Saturday, January 06, 2007

(97) தமிழர் பேணியது வேதநெறியா / சார்வாக நெறியா?

இறை மறுப்புப் பேசும் பகுத்தறிவு, சுயமரியாதை, பொதுவுடமை, பின்நவீனத்துவப் பார்ட்டிகள் சார்வாக வாழ்வியல் தத்துவத்திற்கு அன் அப்போஸ்டு மற்றும் அன் கண்டிஷனல் சப்போர்ட் தந்திருப்பதைப் பார்த்து சார்வாகத்தத்துவத்தினை நிறுவிய முனிவருக்கு அவர் வழிபட்ட பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய மும்மூர்த்திகள் நேரில் வந்தருளிய போது கிட்டியதற்கு இணையான தெய்வீகமான ஒரு பரவசம் கிட்டியிருக்கலாம்.

உடம்பைத் தாண்டி ஏதுவுமே இல்லை என்பது சார்வாக தத்துவம். உடலைமகிழ்ச்சியாய் வைத்திருக்க என்ன கடன்பட்டாலும் கவலையில்லை என்பதுதான் சார்வாகத்தின் உயர் தத்துவம்.
பெண்டாட்டி பிள்ளைகள் குறித்துக் கவலை கொள்ளாமல் டாஸ்மாக்கில் கவிழ்ந்து கிடக்கும் மனோபாவமும் ஒருவகையில் சார்வாக , சுயநல எண்ணமே!

ஜெர்மனியில் குறியை அளந்து காட்டிய ஈவெரா சார்வாக வாழ்வியல்தத்துவத்தின் நவீன ரிஷி வடிவம் என்கிற கூற்று கூப்பாடாக வெளிவருவதில் சுயநல மனித வாழ்வியல் தத்துவ காலரியில் எப்படியாவது ஒரு ஓரத்திலாவது ஈரோட்டு வெங்காயத்துக்கு கர்ச்சீஃப் போட்டு இடம் பிடிக்கிற முனைப்பு தெரிகிறது.

உடலினைக் கட்டுப்பாடின்றி கொண்டாடிய பின் நவீனத்துவ மகரிஷி ஈவெரா எனும்படியான விவாதங்கள் சுய செலவில்லாமல் பொது மின்கம்பியில் கொக்கி போட்டு தெருமுனை மீட்டிங்குக்கு மின்சாரம் உரிமையோடு எடுப்பது மாதிரியானது!

பொதுவாக ஒரு மனிதன் பேசும் மொழி என்பது அவனது கலாச்சாரத்தினை வெளிப்படுத்திவிடும் ஒரு கருவியாகப் பயன் படுத்தப்படும். ஒரு மொழியின், அதன் தினசரி வெகுவாரியான மக்கள் பயன்பாட்டிலேயே பல தொன்மையான கலாச்சார, பண்பாட்டு விஷயங்களை "டீ கோட்" செய்துவிடலாம்.


தமிழ் மொழியில் ஒரு நபருக்கு உடம்பு சரியில்லை எனில் " எனக்கு உடம்பு சரியில்லை" என்றுதான் கூறுவது வழக்கம். ஆக சாதரணமாகிய காய்ச்சல், ஜலதோஷத்திலிருந்து கேன்சர் வரை வந்தாலும் தமிழ் பேசும் நபர் சொல்வது " எனக்கு உடம்பு சரியில்லை" என்பது தான்.

ஆக தான் வேறு, உடல் வேறு என்கிற வேத நெறி மெய்ஞானத்தில் திளைத்திருக்கிறது தமிழ்மண். அவஸ்தையில் உழல்வது ஆத்மாவாகிய தானல்ல... ஆத்மா அணிந்திருக்கும் சட்டையாகிய தனது உடல் தான் அவதிப்படுகிறது என்பதை மிகத் தெளிவான ஆன்ம ஞானத்தோடு தினசரி வாழ்வில் வார்த்தை வெளிப்பாடுகளில் கூட மிகக் கூர்மையாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் நம் தமிழ்மக்கள்.

