(118) பிரவரி14.. காதல்...மாயை..காதலி...ம்மமனைவிவீஈஈ...
ஆண்டுதோறும் பிப்ரவரி 14 மாயையில் மலர்க்கொத்தும், அலங்கார வாழ்த்து அட்டையுமாய் லவ் நினைப்பில் மிதப்பவர்களுக்கு... நினப்புதான் பொழைப்பைக் கெடுக்கும்... லவ்வுக்கு அப்பால் கல்யாணமான பின்பு தமக்குக் கிடைக்கவிருக்கும் தினசரி அ(க)லங்கார வசைக்கொத்தும் அறியாதவர்க்கு ஒரு எச்சரிக்கை செய்ய நினத்து எழுதுகிறேன் :
லவ்வுக்கு அப்பால்....
காதலித்த தருணங்களில் ஒரு கட்டத்தில் அன்பொழுக வட்டமான முழுநிலவு நீ என்றேன்...
கல்யாணத்திற்கு அப்புறம் அதிகாரத்தில் மாவட்டமாகி மாவாட்டச் சொல்லி சம உரிமையுடன் அழுக வைக்கிறாய் என்னை..
காதலித்த நாட்களில் அன்பே
நீ நம் லவ்வைக் கணக்கிட்ட
Sharp கால்குலேட்டர்
ஆக இருந்தாய்...
ஆனால் கல்யாணம் ஆன பின்னே அன்பே நீ என்
சம்பள கேஷ்-ஐக் கரெக்டாகக் கேட்கும்
கேஷியோ கால்குலேட்டர்
ஆகிப்போனதேன்...
அன்பே நீ நாம் காதலிக்கும் போது உன்னைப் பின் தொடர்ந்து நான் வரும்போதெல்லாம் சில்லறை சிந்துவதுமாதிரி சிரிப்பான சிரிப்பு சிரிப்பாய் நீ...
ஆனால் கல்யாணமான பின்பு என் சில்லறைத் தேவைகட்குச் வேண்டும் சில்லறைக்குச் சில்லறைத்தனமாய் என்னை உன் பின்னால் அலையவிடுவது கண்டு சிரிப்பான சிரிப்பு சிரிக்கிறார்கள் நம் மக்கள்...
புரியாதது எப்போதும் புதிராகும்.. காதலித்தபோது அன்பே நீ என்னை முழுதும் புரிந்துகொண்டேன் என்றது கல்யாணத்திற்கு அப்புறம் உதாரான புதிரானது...
அன்பே உன் லவ் மீட்டர் நம் சென்னை ஆட்டோ மீட்டரை விட பிழையாகிவிட்டதா?
குறிப்பு-1:
அப்போ வாங்கிவிட்ட காதல் அறிவிப்பு / வழிதல் / வாழ்த்து அட்டைகள், பரிசுப்பொருட்கள் மற்றும் ஆர்கிட் பூங்கொத்துக்கள் ஆர்டர் தந்தவர்களுக்கும் "துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" எனும் குறள் தமிழ் வீரம் காட்டுவோருக்கு ""உங்கள் விதி வலியது" என்று சொல்லும் "ஊழிற் பெருவலி யாவுமுளதோ?" என்ற குறளையும் கட்டாயம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!
குறிப்பு-2: டிஸ்கி
பெண் ஈய காவலர்களுக்கு : "கவிதைக்குப் பொய் அழகு" என்பதை நினைவில் கொள்ளவும்
இப்படிக்கு,
ஹரிஹரன்
(லவ்வுக்கு அப்பால்... எனும் சுயசரிதை மனைவி இல்லாத நேரத்தில் எழுதும் ஒரு ஆண் ஈய/பித்தளை பேரீச்சம்பழ அபலை)
17 comments:
//ஆண்டுதோறும் பிப்ரவரி 14 மாயையில் மலர்க்கொத்தும், அலங்கார வாழ்த்து அட்டையுமாய் லவ் நினைப்பில் மிதப்பவர்களுக்கு... நினப்புதான் பொழைப்பைக் கெடுக்கும்... லவ்வுக்கு அப்பால் கல்யாணமான பின்பு தமக்குக் கிடைக்கவிருக்கும் தினசரி அ(க)லங்கார வசைக்கொத்தும் அறியாதவர்க்கு ஒரு எச்சரிக்கை செய்ய நினத்து எழுதுகிறேன் : //
:)))))))))
சிறந்த முன்னுரை...
