(28) கோலாலம்பூர் பத்து மலை முருகா!!
கோலாலம்பூர் - ஜென்டிங் எண்டர்டெய்ன்மென்ட் சிட்டி செல்லும் ஹைவேயில் KLசிட்டி சென்டரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது பத்துமலை குகை முருகன் கோவில். கோலாலம்பூர் வாழ் தமிழர் மட்டுமில்லாமல் அனைத்து நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் பத்து மலைக்குகை (Batu Caves) மீதமைந்த முருகன் கோவில் பிரசித்தி பெற்றதாக அமைந்திருக்கிறது. மத்திய கிழக்கு அரேபியச் சுற்றுலாப் பயணிகளும் தவறாது வருகை தருகின்றனர் பத்து மலைக்கு.
மத துவேஷமற்ற மலேஷிய அரசின் சுற்றுலாத்துறை பத்துமலையின் பிரம்மாண்ட விழாவான தைப்பூச நிகழ்வை உரிய முறையில் உலகச் சுற்றுலாவாக விளம்பரம் அளித்து KLக்கு அருகாமையில் MUST SEE தலமாக பத்து மலைக்குகையை உலக டூரிஸ்டுகளூக்கு தெரியப்படுத்தியிருக்கிறது.
2006 ஜனவரியில் மலைக் கோவில் படிக்கட்டு முகப்பில் திறக்கப்பட்ட 147அடி உயர உலகின் மிக உயரமான குமரக்கடவுள் கையில் வேலோடு பொன்னிறத்தில் கம்பீரமாக நின்றுகொண்டு, KL-ஜென்டிங் விரைவுச் சாலையில் செல்லும் அனைவரையும் தாமிருக்கும் தலம் MUST SEE என்று டூர் அஜெண்டாவில் note செய்ய வைத்து இந்திய/தமிழ்க் கலாச்சாரத்தின், இந்துமதத்தின் ஆன்மீக,மலேஷிய சுற்றுலாத்துறையின் ப்ராண்ட் அம்பாஸடராக effective ஆக impact செய்கிறார்.
பத்துமலைக் குகை முருகன் கோவில் முகப்பு, ஏறிச்செல்லும் 275படிகள், 147அடி உயர முருகக் கடவுள் சிலை.
வணிகத்துக்காக மலேஷியா சென்ற நகரத்தார் (செட்டியார்)சமூகத்தின் பெரு முயற்சியினால் பத்து மலைக்கோவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
குகையினுள் அமைந்த சுப்ரமணியஸ்வாமி கோவில் பிரதான சன்னிதானம்
குகையினுள் ஏசி மாதிரி சில்லென்று காற்று, முந்தைய நாள் சிறுமழை காரணமாக குகைக்கூரையினின்று சிதறும் நீர்த்துளிகளால் விளையும் ரம்மியமான சூழல் காரணமாக 275படி ஏறிவந்தது மற்றும் சீதோஷ்ணத்தால் ஏற்படும் வியர்வை/புழுக்கம் மட்டுப்பட்டு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
பத்து மலை முருகன் கோவில் கடைசிக் குகையினுள் மேற்கூரை வழித் தெரியும் சூரியன்.
ஆகஸ்ட் 09ம் தேதி ஆவணி அவிட்டம் ஆதலால் ஹோட்டல் ரூமிலேயே பூணூலை மாற்றிவிட்டு பத்துமலை முருகனை தரிசித்தோம். 275 செங்குத்துப் படிகள் ஏறி மேலே சென்றால் இயற்கையாக அமைந்த சுண்ணாம்புப்பாறை குகை (Lime stone hill caves) அமைப்பு பிரமிப்பைத்தருகிறது. முருகன் சன்னிதானம் அமைந்திருக்கும் குகையின் மேற்பகுதி திறந்ததாக ஆகாயம் வெளிப்படுமாதிரியான அமைவு கலக்கல்.
பத்துமலை முருகனுக்கு அரோகரா! கோலாலம்பூர் பயணம் பத்துமலை முருகன் கோவில், சைனா டௌன் ஏரியாவில் அமைந்திருக்கும் மகா மாரியம்மன் கோவில் இவற்றால் சற்று ஆன்மீகமாகவும் அமையப்பெற்றது.
அன்புடன்,
ஹரிஹரன்
11 comments:
நான் கேஎல் போனப்பக்கூட இந்தக் கோயிலை மிஸ் செஞ்சுட்டேன். அடுத்தமுறை
கட்டாயம் போகணுமுன்ற ஆர்வம் அதிகமாயிருச்சு, உங்க படங்களைப் பார்த்தபிறகு.
ஆமாம், குவெயித்லே இருந்து இந்தியா பக்கமாச்சே. ஏன் சுத்திக்கிட்டு வந்தீங்க?
பிரதட்சணமா வரணுமுன்னு பிரார்த்தனையா?
இங்கு போன போது,கூர்மையான பாறை படிவுகள் எப்போது விழுமோ என்ற பயத்துடன் மேலே பார்த்துக்கொண்டு நடந்தேன்.
புகைப்படங்கள் அருமை.
துளசியக்கா,
கண்டிப்பா அடுத்தமுறை பத்துமலை முருகனை தரிசிக்கவும்.
பிரார்த்தனை நான் , குழந்தைகள் திருப்பதியில மொட்டை அடிக்கணும்னு கேஎல்ல டூரிஸ்டா மொட்டையோட வந்து பயங்காட்ட வேணாமின்னுதான்!
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் ரூட் அப்படி!
அக்கா இப்பெல்லாம் ஊர்ல இருந்து திரும்பி வரும்போது தான் லக்கேஜ் அதிகம்! அதான் ஊருக்குப் போகும் முன்னேயே கேஎல் போற மாதிரி ப்ளான் பண்ணது
குமார்,
இயற்கையான குகை அமைப்பு சூப்பர் இல்ல!
பாராட்டுக்கு நன்றி குமார்.
இங்கயும் போய்ப் பாத்துறனுமய்யா.....கண்டிப்பாப் போய்ப் பாப்பேன். எந்தச் சந்தேகமும் இல்லை.
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம்.
அருமையான பதிவு.பத்துமலை பற்றிய எனது இடுகை இங்கே.
வாங்க ஜி.ரா,
கண்டிப்பாய்ப் பார்க்கவேண்டும். மிக அருமையான இடம். குகையே ஆனாலும் குன்றின் மேலமைந்ததால் குமரனுக்கான இடமாகியிருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மணியன்,
வருகைக்கு நன்றி. தங்கள் பதிவு பார்த்தேன். உயரம் 140 அடிகளுக்கும் மேல்.
பதிவைப்பற்றிய தங்கள் பாராட்டுக்கு நன்றி.
//குகையினுள் ஏசி மாதிரி சில்லென்று காற்று, முந்தைய நாள் சிறுமழை காரணமாக குகைக்கூரையினின்று சிதறும் நீர்த்துளி....//
ரசிக்க வேண்டிய இடம்.
நன்மனம்,
மனநிறைவு தரக்கூடிய இடமும் கூட!
பத்துமலை முருகனை பற்றி நீங்களே இவ்வளவு அருமையாக சொல்லிவிட்டீர்கள். :-)
Post a Comment