(116) அக்பரின் ஆட்சியில் தகவல் தொடர்பு
இன்றைக்கு இணையம், காமிராவுடனான கைத் தொலைபேசி, என்று அதி நவீனமாகத் தகவல் தொடர்பு இருக்கும் நிலையில் அக்பர் காலத்தில் தகவல் தொடர்பு விஷயம் எப்படி இருந்தது என்று பின்னோக்குவோம்.
அக்பரது அரசிக்கு ஆக்ராவில் குழந்தை பிறக்கும் சமயம், அக்பரால் ஆக்ராவில் இல்லாமல் டில்லியில் இருக்க வேண்டிய கட்டாயம். இருந்தபோதும் குழந்தை பிறந்ததை உடனடியாக அறிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறார் அக்பர்.
ஆக்ராவில் இருந்து டில்லிவரையிலான 200 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் கையில் முரசுடன் பல ஆயிரக்கணக்கிலான காவல் வீரர்கள் வரிசையாக நிற்க வைக்கப் பட்டார்கள்.
குழந்தை பிறந்ததும் ஆக்ரா அரண்மனை முரசு ஒலிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வரிசையாக டில்லி வரை பாதையெங்கும் நிறுத்திவைக்கப்பட்ட காவல் வீரர்கள் முரசு ஒலித்து முழங்க டில்லியில் தனது அரசவையில் இருக்கும் அக்பர் குழந்தை பிறந்ததை அறிந்து மகிழ்கிறார்.
இத்தனை விரிவான ஏற்பாடு செய்தும் அக்பரால் குழந்தை பிறந்ததை மட்டுமே உடனடியாக சில நிமிடங்களில் அறிந்து கொள்ள முடிந்தது.
அனைத்து அதிகாரம் நிரம்பிய அரசனாக இருந்தும் அக்பரால் ஆக்ராவில் பிறந்த குழந்தை ஆணா / பெண்ணா என உடனுக்குடன் அறியமுடியவில்லை:-))
குறிப்பு-1
மன்னராட்சியில் அரசனின் தனித்தேவைக்கு, தனிப்பட்ட ஆசைக்கு ஆயிரக்கணக்கான படைவீரர்கள் பயன்படுத்துவது சர்வ சாதாரணம். எவரும் அரச ஆசையை எதிர்த்தால்/ புறக்கணித்தால் அவர்களுக்கு வெகு நிச்சயமானது சிரச்சேதம் / நாடுகடத்தல் / ஒதுக்கப்பட்டு சமூக இறக்கம் செய்யப்படுவது என்பதானவை.)
குறிப்பு-2
புத்தியுள்ள, சிந்தித்துச் செயல்படும், அதிகாரம் நிரம்பிய அரசனை அமைச்சர்கள் தமது தனித்தேவைக்குப் பகடைக்காயாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைவது என்பதெல்லாம் முற்றிலுமாக நடக்காத காரியம்)
அன்புடன்,
ஹரிஹரன்
13 comments:
டெஸ்ட் மெசேஜ்!
1/2 கி.மீட்டருக்கு ஒருத்தன் நின்னா 400 பேரு. ஒருத்தன் ஒரு தட்டு தட்ட 1 second எடுத்தா கூட, அக்பர் காதுல சேதி விழ 400 seconds.
கிட்டத்தட்ட 7 நிமிஷமும் 400 வயித்தெரிச்சலும் செலவாவும்.
(முரசை விட, அந்த பெப்பரபெப்பேனு ஊதுவாங்களே, (இவா ஊதினா அவா வருவா.. அதே அதே) அத யூஸ் பண்ணியிருந்தா 4 நிமிஷத்துல மேட்டர் தெரிஞ்சிருக்கும்)
எந்த மாசத்துல நடந்த விஷயம் தல இது? குளிரா, வெயிலா?
நல்ல ஏற்பாடுதான்.
அப்பெல்லாம் குசும்பனுங்க யாரும் இல்லியா? மறைவா நின்னுகிட்டு சும்மாவே முரசு தட்டினா, அக்பர் ஏமாந்திருப்பாரே.
