Saturday, September 23, 2006

(31) பெரியாரிஸமும் மதசார்பின்மை வெங்காயமும்!

பெரியார்அடியார் காலையில் எழும் போதே மனதில் புதியதாய் ஒளி வீசுவதை உணர்ந்தார்.

நேற்றுவரையில் பெரியார்தாசன் என்றிருந்த தனது பெயரை மாற்றிவிடுவது என்று மனம் இரும்பினும் உறுதியாய்ச் சொன்னது. காரணம் இன்று அதிகாலை தமிழ்த்தாய் நினைவுக்கு வந்து தமிழ்ப்பற்று ஆர்ட்டீசியன் ஊற்றாய் பெருக்கெடுக்க தன் பிழைப்புப் பெயர் பெரியார்தாசன் என்பதிலிருக்கும் "தாசன் "என்பது வந்தேறி பார்ப்பனர்களின் வருண சாஸ்திர ஜாதி விதிப்படி சதி செய்ததால் தன் பகுத்தறிவு கடந்த 45 ஆண்டுகளாகத் தாய்த்தமிழில் எழுதினாலும் அதெல்லாம் 100% அக்மார்க் திராவிடத் தமிழல்ல என்பதை தம் அறியாமை மறைத்துவிட்ட பார்ப்பனக் கயமையை நினைத்து அவரது நெஞ்சம் விம்மியது.

அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கொள்கைகள் ஜல்லியடிப்பை முழுநேரப் பிழைப்பாக்கிக்கொண்ட தன் மாதிரி ஒரு அரசியல் திரா'விட'த் தியாகிக்கே இந்நிலையா என்று அவரது தமிழ்க் குருதி கொந்தளித்தது. தன் அருகே இருந்த பார்ப்பனர் அல்லாத பார்ப்பன அடிவருடிகளும் இக்கயமைக்குத் துணைபோனதை எண்ணிய போது இயலாமையில் கண்களில் செம்மொழியாம் தமிழுக்குச் சங்கூதிய நிலையாகிவிடுமோ என்ற கவலையினால் செங்குருதி மானசீகமாய் வழிந்தோடியது.

சரி காலை நேரத்தில் நடைப்பயிற்சியாகச் சென்றால் மனம் அமைதிப்படும் என்பதால் வெளியே கிளம்பினார். ரெண்டாவது தெருவில் எதிரே பெருமாள் கோவில் அர்ச்சகர் வெங்கட் ரமணி தென்பட்டார். நட்போடு என்ன பெரியார்தாசன் ரொம்ப நாள் கழிச்சு காலையில் வாக்கிங்கா? என்றார்.

பெரியாரடியாராக தமிழ்மாற்றம் பெற்ற திராவிடத்தழல் "யோவ் அய்யரே! உம்ம பார்ப்பன வந்தேறி புத்திய காலையிலேயே காட்டிட்டயே அதுவும் எங்கிட்டயே" என அறச்சீற்றம் காட்டினார்.

வெங்கட் ரமணிக்கு தலை சுற்றியது, ஈ.வெ.ரா சதுர்த்தி தான் செப்டம்பர் 17ம்தேதியே முடிஞ்சுடுச்சே, அதுக்கு ரெண்டுநாள் முன்னமே செப்டம்பர் 15ம்தேதியே அண்ணாதுரை சதுர்த்தியும் முடிஞ்சுடுச்சே இன்னிக்கு 23ம்தேதி புரட்டாசி சனிக்கிழமைதானே.

அப்பாவியாய் பெரியார்தாசனனிடம் ' நேத்திக்கு மஹாளய அமாவாசை உங்கவீட்டம்மா கூட குமுதம் ஜோதிடம் புத்தகத்துல பார்த்து மஹாளய அமாவாசையன்னிக்கு இறந்துபோன முன்னோர்க்கு திதி தந்தா நல்லதுன்னு ஏ.எம்.ராஜகோபாலன் சொல்லியிருக்கார்ன்றதாலே உங்கப்பாவுக்கு திதிகூட தந்தாங்களே. உங்களுக்குத் தெரியாதா என்றார்.

