Monday, October 30, 2006

(38) பகவத் கீதையை படிக்க ஏற்ற பருவம் எது?

ஒவ்வொரு எழுத்தும் ஒரு பருவத்தில் படித்தால் எழுத்தின் கருத்தோடு உணர்வோடு இணைந்து படிப்பதே பெரிய சுகானுபவமாகிறது. உடனடி தினசரி வாழ்விலும் படித்த எழுத்தின் செறிவான கருத்துக்களைக் சரளமாய்க் கையாள வாய்ப்பும் ஏற்படுகிறது.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் வேகமான எழுத்து, வீரமான எழுத்து இவைகளைக் காட்டிலும் காதல் எழுத்து அதிகம் கவனத்தினை ஈர்க்கும். இருபாலர் படிக்கும் கல்லூரி எனில் படித்த காதல் எழுத்தை ராக்கெட்டாக்கி சீற விட்டு எதிர்பாலர் காதல் எதிர்ப்பாளராக இருந்தாலும் சமீபத்தில் படித்த காதல் எழுத்தினை உடனடியாக அதன் முழுப்பயன்பாட்டு டார்கட் ஏரியாவில் பயன்படுத்திடும் போது உற்சாகம் கூடுகிறது.

பொதுவாகத் தந்தையின் காசில் வளர்ந்து படிக்கும் நாட்களில் தத்துவங்கள் பேசிடும் எழுத்தை தன்னருகே அண்ட விடாது அந்த வயசுக்கான மனது. டீன் ஏஜ் ஹார்மோன்கள் வாசிக்கும் ஹார்மோனியத்திற்கு மிகச்சரியானது காதல், மற்றும் காதலர் வருணனை எழுத்துக்களே.

எனவே டீன் ஏஜ் வயதில் பகவத் கீதை படி என்றால் 'ஏ க்யா பக்வாஸ் ஹை" என்று ஒதுங்கி ஓடிவிடுவதே நிதர்சனமாக இருக்கும்.

கல்லூரி படித்து முடித்து வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு கைநிறைய சம்பளத்துடன் ஆபீஸர் வேலை கிடைத்து தங்கை கல்யாணத்திற்கு சில லட்சங்கள் என சில வருடங்களும் பின்பு மாத ஈஎம்.ஐ 15K ஆகும் 800சதுர அடியில 2BHK ப்ளாட்க்கு, அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ரேஷ்மாவுக்கோ, மீனாட்சிக்கோ, காயத்ரிக்கோ ஐ லவ் யூ சொல்லி செட்டில் ஆகிடலாமா லைஃப்லன்னும், யோசிக்கிற இருபதுகளில் பகவத் கீதை புத்தகம் நல்ல விஷயங்கள் அடங்கியதுதான் என்ற உண்மை தெரிந்தாலும் முழுமையாகப் படிக்க மனம் ட்யூன் ஆகியிருக்காது.

இருபதுகளின் கடைசியில் / முப்பதுகளின் தொடக்கத்தில் பெற்றோர் பார்த்த பெண்ணோ, சுயமாய்ப் பெண் பார்த்து பெற்றோரிடம் காட்டி சம்மதம் வாங்கிக் காதலைக் கல்யாணமாக்கியோ, கல்யாணத்தினை காதலாக்கியோ வாழ்க்கை மேற்கொண்டு பயணித்து நகர, காட்சிகள் மாறி அறங்கேற ஆரம்பிக்கிறது.