அப்ப யாரும் இப்படி கண்டுபிடிக்கலை போல
ஆணுக்கு
2=1+2- 3 தடவை
பெண்ணுக்கு
கொஞ்சம் கூட வைச்சு
3+1+3
:-))
குறிப்பு-2
புத்தியுள்ள, சிந்தித்துச் செயல்படும், அதிகாரம் நிரம்பிய அரசனை அமைச்சர்கள் தமது தனித்தேவைக்குப் பகடைக்காயாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைவது என்பதெல்லாம் முற்றிலுமாக நடக்காத காரியம்)
ஆனாலும் பீர்பாலை பற்றி மற்ற அமைச்சர்கள் கூறியதை பல முறை அக்பர் நம்பி அவரை சந்தேகப்பட்டதாகவும் பிறகு ஒவ்வொருமுறையும் பீர்பால் தெளிவுப்படுத்தியதாகவும் சொல்லக்கேள்வி.
:) Nice Information.
பசங்களுக்காக நிறைய கத படிக்கரீங்க போல இருக்கு ;-)
நல்ல தகவல்கள்.
அப்ப யாரும் இப்படி கண்டுபிடிக்கலை போல
ஆணுக்கு
2=1+2- 3 தடவை
பெண்ணுக்கு
கொஞ்சம் கூட வைச்சு
3+1+3
:-))
ஒரு ஆணும் ஒரு பொண்ணுமா ரெட்டைக் குழந்தை பிறந்திருந்தா எப்படி தட்டியிருப்பாங்க? :))))))))
//1/2 கி.மீட்டருக்கு ஒருத்தன் நின்னா 400 பேரு. ஒருத்தன் ஒரு தட்டு தட்ட 1 second எடுத்தா கூட, அக்பர் காதுல சேதி விழ 400 seconds.
கிட்டத்தட்ட 7 நிமிஷமும் 400 வயித்தெரிச்சலும் செலவாவும். //
வாருங்கள் சர்வேசன்,
அரை கிலோமீட்டருக்கு ஒருஆள் நின்னா சத்தம் கேட்காது. நூறுமீட்டருக்கு ஒரு ஆள் என குறைந்தபட்சம் 2000த்துக்கும் மேல் வயித்தெரிச்சல் :-))
//அப்பெல்லாம் குசும்பனுங்க யாரும் இல்லியா? மறைவா நின்னுகிட்டு சும்மாவே முரசு தட்டினா, அக்பர் ஏமாந்திருப்பாரே. //
குசும்பர்கள் என்றாலும் "சிரச்சேதம்" சீரியஸானதுன்னு புரிஞ்சவங்களா இருந்திருக்கணும் :-))
//எந்த மாசத்துல நடந்த விஷயம் தல இது? குளிரா, வெயிலா?//
வெயில்/குளிர் ரெண்டுமே டெல்லி/ஆக்ராவில் கொடுமைதானே!
//அப்ப யாரும் இப்படி கண்டுபிடிக்கலை போல
ஆணுக்கு
2=1+2- 3 தடவை
பெண்ணுக்கு
கொஞ்சம் கூட வைச்சு
3+1+3
:-)) //
வாங்க குமார்,
:-))
//ஆனாலும் பீர்பாலை பற்றி மற்ற அமைச்சர்கள் கூறியதை பல முறை அக்பர் நம்பி அவரை சந்தேகப்பட்டதாகவும் பிறகு ஒவ்வொருமுறையும் பீர்பால் தெளிவுப்படுத்தியதாகவும் சொல்லக்கேள்வி.//
வாங்க மஞ்சூர் ராசா,
சந்தேகப்பட்டு இருந்திருக்கலாம்.
பீர்பல் நிரூபித்த பின் கோள்மூட்டிய அமைச்சர் சிரச்சேதம்/நாடுகடத்தல்/சமூக இறக்கம் போன்ற பரிசுகள் பெற்றும் இருக்கலாம் இல்லையா!
//:) Nice Information.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு
//பசங்களுக்காக நிறைய கத படிக்கரீங்க போல இருக்கு ;-)
நல்ல தகவல்கள்.//
வாங்க நன்மனம்,
பசங்களா இருந்தப்பக் அப்படியே வாய்திறந்து கேட்ட கதைகள் பசங்களுக்கு நாம சொல்லும்போது பல விஷயம் சொல்லுதுங்க :-))
//ஒரு ஆணும் ஒரு பொண்ணுமா ரெட்டைக் குழந்தை பிறந்திருந்தா எப்படி தட்டியிருப்பாங்க? :))))))))//
இதே மாதிரிதான் :-))
Post a Comment