Monday, September 11, 2006

(29) கோலாலம்பூரில் ஒரு வாரம்!

கோலாலம்பூரில் லேக் கார்டன், பேர்ட் பார்க், கேஎல் டவர் (421மீ உயரம்), சைனா டௌன் பெடாலிங் ஸ்ட்ரீட், சென்ட்ரல் மார்க்கட்,மெர்டேகா ஸ்கொயர், லிட்டில் இந்தியா, Zoo negera, Batu Caves முருகன் கோவில், சௌ கித், ஜென்டிங், KLCC,Ampang, சீனர்கள் கோவில்கள், மகா மாரியம்மன் கோவில் என்று ஏழு நாட்களில் சுற்றி வர முடிந்தது.

கோலாலம்பூரில் ஓடும் கோம்பாங்க், மற்றும் க்ளாங் (Confluence of Gombak & Klang rivers) ஆறுகள் சங்கமிக்கும் இடம் தான் கோலாலம்பூர் நகரம் உருவான இடம். இந்த ஆற்றுச் சங்கமத்தில் தகரத்தாது (Tin ore) கிடைத்து அதனால் ஆறுகள் கிளறப்பட்டதால் கலங்கலான ஆறு என்ற பொருளுடையதாக நகரின் பெயர் கோலாலம்பூர் என்று வைக்கப்பட்டது.

இன்றைய கோலாலம்பூரில் இந்த கோம்பாங்க், மற்றும் க்ளாங் (Confluence of Gombak & Klang rivers) ஆறுகள் சங்கமிக்கும் இடம் மஸ்ஜித் ஜாமெக் KTM rail station பின்புறம். இந்த இரு ஆறுகள் நகர ஆக்ரமிப்பில் ஆடுதாண்டும் காவிரிமாதிரி குறுகிக் கால்வாய் ஆகிவிட்டது ஆறு என்ற பதம் நகைப்புக்குரியதாகியிருக்கிறது. என்றாலும் ஆறு கூவம் மாதிரி சாக்கடை ஆகாமல் மழைநீர் வடிகால் மாதிரி பயன்பாட்டில் இருக்கிறது.

ஜலான் அலோர்(Jalan Alor) என்ற உணவகங்கள் சாலைப் பக்கம் (ஜலான்=சாலை) செல்லலாம் என்றிருந்தேன். சைனா டௌன் பெடாலிங்க் ஸ்ட்ரீட்டில் நடந்த போது சைனாக் காரர்களின் உணவகங்களில் தோலுரிக்கப்பட்டு மூக்கில் கம்பி கட்டித் தொங்கும் வாத்துகளும், பட்டி பட்டியாய் பாம்பா? வேறென்னவுமோ, 5நிமிடம் மூச்சை தம் கட்டி பெடாலிங்க் ஸ்ட்ரீட்டைக் கடப்பதற்குள் அப்பப்பா! சைனாக்காரன் உணவு வாசம்! (நாற்றம்) தாள முடியவில்லை.

எனவே ஜலான் அலோர் போனா மூச்சடைச்சு அலற வேண்டியிருக்கும் என்பதால் ஜலான் அலோர் விஸிட் கான்சல் ஆனது..

சரி துரியன் பழத்தைச் சுவைப்போம் என்றால் தங்கியிருந்த ஹோட்டலில் சாதுரியமாக நோ துரியன் பாலிஸி. ஆக துரியன் பழத்தைச் சுவைக்க முடியாத துரியாவஸ்தையானது.




கோலாலம்பூர் பறவைகள் பார்க்கில் சக கிளியார்கள் பார்க்க அசத்தலாக உருளை வண்டி ஓட்டும் சாகசக் கிளியார். Ambi-theatereல் தினசரியாக பார்வையாலர்களுக்காக நடத்தப்படும் பறவைகளின் சாகசங்கள்.