தெனாலி கமல் மாதிரி பயம் மெள்ளத் தொற்றிக்கொள்ளும், குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும். பெரும்பாலும் வெளி மாநிலத்திலோ, வெளிநாட்டிலோ வாழ்கின்ற போது பரஸ்பரம் எழும் பூசல்கள் பெரும்பாலும் சீர் பருப்புத்தேங்காய் முனை உடைந்தநிலையில் மரியாதைக்குறைவாக வந்ததாக ஏற்கனவே மகனை இழுத்துக்கொண்டு போகிறார்களே என்ற உணர்வுக் கொதிநிலையில் இருக்கும் அம்மாவிடம் நைஸாகப் போட்டுக் குடுக்கும் அத்தையால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அழுத்தக்காரர்கள் என்ற எண்ணம் அழுத்தமாக பதிந்து போனதில் வெளிநாட்டில் ஒருநாள் ஏதேனும் ரஸத்தில் உப்புக்குறைவு என்ற உப்புப்பெறாத விஷயத்தில் ரசாபாசமாய் பூகம்பமாய் வெடிக்கும் பூசல்கள் , பரஸ்பரமாய் என்னை என்ன மாதிரியான மரியாதை தெரியாத ஒரு குடும்பத்தில் தள்ளிவிட்டாய் என்று முக்கால் வாசி சம்பளத்தை ஒருமாதம் டெலிபோன் செய்து சங்காத்தமே வேணாம் என்று மோஸ்ட் எகானமி ஆர்லைன்ஸில் பேக் ஆஃப் செய்யப் பெட்டிகளைப் பேக் செய்துகொண்டு இருக்கும் போது எங்கப்பா கடைசியிலே இப்படி வெளிநாட்டு வரன்னு பாழுங்கிணத்தில என்னைத்தள்ளிட்டாரே என்று பேசிக்கொண்டே மனைவி மயங்கிச்சரிய என்னடா பெரிய தியேட்டர் பெர்பார்மன்ஸ் காட்டுறா என்று சலிப்போடு பக்கத்து க்ளினிக் கூட்டிப்போன சமயத்தில் "கங்கிராஜுலேஷன்ஸ் ஷி இச் கன்ஸீவ்டு" என்று நம்முர் டாக்டர் சொல்ல வீட்டுக்குத் திரும்பி வரும் போது ரெண்டு பேரும் மேலே பொங்காம நின்னு யோசிச்சு முந்தைய நாள் பேக் ஆஃப் முடிவுக்கு பேக் ஆஃப் சொல்லி கொஞ்சநாள் கழிச்சி ஊருக்குச் சொல்லலாம்னு முடிவெடுத்து அடுத்த 8மாசத்தில விஸிட்ல அம்மா அப்பாவைக் கூட்டி வந்து, குழந்தை பிறந்து பாஸ்போர்ட் எடுத்து அதில் ப்ளேஸ் ஆஃப் பர்த் இந்தியா தவிர்த்த வெளிநாட்டு நகரம் என்ற விஷயத்தை பெரிய அச்சீவ்மெண்ட் என்று அல்பமாய் அகமகிழ்ந்து கண்ணாடியில முகம் பார்த்தா களைப்புடன் என்னிடம் ஏதோ சரியில்லையோ என்று மருகி, ஒருவேளை இவ அடிக்கடி சொல்றாளே உங்களுக்கு ஏதும் தெரியாது என்று நிஜமாக இருக்குமோ? என்று குழம்பி நிற்க நேரிடும்.

என்ன ஊர் இது கோவில் இல்லை, குளம் இல்லை இது அம்மா, அடுத்த தெரு நடந்து போக பாஸ்போர்ட் எடுத்துட்டு போகணும், காலாற தெருவில நடக்க முடியல இது அப்பா மூணுமாசம் அம்மா சரியா தூங்கக்கூட இல்லை. இனி நீ அப்பா ஆகியாச்சு பாத்து சும்மா சண்டை போட்டுட்டே இருக்கவேண்டாம். அப்பா அம்மா ஊருக்குத் திரும்பிப் போயாச்சு. இப்போ கைக்குழந்தை நைட் எல்லாம் அழுகை... நைட் தூங்க முடியல... காலையில விஜய்காந்த் மாதிரி சிவந்த கண்களோட ஆபீஸுக்கு போகவேண்டியிருக்கு. வீட்டுவேலையில கூடமாட உதவட்டும் என்று வைத்த பெண்மணிக்கு நாம சேவகம் செய்யவேண்டிய கடமை வேற சேந்துக்கிச்சு இப்போ.

