த கருணாநிதியால், இந்து என்றால் திருடன் என்று திருவாய் மலர்ந்தருளிய கருணாநிதியால், இந்துக் கடவுள்களைச் செருப்பால் அடித்த கொள்கையுடைய, இந்துக் கடவுளே இல்லை இல்லை இல்லை ..கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்கிற வெங்காயத்தின் கொளுகையைச் சிங்கமாகக் காக்கும் கருணாநிதியால் எடுத்து வரப்பட்ட திட்டமான அனைவரும் அர்ச்சகராகலாம் என்பது எத்துணை அக்கறையானது என்பதில் இருக்கும் போலித்தனம் தாண்டியும், கருத்தாகிய "அனைவரும் அர்ச்சகராகலாமா" என்கிற விஷயத்தைப் பார்க்கலாம்.

முதலில் அனைவரும் அர்ச்சகராகலாமா என்பதை விட யாரெல்லாம் அர்ச்சகராகக்கூடாது எனப் பார்க்கலாம்.

யாரெல்லாம் அர்ச்சகராகக் கூடாது:

1. இந்துவென எம்மையும் சாக்கடையில் தள்ளாதே என்கிற எண்ணமுடையோர்

2. கடவுள் இல்லை இல்லை இல்லை இல்லவே இல்லை என்கிற எண்ணமுடையோர்

3. கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்கிற எண்ணமுடையோர்

4. தன் வீட்டில் காலைச்சிற்றுண்டி இட்லிக்குத் தான் கேட்ட கெட்டிச்சட்னி கிடைக்கவில்லை என்றால் கூட சமூகநீதி மறுக்கப்பட்டதாக உணர்ந்து அதை உணர்த்தும் விதமாக கடவுளின் சன்னதிக் கருவறையில் தனது வீட்டு நாப்கின்களை உலர்த்துவேன் என்கிற எண்ணங்களை உடையவர்கள்

5. சொந்த செலவிலே பிறர்க்கும், தனக்கும் சூனியம் வைக்கின்ற சிந்தனை உடையவர்கள்

6. தன் சொந்த அப்பாவை வீட்டிலே மாமா என்று அழைக்க அறைகூவும் எண்ணம் உடையவர்கள்

7. கால்டுவெல் சொன்ன திராவிடத்தில் நம்பிக்கை உடையவர்கள்

8. மேற்சொன்ன இறை அவமதிப்புக் கொள்கைகளைக் கொண்ட அரசியல் இயங்களோடு மனப்பூர்வமாக இணைத்துக் கொண்ட மனம் உடையவர்கள்

9. இந்து வாழ்வியல் வேத நெறிமுறைகள், வேதங்கள், உபநிடங்கள், இவைகள் சொல்லப்பட்ட வேத மொழி, இந்துமதக் கலாச்சாரம், சடங்குகள், இந்துமதப்பண்பாடு, இந்துமதப் பண்டிகைகள் இவைகளைத் தூற்றும், கேவலமானதாக நினைக்கும் அடிமைச் சிந்தனை மனம் உடையவர்கள்

10. இந்து என்றால் திருடன் என்று சொல்லிக் கஞ்சியை நக்கும் நயவஞ்சகனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளும் மனம் உடையவர்கள்


மேற் சொன்ன இந்தக் கருத்துக்களை மனதில் கொண்டவர்கள், இக்கருத்துக்களை வெளியிலிருந்து ஆதரிப்பவர்கள், இக்கருத்துக்களை சிறப்பானதாகப் போற்றுபவர்கள் என்போர் இந்துக் கோவில்களில் என்றும் அர்ச்சகராகத் தகுதியில்லாதவர்கள்.

மேற்சொன்ன கருத்துள்ளவருக்காக கருத்தாகக் கருணாநிதி எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று திட்டம் தீட்டியிருந்தால், அம்மாதிரியானவர்களை அர்ச்சகராக்கினால், தமிழ்நாட்டில் இது சமூகச் சீரழிவையே எடுத்துவரும். சமூகத்திற்குச் செய்யும் நீதியாக ஒருக்காலும் அமையாது.

அப்போ யாரெல்லாம் இந்துக் கோவில்களில் அர்ச்சகராகலாம்?

மேற்சொன்ன பத்துவிதமான எண்ணங்கள் எவையும் இல்லாத எவரும், மனம் முழுதும் இறைபக்தி, தெய்வநம்பிக்கை, இரக்கம், நேர்மை என்பவைகளால் நிறைந்த எவரும் முறையான சாஸ்திர, சம்பிரதாயங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டு இந்துக்கோவில்களில் அர்ச்சகராகலாம்.


அன்புடன்,

ஹரிஹரன்

5 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

விடாதுகருப்பு said...

பாப்பார பன்னாடை!

Hariharan # 26491540 said...

சதீஸா? மகேந்திரனா? கிழுமத்தூர் எக்பிரஸ்ல ஏறிய கருப்பா வந்து யாருங்க திட்றது இங்க?

Gopalan Ramasubbu said...

Hari sir,

How about people denied this ---> இந்து வாழ்வியல் வேத நெறிமுறைகள், வேதங்கள், இவைகள் சொல்லப்பட்ட வேத மொழி to fellow human beings? can they become archaks? :)

Hariharan # 26491540 said...

//How about people denied this ---> இந்து வாழ்வியல் வேத நெறிமுறைகள், வேதங்கள், இவைகள் சொல்லப்பட்ட வேத மொழி to fellow human beings? can they become archaks?//

கோபாலன் ராமசுப்பு,

எனக்கு வேதம் பற்றிய அறிவு தந்தவர், தந்துகொண்டிருப்பவர்களில் 50% பிராமணரல்லாதவர்களே.

அடியேனும் ஒரு கருவியாக இருந்து வேத நெறியை 40-50 பேருக்குச் சொல்லித்தருவதில் மகிழ்ச்சி. இந்த 40-50 பேரில் 20% பிராமணர்கள், 80% பிராமணரல்லாதவர்கள்.

வேதம் பிராமணரல்லாதவர்க்கு மறுக்கப்பட்டது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மாணவனுக்குத் தேவையான பணிவு, கற்கும் ஆவல் போன்ற குணாதிசயங்கள் இருப்போர் வேதம் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.