Saturday, June 24, 2006

(1) ஹரிஹரனின் சுவிட்ஸர்லாந்துப் பயண அனுபவங்கள்-1

முதல் முறையாக சுவிட்ஸர்லாந்து சென்ற போது எனக்கு மிகவும் வியெப்பைத் தந்தது அந்நாட்டின் பசுமை வளத்தையும் தாண்டி மிக மிக வசதியான infrastructure கட்டமைப்பு!
சுவிஸ் நாட்டின் எல்லைகளாக, கிழக்கில் ஆஸ்த்ரியாவும், மேற்கில் ஃப்ரான்ஸும், வடக்கில் ஜெர்மனியும், தெற்கில் இத்தாலியும் அமைந்திருக்கின்றன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.
சுவிஸ் எனில் உடன் நமக்கு இளமைக்கான சாக்லெட், நுண்-கடிகாரங்கள், மருந்துப்பொருட்கள் நினைவுக்கு வரும்!
இங்கு சுவிஸ் நாட்டின் வில்லங்த்தை பார்க்கலாம் என இருக்கிறேன்!

சுவிட்ஸர்லந்து நாட்டின் பொருளாதாரத்தை நான்கு வகைப்படுத்தப்படலாம்.
1. Economy driven by Dairy industry + Agriculture (5%)
2. Economy driven by tourism (5-10%)
3.Economy Driven by Technology products (machinery, pharma (25-30%).
4. Economy Driven by banking and Finance serives (50-60%)

சரி கொஞ்சம் விஸ்தாரமாக ஒவ்வொன்றாக்ப் பார்க்கலாம்.

1. Economy driven by Dairy industry + Agriculture :
சுவிட்ஸர்லந்து மக்கள் traditionallay sophisticated பாரம்பர்ய பசுநேசன்கள்!
இண்டர்நேஷனல் இராமராஜன்கள்!
original Product லிஸ்ட் ரொம்ப பெரிசு! சும்மா சாம்பிளுக்கு இங்கே!

Nesle food products - உள்நாட்டு, அயல்நாடு வாழ் இந்தியர் ம்ற்றும் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று.
Kitkat,Lion,Crunch-choclates
nescafe,Nido,Carnation,Cofee-mate- cofee & Milkproducts
Nesquick,Milo,-beverages
maggi-Prepared foods, Tomato ketchup, instant noodles,etc
...

உலக அளவில் சுவிஸ் உணவுப் பொருள்களை Choclates சுவைக்காத நபர்கள் குறைவு! அதே மாதிரி 3நிமிட maggi noodles சுவைக்காத குழந்தைகள் குறைவு!

இவ்வளவு இருந்தாலும் இது சுவிஸ் GDP-ல் மொத்தமே 5% மட்டுமே!
2. Economy driven by tourism :
சரி! இரண்டாவதான Tourism பற்றிப் பார்க்கலாம்.

சுவிஸ் நாட்டில் பெரும்பாலான பகுதிகள் நமது தமிழ் இலக்கணப்படி மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதி. நிறைய ஆறு, ஏரிகள் நிறைந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் நெய்தலே இல்லாத, அனைத்து திசைகளிலும் நிலத்தால் சூழப்பட்ட நாடு சுவிஸ்!

நிலத்தால் சூழப்பெற்ற எந்த நாடுமே பொருளாதரத்தில் விளங்கி வந்ததாகச் சரித்திரம் இல்லை!
Afganisthan, Armenia, Bhutan, Bolivia, Burundi,Chad,Ethiopia,Laos, Mangolia,Nepal,Paraguay,Rwanda,Sebia,Slovakia,
Tajikisthan,Uganda,Uzbekisthan, Zambia,Zimbawe என எந்த நிலத்தால் சூழ்ப்பெற்ற நாட்டை எடுத்துக் கொண்டாலும் இந்த உண்மை தெரிய வரும்!

(Vatican city, Austria & Lexemberg-ஐத் தனியாகப் பார்க்கலாம்)

இன்றும் நிறைய புது மணத்தம்பதிகளின் கனவுத்தேனிலவுக்கான இடம் மறுக்காமல் சுவிஸ்தான் சந்தேகமே இல்லை! பல்வேறு வகையானோர்க்கும் கனவுச் சுற்றுலாத் தலம் சுவிஸ் நாடு!

இத்தனை இருந்தும் சுற்றுலா வருமானம் சுவிஸ் பொருளாதாரத்தில் GDP-ல் வெறும் 10% க்கு உள்ளாகவேதான்!

