Monday, February 19, 2007

(121) டோண்டு என்கிற கிழ மிருகம்....

சில நாட்களாகவே என் பங்குக்கு டோண்டு என்கிற கிழ மிருகத்தைக் கிழி கிழி என்று கிழிக்க வேண்டும், துவைத்துக் காயப்போட வேண்டும் என நினைத்திருந்தேன்.

எங்கும் டோண்டு
எதிலும் டோண்டு
எல்லாமே டோண்டு
அம்மம்மா டோண்டு
வலை-வம்பாலே டோண்டு
சொல்-அம்பாலே டோண்டு
டோண்டு...டோண்டூ (எங்கும் மைதிலி டியூனில் கேட்கவும்)

டோண்டு கிழ மிருகம் என்பதை அவரது இந்தப்பதிவில் படித்து அறிந்து கொண்டேன். 42 வயது கிழம் தினம் 40 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வுகாண முரட்டு வைத்தியத்தை இந்தக் Clever கிழவர் மிருகத்தனமான தன்னம்பிக்கையுடன் செய்து கொண்டது! டோண்டு கிழ மிருகம்தான் சந்தேகமே இல்லை!

நியாயமற்ற எதிரிக்குக்கூட குழையடித்து கூழைக்கும்பிடு போட்டு காரியத்தைச் சாதிக்கும் "ஸ்மார்ட் லிவிங் " டோண்டுவுக்கு தெரியாததால் அவர் பட்ட இன்னல்கள் அதிகம்.

இதற்காக டோண்டுவுக்கு குழையடிக்கத் தெரியாது என்று எண்ணவேண்டாம்.
டோண்டு நெடுங்குழை அடிப்பதில்வல்லவர். வலைவழியாக டோண்டு தன் எழுத்து மூலம் சந்தித்திருப்போரை, தன் திருப்பேரை மறந்திருப்போரையும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் திருப்பெயரை தமிழ்மணம் வாயிலாக பதிவுகள் படிப்போர் நினைவில் இருத்தச்செய்பவர் டோண்டு.

தன் பெயரிலே (அய்யங்)கார் இருந்தாலும் இன்னும் வாடகைக்காரிலேதான் பயணிப்பார் டோண்டு.

தனியுடமை அனைத்தும் பொதுவுடமையாக வேண்டும் எனும் அரசியல் கோஷத்தினிடையே சத்தமில்லாமல் பொதுவுடமை மின் தொடர் வண்டியைத் தன் ரயிலாக தனியுடமையாக்கிவிடுவார் டோண்டு!

டோண்டுவும் விஜய டி.ராஜேந்தரும் ஒருவிதத்தில் இணையானவர்கள். உதடுகள் இவர்களைப் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் உண்மையில் இவர்கள் மேல் பிடிப்பு இருக்கும். காரணம் இருவரும் பன்முகத்தன்மையோடு கடினமாக உழைப்பவர்கள், தளராத மன உறுதியும், தன்னம்பிக்கையும் நிரம்பியவர்கள்.

இன்றைக்கு சமூகத்தில் டிரண்டாக, அரசு-வங்கிப் பணிகளில் இருப்போர் விஆர்.எஸ் என்றும் ஐடி துறையில் 40களில் இருப்பவர் Early retirement குறித்து யோசிக்கும் வேளையில் கிழவர் டோண்டு 60 வயதிலும் கடினமாக மிருகம் மாதிரி உழைப்பவர்.

டோண்டு பல வழிகளில் கிரியா ஊக்கியாக இளைஞர்களுக்கு பொறியியல் படித்து மொழிபெயர்ப்பாளராக பரிமளிப்பது, நேர விரயம் =பொருள் விரயம் என உணர்த்தும் விதமாக புரொபஷனலாக வேலை செய்வது, கடினமாக உழைக்க வயது பொருட்டல்ல என்பது, பெரும் தன்னம்பிக்கையுடன், சிதறாத மன உறுதியுடன், சிரமங்களை கூட்டமாகக் கூடித் தலைவலியாக ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு சமாளிப்பது என சாமனியர்களிடையே அணுகக்கூடியவராக இருக்கிறார்.

டோண்டு கிழ மிருகம் தான் சந்தேகமில்லை! தன்னம்பிக்கை, தளராத உறுதி, உழைப்பில்!

