Wednesday, February 28, 2007

(123) சக பதிவர்கள் ரியாக்சன் - தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை 30க்கு

தமிழ்மணத்தில் வெளியான பதிவுகளுக்கான பின்னூட்ட உயர் எல்லை 30 என்கிற அறிவிப்புக்கு சக பதிவர்களது ரியாக்சன் எப்படி எல்லாம் இருக்கும் என்று கற்பனைப் பதிவு.

நட்புடன் நான் படிக்கும் எல்லாப் பதிவர்களையும் அவர்கள் பெயர்களிலேயே கலாய்ந்திருக்கிறேன். பதிவர்களுக்கு ஆட்சேபம்/விருப்பமில்லை எனில் தனிமடலில் தெரிவித்தால் நீக்கிவிட ஆயத்தமாயிருக்கிறேன்.

இலவசகொத்தனார்:(தட்டிப்பாத்தேன் கொட்டாங்கச்சி ஸ்டைலில்)

கோட்டை கட்டினேன் பின்னூட்டத்தைவச்சி
தமிழ்மணத்தால் பின்னூட்ட ஆட்டம்போச்சி

டோண்டு: (கொட்டும்மழைக்காலம் உப்பு விற்கப்போனேன் ஸ்டைலில்)

பின்னூட்ட காற்றடிக்கும் கால்ம் அனானி/அதர் ஆப்ஷன் மூடிவச்சேன்
தமிழ்மணரூல்ஸ் கொட்டும் காலம் அனானி/அதர் ஆப்ஷன் திறந்து வச்சேன்..

பெனாத்தல் சுரேஷ்: (பாட்சா ஸ்டைலில்)

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச பின்னூட்ட ஷேர் ஆட்டோக்காரன்
பின்னூட்ட ஏழைக்கெல்லாம் நான் சொந்தக்காரன்டா..

பஞ்ச் டயலாக்: எனக்கு ஒரு பின்னூட்டம்வந்தா முப்பது பின்னூட்டம் வந்தமாதிரி..

யேய்..யேய்...யேய் நல்லவங்களுக்கு உருப்படியா முதல்லயே 29 நல்ல பின்னூட்டம் வந்து முப்பதாவதுல எல்லோரும் வாங்க நன்றின்னு உபசரிக்கும்படி செய்வான் ஆண்டவன்..
ஆனா...கெட்டவங்களுக்கு முதல்ல வர்ற முப்பதும் பின்னூட்டக் கயமையா ஆக்கி, முப்பதுக்கு மேல வர்ற உருப்படியான ஒரு பின்னூட்டமும் தமிழ்மண முகப்பில் வராது செய்திடுவான் ஆண்டவன்..

ஜொள்ளுப்பாண்டி:
முதல் முப்பது பின்னூட்டத்துலேயே எனது பதிவு சொல்லும் பொருள் பற்றிய புரிதல்கள் எல்லாத்தையும் வாசகர்கள் "ஜொள்ளி"முடிக்கமுடியுமா? நடக்கிற காரியமா இது?
"ஜொள்ளுதல் யார்க்கும் எளிய அரியவாம் ஜொள்ளியவுடன் பின்னூட்டும் செயல்" எனும் முன்னோர் வாக்கினை தமிழ்மணம் நினைவில் வைத்து மறு பரிசீலனை செய்யவேண்டும்.

வகுப்பறை S.V சுப்பையா வாத்தியார் :
எனது சோதிட அறிவியல் பதிவுகள் தொடர் படித்தால் பதிவர்களால் இந்த இக்கட்டினை எதிர்கொள்ள உதவும்.
பிரதமை முதல் பௌர்ணமி வரையிலான வளர்பிறை 15 என்பது முதல் பாதி முப்பது பின்னூட்ட வரவு என்றும், அடுத்த பிரதமை முதல் அமாவசை வரையிலான தேய்பிறை 15 என்கிற இரண்டாம் பாதி முப்பது பின்னூட்டங்கள் பி;கயமை+வரவேற்பு உபசரிப்பு என எண்ணி எதிர்கொண்டால் தற்போதைய தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை30 எனும் சோதனைக்காலத்தின் இக்கட்டிலிருந்து சோதிடத்தின் உதவியால் தப்பலாம்.

செந்தழல் ரவி:
அமுகவை அமுக்கப் பார்க்கும் சதி. அமுக அவ்வளவுதானா? தமிழ்மணத்தில் ஆப்புதானா?

