Thursday, June 29, 2006

(5) ஆதலினால் காதல் செய்ய முற்படுவீர்

முதலில் இரு கேள்விகள்:

1. ஒரு இருபத்தி இரண்டு வயது இளைஞனுக்கு வேப்பங்காயினும் கசந்திடக் கூடியது எது?

2. ஓடும் பாம்பை மிதித்திடும் ஆற்றல் உள்ள துடிப்பானவனைத் துடிதுடிக்கச் செய்திடும் வல்லமை உள்ளவைகளில் மிகக் கொடூரமானது எது?

முதல் கேள்விக்கு என் பதில்:

ஒன்றுக்கு மூன்று தாய் மாமாக்கள் இருந்தும் அவர்கள் அனைவருக்கும் தடி தடியாய் 6 அடி உயரத்திற்கு துவார பாலகர்களாய் ஆறு மகன்கள் மட்டுமே இருப்பது.

என் (துர்)அதிர்ஷ்டம் தாய்மாமா வழியிலோ, அத்தை வழியிலோ முறையான முறைப் பெண்களே இல்லாமல் போனது. நான் போடியிலிருந்து 12வது வரை படித்த போதெல்லாம் இந்த விஷயம் எனக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை.

கல்லூரியில் படித்த போது "அதிக அக்கறையான" நண்பர்கள் என் மூன்று தலைமுறை அளவுக்கு விசாரித்தில் எனக்கும் ஒரு உண்மை புரிந்தது, என்னை 1986-ல் தாக்கிய இந்த (துர்)அதிர்ஷ்டம் என் அப்பா, சித்தப்பாவையும் 1950-களில் தாக்கியிருந்திருக்கிறது என்று!

கல்லூரி நண்பர்களும் துக்கித்து, விசனப்பட்டுவிட்டு , பட்டென்று உஷர்ராகி என் இந்த துர்-அதிஷ்டக்காற்று தங்களைத் தாக்கிவிடக்கூடாது என்று என்னைத் தவிர்த்து விட்டு, புராண இலக்கணத்திற்கு முரணாக உடன் படித்த (ஏதோ சுமாரான)ஆண்டாள் பின்னால் லோ..லோ என்று சுற்றுவார்கள். இந்த அழகில் கிளாஸுக்கு கட் அடித்து விட்டு பாலன் K. நாயர் நடித்த மலையளப்படமெல்லாம் போவது ஒழுக்கக்கேடு என்று நான் சொல்லிவைக்க என்னை ஏதோ விநோத ஜந்து மாதிரி பார்த்துக் கெக்கலிக்க என்றானது.

சரி. விஷயத்திற்கு வருவோம். இப்படியாக கல்லூரியில் தப்பிப் பிழைத்த என் முறைப்பெண்ணே இல்லாத நிலை, சென்னைக்கு வேலைக்கு வந்த போது மீண்டும் பொதுக்குழுவில் விசாரிக்கப்படும் நிலை வந்தபோது சென்னை நண்பர்கள் ... பட்டணத்து நண்பர்கள் அல்லவா, கல்லூரி ந்ண்பர்கள் மாதிரி மூன்று தலைமுறை ஆராய்ச்சியெல்லாம் இல்லை! இவர்கள் இம்முறை extended family tree-ஐ தங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள, எனது அப்போதுதான் அகமதாபாத்திலிருந்து திருச்சி வந்திருந்த என் அம்மாவழி ஒன்று விட்ட மாமாவுக்கு கல்லூரியில் படிக்கும் (தூரத்து முறைப்)பெண் இருப்பதை என் நேரம் சரியில்லாததை உணராமல் சொல்லி வைத்தேன்.

என்னை "க்யாம்த் ஸே -அமீர்கான், அ-ஔ கான் என்று உசுப்பேற்றிவிட... அடுத்தமுறை வேலை சம்பந்தமாக திருச்சி "பாரத மிகு மின் நிறுவனம்" செல்லும் போது காதலைச் சொல்லிவிட வேண்டும்... இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டேன்.

அம்மாவிடம் எல்லா உண்மையையும் சொல்லாமல் ஏதும் செய்ததில்லை. சொந்த ஊர் போடிக்குச் சென்று அம்மாவுடன் சுப்ரமண்யஸ்வாமி கோவில் ப்ரகாரத்தில் சுற்றிவரும் போது, காயத்ரியைப் பிடித்திருக்கிறது என்றேன்.

