(32) முழுமையான சைவ உணவு - சாத்தியமா?
கடல் தாண்டிச் செல்லும் தீவிரமான சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே சாப்பாட்டுக்கு அவஸ்தைப்படுவார்கள் என்பது தவறு.
நேற்று வஜ்ரா ஷங்கரின் வராக் வெள்ளித்தாள் வெஜிடேரியன்? பதிவு சைவ உணவு இனிப்புப் பிரியர்களுக்கு அத்துணை பிரியமான செய்தியாக இல்லாமல் ஆப்புச் செயதியாக வந்திருந்தது.
என் மாதிரி தீவிர சைவ உணவு விரும்பிகளுக்கு.... நிலைமையப் பார்த்தீங்களா?!! கேரண்டியா நான் சைவ உணவுக்காரன்னு சொல்லிடமுடியாத அளவுக்கு ரெடி டூ ஈட் வகை உடனடி உணவு மற்றும் ஜங்க் ஃபுட் (குப்பை!? உணவு) தயாரிக்கும் புட் ப்ராசஸிங் முறைகள் மற்றும் இவ்வகை சைவ உணவுகளில் சுவைக்காகவும், உண்போர் பார்வை ஈர்ப்புக்காகவும் சேர்க்கப்படும் சேர்மானங்களின் சைவத் தன்மை ஆட்சேபகரமானது சைவ/மத நம்பிக்கைகளுக்கு ஆபத்தானதாகவே இருக்கிறது.
என்ன நேற்றுவரை உங்களது ஃபாவரிட் அபிமானமான ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் பானத்தின் அந்தக் கலர் வருவதற்குப் பயன்படும் சேர்மானத்தின் ஸோர்ஸ் ஃபீட்டில்ஸ் என்ற ஒருவகை வண்டுகள் என்ற உண்மை அத்துணை favaour ஆக இல்லை.
பேஸ்ட்ரீஸ் வகை கேக்குகளின் மீதான கண்ணாடி ஜெல் அலங்காரத்திற்கான ஜெலட்டினின் ஸோர்ஸ் மாடுகளின் எலும்பை கொதிக்க வைத்துக் கிடைப்பது!
பீட்ஸாவில் வெகுதியாகப் பயன்படுத்தப்படும் சீஸ் தயாரிக்க பயன்படும் ரென்னட் கன்றுக்குட்டியின் வயிற்றிலிருந்து எடுக்கப்படுவது. ரென்னட் இல்லாமல் சீஸ் கிடையாது. காட்டேஜ் சீஸ் தவிர்த்து! (நம்மூர் பன்னீர்)
McDonaldsல் கிடைக்கும் "வெஜ் பர்கர்"ல் வைக்கப்படும் வெஜ் ஃபில்லட் கோழி, மாட்டு Filletகள் Deep fry செய்யப்படும் எண்ணையிலேயே செய்யப்படும்!
என்ன தெரியாத இடத்தில் மாட்டித்தவிக்கக்கூடாது என்பதற்காக சிரமம் பார்க்காமல் "I take the pains to carry my own potatoes" பெரும்பாலான சமயங்களில்.
ஆகவே உங்கள் உணவு மூட்டையை நீங்கள் எடுத்துச்செல்வது சாலச் சிறந்தது! நீங்களே சமைத்து உண்பது ஒன்றுதான் சைவ உணவுப்பழக்கத்தை முழுமையாகக் கடைபிடிக்கச் சாலச்சிறந்தது!
சென்ற ஆண்டு ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுத்தாளரும் என் மாதிரியே முழுமையான சைவ உணவுக்காக செல்லும் நாடெங்கிலும் அல்லல் படும் Columnist Vir Sangvi எழுதிய Rude food / The great Vegetarian Scam என்ற இந்தக் கட்டுரை ஏதாவது ஒரு விதத்தில் முழுமையான சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்க்கு உதவும் என்பதாலேயே இப்பதிவு.
ஃபுட் பிராசஸிங் வளர்ந்திருக்கிறது. இதில் பெரும் வருத்தம் இந்தியாவிலேயே பெரும்பான்மை சைவ உணவுப்பழக்கமுள்ள நாட்டிலேயே முழுமையான சைவ உணவு என்று கேரண்டியாய் இந்த ஃபாஸ்ட் ஃபுட் /ஜங்க் ஃபுட் ஐஸ்க்ரீம், சாக்லெட்,கேக், பிஸ்கட்கள் கிடைப்பது அரிது!
