Sunday, December 02, 2007

(183) தமிழ் மொழியில் அறிவியல் கல்வி சாத்தியப்படும் அவசியமா?

பிளஸ்டூ வரைக்கும் தமிழ்வழியில் கல்வி கற்று 85% மதிப்பெண் பெற்ற மாணவன் பொறியியல் கல்வி ஆங்கிலத்தில் இருந்ததால் விளங்கிக்கொள்ள இயலாமல் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு மாண்டு போன செய்தியை வைத்து தமிழிலேயே பொறியியல் கல்வி படிக்க வேண்டும் என்று விவாதம் நடக்கிறது.

தமிழிலேயே அனைத்து பொறியியல் துறைகளிலும் கல்வி சாத்தியமா?
ஏரோநாட்டிக், பயோ டெக்னாலஜி, சிவில், கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட் ரிகல், எலக்ட் ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று இந்த அனைத்து பொறியியல் பாடங்களின் தமிழ் வடிவம் அதன் சூத்திரம், சூட்சுமங்கள் என அனைத்தும் தமிழ் மூலத்திலேயே அமைந்து சாமானிய கிராமத்து மாணவர்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம் இருக்கிறதா?

மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களில் தமிழ் எந்த அளவுக்கு இருக்கிறது?

உதாரணமாக வேதியலில் ஹீலியம், ஹைட் ரஜன், நைட் ரஜன், வாயுக்கள் தமிழ்ப்படுத்தப்படுமா மற்றும் வேதிக்குறியீடுகளான H2O, NaCl, K, N, He, போன்றவை தமிழ்நாட்டு லைசன்ஸ் ப்ளேட் ஸ்டைலில் தமிழாக்கப்படுமா?

கணிதத்தில் 1,2 3...9 என்பது தமிழ் எண்களாக்கப்பட்டு தமிழ்படுத்தப்படுமா?
Fourier Transformation, Vector, Aljebra போன்றவை எவ்விதம் பயிலத்தக்கவகையில் முழுமையாய்த் தமிழ்ப்படுத்தப்படும்?

குறைகடத்தி என்று Semi Conductors ஐத் தமிழாக்கித் திருப்திப்பட்டுக்கொண்டு மின்ணணுவியலின் பிரதான விஷயங்களான Thyrister, Silicon Controlled Rectifier, Diac, Triac,Microprocessors, Transistors, இன்ன பிற மின்ணணு குறைகடத்திக் கருவிகள் செயல்படும் முறைகள் விளங்கிக்கொள்ளும் வகையில் தமிழில் பயிலத்தக்கவகையில் முழுமையாகத் தமிழ்படுத்தப்படுமா?

அடுக்களைக் கரப்பான் பூச்சி உயிரியலில் Periplaneta americana என்றழைக்கப்டுவதும், தோட்டத்து செம்பருத்திப்பூ hybiscus Rosa Sinenis என்று அழைக்கப்படுவது தமிழ்வழி அறிவியல் கல்வியமைப்பில் எங்கனம் தமிழ்ப்படுத்தப்படும்?

தாவரவியலின் Malvaceae, Fabaceae, Solanaceae, மால்வேசி, ஃபேபெசி, சொலனேசி இன்ன பிற தாவரகுடும்பப் பெயர்கள் வேசி, ஏசி என்று வசையாய் இருப்பதாய் எண்ண நேரிடும் நிலை தவிர்க்க மால், பெப, சொல என்று குறுக்கப்பட்டு தமிழ்ப்படுத்தப்படுமா?

எலக்ட்ரிகல் டெக்னாலஜியின் அடிப்படை விதிகளான Thevenin's theorem, Norton's theorem என்பவை தேவனின் தியரம், நாட்டார் தியரம் என்று சாதி வளையத்துக்குள் வந்துவிடாமல் தமிழ்ப்படுத்தும் முயற்சியாக அம்பேத்கார், ஈவெரா, தாளமுத்துநடராசர் பெயரிடப்படுமா?

