Sunday, July 27, 2008

(191) பகுத்தறிவு தமிழகத்தில் இடஒதுக்கீடு தந்த பலன்

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டினால் பகுத்தறிவு வற்றாது ஓடும் சமூகநீதியை அரசியல் திராவிட பெத்தடின் கொள்கைக் கட்சிகளின் ஆட்சிகள் நிலை நாட்டிவிட்டதாக புருடா விடப்படுவது அறிந்ததே.

சில நாட்கள் சமீபத்தில் சக பதிவர் தனது பதிவில் மருத்துவக் கல்லூரி இடங்களில் முதல் 300மதிப்பெண்களால் தமிழ்நாட்டில் இருக்கும் 69% இடஒதுகீட்டினால் மட்டுமே சமூக நீதி நிலை நாட்டப்பட்டு விட்டு இந்தியாவுக்கே முன்மாதிரியாகைவிட்டதாகச் சொல்லியிருந்தார்.

நான் பின்னூட்டமாக அந்தப்பதிவில், "மருத்துவக்கல்லூரி சேர்க்கை லிஸ்ட்டில் தெரிவிக்கப்படும் ஜாதியை மட்டும் வைத்து சமூகநீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது" உண்மையில் ஜாதிச் சான்றிதழ் சார்ந்த இட ஒதுக்கீட்டு வெற்றி என்பது பம்மாத்து என்பதாக கருத்து தெரிவித்திருந்தேன்


கல்வி, அரசு வேலைக்கான ஜாதிச் சான்றிதழ் விற்பனைத் திருவிழா கொண்டாட்டம் ஆண்டுதோறும் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்பு ஆரம்பமாகும் ஜூன் மாதத்தில் உச்சத்தில் இருக்கும்.


நிதர்சனத்தில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு பாயும் தமிழகத்தினை பகுத்தறிவற்று வேத ஆகமப்படி பரந்த கோவில்கள் கட்டி அரசாண்ட சோழர் / பல்லவர்-பாண்டியர் வழித்தோன்றலாகவும் இருந்துகொண்டே பிற்படுத்தப்பட்டவராக, தமிழக அரசியல் களத்தில் முனைப்பில் இருந்து, கடின உழைப்பால் நூறாண்டுகள் நின்ற மரங்களை வெட்டி சாலையெங்கும் வீழ்த்தி சுயமாக மிகவும் பிற்படுத்திக்கொண்டுவிட்ட சமூகமாக இருந்துகொண்டே ஆதி திராவிடரை / பழங்குடியினரை வெறுத்தாலும் ...

தமிழகத்தில் ஆட்சி செய்யும் / அதிகாரத்தில் இருக்கும் பகுத்தறிவு பெத்தடின் ஏற்றும் அரசியல் திராவிட கழக உறுப்பினர் அட்டை இருந்தால் தமிழ்நாட்டில் 69% சமூகநீதி நிலவிடச் செய்யும் "இட ஒதுக்கீட்டு ஜாதிச் சான்றிதழ் ஏஜெண்ட்" ஆவது எளிது.

தமிழகத்தில் 2008-09 ஆண்டு 70,000 பொறியியல் கல்வி இடங்கள் அரசு கோட்டாவில் இருக்கிறது. அரசு தனியாருக்கு ஏற்படுத்தித் தந்திருக்கும் கல்விச் சந்தையில் 50%மானேஜ்மெண்ட் கோட்டா 70,000 இடங்கள் இருக்கின்றது.

இந்த 70-85,000இடங்களுக்கான டொனேஷன் தொகை என்பது தமிழக்த்திலே ஜாதியை அறவே ஒழித்துவிட்டு, சமூகநீதிப்படி பகுத்தறிவோடு இயங்கும் அரசியல் திரா"விட" பெத்தடின் அரசு ஆசிர்வாதத்தில் ஓப்பன் கேட்டகிரிக்கு 5-9லட்சம் , பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 3-5 லட்சம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (இந்நாள் அரசியல்வாதிகள்/முன்னாள் அரச வம்சத்தினர்)2-3 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இடஒதுக்கீட்டு சான்றிதழ் ஏஜண்ட்டுக்குத் தரவேண்டியது ரூ. 5000/- கல்லூரி கேபிடேஷன் தொகை ரூ இரண்டு முதல் நாலு லட்சம் வரை சேமிப்பு!

எனவே சாதியை முற்றிலும் ஒழித்துவிட்ட புரட்(டு)சி /வீரபூமியான தமிழகத்தில் இட ஒதுக்கீடு தேவையுள்ள அனைவரும் இந்த இடஒதுக்கீட்டு சான்றிதழ் விற்பனையைப் பயன்படுத்தி கல்வியில் மேம்படவும்.


பகுத்தறிவு தமிழகத்தில் இட ஒதுக்கீடு தரும் பலன்

`சாதிகள் இல்லையடி பாப்பா!' என்று பாடிய சுப்பிரமணிய பாரதிக்கு சாதிச் சான்றிதழ்! அதுவும் பிற்படுத்தப்பட்டவர் என்று!

