Wednesday, August 01, 2007

(160) குவைத்தில் மீண்டும் ஈவெராமஸ்வாமி

அலாவுதீன் அற்புத விளக்கு கதைகளில் அலாவுதீன் விளக்கைத் தேய்த்தவுடன் பூதம் தோன்றும்.

அலாவுதீன் கதைகளில் வருவது மாதிரி பெல்லாரி மேன் ஈவெராமசாமி சென்ற முறை குவைத்துக்கு வந்திருந்த அடுத்தமுறை எப்போ வருவீங்க என்று நான் வினவிய போது "என்ன பெரிய வெங்காயம்... பெல்லாரி பெரியவெங்காயத்தை எடுத்துத் தேய்ச்சா வந்திட்டுப் போறேன்" என்று என்னிடம் சொல்லியிருந்தார்.

நேத்திக்கு கிச்சனில் வயலட் கலரில் இருந்த பெரிய வெங்காயத்தை விளையாட்டாகப் பளபளன்னு பாலீஷ் போட்டமாதிரி தேய்ச்சா பக்கத்துலேர்ந்து என்னை என்ன வெங்காயத்துக்குக் கூப்பிட்டன்னு சத்தம்... மை பிரண்ட் ஈவெரா ஆஜராகியிருந்தார்.

ஹரி: வாங்க மை பிரண்ட் ஈவெரா நமஸ்காரம். சௌக்கியமா? உட்காருங்க என்ன சாப்பிடுறீங்க... ஒன்லி வெஜிடேரியன் அவைலபிள். பத்து நிமிஷத்துல ரவா உப்புமா ரெடி ஆகிடும் சாப்பிடலாம்.

ஈவெரா: சௌக்கியமெல்லாம் கெடக்கட்டும் என்ன விஷயம்?
உப்புமா மேட்டர் வெங்காய பகுத்தறிவு கிங்குக்கே வெங்காய உப்புமா ஆஃபரா? ஹாட் Dogs இல்லை Ox tongue டிஷ் வெளியேவே சாப்பிடுவேன்... மேட்டருக்கு வா நீ முதல்ல..

ஹரி: மை ப்ரண்ட் 26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் நீங்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956 வந்த மேட்டர் பத்தித்தான் யோசிச்சுட்டே வெங்காயத்தை அழுத்தித் தேச்சுட்டேன் நீங்களும் வந்துட்டீங்க.

ஈவெரா: அப்படி அது என்ன வெங்காய மேட்டர்? 51 வருஷம் கழிச்சு சந்தேகம் இப்போ?

ஹரி: மேட்டரைக் கொஞ்சம் கொஞ்சமா பார்க்கலாம்
"லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள்."

மாமாங்கமாவது 12 வருஷத்துக்கு ஒருதரம் வரும் ஆன்மீக விழா. வருஷத்துக்குப் பன்னிரண்டு தரம் பகுத்தறிவுப்பாசறை முழக்கத்துடன் கடற்கரை சீரணி அரங்க முப்பெரும் ஐம்பெரும் விழா மாநாட்டுக் கூட்டங்களுக்கு வரும் பகுத்தறிவுகள் டாஸ்மாக் தீர்த்தத்தை குடித்தும் தெளித்தும் என்று மதியற்று மாக்களாக மக்கள் 2007ஆம் ஆண்டில் இருப்பது காட்டுமிராண்டித்தனம் இல்லீங்களா மை பிரண்ட்?

ஈவெரா: அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஹரி: என்ன இதுக்கே இப்படி சவுண்ட் விட்டா எப்படி... மை பிரண்ட் அடுத்த மேட்டர் "அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை".

உங்க பகுத்தறிவுப் பாசறை ஆட்கள் நீங்க இப்படி சவுண்ட் விட்ட 1956 லிருந்து 51 வருஷங்களில் 40 ஆண்டுகள் ஆட்சியில், அதிகாரத்தில் இருந்ததால் கோவில் கட்டுவது உற்சவம் கொண்டாடுவது நிறுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் கட்டப்பட்டு 9000கோடிக்கு சாராய வியாபாரம் செய்து மக்களிடையே சமூக ஒழுக்கம் பேணுகிறார்கள்.