அம்மா "கிழக்குவாசல்" படத்தில் மனோரமா சொல்வது மாதிரி... அவங்களெல்லாம் பணக்காரர்கள்...கேட்டா என்ன சொல்வார்களோ? எனச் சொல்ல.. சுரீர் எனப்பட்டது...

இந்த இல்லை என்றால் என்ன ஆவது என்பதற்கு மனதைத் தயார் செய்யவேண்டும். ஆனால் நேரந்தானில்லை.

1992-ல் ஒரு முறை BHEL-Trichy plant-ல் வேலையை முடித்துவிட்டு மாமா வீட்டிற்கு நான் உளறிக் கொட்டிப் பதிந்திருந்த ஆடியோ காஸட், லவ் கார்ட்ஸ் சகிதம் சென்றேன். ஏதோ தருணத்தில் கொடுத்துவிட்டு வெளியே சென்று விட்டேன். திரும்பி வந்தபோது "இது சரிப்படாது" என்றாள்.

சென்னை திரும்பிய பின் தினம் ஒரு லவ் கார்டு போஸ்டில் அனுப்பினேன். என் ஆங்கிலம் மேம்படுத்தப்பட்டது. சில மாதம் கழித்து திருச்சி சென்ற போது "அண்ணா" என்றாள். நீ அத்தனை சிறப்பாய் இல்லாததாலேயே "அண்ணா" என்று மட்டுமே அழைக்கத் தகுதி எனக்கிருப்பதாகக் கூறினாள். வருத்தமடைந்தேன். அழவில்லை.

இம்முறை எனது ஈகோ ஆழமாய் காயப்பட்டிருந்தது. மருந்து என் எழுச்சியில் மட்டுமே உள்ளது என்பது தெளிவாய்த் தெரிந்தது. இரண்டாண்டுகளில் குவைத் வரும் வாய்ப்பு 1994-ல் கிடைக்கும்படி மேற் கொண்டிருந்த முயற்சிகள் பலனளித்தன.

இரண்டாவது கேள்வியான: ஓடும் பாம்பை மிதித்திடும் ஆற்றல் உள்ள துடிப்பானவனைத் துடிதுடிக்கச் செய்திடும் வல்லமை உள்ளவைகளில் மிகக் கொடூரமானது எது?

(தூரத்து) முறை மாமா பெண் "அண்ணா" என அழைப்பது!.

தொடர் புகைப்பாளனானாலும், பொருளாதார உயர்வு குறித்தே யோசித்தேன். Emotional Energy-ஐ வீணாக dissipate -ஆகாமல் conserve செய்து எனது உருப்ப்டியான வளர்ச்சிக்கும்
பயன் படுத்திக் கொண்டேன்.

முறைப்பெண்கள் tease செய்து ரிஜக்ட் செய்யும் போது நம்முள் உறைந்து இருக்கும் பெரும் ஆற்றலை அறியும் சந்தர்ப்பம் இருக்கிறது... ஆதலினால் காதல் செய்ய முற்படுவீர்... வாழ்வில் பெருவெற்றி அடையலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, June 28, 2006

(4) குவைத் பற்றிக் கூடுதலாகச் சில தவல்கள்

வலைப்பூ அன்பர்களில் சிலரோ, அவர்களுக்குத் தெரிந்த நபர்களுக்கோ குவைத் பற்றிய சில நேரடித் தகவல்கள் ஏதேனும் உபயோகப்படலாம் என்பதாலேயே இப்பதிவு.

காரை 120 கி.மீ வேகத்தில் ஓட்டினால் இரண்டு மணி நேரத்தில் குவைத் நாட்டின்
தெற்கு சவூதி எல்லையிலிருந்து வடக்கில் ஈராக்கிய எல்லையை அடைந்துவிடலாம்.
கிழக்கில் அரேபிய வளைகுடாக் கடற்கரையிலிருந்து தென்மேற்கில் சவூதி, வடமேற்கில் ஈராக் எல்லைகளைத் தொட்டுவிடலாம். சிறிய சிட்டி ஸ்டேட் குவைத்.

மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பார்களே, அம்மாதிரி இவ்ளோ சிறிய நாட்டில் உலகின் அறியப்பட்ட பெட்ரோலிய ரிசர்வில் 5% உள்ளடங்கி இருப்பதால் வளம் மிக்க நாடு.