என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப்படவோ அதிசயிக்கவோ இதில் எதுவுமே இல்லை... உங்களிடம் காசிருந்தால் போதும் நீங்கள் விரும்பும் ஜாதியில் உங்களுக்கான இடம் ஒதுக்கப்படும். அவ்வளவு ஏன்? உங்களுக்குப் பிறக்காத குழந்தை முதல் மூன்று தலைமுறைக்கு முன் மறைந்த உங்கள் மூதாதையர் வரை யாருக்கு வேண்டுமானாலும் எந்த சாதியிலும் நீங்கள் இடஒதுக்கீடு பெறலாம்.

அப்படித்தான் பாரதியாருக்கும் வகுப்பு மாறி இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி மறைந்து எண்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு, `புதுப்பேட்டையில் இருக்கிறார். அவருக்கு ஜாதி கிடையாது. ஆனால் சான்றிதழ் வேண்டும்!' என்று நாம் கேட்ட இரண்டாவது நாளே நாடார் சமூகத்தில் அவரைச் சேர்த்து நம்மை பிரமிக்க வைத்துவிட்டனர்!

நிஜமான தகவல்களைச் சொல்லி, நியாயமான சான்றிதழைக் கேட்டால் பெறுபவரை நேரில் வரச்சொல்லி, பிறப்புச் சான்றிதழில் என்ன ஜாதி? பள்ளிக்கூட சான்றிதழில் என்ன ஜாதி? விலாசத்தை உறுதிப்படுத்த, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் நகல் என பலவற்றைக் கேட்டு பாடாய்ப்படுத்தும் அதிகாரிகள், இடைத்தரகர்களிடம் மட்டும் எதுவுமே கேட்காமல் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுவதன் காரணம்தான் நமக்குப் புரியவில்லை.

பாரதியார் பெயரில் இந்த கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்க நாமும் பெரிதாக ஒன்றும் சிரமப்படவில்லை.சில ஆயிரங்களை இடைத்தரகரிடம்இழந்தோம். அவ்வளவுதான். கொஞ்சம் சிரமப்பட்டது பொருத்தமான புரோக்கரை கண்டுபிடிக்க மட்டும்தான்.

அதற்காக, அந்த அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் நம் விசாரணையைத் தொடங்கி அலைந்து கொண்டிருந்ததை அவர்களும் கண்காணித்திருக்க வேண்டும். கொஞ்சம் சோர்ந்து ஒரு மரநிழலில் சற்று ஒதுங்கிய நேரத்தில் கரெக்டாக வந்தார் ஆஜானுபாகுவான அந்த ஆள்.

``சாருக்கென்ன, சாதி சர்டிஃபிகேட் வேணுமா?'' என்று சம்மன் இல்லாமல் அவர் ஆஜராக, அப்பொழுதே நம் முயற்சியில் பாதி முடிந்துவிட்ட மாதிரிதான்!

``எந்த புரூஃபும் இல்லாம `பி.சி.' சர்டிஃபிகேட் வேணும்னா சார்ஜ் ஜாஸ்தியாகும். நாளும் முன்ன பின்ன ஆகும்! சரின்னா ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் குடுங்க! வேலை முடிஞ்சதும் மீதி!'' என்று நேரிடையாகவே அவர் மேட்டருக்கு வர, நமக்கு கொஞ்சம் தயக்கம்தான்! ஆனாலும் காசைக் கொடுத்துட்டு, சான்றிதழுக்கான விவரங்களை ஒரு துண்டுக் காகிதத்தில். `சி. சுப்பிரமணிய பாரதி, தந்தை பெயர் சின்னசாமி என்று மட்டும் எழுதிக் கொடுத்தோம். நாம் என்ன எழுதினோம் என்பதைப் பற்றி அந்த புரோக்கர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

பிளாட்ஃபாரத்து பெட்டிக்கடையில் ஒரு ஃபார்ம் வாங்கினார். அதை நிரப்புவதற்கு ஒருவரிடம் கொடுத்தார். அழுக்கு மூட்டையாய் நின்ற மற்றொருவரிடம் கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் வாங்கினார். பின் நம்மைப் பார்த்து, ``ரெண்டு நாள் கழிச்சு வாங்க! எல்லாம் ரெடியா இருக்கும்!'' என்று சொன்னவர், அடுத்த நிமிஷம் எங்கே போனார்னே தெரியலை. அந்த புரோக்கரின் நேர்மையை உறுதிப்படுத்த இன்னும் சில புரோக்கர்களிடம் விசாரித்தோம். `பர்ஃபெக்ட் பார்ட்டி'ன்னு பலரும் சர்டிஃபிகேட் தந்தனர்.