வயசு 33-37 வாழ்க்கையே நான்கு ஆண்டுகளில் மாறிப்போச்சு. போர்க்களமாகி விட வாழ்க்கையில் அடுத்து என்ன ஸ்டெப் எடுக்கணும்னு மூளைக்கு ப்ரியாரிடைஸ் செய்ய கூர்மை மக்கிப்போனமாதிரி படுது.

சொந்தத்துலயே / நட்புலேயே யார் யார் போட்டு வாங்குறாங்கன்னு தெரியுது என்ன செய்யணும்னு தெரியலே!

நாலுபேர் துரோகம் பண்ணிட்டாங்க! ஷிட் வாட் அ ஸெல்பிஷ் பீப்புள்ன்னு மனம் மருகுது.

சே ஐயாம் அஷேம்டு ஆஃப் மைஸெல்ப்... ஐ ஷுட் நாட் ஹாவ் டிட்ச்டு ஹிம். ஆனா நேர்மையா மன்னிப்புக்கேட்க கித்தாப்பு விடமாட்டேங்குது!

கீதையில அர்ஜுனன் இப்படித்தான் போர்களத்துக்கு நடுவிலே குழம்பிப்போய் நின்னான். "கமாண்டர் இன் சீஃப் ஆஃப் பாண்டவா ஆர்மி" என்ற போதும் நடுப் போர்க்களத்தில் போர்புரிய மாட்டேன்னு அடம் புடிச்சான்!

வீட்டுல ஒரு வயசுக் குழந்தை நடந்து விளையாண்டு டோட்டல் சரண்டர்னா என்னன்னு நீ கோபமா வெடிச்சுக் கத்தும் போது நேரா மூஞ்சியப்பார்த்து சிரிக்கும்போது வீக் எண்டில் "பகவத் கீதை" லெக்சர் யாரோ ஸ்வாமிஜி தர்றான்ற ஈமெயில் நினைவுக்கு வரும். போய் லெக்சர்ல உக்கார்ந்தா உனக்கான குழப்பங்கள் எல்லாம் அர்ஜூனனுக்கு எப்படி முன்னமே வந்திருக்குன்னு ஆச்சர்யப்படுவே. ஸ்வாமிஜியோடக்யூ அண்ட் ஏ செஷனில் பலர் கேட்ட கேள்விகள் நீ கேட்க நினைச்ச கேள்விகளாயிருப்பது கண்டு ஆச்சரியம் கூடி லெக்சர் முடிவில் புக்ஸ்டால்ல பத்து புஸ்தகம், கீதா சேப்டர்கள், வேதிக் ஸெல்ஃப் மானேஜ்மெண்ட் வாங்கிப் படிப்பாய்.


கீதை பிரச்சினைக்ளுக்குத் தீர்வினைச் சொல்லும் நூல். பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுபவர்களுக்கு கீதைப் படிப்பு மிக அவசியமானது.

வீட்டில் ஒருவயது / இரண்டு வயதுக் குழந்தைகள் இருக்கும் 33-37 வயது பருவமே மிகவும் சிறந்தது கீதை படித்து, புரிந்துகொண்டு, அதன்படி நடக்க இதுவே மிகச் சிறந்த காலம்.

உடனே எழும் தினசரிப் பிரச்சனையைத் தீர்க்க உடனிருக்கும் நல்லாசிரியன் கீதை. பகவத் கீதையை படியுங்கள் பண்போடு, அன்போடு வாழுங்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

13 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெஸேஜ்

வடுவூர் குமார் said...

ஹரி
ஒவ்வொருவர் மனநிலை வேறுபடும் என்பதால் இதை ஒரு வரை முறைக்குள் கொண்டுவரமுடியுமா என்று தெரியவில்லை.
நான் அர்த்தமுள்ள இந்து மதத்தில் இருந்து தான் ஆரம்பித்தேன் அதுவும் 16 வயதில்.
பகவத்கீதை பற்றி கேள்வி ஞானத்துடன் முதலில் படிக்கும் போது வயது 32.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க குமார்,
//ஒவ்வொருவர் மனநிலை வேறுபடும் என்பதால் இதை ஒரு வரை முறைக்குள் கொண்டுவரமுடியுமா என்று தெரியவில்லை.//

கண்டிப்பாக ஒரு வரைமுறைக்குள் கட்டுப்பாடாக என்று கொண்டுவரமுடியாது என்ற போதும் மிக இளைய வயதில் நேரடியான வாழ்வியல் அனுபவம் அதிகமாக இருக்காது. மூத்த வயதாக ஐம்பதில் தான் ஆரம்பிக்கவே என்றால் ஞானக் குறைவால் அடுத்த தலைமுறைக்கு முழுமையாக வழிகாட்டிட இயலாது.