1990-ல் ஈராக் ஆக்ரமிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு 2003 வரையில் infrastructure development மந்தநிலை இருந்தது போய் தற்போது 50-100 பில்லியன் தினார் பல infrstructural projects களில் முதலீடு செய்யப் பட்டிருக்கிறது.

அடுத்த 2 முதல் 5 ஆண்டுகளுக்குள் 600 மில்லியன் பேரல்கள் சுத்தகரிக்கக்கூடய நான்காவது புதிய ரீபைனரி முதல் பல்வேறு ப்ரஜக்ட்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

அமெரிக்க MNC நிறுவனங்களில் (Motorola, other communication co, Oil & petroleum services firms) குவைத்திற்கு வரும்போது ஈராக் போகும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என காண்ட்ராக்டில் குறிப்பிடச் சொல்லவும். வேலை செய்யும் சூழல் ஈராக்கில் இல்லை.

சம்பளம் பேசும் போதே ஃப்ளாட் வாடகை, ஆண்டுக்கு 30நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, ஆண்டுக்கொருமுறை விமான டிக்கெட், போனஸ், இன்செந்டிவ் என அனைத்தையும் கேட்டு அறிந்து, அதற்கேற்ப negotiate செய்யவும்.

இங்கு வந்தால் இரண்டு ஆண்டுகள் முடியும் வரை, ரெஸிடன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் கிடைக்காது-எனவே நாட்டை விட்டு வெளியேறாமல், வேறு கம்பெனி மாற முடியாது.

ஒரே கம்பெனியில் ஐந்தாண்டு பணியற்றியவுடன், சட்டப்படி தங்களுக்கு வேறு வேலை மாற உரிமை கிடைக்கும். வரும் போதே நல்லபடியாக negotiate செய்து வந்தல் ஐந்தாண்டு தாக்குப்பிடிக்க இயலும்.


உருப்படியான குவைத் கம்பெனிகளுக்கு
www.kuwait-toplist.com
www.kuwaitpocketguide.com

உபரித் தகவல்கள்:

1. உலகின் அதிகமான மதிப்புள்ளது குவைத் தினார் (ரூ.160)1000ஃபில்ஸ் = 1தினார்
2. குவைத்தில் பெட்ரோல் 1 லிட்டர் 60ஃபில்ஸ் (ரூ 9.60)
3. மினரல் வாட்டர் 1 லிட்டர் 150ஃபில்ஸ் (ரூ24)
4. உள்ளூர் தொலைபேசி, தொலைநகல், பேஜர் - இலவசம்.
6. உள்ளூர் கைத்தொலைபேசி 1நிமிடம்- 20ஃபில்ஸ் (ரூ 3.20)
7. இரண்டு அறை, ஹால், கிச்சன் அடுக்குமாடி ஃப்ளாட் மாத வாடகை தினார் 175-250
8. உலகத் தொலைபேச 1 நிமிடம் ஃபில்ஸ் 160 (ரூ 26)
9. ஸ்கூல் ஃபீஸ் ஒரு குழந்தைக்கு மாதம் தினார் 50/-
10. மாதாந்திர ரீஸனபிள் வீட்டுச் செலவு for 2 + 2 family size தினார் 75-100
11. இரண்டாண்டுகள்(40-60,000) பயன்படுத்திய 2.0 எஞ்ஜின் கார் 2500-3000 தினார் மாத தவணை எனில் 80 தினார்.
12. 24மணி நேர Water supply- இலவசம்.
13. மின்சாரம் 1 யூனிட்க்கு 2ஃபில்ஸ் ( 32 பைசா மட்டும்) மத்திய குளிரூட்டப்பட்ட ஃப்ளாட்க்கு மாதம் 5 தினார் (ரூ 800/-) ஆகும்.


முந்தைய பதிவில் சொன்ன மாதிரி, குவைத் வந்தால் வருத்தப்பட மாட்டீர்கள்.


அனைவரும் வாழ்க வளமுடன்,


அன்புடன்,



ஹரிஹரன்

எந்தை உண்ண மறந்த ஆனியன் ரவாக்களும், ஸ்பெஷல் மசாலாக்களும்

ஜூன் மாதம் அப்பாக்கள் தினம் வருகின்ற மாதம். எனது தந்தை பற்றிப் பதிய விழைகிறேன்.