ரெண்டு நாள் கழிச்சு சொன்னமாதிரி நாமும் அங்கே போக, வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் அதே ஆள் கையில் சர்டிஃபிகேட்டுடன் நின்றார். சர்டிஃபிகேட்டைப் பார்த்தால் சி.சுப்பிரமணியன் என்றிருந்தது. ```பாரதி,' எங்கய்யா?''ன்னு கேட்க, ``அதென்னங்க பெரிய விஷயம்!''னு போனவர் பத்தே நிமிடத்தில் சுப்பிரமணிய பாரதியின் பெயரில் பிற்படுத்தப்பட்டோருக்கான முறையான சான்றிதழுடன் வந்தார். அதைப் பார்த்ததும் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது சின்னச்சாமி என்ற தகப்பனார் பெயரை சின்னராஜ் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தது. அதையும் மாற்ற முடியுமா என புரோக்கரைத் தேடினோம். பார்ட்டி எஸ்கேப்.

புரோக்கருக்கு பாரதியைத் தெரியாமல் இருக்கலாம். கையெழுத்துப்போட்ட அதிகாரிக்குமா சந்தேகம் வந்திருக்காது! `இவர்கள் பாரதியை மறந்துவிட்டார்களா? அல்லது பணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்கள் நினைவில் இல்லையா?'

`இந்த அலுவலகத்தில் மட்டும்தான் இப்படி நடக்கிறதா? இல்லை எல்லா இடத்திலும் இதுதான் நிலைமையா?இதையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்ள மற்றொரு இடத்திற்குச் சென்றோம்...

பாரதி சினிமாவுக்குப் பாட்டெழுதியிருந்தால் ஒருவேளை இவர்களுக்கு நினைவிருந்திருக்கலாம். அதனால் இம்முறை ஒரு சினிமா பிரபலத்தின் பெயரில் சாதிச் சான்றிதழ் பெற்றுப் பார்ப்போம் என்று முடிவு செய்தோம்... ஸ்ரேயா, அசின் என்றால் நாற்பதைத் தாண்டிய புரோக்கர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பளிச்சென்று ஞாபகத்துக்கு வராது! அதனால் குஷ்பு பெயரைத் தேர்வு செய்தோம்...

இது இரண்டாவது அனுபவம் என்பதால் வேலை சுலபமாகவே இருந்தது. புரோக்கர் கேட்டதைவிட, `ஐநூறு ரூபாய் அதிகம் தருகிறோம்; அவசரம்!' என்று நாம் சொன்னதும் வேலைகள் விரைந்து நடந்தன. அந்த அவசரத்தில் குஷ்பு_சுந்தர் என நாம் எழுதிக் கொடுத்ததை எப்படிப் புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை. சுந்தரைத் தகப்பனார் என்று மாற்றிவிட்டனர். சாதியையும் அவர்கள் சவுகரியத்திற்கு மறவர் என முடிவு செய்து கொண்டனர்.

சாதியும், முறையும் எப்படி இருந்தால் என்ன, தவறு செய்கிறார்களா? இல்லையா? என்பதுதான் முக்கியம் என்று நாமும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் பேச்சுக்கு, ``இந்த சர்டிஃபிகேட் ஒரிஜினல்தானா?'' என்று கேட்டோம்.

``இது செல்லாத இடம் ஒன்று இந்தியாவில் இல்லை! என்னவொன்று இதனுடைய நகலை மட்டும் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவோம்!'' என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். இதைச் செய்ய தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஓர் அமைப்பாகவே செயல்படுகிறார்களாம்.

ஆக, பாரதியார் நாடார் ஆவதும்; குஷ்பு மறவர் ஆவதும் இவ்வளவு எளிது என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடெல்லாம் யாருக்காக? எதற்காக? எதுவாயினும், விற்கப்படுவது சான்றிதழ் அல்ல சமூக நீதி என்பதைப் புரிந்துகொண்டு, அதன் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் சரி!.


பி.குறிப்பு 1:
குஷ்பூவுக்கு கோவில் கட்டிய பகுத்தறிவு தமிழன் தான் மறத்தமிழனே என்பதை மீண்டும் ஒருமுறை குஷ்பூவுக்கு மறவர் ஜாதி சான்றிதழ் வழங்கி பறைசாற்றியிருக்கிறான் அந்த "இடஒதுக்கீட்டு ஜாதிச் சான்றிதழ் ஏஜெண்ட்"


பி.குறிப்பு 2:
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி, கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் அடிப்படையிலான மக்கள் தொகை 10 கோடிக்கும் மேல்??

பி.குறிப்பு 3:

இனி தமிழ்நாட்டுல போங்கடா புள்ளகுட்டிங்கள டிஸ்கவுண்டட் இடஒதுக்கீடு ஜாதிச்சான்றிதழ் வாங்கிட்டு படிக்க வைங்கடான்னு சொல்லிக்கலாம்!

பி.குறிப்பு 4:

மெய்யாகவே தம் வாழ்வில் மேம்பட வேண்டிய கல்வி வேலைவாய்ப்பு உதவி தேவைப்படும் அனைத்து பிரிவு தமிழகத்து மக்களுக்கும் கனிவான மொழியில் கழக அரசு பதில் சொல்லாமல் கனிமொழியை மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்திட அன்னை சோனியாவின் ஆமோதிக்கும் கனிமொழிக்காகவும், கடைக்கண்பார்வைக்காகவும் அலையும் ஐந்து முறை தமிழகத்து முதல்வரான 85 வயது இளைஞனை வாழ்த்தி கட் அவுட் வைத்து மூப்பெரும் விழா எடுத்து மகிழவேண்டியதுதான்!


