Thursday, September 20, 2007

(176) ராமர்பால கட்டுமானப் பணியில் ராமபிரான்

ராம பிரான் சமுத்திரத்தைக் கடந்து லங்கா செல்வதற்கான (ராமர்)பாலம் ஹனுமானின் தீவிர மேற்பார்வையில் வானர சேனைகள் வெகு வேகமாகக் கட்டிக் கொண்டிருக்கின்றன.

வானர சேனைகள் ராம நாமம் எழுதி கடலில் எறியும் பாறைகள் மூழ்காமல் மிதந்து பாலம் அமைக்க அதன் மேல் முன்னேறியபடியே பாலம் கட்டுவது விரைவாக நடக்கிறது.

ராமபிரானும் நேரடியாகக் களத்தில் இறங்கி பாலக்கட்டுமானத்தில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். ஒரு பாறையைத் ராமபிரான் தன் கைகளால் தூக்கி கடலில் எறிய உடனே அது கடல் நீரில் மூழ்குகிறது.

ராம பிரான் யோசித்தபடியே "அனைத்து வானரசேனைகள் கடலிலே எறியும் பாறைகள் மிதக்கிறது, ஆனால் தான் எறிந்த பாறை மூழ்கிவிட்டதே" என்று குழப்பத்துடனும் யாரும் தான் செய்ததைப் பார்த்துவிட்டார்களா எனும் மெல்லிய வெட்க உணர்வுடன் சுற்று முற்றும் பார்க்கிறார் ராமபிரான்.

மானுட உணர்வுகளுடன் தான் இறை அம்சமானவன் என்பதை ஒருபோதும் வெளிப்படுத்திக்கொள்ளாது மானுடனாகவே வாழ்ந்தவன் ராமபெருமான்!

ஹனுமான் ராமபிரான் செய்ததைப் பார்த்தபடியே ராமபிரானின் அருகே வருகிறார்.

அருகே வந்த ஹனுமானிடம் தான் எறிந்த பாறை மட்டும் உடனே கடலில் மூழ்கியதை விவரிக்கிறார் ராமபிரான்.

ஹனுமான் ராமபிரானிடம் சொல்கிறார். "ராமபிரானே பாறைக்கல்லே ஆயினும் அதை நீ கைவிட்டு விட்டால் அது உடனடியாக மூழ்கித்தானே ஆக வேண்டும்" என்று.

Sriராம ஜெயராம ஜெய ஜெய ராம! என்று சொல்லியே ராமபிரானின் அருளைப் பெற்று பேரானந்தத்துடன் வாழ்வோமாக!


அன்புடன்,

ஹரிஹரன்

4 comments:

Hariharan # 03985177737685368452 said...

39660
டெஸ்ட் மெசேஜ்!

PAISAPOWER said...

//ஹனுமான் ராமபிரானிடம் சொல்கிறார். "ராமபிரானே பாறைக்கல்லே ஆயினும் அதை நீ கைவிட்டு விட்டால் அது உடனடியாக மூழ்கித்தானே ஆக வேண்டும்" என்று.
//

படித்தேன் சிரித்தேன்!

நன்றி

மங்களூர் சிவா said...

Sriராம ஜெயராம ஜெய ஜெய ராம
Sriராம ஜெயராம ஜெய ஜெய ராம
Sriராம ஜெயராம ஜெய ஜெய ராம

இரா.ச.இமலாதித்தன் said...

இந்த நிகழ்ச்சியை யாரு பார்த்து அதை சொன்னாங்க...?
ஆதாரம் இருக்கா?
சும்மா ஏதாவது ஒன்னை நீங்களே நேருல பார்த்த மாதிரி சொல்லாதீங்க?