எந்தை 39ஆண்டுகள் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார், நான் ஏழாவது படிக்கும் போதுதான் உள்ளூர் பள்ளிக்கு மாற்றலாகி தினசரி அப்பாவைப் பார்க்க முடிந்தது. அப்பா "ரிசர்வ்டு" டைப், அப்பாவுக்கு எதற்காகவும் ரொம்ப சந்தோஷப்படத் தெரியாது, எதற்கும் அதிகம் வருத்தமும் அடைய மாட்டார்.

பள்ளி நாட்களில் நான் ரொம்பக் கூச்ச சுபாவத்துடன் இருப்பேன். +2 வரையில் அப்பாவுடன் மிகக் குறைவாகத்தான் பேசியிருக்கிறேன். பெரும்பாலும் அம்மா ரூட்டில்தான் அப்பாவை அணுகியிருக்கிறேன்.

அப்பாவுக்கு சிலசமயம் இயலாமையில் கோபம் வரும். தாத்தா பெரிய அளவில் குடும்ப பாரத்தை சுமந்ததில்லை. பாட்டிதான் சிரமங்களுடன் மூத்தவரான அப்பாவை வறட்டி தட்டி, விற்று என்று காந்தி கிராமத்தில் "டீச்சர் டிரைனிங் டிப்ளோமா" படிக்க வைத்தார், அப்பாவும் பழைய வேஷ்டியைச் சட்டையாகத் தைத்து அணிந்து,படித்து தீவிர பிராமண எதிர்ப்பு இருந்த காலத்தில் 1955-56 ல் மிக்கச் சிரமப்பட்டு தமிழ்நாடு பிற்படுத்தப்ப்ட்டோர் நலத்துறையில் கள்ளர் சீரமைப்பு ஸ்கூல் வாத்தியார் ஆனார்.

அப்பாவுக்கு வரிசையாய்,நிறைய மிரட்டுமளவிற்குப் பொறுப்புகள். தன் தம்பிகளை வழிநடத்தியும், தனக்குக் கிட்டாத கல்லூரி உயர் டிகிரிப் படிப்பு படிக்கவைத்தார். தன் தமக்கையின் கணவர் பொறுப்பில்லாமையால், அவர்களது ஐந்து குழந்தைகளும் பள்ளியிறுதிப் படிப்புவரை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பும் கூடுதலாக ஏறியது.

இதற்குள் 1986 வந்துவிட நான் +2, தம்பி 10வது முடித்துவிட இருவரும் விடுதியில் தங்கிப் படிக்க என ஆனது. திருச்சியில் விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் விடுதி,கல்லூரிக் கட்டணம் என பல காரணங்கள், என்னை அப்பாவுடன் நேரடியாக அணுகிப் பழக பல சந்தர்ப்பங்களைத் தந்தன.

அப்பா என்னை, 1986-ல் பெரிய பச்சைக்கலர் தகர டிரங்க் பெட்டியோடு கல்லூரியில் சேர்த்த்துவிட்டு,விடுதிஅறையில் விட்டுவிட்டு போடிக்குத் திரும்ப பேருந்து பிடிக்கக் கிளம்பிச்சென்று விட்டார். மனம் ஏதோ மாதிரி பிசைய குடுகுடுன்னு ஓட்டமா ஓடி பஸ் ஸ்டாஃப் சென்றால், அப்பா பஸ்பிடித்துச் சென்று விட்டிருந்தார்.

விடுதியில் வாழ்க்கையே வேறு! என் மாதிரி டிரங்க் பெட்டி ஆசாமிகளை ரொம்ப ரஸித்து எதிர்பார்த்தது இருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
விடுதியில் சேரும் போது நான் கடுமையான வெஜிடேரியன் எனவே, மெஸ்ஸில் எனது கோட்டா முட்டைகளை தானமளித்து இரண்டு தீவிர ஆதரவாளர்களைப் பெற்றேன்.

அப்பாவுக்கு வெளியூர் செல்ல "ஜெயா ஸ்டோர்ஸ்" ம்ஞ்சள் பை போதும்.
ஆனால் விடுதியில் தங்கிப்படிக்கும் என்னையும் அம்மாதிரி எதிர்பார்க்க, எப்படி டிரங்க் பெட்டி, ரெக்ஸின் பேக்கிலிருந்து எவால்வ் ஆகி நாகரீகமடைவது என்று யோசித்தேன் ...