அன்புடன்,

ஹரிஹரன்

Monday, April 14, 2008

(190) உலகத்தமிழர் வீடுகளெங்கும் ISO:9001 அங்கீகாரம் பெற்ற "ஸர்வதாரி" சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலகெங்கும் பல்வேறு தேசங்களில் வாழும் உலகத் தமிழர் அனைவருக்கும் "ஸர்வதாரி" சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பொதுவா தீபாவளிப் பண்டிகைக்குத்தான் "லேகியம்" என்பது அனைவரும் அறிந்தது. இந்த 2008ஆண்டு வரும் "ஸர்வதாரி" தமிழ்ப் புத்தாண்டுக்கு முதல்வர் கருணாநிதி அவர்கள் இனிமேல் ஜனவரியில்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்தது லேகியமாகியிருக்கிறது.

கழ(ல)கத்தின் நிரந்தர ஓட்டு வங்கியாகவும், கருணாநிதியின் கழகத்திற்குச் சிறப்பு நிதி வழங்கியாகவும் தொடர்ந்து இருந்து, கருணாநிதியான தன்னை ஐந்தாவது முறை தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் கிறிஸ்துவ சர்ச்களின் அமைப்புகளுக்கு கடமைப்பட்டவராக கருணாநிதி செயல்படுவதில் உலகில் தமிழர் மட்டுமல்ல வேறு எவர்க்கும் எந்த ஆட்சேபணையும் இருக்க வேண்டியதில்லை.

கிறித்துவ ஆண்டு ஜனவரியில் வருவதால் தமிழ்ப்புத்தாண்டும் ஜனவரியில்தான் வருவது ஏற்புடையதாக கிறித்துவ சர்ச்களுக்கு இருக்கலாம். கருணாநிதியும் கிறித்துவ சர்ச்களுடன் உடன்பட்டுப் போவதில் உலகத்தமிழர் மட்டுமல்ல வேறு எவர்க்கும் எந்த ஒரு ஆட்சேபணையும் இருக்க வேண்டியதில்லை.

கருணாநிதி என்று தனிமனிதனாய் இருந்து இப்படியெல்லாம் செயல்பட்டால். ஆனால் மதசார்பற்று, தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இன்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகச் செயல்படுவேன் என்று முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கருணாநிதி இவ்விதம் செயல்படுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்தாரா? என்று கிறித்துவத்தை கேள்விகேட்கும் மேற்கத்திய கிறித்துவர் இயக்கிய திரைப்படமான "தி டாவின்ஸி கோடு" திரைப்படத்திற்கு கருணாநிதி ஐந்தாம் முறை தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றதும் இந்திய அரசை முந்திக்கொண்டு தமிழ்நாட்டில் திரையிடத் தடை உத்தரவு பிறப்பித்த கருணாநிதியின் கிறித்துவ சர்ச்சுகளுக்கான செஞ்சோற்றுக்கடன் என்பது உலகத் தமிழர்களுக்கு ஒரு கண் திறப்பு சம்பவமே.

தேசமே தெய்வமாக வழிபடும் இராம பெருமானை எந்த எஞ்ஞினியரிங் காலேஜில் படித்து சேதுவை வடிவமைத்தார் என்று கேட்டு பகுத்தறிவையும் மதசார்பின்மையையும் கேட்போர் கிறு கிறுத்துபோகும் அளவுக்கு கிறித்துவ சர்ச்களுடைய கைப்பாவையாய் செயல்பட்டார் நம் முதல்வர் கருணாநிதி அவர்கள்!

தமிழகமெங்கும் அக்மார்க் தமிழ் ஆன்றோர்கள், தமிழ் முன்னோர்கள் ஆழ்வார்களாக, நாயன்மார்களாக வாழ்ந்து என்று தமிழர்களது பாரம்பரியமாக பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக வழிபட்ட தமிழகத்தின் புராதான பண்டைய இந்துக் கோவில்களில் அனைத்திலும் இந்த 2008ம் ஆண்டு "ஸர்வதாரி" சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு எந்த சிறப்பு நிகழ்வும் நடத்தக்கூடாது என்று கிறித்துவ சர்ச்களின் நிதிக்காகவும் கிறித்துவ ஓட்டுக்காகவும் மட்டும் நமது முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்து கொண்டு வாய்மொழியாக உத்தரவு போடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்களில் கடைந்தேறிய அயோக்கியத்தனமாக உலகத்தமிழர்கள் உணர்கிறார்கள்.


அடுத்த சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டுக்கு மத சார்பற்ற தமிழக முதல்வர் பகுத்தறிவு மிகு திரு.கருணாநிதி அவர்கள் கிறித்துவ சர்ச்களின், இத்தாலிய அம்மையாரின் ஆசைக்கு இணங்கி தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்து ஆலயங்களில் இனி மூலவர் / உற்சவராக சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் மட்டுமே தமிழ்க்கடவுளாக ஏற்கப்படுவார் என்று அறிவித்தாலும் அதிர்ச்சி அதிகம் இருக்காது வாழைமட்டையாகிவிட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே!