//நான் அர்த்தமுள்ள இந்து மதத்தில் இருந்து தான் ஆரம்பித்தேன் அதுவும் 16 வயதில்.
பகவத்கீதை பற்றி கேள்வி ஞானத்துடன் முதலில் படிக்கும் போது வயது 32.//

இதோ 32வயதிலே நீங்களும் கேள்வி ஞானத்துடன் படித்திருக்கின்றீர்கள் :-))

கால்கரி சிவா said...

ஹரி, இவ்வுலகின் முதல் உளவியல் நூல் பகவத்கீதை. இது ஒரு மொரேல் பூஸ்டர். மன உளைச்சல் உள்ளவர்களை உற்சாகபடுத்தும் நூல். இதை படிக்க வயது தேவையில்லை. எல்லா வயதிலும் ஆரம்பிக்கலாம். அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு ஆறுதல்கலும் அர்த்தங்களும் கிடைக்கும் என்பதே ஆச்சர்யமான உண்மை

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள் சிவா,

//இவ்வுலகின் முதல் உளவியல் நூல் பகவத்கீதை. இது ஒரு மொரேல் பூஸ்டர். மன உளைச்சல் உள்ளவர்களை உற்சாகபடுத்தும் நூல். இதை படிக்க வயது தேவையில்லை.//

படிக்க வயது வரம்பு தேவையில்லைதான். கீதை மிக எபக்டிவாக இளம் தந்தையாக இருக்கும்போது வெகுவேகமாக மாறிவிட்ட சூழலிலும் கூடிவிட்ட குழப்பங்களும் முப்பதுகளின் மத்தியில் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் அதை முக்கியமான பருவமாகச் சுட்டியிருக்கிறேன்.

//அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு ஆறுதல்கலும் அர்த்தங்களும் கிடைக்கும் என்பதே ஆச்சர்யமான உண்மை//

மிகவும் சத்தியமான உண்மை

Hariharan # 03985177737685368452 said...

வாங்க வரதன்,

//எம் ஜி ஆருக்கு அடுத்து புள்ளி வைக்காத அதிக நீளமான வாக்கியமா பேசினது இல்லை, எழுதினது நீங்களாகத்தான் இருக்கும்//

திட்டமிட்டு எழுதவில்லை. தட்டச்சிட்டுப் பார்த்தா ஒருவாக்கியமே ஒரு பதிவு நீளம் வந்திருந்தது. படிக்க அயர்ச்சியா இருக்குன்னு தாண்டிப்போயிடுவாங்களோன்னு இருந்தது. ஆனால் உடனேயே தொலைபேசியில் சவூதியிலிருந்து வலைஞர் நண்பர் திரு. அபுல் கலாம் ஆஸாத் மிகக் குறிப்பாக நடுவில் வரும் இந்தப்பகுதியை பாராட்டினார்!
இப்போ நீங்களும். பாராட்டுக்களுக்கு நன்றிகள்.


//எனக்கு இன்னும் அந்த முதிர்ச்சி வரவில்லை//

சீக்கிரமே பகவத் கீதை படிக்க ஆரம்பிப்பீர்கள் :-)))

Hariharan # 03985177737685368452 said...

//பகவத் கீதையையை புரிந்து கொள்ளூம் முதிர்ச்சி வாழ்வில் அவரவர் வளர்ந்த விதத்தின் படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலத்தில் வரும்.//

ஓரளவுக்குச் சரி என்றபோதும் கீதையைப் படிப்பதற்கும் புரிந்து கொள்ளுதலுக்குமான முதிர்ச்சி பெரியவிஷயமல்ல.