மு.கார்த்திகேயன்:
பின்னூட்ட உயர் எல்லை வெறும் 30தானா? எங்க தல அஜீத் வழி நடக்கும் எங்களுக்கு வானமே எல்லை. தல மாதிரி முட்டி மோதி பின்னூட்டத்தை 50-60ன்னு வாங்கி தமிழ்மண முகப்பை "வரலாறு" படைச்சு ஆள்கிற இந்த நேரத்தில் தல அஜீதை ஆழத்தில் தள்ளிய ஆழ்வார் கதை மாதிரி உயர் எல்லை 30 என்று டுவிஸ்ட் தமிழ்மணம் தரலாமா?
தல போல வருமா?

கீதா சாம்பசிவம்:

பின்னூட்ட உயர்எல்லை 30 என்பது கைலாயமான உயர்ந்த இடத்திலிருக்கும் கைலாசநாதனான சிவ பெருமானின் சித்தம் என்றே கருதுகிறேன். முதல் பத்து சிவனின் நெற்றிக்கண் ரேஞ்சில் சுட்டெரிக்க வரும் விமர்சனங்களுக்கும், இரண்டாம் பத்து பின்னூட்டங்களை தன்னில் ஒருபாதியான பார்வதியான சக்தியாக விமர்சனங்களை எதிர்கொள்வதற்கும் மூன்றாம் பத்து பின்னூட்டங்களை ஜடாமுடியுடையவனான சிவனின் உடுக்கையாக பாவித்து நாம் அடிக்கும் உட்டாலக்கடி உடுக்கையடிப் பின்னூட்டங்களாகவும் பாவித்தால் பரமசிவன் அருள் கிட்டி உயர் எல்லை 30ஐத் தாண்டியதால் தமிழ்மண முகப்பில் வரவில்லையே என்ற ஏக்கமின்றி பதிவு முக்தியடையும்!

பாலபாரதி:
புதுபிளாக்கருக்கு மாறிய கையோடு டெக்னாலஜி அப்கிரேடேஷன் பின்னூட்டப்பெட்டியிலும் DTS/Dolbi digital 7.1 channel Surround sound எபெஃக்டில் செயல்படுவது. ரெண்டாவது பின்னூட்டத்தில் ஆரம்பிக்கும் ரிப்பீட்டே எக்கொ எபெஃட் அடங்கவே 30பின்னூட்டம் ஆகிடுமே!
தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை பெரும் தொல்லை. தமிழ்மணமும் பாகச ஆகிப்போனதா? யூ டூ தமிழ்மணம்???

வரவணை செந்தில்:
தல பாலபாரதிக்கு டிஜிடல் டெக்னாலஜியால் ரிப்பீட்டட் தொல்லை. எனக்கு பின்னூட்ட பாலா தொல்லை. முதல் முப்பது பின்னூட்டத்தில் பாலா, போலி பாலா அதற்கு என் பீலான்னு 29 ஆகிடும். மொத்தத்தில் சொசெசூ இன்னொருமுறை!

துளசி அக்கா:
நம்மாழ்வாரை நொந்துக்கமுடியுமா? நம்ம தல ஆழ்வாரா நடிச்சதை நொந்துக்கலாம். டீச்சரால் விதியை மீறமுடியுமா? விதியை வேணும்னா நொந்துக்கலாம்.

விடாதுகருப்பு:
ராம்தாஸ் ஐயர் 10 ரா. ஐயங்கார் 10 மிச்ச பத்தை டிரேட்மார்க்கான பன்னாடை பட்டாடைன்னு பட்டாசா முப்பதாக்கி உயர் எல்லையைத் தொடவேண்டியதுதான்.

நுனிப்புல் உஷர்:
எனது எழுத்துக்கள் மேம்பட்டு புக்கர், புலிட்சர் விருதுகளை நோக்கி புலிப்பாய்ச்சல் போட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் முப்பதே பின்னூட்டத்தில் வரும் விமர்சனங்கள் கொண்டு நுனிப்புல்லாகவே எனது எழுத்தைச் செறிவாக்கவேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.

கால்கரி சிவா:
கொத்துப்பரோட்டா பதிவைப் போட்டு பதிவுலகைப் புரட்டிப்போட்ட கொத்ஸையே புரட்டிப்போட்டிருக்கிறது தமிழ்மண பின்னூட்ட உயர் எல்லை 30 விதி. சைட்டிஷ் சால்னாவும், ஜில்ஜில் ஜிகர்தண்டா பதிவுக்கும் 30தான் பின்னூட்ட உயர் எல்லை என்பது சரியா?