மின்னியலின் மிக அடிப்படை விதியான "ஓம்" விதி Ohm's Law இந்து அடிப்படைவாதம் பேசுவதாக இசுலாமிய-கிறித்துவர் மனம் புண்படும் விதத்தில் அமைந்துவிடுவதை தடுக்கும் விதமாக "சமத்துவ விதி" எனப் பெயரிடப்பட்டு இந்துத்துவத்துக்கு சம்மட்டி அடிதரும் விதம் மதசார்பின்றி தமிழ் படுத்தப்படுமா?

ஜப்பானியர், ஜெர்மானியர், ப்ரஞ்சு, டச்சுக்காரர்கள் தாய் மொழியில் அறிவியலை படிக்கிறார்கள்! எப்படி சாத்தியமாகிறது இந்த தேசங்களில் தாய்மொழிக்கல்வி??
இந்த தேசங்களின் கல்வித் திட்டத்தில் "ஓட்டு" அரசியல் கிடையாது.
தாய்மொழி மெய்யாக பேணப்பட வேண்டும் எனும் அக்கறையில் நாடகத் தன்மை இல்லை.

ஜெர்மனியின் ஆட்சியாளர்கள் ஹெல்முட் கோல் / ஜெர்ஹார்டு ஷ்ரோடர்/ஆஞ்சலா மெர்க்கல் வழி நில், என்று புதிய ஆத்திச்சூடி பாடி இளைஞர்களை ஜெர்மன் மொழி பேண வழி நடத்துவதில்லை.

ப்ரான்சில் ஜாக்குஸ் சிராக் / நிக்கோலஸ் சர்கோஸி வழி நில் என்று பிரஞ்சு ஆட்சியாளர்கள் கதறி கலம்பகம் பாடுவதில்லை!

ஜப்பானிய ஆட்சியாளர்கள் தம் நாட்டு மக்களை டொஷிகி கய்ஃபூ / யூனிச்சிரோ கொய்சூமி வழி நில் என்று வழி நடத்துவதில்லை.

ஜெர்மனி ஹிட்லரை உருவாக்கிய தேசம் என்பது வரலாறு என்ற போதும் ஜெர்மனியின் சகல சாதகமற்ற விஷயங்களுக்கும் / நிகழ்வுகளுக்கும் ஹிட்லரின் சமூகத்தவரே காரணம் என்று 1945ல் இருந்து ஜெர்மனியின் ஆட்சியாளர்கள் பழிசூட்டும் விளையாட்டை மட்டும் விளையாடுபவராக இல்லை.

ஜப்பானின் சமூராய் இனத்தவர் போர்வெறியால் கிழக்கு ஆசியா முழுதும் பல சேதாரங்கள் செய்தவர் என்பது வரலாறு. ஜப்பானின் மீது இரு அணுகுண்டுகள் வீசப்பட, பல லட்சம் ஜப்பானியர்கள் தாய்நாட்டின் ஹிரோஷிமா நாகசாகியில் மடிய நேர்ந்த நிலைக்கு சமுராய் இனத்தவர்களின் போர்வெறியே வித்து. ஜப்பானிய ஆட்சியாளர்கள் சமுராய் இனத்தவரைக் கைகாட்டிப் பழிக்கும் வேலையை 1945ல் இருந்து செய்யவில்லை.

பிரஞ்சு அரசன் பதினாறாம் லூயியின் மோசமான அரசாட்சி ப்ரஞ்சுப்புரட்சி, கலவரத்துக்குக் காரணமானது என்பது வரலாறு. பிரான்ஸில் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் லூயி பரம்பரையினர் மீது பழி போடும் சாதனையை மட்டும் 1800ல் இருந்து செய்ய வில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் சிந்தனையின் தரம், செயல்பாட்டுத் திறமை, ஜெர்மனி, ஜப்பான், ப்ரான்ஸ் தேசத்தின் ஆட்சியாளர்களுடன் ஒப்பீடு செய்யத் தக்க அருகதையுடன் இருக்கிறதா?

