Monday, June 26, 2006

(2) குவைத்தில் வேலை செய்வதில் உள்ள பலன்கள்

இது எனது முதல் தமிழ் வலைப்பதிப்பு. என்னால் 1994-லிருந்து இங்கு பிழைப்பை பெரிய அளவிலான தோல்விகளின்றி தொடர முடிகிறபடியால், இதை எழுதலாம் என எண்ணியதாலேயே இப்பதிப்பு.

குவைத்திற்கு வந்து வேலை செய்து பிழைப்பை நடத்துவதில் உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்.

 1. வேலைக்கு வர,அநாவசியமாக TOEFL இன்ன பிற சொல்லணா இன்னல்கள் இல்லை. நம்மக்களில் 50-70% மதிப்பெண்கள் பெற்றுத்தேறிய நபர்களுக்குச் சோலைவனம்.
 2. தொழிற்படிப்பும் (முறையான) , ஐந்து முதல் பத்தாண்டு தொழில் அனுபவம் இருப்பின் சுமார் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை 100% tax free சம்பளம் கிடைக்கும்.
 3. பெண்கள் கறுப்புஅங்கி அணிய அவசியமில்லை. இந்தியப் பரம்பர்ய,மாடர்ன் உடைகள் அணிந்து வலம் வரலாம். தடையில்லை.
 4. பெண்கள் கார் ஓட்டலாம்.
 5. பெண்கள் வேலைக்குப் போகலாம்.
 6. தாங்கள் "குடி"மகனாக இருந்தால் மனம் திருந்தி, திருந்திய குடிமகனாவதற்கு நல்ல சந்தர்ப்பம் (அதெப்படி! நான் ஃப்ளாட்டிலேயே காய்ச்சியாவது "குடி"மகனாகவே தான் இருப்பேன் என்றால் -ததாஸ்து!அப்படியும் இங்கு இருக்கலாம்!)
 7. நீங்கள் ஒரு சூதாட்டப்பிரியர் எனில் அதனின்று விடுபட நல்ல சந்தர்ப்பம்!(அதெல்லாம் முடியாது ஒரு நாளைக்கு மூணு வாட்டி மூணுசீட்டு ஆடியே தீருவது என்று ம்ங்காத்தா மேல் சத்தியம் செய்திருந்தால் again-ததாஸ்து!-அப்படியும் இங்கு இருக்கலாம்!)
 8. இந்து மதம் சார்ந்தவர்கள் கடவுள் photos, சிறிய அளவிலான பூஜை விக்கிரகங்கள் எடுத்து வந்து வீட்டில் வைத்து வழிபடலாம் (குவைத்தில் இந்தியர்களை, ஹிந்துக்களை தனித்துஅவமதிக்கும்படி Customs check செய்வதில்லை, நமது பாரம்பர்ய பட்டுச்சேலை அணிந்து வந்தால், 95% Green channel மாதிரி x-ray scan roller -ல் பெரும்பாலும் திறக்காமலேயே பெட்டிகளை எடுத்து வந்துவிடலாம்- இம்மக்களின்ஆழ்மனதில் ஹிந்துக்கள் நம்பத்தக்கவர் என்பதன் வெளிப்பாடோ!)
 9. ஹிந்து மதச்சின்னங்களை பெண்கள் வெளிப்படையாக அணிந்து கொள்ளலாம்.
 10. ஆண்கள் வேலை நேரம் தவிர்த்து ஹிந்துமதச்சின்னங்களை (விபூதி,சந்தனம்-குங்குமம்) அணிந்து கொள்ளலாம் (சிலர் கேள்விகள், வெறுப்புப் பார்வை பார்க்கலாம், என்றாலும் இது முடிகிறது)
 11. முழு அளவிலான ஹிந்துக்கோயில் இங்கு இல்லை. இதனால், ஹிந்து மதத்தின் மிக உயரிய தத்துவமான "பரம்பொருளாகிய கடவுள் பக்தனுக்குள்ளேயே "ஆத்மா"என்று உறைந்திருக்கிறார்"என்பதை உணரும் சந்தர்ப்பம் கிட்டும். (பெற்றோர்-மனைவி-உற்றோர் சொல்லியும் பன்னிரண்டு ஆண்டுகள் கடும் புகைப்பாளானகத் திரிந்த எனக்கு இந்த மெய்ஞானம் எனக்கு இங்கு கிட்டி, என்னுள் உறைந்திருக்கும் சிவனை, பரம்பொருளை சிகெரட் புகையால் அபிஷேகம் செய்வதா? என உணர்ந்து, கடந்த இரண்டாண்டுகளாக புகையின் கோரப்பிடியிலிருந்து மீண்டு, முழுமையான புகை எதிர்ப்பாளன் ஆனேன்)
 12. இறுதியாக, இங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் Greencard, Citizenship கிடைக்காது, எனவே தாங்கள் கண்டிப்பாக தாய்நாடு திரும்புவீர்கள்(ஓரளவு பணத்துடனும், ஓரளவுக்கு (பக்குவப்பட்ட) மனதுடனும்) இந்தியாவிற்கும் பயன்படுவீர்கள்!

