(104) இந்துக்கடவுளர்கள்... விலங்குத்தோல்...புலால்
இந்துமதத்தில் சிவன் புலித்தோல் மீதமர்ந்துபடியும், ஆதிசங்கரர் புலித்தோல், புள்ளி மான் தோல் மீது அமர்ந்தும் தியான நிஷ்டையில் இருந்து அருள்பாலிக்கின்றார்கள். அப்படியாயின் இந்துக்கடவுளர்கள், சாமியார்கள் புளூகிராஸ் அமைப்பினால் தேடப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்களா?
இந்துக் கடவுளர்களூம், சாமியார்களும் புலி, மான் என மிருகங்களை வதை செய்கின்றதாகத்தானே அர்த்தம் என்கிற சந்தேகம் சர்வேசனின் இந்தப்பதிவில் வெளிப்படுகிறது.
இந்துமதத்தில் பல்வேறு குறியீடுகள் symbolism வழியாக அரிய வாழ்வியல் தத்துவங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. புலித்தோல் மீது அமர்ந்திருப்பது என்பது தமோ குணம் எனப்படும் குணாதிசயத்தால் மனதில் ஏற்படும் தீய ஒவ்வாத எண்ணங்களால் உந்தப்பட்டு புலியின் வன்மையான ஆற்றலோடு தர்மத்திலின்று விலகி கொடுந் தவறுகள் செய்வதிலின்று மனிதன் தன்னை மீட்க, தன்னிலிருக்கும் அந்தத் தமோகுணமாகிய புலியைக் கொன்று கிழித்து, மனதினை, எண்ணங்களை வென்று அதன் மீதமர்ந்து இறைவனை தியானித்து நற்கதியடைவது என்பதை குறியீடாகக் காட்டுவதே!
மான் தோல் மீதமர்ந்திருப்பதான சிம்பாலிஸம் ரஜோகுணம் என்கிற குணாதிசயத்தால் ஏற்படும் அதிகார, ஆசைகூடிய எண்ணங்களால், மான்மாதிரி 45 டிகிரி வளைந்து வளைந்து விரைவாக மனதில் வந்தெழும் எண்ணங்களின் உந்துதலில் நெறியற்ற செயல்கள் செய்து மனிதன் வருந்துவதற்குக் காரணமான ரஜோகுணம் ஒழித்து அதனை வென்று அதன்மீதமர்ந்து இறைவனை துதித்து, தியானித்து, உணர்ந்து இறைவனோடு இரண்டறக்கலக்கவேண்டும் என்பதைக் குறியீடாக சிம்பாலிக்காகக் காட்டுவதே.
புலால் உண்பது பற்றி அது முற்றிலும் தவறு....கூடவே கூடாது என்பதாக கட்டளைகள் இந்துமதத்தில் ஏதுமில்லை. என்ற போதும் புலால் தமோ, ரஜோகுணம் மனதில் எழ பிரதான காரணியாகிறது என்கிற அறிவுறுத்தல் சொல்லப்பட்டிருக்கிறது.
துடிக்கும் தூண்டில் புழுவை உண்ண வாய் வைக்கும் மீன் தூண்டிலில் மாட்டி இழுக்கப்பட்டு நீரினின்று நீங்கி துடியாய்த் துடிக்கிறது. துடித்தபடியே மாள்கிறது. துடிதுடிக்கும் மீனை துடிப்போடு உண்ணும் மனிதனோ இன்னும் எப்படியெல்லாம் துடியாய்த் துடிக்கப்போகிறானோ என்று எண்ணி எண்ணியே நான் அஞ்சுகிறேன் என்கிற வள்ளலார் கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடானதே!
சனாதன இந்துமத வேத நெறி வாழ்வியலில் இப்படி மட்டுமே இரு என்று எங்குமே கட்டளைகள் கிடையாது. இப்படியான காரணிகள் இம்மாதிரியான குணாதிசய /செயல்பாட்டு விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அறிவிப்புகள் மட்டுமே.