குறிப்பு:

டோண்டு குறித்த என் அதிர்ச்சிகள்

அதிர்ச்சி-1

டோண்டு எதிரிகளை நூதனமாக துவம்சம் செய்வது அவரது ஹைபர் லிங்க்ஸ் பதிவுகள் வாயிலாக என்பது என் எண்ணம். எப்போதோ டோண்டுவின் ஹைபர் லிங்க் மொக்கைபதிவைப் படித்துவிட்டு இன்றளவிலும் டோண்டுவோட "ஹைபர் லிங்க் பதிவு பக்கம் போவியான்னு என்னை நானே நொந்து கொண்டு இருக்கிறேன்:-))

அதிர்ச்சி-2
தெருப்பெயரில் சாதி விஷயத்தில் காலச்சக்கரத்தில் நின்றுவிட்ட டோண்டு.

அதிர்ச்சி-3
டோண்டு புலால்-மது-புகைத்தல் இவற்றோடு உறவாடுவது என்பது தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனுக்கே டகால்டியாக டோண்டு காதுகுத்துவது என்பதாகாதா?டோண்டுவை நோண்டி நொங்கெடுத்து அடிக்கிற தமிழ்இணைய வலைப் பதிவுகளிடையே டோண்டுவின் பல நல்லவைகளை ஆதரிக்கவும் ஒருபதிவு இருக்கவேண்டும் என்பதால் இப்பதிவு.

அடிக்கிற கைதான் அணைக்கும் எனும் வகையில் டோண்டுவை அடிக்கிற தமிழ்இணையமே டோண்டுவை அரவணைக்கும்!


அன்புடன்


ஹரிஹரன்

16 comments:

Hariharan # 26491540 said...

30609
டெஸ்ட் மெசேஜ்!

dondu(#11168674346665545885) said...

சுவாரசியமான பதிவுக்கு நன்றி.

//தெருப்பெயரில் சாதி விஷயத்தில் காலச்சக்கரத்தில் நின்றுவிட்ட டோண்டு.//
மூன்று காரணங்கள்.
1. செத்தவரால் என்ன செய்து விடமுடியும் என்று அவரது பெயரில் விளையாடியது
2. அதையும் சிலரை தனக்கு வேண்டியவர்கள் என்பதற்காக விட்டு வைத்தது
3. பெயர் குழப்பத்தால் விளைந்த இன்னல்கள், நிர்வாகச் செலவுகள்

இவையெல்லாம் உப்பு பெறாத விஷயத்துக்காக செய்தது. அதுவும் எம்.ஜி.ஆரிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை. தமிழகமே அவருக்கு விசிறி என்ற நிலையில் இது வேண்டாத வேலைதானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//இதற்காக டோண்டுவுக்கு குழையடிக்கத் தெரியாது என்று எண்ணவேண்டாம்.
டோண்டு நெடுங்குழை அடிப்பதில்வல்லவர். வலைவழியாக டோண்டு தன் எழுத்து மூலம் சந்தித்திருப்போரை, தன் திருப்பேரை மறந்திருப்போரையும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் திருப்பெயரை தமிழ்மணம் வாயிலாக பதிவுகள் படிப்போர் நினைவில் இருத்தச்செய்பவர் டோண்டு.//
கவிதையாய் பரிமளிக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் சொற்கள் உங்கள் மொழித்திறமையை பறைசாற்றுகின்றன.

எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேறை மகரநெடுங்குழைகாதன் அருளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நன்மனம் said...

நல்லா கிளப்பரீங்கப்பா பீதிய ;-)

நற்குணங்களை பார்த்து நேர்நடை போட சொல்லும் நல்ல பதிவு.

பி.கு: கவுண்டர் (அதாங்க எவ்வளவு பேரு எட்டி பாத்தாங்கனு சொல்லுமே) அத சூடு ஏத்த வகை செய்யும் தலைப்பு.

நன்மனம் said...

கவுண்டர் மறக்க கூடாதுனு டெஸ்ட் மெசேஜ்ல கூட சேத்துட்டீங்களே, நல்ல ஐடியா தான்.

நான் பாக்கும் போது 30659

மதுசூதனன் said...

ம்ம்.... நானும் இந்தப் பதிவை வரவேற்கிறேன். இதே போல் நானும் ஒரு பதிவிட்டேன். இதோ அது..

Hariharan # 26491540 said...