எதிர்காலத்தில் வரும் 2009 சித்திரையில் வரும் தமிழ்ப் புத்தாண்டு "விரோதி" ஆண்டு என்பது கருணாநிதியின் கூமுட்டைத்தனமான செயல்பாடுகளால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் அவருக்குமான உறவைச் சொல்வதாக அமைந்துவிடும்.


சூடா இருந்தாத்தான் சூரியன்! சித்திரை ஒண்ணாம் தேதின்னாதான் தமிழ்ப்புத்தாண்டு!


அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, February 28, 2008

(189) சுஜாதா எனும் வரலாற்று மைல்கல்!

சுஜாதா காலமானார் என்ற செய்தி அறிந்தவுடன் என் மனம் கனத்து வெறுமையானது.

சுஜாதாவின் பாசாங்கு குறைவான சாமானியனுக்குப் புரிகிற மாதிரியான நாடகத்தனம் இல்லாத அவரது தமிழ் எழுத்து அவருடன் வாசகனுக்கு ஒரு நெருங்கிய மானசீகமான நட்பை, உறவை, இணைப்பை ஏற்படுத்துகிறது.

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் போன்ற அனுபவப்பகிர்வு எழுத்து அவரை ஓரளவுக்கு ஒவ்வொரு வாசகனும் தனிப்பட்டு அறிந்து கொண்ட நிறைவைத் தந்த உபயோகமான வழிகாட்டுதல் எழுத்து.

சுஜாதாவின் எழுத்து இரண்டு தலைமுறையையும் தாண்டி எளிமையான வெகுஜன சாமனியர்களை விரைந்து கவர்ந்திழுத்தது.

பெரும்பாலும் பொறியியல் படிப்பு, பெரிய நிறுவனத்தில் நல்ல உயர்ந்த வேலை என்று வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் முழுமையான தமிழில் எழுதுவது, பேசுவதை தவிர்க்கும் நமது சமூகத்தில் பொறியாளர்,விஞ்ஞானி, பெரிய நிறுவனத்தின் டைரக்டர் என்று வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றும் எளிமையாக தமிழில் அளவளாவி, தன் தமிழ் எழுத்துக்களால் வெகுஜனத்தைக் கட்டிப்போட்ட திரு. சுஜாதாவின் மீதான மரியாதை பன்மடங்கு அதிகரிக்கிறது.

2000-ல் இங்கே குவைத்தில் "தமிழ் பொறியாளர்கள் அமைப்பு"(Tamil Engineers Forum-TEF) துவக்க விழாவில் கலந்து கொண்டு தமிழ் பொறியாளர்கள் அமைப்பு விழாவில் தமிழில் பேசாவிட்டால் சாப்பாடு கிடைக்காது என்று மிக எளிமையாக பேச்சைத் துவங்கினார். விழா முடிந்து இரவு உணவின் போது கையில் உணவுத்தட்டை ஏந்தியபடி மிக சகஜமாக அளவளாவிய எளிமையை வெளிப்படுத்திய அனுபவத்தை நினைவு கூர்கிறேன்.


சுஜாதா அவரது அறிவியல், கணினி விஞ்ஞானம், கதை, கவிதை, கட்டுரை, சினிமா, பொது அறிவு என்று தமிழில் அவரால் எழுத முடிந்த அவரது பன்முகத் திறன் அவருக்கு வெகுஜன சாமானிய மக்களால் தனித்து தனக்கென்று சாம்ராஜ்ஜியம் அமைக்க முடிந்ததற்கு காரணம்.

சுஜாதாவின் எழுத்துக்கு இருந்த வரவேற்பை அவர் வீட்டு சலவைத்துணிக் கணக்கை வாராந்திர பத்திரிக்கை வெளியிட்டதில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்படித் தனக்கு இருந்த வெகுஜன ஆதரவை உணர்ந்து பொறுப்பாக அவரது தமிழ் எழுத்தில் கணிணி, அறிவியல் பதங்கள் என்று தமிழை செம்மொழி ஆக்கியதில் தனது பணியைச் செய்தவர்.

சுஜாதா மிக எளிமையாக்கிய திருக்குறளை படிக்கும் போது சுஜாதா பொறியாளராக, விஞ்ஞானியாக தமிழை மீட்டெடுத்து மீண்டும் வெகுஜன புழக்கத்தில் எடுத்துவருவதில் அவருக்கான பங்களிப்பை செவ்வனே செய்தவர்.

சுஜாதாவை பாகுபாடு இல்லாமல் வெகுஜனங்களைக் கவர்ந்த ஒரு நன்கு அறியப்பட்ட தமிழ் ஆசானாகவே உணர்கிறேன். பரந்துபட்டு தனக்குக்கிடைத்த வாழ்க்கையினை கட்டுரைகளாக்கிய அனுபவப்பகிர்வின் மூலம் வெகுஜனங்களுக்குக் கிடைத்த வழிகாட்டியாகவும் உணர்கிறேன்.