ஆகவே இதன்மூலம் அறியத் தெரிவது, படித்தவர்கள்-இந்தியர்கள், குவைத்திற்கு வேலைக்குச் சென்றால் மகிழ்ச்சி அடைகிறார்களோ இல்லையோ வருத்தம் அடைவதில்லை.

சில பல குறைபாடுகள் உள்ளன. அவைகளும் கூடிய விரைவில் சரி செய்யப்படும் என இப்போதைக்கு நம்பிக்கை வைக்கலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

20 comments:

துளசி கோபால் said...

தமிழ்ப்பதிவு ஆரம்பிச்சதுக்கு வாழ்த்து(க்)கள்.

டோண்டு வோட பதிவுலேயே தெரிஞ்சது நீங்க ஆரம்பிக்கப்போறது.

நல்ல பயனுள்ள செய்தியாத்தான் போட்டுருக்கிங்க.

நம்மூர்க்காரராவேற இருக்கீங்க.விட்டுறமுடியுமா?:-))))
( காதலோவியம் ஜனகராஜ் சொல்றதுபோலப் படிக்கவும்)

Hariharan # 26491540 said...

சும்மா டெஸ்ட் மெஸேஜ்!

Hariharan # 26491540 said...

//நம்மூர்க்காரராவேற இருக்கீங்க.விட்டுறமுடியுமா?//

துளசியக்காவின் பேராதரவுக்கும், பாசத்திற்கும் நன்றி! நன்றி! :-D

dondu(#4800161) said...

வலைப்பதிவு உலகுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

குவைத் அனுபவங்களை எழுதுங்கள். ஈராக்கியரிடம் அந்த நாட்டவர்களுக்கு இன்னும் பயமிருக்கிறதா?

வெற்றியுடன் நீங்கள் அங்கு காலம் தள்ளுவதில் மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாகை சிவா said...

வருக. அன்புடன் வரவேற்கின்றோம்

Hariharan # 26491540 said...

//ஈராக்கியரிடம் அந்த நாட்டவர்களுக்கு இன்னும் பயமிருக்கிறதா?//

தற்போதைக்கு உலகிலேயே உசத்தியான
கூர்க்கா வாட்ச்மேன் "அமெரிக்க இராணுவ"-த்தின் துணையோடு சமாளிக்கிறார்கள். இது இங்கு மிக எமோஷனல்-ஸென்ஸிடிவான விஷயம்!
சதாம் உசேன் போன பின் அவ்வளவாக பயமில்லை!

உங்கள் நண்பன் said...

தமிழ்ப்பதிவு ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துக்கள்.


அன்புடன்...
சரவணன்.

Hariharan # 26491540 said...

//வருக. அன்புடன் வரவேற்கின்றோம்//

அன்புக்கும், வரவேற்பிற்கும் நன்றிகள்!
அப்படியே ஏதோ உங்கள் மேலான கருத்துக்களையும் சொன்னால் நல்லாயிருக்கும்!

Hariharan # 26491540 said...

//தமிழ்ப்பதிவு ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துக்கள்.//

வாங்க சரவணன்! உங்கள் நண்பன்-னு ID, சிரிக்கும் குழந்தை ஃபோட்டோ! ரொம்ப பாஸிடிவ்வான நபர் நீங்கன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்களோட பதிவு பற்றிக் கருத்தும் சொல்லணும்னு கேட்டுக்கிறேன்!

வடுவூர் குமார் said...

பார்ப்போம்! முடிந்தால் அங்கேயே.
நேர் கானலுக்காக காத்திருக்கேன்.

Hariharan # 26491540 said...

//பார்ப்போம்! முடிந்தால் அங்கேயே.
நேர் கானலுக்காக காத்திருக்கேன்.//

வாங்க குமார். மிக்க மகிழ்ச்சி. கட்டுமானத்துறைக்கு குவைதில் நல்ல எதிர்காலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு.
அடுத்த பதிவில் குவைத் பற்றி நிறையப் பார்க்கலாம்.

முத்தமிழ் said...

