(27) ஹரிஹரன்களின் பார்வையில் கோலாலம்பூர்
மலேஷியாவிற்கும் குவைத்திற்கும் பல வித்தியாசம் இருந்தாலும் மிகப்பிரதானமாகப் படுவது மல்ட்டி எத்தினிக், மல்ட்டி ரிலிஜியஸ் cohesive கோ-எக்ஸிஸ்டன்ஸ். வெங்காய வடிவ மாடங்களுடன் மசூதிகள் நிறைந்திருந்தாலும் ஆங்காங்கே சீனர்களது புத்தக் கோவில்கள், இந்துக் கோவில்கள் கோலாலம்பூரில் காணக் கிடைக்கின்றன.
தமிழ் பேசும் இந்துக்கள் தம் மதக்கலாச்சாரத்துடனேயே தினசரி அலுவல்களுக்குச் சென்று வருகிறார்கள். அபிஷியல் இஸ்லாம் நாடெனினும் சக மதங்களை முழுமையாக சுதந்திரமாக அனுமதித்திருக்கும் அரசியலமைப்பு மிகப் பிடித்திருக்கிறது. மன(த)ப் புழுக்கம் சுத்தமாக இல்லை.
KLCC / Ampang area -ல் ஒரு சீனக் கோவில்.
புத்தர் 10 கைகளுடன் 10வித ஆயுதப்பொருட்களுடன் நம்மூர் துர்காதேவி மாதிரி. புத்தர் முன்னால இருக்கிறது கன்பூஷுயஸ் சாமி.
புத்தர் சிலைக்கு இருபுறமும் சிவப்புத்தூண்களில் நம்ம காளஹஸ்தி / காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் சகஸ்ர லிங்கம் (1008 லிங்கம்) மாதிரி 1008புத்தர்கள் மரத்தூண்கள்.
KLIA கோலாலம்பூர் ஏர்போர்ட். பின்புறம் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் ஏர்போர்ட் ஏரியாவில் ஏர்போர்ட் கட்டுமுன்பு 1996க்குமுன்பு இருந்த காடுகளின் ஒருபகுதி சாம்பிள் ஷோகேஸிங்காக!
கோலாலம்பூர் Petronas இரட்டை கோபுரம் (முன்னாள் உலக உயரமான கட்டிடம் 452மீட்டர் / 88மாடிகள் 42ம் மாடியில் பார்வையாளர் வ்யூ ப்ரிட்ஜ்)
மலேஷியா எங்கும் ட்ராபிக்கல் ஃபாரஸ்ட் நிறைந்த பகுதி, பொதுவாக காடுகள் என்றால் குளுமை என்ற எனது மேற்குத்தொடர்ச்சி அனுபவத்திற்கு மாறாக அத்தனை காடு எனினும் கடுமையாக வியர்க்கிற கோலாலம்பூர் சுற்றுப்புறம்.
கேஎல்லுக்கு 60 கி.மீ தள்ளி இருக்கும் "ஜென்டிங்" எனும் இடத்தில் குளிர் கொஞ்சம் மே.தொடர்ச்சிக் காடுகள் மாதிரி மிஸ்ட் கீழிறங்கி வந்து சாலையில் பரவி இறங்கிவர என்று இதமாயிருந்தது.
Modern express rail network, reasonable bus links, elevated Urban Monorail, not so regulated taxis என போக்குவரத்துக்கு எல்லா விதமான வகைகளில் சென்றுவர முடிகிறது ரொம்ப விலை இல்லை.
டாக்ஸிக்கள் டகால்டியாக 1986ம் வருஷ ஜப்பானிய மிட்ஷீபிஷி லான்ஸரை மலேஷியப் புரோட்டான் காராக வலம் வருகின்றன. யூ டென்ட் டூ / ட் ரை டு அவாய்ட் த டாக்ஸி பிகாஸ் ஆஃப் இட்ஸ் அவுட் டேட்டட் லுக்ஸ்! கட்டணம் பரவாயில்லை ஆனாலும் இவ்வளவு 20 வருஷப் பழைய வண்டிகளுக்கெனும் போது கூடுதல் என்ற எண்ணம் வருகிறது.