முழுமையான சைவ உணவுப்பழக்கம் என்பதுகூட பழமைவாதம் என்றாகியிருக்கிறது! உண்மையில் இது சைவ உணவுப் போர்வையில் மாபெரும் மோசடி!!
என்னமோ போங்க! ஏதோ திருப்தி! நான் பீட்ஸா, வெஜ்பர்கர், இன்ன பிற மோசடி வகைச் சைவ உணவைத் தவிர்க்கிற மாதிரி இதர முழுமையான சைவ உணவுக் காரர்களுக்கு விழிப்புணர்வு வரட்டும்.
அன்புடன்,
ஹரிஹரன்
24 comments:
தானே சமைத்து சாப்பிடுவது safe and best என்பது உண்மைதான். ஆனால், ingredients என்ன மாதிரி என்று நன்றாக தெரிந்து கொண்டு சமைக்கவேண்டும். iskcon site ல் வெஜிடேரியன் சாமான்களுக்கான நல்ல ஒரு லிஸ்ட் இருக்கிறது. அதிலும், இம்மாதிரி சீஸ் மாதிரி சாமான்களை பற்றிய உண்மையும் இருக்கிறது.
தங்கள் பதிவுக்கு நன்றி
டெஸ்ட்
ஜெயராமன் சார்,
வருகைக்கு நன்றி. கரெக்ட் ingredients பற்றி ப்ராடக்ட் லேபல் படித்து வாங்குவது மிக அவசியமானது.
ISKON Site கூடுதல் தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.
இப்பத்தான் ச்சின்ன சின்ன ரைஸ் குக்கர் வந்துருச்சே. எல்லா மோட்டல்களிலும்
பவர் பாய்ண்ட் இருக்கிறது.இதை வச்சு சிலநாட்கள் தப்பிச்சுக்கலாம்.
பொடேடொ பிங்கர் சிப்ஸ் (ஃப்ரீஸர் செக்ஷனில் கிடைக்கும்) வாங்கும்போது
அதில் ஹார்ட் பவுண்டேஷன் டிக் செய்திருப்பதைக் கவனித்து வாங்கலாம். இதில்
கனோலா எண்ணெய்தான் சேர்த்திருப்பார்கள். விலை சற்று கூடுதலாக இருக்கும்.
எல்லா சாமான்களிலும் படிச்சுப்பார்த்து வாங்கணும். இது ரொம்ப முக்கியம்.
சூப் மிக்ஸில்கூட எண்ணெயா, இல்லை மாட்டுக் கொழுப்பான்னு பார்க்கணும்.
இனிப்பை வீட்டுலெ செஞ்சுக்கலாம். பிரச்சனை இல்லை. என்ன அழகா, பார்வையா இருக்காது.
ஹரிஹரன்
முழுமையான வெஜிடேரியன் என்றில்லாமல், இங்கே இஸ்ரேலில் "கோஷர்" உணவு வகைகள் கிடைக்கும் (இஸ்லாமியர் ஹலால் போல்). கோஷர் என்றால் பால் சார்ந்த பொருட்களுடன் மீன், முட்டை தவிர எந்த வித இரைச்சியும் இருக்கக் கூடாது. அதே போல், மீன் முட்டை தவிர எந்த வித இரைச்சியுடனும் பால் சம்பந்தப் பட்ட பொருட்கள் இருக்கக் கூடாது. ஆகயால் சீஸ் போன்ற பண்டங்களை நம்பி வாங்கலாம் (அதில் நிச்சயம் மீன், முட்டை சேர்ப்பதில்லை). கோஷர் சீல் இருக்கா என்று பார்த்து வாங்குவது advisable. நிறைய fast food pizza கடைகளிலும் அத்தகய சீஸ் தான் பயன் படுத்தப் படுவதால் pizza கூட நம்பிச் சாப்பிடலாம்..! அப்படி பயன் படுத்தவில்லை என்றால் கோஷர் சர்டிபிக்கேட் கொடுக்க மாட்டார்கள்..! அது இருந்தால் தான் பெரும்பாலானோர் வந்து சாப்பிடுவார்கள்.
கரெக்ட் அக்கா.
படிச்சுப்பார்த்து வாங்குறது ரொம்ப அவசியம். இருந்தாலும் இந்த சைவ உணவு மோசடி நவீன சிப்பாய்க் கலகம் மாதிரி எல்லாவற்றிலும் மாட்டுக்கொழுப்பு/ மாட்டுக்குடல் / மீன் சாஸ் / பன்றிக்கறித்தூவல் /சிக்கன் ப்ளேவர் எட்ச்.. ரொம்பவே அநியாயம் இந்தியாவுக்குள்ளேயேவும்!
