(39) எம்டன் மகன் 'n' கருணாநிதி
சென்ற பதிவில் கருணாநிதியைப் போற்றி உண்மையில் உயர்வு நவிற்சியில் கவிதையை ஆசையோடு எழுதிவிட்டு கவிதையின் கீழே கருணாநிதியால் தமிழக சரித்திரத்தில் நிகழ்ந்திட்ட தரித்திர உண்மை நிகழ்வுகளை குறிப்பாக இட்டேன். தமிழ்த்தாய்க்கே கோபம் எனது உயற்வு நவிற்சிக் கவிதைகள் உணர்வு மாறி வஞ்சப்புகழ்ச்சியாகி தோற்றம் மாறிவிட்டது!
சென்ற இப்பதிவில் பின்னூட்டத்தில் குழலி " ஹரிகரா உனக்கு மனச்சாட்சியே இல்லியா?" கருணாநிதி சாகவேண்டும் என்று மட்டமான சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறாயே! என்று அவர் பார்வையை எனது பதிவின் பார்வையாக்க முயன்றார்.
கடற்புறத்தான் ஜோவோ குழலியினும் ஒருபடி மேலே போய் நான் பதிவெழுதும் போது நினைத்திடாத, "கருணாநிதி செத்தால்தான் எனக்கு நிம்மதி என்று நான் தெளிவாகச் சொல்லிவிட்டதாக" தன் கருத்தை எனது பதிவின் கருத்தாக மண்டகப்படி நடத்தினார்!
அடடா! என்ன இது உண்மைகளை மட்டுமே பதிவிட்ட என்னைப் போய் கருணாநிதி சாவை எதிர்நோக்கும் கொம்பேறிமூக்கன்னு குழலி ஐயாவும், ஜோ ஐயாவும் சொல்லிப்புட்டாங்களேன்னு பெரும் மனக்கவலையுடன் நேற்று மாலை வீட்டுக்கு வந்து " இந்த அபவாதத்திலிருந்து என்னைக் காப்பாத்து முருகா-ன்னு தமிழ்க்கடவுள் முருகனை (எனது உயர்வு நவிற்சிக் கவிதையை வஞ்சப்புகழ்ச்சியாக்கியது இத்தமிழ்க்கடவுள் முருகன் செயல் தானெ) வேண்டியவாறு வருத்தப்பட்ட மனதை மாற்றிட சினிமாவை பார்க்கலாம்னு "எம்டன் மகன்" திரைப்படத்தைப் போட்டுப்பார்த்தேன்.
நாசர், வடிவேலு, பரத்னு திரையில வந்து பட்டைய கிளப்பி நடிச்சிட்டு இருந்தாங்க! இடைவேளைக்கு முன்பாக பரத்தின் தாய்வழிப்பாட்டன், நோய்வாய்ப்பட்ட கிழவன், செயல்பாட்டு ஆக்கம் குன்றிய கிழவன், சுமையாகிப் போன கிழவன் படுக்கையில் இழுத்துக்கொண்டு கிடப்பார், டாக்டர் வந்து உறவுகள் எல்லாம் சூழ்ந்து கொள்ள சோதனை செய்து கொண்டிருக்கும் போது அந்தக் கிழவனின் அடுத்த இளைய தலைமுறைப் பேரன்கள் டாக்டரைச் சுற்றிக்கொண்டு எதிர்பார்ப்போடு பார்க்க ..ம்ம் எல்லாருக்கும் சொல்லி அனுப்புங்க என்பார் டாக்டர்... பேரன்கள் கோரஸாக இதுவரை நாலுவாட்டி சொந்த பந்தங்களுக்குச் சொல்லி அனுப்பியாச்சு ஒரு நல்லதும் நடக்கக்காணோம் என்னய்யா டாக்டர்ன்னு முற்றுகையிடுவார்கள்.
சில சீன்கள்கழித்து சீரியஸாகிப்போன கிழவனை மீண்டும் டாக்டர் பரிசோதித்து வாயெல்லாம் பல்லாக கன்பார்ம்டு... கிழம் மண்டையப் போட்டாச்சுன்னு சொன்னதும் பேரன்கள் மூஞ்சியில் ஆயிரம் வாட் ஒளியோடு பெரு மகிழ்ச்சியோடு "கல்யாணசாவு" என்று பாட்டுப்பாடி, தேரேற்றி கிழவனை மயானத்திற்கு இறுதி ஊர்வலம்னு சாவை இந்த அளவுக்குக் காமெடியா சொல்லியிருப்பார் இயக்குநர்.
ஆக இளைய தலைமுறை பேராண்டிகள் நோய்வாய்ப்பட்ட, ஆக்கம் குன்றிய, சுமையாகிப்போன தாத்தாவின் முடிவை எதிர்நோக்குவது தமிழ்நாட்டு நடைமுறையில் இருக்கும் திராவிட வழக்கமே என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் அக்மார்க் திராவிடத் தமிழர் திருமுருகன் . கருணாநிதியின் சன் டிவியிலே "மெட்டி ஒலி" சீரியல் தந்தவர். (நல்லவேளை எம்டன் மகன் திரைப்படத்தின் இயக்குநராக மணிரத்னமோ, பாலச்சந்தரோ,ஷங்கரோ இல்லை (முருகக்கடவுளே! கருணைகாட்டினாய்))
கருணாநிதியும்...
.....ஊழல் நோய் தாக்கிய முதியவரே!
.....தமிழகத்தின் வளர்ச்சிக்கான செயல்பாட்டு ஆக்கம் குன்றிய முதியவரே!
..மக்கள் நலத்திட்ட நிதியைக் களவாடி தமிழகத்தின் சுமையாகிய முதியவரே!
பேரனாக என்னை ஏற்றுக்கொள்வாயா கருணாநிதியே! மாட்டாய்!
ஆகவே கருணாநிதியே நீடுழி நூறாண்டுகள் வாழ்ந்திடுக!
அன்புடன்,
ஹரிஹரன்