லிட்டில் இந்தியாவில் ஜலான் கஸ்தூரி தாண்டி வரும் பக்தி உட்லாண்ஸ் "பிராமணாள் சமையலுடன்" சைவ உணவு படைக்கிறது, சங்கீதா ஹோட்டல், செட்டிநாடு மெஸ் என்று இந்த ஏரியாவில் இந்திய உணவுக்கு பிரதானமானதாக இருக்கிறது.
ஜலான் துனுக் அப்துல் ரஹ்மானில் இருக்கும் ஓடியன் மணி தியேட்டரில் சம்திங்..சம்திங் உனக்கும் எனக்கும் பார்த்தோம். ஹோட்டலில் இருந்து 10 நிமிட நடை தூரம். படம் ப்ரவாயில்லை. ஊரில் படுஹிட் ஆகியிருக்கிறது. கேஎல்லில் எப்படியும் 1000 ஹோட்டல்களாவது இருக்கும். சுற்றுலாப் பயணிகள் வந்திறங்கிய பின்பு தேடினாலும் எப்படியும் ரூம் கிடைத்துவிடும்.
சுற்றுலாவை வைத்து பெரிய எகனாமியே உருவாக்கி இருக்கிறார்கள். சுற்றுலா இடங்களில் பார்வைக்கட்டணம் (25-40வெள்ளி) சற்று அதிகம் எனப் படுகிறது. 75செமீ /3வயது தாண்டிய குழந்தைகள் கூட 75% நுழைவுக்கட்டணம் என்று சுற்றுலா எகானமி ஜோராக ஆரோக்கியமாக வத்திருக்கின்றார்கள்.
மூணு போட்டோ தான் ப்ளாக்கர் அனுமதித்தார். மற்றவை அடுத்த பதிவில்.
அன்புடன்,
ஹரிஹரன்
9 comments:
அபிராமம்,
நீச்சல் தெரியாதவன் நான் எனவே நோ லங்காவி பீச் விஸிட்.
வருகைக்கு நன்றி.
வெங்காய வடிவு-புதுசா இருக்கு!!
agner,
பத்துமலைக் குகை முருகன் கோவில் சென்றேன். தனிப்பதிவாக பத்துமலைக் குமரனை தரிசித்ததை இட்டிருக்கிறேன்.
வருகைக்கு நன்றி!
குமார்,
பெரிய வெங்காயத்தை தலைகீழாக வைத்த மாதிரி onion shaped domes இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் கொணர்ந்த கட்டிடக்கலை பாணியிலேயே மசூதிகள் வடிவமைக்ப்பட்டுள்ளன.
இதுக்குமுன்னே போட்ட பின்னூட்டம் காணாமப் போச்சா?
இந்த விஸிட் ஊர்லே இருந்து திரும்பி வர்றப்பயா?
படங்கள் நல்லா இருக்கு.
துளசியக்கா,
இது ஊருக்குப் போகும் போது. குவைத்-கேஎல்-சென்னை.
பழைய பின்னூட்டமும் இதுவும் ஒருசேர வந்தன. ப்ளாக்கர் கொஞ்சம் ஸ்லோ இங்கே இன்று.
நல்ல விவரிப்பு, படங்கள் நன்றாக உள்ளது.
வாங்க நன்மனம்.
அதிகப் படங்களுக்கு இன்றைய இரண்டு பதிவுகள் 28,29பாருங்கள்.
ஹரி,
உங்களுக்கு மலாய் தெரியாவிட்டாலும் அந்தந்த பெயர்களை மறக்காமல் எழுதியிருப்பது பிரமிக்கத்தக்கது. ;-)
வியந்தேன்..
அந்த குளிர் பிரதேச மலை கெந்திங் என்றழைக்கப்படுகிறது. ;-)
Post a Comment