Sunday, February 18, 2007

(120) சுவையான வரலாற்று-சமய-அரசியல்-நகைமுரண்கள்

சில சுவைமிக்க, புகழ் பெற்ற வரலாற்று, சமய, சமூக- அரசியல் தளங்களிலான நகைமுரண்களைக் கவிதையாக்கித் தொகுத்துத் தந்திருக்கிறேன். படித்து மகிழுங்கள்:-))

1. சமணர்கள்-கொல்லாமை-கழுமரமேறுதல்

உயிர் கொல்லாமையை உலகோர்க்கு
உரத்து உரைத்த சமணர்கள்
சைவ-சமண விவாதத்தில் தோற்றபின்
சுயமாய்த் தெரிவு செய்ததோ
கழுமரமேறி அமர்ந்து உயிர்துறத்தலை!

2. விக்கிரக ஆராதனை-பேய்கள் வழிபாடு-கிறித்துவம்

இந்துமக்கள் திருக்கோவில்கள் தோறும்
பேணும் விக்கிரக ஆராதனையை
பேய்கள்வழிபாடு என்று இழித்துரைத்த
கிறித்துவமிஷ"நரிகள்" சர்ச்கள் தோறும்
பிரதிஷ்டை செய்து வழிபடுவதோ
சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்து
பேயாய்த் தொங்கும் இயேசுவுருவத்தை!

3. பகுத்தறிவு-நதிகள்-சுயமரியாதை தமிழர்மேம்பாடு

இந்துஇறைமறுப்பு சுயமரியாதை பகுத்தறிவுக்கூட்டத்தினரை
தேர்ந்தெடுத்து ஆட்சி அதிகாரத்திலமர்த்தினால்-தமிழகமெங்கும்
தேனாறும்-பாலாறும் கரைபுரண்டு ஓடும்எனச்சொல்லியே
ஆட்சிஅதிகாரம் பெற்ற இந்துஇறைமறுப்பு பகுத்தறிவுகளின்
சீரிய ஆட்சியில் தமிழக தலைநகர நதிகள் சாக்கடையாயின
இதர தமிழக நதிகள் மணல் ஓடும் கருவேலந்தோப்பாயின!

(பொதுஅறிவு இப்படி இருந்தா தேனாறு-பாலாறு ஓடும்)

4. அஃறிணைகளால் மதிப்புயரும் நவீனகால உயர்திணைகள்

ப்ளாஸ்மா-டிவி டிஜிடல்-காமெராமொபைல் டயோட்டாகார்
இண்டெர்நெட்டுடனான கணிணி குளிரூட்டும் இயந்திரம்
என்பதான நவீனயுக அஃறிணைகள் நிர்ணயிக்கின்றன
இன்றைய மெத்தப்படித்த நவயுக-நாகரீக நகரத்துமாந்தர்
உண்மையில் உய்ர்வான உயர்திணைகள்தானா? என்பதை!

5. காதல்-ஜாதிஒழிப்பு-தமிழ்க்கலாச்சாரமீட்டெடுப்பு- வாக்குசுத்தம்

காதலும் வீரமும் தமிழர்தம் குணங்கள்
காதலால் ஜாதி ஒழிக்கப்படுகிறது
காதல் திருமணங்கள் காலத்தின் கட்டாயம்
ஈவெரா-இறைமறுப்பு விடுத்து ஜாதிஒழிப்பை முன்னெடுப்போம்
தமிழர் கலாச்சாரபண்பாட்டை மீட்டெடுப்போம்-ஓங்கி உரைத்தது
ஆதிதமிழர் கலாச்சார, பண்பாட்டு மீட்டெடுப்பு இயக்கம்
பிப்-14 காதலர் தினமோ தமிழர்சமுதாய-கலாச்சார-பண்பாட்டு சீர்கேடு
தமிழ்நாட்டில் காதலர்தினம் தடைசெய்யப்படவேண்டும்-அறிவித்தது
அதே ஆதிதமிழர் கலாச்சார,பண்பாட்டு மீட்டெடுப்பு இயக்கம்!