பெரியாரடியார் பகுத்தறிவுப் பாசறை கமாண்டோ டிரெய்னிங் வருஷவருஷம் வேப்பேரிலே பெரியார் திடல்ல எடுக்கிற பார்ட்டியாச்சே!! டக்குன்னு கியர் மாற்றினார். நான் என் குடும்பத்தார் நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்று காலையிலேயே பெருமாள் கோவில் வாசல் கல்குவாரி ஆகுமளவுக்கு ஜல்லியடித்தார்.

அர்ச்சகர் வெங்கட் ரமணிக்கு அவர் கவலை. இன்னிக்குப் புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி ஆரம்பிக்கிறது தாயார்க்கு அலங்காரம், தசாவதாரம், கொலுவுக்கு, உற்சவ ஸ்பான்ஸர் பிடிக்கவேண்டும் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கைங்கர்யத்தில் பெருமாள், தாயார் கூட தெரியாத அளவுக்கு சிறிதும்- பெரிதுமான தட்டிகளில் கோவிலெங்கும் "காணிக்கையை உண்டியலில் மட்டும் போடவும்" என்று எழுதிவைத்து உலகளந்த பெருமாளுக்கு நைவேத்தியம் படியளப்பதற்குக் கூட சிரமம்.

காலையில் கண்ணில்பட்ட பெரியார்தாசனை கை நழுவிப்போக விட மனமில்லை வெங்கட் ரமணிக்கு. பெரியார்தாசனின் குடும்பமே அரசியல் வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறது. திராவிடக்கொள்கைகளில் ஊறியவர்கள் என்றாலும் தாசனின் மனைவி கலையரசி, மகள் பூங்குழலி, பொற்கொடிக்கு உலகளந்த பெருமாள் மீது தனிப்பாசம். கால்,அரை, முழுபரீட்சை எழுதும் முன்பு எல்லாநாளும் வருவார்கள். மற்றபடி சனிக்கிழமை, புரட்டாசி சனிக்கிழமை கண்டிப்பாக உண்டு என்பதை வெங்கட் ரமணி பல காலமாய் அறிந்திருந்ததால் புரட்டாசி சனிக்கிழமை கற்பக விருட்சமாக பெரியார்தாசன் தென்பட்டார்.

என்ன காலையிலேயே மேடை நினப்பா, பார்ப்பன, வந்தேறி புத்தி வசவுகளோட வர்றீர் என்றார். பெரியார்தாசன் தனது பெயர் இனி பெரியாரடியார் என்றார். வெங்கட் ரமணி பேஷ இருக்கட்டும் எப்பயும் போல பிழைப்புக்கு உதவ பெருமாள் உதவட்டும் என்றார்.

பெரியாரடியார் நக்கல் கலந்த பெருமை பூரிப்புடன் சொன்னார் " பெருமாளே ரெண் டு ட்யூப் லைட்டில் ஒண்ணு சிமிட்ட பாவமா இருக்கார். எங்க அறங்காவலர் குழு மாசாமாசம் உண்டியலை கரெக்டா திறந்து காபி, டீ, செலவுக்கே காணலை. எந்நேரமும் பெருமாள் பேரைச் சொல்லும் உம்ம பிழைப்பைப் பெருமளை விட்டு நல்லா பார்க்கச் சொல்லும் என நடையைக்கட்ட முயன்றபோது வெங்கட் ரமணி புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி , தசாவதார உற்சவ ஸ்பான்ஸர்ஷிப்க்கு உதவ வேண்டினார்.
பிடிகொடுக்காமல் பெரியாரடியார் வேணும்னா கலையரசிக்கிட்ட கேட்டுப்பாருங்க என்றவாறு நகர்ந்தார்.

மெள்ள விடிய ஆரம்பித்தது. கைக்கடிகாரம் காலை 5.30 காட்டியது.

ரெண்டு தெரு தாண்டி மசூதி தெருவில் அப்துல் அஜீஸை எதிர் கொண்டார். என்னங்க அப்துல் பாய் சவுக்கியமா? என்றார் எங்க சவுக்கியமா இருக்கவிடறாங்க என்றார் அப்துல் அஜீஸ். என்ன விஷயம் என்றார். பள்ளிக்கூடத்துல இனிமே வந்தே(றிகளின்)(மா)தரம்! பாடியே ஆகணுமாமே என்றார்.