அருகதை அற்ற ஆட்சியாளர்களால் ஆளப்படும் தமிழ்நாட்டில் ஆசை மட்டும் இருந்து என்ன பயன்?

"அரசு சொத்தை ஆட்டையா போடணும்னா...அண்ணாவழி நில்" எனும் புத்தம்புதிய அரசியல் திரா"விட" பெத்தடின் ஆத்திச்சூடி படித்து தமிழுணர்வை பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான்!

தமிழிலேயே பொறியியல் கல்வி கற்க அரசியல் சார்பற்ற, சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளில் இருக்கும் அறிவார்ந்த கல்வியாளர்கள் ஒன்று பட்டு பல காலம் உழைத்து பயிலத்தக்க அறிவியல் பதங்களுடனான பாடங்களை உருவாக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் தமிழை விற்கும் கலைநயமிக்க வியாபாரிகள் தமிழுணர்வாளர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் இருந்து தொடரும் நிலை இருக்கும் வரையில் முழுமையான, முறையான தமிழ் வழிக் கல்வி என்பது அடுத்த 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இருப்பதாக உணர முடியவில்லை.

அதுவரையில் அவரவர் வயதுக்கு ஏற்றார்போல இத்தனை ஆண்டுகளாக தமிழ் உணர்வு எனது ரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது என்று சொல்லி நடமாடும் ஊறுகாய் பாட்டில்களாக உலா வரலாம்! (ஊறுகாய்கள் நக்கப்படும் அபாயம் இருப்பதால் டாஸ்மாக் பக்கம் போகும் போது கவனமாயிருக்கவும் )


வரலாற்றுப்பாடத்தில் கடையேழு வள்ளல்கள்னு கம்பீரமா படிச்சது நவீன புவியியல் பார்வை கொண்டு, ஈவெரா தோன்றி 100% சாதியை மறுத்து/ஒழித்து விட்ட தமிழ்நாட்டில் லேட்டஸ்டா சிவாஜி அங்கவை சங்கவை மேட்டருக்குப் பின்னாலே அதியமான், பாரி வள்ளல்களே வன்னியர்னு பின்நவீனமா சிந்திக்க ஆரம்பிச்சாச்சு.

இந்த மாதிரியான பார்வை 100% தமிழ்வழியில் கற்கும் பாடத்திட்டத்தில் பிரதிபலிக்காது என்பதற்கு உத்திரவாதம் மாணவர்களுக்கு உண்டா?

எலக்ட்ரிகல் டெக்னாலஜியின் அடிப்படை விதிகளான Thevenin's theorem, Norton's theorem என்பவை தேவனின் தியரம், நாட்டார் தியரம் என்று சாதி வளையத்துக்குள் வந்துவிடாமல் தமிழ்ப்படுத்தும் முயற்சியாக அம்பேத்கார், ஈவெரா, தாளமுத்துநடராசர் பெயரிடப்படுமா?

மின்னியலின் மிக அடிப்படை விதியான "ஓம்" விதி Ohm's Law இந்து அடிப்படைவாதம் பேசுவதாக இசுலாமிய-கிறித்துவர் மனம் புண்படும் விதத்தில் பெயர் அமைந்துவிடுவதை தடுக்கும் விதமாக "சமத்துவ விதி" எனப் பெயரிடப்பட்டு இந்துத்துவத்துக்கு சம்மட்டி அடிதரும் விதம் மதசார்பின்றி தமிழ் படுத்தப்படுமா?


அன்புடன்,

ஹரிஹரன்

4 comments:

Hariharan # 03985177737685368452 said...

40,918
டெஸ்ட் மெசேஜ்!

மங்களூர் சிவா said...

