26. விடுமுறை முடிஞ்சாச்சு! நான் திரும்ப வந்தாச்சு!!
முப்பத்தி இரண்டுநாட்கள் விடுமுறை நேத்தோடு முடிஞ்சுபோச்சு.
குவைத்திலிருந்து கிளம்பி கோலாலம்பூர், சென்னை, போடி, மூணாறு, மதுரை, திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சி என்று இம்முறை விடுமுறை கொஞ்சம் பெண்டு கழட்டுறமாதிரி இருந்தாலும் திட்டமிட்டிருந்தபடி நிறைய இடங்கள் புதிய, மற்றும் மீள்பதிவாக பார்த்த இடங்களை பார்ப்பது என்பதை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.
வித விதமான சூழல்கள், வெவ்வேறு விதமான மனிதர்கள், பல்வேறுவிதமான கலாச்சாரங்கள், முற்றிலும் வேறுபட்ட பூகோள, மற்றும் சீதோஷ்ண நிலைகள் என இந்த விடுமுறை அமைந்திருந்தது.
நாலரை மற்றும் மூன்று வயது குழந்தைகளோடு சுற்றுலாப் பயணிக்க மிகுந்த மன தைரியம் வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது இந்த விடுமுறை.
நான் பெற்ற இன்பம் இந்தத் தமிழ் வலைப்பூ வையகம் பெற வேண்டும் என்பதால் நான் சென்ற இடங்கள், பார்த்தது, கேட்டது, பார்த்த மக்கள் இவை பற்றி தொடர் பதிவாக எழுத எண்ணி இருக்கிறேன்.
அன்புடன்,
ஹரிஹரன்
10 comments:
படிக்க காத்திருக்கிறேன்!!!
வாங்க நன்மனம்,
தங்களை அதிகம் காக்க வைக்காமல் விரைந்து எழுத முயற்சிக்கிறேன்.
படத்தோட போடுங்க!!ஹரி
குமார்,
படங்காட்டச் சொல்கிறீர்கள். போட்டுவிடலாம்.
விடுமுறை முடிந்த வந்த ஹரிஹரன் வாழ்த்துக்கள்
பயணக்கட்டுரையை ஆரம்பிக்கவும்.
இப்போ அது தான் சீசன்
வாங்க சார் வாங்க..
வாங்கப்பு வாங்க.
நல்லா விவரமா எழுதுங்க.
முக்கியமா அங்கங்கே கிடைச்ச உணவு.
அது ரொம்ப முக்கியம் ஆமா!
கால்கரி சிவா,
விடுமுறை சீஸன் முடிந்ததும் துவங்குவது
பயணக்கட்டுரை சீஸன் தானே. நானும் சீஸனல் பதிவிட்டு விடுகிறேன்.
அன்புடன்,
ஹரிஹரன்
ஆராதனா,
தங்கள் வரவேற்பிற்கு நன்றிகள். முதன் முறையாக வருகின்றீர்கள் தங்களை வரவேற்கிறேன்.
அன்புடன்,
ஹரிஹரன்
துளசியக்கா,
நம்ம கவரேஜில் சாப்பாடு பற்றியும் தகவல் தந்துவிடுகிறேன். தீவிர சைவ உணவுக்காரனின் சாப்பாட்டு அலைச்சல்கள் என்று!
Post a Comment