Sunday, October 21, 2007

(179) தமிழின முப்பாட்டன் இராவணன்..அருணகிரிநாதர் எனும் ஆரிய அடிவருடி!!

தமிழின வரலாறு வலைப்பூ வழியா கத்துக்கிட்டா எங்க ரீச்சாவீங்க? பதில் பதிவின் கீழே!

இட்லிவடையின் இந்தப்பதிவில் படித்த தொல்.திருமாவளவன் தந்த புல்லரிக்கும் வரலாற்று விளக்கம் இது:


"ராமன் என்பவன் யார்? ராவணனை அழிக்க இலங்கைக்கு, குரங்குகளின் துணையோடு படையெடுத்து சென்றவன். ராவணன் யார் ? நம்முடைய முப்பாட்டன். தமிழன், தமிழ்ச்சங்கம் வளர்த்து தமிழை வளர்த்தவன். ஒரு தமிழனை அழிப்பதற்காக வட மாநிலத்தில் இருந்து படையெடுத்துச் சென்ற ராமன், அதற்காக கட்டிய பாலம் ராமர் பாலம் என்றால், நம்முடைய விரோதி கட்டிய ராமர் பாலம் என்று ஒன்று இருந்தால், அதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கவும் தயார்" - விடுதலைசிறுத்தை திருமாவளவன்


இன்றைய எனது இணைய மேய்ச்சலை நீட்டி இன்னொரு சக பதிவர் பதிவிலே போனால் அவர் படித்து மகிழ்ந்த அருணகிரியார் பாடலுக்கு தந்த விளக்கத்தைப் படிக்கையிலே, அருணகிரி எப்படிப்பட்ட பச்சையான ஆரிய அடிவருடி என்பதை தமிழின துரோகியான அருணகிரியின் இந்தப்பாடல் விளக்கிவிட்டது.

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

கொத்தப்பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!


தமிழ்ச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த, தமிழின முப்பாட்டனான இராவணனின் பத்துத் தலைகளையும் வெட்டிச்சாய்த்தவன் முருகப்பெருமான்னு எழுதியிருக்கும் அருணகிரி மட்டும் இன்னிக்கு இருந்திருந்தா சிறுத்தையா பாய்ஞ்சு அவரோட அருணாக்கொடியைப் பிடித்து தலையைச் சுத்தி வீசுவதில் தமிழின எதிரி அருணகிரி தமிழின முப்பாட்டன் இராவணனின் தேசத்தில் போய் விழவேண்டியிருக்கும்!


முத்தமிழுக்கும் முதல்வன் முருகப்பெருமான். முருகன் அக்மார்க்/ISO தரம் பெற்ற ஒரிஜினல் தமிழ்க்கடவுள். ஆகவே முருகப் பெருமான் தமிழின முப்பாட்டன் இராவணனின் பத்து தலைகளைத் தன் கூரிய வேலால் எப்படிக் கொய்திருக்க முடியும்???


அருணகிரிதான் அந்தக்காலத்திலே ஓ போட்ட ஆ.வி.ஞானி ! தமிழின் மீது பற்று இருப்பது மாதிரி தமிழின முப்பாட்டன் இராவணனது பத்துத் தலைகளை தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வைத்தே வேலால் கொய்ய வைத்து மகிழ்ந்திருப்பதைப் பார்த்தாலே லெமூரியாக் கண்டம் மூழ்கி தமிழினம் பிரிந்த வரலாறு புரிபடும்!

இப்படிப்பட்ட தமிழின துரோகியான ஆரிய அடிவருடி அருணகிரிநாதர் திருஅண்ணாமலையின் உச்சியிலிருந்து குதித்தபோது தமிழ்க்கடவுள் முருகன் தோன்றி அவரைக் காத்தது மட்டுமின்றி அருணகிரியின் நாக்க்கில் முத்தமிழின் அப்டேட்டட் வெர்ஷனை கூர்வேலால் என்க்ரிப்ட் செய்தும் விட்டார் என்று புரட்டையும் பரப்பியவர் அருணகிரிநாதர்!


ஆதியிலிருந்தே தமிழனுக்கு நகைச்சுவை அதிகம்! இணையத்தில் இறைந்து கிடக்கிறது தமிழினமான நகைச்சுவைகள்! சிறுத்தை மாதிரி பாய்ந்து தாக்குகிறது சிறப்பான நகைச்சுவை.

குவிஸ் பதில்: தமிழின அரசியல் வாதியின் வரலாற்று விளக்கம் மூலமாக, மேற்கொண்டு இணையத்தில் தமிழ்வலைப்பூ வாயிலாக வரலாற்றைப் படித்தால் நீங்கள் ரீச்சாகும் இடம் சென்னையின் கீழ்ப்பாக்கம், வேலூரின் பாகாயம்!


அன்புடன்

ஹரிஹரன்

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

40,266
டெஸ்ட் மெசேஜ்!

RATHNESH said...

//இன்னொரு சக பதிவர் பதிவிலே போனால் அவர் படித்து மகிழ்ந்த அருணகிரியார் பாடலுக்கு//

அந்தப் பதிவர் நானே. நான் படித்து மகிழ்ந்தது அருணகிரி நாதரின் தமிழ்ச் சொற்களின் மீதான ஆளுமைக்காகவும் சந்தச் சிறப்புக்காகவும் தான்.

