(115) பீர்பல் கதைகள்
பீர்பல்-அக்பர் விவாதக் கதைகள் சுவாரசியமானவை.
"To Reach a person's Heart is through his stomach" என்பது பீர்பலுக்கும் எனக்கும் ஓரளவுக்குச் சரி. குவைத்தில் பிரபலமான மொகல் ரெஸ்டாரண்டில் மெனுகார்டில் பீர்பலின் விருப்ப உணவுகள் எனும் பகுதி மட்டுமே எனக்கு உகந்த வெஜிடேரியன் உணவு வகைகள் என்பதாலும் வெஜிடேரியனான பீர்பல் எனக்கு இன்றளவில் இன்னும் சுவாரஸியம் கூட்டுகிறார்.
சரி முதல் பீர்பல் கதைக்கு வருவோம்.
அக்பர் பீர்பலிடம் சவால் வைக்கிறார்.
அக்பர் விடுத்த சவால் இதுதான்: "பீர்பல் நீ செய்யும் ஒரு காரியம் எனக்கு கோபம் வரவழைக்க வேண்டும். அக்காரியத்தை ஏன் செய்தாய் என நான் வினவ நீ சொல்லும் பதில் எனக்குப் படு பயங்கரமான கோபத்தை வரவழைக்கவேண்டும்"
சவாலை பீர்பல் ஏற்கிறார்.
அன்றையதினம் அக்பர் அரண்மனை உப்பரிகையில் (பால்கனி) இருந்து வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று தனது பின்புறமாக பிருஷ்டத்தில் கிள்ளப்பட்டதை அறிந்து கோபாவேசமாகத் திரும்பிப் பார்க்கிறார்.
பார்த்தால் அங்கே பீர்பல் இருக்க்கிறார். அக்பர் பீர்பலிடம் கோபத்தோடு ஏன் இப்படிச்செய்தாய் என்று கேட்கிறார்.
பீர்பல் அக்பரை நோக்கி " ஓ நீங்களா அரசே... நான் மகாராணியார் என்றல்லவா நினைத்திருந்தேன்" என்கிறார்.
அக்பர் தன்வசமிழந்து கோபப்படுகிறார்.
பீர்பல் அக்பருக்கு அவர் விடுத்திருந்த சவாலை நினைவூட்டுகிறார். பாராட்டும் பரிசும் கிடைக்கிறது பீர்பலுக்கு.
பீர்பல் கதை ரெண்டு:
ஒரு நாள் மாலை அக்பர் பீர்பலிடம் "ஒரு நபர் தன் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் மிகச் சாதாரணமன ஒரு தினசரி விஷயம் அதே நபருக்கு மிக அதிக மகிழ்ச்சியைத் தந்துவிடாது" என்கிறார்.
பீர்பல் அக்பரின் கூற்றை எதிர்த்து இல்லை அரசே கண்டிப்பாக ஒரு நபர் தன் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் மிகச் சாதாரணமன ஒரு தினசரி விஷயம் அதே நபருக்கு வெகு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்கிறார்.
அக்பர் தன் கூற்றை மறுத்து எதிர்க்கும் பீர்பலிடம் கோபப்பட்டு "இன்னும் 24 மணி நேரத்தில் எனக்கு அதிகமகிழ்ச்சி தருமாறு சாதாரணமான தினசரி விஷயத்தை , அந்த அதிமகிழ்வு அனுபவத்தை நீ ஏற்படுத்தி எனக்கு உணர்த்தாவிடில் நாளை மாலை நேரம் சிரச்சேதம் செய்யப்படுவாய் எனச் சொல்லிச் செல்கிறார்.
மறுநாள் விடிகிறது. காலை நேரம். அக்பர் அவரது பிரத்யேக ஓய்விடத்தில் ஓரிடத்தில் அமராமல் இங்கும் அங்குமாக உலாவுகிறார். பீர்பல் அங்கே வருகிறார். என்ன அரசே ஏன் இப்படி இருப்புக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள் என வினவுகிறார். அக்பர் காலை நேரம் எனது காலைக்கடன் முடிக்க இயலாதபடி அனைத்து கழிவறைக் கதவுகள் மூடியிருக்கின்றன. யாரெனத் தெரியவில்லை.
பீர்பல் சென்று பார்க்க கழிவறைக்கதவு திறக்கப்படுகிறது. அக்பர் பாய்ந்தோடுகிறார் கழிவறைக்குள்.
காலைக்கடன் கழித்து வந்த அக்பர் யார் கழிவறைகளை மூடும்படி செய்தானோ
அவனை இழுத்துவா என்கிறார். பீர்பல் கொணரப்படுகிறார். அக்பர் ஏன் இப்படிச் செய்தாய் என வினவ, அக்பரை நோக்கி பீர்பல் இன்றைய காலைக்கடன் நிகழ்வு முன்னெப்போதும் இருந்ததை விட அதி மகிழ்ச்சியை உங்களுக்குத் தந்ததா? எனக் கேட்டு அக்பரின் சவாலை நினைவூட்டுகிறார்.
பீர்பலின் நுண்ணறிவு கண்டு மெச்சி பரிசளிக்கிறார். பாராட்டுகிறார்.
(மன்னராட்சியில் மதிக்கூர்மை இல்லையெனில் அமைச்சருக்குச் சிரச்சேதம் மினிமம் கேரண்டி:-)), புத்தியுள்ள மன்னரை ஏமாற்றி சாதித்துக்கொள்வது என்பது நடக்காத காரியமே)
அன்புடன்,
ஹரிஹரன்
12 comments:
nalla kariyam sekireergal nandri ..thodaruttum
ரொம்ப நல்லா இருக்குங்கண்னா !! பீர்பால் கதைகளை அப்படியேக்கா இன்னும் அவுத்துவுடுங்களேன்!!!!!
:))))))))))))
அருமை இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் ...
கார்த்திக்பிரபு,
முதல் வருகைக்கு நன்றி!
வரலாற்றுக்கால நகைச்சுவையைப் படித்துச் சிரித்துக்கொள்ளும் போதே வரலாறு சொல்லும் உண்மையும் தெரியும்ன்றதைத் தொடரச்சொல்றீங்களா?
:-))
சிரிங்க சிந்தியுங்க :-))
ஹரிஹரன் அவர்களே,
அரசியலுக்கு அப்பால்..... அருமையான கதைகள், மிகவும் ரசித்து சிரித்தேன்.
பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.
sooper!
நல்லா இருக்கு
//அரசியலுக்கு அப்பால்..... அருமையான கதைகள், மிகவும் ரசித்து சிரித்தேன்.
பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல//
வாங்க நன்மனம்,
நல்லா இருந்ததுங்களா?:-)) நன்றி
//ரொம்ப நல்லா இருக்குங்கண்னா !! பீர்பால் கதைகளை அப்படியேக்கா இன்னும் அவுத்துவுடுங்களேன்!!!!!
:)))))))))))) //
ஜொள்ஸ்,
ஞாபகம் வர்றதை அப்பப்போ ரிலீஸிடுவோம்:-))
//அருமை இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் ...//
Prasram ,
அப்பப்போ முயற்சிக்கிறேன்..
பாஸ்டன் பாலா,
வருகைக்கும் கில்லி பரிந்துரைக்கும் நன்றிகள்!
சேதுக்கரசி,
வருகை + கருத்துக்கு நன்றி
Post a Comment