அப்பாவிடம் அடுத்த டெர்முக்கு ஃபீஸ் அனுப்பவும் என்றவுடன் எனது வங்கிக் கணக்குக்கு முதல் டெர்ம் தொகையையே அனுப்பிவைத்தார். நான் படித்தது "செல்ஃப் பைனான்ஸ்" கல்லூரி. Even செமெஸ்டர்ஸூக்கு ஃபீஸ் Odd செமெஸ்டரைவிட 40% குறைவு. முதல் செமெஸ்டரை விட இரண்டாவதற்கு 900 ரூபாய் வித்தியாசம். 1986களில் என் மாதிரி 12ஆம் வகுப்பு வரை "பாக்கட் மணி"பற்றி அறிந்திராதவனுக்கு 900ரூபாய் காமதேனுவே கைக்குக்கிட்டி, கற்பகவிருட்ஷ நிழல் கிடைத்து விட்டதாக பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

ஊர் போகும் வழியில் திருச்சி மெயின் கார்டு கேட்டில் இருந்த விட்கோ-ல் விஐபி பெட்டி வாங்கிக் கொண்டேன். அம்மாவிடம் உண்மையைச் சொல்லிவிட்டு அப்பா கேட்டால் நண்பனுடையது என்று சொல்லச் சொன்னேன். அன்றிரவு என்னிடம் அப்பா, "நண்பனிடம்" இனி பெட்டியெல்லாம் இரவல் வாங்கக்கூடாது என்றார். அது தான் இனி தேவை இல்லையே. அப்பாவிடம் சரி என்றேன்.


எனக்கு அப்பாவிடம் ரொம்பப் பிடித்தது எதற்கும் என்னை, பில் காட்டு, ரெசிப்ட் தா, என்று அலட்டி வதைத்ததில்லை. என்னை முழுமையாக நம்பினார். படிப்படியாக, ஒவ்வொரு செமெஸ்டராக, யாஷிஹா கேமெரா, ஸ்போர்ட்ஸ் ஷூ, ஃபோட்டோக்குரோமாட்டிக் ஸ்பெக்ஸ் என எனது அவுட்லுக் எவால்வ் ஆனது.

அப்பா வேலை செய்த ஊர்கள் அன்னஞ்சி, ஏத்தக்கோவில், குள்ளப்புரம், கம்பம், கூடலூர் எல்லாம் போடியிலிருந்து வெறும் 30 கி.மீ தூரத்திற்குள்தான். என்றாலும் அகண்ட கூட்டுக்குடும்பத்தின் பணத்தேவைக்காக, அங்கேயே தங்கி வேலைபார்த்து, கரியடுப்பில் தானே சமைத்து உண்டு வாழ்ந்து, இரு வாரங்களுக்கு ஒருமுறை வருவார்.

அப்பா சில நேரங்களில் மெல்லிய விரக்தியோடு சொல்லக் கேட்டிருக்கிறேன். "சேர்ந்து வெளியில் சென்றால் செலவு செய்ய இயலாது என்பதற்காகவே, சொல்லிக்கொள்ளும்படி நட்பு கூட இல்லாது போனது தனக்கு என்று".

தனது இளமையான காலங்களிருந்து 50 வயது வரை தனித்தோ, உறவினருடனோ வெளியில் ஹோட்டல்களில் உண்ணச் சென்றால் இரு இட்லி, ஒரு சாதா தோசையோடு முடித்துக் கொள்வார்... ஆனியன் ரவா தோசையும், ஸ்பெஷல் மசாலா தோசைகளையும், அப்பாவால் அவரது வயதில் சுவைக்க முடிந்ததில்லை.

அப்பா அனைவரையும் போல் அந்தக் காலத்தில் ஆனியன் ரவாவையும், ஸ்பெஷல் மசாலாவையும் உண்பதைக் கருத்தில் கொண்டிருந்தால் ஒரு பத்துப்பேர் (நான் உட்பட) வாழ்ந்து வரும் உலகளாவிய வளமான வாழ்வு இல்லை என்றாகியிருக்கும்.

