Sunday, November 18, 2007

(182) உதவி தேவை: சென்னை சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபருக்கு

இணையத்தில் உலாவரும் இளகிய தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.

இன்றிலிருந்து 365வது நாள் எனக்கு நாய் குணம் ஆரம்பிக்கும் 40 வயது ஆரம்பிக்கும் (இப்பவே அப்படித்தானே எனும் தீர்க்கதரிசி நண்பர்களுக்குச் சொல்ல ஏதும் இல்லை)

இந்தப் பதிவு வாயிலாக சென்னை போரூரில் சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சாதாரண கூரியர் கம்பெனியில் வேலைசெய்துவரும் இளைஞனுக்கு உதவி கோருகிறேன்.

கடந்த 30-அக்டோபர்-2007 அன்று தனியார் கூரியர் கம்பெனியில் வேலை செய்யும் கமல்குமார் எனும் 29வயது இளைஞனை அவர் சென்ற பைக்கை ஒரு வேன் மோதிவிட்டு ஹிட் அண்டு ரன் என நிற்காமல் சென்று விட்டது.

பைக்கில் தலைக்கவசம் அணிந்து சென்றபோதும் ஹெல்மெட்டின் கண்ணாடி தலையில் குத்தி மூளையில் இறங்கி காயப்படுத்தியிருக்கிறது. விபத்து நடந்த போருர் பகுதி பொதுமக்கள் உடனடியாக சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் இருக்கும் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷனில் சேர்த்திருக்கிறார்கள்.

சுந்தரம் மருத்துவமனை அட்மிஷன் கார்டுசுந்தரம் மருத்துவமனை ரிப்போர்ட்


விபத்தில் சிக்குண்டு தலையில் அடிபட்டு மூளைக்காயம் அடைந்த இளைஞன் கமல்குமார் சாதாரணமான வருவாய் கொண்ட மத்திய தரக்குடும்பத்தினைச் சார்ந்தவர். முறையான மருத்துவம் செய்தால் விரைந்து காயங்களில் இருந்து மீண்டு விடலாம் என்பது மருத்துவமனையினர் நம்பிக்கை. தினசரி ரூ.10,000/- செலவு செய்து சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பொருளாதார சக்தி இல்லாத குடும்பம்.

என்னால் இயன்ற உதவியாகச் சில ஆயிரம் ரூபாய் உதவி செய்திருக்கிறேன். ஊர்கூடி உதவினால் இந்த இளைஞன் காயங்களிலிருந்து மீண்டு மறு வாழ்வு பெறுவார்.

பொருளாதார உதவியாகவோ, சகாயமான - இலவச சிகிச்சையாகவோ உதவும்படி வேண்டுகிறேன்.

உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

திரு செல்வம் Mob: No: 9994477784

திரு கமல்குமார் வீட்டு முகவரி:

V. கமல்குமார்,
1/115 ஈஸ்வரன் கோவில் தெரு,
பாடிய நல்லூர்,
ரெட் ஹில்ஸ்,
சென்னை -600 052
தொலைபேசி: 65379022

இன்னலில் அகப்பட்டுக்கொண்டவர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் இளகிய நெஞ்சங்கள் தமிழ் வலைப்பூக்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன என்பதை உணர்ந்திருப்பதாலேயே இந்தப் பதிவைப் பதிகிறேன்.

நம் போன்ற முகம் அறியாத பல நண்பர்கள் செய்யும் சிறிய அளவிலான பொருளாதார உதவி ஒரு குடும்பத்திற்கு அவர்களது மகனை கொடூர சாலை விபத்தின் படு காயங்களிலிருந்து மீட்டுத்தரும் சக்தி உடையது.

சிகரெட், பான்பராக்,கட்டிங்-குவார்ட்டர், பீட்ஸா-கோக், இன்னபிற லாகிரி வஸ்துக்களை இந்த ஆண்டின் இறுதிவரை பாதியாகக் குறைந்த்துக் கொண்டு அந்த நிதியைக் கொண்டு உதவினால் விபத்தில் படுகாயப்பட்ட இளைஞனுக்கு மறுவாழ்வு தரலாம் என்று உரிமையுடன் கோரிக்கை வைக்கிறேன்.

தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டியும் விபத்தில் சிக்கி தலைக்காயம் அடைந்து அவதியுறும் 29 வ்யது இளைஞன் திரு. கமல்குமாருக்கு கவசமாக இருந்து இணையத்து தமிழன்பர்கள் மூலம் நிதியுதவி-சிகிச்சை உதவி கிட்டச்செய்து காக்குமாறு முருகப்பெருமானை உளமாற வேண்டியபடி எனது இன்றைக்கு எனது 39வது பிறந்தநாள் தினத்தைத் துவக்குகிறேன்.

அன்புடன்,

ஹரிஹரன்

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

40,729
டெஸ்ட் மெசேஜ்!

சேதுக்கரசி said...

இணையம் மூலம் பணம் அனுப்ப இலகுவாக வங்கிக் கணக்கு எண் ஏதும் கிடைக்குமா?

Hariharan # 03985177737685368452 said...

வாங்க சேதுக்கரசி.

வங்கிக் கணக்கு விபரம் கேட்டு தெரிவிக்கிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

சேதுக்கரசி,

இணையம் மூலம் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு எண் மற்றும் இதர விபரங்கள்
P.Saravanan,
S.B. a/c no: 4931070001228
HDFC BANK ,
MUGAPPAIR BRANCH,
BRANCH CODE: 493,

P.Saravanan,
7/413-2, mugappair west,
chennai-600037.
tamilnadu,
india. +919840106954

தங்கள் உதவும் மனப்பான்மைக்கு நன்றிகள்.

karthik said...

வணக்கம் நானும் விசாரித்துவிட்டு இன்றே குடுகசொல்கிறேன் கமல் குமார் நலம் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

இன்றைக்குதான் இந்த பதிவு பார்த்தேன். வருந்த தக்க விஷயம் இயன்றதை செய்கிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க கார்த்திக்,

உதவி செய்ய விழையும் தங்கள் ஈர நெஞ்சத்திற்கு நன்றிகள் பல.