ஜி.கௌதம்:
தமிழ்மணத்தில் இந்த தடாலடி அறிவிப்பு என்னை இனி தடாலடிப் போட்டிகளை அறிவிக்கமாட்டேன் என தடாலடியாக அறிவிக்க வைக்கிறது.

தமிழன்:
பதிவுத் தமிழ் வளர இருந்த ஒரு வழியை தமிழனே அடைத்துக்கொண்டமாதிரி உணர்கிறேன்.

கல்வெட்டு:
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய தமிழ்மண பிரகடனமாக இதைக்காண்கிறேன்.

சர்வேசன்:
இன்னும் ஒரு சர்வேக்கு மேட்டர் தந்த தமிழ்மணத்திற்கு நன்றி!

பொன்ஸ்:
இந்த 30 பின்னூட்டம் தான் உயரெல்லை என்பது யானைக்கு சோளப்பொரி மாதிரி!

தருமி:
விளிம்புநிலை மதநம்பிக்கைகளே உயர் எல்லையாகக் கொண்டிருந்தாலும் சில நேரம் சங்கடங்களை அது தருவதுமாதிரி பின்னூட்ட உயர் எல்லை 30 என்கிற விளிம்புநிலையால் நல்ல கருத்தை தமிழ்மண முகப்பில் காட்டாத சங்கடங்கள் நேரும். Anyway Let us agree to agree with Thamizmanam.

அரைபிளேடு:
தமிழ்மணத்தின் இந்த அறிவிப்பு அரைபிளேடின் பின்னூட்ட மகசூலில் முழுபிளேடு போட்டிருக்கிறது.

பின்னூட்டப்புகழ் பாலா:
தமிழ்மணம் அய்யா, இந்த அறிவிப்பு சரியா இல்லையான்னு எங்க புரட்சிகர இயக்கச் சிங்கங்களான அசுரன் மற்றும் ராஜாவனஜ் ஐயாக்கள் ரெண்டுபேரும் தான் பின்ணணியில் இருக்கும் எல்லா ஈய, இஸங்களை எடைக்கு எடை சீர்தூக்கிப் பார்த்து அறிவிக்க வேண்டும்.

இட்லிவடை:
முதல் முப்பது பின்னூட்டங்களுக்கு இட்லிவடை பக்கத்தில் ஒருமணிநேரம் விளம்பரம் இலவசம்!

அரவிந்தன் நீலகண்டன்:
தெருவில் ஸ்டாண்டு போட்டு சைக்கிள் ஓட்றவன் கூட சிதம்பரம் நடராஜர், தேவரம் மேட்டர்ல சவுண்டு தர்றவனெல்லாம் ஓடி ஒதுங்கி, பம்மிப் பதுங்குறமாதிரி சுவிட்ஸர்லாந்துல எலக்டிரான் துகள் சைக்ளோட்டிரான் அணுவிசையகத்தில் நடராஜர் சிலை நிறுவியதைச் சொல்லி மகாசிவராத்திரி வாழ்த்துக்கள் என்று ஹைடெக் மிதாலஜி+காஸ்மாலஜி பதிவு போட்டா அனானிங்க என்ன கஸ்மாலம் கிர்ர்ர்ரடிக்குதுன்னு கும்மியடிக்காம ஓடிடுவாங்க. காஸ்மாலஜி+மிதாலஜிக்கு பின்னூட்டம் 30 என்பது உயர் எல்லைதான்!

லக்கிலுக்:
சுயமாய் உருவெடுத்த வலைப்பூ சுனாமியையே உள் இழுக்கும் வலிவுள்ள தமிழ்மணத்தின் சுனாமி அறிவிப்பு இது!

கவிதா+ராகிகஞ்சி+அணில்குட்டி:
சிம்பிளா ராகிகஞ்சி பதிவுகள் போட்டாச் சிரமம், சோதனை இல்லை. மிருகங்கள்ன்னு இனி ஹெவியா தலைப்பு வைக்கிறதை யோசிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

பத்ரி:
வலைப்பூ பதிவுகளின் மீது திணிக்கப்பட்ட வெகுஜன அச்சு ஊடகங்களை ஒத்த ஊடக வன்முறையின் தழுவலோ இல்லை இளவலோ என எண்ணவேண்டியிருக்கிறது.

என்றென்றும் அன்புடன் பாலா:
எனது உயிர் வாழ உதவி வேண்டி தொடர் பதிவுகளுக்கு சிறப்புச்சலுகை தரும்படி தமிழ்மணத்தை வேண்டுகிறேன்

படிச்சுட்டு உங்க கருத்தையும் சொல்லிட்டுப்போங்க.