//இறுதியாக, இங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் Greencard, Citizenship கிடைக்காது, எனவே தாங்கள் கண்டிப்பாக தாய்நாடு திரும்புவீர்கள்(ஓரளவு பணத்துடனும், ஓரளவுக்கு (பக்குவப்பட்ட) மனதுடனும்) இந்தியாவிற்கும் பயன்படுவீர்கள்!//

சில பல வியாதிகளோடும்னு சேர்த்திருக்கலாம்.

ஓகை said...

வருக! வருக!!

உங்கள் மனநிறைவை நாங்கள் உணரும்வண்ணம் சொல்லியிருக்கிறீர்கள்.

சின்னத்திரை யுகத்திற்கு முன்னால் உலகிற்கு மேற்கத்திய இசையை அள்ளி வழங்கிய குவைத் வானொலியை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

Hariharan # 26491540 said...

//உங்கள் மனநிறைவை நாங்கள் உணரும்வண்ணம் சொல்லியிருக்கிறீர்கள்.//

கண்டிப்பாக மனக்குறை ஏதும் பெரிதாக இல்லை.

பரஞ்சோதி said...

வணக்கம் ஹரிஹரன்,

இன்று தான் உங்க பதிவை பார்த்தேன்.

மங்காப் பகுதியில் இருக்கீங்க, மிக்க சந்தோசம், நான் கொஞ்சம் தள்ளி, அபூ ஹலிபா.

வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்தித்து பேசலாம்.

மேலும் குவைத் பற்றி மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க, நானும் இதையே என் நண்பர்களுக்கு சொல்வேன், தாராளமாக குவைத்திற்கு வேலை செய்ய வரலாம், சம்பாதிக்கலாம், பயமே இல்லை. அடுத்த சில ஆண்டுகளில் குவைத்திற்கு எக்கசக்கமானவர்கள் வேலைக்கு தேவைபடுகிறார்கள், இப்பதிவை படித்தவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளட்டும்.

- பரஞ்சோதி

Hariharan # 26491540 said...

// குவைத் பற்றி மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க, நானும் இதையே என் நண்பர்களுக்கு சொல்வேன், தாராளமாக குவைத்திற்கு வேலை செய்ய வரலாம், சம்பாதிக்கலாம், பயமே இல்லை. அடுத்த சில ஆண்டுகளில் குவைத்திற்கு எக்கசக்கமானவர்கள் வேலைக்கு தேவைபடுகிறார்கள், இப்பதிவை படித்தவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளட்டும்.//

வாங்க பரஞ்சோதி அவர்களே,

இப்பதிப்பின் நோக்கமே குவைத்திற்கு படித்த நம்மவர்கள் வேலையைத் தேர்ந்தெடுக்கும் போது எந்தக் காரணிகளை முக்கியப்படுத்தி வேலை,சம்பளம் தீர்மானிக்கவேண்டும் என அறிவுறுத்துவதே.


//மங்காப் பகுதியில் இருக்கீங்க, மிக்க சந்தோசம், நான் கொஞ்சம் தள்ளி, அபூ ஹலிபா.

வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்தித்து பேசலாம்.//

கண்டிப்பாக. தனி மடலில் எனது கைத்தொலைபேசி எண்ணை அனுப்பி உள்ளேன்

செல்வன் said...

//என்னுள் உறைந்திருக்கும் சிவனை, பரம்பொருளை சிகெரட் புகையால் அபிஷேகம் செய்வதா? என உணர்ந்து..//

ஹா..ஹா..:-)

சுடுகாட்டுபுகையில் வசிக்கும் சுடலையாண்டியை சிகரெட்டு புகை என்ன செய்துவிடும்?சிவனை சுடலையில் சீக்கிரம் சந்திக்க சிகரெட்டு வழிசெய்யுமே?:-))
அதைபோய் விட்டு விட்டீர்களே?:-))

Hariharan # 26491540 said...

//சுடுகாட்டுபுகையில் வசிக்கும் சுடலையாண்டியை சிகரெட்டு புகை என்ன செய்துவிடும்?//

வாருங்கள் செல்வன். சுடலையாண்டியை புகையோ மற்ற எதுவும் ஏதும் செய்யாது!

அதைச் செய்துகொண்டிருந்த என்னை வைத்தியரை அடிக்கடி பார்க்கப்போகாமல் விடுவித்து வைத்தியநாதஸ்வாமியான தன்னை அதிகம் நினைக்க வைத்தார்.

aaradhana said...

வாழ்த்துக்கள்.. நிறைய எழுதுங்கள்..வருக,, வருகவே.

Hariharan # 26491540 said...

ஆராதனா,

இந்தப் பதிவுக்கப்புறம் 28 பதிவுகள் எழுதியிருக்கிறேன். படித்தீர்களா?