சாத்வீகமான குணம் இருப்பதிலேயே சிறப்பானது. சாத்வீக எண்ணங்களின் உந்துதலில் செய்யப்படும் செயல்பாடுகளில் தெளிவு இருப்பதால் குற்ற உணர்வு நீங்கிய நிலையில் வாழ அது மனதில் நிரந்தரமான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
சனாதன தரும இந்துமத வேத நெறியில் இருக்கும் தெய்வ உருவ வழிபாட்டின் சிறப்பே அதன் ஊடாக சிம்பாலிஸமாக வெளிப்படுத்தப்படும் வாழ்வியல் தத்துவங்களே!
உலகில் இருப்பதிலேயே மிகச்சிறப்பான வாழ்வியல் தத்துவங்க்கள் சனாதன இந்து தருமத்திலேயே மிகச் சிறப்பாக, மனிதனின் தினசரி வாழ்வுக்கு, மேம்பாட்டுக்கு, ஆவேசமில்லாத மனதினைப் பெறுவதே நிரந்தரமான மகிழ்ச்சி என்பதைச் சொல்லும் அறிவியல் சிந்தனைகள் இங்குமட்டுமே காணப்படும் சிறப்பாகும்.
அன்புடன்,
ஹரிஹரன்.
6 comments:
டெஸ்ட் மெசேஜ்!
அசைவ பதிவு !
பகுத்தறிவு சாடல் மிஸ்ஸிங் !
:)))))))
விளக்கங்களுக்கு நன்றி.
ரஜோகுணம், தமோகுணம் - என்ன வச்சு காமெடி கீமடி பண்ணிடலயே? :)
//துடிக்கும் தூண்டில் புழுவை உண்ண வாய் வைக்கும் மீன் தூண்டிலில் மாட்டி இழுக்கப்பட்டு நீரினின்று நீங்கி துடியாய்த் துடிக்கிறது. துடித்தபடியே மாள்கிறது. துடிதுடிக்கும் மீனை துடிப்போடு உண்ணும் மனிதனோ இன்னும் எப்படியெல்லாம் துடியாய்த் துடிக்கப்போகிறானோ என்று எண்ணி எண்ணியே நான் அஞ்சுகிறேன் என்கிற வள்ளலார் கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடானதே//
இது நல்ல கருத்து - வள்ளலார் சொல்றத நெனச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு..
ஆமா, சாமியார்கள் செய்வது சரின்னே வச்சுக்கிட்டாக்கூட, கடவுள்களும் ஏன் இந்த விலங்கு தோலை ஆடையாக தரிக்க வேண்டும்? இது ஒரு bad precedence இல்லியா?
நன்றி!
காட்டில் ஆடைகள் கிடைக்காது என்பதற்காக அந்தகாலத்தில் முனிவர்களும், தவக்கோல ருத்ரனும் மரவுறி(?) அல்லது விலங்கு தோலும் தியானம் செய்ய விரித்துப் பயன்படுத்தி இருக்கலாம். இதைத்தவிர 'குணம்' பற்றிய செய்தி இரண்டாவதாகத்தான் எனக்கு தெரிகிறது !
சரியா ஹரி சார் ?
//ஆமா, சாமியார்கள் செய்வது சரின்னே வச்சுக்கிட்டாக்கூட, கடவுள்களும் ஏன் இந்த விலங்கு தோலை ஆடையாக தரிக்க வேண்டும்?//
சர்வேசன் / கோவி.கண்ணன்,
முனிவர்களது மரவுரி/விலங்குத்தோல் பயன்பாடு என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது. சிம்பாலிஸமாக மனதை சுத்திகரிக்க, ரஜோ,தமோ குணங்களால் எழும் நெறியற்ற எண்ணங்களை வெல்வது என்கிற விஷயம் பிரதானமானது.
உடுத்துவதற்கு பெரும்பான்மையாக மரவுரி பயன்படுத்தப்பட்டும், தவமியற்றும்போது விலங்குத்தோல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் நாம் காணலாம்.