அன்புடன்,

ஹரிஹரன்

23 comments:

சென்ஷி said...

//டோண்டு: (கொட்டும்மழைக்காலம் உப்பு விற்கப்போனேன் ஸ்டைலில்)

பின்னூட்ட காற்றடிக்கும் கால்ம் அனானி/அதர் ஆப்ஷன் மூடிவச்சேன்
தமிழ்மணரூல்ஸ் கொட்டும் காலம் அனானி/அதர் ஆப்ஷன் திறந்து வச்சேன்..//

செம்ம காமெடி ஹரி...

கூடவே பாலபாரதி பத்தின கமெண்டும் சூப்பர்

சென்ஷி

Hariharan # 26491540 said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சுது சாமீ...!! எப்படி இப்படி ? நுணுக்கமாக எல்லாரையும் கவனிச்சு பிச்சு உதறிட்டீங்க...எல்லாமே அல்டிமேட்.....அருமையான நகைச்சுவை விருந்து...!!!:)))))))))))))))Ravindran A,

LGSI Performance Team,

பொன்ஸ்~~Poorna said...

:))))))))))))))) எல்லாத்துக்கும்.. இது இது நல்லா இருக்குன்னு பிரிச்சி சொல்ல முடியாதபடி.. எல்லாமே நல்லா இருக்கு:)

ஹரிஹரன் ரியாக்ஷன் என்ன? காணோமே?

அப்புறம், பத்ரி புகழ் ஊடக வன்முறையைக் குழலிக்குப் பயன்படுத்தியது அவ்வளவா எடுபடலை :)

கோவி.கண்ணன் said...

//Hariharan # 26491540 said...
டெஸ்ட் மெசேஜ்!
//

டெஸ்ட் மெசேஜ் - ஒரு பின்னூட்டம் 30ல் ஒன்றை விழுங்கிவிட்டது !
:)

ஜொள்ளுப்பாண்டி said...

ஹரிஹரன் என்ன பிச்சு உதறீட்டீங்க?? சுப்பர் காமெடி போங்க :)))))))))) எப்படீங்க எல்லாரையும் இவ்ளோ உன்னிப்பா கவனிச்சு இருக்கீங்க ?? :)))))) நல்லா சிரிச்சேன் !! :)))))

வடுவூர் குமார் said...

ரசித்து,சிரித்து மகிழ்ந்தேன்.
பல அவரவர் பாணியிலேயே இருக்கு.

இலவசக்கொத்தனார் said...

:))

SP.VR.சுப்பையா said...

//வகுப்பறை S.V சுப்பையா வாத்தியார் :
எனது சோதிட அறிவியல் பதிவுகள் தொடர் படித்தால் பதிவர்களால் இந்த இக்கட்டினை எதிர்கொள்ள உதவும்.
பிரதமை முதல் பௌர்ணமி வரையிலான வளர்பிறை 15 என்பது முதல் பாதி முப்பது பின்னூட்ட வரவு என்றும், அடுத்த பிரதமை முதல் அமாவசை வரையிலான தேய்பிறை 15 என்கிற இரண்டாம் பாதி முப்பது பின்னூட்டங்கள் பி;கயமை+வரவேற்பு உபசரிப்பு என எண்ணி எதிர்கொண்டால் தற்போதைய தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை30 எனும் சோதனைக்காலத்தின் இக்கட்டிலிருந்து சோதிடத்தின் உதவியால் தப்பலாம்.///

தப்பிக்கலாம் என்பதெல்லாம் கனவு!

வள்ளுவர் சொன்னதுதான் நடக்கும்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி பதித்தார்க்கும்
பின்னுட்டம் வருதல் அரிது!
-வகுப்பறை வாத்தியார்

enRenRum-anbudan.BALA said...

Hari,
You have superb observation. Really enjoyed the satire, including the one about me :)))

முத்துகுமரன் said...

ஹரி ரெம்ப ரசிச்சு படிச்சு சிரிச்சேன். அதனாலாதான் ஒரு நாலு மணி நேரமா பின்னூட்டம் போடாமா பதிவை தொல்லை பண்ணாம இருந்தேன் :-)))

நன்றாக நண்பர்களை உள்வாங்கியிருக்கிறீர்கள்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

:-))))))))))))))

Hariharan # 26491540 said...

