(168) வளைகுடா இந்தியர் பணத்தில் திளைக்கும் இந்திய வங்கிகளின் கயமை!
வளைகுடா இந்தியர்களுக்கு இந்திய வங்கிகள் வளைத்து வளைத்து செய்யும் மோசடியை கவனிப்போம்.
இந்தியா சென்ற 2006 ஆண்டு பெற்ற ஒட்டு மொத்த அயல்நாட்டு நேரடி இன்வெஸ்ட்மெண்ட் Foreign Direct Investment $ 16 பில்லியன் டாலர்கள்.
அதாவது 16 x 1000 x 1000000 x 41 = Rs.656,000,000,000 = அறுநூற்று ஐம்பத்து ஆறாயிரம் கோடி ரூபாய்கள்.
Bahran, Kuwait, Oman,Qatar, Saudi,UAE நாடுகளில் வசிக்கும் வளைகுடா வாழ் வெளிநாட்டு இந்தியர் இந்தியாவுக்கு 2006ம் ஆண்டில் அனுப்பி வைத்த மொத்த தொகை Total Gulf NRI remittance to India $ 25 பில்லியன் டாலர்கள்.
அதாவது 25 x 1000 x 1000000 x 41 = Rs.1,025,000,000,000/- ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேல்.
Foreign Direct Investment செய்யும் நிறுவனங்கள், நாடுகள், அமைப்புகளுக்கு இந்திய அரசு ஏராளமான சலுகைகள் தருகின்றன.
மேற்கத்திய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் அங்கேயே வீடு, உயர்படிப்பு,என்று சொத்து சௌகர்யங்களுக்கே தங்கள் பணத்தை மேற்கத்திய வங்கிகள் மூலமாகவே 90% பரிவர்த்தனை செய்தபடி அவர்கள் இருக்கும் அயல்நாட்டிலேயே தாங்கள் ஈட்டிய பணத்தைச் செலவிடுகிறார்கள்.
அயல்நாட்டில் உழைத்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு 26 பில்லியன் டாலர்கள் தொகையை (ஒரு லட்சம் கோடி ரூபாய்)அனுப்பும் வளைகுடா இந்தியர்களுக்கு இந்திய அரசாங்கம் ஏராளமான இன்னல்களை மட்டுமே அள்ளித்தருகின்றன.
இந்திய வங்கிகளில் புழங்கும் அயல்நாட்டு இந்தியர் பணத்தில் 70% வளைகுடா வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணமே.
வளைகுடாவில் இருந்து வேலை செய்து பொருளீட்டும் இந்தியர்களில் 90 சதவீதம் இந்திய வங்கிகளின் வாயிலாக மட்டும் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள்.
வளைகுடா ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கிராமங்களில், டவுன் பஞ்சாயத்துகளில் இருக்கும் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள். Foreign Exchange NRI account remittance வங்கிகளின் மாவட்ட தலைமையகத்திற்கு டிராப்ட் தரப்பட்டு வளைகுடா ஊழியரின் ஊர்க்கிளையில் வரவு வைக்க Out station collection charge என்ற வகையில் ஒவ்வொருவரின் பரிவர்த்தனைக்கும் 100 ரூபாய் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. குறைந்தபட்சம் ஒருவாரம் பதினைந்து நாட்கள் வரவு வைக்க ஆகிறது.
வங்கியின் வசம் இருந்த தொகைக்கு 14நாட்கள் வட்டி வீதத்தில் வட்டியும் கணக்குவைத்திருப்பவருக்கு வராது!
இந்திய வங்கிகளில் (டொமஸ்டிக் டெபாசிட்டுகளுக்கு) உள்நாட்டு பண வைப்பு வட்டி 9 %சதவீதம். வளைகுடா வாழ் இந்தியர்க்கு பண வைப்பு வட்டி 5.25%
இந்திய உள்நாட்டுப் பண வட்டி வீதத்திற்கும், வளைகுடா/வெளிநாடுவாழ் இந்தியர் பண வைப்புக்கும் இடையே யான வட்டி வீத வித்தியாசம் 3.75%
ஆனால் இந்திய அரசியல் வா(ந்)திகள், இந்திய வங்கிகளுக்கு வளைகுடா இந்தியர் அனுப்பும் பணத்திற்கு வளைத்து வளைத்து கட்டணம், டெபாசிட்டுக்கு வட்டிக்குறைப்பு என்று சலுகை பறிப்பு திட்டமிட்டு செய்துவிட்டு,பினாமிகள் மூலம் வளைகுடாவில் இருந்து உழைத்துச் சம்பாதித்த பணத்தை அனுப்புபவர்களைக் குறிவைத்து அணுகி, நீங்க ஹவாலா முறையில் அனுப்பினால் எக்சேஞ் ரேட் குறைவு, மறுநாளே பணம் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுவிடும் என்று அரசியல்வா(ந்)திகளின் பினாமிகள் இந்திய வளர்ச்சித்திட்டங்களில் ஊழல் செய்த கறுப்பு பணத்தை வெள்ளையாக்கி (Money Laundering-பணவெளுப்பு)அந்நியச்செலாவணி என்றும், Foreign Direct Investment என்று முகம் மாற்றி வந்து மீண்டும் இந்திய அரசின் வரிச்சலுகைகள் ஏராளம் பெறும் நிலை!