அப்துல் பாய் நீங்க கவலையை விடுங்க. கழகக் கூட்டணியோடு நடுவண் அரசு ஆட்சியிலே நீடிக்கும் போது அப்படி ஏதும் நல்லது நடக்காம பாத்துக்க நான் உங்களுக்கு கேரண்டி தர்றேன்.

அப்புறம் அப்துல் பாய் (இன்னொருவாட்டி தமிழ்த்தாய் நினைவில் வந்து பாய் என்ற சொல் நட்பு மொழியில்லை மொழிப்போரே ரயில் வராத நேரத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து இந்த இந்தி(ய)மொழிக்காகத்தான் எனப் பெரியாரடியார்க்குச் சொல்லும் வரை பொறுமையுடன் காத்திருக்கவும்)
இன்னிக்கு என்ன விஷேசம் தொழுகைக்குக் கூட்டம் ஜாஸ்தியா இருக்கு என்று வினவினார் பெரியார் நேசன்.

இன்னிக்குத்தானே உண்ணா நோன்பு ரம்ஜான் மாதம் ஆரம்பிக்கிறது அதுதான் என்றார் அப்துல் அஜீஸ்.

பெரியார் நேசன் துணுக்குற்றார். இந்து மத நம்மிக்கைக்காக இல்லை என்றாலும் அவர் புரட்டாசி மாசம் இறைச்சி உண்பதில்லை பொதுவாக. அவர் தான் தன் வீட்டினர் மனைவி, துணைவி வீட்டினர் நம்பிக்கைகளில் தலையிடுவதில்லையே. கழுத்தில் போட்டிருந்த உலகமே சுட்டிக்காட்டியும் பெரும் மன உறுதியோடு திராவிட பகுத்தறிவுக் கொள்கைக்காக அணிந்திருக்கும் ஆரஞ்சு வண்ண சால்வையில் முகம் துடைத்து யோசிக்கலானார் பெரியார்தாசன்!

மதநல்லிணக்கத்தினை இத்தனை ஆண்டுப் பொதுவாழ்க்கையில் இந்த ரம்ஜான் நோன்புக்கஞ்சி குடித்துக் கொண்டே தானே இறைவனைத் தொழும் இந்துவைத் திருடன் என்றுரைத்தது!. ஏகாதசி, கார்த்திகைவிரதம் மூடப்பழக்கம் ரம்ஜான் நோன்பு மட்டும்தானே உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது என்று பகன்றது.

என்ன குழப்பம் தன் மதநல்லிணக்கத்தைப் பேணக்கிடைத்த பரம பவித்ரமான
முப்பது மாலை நேரங்கள் இந்த ரமலான் நோன்பு காலத்தில் தானே வரும். இப்போது என்ன செய்வது என்று பதறினார் பெரியாரடியார்.

கைத்தொலைபேசி சிணுங்கியது அழைப்பில் தமது ஆரஞ்சு வண்ணம் ஆக்கம் தரும் என்ற உண்மை வருமுன்னே கணித்த முருகு ஜோதிடர் முக்கண்ணன்.
தொழச்சென்ற தெய்வம் எதிரே வந்ததாக எண்ணி மகிழ்ந்தார் நம் நாயகர் பெரியாரடியார்.

முரசொலியில் உடன்பிறப்புக்கு உன்மையுணர்த்திட கட்டுரை எழுதிட விழைந்தார். கட்டுரைக்குத் தலைப்பிட்டார் பின்வருமாறு:
மீண்டும் பார்ப்பனச் சதி!
ரம்ஜான் நோன்பு மாதம் முதல் தேதியன்று வேண்டுமென்றே புரட்டாசிசனிக்கிழமையையும் வரும்படி தமது வரும்படிக்காக வந்தேறிய பார்ப்பனர்கள் செய்த மாபாதகம்!

இதுவரை இஸ்லாமியர்கள் திராவிடசமூகத்துடன் கொண்டிருந்த மதநல்லிணக்கத்தினை இல்லாமல் ஆக்க முற்றிலும் பகுத்தறிவுக்குச் சம்பந்தம் இல்லாத கோள்சார விதிகளின் படி செய்த கொடுஞ்சதி!