சென்ஷி said...
//டோண்டு: (கொட்டும்மழைக்காலம் உப்பு விற்கப்போனேன் ஸ்டைலில்)

பின்னூட்ட காற்றடிக்கும் கால்ம் அனானி/அதர் ஆப்ஷன் மூடிவச்சேன்
தமிழ்மணரூல்ஸ் கொட்டும் காலம் அனானி/அதர் ஆப்ஷன் திறந்து வச்சேன்..//

செம்ம காமெடி ஹரி...

கூடவே பாலபாரதி பத்தின கமெண்டும் சூப்பர்

வாங்க சென்ஷி,
நல்லா இருந்ததுங்களா.. சந்தோஷம்.

டோண்டுவை கலாயாமல் இருக்கமுடியுமா?

பாகசன்னு அமைப்பு வைத்து கலாய்க்கப்படுபவராச்சே பாலபாரதி!
----------------------------------

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சுது சாமீ...!! எப்படி இப்படி ? நுணுக்கமாக எல்லாரையும் கவனிச்சு பிச்சு உதறிட்டீங்க...எல்லாமே அல்டிமேட்.....அருமையான நகைச்சுவை விருந்து...!!!:)))))))))))))))வாங்க செந்தழல் ரவி,

ஜெலுசில் வேற வாங்கவச்சிட்டேனா?

பலமாகச் சிரித்துப் பாராட்டியதற்கு நன்றிகள்!
--------------------------------

Wednesday, February 28, 2007 11:03:00 AM
பொன்ஸ் said...
:))))))))))))))) எல்லாத்துக்கும்.. இது இது நல்லா இருக்குன்னு பிரிச்சி சொல்ல முடியாதபடி.. எல்லாமே நல்லா இருக்கு:)

ஹரிஹரன் ரியாக்ஷன் என்ன? காணோமே?

அப்புறம், பத்ரி புகழ் ஊடக வன்முறையைக் குழலிக்குப் பயன்படுத்தியது அவ்வளவா எடுபடலை :)

வாங்க பொன்ஸ்,

குழலின்றதை பத்ரின்னு மாத்திட்டேன். பெனாத்தலாரோட கோன் பனேகா க்ரோர்பதி ஸ்டைல் ப்ளாஷில் பதில் குழலின்னு வந்ததை ரெபரென்ஸாக வைத்து குழலின்னு போட்டேன்.

பெரிதாகச் சிரித்து, பாராட்டியதற்கு நன்றிகள்.

சிங்கிள் டிஜிட் பின்னூட்டம் வாங்குற சிங்கமான ஹரிஹரனின் கருத்து அவ்வளவு முக்கியமா? இங்கு:-))
---------------------------------

Wednesday, February 28, 2007 11:06:00 AM
கோவி.கண்ணன் said...
//Hariharan # 26491540 said...
டெஸ்ட் மெசேஜ்!
//

டெஸ்ட் மெசேஜ் - ஒரு பின்னூட்டம் 30ல் ஒன்றை விழுங்கிவிட்டது !
:)

வாங்க கோவியாரே,

டெஸ்ட் மெசேஜை டெலீட் செஞ்சுட்டோம்ல :-))
-----------------------------------

Wednesday, February 28, 2007 11:10:00 AM
ஜொள்ளுப்பாண்டி said...
ஹரிஹரன் என்ன பிச்சு உதறீட்டீங்க?? சுப்பர் காமெடி போங்க :)))))))))) எப்படீங்க எல்லாரையும் இவ்ளோ உன்னிப்பா கவனிச்சு இருக்கீங்க ?? :)))))) நல்லா சிரிச்சேன் !! :)))))

வாங்க ஜொள்ஸ்,

நீங்க எல்லாம் பின்னிப் பெடல் எடுக்குறதால வந்த உதறல்ல பின்னிட்டேனோ?:-))

உன்னிப்பாக கவனிக்கிறது நம்ம பழைய பொழுதுபோக்கு:-))

நல்லா சிரிச்சீங்களா நன்றி!
-----------------------------------
Wednesday, February 28, 2007 12:01:00 PM
வடுவூர் குமார் said...
ரசித்து,சிரித்து மகிழ்ந்தேன்.
பல அவரவர் பாணியிலேயே இருக்கு.

