Monday, December 03, 2007

(184) ஈவெராவின் கொளுகைக் களுதையை 100% பின்பற்றிய வீரமணி...புளகாங்கிதப்படும் கருணாநிதி...

தமிழ்நாட்டின் தற்போதைய டாப் நகைச்சுவை நடிகர் யார்?

கைப்புள்ள வடிவேலுவோ சின்னக் கலைவாணர் விவேக் என்றோ நினைத்தால் தவறு. தமிழக முதல்வர் மு.கருணாநிதி அந்த இடத்தைப் பிடித்துவிட்டார்!

நேற்றைக்கு இந்த சாதனையை கருணாநிதி இப்படி நகைச்சுவையாகப் பேசி நிகழ்த்தியிருக்கிறார்:

பெரியாரின் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர் வீரமணி. பெரியார் தனது நாய் குட்டிக்கு பால் வாங்கிவரும்படி வீரமணியிடம் கூறினார். கடைக்கு சென்ற வீரமணி பால் வாங்காமல் திரும்பி வருகிறார். பெரியார், ஏன் பால் வாங்க வில்லை என்று கேட்டதற்கு பிராமணர் ஓட்டலாக இருந்ததால் வாங்கவில்லை என்று வீரமணி கூறியுள்ளார்.


பெரியார் பிராமணர் ஓட்டலில் எதுவும் வாங்க கூடாது என்று கூறியதற்காக நாய்க் குட்டிக்கு கூட பால் வாங்காமல் வரும் அளவுக்கு அவ்வளவு பிடிவாதமாக கொள்கையை காப்பாற்றியவர் வீரமணி என்கிற போது புளகாங்கிதம் அடைந்தேன்.
என்னையே பாராட்டிக் கொள்கிறேன் எவ்வளவு பெரிய சகோதரனை பெற்றிருக்கிறேன்.


ஈவெராவுக்கு மெய்யாவே கொளுகைன்னு ஒன்னு இருந்துச்சா???
ஈவெராவின் கொளுகையை அவரே பின்பற்ற நினைத்ததில்லை!

எக்ஸாம்பிள்ஸ் சிலது பார்க்கலாம்:

ஈவெராவின் தந்தை வழிச் சொத்து முழுதும் ஈவெராவுக்கு கிடைக்கும்படி நீதிமன்றத்தில் வாதாடி பெற்றுத்தந்தவர் திரு.ராஜகோபாலாச்சாரியார் எனும் பிராமணரே!

கருணாநிதியின் குடும்ப மருத்துவர், வக்கீல், ஆடிட்டர் எல்லோரும் பிராமணர்களே!

பொய்ப் பகுத்தறிவுப்பால் ஊட்டி சமானியத் தமிழர்களை நோஞ்சான் நாய்க்குட்டிகளாக்கிவிட்டு வெட்கம் என்பதே இல்லாமல் எப்படிங்க இப்படி?

மிஸ்டர் ஜோக்கர் கருணாநிதி??? ஷேம் ஆன் யூ!

அடுத்து மூடநம்பிக்கையைப் பற்றி

பெரியாரின் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர் வீரமணி.

எப்படிங்க இப்படி? ஈவெராவுக்கே இல்லாத கொள்கையை எப்படி கண்ணைமூடிக்கொண்டு பின் பற்றி?? யே..அப்பா காமெடி இவ்வளவுக்கு கொட்டிக்கிடக்கு?

அப்புறம் கி. வீரமணி சார். இன்னொருவாட்டி அடுத்தவர்களின் மூட நம்பிக்கை பற்றி நீங்க பேசாதீங்க!

இன்னொரு விஷயம். உங்க நகைச்சுவைக் கூட்டணி நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது. வடிவேலு + விவேக் + கஞ்சாக்கருப்பு காம்பினேஷன் காமெடி எல்லாம் சும்மா ஜூஜூபி!

கங்ராஜுலேஷன்ஸ் டு மு.கருணாநிதி + கி.வீரமணி

கொசுறு நியூஸ்: பொய்ப் பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா எனும் நிரந்தர கொளுகை நகைச்சுவையாளனுக்கு கஞ்சாக்கருப்பு கருணாநிதியும் கைப்புள்ள கி.வீரமணியுமாச் சேர்ந்து பகுத்தறிவு நகைச்சுவைத் தலைநகரமாம் சென்னையில் 95 அடியில் சிலை வைக்கப்போறாங்களாம்.

சப் கொசுறு நியூஸ்: ரஷ்யா, மற்றும் ஐரோப்பாவில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் டிரான்ஸ் மைக்ரேட்டரி பறவைகள் சங்கம் 95அடி உயரமான டாய்லட் வசதியை தங்களுக்கு வழியில் சென்னையில் ஏற்படுத்தித் தருவதற்காக நன்றியை பகுத்தறிவு நகைச்சுவை இளையர்களான கஞ்சாக் கருப்பு கருணாநிதிக்கும் கைப்புள்ள கி.வீரமணிக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன!

