(178) ஹேப்பி பர்த் டே காந்திஜி!
பாரதத்தின் சுதந்திரப்போராட்டம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் காந்திஜி.
காந்திஜியின் சுதந்திரப்போராட்டங்கள் என்றதும் நினைவுக்கு வருவது உப்புச் சத்தியாகிரகப் போராட்டம்.
இங்கிலாந்தில் இருந்து பாரதம் வரும் கப்பல்களில், சீரான கடல்பயணத்திறக்காக கப்பலின் சீரான எடை நிரவலுக்காக உப்பு மூட்டைகள் கப்பல்களின் அடித்தளத்தில் நிரப்பிக்கொண்டு பாரதம் நோக்கிப் பயணிக்கும்.
இந்தக் கப்பல்கள் இங்கிலாந்துக்கு திரும்பச் செல்லும் போது பாரதத்தின் எண்ணற்ற வளங்களைக் கொள்ளையடித்து மூட்டை கட்டி எடுத்துச் செல்லும்.
இங்கிலாந்தில் இருந்து வந்த கப்பல்களின் மூலம் இப்படி நிறையச் சேர்ந்துவிட்ட உப்பை
என்ன செய்வது என்று யோசித்த ஆங்கிலேய அரசு, பாரதமக்கள் இங்கிலாந்து உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உள்நாட்டு உப்புக்கு வரிபோட்டு உத்தரவு போட்டது.
இதனால் இங்கிலாந்து உப்பு உள்நாட்டு உப்பை விட மலிவான விலைக்கு கிடைக்கும் சூழலை ஏற்படுத்தியது இங்கிலாந்து அரசு.
மூன்று பக்கம் கடல் சூழ்ந்த பரந்து பட்ட பிரிக்கப்படாத பாரத நாட்டில், பாரத மக்கள் ஏன் வெளிநாட்டு உப்பை தங்கள் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் உள்நாடு உப்பு மீது விதிக்கப்பட்ட வரியை நீக்கவேண்டும் என்று காந்தியடிகள் எதிரிப்புத் தெரிவித்தார்.
எதிர்ப்பு தெரிவிப்பதோடு இல்லாமல் ஆங்கிலேய அரசின் உத்தரவைத மீறி, உப்புச் சத்தியாகிரஹம் எனும் சுதேசி உப்புக் காய்ச்சும் போராட்டத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
ஆங்கில அரசு உப்புப் பெறாத இன்னுமொரு முட்டாள் போராட்டத்தை காந்தியடிகள் முன்னெடுப்பதாக அசட்டையாக நினைத்தது.
12 மார்ச் முதல் 06 ஏப்ரல் வரை 1930 ஆண்டில் காந்திஅடிகள் உப்புக்காய்ச்சும் போராட்ட யாத்திரையை 400 கி.மீ தூரம் நடந்து மேற்கொண்டு தண்டி கடற்கரையில் நடத்தினார். தமிழகத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்புக் காய்ச்சும் போராட்டம் நடந்தது.
தண்டி கடற்கரையில் உப்புக் காய்ச்சும் காந்தியடிகள்
ஆனால் பாரதம் முழுவதும் மக்கள் முழுமையாக இணைந்து போராடும் போராட்டமாக உப்புச்சத்தியாகிரகம் உருவெடுத்தது. பிரிக்கப்படாத பாரதத்தின் முப்புறமும் நிறைந்த பரந்துபட்ட கடற்கரைகள் அனைத்திலும் பாரத மக்கள் கூடிச் சேர்ந்து ஆங்கிலேயர்களின் அரசுக்கு தமது கடுமையான எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவிக்க ஏதுவான எளிமையான போராட்டமாக உப்புச்சத்தியாகிரகப்போராட்டம் வலுப்பெற்றது.
ஆங்கிலேய அரசு மக்கள் மீது மிகவும் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது.
காந்தியடிகள் பாரத மக்களிடையே நடைமுறைப்படுத்திய ஒத்துழையாமை போராட்டத்தில் வெகுஜன மக்கள் திரளாகப் பங்கேற்ற நிகழ்வுகளில் முக்கியமானது உப்புச்சத்தியாகிரகப் போராட்டம்.
கடல்நீரை எடுத்துவந்து கடற்கரையில் ஊற்றுவது என்பது தான் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டம். மிக எளிதான போராட்டம். ஆனால் மக்களின் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் போராட்ட மன உறுதியை பன்மடங்கு ஏற்றிய போராட்டம்.
முதல் நபர் கடல் நீரை எடுத்து வந்து கடற்கரையில் ஊற்றுவார். ஆங்கிலேயபோலீஸ் சட்டத்தை மீறியதற்காக அந்த நபரை தடியால் அடித்து மண்டையை உடைத்து தண்டிக்கும்.
