(185) ஈவெரா கொளுகைப்படி மானமிகு / இனமான தலைவனாவது எப்படி?
மடையா , மக்குன்னு மக்கள் பட்டப்பெயர் சூட்டிக் கலாய்ப்பதில் இருந்து மேம்பட்டு மானமிகு / இனமான என்று அடைமொழியோடு வானவில்லின் ஏதோ ஒரு கலர் துண்டு, சட்டை போட்டு உலா வரணும்னு ஆசைப்படும் மக்களுக்கு உங்கள் கனவு நனவாக இந்த ஐந்து ஸ்டெப் கொண்ட க்ராஷ் கோர்ஸ்.
மானமிகு -இனமான அடைமொழிகொண்ட தலைவன் ஆக ஸ்டெப் 1.
நாய் /பூனை/ஆடு/மாடு/கோழின்னு சகட்டு மேனிக்கு ஏதாவது ஒண்ணை தன் வீட்டில் வளர்க்கிற ஒரு பிரபலமான கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாய்சேகர்/நாய்பாஸ்கர் மாதிரி நபரிடம் கைத்தடியா சேர்ந்துடுங்க.
ஸ்டெப் 2.
பசித்திருந்து, தனித்திருந்து, வாய்ப்புக்கு விழித்திருக்க வேண்டியதில்லை.
அவசியம் மறக்காமல் தங்கள் உடன் எதிர்கால எவிடெண்ஸுக்கு வேண்டி ஒரு ஆளை கம்பெனிக்கு வச்சுக்குங்க!
ஆனா ஒரே ஒரு ஸ்டிரிக்ட் கண்டிஷன்! அவரும் இன்னொரு இனமான -மானமிகு தலைவனாகும் தீவிரமான கனவும்,எண்ணமும்டையவராக இருக்கணும்.
ஸ்டெப் 3:
நீங்க காத்திருந்தது வீண் போகலை. நாய் வளர்க்கும் பார்ட்டி உங்களை தீவனம் வாங்கி வரச்சொல்லிட்டாங்க.
ஸ்டெப் 4:
தெரு முக்கு சந்தைக் கடைக்குப் போய் அங்கேர்ந்து கீரைக்கட்டு /புண்ணாக்கு / நொய்யரிசித்தவிடு / பொறைன்னு எதையும் வாங்காம நோட்டம் விட்டுட்டுவந்துடணும்!
ஸ்டெப் 5:
இப்போ மிருகத்துக்குத் தீவனம் வாங்கிட்டு வரச்சொன்னவர் வெறும் கை வேந்தனா வந்து நிக்கும் உங்களைப் பார்த்து கேட்குமுன் நீங்களே சொல்லிடுங்க
1. நான் ஏன் நாய்க்கு பொறை வாங்கலை தெரியுமா? தமிழினாத்தின் உணவு அரிசிச்சோறு! பொறை வடநாட்டான்களின் உணவான கோதுமையால் செய்யப்பட்டதுன்னு!
முக்கியமா இந்த வரலாற்று இனமானப் போராட்டப் பாசறைப் பயிற்சியை உங்க கூட இருக்குற கூட்டணி ஆள்கிட்ட மேட்டரை அப்டேட் செஞ்சுக்குங்க!
நாளைக்கு நாயைப் பட்டினி போட்டு ஆரம்பிச்சு, பேவரிட் உணவா தந்தூரி ரொட்டி சாப்பிட்டபடிக்கு, இனமான மானமிகு தலைவனா கோலோச்சி 75 வயசு விழாவில் உங்க கோதுமை மறுப்பு கொள்கைப் பிடிப்பைப் பாராட்ட வசதியா இருக்கும்!
என்ன சந்தேகம் நாயைப் பட்டினி போட்டா ப்ளூக்ராஸ்கிட்ட மாட்டிப்போம்னா?
அட நீங்க வேற! நாய்க்கு கிடைக்க இருந்த பாலை கிடைக்க விடாம விழுந்து கெடுத்து நாயைப் பட்டினி போட்டா மானமிகுன்னு பட்டம் தமிழ்நாட்டில் மேடைபோட்டு நாமளே நமக்கு தந்துக்கிட்டதை சிலாகிக்கலாம்!