அரசியல் திரா"விட" பெத்தடின் பகுத்தறிவுகளின் கொளுகைக் களுதையை நினைச்சு சிரிங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

8 comments:

Hariharan # 03985177737685368452 said...

40,964

டெஸ்ட் மெசேஜ்!

ஜயராமன் said...

பெரியாருக்கு சிலை வைப்பதில் என்ன வீரம் வந்து விடப்போகிறது? - அதுவும் மஞ்சள் துண்டு ராஜ்ஜியம் நடக்கும் இடத்தில். இதில் முதல்வர் "என்ன தடை வந்தாலும்" என்று முன்னமே ஒரு வீர முழக்கம் செய்து இது ஏதோ பெரிய்ய சாதனை போல காட்டிக்கொள்ள முயல்கிறார். ஆம், நீங்கள் சொன்னதுபோல் நல்ல நகைச்சுவை.

உண்மையில் பெரியார் அவர்களின் கொள்கைகளிலோ அவரின் கருத்துக்களின் நேர்மையிலோ கொஞ்சமும் நம்பிக்கை இல்லாத ஒரு இயக்கமாகத்தான் திமுகவை நடத்திக்கொண்டிருக்கிறார் அதன் இப்போதைய தலைவர். அவருக்கு உண்மையில் வீரம் இருக்குமானால், பெரியாரின் முக்கிய ஐகானிக் கொள்கைகளாக கருதப்படும் சிலவற்றை எல்லா திமுகவினருக்கும் நடைமுறைப்படுத்தட்டும். பின்னர் இவரின் வீரத்தை ஒப்புக்கொள்ளலாம். எல்லா திமுகவினரும் கடவுள் மறுப்பு உறுதிமொழிஏற்கவும், சுயமரியாதை திருமணம் மட்டுமே செய்யவும் இவர் நிபந்தனை விதிப்பாரா? தன் கூட்டத்திலேயே செல்லாக்காசாவிட்ட இவரின் கொள்கைகளை கொண்டு இவர் வெத்துவேட்டு விடுவதுதான் பகுத்தறிவின் மிகப்பெரிய பெத்தடின் காமெடி.

நன்றி

ஜயராமன்

Hari said...

Back with a bang :)

வீரமணி ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்த போது, அவரது கொளுகையை போயஸ் வீட்டின் செருப்பு விடும் இடத்தில் வைத்திருப்பாரோ?

Anonymous said...

Expect some more things from you.

மங்களூர் சிவா said...

படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க ஜெயராமன்,

ஈவெராவுக்கு இருந்தது கடவுள் மறுப்பு கொள்கையாமா?

சரி அப்போ எனக்கிருப்பது ஐன்ஸ்டீன் மறுப்பு கொள்கை.

தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டியை e=mC2 என்று சூத்திரமாகச் சொல்லிவிட்டுச் சென்றது எனக்குப் புரியவில்லை! எனவே மறுக்கிறேன்.

எனது இந்த ஐன்ஸ்டீன் மறுப்பு என்பது கொள்கையா? அல்லது எனது மடமையா?

ஒரு நபருக்குப் புரியாததை வைத்து உருவாக்கப்படுவது கொள்கையா?

Hariharan # 03985177737685368452 said...

//வீரமணி ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்த போது, அவரது கொளுகையை போயஸ் வீட்டின் செருப்பு விடும் இடத்தில் வைத்திருப்பாரோ?//

மானமிகு அவர்கள் தொலைநோக்கு இனமானத்திற்காக எடுத்த ஸ்ட்ராட்டஜிக் மூவ் அது!

கொளுகைக்கு மூச்சுப்பிடிப்பு வந்து மூவ் போட்டுக்கொண்டிருந்திருப்பார்!

Hariharan # 03985177737685368452 said...

வாங்க Krishnamurthy Venkatraman

//Expect some more things from you//

என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்னிடம்?

ஆனா இந்த மேட்டரில் ஒரு பாரம்பரியமாக நமது சமூகத்தில் சொல்லக் கேட்ட விஷயம் தெளிவாகிறது.

எண்பது வயதுக் கிழவன் குழந்தைக்குச் சமம்.

குழந்தை பொய் பேசாது!

84 வயது கருணாநிதிக் குழந்தை பகுத்தறிவுப் பார்ட்டிகளின் உண்மையான கொளுகைக் களுதையைப் புட்டுப் புட்டு வைத்துப் புளகாங்கிதப் பட்டிருக்கிறார்!