அடுத்ததாகப் போராட்டம் செய்ய வேண்டிய ஆள் (பொதுஜனம்) முதலில் போராட்டம் செய்து வெள்ளைக்காரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடியால் அடிபட்ட நபருக்கு முதலுதவி செய்து விட்டு, அடுத்து தனக்கு இதே நிலை தான் என்பதை அறிந்த, தெரிந்துகொண்ட நிலையில் கொள்கைப் பிடிப்போடு கடல் நீரை எடுத்துவந்து கடற்கரையில் ஊற்றிய படிக்கு உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
இப்படி பாரத தேசமெங்கும் அமைதியாக கொள்கையுடன் உப்புக்காகப் போராடும் பல லட்சம் பேரை வெள்ளைக்கார போலீஸ் அடித்து துன்புறுத்தினாலும் இறுதியாக தோல்வி கண்டது.
பல்வேறு சூழல் நிலையில் இருந்த பொது மக்களை கொள்கையால் ஒருங்கிணைத்துச் செல்லும் திறன் அஹிம்சைப் போராட்டத்திற்கு மட்டுமே உண்டு என்று உலகிற்கு உணர்த்தியவர் காந்தியடிகள்.
மதுரை வந்த காந்தி அப்பகுதி மக்கள் வறுமை நிலை கண்டு வருந்தி அவர்கள் நிலை மேம்படும் வரையில் தனக்கு ஆடம்பர உடை தேவையில்லை என்று சொல்லி தனது எஞ்சிய வாழ்நாள் முழுதும் நாலுமுழ வேட்டியே அணிந்தார்.
அரைவேட்டி உடையுடன் இங்கிலாந்து பிரதமர் வீட்டின் முன் காந்தியடிகள்
Ireland, Kosovo, Serbia, Srilanka, Malaysia, மத்திய கிழக்கு என்று பல தேசங்களில் அதன் தலைவர்கள் மதம் கொண்டு மக்களை (தரம்)பிரிக்கையில், பாரதத்தை மதம் கொண்டு முகம்மது அலி ஜின்னாவும், ஆங்கிலேயரும் பிரித்த பின்னரும், மதத்தின் காரணமாக இந்தியாவை விட்டுச் செல்லவேண்டியதில்லை... தொடர்ந்து வசிக்கலாம் என்று இந்தியாவின் பெரும்பான்மை மதத்தினரை மத உணர்வுரீதியாக பெருந்தன்மையாக, சகிப்புத்தன்மையை முன்னெடுக்கவைத்த உண்மையான மக்கள்தலைவர் காந்தியடிகள்.
காந்தியடிகளின் கொள்கைகளால்தான் இன்றைக்கும் பாரத தேசத்தின் வெகுஜன மக்கள் ரசிக்கும் விளையாட்டான கிரிக்கெட்டில் பிற மதத்து அசாருதீன்கள் தலைமையேற்கவும், இர்பான் பதான், ஜாஹீர், முகம்மது கைப்-கள் தொடர்ச்சியாக விளையாடவும், அகம்மதி போன்றோர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, முகம்மது ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதியாக வலம் வர முடிகிறது.
காந்தியடிகளும் (முகம்மது அலி ஜின்னா போன்று) மத ரீதியாக இசுலாமிய மக்கள் பாகிஸ்தான் போயே ஆகவேண்டும் என்று நிலைப்பாடு எடுத்திருந்தால், இன்று இந்தியர்களாக (ஜஹாங்கீர்) ரத்தன் டாட்டா, அப்துல்கலாம், அஜிம் பிரேம்ஜி போன்றோர் நம்மிடையே இருந்திருக்க முடியாது போயிருக்கும். இவர்கள் தத்தம் திறமையால் வெற்றி அடைய அவர்கள் திறமையை மதம் தவிர்த்த மனதால் ஏற்றுக்கொள்ளும்படியான All inclusive Pluralistic சமூகமாக பாரத சமூகம் தொடர முக்கியமான சமயத்தில் தருமமான முடிவை 1947ல் எடுத்த உன்னதமான தலைவர் காந்தியடிகள்.
பாரதத்தின் சனாதன தருமம் என்பது அனைத்தையும் உள்ளடக்கிக்கொள்ளும் all inclusive தன்மை உடையது. காந்தி பாரதப்பிரிவினையின் போது Hindu Exclusive தேசமாக இந்தியா உருவாவதை எதிர்க்கவைத்தது சனாதன தரும all inclusive பாரதப் பாரம்பரிய சித்தாந்தமே.
பாரதத்தின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயரால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு, சாக்குச் சணலில் கைதி உடை அணிந்து உடல் முழுதும் அரிப்பெடுத்து சொறிந்து சொறிந்து உடல் புண்ணாகி சீழ்பிடித்து சிதைந்து மடிந்த பல்வேறு முகம் தெரியாத பாரத சுதந்திரபோராட்ட வீரர்களை காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று நினைத்துக் கொள்கிறேன்.
வெளிஉலக சுதந்திரம் கிடைக்கும் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் டீன் ஏஜ் மாணவனுக்கு முதல் எதிரியாக எள்ளலுக்கு உள்ளாவது அவனது சொந்தத் தந்தைதான்.
இத்தனைக்கும் மகன் கல்லூரிப்படிப்பும் விடுதி வாழ்க்கை என வெளிஉலகில் சுதந்திரமான சூழலில் இருந்து அனுபவம் பெற அடிநாதமாய் இருப்பது தந்தைதான்.
