(30) மூணாறு - ஹரிஹரன்களின் பார்வையில்
மூணாறு என்ற பெயர் மூன்று ஆறுகள் முதிரப்புழா ஆறு, நல்லதண்ணியாறு, குண்டலா ஆறு சங்கமிக்கிற இடம் என்பதால் காரணப் பெயர்.
மூணாறு அமைந்திருப்பது நம்மூர் போடிக்கு மேலே நேரடி மலையேற்ற ட்ரக்கிங் தூரம் மொத்தமே 30கி.மீ வளைந்து செல்லும் மலைப்பாதை 77 கி.மீ.
போடிமெட்டு வழி அகலப்படுத்தும் பணியால் வாகனப் போக்குவரத்து கம்பம்மெட்டு-நெடுங்கண்டம்-பூப்பாறை-சாந்தன்பாறை-மூணாறு என்று 150 கி.மீ சுற்றி அதிகமான கேரளாவைப் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியது.
கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில்
கண்ணன் தேவன் ஹில்ஸ் என்பது மிகப் பரந்ததாயிருக்கிறது மாட்டுப்பட்டி டீ எஸ்டேட் , கல்லார் டீ எஸ்டேட், பெரியானைக்கல் எஸ்ட்டெட், எல்லப்பட்டி எஸ்டேட், குண்டுமலை, கன்னிமலை,தேன்மலை, கிரஹாம்ஸ் லேண்ட், நியமகாடு, லெச்சுமி,சின்னானைக்கல், நல்லதண்ணி எஸ்டேட் இன்னும் பல என்று பல தேயிலை எஸ்டேட்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
எறவிகுளம் தேசியபூங்கா ராஜா மலையில் வழிந்தோடும் அருவி நீரோடை(தென்னிந்தியாவின் உயரமான் மலைச் சிகரம் ஆனைமுடி 8650அடி)
ஆட்டுக்காடு-புள்ளிவாசல்-சித்ரபுரம் டாடா டீ எஸ்டேட்டுக்குள்
மூணாறில் பெரிய தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் டாடா டீ, ஹாரிஸன் மலையாளம் லிட்., என்ற இந்த இரண்டு நிறுவனங்களுக்குள் 80:20 என்று மலைகள் முழுவதையும் சொந்தம் கொண்டாடுகிறார்கள், விழுந்தோடும் அருவிகள் அருகே "ப்ரைவேட் ப்ராபர்ட்டி" என்று வேலி போட்டு திகைக்க வைக்கிறார்கள்!
குண்டலா ஆற்று அணைக்கட்டுப் படகுத்துறை
கேரளாவின் தண்ணீர் வளம் பொறாமைப்பட வைக்கிறது. ஜீப்பில் பயணிக்கும் போது 10 நிமிஷத்துக்கு ஒரு சலசலக்கும் அருவி, வழிந்தோடும் நீரோடை, 40 கி.மீ சுற்றளவில் ஏராளமான தண்ணீர் 130அடி ஆழம் தேக்கி வைத்திருக்கும் 5 அணைக்கட்டுகள் (மாட்டுப்பட்டி அணை, குண்டலா அணை, கல்லார் அணை, பண்ணையார் டேம், தேவிகுளம்) முழுமையாய்ச் செயல்படும் நீர்மின் நிலையங்கள் என க்ரீன் ரீசோர்ஸ் மிகுதியாக இருக்கிறது. மலைக்கு கிழக்குப்பக்கம் தமிழகப்பகுதிகள் வெற்றுப்பாறை, கள்ளிச்செடிகள், முட்புதர்கள் உண்பதற்குக் காய் கனிகள் கிட்டாமல் அலைந்து திரிந்து இளைத்துப்போன ஒன்றிரண்டு குரங்கார்கள் என தமிழக வனப்பகுதி!!! ஒரு பத்து கி.மீ மலைக்குள்ளாக தமிழக எல்லையை நிர்ணயித்திருந்தால் தமிழ்நாட்டு தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லாத ஒன்றாகியிருக்கும்
வ்யூ பாயிண்ட் வழியில் தந்தை-அடியேன் -குழந்தைகள்
மூணாறு தேயிலைத் தோட்டமனைத்திலும் தமிழர்களே வேலை செய்கிறார்கள். டாடா டீ நிறுவனத்தில் மட்டும் 15,000 தமிழர்கள் வேலை செய்கிறார்கள். தேயிலை பறிப்பதில் 100% பெண்கள் இருக்கிறார்கள். ஒருநாலைக்கு 85/-ரூபாய் கூலி, ஒரு தேயிலச் செடியில் 3நாட்களுக்கு ஒருமுறை இலை எடுக்கிறார்கள், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேயிலைச்செடியை "கவாத்து"(அதிகம் வளர்ந்த கிளைகளை வெட்டிப் பறிக்கும் உயரத்திற்கு மட்டம் செய்கிறார்கள். கவாத்து செய்யப்பட்ட தேயிலைச் செடி அடுத்த 45நாட்களில் துளிர் விட்டு இலைபறிப்புக்குத் தயாராகிறது.