ஒரு தமிழ் ஆசானை, ஒரு வழிகாட்டியை இழந்த இரட்டை சோகம்!

சுஜாதா என்ற ஒரு தமிழ் எழுத்தாளன் தன் மறைவால் இத்தனைக்கு இழப்பாக உணரவைத்திருக்கிறான்!

சுஜாதா ஒரு வரலாற்று மைல்கல்.


வெறுமையை உணரும் சுஜாதாவின் வாசகனாக,

ஹரிஹரன்

Monday, February 11, 2008

(188) சுய பரிமாறல் பிணங்களினூடே நான்

சென்னை மாதிரி பெரு நகரமானாலும், கிராமமானாலும் மனித உடல் எரியூட்டப்படும் இடம் சுடுகாடு! பிணமாகிவிட்ட மனித உடல் சுடுகாட்டில் எரிக்கப்படுவது விறகினாலா அல்லது மின்சாராத்தாலா என்பது வேண்டுமானால் வேறுபடலாம். உடல் மனித மிருகத்தினுடையதாக இருப்பின்! சுடுகாட்டில் பிணத்தை எரியூட்டும் நபர் வெட்டியான்!

பிணம் எரிக்கப்படும் ஒரு சுடுகாட்டுக்கு வார இறுதியில் செல்லவேண்டும் என்று எந்த மனிதனும் விரும்புவதில்லை!

பிணம் எரிக்கப்படும் சுடுகாடுகளுக்கு நட்சத்திர அந்தஸ்து என்று தந்து மனிதன் வார இறுதி மற்றும் கொண்டாட்ட நாட்களைக் கொண்டாடுவதில்லை.

ஏனெனில் உயிரிழந்து பிணமான நிலையில் சுடுகாட்டுக்கு எடுத்து வரப்படுவது முற்றிலும் தன்னை ஒத்த உயிரினம் என்பதால்!

ஆனால் உயிருள்ள போது மனிதன் இதர பிராணிகளுக்குச் செய்யும் கொடுமைகளில் கொடூரமானது ஐந்து நட்சத்திர ஸ்டார் ஹோட்டல்கள் முதல் தட்டேந்தும் தள்ளுவண்டி உணவகம் வரை தினசரியாகக் காணப்படுவது!

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அலுவலக விஷயமாக சுயபரிமாறல் பஃபே லன்ச் ஆன் அல்லது டின்னர் என்றாலே பல்வேறு உயிரனங்கள் பிணங்களாக்கப்பட்டு பிணவாடை நிறைந்த அந்த நிகழ்வு என்னை வேறு தளத்தில் இட்டுச்செல்லும்.


தண்ணீரில் நீந்தும் மீனைப் பிணமாக்கிக் குடல்நீக்கிக் கொதிக்கும் எண்ணைய்ச் சட்டியில் போட்டு எடுத்து அடுக்கிவைக்கப்பட்டவை ஒருபுறம்!

ம்மே...ம்மே என்று நியுஸிலாந்தில் பிறந்து பாலைவன குவைத்துக்கு கப்பலில் பயணித்து பாலைவனத்தில் பட்டியில் அடைக்கப்பட்டு ஒரு நல்ல நாளில் "ஹலால்"முறைப்படி கொலை செய்யப்பட்டு Lamb Stewவாகி விட்ட ஆட்டுக்குட்டியை நிரப்பிய சுடுசட்டி இன்னொருபுறம்!

தான் வாழமுடிந்தவரையில் எந்த ஒரு சுடுசொல்லும் பேசியிருக்கமுடியாத வாயில்லா ஜீவனான காளையின் நாக்கு துண்டிக்கப்பட்டு Ox tongue என்று சிறப்பு உணவாக ஒருபுறம்!

மெக்கானிக்கல்,குவார்ட்ஸ், கடிகாரம் என்று காலம் உணர்திடும் கருவிகள் வருமுன்னே, இருள் கவிந்த அதிகாலையில் வெயில் கொண்டு விழும் நிழலால் காலம் உணர்த்திய ஆதவனைப்போல் மனிதனுக்கு அவனது பொக்கிஷமான காலம் தூக்கத்தில் விரயமாகாமல் பல்வேறு ஆக்கமான காரியங்களுக்கு உதவிட கொக்கரக்கோ என்று கூவியும்... தொடைதட்டி சவால் ஏதும் விடாமல் பக்..பக்..பக் என்றபடிக்கு இருந்த சேவக்கோழிகள் தொடையறுக்கப்பட்டு வறுக்கப்பட்ட Leg Pieces அடுக்கப்பட்ட தட்டு இன்னொருபுறம்.

ஆடு, மாடு, கோழி, மீன், நண்டு, இறால் இதர உயிரினங்களின் நெஞ்செலும்பு, மூளை, தலைக்கறி, ஆட்டுக்கால்சூப்பு, குடல்குழம்பு, ஈரல், இரத்தப்பொறியல்-ன்னு மனிதன் மிருகங்களைப் பிணமாக்கி, அதைத்துண்டுகளாக்கி அதை நீராவியில் வேகவைத்தும், நேரடியாக நெருப்பில் வாட்டியும், எண்ணையில் பொரித்தும் என்று செய்யும் வெகுபிஸியான ஹைடெக் வெட்டியான்!