ஈவெரா: ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்

ஹரி: அதுக்குள்ள நாயகன் கமல் எபெக்ட் தர்றீங்களே மை பிரண்ட்...
மெயின் மேட்டருக்கு வருவோம். நீங்க சமூக விஞ்ஞானி, பகுத்தறிவுவா(ந்)தின்னு சொன்னதை நம்பாதவங்களும் நம்புற மாதிரி இந்தக்கருத்தைச் சொல்லியிருக்கீங்க:

"எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்."

எப்படி மை பிரண்ட் இப்படி? சட்டியில இருக்கிறது அகப்பையில் வருகிறது. மனசுக்குள்ள நீங்க நினைக்கிறதை அப்படியே சொல்லியிருக்கீங்க!
ஆர்க்கிமிடீஸ் யுரேகா தத்துவம் தெரியாதா உங்களுக்கு... ஆர்க்கிமிடிஸ் கிடக்கட்டும்... காக்காக் கதை கூடவா தெரியாது... கல்லு கல்லா கொண்டுவந்து போட்டு குடத்துக்குள்ள இருந்த கொஞ்சூண்டு தண்ணீரை மேலே எழும்ப வைத்துக் குடித்து தாகம் தீர்த்துகொண்ட தண்ணீர் மேலெழும்புவதற்கும் நிறை-எடை-Mass (weight)க்கும் உள்ள அறிவியல் தொடர்பு உங்களுக்குத் தெரியலை பாவம்!

ஈவெரா: என்ன வெங்காயம் ஆர்க்கிமிடீஸ் எடை..நிறை..மாஸூ பார்ப்பன ஏமாற்றுதல்
காக்கா கதை எல்லாம் சுத்த சாம்பார் வெங்காயம்!

ஹரி: மை பிரண்ட்.. விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ் யுரேகா தத்துவத்தை குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்த போது அவரது உடல் நிறைக்கு எடைக்கு நிகரான நீர் குளியல் தொட்டியிலிருந்து வெளியேறியதைப் பார்த்து யூரேகா தத்துவத்தை கண்டுபிடித்தார்...

மகாமகக் குளத்தில் மக்கள் இறங்குவது குளிப்பதற்கு...

மைபிரண்ட் உங்களுக்கோ குளிப்பதே ஆகாது.... குளிப்பதை அறவே வெறுத்த மாமனிதர் நீங்கள்...(குளத்தில்) குளிக்கும் அனுபவம் இல்லாததால் இப்படி நாற்றமடிக்கும் சிந்தனை உங்களுக்கு வந்திருக்கிறது..

ஹாலில் ஓடிக்கொண்டிருந்த மக்கள் தொலைக்காட்சி நிகழ்வில் பழமொழி சொல்லு நிகழ்ச்சியில் ஒரு பழமொழி சொல்லப்படுகிறது கேட்கிறது "ஆறு நிறையப் பால் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்"

ஈவெரா: அவ்வ்வ்வ் ஆஆஆ மை குளிச்சிங்...மை பகுத்தறிவு...மை ரெப்புட்டேசன் டோட்டல் டாமஜ்..டோட்டல் டாமஜ்... என்ற படியே மறைந்து காற்றில் கலக்கிறார்.

காலை சிற்றுண்டி ரவா உப்புமாவுக்கு பாலீஷ் போட்ட பெரிய வெங்காயம் சிறு துண்டுகளாக்கி நறுக்கப்படுகிறது. ஏனோ தெரியவில்லை உப்புமாவின் சுவை கொஞ்சம் கூடியிருந்தது.

அன்புடன்

ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

38073
டெஸ்ட் மெசேஜ்!

வடுவூர் குமார் said...

ஓஹோ! உப்புமாவுக்கு சுவைகூட வேண்டும் என்றால் "வெங்காயத்தை" நறுக்கி போடவேண்டுமா? தெரிந்துகொண்டேன். :-))

மனிதன் said...

வெல்கம் பேக். ஆனா இன்னும் புல் பார்ம்முக்கு வரலை போல இருக்கு.
ராமச் சந்திரன்.