கீதையில் படித்ததை சரியாகப் புரிந்துகொண்டதை தினசரி வாழ்வில நேரடியாக அப்ளை செய்து பகவத்கீதைப்படி நடக்கத் தேவைப்படும் முதிர்ச்சி மிகப்பெரியது.

இதற்கு 30களில் ஆரம்பித்தால் தான் வயது முதிரும் போது பண்பும் பக்குவமுமாக பேசி,நடந்துகொள்ள இயலும். குடும்பத்தலைவனாக தலைமைப்பண்போடு குடும்பத்தை வழிநடத்தலாம்!

பூங்குழலி said...

அரிகரன்(Hariharan) அவர்களே...

நீங்கள் குறிப்பிடும் பருவம் பற்றிய கருத்துக்கள் எனது கீதை படிக்கும் பழக்கத்தை மாற்றச் சொல்லுவனவாய் உள்ளன.
இது பற்றிய மனக்குழப்பத்தினை எனது பதிவில் பதிந்துள்ளேன்.
பார்க்க உரல். http://kuzhappam.blogspot.com/2006/10/blog-post_30.html
பதிவு பொருள் பொதிந்ததாய் இருக்கிறது..
பதிவுக்கு நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள் பூங்குழலி,

//அரிகரன்(Hariharan) அவர்களே...//

சன் டி.வியை அப்படியே சன் டிவி எனும்போது குழம்பாத மனம் ஹரிஹரன் என்பதை அரிகரன் என்று ஏன் தெளிவாக குழம்புகிறது? முழுத்தமிழ் எனில் அரிஅரன் என்பதே சரியாகும். அதை விடுங்கள்!


//நீங்கள் குறிப்பிடும் பருவம் பற்றிய கருத்துக்கள் எனது கீதை படிக்கும் பழக்கத்தை மாற்றச் சொல்லுவனவாய் உள்ளன//

நீங்க கீதையைப் படிக்கிறதை நான் சொன்னதை வைத்தெல்லாம் மாத்திகிடாதீங்க சாமிகளா!

உங்கள் பதிவை முன்னரே படித்துப் பின்னூட்டமிட்டுருக்கிறேன்!

பூங்குழலி said...

//சன் டி.வியை அப்படியே சன் டிவி எனும்போது குழம்பாத மனம் ஹரிஹரன் என்பதை அரிகரன் என்று ஏன் தெளிவாக குழம்புகிறது?//

அதெல்லாம் ஒன்றுமில்லை..

இதில் http://jaffnalibrary.com/tools/Unicode.htm, //ஹ// எப்படி அடிப்பது என்று தெரியவில்லை..
எங்கேனும் இவ்வெழுத்து கிடைத்தால், பிரதியெடுப்பது வழக்கம்.
:)

பெரும்பாலும் பதிவரின் பெயரை பிரதியெடுத்துவிடுவேன்.
உங்கள் பெயர் ஆங்கிலத்தில் இருந்தது.
அதனால்..
குறையிருந்தால் மன்னிக்க..

பூங்குழலி said...

பதிவை திருத்திவிட்டேன்..

Hariharan # 03985177737685368452 said...

பூங்குழலி,

சுரதா பெட்டியில் -ha என்று தட்டச்சினால் ஹ என்று வரும். யூனிகோடில் நேரடியாக ha என்று அடித்தாலே போதும்

மங்களூர் சிவா said...

சார் உங்க கால் எங்க (மானிட்டர் முன்னாடி) காட்டுங்க , தெய்வம் சார் நீங்க.

//
போர்க்களமாகி விட வாழ்க்கையில் அடுத்து என்ன ஸ்டெப் எடுக்கணும்னு மூளைக்கு ப்ரியாரிடைஸ் செய்ய கூர்மை மக்கிப்போனமாதிரி படுது.
//

யோசிச்சாதான் பிரச்சனைன்னு நினைக்கிறேன்.

பகவத்கீதை இன்னும் படிக்கவில்லை சமயம் நெருங்கிவிட்டது போல தோன்றுகிறது.

மிக்க நன்றி