வாங்க குமார்,

கலாயணும்னா அவங்கமாதிரியே இருந்து கலாய்ந்தா அது தனி தானே
:-)

ரசித்துச் சிரித்ததற்கு நன்றி!
---------------------------------
Wednesday, February 28, 2007 12:31:00 PM
இலவசக்கொத்தனார் said...
:))

கொத்ஸ் இப்படி அநியாயமாகச் சிக்கனமாகச் சிரிச்சா எப்படி?:-)))
----------------------------------
Wednesday, February 28, 2007 12:52:00 PM
SP.VR.சுப்பையா said...
//வகுப்பறை S.V சுப்பையா வாத்தியார் :
எனது சோதிட அறிவியல் பதிவுகள் தொடர் படித்தால் பதிவர்களால் இந்த இக்கட்டினை எதிர்கொள்ள உதவும்.
பிரதமை முதல் பௌர்ணமி வரையிலான வளர்பிறை 15 என்பது முதல் பாதி முப்பது பின்னூட்ட வரவு என்றும், அடுத்த பிரதமை முதல் அமாவசை வரையிலான தேய்பிறை 15 என்கிற இரண்டாம் பாதி முப்பது பின்னூட்டங்கள் பி;கயமை+வரவேற்பு உபசரிப்பு என எண்ணி எதிர்கொண்டால் தற்போதைய தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை30 எனும் சோதனைக்காலத்தின் இக்கட்டிலிருந்து சோதிடத்தின் உதவியால் தப்பலாம்.///

தப்பிக்கலாம் என்பதெல்லாம் கனவு!

வள்ளுவர் சொன்னதுதான் நடக்கும்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி பதித்தார்க்கும்
பின்னுட்டம் வருதல் அரிது!
-வகுப்பறை வாத்தியார்

வாத்தியார் சார்,

பின்னூட்டம் வருதல் அரிது! அரிய உண்மை இது தான் சார்!:-(
--------------------------------

மிதக்கும் வெளி said...

/சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சுது சாமீ...!! எப்படி இப்படி ? நுணுக்கமாக எல்லாரையும் கவனிச்சு பிச்சு உதறிட்டீங்க...எல்லாமே அல்டிமேட்.....அருமையான நகைச்சுவை விருந்து...!!!
/

இதென்ன இந்தக் கமெண்ட் உங்கள் பெயரிலேயே வருகிறது. இன்னொரு முரளிமனோகர்? அதுசரி நானெல்லாம் ஆட்டத்தில் இல்லையா? பின்னூட்டம்பாலா அசுரன் மற்றும் ராஜ்வனஜை மட்டும் கலாய்த்திருப்பதை பாலாவதைச்சங்கத்தின் சார்பில் கண்டிக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

எத்தனையோ பேர் எத்தனையோ முறை எத்தனையோ பதிவர்களை கிண்டல் அடிச்சிருக்காங்க, ஏன், நானே செஞ்சிருக்கேன்.. ஆனா எங்கேயும் பினாத்தலாரைக் கிண்டலடிச்சு பாத்த ஞாபகமே இல்லை..

இந்தக்குறையை அழகாகத் தீர்த்ததற்கும், மொத்தமாக சிரிக்கவைத்ததற்கும் நன்றி ஹரிஹரன்.

30க்கு மேல் பெற்று மூலையில் வாழ வாழ்த்துகிறேன்:-))))))))))))))))

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப அருமையா இருந்துச்சுங்க...
அவங்கவங்க ஸ்டைலில் அழகா சொன்னீங்க போங்க.

வாழ்த்துக்கள். அதுசரி இப்ப உங்க 30 பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போரீங்க?

வரவனையான் said...

துளசி, விடாதுகருப்பு, லக்கி, பொன்ஸ், செந்தில் ரெஸ்பான்ஸ் அருமை

ஹஹஹா

பாலா வதை சங்கம் - சுகுணா அருமையான பெயர்

:))))))))))))))))))))))))))))))

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

ஆகா இங்க நம்ம பேரும் இருக்கா?
:-)))

சரி ஹரிஹரன் என்ன சொல்றாருன்னா...

ஹரிஹரன்:
சனாதன தரும இந்துமத வேத நெறியில் இருக்கும் சிறப்பே அதன் ஊடாக சிம்பாலிஸமாக வெளிப்படுத்தப்படும் சில வாழ்வியல் தத்துவங்கள்.சாத்வீக எண்ணங்களின் உந்துதலில் செய்யப்பட்டு இருக்கும் இந்த 30 என்ற கட்டுப்பாடு பெண் பதிவர்களுக்கு உடனடித் தேவையாக இருக்கிறதா என்றால் ஆம்.

மேலும் கட்டுப்பாடுகள் எப்போதும் பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதே சனாதன தரும இந்துமத வேத நெறியிலும் மற்ற எல்லா மதங்களிலும் இருக்கும் சிறப்பு.பெண் பதிவர்கள் 30க்கு மேல் பின்னூட்டம் வாங்கும்போது எல்லா பின்னூட்டங்களையும் சரிபார்த்து ஆண்கள் போல் பிரசுரிக்கமுடியாது.

