(4) குவைத் பற்றிக் கூடுதலாகச் சில தவல்கள்
வலைப்பூ அன்பர்களில் சிலரோ, அவர்களுக்குத் தெரிந்த நபர்களுக்கோ குவைத் பற்றிய சில நேரடித் தகவல்கள் ஏதேனும் உபயோகப்படலாம் என்பதாலேயே இப்பதிவு.
காரை 120 கி.மீ வேகத்தில் ஓட்டினால் இரண்டு மணி நேரத்தில் குவைத் நாட்டின்
தெற்கு சவூதி எல்லையிலிருந்து வடக்கில் ஈராக்கிய எல்லையை அடைந்துவிடலாம்.
கிழக்கில் அரேபிய வளைகுடாக் கடற்கரையிலிருந்து தென்மேற்கில் சவூதி, வடமேற்கில் ஈராக் எல்லைகளைத் தொட்டுவிடலாம். சிறிய சிட்டி ஸ்டேட் குவைத்.
மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பார்களே, அம்மாதிரி இவ்ளோ சிறிய நாட்டில் உலகின் அறியப்பட்ட பெட்ரோலிய ரிசர்வில் 5% உள்ளடங்கி இருப்பதால் வளம் மிக்க நாடு.
1990-ல் ஈராக் ஆக்ரமிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு 2003 வரையில் infrastructure development மந்தநிலை இருந்தது போய் தற்போது 50-100 பில்லியன் தினார் பல infrstructural projects களில் முதலீடு செய்யப் பட்டிருக்கிறது.
அடுத்த 2 முதல் 5 ஆண்டுகளுக்குள் 600 மில்லியன் பேரல்கள் சுத்தகரிக்கக்கூடய நான்காவது புதிய ரீபைனரி முதல் பல்வேறு ப்ரஜக்ட்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
அமெரிக்க MNC நிறுவனங்களில் (Motorola, other communication co, Oil & petroleum services firms) குவைத்திற்கு வரும்போது ஈராக் போகும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என காண்ட்ராக்டில் குறிப்பிடச் சொல்லவும். வேலை செய்யும் சூழல் ஈராக்கில் இல்லை.
சம்பளம் பேசும் போதே ஃப்ளாட் வாடகை, ஆண்டுக்கு 30நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, ஆண்டுக்கொருமுறை விமான டிக்கெட், போனஸ், இன்செந்டிவ் என அனைத்தையும் கேட்டு அறிந்து, அதற்கேற்ப negotiate செய்யவும்.
இங்கு வந்தால் இரண்டு ஆண்டுகள் முடியும் வரை, ரெஸிடன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் கிடைக்காது-எனவே நாட்டை விட்டு வெளியேறாமல், வேறு கம்பெனி மாற முடியாது.
ஒரே கம்பெனியில் ஐந்தாண்டு பணியற்றியவுடன், சட்டப்படி தங்களுக்கு வேறு வேலை மாற உரிமை கிடைக்கும். வரும் போதே நல்லபடியாக negotiate செய்து வந்தல் ஐந்தாண்டு தாக்குப்பிடிக்க இயலும்.
உருப்படியான குவைத் கம்பெனிகளுக்கு
www.kuwait-toplist.com
www.kuwaitpocketguide.com
உபரித் தகவல்கள்:
1. உலகின் அதிகமான மதிப்புள்ளது குவைத் தினார் (ரூ.160)1000ஃபில்ஸ் = 1தினார்
2. குவைத்தில் பெட்ரோல் 1 லிட்டர் 60ஃபில்ஸ் (ரூ 9.60)
3. மினரல் வாட்டர் 1 லிட்டர் 150ஃபில்ஸ் (ரூ24)
4. உள்ளூர் தொலைபேசி, தொலைநகல், பேஜர் - இலவசம்.
6. உள்ளூர் கைத்தொலைபேசி 1நிமிடம்- 20ஃபில்ஸ் (ரூ 3.20)
7. இரண்டு அறை, ஹால், கிச்சன் அடுக்குமாடி ஃப்ளாட் மாத வாடகை தினார் 175-250
8. உலகத் தொலைபேச 1 நிமிடம் ஃபில்ஸ் 160 (ரூ 26)
9. ஸ்கூல் ஃபீஸ் ஒரு குழந்தைக்கு மாதம் தினார் 50/-
10. மாதாந்திர ரீஸனபிள் வீட்டுச் செலவு for 2 + 2 family size தினார் 75-100
11. இரண்டாண்டுகள்(40-60,000) பயன்படுத்திய 2.0 எஞ்ஜின் கார் 2500-3000 தினார் மாத தவணை எனில் 80 தினார்.
12. 24மணி நேர Water supply- இலவசம்.