கோலாலம்பூர் zoo negera-ல் மூதாதையர் மையம். எள்ளுத்தாத்தாவின் கொள்ளுத்தாத்தாக்கள் டார்ஜான் மாதிரி கயிறுகளில் தொங்கிச் சேவைகள் புரிந்துகொண்டிருந்தனர். கொள்ளுப்பாட்டியின் எள்ளுப்பாட்டிகள் சக எ.பாகளுக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் children wading pool/play area விலிருந்து

புழுக்கமான வெய்யில்-ஈரப்பத அவஸ்தையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற wading pool + large children play area இரட்டைக் கோபுரத்தின் முன்பாக KLCC Suria shopping complex பின்னால் சென்றடையும் வண்ணம் லாண்ட்ஸ்கேப் அருமையாகச் செய்திருக்கிறார்கள். ஹிந்திப் படம் பார்க்கின்றவர் எனில் பாபி தியோல் /பிபாஷ பாஸூ மாதிரியானவர்கள் குதித்தாடிய இடம் என இனம் காணலாம்.


கோலாலம்பூர் மோனோரெயில் பாதை புகிட் நனாஸ் / மெதான் துனுக் அப்துல்ரஹ்மான் நிலையங்களுக்கு இடையே

இந்த மோனோரெயில் எலிவேட்டட் இருவழி ட்ராக் பாருங்க இடதுபக்க ட்ராக் KL Sentral போறது, வலதுபக்கம் Titiwangsa ன்னு ஒரு இடம் போறது. கீழே கார், பஸ், என தொந்தரவில்லாமல் போகிறது. அர்பன் மாஸ் transportationக்கு தீர்வா ஜெயலலிதா சென்னைக்கு இந்த மோனோரெயிலைத் தான் கொண்டுவர மலேஷிய அமைச்சர் டத்தோ சாமிவேல்மூலம் எல்லாம் ரெடி பண்ணாங்க. பா.மா.க ரயில்வே இணை அமைச்சர் ஆ..ஊன்னார்... அம்மா ஆட்சி காலி திட்டமும் காலி. மவுண்ட் ரோடுக்கு மோனோரெயில் தான் சரியாகும். இப்ப பாதாள ரயில் அமைக்க திமுக பா.ம.க ஆய்வு செய்றாங்க!

என்னமோ போங்க. சென்னை வாசிக்கு வசதி இப்போதைக்கு வரப்போறதில்லை. குரோம்பேட்டை மேம்பாலம், கத்திப்பாரா இன்டர்சேஞ்ச் இதுக்கே 10வருஷமாகியும் இன்னும் வேலை நடந்துக்கிட்டே இருக்கு. பால வேலைக்குச் தேவையான கருங்கற்களை விட கலைஞரு / டி.ஆர்.பாலு / ஜெயா நாட்டின திட்ட அடிக்கற்கள் எண்ணிக்கைதான் அதிகமா வேலை நடக்குற இடத்துல கிடக்கு!

எப்ப பாதள ரயிலு / மோனோ ரயிலு சென்னையில ஓடுமோ? பேரன் பேத்தியாவது போக முடிஞ்சா சரி!


ஜென்டிங் எண் டெர்டெய்ன்மெண்ட் சிட்டியிலிருந்து கோலாலம்பூர் கிளம்ப நம்ம பேருந்து முன்பாக

ஜென்டிங் எண் டெர்டெய்ன்மெண்ட் சிட்டி KL வாசிகளுக்கு பெரிய ஆறுதல். க்ளைமேட் சட்டென்று குளிர்ச்சியாகி ஈரப்பதம்+வெய்யில்=அவியல் என்று தினசரியில் உழல்வோர்க்கு 60 கி.மீ தொலைவில் முற்றிலும் புத்துணர்ச்சியளிக்கும் வரப்பிரசாத சிட்டியாக இருக்கிறது. இங்கிருக்கும் பர்ஸ்ட் வேர்ல்டு தீம் பார்க் குழந்தைகளுக்கு உற்சாகம் தரும் விளையாட்டுக்கள் நிறைந்த இடம்.
கேஎல் டவர் பின்ணணியில் ஜென்டிங் எண்டெர்டெய்ன்மென்ட் சிட்டி பேருந்திற்காக புதுராயா மத்திய பேருந்து நிலையம் முன்பாக

