(123) சக பதிவர்கள் ரியாக்சன் - தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை 30க்கு
தமிழ்மணத்தில் வெளியான பதிவுகளுக்கான பின்னூட்ட உயர் எல்லை 30 என்கிற அறிவிப்புக்கு சக பதிவர்களது ரியாக்சன் எப்படி எல்லாம் இருக்கும் என்று கற்பனைப் பதிவு.
நட்புடன் நான் படிக்கும் எல்லாப் பதிவர்களையும் அவர்கள் பெயர்களிலேயே கலாய்ந்திருக்கிறேன். பதிவர்களுக்கு ஆட்சேபம்/விருப்பமில்லை எனில் தனிமடலில் தெரிவித்தால் நீக்கிவிட ஆயத்தமாயிருக்கிறேன்.
இலவசகொத்தனார்:(தட்டிப்பாத்தேன் கொட்டாங்கச்சி ஸ்டைலில்)
கோட்டை கட்டினேன் பின்னூட்டத்தைவச்சி
தமிழ்மணத்தால் பின்னூட்ட ஆட்டம்போச்சி
டோண்டு: (கொட்டும்மழைக்காலம் உப்பு விற்கப்போனேன் ஸ்டைலில்)
பின்னூட்ட காற்றடிக்கும் கால்ம் அனானி/அதர் ஆப்ஷன் மூடிவச்சேன்
தமிழ்மணரூல்ஸ் கொட்டும் காலம் அனானி/அதர் ஆப்ஷன் திறந்து வச்சேன்..
பெனாத்தல் சுரேஷ்: (பாட்சா ஸ்டைலில்)
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச பின்னூட்ட ஷேர் ஆட்டோக்காரன்
பின்னூட்ட ஏழைக்கெல்லாம் நான் சொந்தக்காரன்டா..
பஞ்ச் டயலாக்: எனக்கு ஒரு பின்னூட்டம்வந்தா முப்பது பின்னூட்டம் வந்தமாதிரி..
யேய்..யேய்...யேய் நல்லவங்களுக்கு உருப்படியா முதல்லயே 29 நல்ல பின்னூட்டம் வந்து முப்பதாவதுல எல்லோரும் வாங்க நன்றின்னு உபசரிக்கும்படி செய்வான் ஆண்டவன்..
ஆனா...கெட்டவங்களுக்கு முதல்ல வர்ற முப்பதும் பின்னூட்டக் கயமையா ஆக்கி, முப்பதுக்கு மேல வர்ற உருப்படியான ஒரு பின்னூட்டமும் தமிழ்மண முகப்பில் வராது செய்திடுவான் ஆண்டவன்..
ஜொள்ளுப்பாண்டி:
முதல் முப்பது பின்னூட்டத்துலேயே எனது பதிவு சொல்லும் பொருள் பற்றிய புரிதல்கள் எல்லாத்தையும் வாசகர்கள் "ஜொள்ளி"முடிக்கமுடியுமா? நடக்கிற காரியமா இது?
"ஜொள்ளுதல் யார்க்கும் எளிய அரியவாம் ஜொள்ளியவுடன் பின்னூட்டும் செயல்" எனும் முன்னோர் வாக்கினை தமிழ்மணம் நினைவில் வைத்து மறு பரிசீலனை செய்யவேண்டும்.
வகுப்பறை S.V சுப்பையா வாத்தியார் :
எனது சோதிட அறிவியல் பதிவுகள் தொடர் படித்தால் பதிவர்களால் இந்த இக்கட்டினை எதிர்கொள்ள உதவும்.
பிரதமை முதல் பௌர்ணமி வரையிலான வளர்பிறை 15 என்பது முதல் பாதி முப்பது பின்னூட்ட வரவு என்றும், அடுத்த பிரதமை முதல் அமாவசை வரையிலான தேய்பிறை 15 என்கிற இரண்டாம் பாதி முப்பது பின்னூட்டங்கள் பி;கயமை+வரவேற்பு உபசரிப்பு என எண்ணி எதிர்கொண்டால் தற்போதைய தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை30 எனும் சோதனைக்காலத்தின் இக்கட்டிலிருந்து சோதிடத்தின் உதவியால் தப்பலாம்.
செந்தழல் ரவி:
அமுகவை அமுக்கப் பார்க்கும் சதி. அமுக அவ்வளவுதானா? தமிழ்மணத்தில் ஆப்புதானா?