13. மின்சாரம் 1 யூனிட்க்கு 2ஃபில்ஸ் ( 32 பைசா மட்டும்) மத்திய குளிரூட்டப்பட்ட ஃப்ளாட்க்கு மாதம் 5 தினார் (ரூ 800/-) ஆகும்.
முந்தைய பதிவில் சொன்ன மாதிரி, குவைத் வந்தால் வருத்தப்பட மாட்டீர்கள்.
அனைவரும் வாழ்க வளமுடன்,
அன்புடன்,
ஹரிஹரன்
8 comments:
170 கிலோ மீட்டர் வேகத்திலெ ஓட்டினா சில சமயம் மாமா பின்னாலேயே துரத்தி வருவார்.
அடுத்து குவைத் மக்கள் தொகையை கணக்கெடுத்து பார்க்கையில் இங்கு விபத்துக்கள் மிக அதிகம்.
தற்போது வெளிநாட்டவர்களிடம் முடிந்த வரை அரசாங்கம் காசு பிடுங்கி விடுகிறது. (மருத்துவம், குடியேற்றம், போக்குவரத்து விதிகளை மீறும் போது )
வீட்டு வேலை செய்பவர்கள் இன்னும் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதிலும் பெண்கள் அதிக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.
இந்திய பள்ளிகளில் கல்வியின் தரம் மிகவும் மோசம். ஏனென்றால் பொதுவாக பல ஆசிரியர்கள் சரியான தகுதியுடன் வருவதில்லை. மேலும் வீட்டில் போரடிக்கிறது என்று ஆசிரியை வேலைக்கு வரும் பெண்கள் அதிகம். மேலும் ஆசிரியர் வேலைக்கு சம்பளமும் மிகவும் குறைவு அதனால் கல்வியின் தரமும் அப்படியே இருக்கிறது.
ஏகப்பட்ட விடுமுறைகள் கொடுக்கிறார்கள்.
நீங்கள் சொன்ன குவைத் வந்தால் வருத்தப்படமாட்டீர்கள் என்பது ஓரளவு உண்மையாக இருந்தாலும் சரியான வேலை, சம்பளம் இல்லாமல் வந்தால் மிகவும் கஸ்டபட வேண்டியது தான்.
ஹரி
உங்களிடம் தனியான மெயிலில் கேட்கலாம் என்றிருந்தேன்.பதிவே போட்டுட்டிங்க.நன்றி.
மனைவி பார்த்துவிட்டு,எல்லாத்தையுமே கொடுத்துட்டார்,நல்ல பதிவுன்னு சொன்னாங்க.வாழ்த்துக்கள்.
//வீட்டு வேலை செய்பவர்கள் இன்னும் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதிலும் பெண்கள் அதிக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.//
முத்தமிழ். வாங்க. நான் வீட்டு வேலைக்கு பெண்களை முற்றிலும் அனுப்பவே கூடாது என்கிறேன். இந்திய அரசு முற்றிலும் வீட்டு வேலைக்கு நம் நாட்டுப் பெண்களைத் தடை செய்வது மட்டுமே இந்த அவலநிலக்குத் தீர்வு!
//தற்போது வெளிநாட்டவர்களிடம் முடிந்த வரை அரசாங்கம் காசு பிடுங்கி விடுகிறது. (மருத்துவம், குடியேற்றம், போக்குவரத்து விதிகளை மீறும் போது//
வெளிநாட்டவர்க்கு மருத்துவம் இதில் சில குளறுபடிகள் உள்ளன. என்றாலும் அத்துனை மோசம் இல்லை.
குடியேற்றச் செலவுகள் ஒரு fixed cost.
போக்குவரத்து விதிகளை மீறுவது தவறுதானே!
//இந்திய பள்ளிகளில் கல்வியின் தரம் மிகவும் மோசம். ஏனென்றால் பொதுவாக பல ஆசிரியர்கள் சரியான தகுதியுடன் வருவதில்லை. மேலும் வீட்டில் போரடிக்கிறது என்று ஆசிரியை வேலைக்கு வரும் பெண்கள் அதிகம். மேலும் ஆசிரியர் வேலைக்கு சம்பளமும் மிகவும் குறைவு அதனால் கல்வியின் தரமும் அப்படியே இருக்கிறது.//
தேர்ந்தெடுக்க பல பள்ளிகள் உள்ளனவே. நம் சென்னையிலும் ஆசிரியர் வேலைக்கு சம்பளம் குறைவுதான்.
//சரியான வேலை, சம்பளம் இல்லாமல் வந்தால் மிகவும் கஸ்டபட வேண்டியது தான்.//
இப்பதிவின் நோக்கமே சரியான வேலை, சம்பளம் இவைகளை நிர்ணயிக்கும் காரணிகளை அறியத் தருவதே!.கஷ்டபட வேண்டியதை தவிர்ப்பதுதான்.