ஜென்டிங்-ல் ஸ்கைவே எனப்படும் கேபிள் கார் மலையுச்சியிலிருந்து கீழே வர என ஹாலிடே எபக்ட்க்கு கேரண்டி. நாங்கள் போன சம்யம் ஜென்டிங் ஸ்கைவே கேபிள் கார் வழி மூன்று மாத மேஜர் மெகானிக்கல் மெயின்டனன்ஸ் என்று மூடப்பட்டு இருந்தது டிஸப்பாயிண் ட் செய்தது. மாற்று அவானா ஹைவே கண்டுபிடிக்குமுன் மாலை 5ம்ணியாகிவிட KLக்கு 8மணிக்குள் திரும்ப வேண்டும் என்பதால் ஏமாற்றத்துடன் வரவேண்டியிருந்தது.

கோலாலம்பூரில் ஒருவாரம் முடிந்தவுடன் அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல எண்ணியிருந்தேன். சிங்கப்பூர் சக வலைஞர் திரு.வடுவூர் குமார் மிக்க அன்புடன் அவர் இல்லத்திற்கு வரும்படி invite செய்திருந்தார். அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து எங்களுக்கு சிங்கையைச் சுற்றிக்காட்ட ஆயத்தமாயிருந்தார். நானும் குவைத்-சிங்கப்பூர் வலைஞர்கள் மாநாட்டுப் பதிவுக்கு தயாராயிருந்தேன்.

கோலாலம்பூர் சிங்கப்பூர் எம்பசியில் ஆகஸ்ட் 8ம்தேதி சிங்கைவிசாவுக்க்கு அப்ளை செய்தேன். காலை 11மணிக்கு விசா ஆபிஸர் உங்கள் போட்டோக்களின் பின்ணணி நீலவண்ணத்தில் உள்ளது அது வெண்மையான பின்ணணியில் வேண்டும் என்று வன்மையான விதிமுறையைச் சொன்னார். மறுநாள் ஆகஸ்டு 9ம்தேதி சிங்கை எம்பஸி விடுமுறை என்றார். நான் வெள்ளியன்று காலை 9மணிக்கே கோலாலம்பூரை விட்டுக் கிளம்ப வேண்டும் என்பதால் சிங்கை விஸிட் இயலாது போனது.

திரு.வடுவூர் குமார் அவர்களின் அன்புக்கு நன்றிகள். அடுத்த சந்தர்ப்பத்தில் தூரகிழக்குச் சிங்கையிலோ மத்திய கிழக்கு துபாயிலோ அவசியம் சந்திக்கலாம். இல்லை எனில் சென்னையிலோ /நாகப்பட்டினத்திலோ சந்தித்துக் கொள்ளலாம்.

கோலாலம்பூர் மொத்தத்தில் பிடித்திருந்தது. ஜென்டிங் ஸ்கைவே தவெர்த்து ஏமாற்றம் அதிகமில்லை. மலேஷிய மக்கள் ரொம்ப ப்ரண்ட்லி. தமிழ் பரவலாக பேசப்படுவதால் கூடுதல் வசதி. ஆனால் நான் கேஎல்லில் பார்த்த அளவில் வெகுதியான தமிழ் பேசுவோர் அடித்தட்டு வேலைகளாக, டாக்ஸி ஓட்டுதல், வீதிகள் துப்புறவு என்றிருக்கின்றனர். வணிகம் பராம்பர்யமாக நகரத்தார்-செட்டியார்கள் செய்கிறார்கள், ஆனால் HSBC மாதிரி உள்நாட்டு/அயல் நாட்டு வங்கிகளில், இதர வசதியான வேலைகளில் மத்திய கிழக்கு மாதிரி அவ்வளவு வெகுதியாகத் தமிழர்களை / இந்தியர்களைக் காண இயலவில்லை.