மினி ரைஸ் குக்கர் ஒரு பெரிய உதவி!
அன்புடன்,
ஹரிஹரன்
வஜ்ரா,
இஸ்ரேலியர்களின் கோஷர் உணவு நம்பிக்கையினால் பீட்ஸாவுக்கான சீஸ் ரென்னடிலிருந்து பிழைத்தது என்கிறீர்கள்!
என்ன சாய்ஸ் தான் முழு வெஜிடேரியன்களுக்கு சமயத்தில் மிகவும் குறுகி வேகவைத்த உருளைக்கிழங்கை மெயின் கோர்ஸ் உணவாக பல நேரம் /நாள் உண்டு பசியாறிக் களித்திருக்க வைத்திருக்கும் :-))
வைசா,
வருகைக்கும் கூடுதல் தகவலுக்கான இணைப்புச்சுட்டி தந்தமைக்கும் நன்றிகள்.
நாங்க யு.எஸ் போனப்போ இந்த ஒரு விஷயத்துக்காகவே எங்கேயும் சுத்திப் பார்க்கப் போகலை. போக முடிந்த இடங்களுக்கு ரைஸ் குக்கர், தயிர், புளிக்காய்ச்சல், வீட்டில் செய்த ஊறுகாய், பொடி, வத்தல் குழம்பு வகைகளுடன் போவோம். தயிர் கூடப் பால் கேன் வாங்கி உறை ஊத்தித் தான் எடுத்துப்போம். எல்லா ஹோட்டல்களிலும் மைக்ரோ வேவ் அவன் இருந்ததால் சப்பாத்தி, பூரி முதலியன சூடு படுத்திச் சாப்பிட வசதியாக இருந்தது. சைவ உணவுக்காரர்களுக்கு பிரெட் கூட எடுத்துக்கும்போது சந்தேகமாகத் தான் இருக்கிறது.
கீதா,
யு.எஸ்ஸாவது சரி முற்றிலும் வேற தேசம். எல்லாரும் கடிகாரத்தைப் பார்த்தவாரே 31 நிமிஷம் ஆயிடுச்சுன்னா பீட்ஸா ஃப்ரீயாச்சேன்ணு நகம் கடித்து வெய்ட் பண்ணும் பீட்ஸா மோசடி சைவ உணவு என்று தெரியாமலே இருப்பது / இருக்க வைத்திருப்பது பெரிய கொடுமை!
நம்மூரிலேயே வெகுஜனம் பயன்படுத்தும் சாப்பாட்டையும் தாண்டி பல ப்ராடக்டுட்கள் இந்துஸ்தான் லீவரின் சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் லக்ஸ் மாட்டுக் கொழுப்பினக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது க்ளோசப் மாதிரியான ஜெல் டூத் பேஸ்ட் மாட்டு எலும்பு ஜெலட்டின் கொண்டுதான் "ட்ரான்ஸ்ப்ரண்ட்" ஆக தயாரிக்கப்படுகிறது.
உலகமய மாக்கலில் சைவஉணவு மோசடி பன்னாட்டு சாப்பாட்டுக்கடைகளில் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடிகள் செலவழித்து சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதென்னமோ சைவ உணவுப் பழக்கமுள்ளவர்களே!
சாப்பிடுகிர ஆசையே போய்விட்டது சார். அய்யகோ..
நான் ஐ.டி.பி.எல்லில் சேர்ந்தபோது என்னை அல்ஜீரியா அனுப்புவதாக இருந்தது. அப்போது ராதாகிருஷ்ணன் என்ற நபர் என்னிடம் வந்து அல்ஜீரியாவில் சைவ உணவு கிடைப்பது ரொம்பக் கடினம் என்று பயமுறுத்த ஆரம்பிக்க, நானோ "இதப் போய் பெரிய பிரச்சினைன்னு எங்கிட்ட ஏன் சொல்றீங்க" என்று கேட்டு விட்டேன். மனிதர் நொந்து போய் விட்டார்.
இப்போ என்ன பிரச்சினைன்னு இங்கே ஆளாளுக்கு பேசிக்கிட்டிருக்கீங்கன்னு புரியவேயில்லையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சைவம் என்பதாலேயே இழந்தது பல நல்லதுக்கா,கெட்டதுக்கா என்று தெரியாது.