வெந்த அரிசிக்குள்ளே புதைக்கப்பட்ட வேகவைத்த பிராணியின் பிணத்தை பிரியாணி என்று மென்று தின்று கொண்டாடுகிறான்!

கரி நெருப்பில் பாதி எரிக்கப்பட்ட பிணத்தை பார்பிக்யு என்று பாராட்டுகிறான்!

ஐந்து நட்சத்திர Buffet உணவகக் காட்சி என்னை எப்போதும் நிலைகுலைய வைக்கும்! சுய பரிமாறல் செய்யப்படும் பல்வேறு வகைப் பிணங்களினூடே, மீன், நண்டு, இறால், ஆட்டுக்குட்டி சதை, மாட்டிறைச்சி எனப் பலவாக அடிக்கும் பிணவாசனைக்கு மத்தியில் மனம் முற்றுலும் ஒடுங்கிய நிலையில் ப்ளைன் ரைஸ் + யோகர்ட் (தயிர்) உண்ணும் யோகியாகி யோசிக்க வைக்கும்.

கொல்லப்பட்டு உண்ணப்படுவது நம்மை மாதிரியான அதே வகை உயிரினம் எனில் மட்டுமே நம்மால் கொடுமையை முழுதும் உணரமுடியும்!

நம்மில் வலிவானவன் நம்மை அடிமைப்படுத்தி வளர்த்து பின்பு நம்மில் சிலரைப் பிணமாக்கி, நமது செத்த உடலை மூளை, குடல், நாக்கு, சதை, நெஞ்செலும்பு, பிக் லெக் பீஸ், ஈரல் என்று ஈவு இரக்கம் இன்றிப் பலவகைகளில் நீராவியால் வேகவைத்து, நெருப்பில் சுட்டு, எண்ணையில் பொரித்து என்று பப்பே முறையில் பல விதமாகவும், நமது தொடை எலும்பினூடே இருக்கும் திரவத்தை உறிஞ்சி ரசித்து உண்டால் எப்படி?

நம் வீட்டுக்குழந்தை மாதிரிக் கொல்லையில் பேர் வைக்கப்பட்டு வளர்ந்த பிராணியை வராத விருந்தினர் வந்தார்ன்னு தண்ணிக்குள் முக்கித் திணறடித்தும், கழுத்தைத் திருகியும், தலையைக் கொய்தும் கொன்று அதன் பிணத்தை உணவாக உண்டு மகிழ்வது...சே! என்ன ஒரு கொடூரம்!

பிணமாக்கப்பட்ட கோழியின் உடலோடு மிளகாய், மிளகு, பூண்டு என்று சேர்த்து Chilly Chicken, Pepper Chicken, Garlic Chicken... அடப்பாவிகளா அடுத்தமுறை ஷேவிங் ரேஸர் கீறல்மீதும், அடுக்களைக் காய்கறி நறுக்கிய கீறல் சிராய்ப்பின் மீதும் மிளகாய், மிளகு, பூண்டு பூசிப் பாருங்க... ஊண் செய்து உண்ணும் பெருங்கொடூரம் உறைக்கும்!

இதிலே நவீன உரிமைக்குரலாக இந்த பண்டிகைக்கு ஒட்டகத்தைத் தான் அறுத்துப் பிணமாக்கி உண்டு களிப்போம் என்று தான் வாழும் பகுதிக்குச் சம்பந்தமில்லாத ஒரு பிராணியைக் கொன்று பிரியாணியாக்கி உண்பது தங்கள் உரிமைக்குரல் என்று அடிமைத்தனம் நிரம்பிய ஒட்டக வெட்டியானாக விரும்பும் பாலைவன நம்பிக்கையாளர்கள்!

இதிலே கழுத்தை அறுத்துக் கொலை செய்வதில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று பேச்சு!

தன் இருப்பை, பஞ்சபூதங்களை உணர்ந்து கொள்ளும் "கான்ஷியஸ்னஸ்" உள்ள, இதர சக பிராணிகளின் உயிரை எடுத்து பிணமாக்கி உணவாக்குவது இன்னொரு பிராணியான சிந்திக்க முடிந்த மனிதனுக்குள்ள உரிமையா? நிச்சயமாக இல்லை! முற்றிலும் இயற்கை ஸ்வரம் பிசகிய கொலை வெறி ஏறிய அசுரம்!


Cause and Effect நியதிப்படி இன்றைக்கு ப்ரைட்ய் லெக் பீஸ் , சிக்கன் 65, சிக்கன் பிரியாணி என்று ஊண் உண்ணும் பார்ட்டிகள் எல்லாம் பிறப்பு இறப்பு சங்கிலியில் அடுத்ததாக கொத்துக் கொத்தாக கோழிகளாகப் பிறந்து பறவைக்காய்ச்சல் என்று அறுபட்டு பிறப்பு நீக்கவேண்டி வரும்! After all Every Effect has to have a Cause!