இந்த விஷயம் தெரிஞ்சா தெருநாய்கூட மதிக்காதுன்னு பொது அறிவு சொல்லுதா?
உங்களோட ஒரே அக்கப்போரா இருக்கு! தெருநாய்கூட மதிக்காத செயலைச் செஞ்சீங்கன்னா நீங்க சந்தேகமே இல்லாம்ம பகுத்தறிவுப் பகலவனின் பிரதான் சீடரா உருவாகிட்டீங்க!
கையைக் குடுங்க கங்கிராஜுலேஷன்ஸ்! நீங்க 101வது மானமிகு-இனமானத் தலைவன் இன் த மேக்கிங்!
குறிப்பு: டிஸ்கி:கி.வீரமணி சாரோட 75வது பிறந்த நாள்விழாவில் அவரது ஈவெரா வின் கொள்கைப்பிடிப்பை முதல்வர் மு.கருணாநிதி பேசிய புளகாங்கித பேச்சுக்கும் இதுக்கும் நோ சம்பந்தம்!
இப்படிக்கு,
வெளியே அதிகம் தெரியாத இன்னொரு மானமிகு-இனமானத் தலைவன்
ஹரிஹரன்
நான் இனமான-மானமிகுவான கதை சிறு குறிப்பாக உங்கள் பார்வைக்கு:
(பசியோடு இருந்த நாய்க்கு தெரு முக்கு நாயர் சாயா கடையில் பால் வாங்காமல் நாயர் தமிழனே அல்ல! மலையாளி என்று கொள்கைப்பிடிப்பைக் காட்டி மானமிகு-இனமானத் தலைவனானவன். எனக்கு இப்போது 39வயது இன்னும் 36 வருடம் கழித்து எனது கொள்கைப்பிடிப்பை எனது கஞ்சாக்கருப்பு மாதிரியான நெடுநாள் தோழனைவைத்து பிரகடனம் செய்வேந் விழாவில் அனைவருக்கும் அருகாமை அச்சுதன் நாயர் கடை சாயாவையும் சப்ளை செய்வேன்
அறிவிப்பு:
இந்த மானமிகு-இனமானத் தலைவன் ஆகும் கோர்ஸ் பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்கவும். கோர்ஸ் உள்ளடக்கம்-மேம்பாட்டுக்கான வாசகர் டிப்ஸ் வரவேற்கப்படுகின்றன.
5 comments:
41,078
டெஸ்ட் மெசேஜ்!
Romba Mukkiyam.. poyya un velaiya parthukkitte
:-))))))
"இப்படி உசுப்பி விட்டு விட்டுத்தான் உடம்ப ரணகளமா ஆக்கி வெச்சிருக்கானுங்க." - இதைப்படித்த முதல் மானமிகு.
"ஏண்டா! இன்னமுமாடா இந்த ஊரு நம்பள நம்புது....?" - இரண்டாவது மானமிகு.
- தமிழ்நாட்டில் புது காமடிப்பார்ட்டி ரெடி...
//Romba Mukkiyam.. poyya un velaiya parthukkitte//
வாங்க தமிழ்நெஞ்சம்,
நெஞ்சமெல்லாம் கோபமோ?
மேட்டர் ரொம்ப முக்கியமானதுதாங்க.
நம்ம ராமையா என்கிற க.அன்பழகன் சொல்லியிருக்காரு இப்படி " இன உணர்வில்லாத தமிழுணர்வால் பயனில்லைன்னு"
இப்பச் சொல்லுங்க நான் முக்கியமான வேலையான மானமிகு-இனமானத் தலைவனா ஆகுறதுக்கு லேட்டஸ்ட் ஈசி மெத்தட் சொல்லியிருக்கேனா இல்லையா?
கோபம் டென்ஷன் இன்னும் இறங்கலைன்ன்னா பதநீர் /மோர் குடிங்க.
//கி.வீரமணி சாரோட 75வது பிறந்த நாள்விழாவில் அவரது ஈவெரா வின் கொள்கைப்பிடிப்பை முதல்வர் மு.கருணாநிதி பேசிய புளகாங்கித பேச்சுக்கும்//
ஹரி,
அதெல்லாம் தவறாம படிக்கிறிங்க போல.
:)))))))))))))
Post a Comment