(தபோவலிமை என்பதாக வழக்கில் சொல்லப்படுவது) தொடர்ந்து தவமியற்றக் கூடிவரும் காஸ்மிக் எனர்ஜி இவர்களது உடலில் இருந்து வீணாகாமல் இருக்கவும், இவர்களை வணங்கும் பக்தர்களை தொட்டு ஆசிர்வதிக்கும்போது பக்தர்களுக்கு ஊறு விளைக்காமலிருக்கவும் ஒரு மின் தடை மாதிரியும் இவை செயல்படும்.
நம்பாமல் சிரிப்பு வரலாம். காரில் அமர்ந்து எழுந்தால் மனிதனுக்கு மனிதன் அவனது காஸ்மிக் எனர்ஜியினை பொறுத்தும் + அணிந்திருக்கும் உடைகள் இவைகளால் உந்தப்பட்டு ஸ்டாடிக் எனர்ஜியாக இரும்பைத் தொடும்போது எலக்ட்ரிக் ஸ்பார்க் கிளம்புவதை கார் பயன்படுத்துபவர்கள்
அறிந்திருக்கலாம்.
//இது ஒரு bad precedence இல்லியா?//
காவல்தெய்வம் அய்யனார் அருவாளோடு இருப்பதால் வன்முறை எனலாமா? அருவாள் என்கிற சிம்பாலிஸம் அதுகொண்டு தீயவைகளை அழிப்பதாகச் சொல்லப்படும் நம்பிக்கை செய்தி! அருவாள் (கா(நா)ட்டு )விலங்குகளிடம்
இருந்தும், அது தரும் தீமைகளிடம் இருந்தும் சில பல சமயம் பயன்பாட்டிலும் பாதுகாப்புத் தருகிறது
காட்டில் தவமியற்றியபடியே வாழும் முனிவர்கள் அதே காட்டில் மூப்படைந்து இயற்கையாய் மடியும் விலங்குகளின் தோலை தவமியற்றும் போது உடுத்தப் பயன்படுத்தப்படுவது
தவறில்லை.
தவமியற்றும் போது ரஜோ, தமோ குணங்களை வென்றால் தானே தபோவலிமை கிடைக்கும்.
காஸ்மிக் எனர்ஜி எல்லோருக்குள்ளும் இருக்கிறது அது ஒருவனைச் சுற்றி புலப்படாத வளையமாக இருக்கிறது. அதனாலேயே சிலரைப் பார்த்தவுடன் அறிமுகமில்லாமலே நட்பு பாராட்டவும், சிலருடன் முதல் சந்திப்பிலேயே பூர்வஜென்மப் பகையாக மோதிக்கொள்வது நேர்கிறது.
//காட்டில் தவமியற்றியபடியே வாழும் முனிவர்கள் அதே காட்டில் மூப்படைந்து இயற்கையாய் மடியும் விலங்குகளின் தோலை தவமியற்றும் போது உடுத்தப் பயன்படுத்தப்படுவது
தவறில்லை//
இன்னும் தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
இது பற்றி இணையத்தில் குறிப்பு ஏதேனும் இருக்குமானால் அதன் சுட்டியை தாருங்கள். உபயோகமாய் இருக்கும்.
இயற்கையாய் மடியும் விலங்குகளின் தோலை பயன் படுத்துவதில் தவறில்லை. ஆனால் இயற்கையாய் மடியும் விலங்குகளின் தோலெல்லாம் அவ்ளோ சுலபமா கிடைக்குமா? self-decay or scanvengers கிட்ட மாட்டி அழிஞ்சுடுமே.
அந்த காலத்து சாமியார்னா கூட ஓகே தான். இந்த காலத்தில ஆசிரம சாமியார்கள் பலரும் கூட இதே போல் அல்லவா செய்கிறார்கள்.
உதாரணம் இங்க பாருங்க. இந்த புலிய பாத்தா வயசு வந்து செத்த புலி மாதிரி தெரியலியே -
Clik here to view image of Sri Sai Baba
சரி சரி சரி - ஓவரா கேக்கறேனோ? மத்தவங்க கருத்து ஏதாவது வருதான்னு பாப்போம் ஹரிஹரன்.
நன்றி!
Post a Comment