எந்தை உண்ண மறந்த ஆனியன் ரவாக்களும், ஸ்பெஷல் மசாலாக்களும் மற்றும் லயிக்க மறந்த லாகிரி வஸ்துக்களும், எந்தை உணர்ந்திருந்த அவ்வைப் பாட்டியின் மூதுரையான் "கற்கை நன்றே..கற்கை நன்றே.. பிச்சைப்புகினும் கற்கை நன்றே"என்பதும் எமை உருப்படியாக உருவாக்கின!

தந்தையர் தியாகம் தலைமுறை வளர்க்கும்! சத்தியமான உண்மை!


அன்புடன்,


ஹரிஹரன்.

Monday, June 26, 2006

(2) குவைத்தில் வேலை செய்வதில் உள்ள பலன்கள்

இது எனது முதல் தமிழ் வலைப்பதிப்பு. என்னால் 1994-லிருந்து இங்கு பிழைப்பை பெரிய அளவிலான தோல்விகளின்றி தொடர முடிகிறபடியால், இதை எழுதலாம் என எண்ணியதாலேயே இப்பதிப்பு.

குவைத்திற்கு வந்து வேலை செய்து பிழைப்பை நடத்துவதில் உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்.

  1. வேலைக்கு வர,அநாவசியமாக TOEFL இன்ன பிற சொல்லணா இன்னல்கள் இல்லை. நம்மக்களில் 50-70% மதிப்பெண்கள் பெற்றுத்தேறிய நபர்களுக்குச் சோலைவனம்.
  2. தொழிற்படிப்பும் (முறையான) , ஐந்து முதல் பத்தாண்டு தொழில் அனுபவம் இருப்பின் சுமார் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை 100% tax free சம்பளம் கிடைக்கும்.
  3. பெண்கள் கறுப்புஅங்கி அணிய அவசியமில்லை. இந்தியப் பரம்பர்ய,மாடர்ன் உடைகள் அணிந்து வலம் வரலாம். தடையில்லை.
  4. பெண்கள் கார் ஓட்டலாம்.
  5. பெண்கள் வேலைக்குப் போகலாம்.
  6. தாங்கள் "குடி"மகனாக இருந்தால் மனம் திருந்தி, திருந்திய குடிமகனாவதற்கு நல்ல சந்தர்ப்பம் (அதெப்படி! நான் ஃப்ளாட்டிலேயே காய்ச்சியாவது "குடி"மகனாகவே தான் இருப்பேன் என்றால் -ததாஸ்து!அப்படியும் இங்கு இருக்கலாம்!)
  7. நீங்கள் ஒரு சூதாட்டப்பிரியர் எனில் அதனின்று விடுபட நல்ல சந்தர்ப்பம்!(அதெல்லாம் முடியாது ஒரு நாளைக்கு மூணு வாட்டி மூணுசீட்டு ஆடியே தீருவது என்று ம்ங்காத்தா மேல் சத்தியம் செய்திருந்தால் again-ததாஸ்து!-அப்படியும் இங்கு இருக்கலாம்!)
  8. இந்து மதம் சார்ந்தவர்கள் கடவுள் photos, சிறிய அளவிலான பூஜை விக்கிரகங்கள் எடுத்து வந்து வீட்டில் வைத்து வழிபடலாம் (குவைத்தில் இந்தியர்களை, ஹிந்துக்களை தனித்துஅவமதிக்கும்படி Customs check செய்வதில்லை, நமது பாரம்பர்ய பட்டுச்சேலை அணிந்து வந்தால், 95% Green channel மாதிரி x-ray scan roller -ல் பெரும்பாலும் திறக்காமலேயே பெட்டிகளை எடுத்து வந்துவிடலாம்- இம்மக்களின்ஆழ்மனதில் ஹிந்துக்கள் நம்பத்தக்கவர் என்பதன் வெளிப்பாடோ!)
  9. ஹிந்து மதச்சின்னங்களை பெண்கள் வெளிப்படையாக அணிந்து கொள்ளலாம்.
  10. ஆண்கள் வேலை நேரம் தவிர்த்து ஹிந்துமதச்சின்னங்களை (விபூதி,சந்தனம்-குங்குமம்) அணிந்து கொள்ளலாம் (சிலர் கேள்விகள், வெறுப்புப் பார்வை பார்க்கலாம், என்றாலும் இது முடிகிறது)
  11. முழு அளவிலான ஹிந்துக்கோயில் இங்கு இல்லை. இதனால், ஹிந்து மதத்தின் மிக உயரிய தத்துவமான "பரம்பொருளாகிய கடவுள் பக்தனுக்குள்ளேயே "ஆத்மா"என்று உறைந்திருக்கிறார்"என்பதை உணரும் சந்தர்ப்பம் கிட்டும். (பெற்றோர்-மனைவி-உற்றோர் சொல்லியும் பன்னிரண்டு ஆண்டுகள் கடும் புகைப்பாளானகத் திரிந்த எனக்கு இந்த மெய்ஞானம் எனக்கு இங்கு கிட்டி, என்னுள் உறைந்திருக்கும் சிவனை, பரம்பொருளை சிகெரட் புகையால் அபிஷேகம் செய்வதா? என உணர்ந்து, கடந்த இரண்டாண்டுகளாக புகையின் கோரப்பிடியிலிருந்து மீண்டு, முழுமையான புகை எதிர்ப்பாளன் ஆனேன்)
  12. இறுதியாக, இங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் Greencard, Citizenship கிடைக்காது, எனவே தாங்கள் கண்டிப்பாக தாய்நாடு திரும்புவீர்கள்(ஓரளவு பணத்துடனும், ஓரளவுக்கு (பக்குவப்பட்ட) மனதுடனும்) இந்தியாவிற்கும் பயன்படுவீர்கள்!