இந்திய வங்கிகளில் ஊழல் அரசியல்வா(ந்)திகள் ஆதரவும் ஆசியும் பெற்ற புண்ணாக்குத் தொழிலதிபர்கள் பெற்ற கடன்கள் வராக்கடனாக நிலுவையில் நின்றுபோய்விட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்களை இந்திய வங்கிகள் மீட்க வக்கில்லை! வெக்கமும் இல்லை!
வளைகுடா நாடுகளில் ஐம்பது டிகிரி வெய்யிலில், பாலைவனத்தில் உண்மையாய் வியர்வை உருக உழைத்து ஊருக்கு அனுப்பும் பணத்திற்கு உரிய பலனை இந்திய வங்கிகள் தர மறுக்கின்றன!
வளைகுடாவாழ் இந்தியர்கள் அனுப்பும் ஆண்டுத்தொகை ஒரு லட்சம் கோடியின் மீது இந்த 3.75% டெபாசிட்வட்டி வீத பேதத்தைக் கணக்கிட்டால் வரும் வித்தியாசம் 3,843,350,000/- ஆண்டுக்கு 384 கோடி ரூபாய்கள், டிராப்ட் கலெக்சன் என்று 15 நாட்கள் தாமதத்திற்கான வட்டி இழப்பைச் சேர்த்தால் இன்னும் பலகோடி ரூபாய்கள் சேரும்.
வளைகுடா இந்தியர்கள் அனுப்பும் 26 பில்லியன் டாலர்கள் பணத்திற்கு இந்திய வங்கிகள் டெபாசிட் வட்டி குறைப்பு, டிராப்ட்கள் நிறுத்திவைக்கப்படும் குறைந்த காலத்திற்கு வட்டி தராத மோசடி என்பவைகளின் மதிப்பைக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு நூறுகோடி ரூபாய் என்று கணக்கில் கொண்டாலும் இதைவைத்து வளைகுடாநாடுகளில் பல இன்னல்களிடையே கட்டுமான வேலை செய்யும் பல லட்சம் இந்தியர்களின் அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரிகள் ஆண்டுக்கு 4 என்ற வீதம் மாநிலத்திற்கு மாநிலம் இந்திய அரசு துவங்கலாம்.
உருப்படியாக இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை அனைத்து தளங்களிலும் மேம்படுத்த நல்லதாக எதையுமே யோசிப்பதில்லை, ஒன்றைக்கூட நல்லதாக செயல்படுத்துவதில்லை இந்திய அரசியல்வா(ந்)திகள். இவர்கள் செய்வதெல்லாம் இந்தியர்களை ஒற்றுமையாக இருக்கவிடாமல் மதம், சாதி, இனம் என்று பல்வேறு வகையில் கூறுபோட்டு மக்களின் உழைப்பினை ரத்தத்தை உறிஞ்சுவது மட்டுமே!
அன்புடன்,
ஹரிஹரன்
5 comments:
38702
டெஸ்ட் மெசேஜ்!
அருமையான பதிவு.
விழிப்புணர்வூட்டும் இந்த பதிவை அனைவரும் படிக்கவேண்டியது அவசியம்.
மனித சக்திகளை, மூளைகளை ஏற்றுமதி செய்வதற்கென ஒரு அரசாங்கம். குடும்பம், நண்பர்கள், நாடு, வீடு, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தையும் பிரிந்து இழந்து வேதனையிலும் மன உளைச்சலுடனும் பாடுபட்டு உழைக்கும் தைரியமிக்க அதே எளிய மக்களின் அறியாமையை அடித்தளமாக கொண்டு அவர்களின் உழைத்த பணத்தில் உடல் வளர்க்கும் வங்கிகள் இன்னொரு பக்கம்.
சில திரைப்படங்களில் கூட இதுபோல் அயல்நாடு பிழைப்பவர்களை வைத்து கிண்டலும் கேளியும் நடக்கிறது. இந்த பதிவு அவர்களை சிறிது சிந்திக்கவைக்கும் என நம்புவோம்.
அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஹரிஹரன் அய்யா.
பாராட்டுக்கு நன்றி மாசிலா.
இந்திய அந்நியச்செலாவணி கையிருப்பு ஜூன் 2007 நிலவரப்படி 203 பில்லியன் டாலர்கள்.
