Sunday, May 13, 2007

(157) மனசாட்சியின் வாரிசுகள்... வாரிசுக(ள்)ல் மனசாட்சி...சாட்சி காட்சி

மனச்சாட்சி செத்தால் என்ன ஆகும்? ரெண்டு வாரிசு உருவாக்கும்!

தமிழகத்தின் சரித்திரத்தில் திரா"விட" அரசியலில் கருணாநிதியின் மனச்சாட்சியின் வாரிசுகளும், கருணாநிதியின் மனச்சாட்சி இல்லாத வாரிசுகளும் நடந்தேற்றிய காட்சிகள் மதுரையை குருஷேத்திரமாக்கியிருக்கிறது!

கருணாநிதி அகக்கண் இருண்ட திருதராஷ்டிரனாக, மூன்று பேரை தி.மு.கலக இயக்கப் மதுரைப் போர்வாள்கள் பெட் ரோல் குண்டுவீசிக் கொன்றது பற்றிய கவலை இல்லாமல்
எம் எல் ஏக்களுக்கு விருந்தளித்ததும், கணக்குக் குளறுபடிகள் இருந்தாலும் அவசரமாகச் சட்டமன்றத்தில் 50ஆண்டுகள் என்று தனக்குத்தானே விழா எடுத்துக்கொண்டதும் ரோம் தீப்பற்றி எரிந்தபோது ரோமானிய மன்னன் நீரோ பிடில் வாசித்திருப்பானா எனும் என் சந்தேகத்தை நீக்கியது!

சென்ற வாரம் கேமரூன் நாட்டில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகிய கென்யா விமானத்தில் இருந்த வால்பாறை தேயிலைத்தோட்ட தமிழர்களுக்கு சட்ட மன்றத்தில் அஞ்சலி செலுத்தியது எப்பேர்ப்பட்ட நாடக நடிகர்கள் நிறைந்த மன்றம் தமிழக சட்ட மன்றம் என்று விளங்கியது எனக்கு!

வாணிமஹால் / ராஜா முத்தையா அரங்கம் / ராணி சீதை மன்றம் போன்று தேர்ந்த கூத்துப்பட்டறை ஆட்கள் நிரம்பிய வளாகமாக நாடகக் கலை செழிக்கவைக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி!

விர்ஜினியா பல்கலை துப்பாக்கிச்சூட்டில் பலியான வசதிமிகு அமெரிக்க பிரஜையாகிவிட்ட தான் இறந்தால் அமெரிக்காவிலேயே இறுதிச்சடங்கு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த பேராசிரியர் லோகநாதன் குடும்பத்தினர் ஒன்பது பேருக்கு கருணைமிகு கருணாநிதி பல லட்சம் செலவழித்து விமானடிக்கெட் செலவை தமிழக அரசு ஏற்கும் என அறிவித்தது கருணாநிதி சிறந்த நிர்வாகி என்பதை என்னை ஏற்றுக்கொள்ள வைத்தது!

1969ல் அண்ணா மறைந்தபோது நேரடி வாரிசாக பிள்ளை இல்லாததால் வாரிசு அதிகாரப் போர் எழுந்து தமிழகத்தில் பெட் ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை!

1973ல் ஈவெராமசாமி மறைந்தபோதும் நேரடி வாரிசு இல்லாததால் தமிழகம் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்களில் இருந்து தப்பியது!

1988ல் எம்ஜிஆர் மறைந்தபோதும் நேரடி வாரிசு இல்லாததால் தமிழகம் அஞ்சா நெஞ்சர்களது பெட் ரோல் குண்டுகள் வீச்சுக்களுக்கு இலக்காகவில்லை!

தமிழகத்து நீரோ, நவயுக திருதராஷ்டிரனாகிய தமிழக முதல்வர் கருணாநிதியின் (முன்னாள்)மனச்சாட்சிக்குக் கூட தமிழ்நாட்டில் ரெண்டு வாரிசுகள் இருக்கிறது!

இன்றைக்கு கருணாநிதியின் இந்நாள் மனச்சாட்சிக்கு விரோதமான வாரிசுப் போராட்டம் கருணாநிதியின் (முன்னாள்)மனச்சாட்சியின் வாரிசுகளால் முன்னெடுத்துச்செல்லப்படுகிறது!

தமிழ் நாட்டின் மக்களுக்கு ஏதோ ஒரு ஊரில் அவர்களது வாரிசு இருப்பார்கள்! தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எல்லா ஊரிலும் வாரிசுகள் இருக்கின்றார்கள்! பெரிய்ய்ய சாதனை ஆ(ண்)மை!

பெட்ரோலை டிவிஎஸ் 50 பல்ஸர்பைக் மாருதி காருன்னு மக்கள்ஸ் பயன்படுத்தினால் கருணாநிதியின் வாரிசுகள் தூண்டுதல்/பாசறையில் பெற்ற பயிற்சியில், பெட்ரோலை புலி மார்க் நயம் நன்னாரி சர்பத் பாட்டிலிலோ, ஹேவர்ட்ஸ் 500 பாட்டிலிலோ பெட் ரோல் பாம் செய்து வாரிசுப்போட்டியில் அஞ்சா நெஞ்சன்களாய்ப் புலிப்பாய்ச்சல் காட்டி இருக்கின்றார்கள்!

அகில உலக தமிழினத்தின் ஒப்பற்ற தானைத் தலைவர் கருணாநிதியின் வாரிசுகளின் சுயநல அதிகார ஆதிக்கப்போட்டியால் மதுரையில் மூன்று இருபது வயது நிரம்பிய அக்மார்க் திராவிட தமிழ் இளைஞர்கள் கணினிப் பொறியாளர்கள் கோரமாகக் கொலை செய்யப் பட்டிருக்கின்றார்கள்!