மு.கார்த்திகேயன்:
பின்னூட்ட உயர் எல்லை வெறும் 30தானா? எங்க தல அஜீத் வழி நடக்கும் எங்களுக்கு வானமே எல்லை. தல மாதிரி முட்டி மோதி பின்னூட்டத்தை 50-60ன்னு வாங்கி தமிழ்மண முகப்பை "வரலாறு" படைச்சு ஆள்கிற இந்த நேரத்தில் தல அஜீதை ஆழத்தில் தள்ளிய ஆழ்வார் கதை மாதிரி உயர் எல்லை 30 என்று டுவிஸ்ட் தமிழ்மணம் தரலாமா?
தல போல வருமா?
கீதா சாம்பசிவம்:
பின்னூட்ட உயர்எல்லை 30 என்பது கைலாயமான உயர்ந்த இடத்திலிருக்கும் கைலாசநாதனான சிவ பெருமானின் சித்தம் என்றே கருதுகிறேன். முதல் பத்து சிவனின் நெற்றிக்கண் ரேஞ்சில் சுட்டெரிக்க வரும் விமர்சனங்களுக்கும், இரண்டாம் பத்து பின்னூட்டங்களை தன்னில் ஒருபாதியான பார்வதியான சக்தியாக விமர்சனங்களை எதிர்கொள்வதற்கும் மூன்றாம் பத்து பின்னூட்டங்களை ஜடாமுடியுடையவனான சிவனின் உடுக்கையாக பாவித்து நாம் அடிக்கும் உட்டாலக்கடி உடுக்கையடிப் பின்னூட்டங்களாகவும் பாவித்தால் பரமசிவன் அருள் கிட்டி உயர் எல்லை 30ஐத் தாண்டியதால் தமிழ்மண முகப்பில் வரவில்லையே என்ற ஏக்கமின்றி பதிவு முக்தியடையும்!
பாலபாரதி:
புதுபிளாக்கருக்கு மாறிய கையோடு டெக்னாலஜி அப்கிரேடேஷன் பின்னூட்டப்பெட்டியிலும் DTS/Dolbi digital 7.1 channel Surround sound எபெஃக்டில் செயல்படுவது. ரெண்டாவது பின்னூட்டத்தில் ஆரம்பிக்கும் ரிப்பீட்டே எக்கொ எபெஃட் அடங்கவே 30பின்னூட்டம் ஆகிடுமே!
தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை பெரும் தொல்லை. தமிழ்மணமும் பாகச ஆகிப்போனதா? யூ டூ தமிழ்மணம்???
வரவணை செந்தில்:
தல பாலபாரதிக்கு டிஜிடல் டெக்னாலஜியால் ரிப்பீட்டட் தொல்லை. எனக்கு பின்னூட்ட பாலா தொல்லை. முதல் முப்பது பின்னூட்டத்தில் பாலா, போலி பாலா அதற்கு என் பீலான்னு 29 ஆகிடும். மொத்தத்தில் சொசெசூ இன்னொருமுறை!
துளசி அக்கா:
நம்மாழ்வாரை நொந்துக்கமுடியுமா? நம்ம தல ஆழ்வாரா நடிச்சதை நொந்துக்கலாம். டீச்சரால் விதியை மீறமுடியுமா? விதியை வேணும்னா நொந்துக்கலாம்.
விடாதுகருப்பு:
ராம்தாஸ் ஐயர் 10 ரா. ஐயங்கார் 10 மிச்ச பத்தை டிரேட்மார்க்கான பன்னாடை பட்டாடைன்னு பட்டாசா முப்பதாக்கி உயர் எல்லையைத் தொடவேண்டியதுதான்.
நுனிப்புல் உஷர்:
எனது எழுத்துக்கள் மேம்பட்டு புக்கர், புலிட்சர் விருதுகளை நோக்கி புலிப்பாய்ச்சல் போட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் முப்பதே பின்னூட்டத்தில் வரும் விமர்சனங்கள் கொண்டு நுனிப்புல்லாகவே எனது எழுத்தைச் செறிவாக்கவேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.
கால்கரி சிவா:
கொத்துப்பரோட்டா பதிவைப் போட்டு பதிவுலகைப் புரட்டிப்போட்ட கொத்ஸையே புரட்டிப்போட்டிருக்கிறது தமிழ்மண பின்னூட்ட உயர் எல்லை 30 விதி. சைட்டிஷ் சால்னாவும், ஜில்ஜில் ஜிகர்தண்டா பதிவுக்கும் 30தான் பின்னூட்ட உயர் எல்லை என்பது சரியா?