பாடலை அவசரப்பட்டு தவறாகப் பொருள் புரிந்து கொண்டீர்களா? முருகன் இராவணனின் தலைகளைக் கொய்தான் என்று சொல்லவே இல்லை;

"இராவணனுடைய பத்துத் தலைகளும் விழுமாறு அம்புகளைத் தொடுத்தவனும், மந்திர மலையை மத்தாகக் கொண்டு கடைய உதவியவனும், பட்டப்பகலில் வட்டமான சக்கரத்தில் சூரியனை மறைத்து இரவு ஆக்கியவனும், பக்தனாகிய அர்ச்சுனனுக்காக ரதம் ஓட்டியவனும், பச்சை நிறம் பொருந்தியவனும், மேகம் போன்றவனுமாகிய, திருமாலே புகழும் படியான பொருளாக விளங்கும் நீ" என்கிற பொருளில் தான் பாடல் அமைந்திருக்கிறது.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க ரத்னேஷ்,


//இராவணனுடைய பத்துத் தலைகளும் விழுமாறு அம்புகளைத் தொடுத்தவனும், மந்திர மலையை மத்தாகக் கொண்டு கடைய உதவியவனும், பட்டப்பகலில் வட்டமான சக்கரத்தில் சூரியனை மறைத்து இரவு ஆக்கியவனும், பக்தனாகிய அர்ச்சுனனுக்காக ரதம் ஓட்டியவனும், பச்சை நிறம் பொருந்தியவனும், மேகம் போன்றவனுமாகிய, திருமாலே புகழும் படியான பொருளாக விளங்கும் நீ" //

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் நிலை வடநாட்டானாகிய திருமால்-கிருஷ்ணனிடம் பர்பார்மன்ஸ் சர்டிபிகேட் வாங்கும் நிலையில் இருந்ததாகச் சொல்லும் அருணகிரிநாதர் ஆரிய அடிவருடியே என்று யோசித்து உணர்வது இணைய வலைப்பூ அரசியல் தமிழின உணர்வு/பகுத்தறிவு!

எனது ஒன்றரை வருட வலைப்பூ வாசிப்பில்-பிரவேசத்தில் வலைப்பூ தமிழினமான உணர்வு-பகுத்தறிவு ஆற்றும் எதிர்வினையை ஓரளவு சரியாகத்தான் புரிந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன் ரத்னேஷ்:-))

RATHNESH said...

இணைய வலைப்பூ அரசியல் தமிழின உணர்வு/பகுத்தறிவு!

வலைப்பூ தமிழின மான உணர்வு-பகுத்தறிவு ஆற்றும் எதிர்வினை

என்கிற பதங்களுக்கு நிஜமாகவே எனக்கு அர்த்தம் தெரியவில்லை.

Hariharan # 03985177737685368452 said...

//இணைய வலைப்பூ அரசியல் தமிழின உணர்வு/பகுத்தறிவு!

வலைப்பூ தமிழின மான உணர்வு-பகுத்தறிவு ஆற்றும் எதிர்வினை

என்கிற பதங்களுக்கு நிஜமாகவே எனக்கு அர்த்தம் தெரியவில்லை.//

ரத்னேஷ்,

நிஜமாவே தெரியலையா:-)) நம்புகிறேன்.


//"இராவணனுடைய பத்துத் தலைகளும் விழுமாறு அம்புகளைத் தொடுத்தவனும், //

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழின முப்பாட்டன் இராவணனைக் கொலைசெய்த தமிழின துரோகி திருமால் அக்மார்க் தமிழ்க்கடவுளாம் முருகனைப் புகழ்வதாக பாடல் பாடிய அருணகிரி அப்பட்டமான ஆரிய அடிவருடியே!

//மந்திர மலையை மத்தாகக் கொண்டு கடைய உதவியவனும்,//

மலையால் பாற்கடலைக் கடைந்த போது தமிழின முன்னோர்களாஇ நயவஞ்சகமாக பாம்பின் தலைப்பகுதியைத் தந்தவனும், கிடைத்த அமிழ்தை ஆரியர்களான தேவர்களுக்கு மட்டும் மோகினி வேடம் போட்டு பரிமாறியவனும், நடுவிலே புகுந்து அமிழ்தைக் குடித்த முப்பாட்டன்கள் வகையறாக்களான ராகு கேதுவின் தலையைச் சக்ராயுதத்தால் கொய்த நயவஞ்சகனாகிய திருமால் அக்மார்க் தமிழ்க்கடவுளாம் முருகனைப் புகழ்வதாக பாடல் பாடிய அருணகிரி அபாயகரமான ஆரிய அடிவருடியே

//பக்தனாகிய அர்ச்சுனனுக்காக ரதம் ஓட்டியவனும், பச்சை நிறம் பொருந்தியவனும், மேகம் போன்றவனுமாகிய, திருமாலே புகழும் படியான பொருளாக விளங்கும் நீ" //

அர்ஜூனனை கொலைசெய்யத் தூண்டி, வருண பேதம் போதிக்கும் பகவத்கீதையை உரைத்த திருமால் அக்மார்க் தமிழ்க்கடவுளாம் முருகனைப் புகழ்வதாக பாடல் பாடிய அருணகிரி ஆரிய அடிவருடியே!

இப்படித்தானே இருக்கிறது வலைப்பூக்களில் தமிழின மான உணர்வு-பகுத்தறிவு ஆற்றும் எதிர்வினை :-))

மங்களூர் சிவா said...

//
முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண
//
முருகா , கந்தா , கடம்பா, கதிர்வேலா, கார்த்திகேயா எல்லாரையும் காப்பாத்துப்பா

Anonymous said...

Your comments Are weird.. with regard to Arunagirinathar's work.

First of all the 10 heads refer to the varios dimension of phenomenal life and destroying them means going beyond and reaching the noumenal (nonexistent) world.

Sen