பறித்த தேயிலை அந்ந்தந்த எஸ்டேடில் குறிப்பிட்ட இடங்களில் கூடையினின்று பெரிய சாக்குகளில் மாற்றப்பட்டு ட்ராக்டர்கள் மூலம் பேக்டரிகளுக்குக்குச் செல்கிறது.
தேயிலைச் செடியில் முக்கோணவடிவில் சிறிய காய் வருகிறது முற்றியதும் தேயிலை நாற்றுப் போடுகிறார்கள். தேயிலைச்செடிகள் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்கிறது. கவாத்து செய்யப்பட்ட தேயிலைச் செடிகளின் வேர்கள் 40அடி வரை தென்படுகிறது. கவாத்தாமல் விட்டால் பெரிய மரமாக வரும்போலிருக்கிறது.
நியமகாடு தேயிலைத் தோட்டதினுள் தந்தை-குழந்தைகள்-பைலட்
வழியில் வண்டியை நிறுத்திப் புல்தைரையில் உட்கார்ந்து லஞ்ச் இயற்கையான சூழலில் என அம்ர்ந்த சில நிமிடத்திலேயே சிறுபூச்சிகள் திரிவதைக் கண்டு மீண்டும் வண்டிக்கே வந்துவிட்டோம் , ரூமுக்கு திரும்பி வந்தால் மனைவி காலெல்லாம் ரத்தம் அட்டை சத்தம் போடாமல் வேலை காட்டியிருக்கிறது.
மறுநாள் ராஜாமலையில் எறாவிகுளம் தேசியப்பூங்காவில் என் வலது கால் செருப்புக்குள் நாவல் பழம் மாதிரி உருண்டையாக ஏதோ... நெளிகிறதே பசித்த பால் பென் ரீபில் திக்னஸ் அட்டை என் பின் தொடையில் குடைந்து ரத்தம் குடித்து நாவல்பழம் மாதிரி உருண்டையாகிருந்தது. பேண்ட் எல்லாம் ரத்தத்தில் சொட்டச் சொட்ட ஊறி நனையுமளவு அட்டையார் சேட்டை.
ஏதோ ஒருநாள் ஒரு அட்டை கடித்து 50மி.லி ரத்தம் சிந்தியதற்கே இப்படியா? மூணாறில் இருந்த ஐந்து நாட்களில் கண்ட ஏராளமான தேயிலை பறிப்போர் தினசரி 85ரூபாய் கூலிக்காக செய்யும் வேலையில் இரத்தம் குடிக்கும் அட்டையிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள்?
திரும்பி வரும் போது விமானத்தில் ட்யூட்டி ஃப்ரீ மேகஸினில் ஏதோ ஆங்கிலப் பெயர் போட்டு original leaf tea 100gm : US$ 31/- (கிலோ Rs.14,000/-) packed in special metal container என்று பார்த்தேன். உயிரியல் அட்டையின் நேரடி இரத்த உறிஞ்சலை விட சந்தைப்படுத்தல் அட்டை பலனைக் குடித்து நம்மாள் தினசரி 85ரூபாயில் வைத்திருக்கிறதோ? என்று எண்ணவைக்கிறது!