ஜி.கௌதம்:
தமிழ்மணத்தில் இந்த தடாலடி அறிவிப்பு என்னை இனி தடாலடிப் போட்டிகளை அறிவிக்கமாட்டேன் என தடாலடியாக அறிவிக்க வைக்கிறது.
தமிழன்:
பதிவுத் தமிழ் வளர இருந்த ஒரு வழியை தமிழனே அடைத்துக்கொண்டமாதிரி உணர்கிறேன்.
கல்வெட்டு:
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய தமிழ்மண பிரகடனமாக இதைக்காண்கிறேன்.
சர்வேசன்:
இன்னும் ஒரு சர்வேக்கு மேட்டர் தந்த தமிழ்மணத்திற்கு நன்றி!
பொன்ஸ்:
இந்த 30 பின்னூட்டம் தான் உயரெல்லை என்பது யானைக்கு சோளப்பொரி மாதிரி!
தருமி:
விளிம்புநிலை மதநம்பிக்கைகளே உயர் எல்லையாகக் கொண்டிருந்தாலும் சில நேரம் சங்கடங்களை அது தருவதுமாதிரி பின்னூட்ட உயர் எல்லை 30 என்கிற விளிம்புநிலையால் நல்ல கருத்தை தமிழ்மண முகப்பில் காட்டாத சங்கடங்கள் நேரும். Anyway Let us agree to agree with Thamizmanam.
அரைபிளேடு:
தமிழ்மணத்தின் இந்த அறிவிப்பு அரைபிளேடின் பின்னூட்ட மகசூலில் முழுபிளேடு போட்டிருக்கிறது.
பின்னூட்டப்புகழ் பாலா:
தமிழ்மணம் அய்யா, இந்த அறிவிப்பு சரியா இல்லையான்னு எங்க புரட்சிகர இயக்கச் சிங்கங்களான அசுரன் மற்றும் ராஜாவனஜ் ஐயாக்கள் ரெண்டுபேரும் தான் பின்ணணியில் இருக்கும் எல்லா ஈய, இஸங்களை எடைக்கு எடை சீர்தூக்கிப் பார்த்து அறிவிக்க வேண்டும்.
இட்லிவடை:
முதல் முப்பது பின்னூட்டங்களுக்கு இட்லிவடை பக்கத்தில் ஒருமணிநேரம் விளம்பரம் இலவசம்!
அரவிந்தன் நீலகண்டன்:
தெருவில் ஸ்டாண்டு போட்டு சைக்கிள் ஓட்றவன் கூட சிதம்பரம் நடராஜர், தேவரம் மேட்டர்ல சவுண்டு தர்றவனெல்லாம் ஓடி ஒதுங்கி, பம்மிப் பதுங்குறமாதிரி சுவிட்ஸர்லாந்துல எலக்டிரான் துகள் சைக்ளோட்டிரான் அணுவிசையகத்தில் நடராஜர் சிலை நிறுவியதைச் சொல்லி மகாசிவராத்திரி வாழ்த்துக்கள் என்று ஹைடெக் மிதாலஜி+காஸ்மாலஜி பதிவு போட்டா அனானிங்க என்ன கஸ்மாலம் கிர்ர்ர்ரடிக்குதுன்னு கும்மியடிக்காம ஓடிடுவாங்க. காஸ்மாலஜி+மிதாலஜிக்கு பின்னூட்டம் 30 என்பது உயர் எல்லைதான்!
லக்கிலுக்:
சுயமாய் உருவெடுத்த வலைப்பூ சுனாமியையே உள் இழுக்கும் வலிவுள்ள தமிழ்மணத்தின் சுனாமி அறிவிப்பு இது!
கவிதா+ராகிகஞ்சி+அணில்குட்டி:
சிம்பிளா ராகிகஞ்சி பதிவுகள் போட்டாச் சிரமம், சோதனை இல்லை. மிருகங்கள்ன்னு இனி ஹெவியா தலைப்பு வைக்கிறதை யோசிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
பத்ரி:
வலைப்பூ பதிவுகளின் மீது திணிக்கப்பட்ட வெகுஜன அச்சு ஊடகங்களை ஒத்த ஊடக வன்முறையின் தழுவலோ இல்லை இளவலோ என எண்ணவேண்டியிருக்கிறது.
என்றென்றும் அன்புடன் பாலா:
எனது உயிர் வாழ உதவி வேண்டி தொடர் பதிவுகளுக்கு சிறப்புச்சலுகை தரும்படி தமிழ்மணத்தை வேண்டுகிறேன்
படிச்சுட்டு உங்க கருத்தையும் சொல்லிட்டுப்போங்க.
அன்புடன்,
ஹரிஹரன்