அன்புடன்,

ஹரிஹரன்

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

அனுபவம் நிகழ்வுகள் அப்படின்னு வகைப்படுத்துவதற்கு முன்னமே தமிழ்மணம் அதுவாவே வகைப்படுத்தாதவைன்னு எடுத்துக்கிச்சு மெயின் இண்டக்ஸ்லயும் பதிவைக் காணோம் அதான் சும்மா பின்னூட்ட டெஸ்ட்.

Hariharan # 03985177737685368452 said...

அனுபவம் நிகழ்வுகள் அப்படின்னு வகைப்படுத்துவதற்கு முன்னமே தமிழ்மணம் அதுவாவே வகைப்படுத்தாதவைன்னு எடுத்துக்கிச்சு மெயின் இண்டக்ஸ்லயும் பதிவைக் காணோம் அதான் சும்மா பின்னூட்ட டெஸ்ட்.

வடுவூர் குமார் said...

ஹரி,
வந்துதிருந்தீங்கன்ன உங்க குட்டீஸ் கூட கொஞ்சம் விளையாடியிருக்கலாம்.
மிஸ் ஆயிடுத்தே!!
ரொம்ப நாள் கழித்து கோலாலம்பூர் பார்த்தேன்,நிறைய மாற்றம் தெரிகிறது.
குழந்தைகளுக்கு எங்கள் ஆசிர்வாதங்கள்.

Hariharan # 03985177737685368452 said...

குமார்,

கண்டிப்பாக இன்னொரு சந்தர்பத்தில் மிஸ் ஆகாமல் சந்திக்கலாம்.

ஆசிகளுக்கு நன்றிகள்.

அன்புடன்

ஹரிஹரன்

துளசி கோபால் said...

//ஆடுதாண்டும் காவிரிமாதிரி //

அட!!!!!

அடுத்தமுறை நியூஸி வந்துட்டு அப்படியே சிங்கைக்குப் போயிக்கலாம்.

அதுசரி,
அங்கெ அன்னபூரணீயிலே சாப்புடலையா?

Hariharan # 03985177737685368452 said...

//அடுத்தமுறை நியூஸி வந்துட்டு அப்படியே சிங்கைக்குப் போயிக்கலாம்.//

சரி சிட்னி-கிர்ஸ்ட்சர்ச்-சிங்கைன்னு முப்பெரும் சுற்றுலாவாப் ப்ளான் பண்ணிற வேண்டியதுதான் :-))

//அதுசரி,
அங்கெ அன்னபூரணீயிலே சாப்புடலையா? //

நம்ம குலதெய்வம் அன்னபூரணி பேர்லயே உணவகம் இருப்பது தெரியாம மிஸ் பண்ணிட்டனே! இன்னொருவாட்டி எப்படியும் கேஎல் போவேன் அப்ப செம கட்டு கட்டிறவேண்டியதுதான் :-)))

MyFriend said...

ஹரி, நாங்க என்னென்ன எழுதலாம்ன்னு நெனைச்சோமோ அதெலலம் எழுதியிருக்கீங்க இங்கே..

இவை ஒவ்வொன்றையும் இன்னும் விளக்கமாக நாங்கள் எழுதுவோம் என்று நினைக்கிறேன்..

கூடிய சீக்கிரத்திலேயே நீங்கள் ருசித்த டுரியான் பழத்தை பற்றிய பதிவு வெளியிடப் பட விருக்கிறது. ஏனென்றால் டுரியான் சீசன் நெருங்கிவிட்டது இங்கே.. ;-)

அப்புறம்.. மோனோரயில், LRT மற்றும் பொது Pஒக்குவரத்து வசதிக்கு குவாலா லும்புர் நன்றாகவே ரெடியாகியிருக்கிறது.. இங்கே வந்தால் வாகனமே தெவையில்லை. ஒவ்வொரு இடத்துகும் மிக சுலபமாகவே மற்றொரு இடத்துக்கு போய் வரலாம். ;-)

நீங்க இந்தத வசதியெல்லாம் அனுபவிச்சிருப்பீங்க.. எப்படி இருந்தது இந்த சேவைகள்? ;-)