புதிதாக சென்னை எண்ணைய் சுத்தகரிப்பு நிலையம் போன்ற பெரும் தொழில் வளாகம் அமைக்க ஆகும் பட்ஜெட் 6 பில்லியன் டாலர்களே
சென்னையில் திருவொற்றியூர் முதல் பூந்தமல்லி வரை 40கிமீ தூரத்திற்கும், சுங்கச்சாவடி முதல் கிண்டி வரைக்கும் மெட்ரோ ரயில் தடம் அமைக்கத் தேவைப்படும் பட்ஜட் 21 பில்லியன் டாலர்கள் (9000 கோடி ரூபாய்)
வளைகுடா இந்தியர் அனுப்பும் அந்நியச் செலாவணியை இந்தமாதிரி கட்டமைப்பு வசதி ப்ராஜக்ட்களில் வங்கிகள் நேரடியாக பயன்படுத்தினால் தேசவளர்ச்சியில் பங்களித்த மனநிறைவும் பலனும் கிட்டும்.
இந்தியா இந்த 204பில்லியன் அந்நியச்செலாவணியை அமெரிக்காவுக்கும் வளர்ந்த மேற்கத்திய நாடுகளுக்கும் 1.5 முதல் 2% ஆண்டு வட்டியில் கடன் தருகிறது.
இந்தியா ஏழைநாடுதான்! தன் உள்நாட்டு கட்டமைப்பு மேம்பாட்டில் எந்த தொலைநோக்கும் இன்றி ஆனால் உலகத்துக்கே கணிணி நுட்பவியலாளர்களை தந்துதவும் நாடு!
பெரும் அந்நியச்செலாவணி ஈட்டித்தரும் இந்தியர்களுக்கு எந்த ஒரு மேம்பட்ட கட்டமைப்பு வசதியும் உருப்படியாக இன்று வரை செய்து தராத அரசியல்வா(ந்)திகளை யார் தண்டிப்பது?
இந்தியா போன்ற அசுர வளர்ச்சி கண்டுவரும் நாடுகள் நீங்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல் தொலை நோக்கு 10, 20, 25 ஆண்டுகளுக்கான நீண்ட்கால திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும்.
இந்தியாவை சுற்றிலும் உள்ள எல்லை நாடுகள் அனைத்தும் நாட்டிற்கு பாதுகாப்பின்மையை போதித்து வருகின்றன. நுகர்வோர் சமுதாயமாகிவிட்ட நம் மக்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை சரிவர புரிந்துகொள்ள வேண்டும். நாட்டிற்கு தேவையான அதிவேக பாதைகள், பாலங்கள், விமான போக்குவரத்து வசதிகள், மக்கள் தொகை கட்டுப்பாடு, சீனாவின் அச்சுருத்தல், அமெரிக்காவின் கயவாளித்தனம், நேரம் பார்த்து எஞ்சியதை சுரண்ட காத்திருக்கும் ஐரோப்பா, பயங்கரவாதம் இன்ன பிற உண்மையான இன்று நீர் பூத்த நெருப்பாக நம்மை விழுங்க காத்துக்கொண்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் கருத்தில்கொண்டு தீர்மானங்கள் இப்போதே உடனடியாக செயலில் இரங்கவேண்டும்.
வங்கிகளில் தூங்கிக்கொண்டிருக்கும் பணங்களை ஏழை எளியவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் தங்களது குழந்தைகளை நல்லபடியாக படிக்கவைத்து வரும் காலங்களில் சில மேதைகளை நாட்டுக்கு அளிக்க உதவும்.
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல், அமெரிக்காவிற்கோ, ஐரோப்பாவிற்கோ கடன் அளிப்பது என்பது, நம் விரல்களை கொண்டு நாமே நம் கண்களை குத்திக்கொள்வதற்கு சமமாகும்.
இன்றைய தலைமுறை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் நம்மால் எதையும் மாற்ற முடியும். சாதிக்கவும் முடியும். அரசியல்வாதிகள் அப்படித்தான் என நம்பி பிரச்சினைகளை வளரவிடாமல் நம்மால் முடிந்ததை சாதிக்க உறுதி எடுக்கவேண்டும்.
வரப்போகும் தலைமுறைகள் கேட்கப்போகும் கேள்விகளுக்கு நாம்தான் பதில் சொல்லவேண்டி இருக்கும். கெட்டுப்போன உலகம் இப்படி ஆனதற்கு நம்மையே பொறுப்பு என சுட்டிக்காட்டவும் செய்வார்கள். இதற்கு நம்மால் மறுப்பு எதுவும் செய்யவும் முடியாது. அடுத்தவனை மட்டுமே குறை சொல்லி காலத்தை கழிக்கவும் முடியாது.
ஒரு சமுதாயம் கெட்டுப்போகிறது என்றால் அதற்கு அனைவருமே பொறுப்பேற்கவேண்டும்.
நான் புதிதாக "மாற்றி அமைக்கவேண்டிய இந்திய கல்விமுறை" என்கிற கூகள் குழுமம் திறந்து இருக்கிறேன். கருத்துகளை பரிபாறிக்கொள்ள அதற்கு உங்களை அழைக்கிறேன்.
இந்த கொடுமைக்கு இடையில் போஸ்டல் சார்ஜ் என்று 5 வெள்ளியை எடுத்துக்கிறாங்க(MT அனுப்பும் போது கூட).
Post a Comment