ஆங்கிலத்தில் இதையே சொல்ல வேண்டுமானால், நான் சரியில்லை என்று பொருள்படும் விதமாக அமைந்த "I am not well" என்றுதான் கூறுவார்கள். மேற்கத்தியவர்கள் உடலே பிரதானம் என்கிற மிகுந்த சுயநலத்தோடு, ஆன்மா மற்றும் இறை பற்றிய எந்த ஒரு விரிவான தத்துவங்கள், புரிதல்களை அவர்களது வாழ்வியலில் காட்டி வாழ்ந்ததில்லை / வாழ்வதில்லை.

ஆக உடம்பே பிரதானம் என்பதான தனிநபர் சுயநலமே பிரதானமான வாழ்க்கைத் தத்துவம் என்பது நமது அடிமைச் சிந்தனையூக்கியான மெக்காலே கல்வி மேதைகளாகிய பகுத்தறிவுப் பகலவன்களை, மேற்கத்திய நாகரீக அடிவருடிகளை ஆட்கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மெக்காலே கல்வியின் தொலைநோக்கே இந்தியர்கள் தனது வீட்டுப் பெருமைகளை விளக்குமாறு கொண்டு விளாசிவிட்டு மேலைநாட்டு காட்டு வாழ்வியலை /ஒத்ததை கையெடுத்துத் தொழும்படியான தாழ்வு மனப்பான்மையில் வைப்பதே.

ஆத்மா என்ற ஒன்று இல்லவே இல்லை, உடம்பே பிரதானம் உடம்பின் அழிவே அனைத்தின் முடிவு என்கிற சார்வாகத் தத்துவம் வெகுவாகப் பின்பற்றப்படும் வாழ்வியல் நெறியாக இருந்திருந்தால் மொழி வெளிப்பாட்டில் "எனக்கு உடம்பு சரியில்லை" என்பதாக தனது ஆரோக்கியக் குறைவினை வெளிப்படுத்தியிருக்க முடியாது!

பெருமளவுக்குச் சுயநலம் மேலோங்கிக் காணப்படும் இன்றைக்கும் கடன் வாங்கிக் கவலை இல்லாமல் தன் உடல் சுகத்துக்காக குடித்துக், கும்மாளமிட்டபடி வாழலாம் என்கிற ஒரு குடும்பத் தலைவனின் சார்வாக தத்துவ வாழ்வியல் நெறிக்குச் சேரியிலும், சிங்கிள் பெட்ரூம் பிளாட்டிலும், பங்களா வாழ்விலும் பெரும்பான்மையாகக் கிடைப்பது விளக்குமாற்று சாத்தல் தான்!

ஈவெரா ஆதரவாளர்கள் சார்வாகத்துக்குக் கொடிபிடிப்பது என்பதை இருவழிகளில் பார்க்க வேண்டியதாகிறது:

1. சுயநல உடல் மகிழ்ச்சிக்காக உண்பது, உடுப்பது,குடிப்பது,படுப்பது என்பதைத் தாண்டிச் சிந்திக்காததுதான் இவர்கள் தத்துவம் என்பது.

2. சார்வாகத் தத்துவ நெறியினை நிறுவிய முனிவரை ஏற்றுக்கொள்ளும் பகுத்தறிவுவாதிகள், அம்முனிவர் தொழுத இறைவர்களான இந்து மும்மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கிற இறைவனாகிய இவர்களை ஏற்றுக்கொள்ளாமல் கடவுளே இல்லை, இல்லை...இல்லவே இல்லை... கடவுளைத் கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்பது ஏனோ?

தானும் குழம்பி, இருப்பவர் எல்லோரையும் குழப்பிச் சுயநலத்திற்காக வாழ்வது பகுத்தறிவு, சுயமரியாதை எனத் தமிழகத்தில் அழைக்கப்பட ஒரு புதிய ஆரம்பம் செய்து தந்தவர் ஈவெரா!

தமிழர் பேணியது சார்வாக நெறியே அல்ல. ஆத்மா, உடல் எனும் வேதநெறி சொன்ன மெய்ஞான பிரக்ஞையோடு குழப்பமேதும் இல்லாமல் சீரிய முறையிலே தினசரி வாழ்வு வாழ்ந்திருக்கின்றார்கள் நம் தமிழ்மக்கள்.

சற்றே சிந்திப்பீர்! குழப்பங்களில் இருந்து தெளிவடைவீர்!!