மூணாறு தேயிலைத் தோட்டத்தினிடையே பாறாங்கல்லில் ஏப்ரல் 4 மூணாறு தொல்.திருமாவளவன் வருகிறார் என்று எழுதியிருந்தது. திருமா பெயரை எழுதியவரை அட்டை கண்டிப்பாக கடித்திருக்கும். திருமா மாதிரி அரசியல் பிரமுகர்கள் தேயிலைத்தோட்டப் பணியாளர்களின் அடுத்த தலைமுறையை உருப்படியாக நல்ல கல்வி படிக்க வைக்க ஆவன செய்தாலே அட்டையுறிஞ்சல் இன்னல்களினின்று மீண்டுவரலாம்.
அன்புடன்,
ஹரிஹரன்
13 comments:
அபிராமம்,
தனியா இன்னொரு பதிவா நீங்க கேட்ட விஷயங்களைப் போடுவதுதான் சரி. ரொம்ப சுயதம்பட்டமா இருக்கிறமாதிரி ஆயிடும்ணுதான் யோசிக்கிறேன்.
எங்கள் இலங்கையில்; கண்டி,பதுளை,நுவரெலியா போன்ற மலைப் பிரதேசம்,மூணாறு போல் குளு குளு பிரதேசம்; தேயிலை விளையும் மலைகள்;இந்த மூணாறை "அரட்டை அரங்கத்தில்" பார்த்தேன். சிறந்த பேச்சாளர்களும்;சாதனையாளர்களும் உள்ளதுடன், மலையாளிகளும்;தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்வது;சிறப்பம்சம்.
படங்கள் கண்ணுக்கு விருந்தாக உள்ளது.
யோகன் பாரிஸ்
வாருங்கள் யோகன்,
நுவரெலியா மலை ரயில் பயணம் மிக ரம்மியமானதாயிற்றே! ஒருமுறை அனுபவிக்க வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன்.
அன்புடன்
ஹரிஹரன்
CT,
Thanks for the visit and feedback comments. Comments window is normal I have received your comment! May be some blogger problem :(
I shall try to post seperately about the hotel + conveyance + food seperately bi-lingually!
ஹரிஹரன்,
மத்தவங்க சொன்னதுதான் நானும் சொல்லணும்.
தங்குன இடம், வசதி, சாப்பாடு, செலவு( தோராயமா) எல்லாம் எழுதுங்க.
அருமையான இடங்களா இருக்கு. 'பசித்த குரங்கனார்' பாவம்(-:
துளசியக்கா,
தனிப்பதிவா போட்டுறலாம்.
மோகன் காந்தி,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.
ஹரிஹரன்
கோவையிலிருந்து மூணாருக்கு கல்லூரிக்கு கட் அடிச்சுட்டு போன நியாபகம் வந்தது....
அருமையா இருந்துச்சு
மங்கை
மங்கை,
சந்தர்ப்பம் கிடைக்கும் போது மூணாறு போய் சிலநாள் தங்கிப் நிறைய இடம் பாருங்க.
அன்புடன்,
ஹரிஹரன்
'அட்டை'காசமான பதிவு ! நீலகிரி டஹர் எனப்படும் ஆடுகளைப் பற்றி கூறவில்லையே!
இராஜாமலைஇறவிகுளம் பகுதி அவற்றின் இயற்கை வசிப்பிடம் (Natural habitat) ஆகும். அட்டை தொந்திரவில் அத்தை மறந்து விட்டீர்கள் போலும்.
வாங்க மணியன்,
மலையேறும் வரையாடு தானேன்னு Nilgiri Tahrஐ விட்டுட்டேன். ராஜாமலை அட்டைக்கடியும் பதியும் போது பிரதானமாக நினைவில் வந்ததில் அட்டை ஆட்டை மறக்கவைத்துவிட்டது நிஜம் தான்.
ஹரிஹரன்,
'பூங்கா'வில் இடம் பெற்றதற்கு வாழ்த்து(க்)கள்.
சந்தோஷமா இருக்குப்பா.
துளசியக்கா,
தமிழ்மணத்தின் பூங்கா இதழின் முதல் இதழில் நம்ம மூணாறு பயணக்குறிப்பு சுற்றுலா பகுதியில் வந்ததில் சந்தோஷப்"பூங்கா"வா ஆயிடுச்சு மனசு!
வாழ்த்துக்கு நன்றி அக்கா.
அன்புடன்,
ஹரிஹரன்
Post a Comment