டோண்டு சார்,

தலைப்புக்காக கோபித்துக் கொள்ளாததற்கு நன்றி.

Approach and observe a man from his positivities என்கிற நல்ல பார்வைக்கோணம் அதன் டார்கெட் ஆடியன்ஸை அடையவேண்டும் என்பதாலேயே சூடான தலைப்பு.

//இவையெல்லாம் உப்பு பெறாத விஷயத்துக்காக செய்தது.//
தெருப்பெயரில் சாதி மாற்றக் குழப்பங்கள், அந்தச்சூழல் எதிர்கொள்ளப்பட்டு தாண்டி வந்துவிட்டோமே. அதைத் திரும்ப சாதிப்பெயருடன் ரிவ்யூ செய்வதும் உப்புப் பெறாத விஷயம் தானே:-))

dondu(#11168674346665545885) said...

//தெருப்பெயரில் சாதி மாற்றக் குழப்பங்கள், அந்தச்சூழல் எதிர்கொள்ளப்பட்டு தாண்டி வந்துவிட்டோமே.//
1. யார் சொன்னது? இன்னும் வெங்கடாசலத் தெரு என்று திருவல்லிக்கேணியில் மட்டும் மூன்று தெருக்கள் உள்ளன. வெங்கடாசலத் தெரு 1, 2, 3 என்றாவது எழுதியிருக்கலாமே.

2. வெள்ளைக்காரன் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. நாஜிகள் அழிந்து விட்டனர். ஆகவே அவற்றையெல்லாம் இனிமேல் படிக்க வேண்டாம் எனக் கூறுவீர்களா? (மாணவர்கள் ஐயா ஜாலி என்று கத்துவது இப்போதே கேட்கிறது). அப்படித்தான் இதுவும். நடந்தவற்றை பதிவு செய்வது என்பது முக்கியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பங்காளி... said...

ஒன்னுஞ் சொல்றாப்ல இல்ல...எல்லாம் மாயை...

Hariharan # 26491540 said...

//கவிதையாய் பரிமளிக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் சொற்கள் உங்கள் மொழித்திறமையை பறைசாற்றுகின்றன//

மொழிபெயர்ப்பு-மொழியியளாளராகிய தங்களிடமிருந்து எனது தமிழ் மொழித்திறமைக்கு கிடைத்த பாராட்டு
ஊக்கமளிக்கின்றது டோண்டு சார். பாராட்டுக்கு நன்றிகள்

Hariharan # 26491540 said...

//நல்லா கிளப்பரீங்கப்பா பீதிய ;-)

நற்குணங்களை பார்த்து நேர்நடை போட சொல்லும் நல்ல பதிவு.//

நன்றி நன்மனம்.

பார்ப்பதில் நல்லதை பெரும்பான்மையாகப் பார்த்தால் நல்லது எல்லோருக்குமே இல்லீங்களா?

Hariharan # 26491540 said...

//கவுண்டர் மறக்க கூடாதுனு டெஸ்ட் மெசேஜ்ல கூட சேத்துட்டீங்களே, நல்ல ஐடியா தான்.//

கவுண்ட(ர்)மணி மாதிரி ஐடியாமணி ஹரிஹரன்?! ;-))

Hariharan # 26491540 said...

//ம்ம்.... நானும் இந்தப் பதிவை வரவேற்கிறேன். இதே போல் நானும் ஒரு பதிவிட்டேன். இதோ அது..//

மதுசூதனன் தங்கள் வருகை-வரவேற்புக்கு நன்றி

Hari said...

உக்காந்து யோசிப்பீங்களோ(இந்த மாதிரி தலைப்பு வைக்க)

Hariharan # 26491540 said...

//பங்காளி... said...
ஒன்னுஞ் சொல்றாப்ல இல்ல...எல்லாம் மாயை...//


வாங்க பங்காளி,

ஏதாவது ஒண்ணு சொல்லுங்க...
எது எல்லாம் மாயைன்னு தெரிஞ்சா கவனமாக இருக்கலாம்மேன்னுதான்..

Hariharan # 26491540 said...

//Hari said...
உக்காந்து யோசிப்பீங்களோ(இந்த மாதிரி தலைப்பு வைக்க) //

இது ஆக்சுவலா நின்னுட்டும்-நடந்துட்டேயும் யோசிச்சு வைச்ச தலைப்பு :-))