துளசி கோபால் said...

வழக்கமான முதல் test பின்னூட்டம் போட்டுக்கலையா?
ஏன்? முப்பதுலெ ஒண்ணு போயிரும்ன்ற பயமா? :-))))

எல்லாமே சூப்பர்:-))))))

இலவசக்கொத்தனார் said...

//இலவசக்கொத்தனார் said...
:))

கொத்ஸ் இப்படி அநியாயமாகச் சிக்கனமாகச் சிரிச்சா எப்படி?:-)))//

சரி நல்லா சிரிக்கறேன்.

:))))))))))))))

போதுமா?

30 சிரிப்பான்களுக்கு மேல் வரக்கூடாதுன்னு ரூல்ஸ் வரப் போகுது பாத்து! ;)

Hariharan # 26491540 said...

enRenRum-anbudan.BALA said...
Hari,
You have superb observation. Really enjoyed the satire, including the one about me :)))

வாங்க எ.அ.பாலா,

வந்து படித்துப் பாராட்டிப் பின்னூட்டியதற்கு நன்றிகள்!
-------------------------------

Wednesday, February 28, 2007 2:21:00 PM
முத்துகுமரன் said...
ஹரி ரெம்ப ரசிச்சு படிச்சு சிரிச்சேன். அதனாலாதான் ஒரு நாலு மணி நேரமா பின்னூட்டம் போடாமா பதிவை தொல்லை பண்ணாம இருந்தேன் :-)))

நன்றாக நண்பர்களை உள்வாங்கியிருக்கிறீர்கள்.

வாங்க முத்துக்குமரன்,

வந்து ரசித்துப்படித்து பாராட்டியதற்கு நன்றிகள்.

நண்பர்களை உள்வாங்கி உள்குத்துடன்
வாரியிருக்கிறேனா?:-))
------------------------------
Wednesday, February 28, 2007 2:29:00 PM
♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
:-))))))))))))))

வாங்க பாலபாரதி,
வருகைக்கும் பெரிய்ய சிரிப்புக்கும் நன்றிகள்.
--------------------------------
மிதக்கும் வெளி said...
/சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சுது சாமீ...!! எப்படி இப்படி ? நுணுக்கமாக எல்லாரையும் கவனிச்சு பிச்சு உதறிட்டீங்க...எல்லாமே அல்டிமேட்.....அருமையான நகைச்சுவை விருந்து...!!!
/

இதென்ன இந்தக் கமெண்ட் உங்கள் பெயரிலேயே வருகிறது. இன்னொரு முரளிமனோகர்? அதுசரி நானெல்லாம் ஆட்டத்தில் இல்லையா? பின்னூட்டம்பாலா அசுரன் மற்றும் ராஜ்வனஜை மட்டும் கலாய்த்திருப்பதை பாலாவதைச்சங்கத்தின் சார்பில் கண்டிக்கிறேன்.

வாங்க திவாகர்,

அது செந்தழல் ரவி தனிமடலில் அனுப்பி பின்னூட்டமாக வெளியிடச்சொன்னார். அதான்.

பதிவின் நீளம் கருதி நிறையப் பேரை ஆட்டையில் சேர்க்க முடியவில்லை.
அதான் உங்க சார்பா வரவணை செந்தில் இருக்காரே.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
--------------------------------

Wednesday, February 28, 2007 4:23:00 PM
பினாத்தல் சுரேஷ் said...
எத்தனையோ பேர் எத்தனையோ முறை எத்தனையோ பதிவர்களை கிண்டல் அடிச்சிருக்காங்க, ஏன், நானே செஞ்சிருக்கேன்.. ஆனா எங்கேயும் பினாத்தலாரைக் கிண்டலடிச்சு பாத்த ஞாபகமே இல்லை..

இந்தக்குறையை அழகாகத் தீர்த்ததற்கும், மொத்தமாக சிரிக்கவைத்ததற்கும் நன்றி ஹரிஹரன்.

30க்கு மேல் பெற்று மூலையில் வாழ வாழ்த்துகிறேன்:-))))))))))))))))

வாங்க பெனாத்தல் சுரேஷ்,

பெனாத்தலாரைக் கலாய்க்காத குறை இனியும் தொடரலாமா? அதான்.