அதனால் என்ன? அடுத்த ஸ்டண்ட் அடித்து தமிழினத்தின் மீதான அக்கறையைக் காட்டிவிடலாம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மெல்ல நடந்து சென்றபோது சாலைவிபத்தில் இறந்த மெய்யப்பன் எனும் தமிழர் குடும்பத்தினர்க்கு கனடா நாட்டில் இருக்கும் அவரது தமக்கை வகையறாவுக்கு ஏர்கானடாவிலும்ம், அடிலெய்டில் இருக்கும் அவரது அத்தைக்கு குவாண்டாஸ் ஏர்வேஸிலும் விமானடிக்கெட் எடுத்து தரும் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்து சட்ட மன்றத்தில் ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்திச் சரிசெய்திடுவார் தமிழக முதல்வர், சாணக்கியர், கருணாநிதி!

அப்போ மதுரை மாதிரி இடங்களில் தனது வாரிசுகளால் வெடிவைத்தும், உருட்டுக்கட்டையால் அடிக்கப்பட்டும் நடந்தேற்றிய கலவரத்தில் உயிர்விட்டவர்கள், கலவரத்தைக் கண்டு கலவரமான அப்பாவித்தமிழர்களுக்கு என்ன பதில்???

எம்ஜிஆரால் அரசியல் அதிகாரத்திலிருந்து 14 ஆண்டுகள் வனவாசம் இருந்த கருணாநிதியின் வாரிசுகள் சுயநல ஆட்சி,அதிகாரப் போட்டிக்கு முன்பு தமிழன் சோத்தால் அடித்த பிண்டம்!

கருணாநிதியின் வாரிசுகளின் சுயநல, அயோக்கிய, அதிகாரப் போட்டி போர்க்கோலத்தின் பின் தமிழன் பெட்ரோல் குண்டால் அடிக்கப்பட்ட பிண்டம்!

தமிழகம் நாற்றாங்கால்! சமூக நீதிக்கல்ல!
சுயநல் அரசியல் அயோக்கியத்தன, கொலைகார வாரிசுப் போட்டிக்கு!

வாழ்க திரா"விடம்"! அரசியல் திரா"விட"ப் பெத்தடின் போதை முற்றி கொலைவெறியாகத் தாண்டவமாடுகிறது! மதுரையில் நடந்த வெடிகுண்டு, கொலை நிகழ்வு வெறும் முன்னோட்டம்தான்! அய்யோ பாவம் தமிழகம்! அப்பாவித் தமிழர்கள்!

கருணாநிதி குடும்ப வாரிசுப் போர் க்ளைமாக்ஸ் க்ராபிக்ஸ் கற்பனை செய்யவே கொடூரமாக இருக்கிறது! இந்தக் கொலைகார வாரிசுப்போர் இனிச் சொல்லும் பெரிய்ய வணக்கம் தமிழகத்தின் அமைதிக்கு!

தமிழகத்தின் வாழை மட்டைத் தமிழன் நிறையவே வாழை மட்டையை தயாராக வைத்திருக்கவேண்டும்!

கருணாநிதி குடும்பத்து வாரிசுப்போரில் வீசப்படும் பெட் ரோல் குண்டுகளால் ஏற்படும் தீக்காயங்களுக்கு நிறையவே வாழைமட்டைகள் அவசியப்படும்!


அன்புடன்,

ஹரிஹரன்

6 comments:

Hariharan # 03985177737685368452 said...

37000
டெஸ்ட் மெசேஜ்!

Seemachu said...

ஹரிஹரன்,
நீங்கள் எழுதிய ஒவ்வொன்றும் நிஜம் என்று நினைக்கும் போது.. தமிழகத்தின் எதிர்காலம் குறித்து ஒரு கலக்கமே வருகிறது.

மறுபடியும் ஒரு விடுதலைப் புரட்சி வெடிக்க வேண்டும்..இந்தமாதிரி அரசியல் கய்வர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற..

இந்தியா முழுமைக்கும் தான்..

சீமாச்சு

E.S.Sriram said...

Karunanithi should be ashamed and hang himself ( only if he is a reasonable person). High time, we come out of these unrulely politicians.

மகேந்திரன்.பெ said...

Comedy Time?

ஜடாயு said...

// இன்றைக்கு கருணாநிதியின் இந்நாள் மனச்சாட்சிக்கு விரோதமான வாரிசுப் போராட்டம் கருணாநிதியின் (முன்னாள்)மனச்சாட்சியின் வாரிசுகளால் முன்னெடுத்துச்செல்லப்படுகிறது! //

அருமையான சித்திரம்.

மகாபாரத திருதராஷ்டிரன் அடிப்படையில் நல்லவன், சூதில் விருப்பமில்லாதவன். துரியோதனன் சொற்கேட்டே அவன் இதில் இழுக்கப்பட்டான் என்பதாகப் படித்திருக்கிறேன். அதனால், கருணாநிதியைக் கொஞ்சம் தாராள மனத்தோடு தான் திருதராஷ்டிரனுடன் ஒப்பிட வேண்டும்.

// மதுரையை குருஷேத்திரமாக்கியிருக்கிறது! //

ஆம், கௌரவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் குருக்ஷேத்திரம்!

shivaperuman said...

அருமையான கட்டுரை நண்பரே!

சுயமரியாதையியக்க சூறாவளி படித்தீர்களா?

http://www.geocities.com/eswaramoorthypillai/suyamariyaathaiyeekasuravalee.html