பிராணிகளைக்கொலை செய்து உண்ணும் செயல்களின் விளைவுகள் அனைத்தும் தனக்கே திரும்பவரும்.

நான் மறை வேதங்கள் மற்றும் தமிழ்மறை சொன்ன வள்ளுவர் முதல் வள்ளலார் வரை ஆன்றோர் பெருமக்கள் அனைவரும் மனிதர்களை அறிவுறுத்தும் கோட்பாடு கொல்லாமை!

விலங்குகள் போல் இதர பிராணிகளின் பிணந்தின்னியாக மனிதன் வாழவேண்டிய கட்டாயம் இல்லை!

பகுத்தறிந்து கொல்லாமைக் கோட்பாடு பேணி வாழுங்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

(187) அபசகுனம் பார்த்தல்

இன்னார் முகத்தில இன்னிக்கு முழிச்சேன் நாளே நாசமாயிடுச்சு...என்று சகுனம் பார்ப்பது எனும் வழக்கம் சகட்டுமேனிக்கு நகரம் கிராமம் என்று பாகுபேதம் இல்லாமல் மக்களிடையே, ஆள்வோரிடையே பல நூறு ஆண்டுகளாக நீண்ட காலமாக இருக்கிறது.

சின்னக் கதை பார்க்கலாம்.

ஒரு அரசன் வேட்டையாட காட்டுக்குக் கிளம்பிச்செல்கிறான். செல்லும் வழியில் முகவெட்டு மோசமான மனிதன் எதிர்ப்பட்டு வருகிறான். காட்டில் வேட்டையாடும் போது குதிரை மீது இருந்து கீழே விழுந்து அரசன் காயமடைகிறான்.

காயம் பட்டது அரசன் அல்லவா? காலையில் தான் வேட்டைக்குச் சென்ற வழியில் எதிர்ப்பட்ட முகவெட்டு சரியில்லாத மனிதனைத் தேடி விசாரணைக்கு அழைத்து வரும்படி காவலர்களுக்கு அரசாணை பறக்கிறது!

முகவெட்டு சரியில்லாத நபர் அரசவைக்கு கொணரப்படுகிறார்!
வேட்டையில் அரசன் குதிரையிலிருந்து கீழே விழ, காயம்பட காரணமாக முகவெட்டு சரியில்லாத அந்நபர் எதிரே வந்த சகுனமே என்று அரசன் கருதியதால் அம்மாதிரி அபசகுனநிலை எதிர்காலத்தில் தனக்கு நேர்வதைத் தடுக்க அந்நபருக்கு மரண தண்டனை வழங்குகிறான் அரசன்.

அரசாணைப்படி கொலைக்களத்திற்குக் காவலர்களால் இட்டுச்செல்லப்படுகிறான் முகவெட்டு சரியில்லாத மனிதன். மரண தண்டனை நிறைவேற்றப்படுமுன்பாக அவனது இறுதி ஆசை கேட்கப்படுகிறது.

தனக்கு ஏன் இந்த மரண தண்டனை என்பதை முழுவதும் விளங்கிக்கொள்ள முடியாத முகவெட்டு சரியில்லாத நபர் அரசனைக் காண விரும்புவதை இறுதி ஆசையாகச் சொல்கிறான்.

இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அரசனை சந்திக்க அழைத்துச்செல்கிறார்கள். இருவருக்கும் இடையே திரையிடப்பட்டு தன்னை ஏன் காண விரும்பினாய் என்று அரசன் வினவுகிறான்.

முகவெட்டு சரியில்லாத நபர் அரசனிடம் ஒரு தவறும் செய்யாத தனக்கு ஏன் என்கிறான். பதிலளிக்கும் அரசன் தான் வேட்டையின் போது குதிரையில் இருந்து கீழே விழுந்து காயம்பட்டது உன் முகத்தை எதிரே பார்த்த சகுனத்தால் தான் என்கிறான்.

மரண தண்டனை நபர் அரசே என்னைப் பார்த்ததால் தங்களுக்கு சிறு காயம் தான். என்னைப் பாருங்கள் உங்கள் முகத்தை பார்த்ததன் பலனாக மரண தண்டனைக்கு உள்ளாகிவிட்டேன்.


நரி மூஞ்சியில் முழிச்சா நல்லது... பூனை குறுக்கே ஓடினால் காரியத்தடை என்று மிருகங்கள் உலகத்திலும் நுழைவது அக்மார்க் அத்துமீறல்!

அபசகுனம் என்று அடுத்த நபர் மீதும், பரிகாரங்களின் மீதும் தனது பலகீனத்தை மறைப்பது மூடத்தனம்.

அபசகுன எபஃக்ட் மேம்படுத்திக்கொள்ள நிரந்தர மஞ்சள் துண்டு / பச்சை ஆடைன்னு பக்குவமா இருப்பது பகுத்தறிவான்னெல்லாம் ஆராய்ந்து தனிநபர் தாக்குதல் கேள்வி ஏதும் கேக்கக்கூடாது! :-))

அன்புடன்,

ஹரிஹரன்