கூட வேலை செய்பவர்களுடன் மதிய சாப்பாடு மற்றும் ஆண்டு கேளிக்கை விருந்து,சீன & மலாய் கல்யாணம்...இப்படி பல.
அதனால் தான் நீங்கள் சிங்கை வரும் போது உங்களை வீட்டுக்கு அழைத்தேன்.
சைவ சாப்பாடு நம்மூர்,நம்வீட்டை தவிர வேறு எல்லா இடங்களிலும் பிரச்சனை தான்.
டோண்டு சார்,
பிரச்னை சைவ உணவு என்று சொல்லப்படும் உணவுகளில் பல முழுமையான அசைவக் கலப்புடனேயே தயாரிக்கப்படுகிறது, அவை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவதும் இல்லை. உதாரணமாக பீட்ஸாவின் சீஸ் கொல்லப்பட்ட கன்றுக்குட்டியின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் ரென்னட் என்ஸைம் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பது மாதிரி பல சைவஉணவு மோசடிகள்!
டெல்பின்,
உண்மையாக! இரண்டாண்டுகளுக்கு முன் இந்த சைவ உணவு மோசடி பற்றிய கட்டுரை படித்ததிலிருந்து ஆசை அற்றுப்போனது பல வகை சைவ உணவுகள் மீது!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
குமார்,
குறிப்பிட்ட உணவுப் பழக்கம் வேறு இடங்களுக்குப்/நாடுகளுக்குப் போகும் போது கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் என்பது இயல்பு. ஆனால் மாற்று வழியிருந்தும் ஜெலட்டின், ரென்னட்க்கு மைக்ரோபியல் கல்ச்சர் மூலமாக தயாரிப்பு வழிமுறை இருந்தும் மாட்டு எலும்பையும், கன்றுக்குட்டியின் வயிற்று என்ஸைமும் தான் ஸோர்ஸாக வைத்து இருப்பது அதுவும் இந்தியாவுக்குள்ளேயே என்பதெல்லாம் மாபெரும் நம்பிக்கை மோசடி அல்லவா?
மணியன் has left a new comment on your post:
Ignorence is bliss என்பார்கள். அதை கெடுப்பதில் உங்களுக்கொரு மகிழ்ச்சியா :)
நல்ல விதயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, எனக்கு இது பொருட்டல்ல என்றபோதும்.
மணியன்,
ஏதோ யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக! என்ற எண்ணம் தான்!
அறிந்த தகவலை அது தேவைப்படுவோர்க்குப் பயன்பட்டால் சரிதானே!
//
உதாரணமாக பீட்ஸாவின் சீஸ் கொல்லப்பட்ட கன்றுக்குட்டியின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் ரென்னட் என்ஸைம் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பது மாதிரி பல சைவஉணவு மோசடிகள்!
//
இந்த ரென்னெட்டில் இருக்கும் நொதி கைமோசின் (chymosin) என்ற வகையைச் சார்ந்தது...கேசின் (caesin) என்னும் பாலில் உள்ள முக்கிய புரதத்தின் மேல் இது வேலை செய்து அதை சில துண்டுகளாக பிரித்துவிடுவதனால் பால் திரிந்து சீஸ் அல்லது பாலாடை கட்டியாக மாறிவிடும். இந்த நொதி ஆதி காலத்தில் கன்றுகுட்டியின் வயிற்றில் பாதுகாக்கும் பால் கெடாமல் கட்டியாவதை கண்டு அதிலிருந்து வந்த technology.
நம்மூரில் பாலை திரிய வைக்க Acid பயன் படுத்தப் படுகின்றது...இதில் எலுமிச்சை சாறில் இருக்கும் சிட்ரிக் அமிலம் பாலில் உள்ள கேசினை coagulate அல்லது கெட்டியாக மாற்றி சீஸ் - பனீர் தயாரிக்கப் படுகின்றது.
http://en.wikipedia.org/wiki/Rennet
//
Chymosin produced by genetically modified enzymes was the first artificially produced enzyme to be registered and allowed by the FDA in the USA. In 1999, about 60% of U.S. hard cheese was made with genetically engineered Chymosin.[1]
//
ரென்னெட் நொதியின் ரிஷி மூலத்தை (அத்தாங்க...அந்த என்சைமோட DNA சீக்வென்சை) clone செய்து bacteriaவின் வயிற்றில் அதை தயாரிக்கும் தொழில் நுட்பமெல்லாம் வந்துவிட்டது...ஆகயால் ஹரிஹரன் அவர்களே கவலையின்றி பீட்ஸா சாப்பிடுங்கள்...அதுவும் டபுள் சீஸ் போட்டு சாப்பிடுங்கள்..