//
தமிழிலேயே பொறியியல் கல்வி படிக்க வேண்டும் என்று விவாதம் நடக்கிறது.
//
இப்படி எல்லாம் ஆனால் ஆண்டவந்தான் மாணவர்களை காப்பாற்ற வேண்டும்.

இப்போதே தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பொறியியல் கல்லூரிகள் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஆய்வகங்கள் இருக்கிறதோ இல்லையோ!?!?.

இதிலிருந்து வெளிவரும் மாணவர்களில் பெரும் விழுக்காடு திறமையற்றவர்களாகவே இருக்கிறார்கள் என இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி ஒரு முறை கூறியதாக நினைவு.

தமிழ்படுத்தப்பட்டால் விளைவுகள் இன்னும் மோசமாகவே இருக்கும்.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க மங்களூர் சிவா,

உங்கள் அச்சம் புரிந்துகொள்ளக்கூடியது.

வெறுமனே தலைப்பை மட்டும் சகட்டுமேனிக்குத் தமிழ்படுத்திவிட்டு உள்ளடக்கத்தை டிரான்ஸ்லிட்டரேஷனில் வைத்திருப்பது தமிழ்வழிக்கல்வி என்றால் அது அபத்தம். இதற்கு நேரடி ஆங்கிலவழிக் கல்வியே நேர்மையானது.

முதலில் தமிழ்மொழியை அறிவியலில் செழுமைப்படுத்த வேண்டும்.

முழுமையான தமிழிலே பொறியில் கற்கும்படியான சூழலை நேர்மையாக உருவாக்க கடினமாக இணைந்து உழைக்க வேண்டும் ஐம்பது ஆண்டுகளாவது!

ஆங்கிலத்தில் அறிவியல் கற்றால் வீச்சு உலகமெங்கும் வாய்ப்பு!

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

ஆரம்பக் கல்வியையே இன்னும் தாய் பொழியில் கொண்டுவர இயலவில்லை இந்த தமிழ் வியாபாரிகளால். இதில் பட்ட மேற்படிப்பு, தொழிற் கல்வி இதெல்லாம் தமிழில் என்று யோசிப்பதே அபத்தம்; அவசியமற்றது; அயோக்யத்தனமானது.

ஆரம்பக் கல்வி கட்டாயம் தாய் மொழியிலேயே இருத்தல் வேண்டும்; இதைக் கட்டாயப்படுத்தலாம், தவறில்லை. இதில் தாய் மொழி, ஹிந்தி/மற்றொரு இந்திய மொழி, ஆங்கிலம் இவற்றுக்கான துவக்க நிலை கற்பிக்கப்பட வேண்டும். 5 முதல் 10 வரை ஆழ்ந்த-சிறப்பான ஆங்கிலப் பயிற்சியும்(மற்ற பாடங்கள் தாய் மொழி வழியே மட்டும்)தாய் மொழிப் பயிற்சியும் இருக்க வேண்டும். 11 ஆம் வகுப்பு முதல் ஆங்கில வழி போதனை இருக்கலாம். பட்டப் படிப்புக்கள், தொழிற் படிப்புக்கள் இவை ஆங்கில வழியில் மட்டுமே இருக்க வேண்டும்.

அதிலும் தொழிற் படிப்புக்களை தமிழில் படி என்று சொல்வது மொழி வெறி ஃபாஸிஸ மன்ப்பான்மை. அந்த மாணவர்களை அது திசை புரியாத சந்தியிலேயே கொண்டு நிறுத்தும்.

தமிழிலேயே மருத்துவ, பொறியியல் படிப்புக்கள் வேண்டும் என்று சொல்லும் தமிழ் ஆர்வக் கோளாறுகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு முதலில் பள்ளிப் படிப்பை தமிழ் வழியிலேயே கொடுக்கட்டும்; பிறகு பார்ப்போம்.

கண்ணன் கும்பகோணம்.