//உங்களிடம் தனியான மெயிலில் கேட்கலாம் என்றிருந்தேன்.பதிவே போட்டுட்டிங்க.நன்றி.
மனைவி பார்த்துவிட்டு,எல்லாத்தையுமே கொடுத்துட்டார்,நல்ல பதிவுன்னு சொன்னாங்க.வாழ்த்துக்கள். //
குமார் வாங்க. உங்களை மாதிரி தகவல் தேவைப்படுவோர்க்கு பயன் படவேண்டியே காலதாமதமின்றி இப்பதிவு.
நம்நாட்டுப் பெண்களை வேலைக்கு அனுப்புவதிலிருந்து தடை செய்து விடுவது என்பது ஒரு நல்ல தீர்ப்பாகாது. அவர்களும் தங்களது இயலாமையினால்தான் வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், வேலையில் கொடுமைகள் ஏற்படாமலும் தடுக்கும் வகையில் மற்ற நாட்டினருடன் இந்திய அரசாங்கம் சரியானபடி ஒப்பந்தங்கள் செய்வதே இதற்கு சரியான தீர்வாக அமையும்.
போக்குவரத்து விதிகளை மீறுவது தவறுதானே என்று சொல்லும் நீங்களே 170 கிமீட்டர் வேகத்தில் போனால் என்று சொல்கிறீர்கள். குவைத்தில் பாலைவனங்களில் உள்ள சாலைகளில் வேண்டுமானால் நீங்கள் அந்த வேகத்தில் சில சமயம் போகமுடியும். நகருக்குள் முக்கிய நெடுஞ்சாலைகளில் மிக அதிகபட்ச வேகம் 120 கிலோ மீட்டர் என்பது உங்களுக்கு தெரியாததல்ல. 120க்கு மேல் செல்பவர்கள் எபோழுதும் ஆபத்துடன் விளையாடுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.
பொதுவாக குவைத் போன்ற இடங்களில் நீங்கள் 120 கி.மீட்டர் வேகத்தில் போனாலும், 80 கி.மீட்டர் வேகத்தில் போனாலும் நீங்கள் போய் சேரவேண்டிய இடத்திற்கு ஒரு ஐந்து முதல் பத்து நிமிட வித்தியாசத்தில் தான் போய் சேருவீர்கள். அதனால் பெரிய வித்தியாசம் ஒன்று ஏற்படுவதில்லை.
சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் ரவிச்சந்திரன் என்பவர் தனது இரண்டுகுழந்தைகளையும் இழந்தது, வண்டி ஓட்டும்போது தொலைப்பேசியில் பேசிக்கொண்டு ஓட்டியதாலும் சரியாக கவனிக்காததாலும் தான் என்பதை மறந்துவிட்டீர்களா? இல்லை இந்த விசயம் உங்களுக்கு தெரியாதா?
//நம்நாட்டுப் பெண்களை வேலைக்கு அனுப்புவதிலிருந்து தடை செய்து விடுவது என்பது ஒரு நல்ல தீர்ப்பாகாது. அவர்களும் தங்களது இயலாமையினால்தான் வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், வேலையில் கொடுமைகள் ஏற்படாமலும் தடுக்கும் வகையில் மற்ற நாட்டினருடன் இந்திய அரசாங்கம் சரியானபடி ஒப்பந்தங்கள் செய்வதே இதற்கு சரியான தீர்வாக அமையும்.//
வாங்க மஞ்சூர் ராசா. நீங்கள் குறிப்பிடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே ஏட்டளவில் மட்டுமே உள்ளது. 40வயதுக்குட்பட்ட இந்தியப்பெண்கள் வீட்டுவேலைக்கு அனுப்பக்கூடாது என்பதையும் மீறித்தானே வந்து அல்லல் படுகிறார்கள்.
//அவர்களும் தங்களது இயலாமையினால்தான் வேலைக்கு வருகிறார்கள்.//
சத்தியமான உண்மை.
//போக்குவரத்து விதிகளை மீறுவது தவறுதானே என்று சொல்லும் நீங்களே 170 கிமீட்டர் வேகத்தில் போனால் என்று சொல்கிறீர்கள்.//
அது குவைத் பரப்பளவைச் சொல்ல உதாரணமாகச் சொன்னது. பதிவில் 120கி.மீ என மாற்றிவிட்டேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள ரவிச்ச்ந்திரன் எனது நண்பரே. மிகவும் மனம் பாதித்த சம்பவம்.
தனி மடலில் தொடர்பு கொள்ளலமே!
//I think u r telling only about high level cadre. But I think the condition of the low level workers is very worst.//
Welcome Mansoor. the main aim of the post is to give more inside info for the educated prospects looking for a career in Kuwait. As for the labourers and domestic workers plight I agree with you.
//Good post...//
Thanks Mansoor.
Post a Comment