Economy Driven by Technology products (machinery, pharma :

சரி! மூன்றாவது Industrial Products - எனும் வகையில் Pharmaceutical products, Scientific, Research, Technology products. நம் அனைவர்க்கும் MRI-Scan எனப்படும் Magnetic Resonance Imaging Scan -க்குத் தேவையான NMR-Magnets (Nuclear Magnetic Resonance Magnets) சுவிஸ் நாட்டில் தான் OEM (Original Equipment Manufacturer) முறையில் தயாரிக்கப்படுகிற்து. Philips, Siemens, GE என உலகின் டாப் மெடிக்கல் டயக்னஸ்டிக் நிறுவனங்கள் தயரிக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்னர்கள் மருத்துவ உலகில் மிகப் பிரசித்தம். சுவிஸ் Hematology,Immunology analyzers உலகப் பிரசித்தம்!

நிறைய Engineering Products & precision Watches செய்கிறார்கள். எல்லாம் சரி!
இவையனைத்தும் சேர்ந்து சுவிஸ் GDP-ல் மொத்தமே 25-30% மட்டுமே!
கடல் இல்லாததால் துறைமுகம் இல்லை. ஒரு நாட்டடிற்குத் துறைமுகம் இல்லாததால் ஏற்படும் கஷ்டம் ரொம்பப் பெரியது! சுவிஸ்ஸூக்கு எல்லாமே தெற்கிலுள்ள இத்தாலி வழியகத்தான் நடந்தாகணும்!
இத்தாலி-ரோமுக்கும்- போப்பின் வாடிகன்சிட்டிக்கும்-உள்ள நெருக்கம் உலகறிந்தது! வாடிகன் சிட்டியின் கலர்ஃபுல் மிலிட்டரி நம்ம சுவிஸ் ஆர்மிதான்!
வாடிகன் சிட்டி நாடு Landlocked country என்றாலும் அதன் Product-க்கு அதாங்க..Religious conversion-க்கு அது ஒரு பிரச்னையே இல்லை.
பொருளாதாரத்தில் உருப்பட்ட ஐரோப்பிய landlocked countries -ஆன Austria, Luxemberg-ஐப்பற்றியும், சுவிஸ் நாட்டின் fourth economic category -ஆன "வங்கித் தொழில்" அதாங்க.. இண்டர்நேஷனல் Swiss banking Industry பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்!
அன்புடன்,
ஹரிஹரன்

10 comments:

மணியன் said...

பயண அனுபவங்கள் என்றால் மௌன்ட் தித்லிஸ்,லுசெர்ன் ஏரி என்றில்லாமல் அந்நாட்டு பொருளாதாரத்தை அலசும் உங்கள் பதிவு வித்தியாசமானது. வரவேற்புக்குறியது. வாழ்த்துக்கள்!

Hariharan # 03985177737685368452 said...

வாங்க மணியன். சுவிஸ்ஸில் பயணித்த போது என்னை யோசிக்கவைத்த விஷயங்களை எழுத வேண்டும் என்பதலேயே இம் முயற்சி.
வாழ்த்துக்கு நன்றி.

ரவி said...

வாருங்கள் வலைப்பதிவு உலகிற்க்கு...வரவேற்க்கிறேன்...

துளசி கோபால் said...

மணியன் சொன்னதேதான்.

அடுத்த பக்கத்தையும் உங்கள் மூலம் பார்த்தேன்.

Hariharan # 03985177737685368452 said...

//வாருங்கள் வலைப்பதிவு உலகிற்க்கு...வரவேற்க்கிறேன்//

வாங்க ரவி. உங்கள் வரவேற்புக்கு நன்றி!

Hariharan # 03985177737685368452 said...

//மணியன் சொன்னதேதான்.

அடுத்த பக்கத்தையும் உங்கள் மூலம் பார்த்தேன்//

துளசியக்கா, இப்பெல்லாம் எந்த அயல்நாடு போனாலும் பொருளாதாரக் கோணத்தில் பார்வை செல்லமுற்படுகிறது.

வடுவூர் குமார் said...

வாங்க ஹரிஹரன்.
நல்ல பதிவு.
பொருளாதார கண்ணோட்டத்தில் பார்பது தவிர்கமுடியாதது ஆகிவிட்டது.

Hariharan # 03985177737685368452 said...

//நல்ல பதிவு. பொருளாதார கண்ணோட்டத்தில் பார்பது தவிர்கமுடியாதது ஆகிவிட்டது//

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தியர்கள் எல்லா நாடுகளுக்கும் தொழில் ரீதியில் செல்ல முடிகிறது, மேலும் நம் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் Economical observation அவசியம் வேண்டும்.

முத்தமிழ் said...

வலைப்பதிவுலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்.

ஆரம்பப் பதிவே வித்தியாசமான முறையில் கொடுத்திருக்கிறீர்கள்.

வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Hariharan # 03985177737685368452 said...

//வலைப்பதிவுலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்.

ஆரம்பப் பதிவே வித்தியாசமான முறையில் கொடுத்திருக்கிறீர்கள்.

வெற்றியடைய வாழ்த்துக்கள்//

வாங்க முத்தமிழ். வாழ்த்துக்களுக்கும், பேராதரவிற்கும் நன்றிகள்.