ஆகவே இதன்மூலம் அறியத் தெரிவது, படித்தவர்கள்-இந்தியர்கள், குவைத்திற்கு வேலைக்குச் சென்றால் மகிழ்ச்சி அடைகிறார்களோ இல்லையோ வருத்தம் அடைவதில்லை.

சில பல குறைபாடுகள் உள்ளன. அவைகளும் கூடிய விரைவில் சரி செய்யப்படும் என இப்போதைக்கு நம்பிக்கை வைக்கலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, June 24, 2006

(1) ஹரிஹரனின் சுவிட்ஸர்லாந்துப் பயண அனுபவங்கள்-1

முதல் முறையாக சுவிட்ஸர்லாந்து சென்ற போது எனக்கு மிகவும் வியெப்பைத் தந்தது அந்நாட்டின் பசுமை வளத்தையும் தாண்டி மிக மிக வசதியான infrastructure கட்டமைப்பு!
சுவிஸ் நாட்டின் எல்லைகளாக, கிழக்கில் ஆஸ்த்ரியாவும், மேற்கில் ஃப்ரான்ஸும், வடக்கில் ஜெர்மனியும், தெற்கில் இத்தாலியும் அமைந்திருக்கின்றன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.
சுவிஸ் எனில் உடன் நமக்கு இளமைக்கான சாக்லெட், நுண்-கடிகாரங்கள், மருந்துப்பொருட்கள் நினைவுக்கு வரும்!
இங்கு சுவிஸ் நாட்டின் வில்லங்த்தை பார்க்கலாம் என இருக்கிறேன்!

சுவிட்ஸர்லந்து நாட்டின் பொருளாதாரத்தை நான்கு வகைப்படுத்தப்படலாம்.
1. Economy driven by Dairy industry + Agriculture (5%)
2. Economy driven by tourism (5-10%)
3.Economy Driven by Technology products (machinery, pharma (25-30%).
4. Economy Driven by banking and Finance serives (50-60%)

சரி கொஞ்சம் விஸ்தாரமாக ஒவ்வொன்றாக்ப் பார்க்கலாம்.

1. Economy driven by Dairy industry + Agriculture :
சுவிட்ஸர்லந்து மக்கள் traditionallay sophisticated பாரம்பர்ய பசுநேசன்கள்!
இண்டர்நேஷனல் இராமராஜன்கள்!
original Product லிஸ்ட் ரொம்ப பெரிசு! சும்மா சாம்பிளுக்கு இங்கே!

Nesle food products - உள்நாட்டு, அயல்நாடு வாழ் இந்தியர் ம்ற்றும் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று.
Kitkat,Lion,Crunch-choclates
nescafe,Nido,Carnation,Cofee-mate- cofee & Milkproducts
Nesquick,Milo,-beverages
maggi-Prepared foods, Tomato ketchup, instant noodles,etc
...

உலக அளவில் சுவிஸ் உணவுப் பொருள்களை Choclates சுவைக்காத நபர்கள் குறைவு! அதே மாதிரி 3நிமிட maggi noodles சுவைக்காத குழந்தைகள் குறைவு!