தினமொரு அசைவபிரியாணியோடு மாலை நேர நோன்பு திறக்கும் இப்தார் விருந்துகள் திராவிடர்க்கு கிடைக்கக் கூடாது என்று வேங்கடவனின் திருமலைச் சம்பிரதாய சடங்குகள் மாதமான புரட்டாசியை புனித பிரியாணி தரும் ரம்ஜானோடு உடன் வரச்செய்தது ஆரியமாயை என உணர்வாய் உடன்பிறப்பே!


புரட்டாசியாம் புனிதமாம். சோற்றாலடித்த பிண்டங்களே தமிழின்தமிழ் நான் சொல்வதைக் கேள்! பெயரிலேயே புரட்டை வைத்திருக்கும் ஒருமாதம் தான் புரட்டாசி! குத்திக்கொள் தினமும் அரசியல்திரா'விட'ப் பெத்தடின். அப்போதுதான் தமிழ் தழைக்கும், நான் பிழைப்பேன்!

நேரடியாக இந்துமதம் சார்ந்திடக்கூடாத மதச்சார்பின்மையைக் காப்போம் பிரியாணி மீது சத்தியமாக! அதன் சைட் டிஷ் 'தயிர்'வெங்காயத்தின் + சால்னாவின் மீது கூடுதல் சத்தியமாக!!

அன்புடன்,

ஹரிஹரன்

12 comments:

Hariharan # 03985177737685368452 said...

சும்மா டெஸ்ட்.

murali said...

Exellent posting hariharan.
With love and regards,
B.MuraliDaran.

Hariharan # 03985177737685368452 said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பா.முரளிதரன்.

Hariharan # 03985177737685368452 said...

யாரோ has left a new comment

எல்லாம் சரீங்னா, அப்படியே நம்ம முதுகையும் கொஞ்சம் பார்க்கிறது.

Hariharan # 03985177737685368452 said...

யாரோ நீங்க நம்மமுதுகு என்று சொல்வது யாரையோ?

மெளலி (மதுரையம்பதி) said...

கலக்கிட்டிங்க ஹரி.....

Hariharan # 03985177737685368452 said...

மௌல்ஸ் அப்பப்ப நாட்டு நடப்பைச் நாமும் உண்மையாக முரசறைந்து சொல்ல வேணும் இல்லியா?.

பகுத்தறிவு said...

பார்ப்பன கும்பலின் முகமுடியைப்பற்றி அனைவரும் அறிந்த்ததே. பார்ப்பனிசத்தைப்பற்றி போட்டால் வாயால் சிரிக்க மாட்டார்கள். அதற்கு தலைப்பாக பார்ப்பனிசமும் பாம்பும் என்று வைக்கலாம் என்று உள்ளேன்.

Hariharan # 03985177737685368452 said...

சிரிப்பதற்கு வாய்தான் அவசியம். பகுத்தறிவோடு என்னமோ சொல்றீங்க!
என்னத்தைச் சொல்ல முடியும்! பாசறையில் வாயைத் தவிர்த்துவிட்டுச் சிரிப்பதெல்லாம் கற்று இருக்கிறீர்கள் போலும்!

உங்க பதிவுக்கு என்னவேணும்னா பேர் வைச்சுக்குங்க பகுத்தறிவு!

எனிவே வருகைக்கு நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

ஜேம்ஸ் படித்துச் சிரித்தமைக்கு நன்றி

Kodees said...

உங்க (?!) முதுகைத்தான் !! (அடைப்புக்குறிக்குள் உள்ளதை அவரவர் இஷ்டத்திற்கு நிரப்பிக்கொள்ளவும்)

Hariharan # 03985177737685368452 said...

யாரோ,

அதான் தினமும் அவசியம் என் முதுகை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்!

இதைச் செய்ய எனக்கு நெஞ்சிலே "மஞ்சாச்சோறு" இருக்கிறது!
பத்தலைன்னா "லெமன் ரைஸ்" சாப்பிட்டு பாலன்ஸ் செய்கிறேன்!

வயதில் மட்டும் மூத்த பெரியாரடியார் போல் மஞ்சள்துண்டு போட்டு மக்களுக்கு பகுத்தறிவு வியாக்கியானம் செய்வதில்லை நான்!