சென்ஷி
வாங்க சென்ஷி,
மனிதனை தேர்ந்த நடிகனாக்குவது இவங்க தானே. சின்ன வயசுல முதல் மரியாதை படத்துப் பாட்டுல
"உள்ளே அழுகிற...வெளியே சிரிக்கிறே...நல்ல வேஷம்தான் வெளுத்துவாங்குற"-வர்ற வரி சரியாப் புரியாது.
இப்போ எல்லாம் ரொம்பவே நல்லாப் புரியுதுங்க..நல்லாப் புரியுதுங்க...
Knowledge gained is ONLY to be shared என்பதை எப்போதும் நம்புகிறவன் நான்.
உங்க feelings புரியுது ஹரி.. ;-)
கவலைப்படாதீங்க மச்சி. இதையே அவுங்கள கேட்டா இதவிட கண்ராவியா நம்மளப்பத்தி காதல் டைம்ல கடலையா வறுத்ததையும் இப்ப கடலை கேட்டாக்கூட கரடியா நிக்குறதையும் போட்டு கிழிச்சிற போறாங்க.
Don`t woor my friend.வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்பா. அடிக்கற கைதான் அணைக்கும்.பகல்ல நடக்கிறதெல்லாம் சொல்லீரலாம், ஆனா இராவுல நடக்கிறது..... ?
//உங்க feelings புரியுது ஹரி..
;-) //
வருகைக்கு நன்றி மை ஃப்ரண்ட்
//கவலைப்படாதீங்க மச்சி. இதையே அவுங்கள கேட்டா இதவிட கண்ராவியா நம்மளப்பத்தி காதல் டைம்ல கடலையா வறுத்ததையும் இப்ப கடலை கேட்டாக்கூட கரடியா நிக்குறதையும் போட்டு கிழிச்சிற போறாங்க//
வாருங்கள் அரவிந்தன் நீலகண்டன்.
அதுவும் சரிதான். என்ற போதும் தேன்மொழியாகப் பேசிய இவர்கள் "நான் கரடியாக கத்துறது கேக்கலையா" என்று அவர்களே தாங்கள் கரடியாகிவிட்டதை ஒப்புக்கொள்கிறதும் நடக்கிறதுதானே!
:-)) :-)) ரெண்டு ஸ்மைலி அட்டாக் ப்ரிவென்ஷன் ஷீல்டிங்காக!
//Don`t woor my friend.வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்பா.//
பிரசாத்,
40 வயசு வரைக்கும் கஷ்டப்படுவாய், 40க்கு அப்புறம்?
கஷ்டம் பழகிடும் :-)) இல்லீங்களா
கஷ்டத்திலிருந்து தப்பிக்க ஒரு சுலபமான வழி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் :)
ஓரே ஒரு ரிக்வெஸ்ட் தைரியமிருந்தால் உங்க பார்ட்னரிடம் இந்தப் பதிவை காட்டும் பார்ப்போம்.
மானே,தேனே ன்னு சொன்னபோது என்ன ரியாக்ஷன் காட்டினோமோ அதையேத்தான் பேயே பிசாசே ன்னும் போதும் காட்டுவோம்.ஏன்னா எங்களுக்கும் காலச் சக்கரம் எப்படி சுழலும்ஆண்களின்[ நாக்கு/வாக்கைப் போல்] என்று நன்றாகவே தெரியும்.
இந்த ஆண்களுக்கு எல்லாம் எப்பவுமே
'இக்கரைக்கு அக்கரை பச்சை தான்'
//கஷ்டத்திலிருந்து தப்பிக்க ஒரு சுலபமான வழி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்//
கோபாலன் ராமசுப்பு,
நல்லாக் கேட்டீங்க. எனக்கு அது தெரிஞ்சிருந்தா மொதல்ல செல்ஃப் சர்வீஸ் செஞ்சிருக்கமாட்டேனா?
இப்போதைக்கு இம்சைகள் அனுபவிக்கிறதால"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது தான் உங்களுக்குச் சொல்ல முடியும்.
:-))
//ஓரே ஒரு ரிக்வெஸ்ட் தைரியமிருந்தால் உங்க பார்ட்னரிடம் இந்தப் பதிவை காட்டும் பார்ப்போம்.//
சிறுத்தைமாதிரி சிங்கிளா பதிவுகளில் உலா வருவதற்கு சொ.செ.சூ வச்சுக்கணுமா?