இவ்வளவு இருந்தாலும் இது சுவிஸ் GDP-ல் மொத்தமே 5% மட்டுமே!
2. Economy driven by tourism :
சரி! இரண்டாவதான Tourism பற்றிப் பார்க்கலாம்.

சுவிஸ் நாட்டில் பெரும்பாலான பகுதிகள் நமது தமிழ் இலக்கணப்படி மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதி. நிறைய ஆறு, ஏரிகள் நிறைந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் நெய்தலே இல்லாத, அனைத்து திசைகளிலும் நிலத்தால் சூழப்பட்ட நாடு சுவிஸ்!

நிலத்தால் சூழப்பெற்ற எந்த நாடுமே பொருளாதரத்தில் விளங்கி வந்ததாகச் சரித்திரம் இல்லை!
Afganisthan, Armenia, Bhutan, Bolivia, Burundi,Chad,Ethiopia,Laos, Mangolia,Nepal,Paraguay,Rwanda,Sebia,Slovakia,
Tajikisthan,Uganda,Uzbekisthan, Zambia,Zimbawe என எந்த நிலத்தால் சூழ்ப்பெற்ற நாட்டை எடுத்துக் கொண்டாலும் இந்த உண்மை தெரிய வரும்!

(Vatican city, Austria & Lexemberg-ஐத் தனியாகப் பார்க்கலாம்)

இன்றும் நிறைய புது மணத்தம்பதிகளின் கனவுத்தேனிலவுக்கான இடம் மறுக்காமல் சுவிஸ்தான் சந்தேகமே இல்லை! பல்வேறு வகையானோர்க்கும் கனவுச் சுற்றுலாத் தலம் சுவிஸ் நாடு!

இத்தனை இருந்தும் சுற்றுலா வருமானம் சுவிஸ் பொருளாதாரத்தில் GDP-ல் வெறும் 10% க்கு உள்ளாகவேதான்!

Economy Driven by Technology products (machinery, pharma :

சரி! மூன்றாவது Industrial Products - எனும் வகையில் Pharmaceutical products, Scientific, Research, Technology products. நம் அனைவர்க்கும் MRI-Scan எனப்படும் Magnetic Resonance Imaging Scan -க்குத் தேவையான NMR-Magnets (Nuclear Magnetic Resonance Magnets) சுவிஸ் நாட்டில் தான் OEM (Original Equipment Manufacturer) முறையில் தயாரிக்கப்படுகிற்து. Philips, Siemens, GE என உலகின் டாப் மெடிக்கல் டயக்னஸ்டிக் நிறுவனங்கள் தயரிக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்னர்கள் மருத்துவ உலகில் மிகப் பிரசித்தம். சுவிஸ் Hematology,Immunology analyzers உலகப் பிரசித்தம்!

நிறைய Engineering Products & precision Watches செய்கிறார்கள். எல்லாம் சரி!
இவையனைத்தும் சேர்ந்து சுவிஸ் GDP-ல் மொத்தமே 25-30% மட்டுமே!
கடல் இல்லாததால் துறைமுகம் இல்லை. ஒரு நாட்டடிற்குத் துறைமுகம் இல்லாததால் ஏற்படும் கஷ்டம் ரொம்பப் பெரியது! சுவிஸ்ஸூக்கு எல்லாமே தெற்கிலுள்ள இத்தாலி வழியகத்தான் நடந்தாகணும்!
இத்தாலி-ரோமுக்கும்- போப்பின் வாடிகன்சிட்டிக்கும்-உள்ள நெருக்கம் உலகறிந்தது! வாடிகன் சிட்டியின் கலர்ஃபுல் மிலிட்டரி நம்ம சுவிஸ் ஆர்மிதான்!
வாடிகன் சிட்டி நாடு Landlocked country என்றாலும் அதன் Product-க்கு அதாங்க..Religious conversion-க்கு அது ஒரு பிரச்னையே இல்லை.
பொருளாதாரத்தில் உருப்பட்ட ஐரோப்பிய landlocked countries -ஆன Austria, Luxemberg-ஐப்பற்றியும், சுவிஸ் நாட்டின் fourth economic category -ஆன "வங்கித் தொழில்" அதாங்க.. இண்டர்நேஷனல் Swiss banking Industry பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்!
அன்புடன்,
ஹரிஹரன்