Wednesday, August 22, 2007

(163) பாமக விலிருந்து ராமதாஸ் விலகல்

குமுதம் ரிப்போர்ட்டரில் குடிதாங்கி ராமதாஸிடம் கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: எதிர்காலத்தில் விஜய்காந்தின் தேமுதிகவுடன் கூட்டணி வைக்குமா பாமக?

குடிதாங்கி ராமதாஸ் பதில்: பாமக எந்த நடிகருடனும் கூட்டணி வைக்காது!

பெரிய மருந்து தமிழ்க்குடிதாங்கி ராமதாஸ் அவர்களின் மாஸ்டர் பீஸ் நடிப்புகளில் தமிழகம் கண்டு ரசித்த காட்சிகள்/நிகழ்வுகள் சில:

1)அரசியல் கூட்டுக்களவாணிக் கூட்டணி நடிப்பு...
2)பொங்குதமிழ் இயக்கம் அமைத்து தமிழைப்பாதுகாப்பதான நடிப்பு...
3)மரவெட்டி டூ பசுமைத்தாயக அக்கறை நடிப்பு...
4)தன் குடும்பத்தினர் எந்தப் பதவியிலும் இருக்கமாட்டார்கள் என்ற தன் சத்தியம் மீறி அன்புமணியை மத்திய அமைச்சர் பதிவியில் வைத்து அழகுபார்க்கும் தான் தான் தன் சமூகத்தினர்க்கு சத்தியம் செய்தது - மீறினால் தனக்கு முச்சந்தியில் சவுக்கடி தண்டனை அறிவித்தது என்பதை மறந்த நடிப்பு...

இப்படி இயற்கையான நடிப்புத் திறன் நிறைந்த அரசியல் நடிகர் குடிதாங்கி ராமதாஸ் நடிகர்களுக்கும் பாமகவுக்கும் கூட்டணியோ தொடர்போ இருக்காது என்று செல்ஃப் ஹிட் செய்து பாமகவிலிருந்து தன்னை விலக்கி கொண்டுவிட்டாரா???

அன்புடன்,

ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

38400
டெஸ்ட் மெசேஜ்!

வெங்கட்ராமன் said...

/////குடிதாங்கி ராமதாஸ் பதில்: பாமக எந்த நடிகருடனும் கூட்டணி வைக்காது!

அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா ஒரு நடிகை என்பதை மறந்து விட்டாரா. . . .?

பிறகு ஏன் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்திருந்தார். . . . .?

Hariharan # 03985177737685368452 said...

//அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா ஒரு நடிகை என்பதை மறந்து விட்டாரா. . . .?

பிறகு ஏன் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்திருந்தார். . . . .? //

வாங்க வெங்கட்,

இனியும் அங்கிருந்தால் கட்டியிருக்கும் கோவணத்தையும் கருணாநிதி அவிழ்த்துவிடுவார் என்று அலறியடித்தபடி அன்புச்சகோதரி ஜெயலலிதாவிடம் அவசர அவசரமாகத் தஞ்சம் அடைந்தது கூட்டணி அல்லதான்.. தன்மானம் காக்க குடிதாங்கி ராமதாஸ் எடுத்த அரசியல் அடைக்கலம்! :-))