இன்றைய சுதந்திரமான சூழலில், படித்த பாரத தேச இளைஞர்கள் நமது தேசத்தந்தையான காந்தியடிகளை இப்படித்தான் தங்கள் இஷ்டத்துக்குப் பேசுவது என்று ஏகமாக எள்ளி நகையாடுகிறார்கள்.
இருபது ஆண்டுகள் முன்பாக தந்தையின் காசில் விடுதியில் தங்கிப் படித்த கல்லூரி மாணவன் தான் நான். சொந்த அப்பனையே எந்தப் புரிதலும் இல்லாமல், விடுதியிலும் நேரிலுமாக அப்போது நையாண்டிகள் பல செய்தவன் தான் நான்.
காந்திக்கு இருந்த சமூக அக்கறையில் புள்ளி அளவுக்கு இல்லாமலே அவர் செயல்களை ஒப்புக்கொள்ளாது விமர்சித்தவன் தான் நான்.
இன்று என் தந்தை எனது வெளிஉலக, பொருளாதார சுதந்திரம் பெற்றுத் தந்த கல்விக்காகச் செய்த தியாகமும், உழைப்பும், ரத்தத்தை வியர்வையாகச் சிந்திய அருமையை உணர்கிறேன்.
அதே மாதிரியே நமது தேசத்தந்தை காந்தியடிகளின் அருமையை உணர / விமர்சிக்க எவருக்கும் உண்மையில் ஒரு அருகதை வேண்டும் என உணர்கிறேன்.
ஹாப்பி பர்த் டே காந்திஜி!
Let us think of Reflecting some of the Gandhian values in our day to day life.
அன்புடன்,
ஹரிஹரன்
8 comments:
39,959
டெஸ்ட் மெசேஜ்!
//
Hariharan # 03985177737685368452 said...
39,959
டெஸ்ட் மெசேஜ்!
//
டெஸ்ட் சக்சஸ்
ஹேப்பி பர்த் டே காந்திஜி
வணங்குகிறோம்
Manadhai thotta padhivu
நெகிழ வைக்கும் பதிவு. அதே சமயம், இப்படிப்பட்ட வெள்ளைக்காரன் ஆட்சிதான் வேண்டும், இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம், அதுதான் பகுத்தறிவு என்று ஒருவர் திரிந்து கொண்டிருந்தாரே, அவரையும் நினைக்க வைக்கிறது
வாஞ்க மங்களூர் சிவா,
தங்களது வணக்கங்களை காந்திஜிக்கு அனுப்பியாகிவிட்டது.
தங்களது வருகைக்கு நன்றிகள்.
//Manadhai thotta padhivu//
வாங்க கீதா,
காந்திஜி நம் அனைவர் மனதிற்குள்ளும் இருப்பவர்தானே.
அதனால்தான் அவர் பற்றி நான் எழுதினாலும் எளிதில் படிப்பவர் மனதைத் தொட்டுவிடமுடிகிறது:-))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
//நெகிழ வைக்கும் பதிவு. அதே சமயம், இப்படிப்பட்ட வெள்ளைக்காரன் ஆட்சிதான் வேண்டும், இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம், அதுதான் பகுத்தறிவு என்று ஒருவர் திரிந்து கொண்டிருந்தாரே, அவரையும் நினைக்க வைக்கிறது//
வாருங்கள் குணசேகரன்,
காந்தியின் வாழ்ந்துகாட்டிய மெய்யான அஹிம்சை,நேர்மை, எளிமை, கொள்கைப்பிடிப்பு மிகுந்த அமைதியை முன்னிறுத்தும்படியான வாழ்க்கை பாரதம் தாண்டி உலகெங்கும் போற்றப்படுகிறது.
மேற்கத்தியர் காந்தியின் வாழ்க்கையை திரைப்படமெடுத்து போற்றினார்கள்.
நோபல் பரிசு வழங்குவோர் ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு தரும்போதும் காந்தியடிகளுக்கு அவர் வாழ்ந்த நாட்களில் தராது போனதற்கு வருத்தம் தெரிவித்தபடி இருக்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிடும் நபர் முன்னிறுத்தியது துவேஷம் மட்டுமே.
தான் சண்டியராய் வாழ்ந்து சண்டியர்களை சீடர்களாக உருவாக்கி சண்டித்தனமாக தமிழக அரசு பொதுமக்களின் வரிப்பணத்தை வாரிவழங்கி திரைப்படம் எடுத்தாலும் நகரி தாண்டினாலே "நாகு தெலீது" எனும் அளவுக்கு பாரத மக்கள் மனதில் இடம் பெற்றவர்.
காற்றிலே குப்பை பறந்து கோபுரத்தின் மீது அமர்ந்து உயர்ந்தாலும் கோபுரம் வேறு குப்பை வேறு எனும் பகுத்தறிவு மக்களுக்கு இன்னும் இருக்கிறது.
இன்றைக்கு எவர் என்ன வசையாகச் சொன்னாலும் காந்தியடிகளின் புகழை ஏதும் செய்ய முடியாது.
வரலாறு விடுதலை செய்யும் உண்மை இதுவே.
Post a Comment