//மானே,தேனே ன்னு சொன்னபோது என்ன ரியாக்ஷன் காட்டினோமோ அதையேத்தான் பேயே பிசாசே ன்னும் போதும் காட்டுவோம்.ஏன்னா எங்களுக்கும் காலச் சக்கரம் எப்படி சுழலும்ஆண்களின்[ நாக்கு/வாக்கைப் போல்] என்று நன்றாகவே தெரியும்.//
என்னோட டிஸ்கியைப் படிக்கலை நீங்க. நான் எழுதினது கவிதை... கவிதைக்குப் பொய் அழகுன்னு தாய்க்குலமான நீங்க பொருள் எடுத்துக்கணும்னு நோட்டீஸ்ல போட்டிருக்கேனே.
இப்படிப் "பொருளோடு" கீசவந்தால் சிங்கம் மாதிரி சிங்கிள் ஜம்ப்ல எஸ்கேப் தான் ஆகணும்.
இப்போ நான் என்னதான் செய்யுறது?
1)லவ் பண்ணட்டுமா, வேணாமா?
2)லவ் பண்ணா அதே பொண்ணை கல்யாணம் பண்ணலாமா, வேணாமா?
அதையும் சொல்லிடுங்களேன்...
சென்ஷி
//இப்போ நான் என்னதான் செய்யுறது?1)லவ் பண்ணட்டுமா, வேணாமா?//
நீங்க சும்மா இருந்தாலும் இளந்தாரி ஹார்மோன் ஆர்மோனியம் வாசிச்சு சும்மா இருக்கவிடாது. நீங்களே சங்கீதம் வாசிக்கிறீங்களா ஹார்மோன் ஆர்மோனியம் வாசிக்குதான்றது இங்கே முக்கியம்.
நீங்க சுயமா சிந்திச்சு ஆர்மோனியத்தில சங்கீதம் வாசிச்சா அது கேட்கிற மாதிரி இசையாகும்.
இளந்தாரி ஹார்மோன் வாசிக்கிற ஆர்மோனியம்னா "சங்கு" சத்தமா இசையாகும்
//லவ் பண்ணா அதே பொண்ணை கல்யாணம் பண்ணலாமா, வேணாமா?//
லவ் பண்ணிட்டா வேறு வழி. நோ எண்ட்ரின்னு தெரிஞ்சுதானே உள்ளே போறீங்க... மாற்று வழியே கிடையாது இதுக்கு.
//அதையும் சொல்லிடுங்களேன்...//
கி.கி.
பிரியாணியாகி விட்ட என்னிடம் வந்து தான் பிரியாணி ஆவதா இல்லை குழம்பாவதா என்று சேவக்கோழி குழப்பத்துல கேட்டா அதுக்கு இந்த பிரியாணி என்ன பதில் சொல்லும்?
//பிரியாணியாகி விட்ட என்னிடம் வந்து தான் பிரியாணி ஆவதா இல்லை குழம்பாவதா என்று சேவக்கோழி குழப்பத்துல கேட்டா அதுக்கு இந்த பிரியாணி என்ன பதில் சொல்லும்? //
காஞ்சிப்போன நதியெல்லாம்
வத்தாத கடல்ட்ட வந்து தண்ணிய பாக்கும்
அந்த வத்தாத கடலே காஞ்சு போச்சுன்னா.....
ஒண்ணுமே பிரியல உலகத்துல :))
சென்ஷி
//காஞ்சிப்போன நதியெல்லாம்
வத்தாத கடல்ட்ட வந்து தண்ணிய பாக்கும்
அந்த வத்தாத கடலே காஞ்சு போச்சுன்னா.....
ஒண்ணுமே பிரியல உலகத்துல //
தானாடவில்லை அம்மா சதையாடுது...
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி... :-))
//
பிரியாணியாகி விட்ட என்னிடம் வந்து தான் பிரியாணி ஆவதா இல்லை குழம்பாவதா என்று சேவக்கோழி குழப்பத்துல கேட்டா அதுக்கு இந்த பிரியாணி என்ன பதில் சொல்லும்?
//
//
நீங்க சுயமா சிந்திச்சு ஆர்மோனியத்தில சங்கீதம் வாசிச்சா அது கேட்கிற மாதிரி இசையாகும்.
இளந்தாரி ஹார்மோன் வாசிக்கிற ஆர்மோனியம்னா "சங்கு" சத்தமா இசையாகும்
//
//
ஒண்ணுமே பிரியல உலகத்துல //
தானாடவில்லை அம்மா சதையாடுது...
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி... :-))
//
பதிவு அருமை.
அதற்கான பின்னூட்டங்கள் அதைவிட அருமை.
காதுல கேக்குறது கேக்குறமாதிரி இசையா இல்ல சங்கான்னு ஒண்ணும் புரியலை
Post a Comment