ஆனால் இதனால் என்ன தெரியும் என்றால்...சுத்த சைவம் என்பது...எப்படி சாத்தியம்..? பால் ஒரு உயிரினத்திலிருந்து எடுக்கப் பட்ட பொருளே...அதை திரிய வைக்க ஒரு உயிரிலிருந்து எடுக்கப் படும் நொதி பயன்படுத்தப் படுமேயானால் அது வெஜிடேரியனா நான் வெஜ்ஜா? கவனிக்க, பாக்டீரியா கூட ஒரு நுண்ணுயிர் தான்!!
//ஆனால் இதனால் என்ன தெரியும் என்றால்...சுத்த சைவம் என்பது...எப்படி சாத்தியம்..? பால் ஒரு உயிரினத்திலிருந்து எடுக்கப் பட்ட பொருளே...//
ஷங்கர்,
பால் பசுமாட்டிடம் இருந்தே எடுக்கப்படுகிறது, என்ற போதும் பால் எடுப்பதற்காக பசு கொல்லப்படுவதில்லை. கொடூரமாகச் சித்ரவதை செய்யப்படுவதில்லை.
//அது வெஜிடேரியனா நான் வெஜ்ஜா? கவனிக்க, பாக்டீரியா கூட ஒரு நுண்ணுயிர் தான்!! //
சைவம் என்பது சிந்திக்கும் ஒரு உயிரின் progeney ஐ அதாவது அந்த உயிரினத்தின் உயிர் சுழற்சியை அடுத்த தலைமுறையை அழிக்காது ஓம்பப்படும் உணவுப்பழக்கம். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர், தாவரங்கள் இவைகள் சுயசிந்தனை அற்றவை.
எலிவால்ராஜா,
//முதலில் சைவம் என்றால் என்ன என விளக்குவது நல்லது.//
சைவம் என்பது சிந்திக்கும் ஒரு உயிரின் progeney ஐ அதாவது அந்த உயிரினத்தின் உயிர் சுழற்சியை அடுத்த தலைமுறையை அழிக்காது ஓம்பப்படும் உணவுப்பழக்கம்.
//நான் முதலில் அமெரிக்கா வந்த பொழுது நான் சைவம் என கூறித்திறிந்தேன், என்னை என்னுடன் வேலை செய்யும் ஒருவர் கேட்டார், Can you do dairy என்று, நான் ஆம் என்றேன் அப்புறம் என்ன சைவம் என்று சொல்லிகொண்டு திரிகிறாய் என கேட்டார். (கேட்டவர் அனிமல் புராடெக்டை, பால் முதல் கொண்டு சாப்பிடாத வெள்ளை அமெரிக்கர்)//
வேகன் வெஜிடேரியன் உணவுப்பழக்கம் பற்றிச் சொல்கின்றீர்கள். அதன் அடிப்படை வேறு. நமது சைவ உணவு முறையின் அடிப்படை வேறு.
பால் கறப்பதனால் மாட்டின் உயிருக்குப் பாதகமில்லை. மாட்டைக் கொன்றுதான் பால் எடுக்கப்படுவதில்லை
//ரென்னெட் நொதியின் ரிஷி மூலத்தை (அத்தாங்க...அந்த என்சைமோட DNA சீக்வென்சை) clone செய்து bacteriaவின் வயிற்றில் அதை தயாரிக்கும் தொழில் நுட்பமெல்லாம் வந்துவிட்டது...ஆகயால் ஹரிஹரன் அவர்களே கவலையின்றி பீட்ஸா சாப்பிடுங்கள்...அதுவும் டபுள் சீஸ் போட்டு சாப்பிடுங்கள்..//
ஷங்கர்,
மாற்று தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம், கன்றுக்குட்டி வயிற்று ரென்னட் இன்றைய அளவில் வெகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது முக்கிய காரணம்
காஸ்ட் & லாபநோக்கு.
அதுவரை டபுள் சீஸ் பீட்ஸா இரட்டைப் பாவம் அல்லது இரட்டைக் குழப்பம் /இரட்டை நிம்மதித் தொலைப்பாகவே அமையும்.
Post a Comment