Monday, July 30, 2007

(159) தியாக தீபம் கருணாநிதி வாழ்க! கே.என்.நேரு வாழ்க! வாழ்க!!

தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது மட்டுமே அர்ப்பணிப்புடன் செய்துவரும் தமிழக முதல்வர் கருணாநிதியையும், போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேருவையும் வாயார வாழ்த்துவோம்!

இதுக்கும் மேலே நல்லது கருணாநிதியால் செய்யமுடியாதுதான்! ராஜினாமா செய்வதைத்தவிர!

இன்றைக்குச் சென்னையின் சாலைகளில் ஓடும் பேருந்துகளில் 50-75% இருக்கும் ஒயிட் லைன், எல்லோ லைன், ப்ளூ லைன் , எனும் மாநகர சொகுசுப் பேருந்து சேவைகள் மென்பொருளாளர்கள், வெள்ளைக்காலர் வேலை செய்வோர், விடுமுறைக்கு வந்த இன்னமும் மாநகர பஸ் பயணம் செய்ய விரும்பும் என்.ஆர்.ஐக்கள் இவர்களுக்கானது.
மாணவ/மாணவியர்கள் இந்த சென்னை மாநகர சொகுசு(!!??)பேருந்துகளில் அனுமதிக்கப்படார்!

பஸ்ஸில் மட்டுமே பயணிக்க முடிகிற, பயணித்து வேலைக்குச் செல்லும் 4பேர் கொண்ட சாமானியர்களின் குடும்பத்தில் போக்குவரத்து செலவு பட்ஜெட் 400 சதவீதம் எகிறினால் வேதனையடைந்தால் கழக அரசு சாதனை செய்வது எப்படி?

திருவள்ளுவர் வாக்குப்படி " பொருளில்லார்க்கு இல்லை இவ்வுலகு" என்று கழக அரசு சீரிய ஆட்சி நடத்துகிறது

சென்னை மக்களுக்கு, சென்னை மாநகரம் கழகத்தின் கோட்டை எனும் வரலாற்றை ஏழு எம்.எல்.ஏ இடங்களை அதிமுகவுக்குத் தந்துவிட்ட சென்னை மாக்களுக்கு இதைவிட நல்லதை எப்படிச் செய்ய முடியும் தியாகத் திருவுருவான கருணாநிதியால்?

சென்னை மாநகரத்தின் சாதாரண கட்டண பேருந்துப் பயணம் : இடம் : சைதாப்பேட்டை




இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் சென்னை மாநகர சொகுசுப் பேருந்து - சொகுசுப்பயணம். சென்னையின் பிரதான நெரிசல், பயணிகள் கூட்டம் வெகுதியான தடங்கள் அனைத்திலும் 75% சொகுசுப்பேருந்து கட்டணப் பேருந்துகளே ஓடுகின்றன.

நிகர நிதர்சன உண்மை புதிய பேருந்துகளில் பயணிகள் பயணிக்க தமிழகத்தில் அறிவிக்கப்படாத 100 சதவிகித கட்டண உயர்வு அமலில் இருக்கிறது.



பிரதான தடங்களில் ஓடும் ப்ளூ லைன் டீலக்ஸ் சொகுசுப் பேருந்தில் பயணிகளுக்குக் கிடைக்கும் சொகுசுப்பயணம்



நெரிசல் நேரம் "பீக் அவர்" முடிந்து காலை 11 மணியளவில் மாநகர சொகுசுப் பேருந்துகள் விளையாட்டுத்துறை அதிகாரிகள் போன்று தீவிரத்துடன் செயல்படுகின்றன:

சாமானியர்கள், பெண்கள், பூ விற்கும் அம்மணி, ஓய்வூதியம் வாங்கச் செல்லும் முதியவர்கள், நெரிசல் குறைந்த நேரத்தில் உயர் கட்டணம் காரணமாக குறைவான பயணிகளுடன் ஓடும் சொகுசுப் பேருந்துக்குள் ஏறி டிக்கெட் கட்டணம் கேட்டவுடன் ரன்னிங்கிலேயே குதித்து இறங்கிவிடும் நிலை கண்டேன்.

இளையர்களில் 50-75 சதவீதத்தினர், கொள்ளையடிக்கும் கட்டணம் வசூலிக்கும் சொகுசுப் பேருந்தில் பயணிப்பதைத் தவிர்த்து சில நிறுத்தங்கள் தொலைவை நடந்தே பயணிக்க விழைவதைக் கண்டேன்.

இப்பச்சொல்லுங்க! தமிழ்நாட்டு (சென்னை மாநகர) போக்குவரத்துத் துறையினர் தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையினும் விஞ்சி நடைப்பயிற்சி, முதியோர் ரன்னிங்கில் குதித்து இறங்குதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வைத்து சொகுசான உடல் நலம் பேண உதவுகிறதா? இல்லையா? என்று.

சொகுசுப் பேருந்துக் கட்டணம் என்ன என்று தெரியாமல் பேருந்தில் ஏறிய சிலருக்கு நெஞ்சடைப்பும், ஒரு சிலருக்கு "ஐயோ காசு போச்சே" எனும் கைப்பொருள் இழப்பு வருத்த மனோநிலை வருவதும் மக்களை எதையும் தாங்கும் நெஞ்சம் கொண்ட உறுதி மிக்கவர்களாக்க கழக அரசு எடுத்துவரும் சீரிய முயற்சியே என்பதை தினமும் காலையிலேயே கழக ஆட்சிக்கு வந்த ஏழரையாக ஏழரை மணிக்கு புரட்சியை எடுத்துவரும் கலகக்கார தோழமைக் காரர்கள் புரிந்துணர்வு காட்டவேண்டும் !

இப்படியாக சென்னை மாநகர சொகுசுப் பேருந்துகளின் மிக அதிகமான கொள்ளையடிப்புக் கட்டண விகிதம் நிர்ணயித்ததன் மூலம் தமிழக முதல்வர் கருணாநிதியும், தமிழ்நாட்டுப் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் சொகுசான வாழ்க்கைப் பயணத்தை பயணிகளுக்கு வழங்கியிருக்கின்றார்கள்!


அன்புடன்,

ஹரிஹரன்

1 comment:

Hariharan # 03985177737685368452 said...

38015
டெஸ்ட் மெசேஜ்!