இன்னும் 30ஐ எட்டி மூப்படைந்து மூலையில் பதிவு அமராது இளமையோடு வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது:-))

வருகைகும், பாராட்டுக்கும் நன்றி!
--------------------------------
Wednesday, February 28, 2007 5:24:00 PM
சிறில் அலெக்ஸ் said...
ரெம்ப அருமையா இருந்துச்சுங்க...
அவங்கவங்க ஸ்டைலில் அழகா சொன்னீங்க போங்க.

வாழ்த்துக்கள். அதுசரி இப்ப உங்க 30 பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போரீங்க?

வாங்க சிறில்,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

முப்பதுக்குக் கீழே பின்னூட்டம் வாங்குவது எனது வரலாறு எனவே தற்போது இது ஒரு பிரச்சினையாக இல்லை எனக்கு:-))

அரவிந்தன் நீலகண்டன் said...

பார்ப்பன சதியை எப்படி விட்டீங்க நீங்க. தமிழ்மணத்தில் ஊடுருவிய ஆரிய வந்தேறி பார்ப்பன பாசிச இந்துத்வ வலதுசாரி நாசி வெறியர்களின் இரத்தவெறி பின்னூட்ட வாழ்க்கையிலும் கைவைத்துவிட்டது அப்படீங்கறதை கெட்டவார்த்தை சேர்த்து ஒரு பதிவு "வுடாது வெறிப்பு" கிட்ட இருந்து வரணுமே. மிஸ் பண்ணீட்டிங்க. இல்லை பார்ப்ப்ன சதியா :)

Hariharan # 26491540 said...

வரவனையான் said...
துளசி, விடாதுகருப்பு, லக்கி, பொன்ஸ், செந்தில் ரெஸ்பான்ஸ் அருமை

ஹஹஹா

பாலா வதை சங்கம் - சுகுணா அருமையான பெயர்

:))))))))))))))))))))))))))))))

வாங்க வரவனை செந்தில்,

வந்து படித்து ரசித்துப் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றிகள்.
---------------------------------

Thursday, March 01, 2007 8:59:00 AM
கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
ஆகா இங்க நம்ம பேரும் இருக்கா?
:-)))

சரி ஹரிஹரன் என்ன சொல்றாருன்னா...

ஹரிஹரன்:
சனாதன தரும இந்துமத வேத நெறியில் இருக்கும் சிறப்பே அதன் ஊடாக சிம்பாலிஸமாக வெளிப்படுத்தப்படும் சில வாழ்வியல் தத்துவங்கள்.சாத்வீக எண்ணங்களின் உந்துதலில் செய்யப்பட்டு இருக்கும் இந்த 30 என்ற கட்டுப்பாடு பெண் பதிவர்களுக்கு உடனடித் தேவையாக இருக்கிறதா என்றால் ஆம்.

மேலும் கட்டுப்பாடுகள் எப்போதும் பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதே சனாதன தரும இந்துமத வேத நெறியிலும் மற்ற எல்லா மதங்களிலும் இருக்கும் சிறப்பு.பெண் பதிவர்கள் 30க்கு மேல் பின்னூட்டம் வாங்கும்போது எல்லா பின்னூட்டங்களையும் சரிபார்த்து ஆண்கள் போல் பிரசுரிக்கமுடியாது.

வாங்க கல்வெட்டு சார்,

வந்ததற்கும் பின்னூட்டத்தில் நான் ஈயமா/பித்தளையான்னு என்னைக் கலாய்ந்ததற்கும் மிக்க நன்றி :-))
-----------------------------------
Thursday, March 01, 2007 9:13:00 AM
துளசி கோபால் said...
வழக்கமான முதல் test பின்னூட்டம் போட்டுக்கலையா?
ஏன்? முப்பதுலெ ஒண்ணு போயிரும்ன்ற பயமா? :-))))

எல்லாமே சூப்பர்:-))))))

துளசியக்கா,

டெஸ்ட் மெசேஜ் முதல்ல போட்டு அப்புறம் தூக்கிட்டேன். பயம் இல்லை வர்றதே பத்து பின்னூட்டம்தானே நமக்கு :-))

என்னோட டெஸ்ட் மெசேஜை விட நல்ல மெசேஜுடன் பின்னூட்டம் வந்தால் மூலைக்குப் போகாமல் முகப்பில் இருக்க ரூம் இருக்கட்டுமே :-))

வந்து பாராட்டினதுக்கு நன்றி அக்கா.
---------------------------------

சேதுக்கரசி said...

என் பங்குக்கு நானும் ஒரு :-) ஸ்மைலி போட்டுடறேன். நல்லா இருந்துது. (சரி, 30 ஆச்சுங்களா? ;-))