6. இந்துமதஉருவவழிபாடுஎதிர்த்த-ஈவெராஉருவவழிபாடு-ஈவெராமதம்

இந்துமதமும்-அதில் பிரதானமான உருவவழிபாட்டுமுறை யுமே
காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்கியதால்உருப்படாமல்போனது
தமிழ்ச்சமுதாயம் என கடவுளர்சிலைகளை உடைத்து
உருக்குலைத்த ஈவெராமசாமிக்கு இன்று ஊரெல்லாம்
உருவச்சிலை உருவாக்கி மாலைமரியாதை-நடத்துகின்றனர்
சுயமரியாதை-பகுத்தறி பக்தர்கள் உருவாக்கினர்-ஈவெராமதத்தை!


அப்படியே தங்கள் கருத்தை ஒருவரி பின்னூட்டமா சொல்லிட்டுப் போங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

5 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

வித்யாசாகரன் (vidyasakaran) said...

//சுயமாய்த் தெரிவு செய்ததோ
நீங்கள் மகிழுங்கள்.

//சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்து பேயாய்த் தொங்கும் இயேசுவுருவத்தை
விஷம், விஷம் - உமது சொற்கள்

அரவிந்தன் நீலகண்டன் said...

//பிரதிஷ்டை செய்து வழிபடுவதோ
சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்து
பேயாய்த் தொங்கும் இயேசுவுருவத்தை!//
அருமை! ஒரு சமயம் எங்கள் ஊரில் கிறிஸ்தவ பிரச்சாரம் ('பேயை கும்பிடும் அஞ்ஞானிகளே...') அதிகமாகிய போது 'பேயைக்கும்பிடுவது கிறிஸ்தவர்களா இந்துக்களா' என ஒரு சின்ன பிரசுரம் போட்டோ ம். அப்புறம் என்ன மற்ற பிரச்சாரங்கள் நின்றுவிட்டன.

Hariharan # 26491540 said...

//சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்து பேயாய்த் தொங்கும் இயேசுவுருவத்தை//

விஷம், விஷம் - உமது சொற்கள் //

முதல் வருகைக்கு நன்றி வித்யாசாகரன்.


இந்துமக்கள் திருக்கோவில்கள் தோறும்
பேணும் விக்கிரக ஆராதனையை
பேய்கள்வழிபாடு என்று இழித்துரைத்த
கிறித்துவமிஷ"நரிகள்"

விஷமான, விஷமமான சொற்கள் மிஷ"நரிகள்" இந்துமத விக்கிரக ஆராதனையை கேவலப்படுத்தச் சொன்னது.

(நம்மூரில் நிறைவேறாத ஆசைகளுடன் ஒருவர் தற்கொலை/கொலை ஆனால் அவர் ஆவியாக/பேயாக அலைவார்கள் என்பது பாரம்பரிய எண்ணம்.)

//சமணர்கள் சுயமாய்த் தெரிவு செய்ததோ கழுமரமேறி உயிர் துறத்தலை//
நீங்கள் மகிழுங்கள்.//

வரலாற்று முரண்நகையைச் சுட்டினால் நீங்கள் மகிழுங்கள் என்றால் என்ன சொல்ல?

Hariharan # 26491540 said...

வாங்க அரவிந்தன் நீலகண்டன்,

இந்தத் தூய கிறித்துவர்கள் மதமாற்றத்திற்காக பாவச்செயல்கள் விபச்சாரம், விக்கிரக ஆராதனை என்று என லிஸ்ட் போட்டு பிட் நோட்டீஸா அடிச்சசு விநியோகிப்பார்கள்.

பேசாமல் கிறுக்கனுங்கன்னு எதிர்க்காம, விமர்சிக்காம விட்டு வச்சு விட்டு வச்சு மிக மோசமாகவும் முட்டாள் தனமாகவும் அடிக்கிற கூத்துக்களைப் பார்க்கும்போது நின்னு திரும்பி விமர்சிப்பது அவசியம் மற்றும் காலத்தின் கட்டாயம்.