அன்புடன்,

ஹரிஹரன்

6 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

Hariharan # 26491540 said...

.:: மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend ::. has left a new comment on your post "(97) தமிழர் பேணியது வேதநெறியா / சார்வாக நெறியா?":

வணக்கம் ஹரி. இந்து மதத்தை பற்றி சூப்பராக எழுதியிருகீர்கள். சென்சூரி அடிக இன்னும் மூன்றே பதிவுகள். தொடருங்கள்.

மதுசூதனன் said...

//தானும் குழம்பி, இருப்பவர் எல்லோரையும் குழப்பிச் சுயநலத்திற்காக வாழ்வது பகுத்தறிவு .... //

அப்பத்தான ஓட்டு வாங்கி குடும்பத்தை வளர்க்க முடியும். என்ன ஹரி, இது கூடப் புரியாத ஆளா நீங்க?

bala said...

//தமிழர் பேணியது வேதநெறியா / சார்வாக நெறியா?"://

ஹரிஹரன் அய்யா,

தமிழர்கள் பேணியது வேத நெறியா அல்லது வேறு ஏதோ நெறியா என்று சொல்ல முடியாது.ஆனால் கருப்பு சட்டை கும்பலும்,சூரிய கும்பலும் பேணுவது, சாதி வெறி,பணம் பண்ணும் வெறி,மற்றும் ஒரு விதத்தில் சார்வாக வெறி. அவங்க பெரிய மாமா கற்பு/கண்ணியம்/கடமை போன்ற அறங்களை கட்டவிழ்த்து குஞ்சுகள் அனைவரையும் ஹோட்டல் பிராசதம் தினம் சாப்பிடச் சொன்னார்.முன் மாதிரியா செய்தும் காண்பித்தார்.குஞ்சுகளும் வெறியோட அலைகின்றனர்.
ஒட்டு மொத்தமா தமிழர்கள் சார்வாக வெறி கொண்டு அலைய வில்லை என்றாலும் குஞ்சுகள் கண்டிப்பாக சார்வாக வெறியைத் தான் பின் பற்றுகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை அய்யா.

பாலா

கால்கரி சிவா said...

//மேற்கத்தியவர்கள் உடலே பிரதானம் என்கிற மிகுந்த சுயநலத்தோடு, ஆன்மா மற்றும் இறை பற்றிய எந்த ஒரு விரிவான தத்துவங்கள், புரிதல்களை அவர்களது வாழ்வியலில் காட்டி வாழ்ந்ததில்லை / வாழ்வதில்லை//

மிக நல்ல பதிவு ஹரி. மேற்கத்திய ஆண்கள் சிறிது வயதானவுடன் தன் மனைவியை கழற்றிவிட்டு சின்ன பெண்களுடன் சென்றுவிடுவர். ஏனென்றால் அவர்களுக்கு தங்கள் உடல் உணர்ச்சிக்கு வடிகால் வேண்டும்.
அதனால் தான் இங்கே விவாகரத்து விதிகள் பெண்களை பாதுகாக்கவே இருக்கின்றன.

திராவிடங்களுக்கு கொள்கையாவது புண்ணாக்காவது ஏதாவது உண்டா?

எல்லாமே பைசா சாமி. நாளைக்கு எல்லா இந்துக்களும் ஒன்று சேர்ந்து ஓட்டு அளிப்பதாய் இருந்தால் குடுமி வைத்துக் கொண்டு ஹரே ராமா எனப் பாடவும் தயங்க மாட்டார்கள்

Anonymous said...

அன்பு ஹரிஹரன்,

"தமிழ் மொழியில் ஒரு நபருக்கு உடம்பு சரியில்லை எனில் " எனக்கு உடம்பு சரியில்லை" என்றுதான் கூறுவது வழக்கம். ஆக சாதரணமாகிய காய்ச்சல், ஜலதோஷத்திலிருந்து கேன்சர் வரை வந்தாலும் தமிழ் பேசும் நபர் சொல்வது " எனக்கு உடம்பு சரியில்லை" என்பது தான்".

ஆழமான சிந்தனை.தமிழில் ஞானம் கொட்டிக் கிடக்கிறது என்பதற்கு இதுபோன்ற சொல்லாடல்களும் ஒரு சாட்சி.

எனது மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.