(33) பகவத் கீதை சூத்திரனுக்கா? பிராமணனுக்கா? யாருக்காக?
அரசியல் திரா'விடப்'ப் பெத்தடினாக ஊசியில் அடிக்கடி ஏற்றி தமிழர்களிடத்தில் பகவத் கீதையில் சொல்லப் பட்ட கருத்துக்கள் சூத்திரனான(!?) திராவிடனுக்கில்லை ஆரிய வந்தேறி பார்ப்பனக்கூட்டம் தமிழன் மேல் திணித்தது என்று ஜல்லியடித்து நடுநடுவே அவர்களுக்கு வசதியாக ஒன்றிரண்டு வரிகளை தங்களுக்கு வசதியாக உண்மையான context ஐ மறைத்து கும்மியடிகிறது.
எந்த ஒரு நூலைப் படிக்க ஆரம்பிக்கும் முன்பும் முன்னுரையைப் படிக்கவேண்டும். முன்னுரையில் அந்த நூலில் சொல்லப்பட்ட விஷயங்கள், டார்கட் ஆடியன்ஸ் பற்றி கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும்.
பகவத் கீதையின் 18 கீதாச்சாரத்திற்குள் போவதற்கு முன்பாக ஆரம்பத்திலேயே முன்னுரையான தியான மந்திரங்களிலேயே வியாசர் மிகத் தெளிவாக நான்காவது மந்திரத்திலேயே சொல்லியிருக்கிறார் கீதை யாருக்கானது என்று.
Sarvo-panisado gaavo dogdhaa gopaala-nandanah
சர்வோபனிஷதோ காவோ தொக்தா கோபால நந்தனக
Paartho vatsah suddhirboktha dugdham gitaamrutam mahat
பார்த்த்தோ வத்ஸ சுதிர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்
வரிக்கு வரி அருஞ்சொற்ப்பொருள்
Sarvo-upnanishad - அனைத்து உபநிடதங்கள்
Gaavo - பசுக்கள்
Doktha - பால்கறப்போன்
Gopala-Nandanah - பகவான் கிருஷ்ணன்
Paartho - பார்த்தன்
Vatsah - கன்றுக்குட்டி
Suddhir - தூய்மையான புத்தியுடைய மக்கள்
Boktha - கொண்டாடி மகிழ்வோர்
Dugdham - பால்
Gitaamrutham - அமிர்தமாகிய பகவத் கீதை
Mahat - உயர்வான
சரி இதன் முழுமையான விளக்கப் பொருள் என்ன என்று பார்க்கலாம்.
ஆக பகவத்கீதை படிக்க வேண்டுமெனில் பிராமணனாக, ஷத்ரியனாக, வைசியனாக, சூத்திரனாக இருக்க வேண்டும் என்று சொல்லப் படவில்லை.
"பகவத் கீதை படிக்க ஒரே Pre-requisitie தகுதியாக அவசியப்படுவது, தூய்மையான புத்தி உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது தான்"
மேலும் வியாசர் இங்கே பகவத் கீதையைப் பாலுடன் ஒப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகவும் சிறப்பானது. பால் மட்டுமே குழந்தை, பாலகன், இளைஞன், கிரஹஸ்தன், வயதானவர் என அனைத்து வயதினருக்கும் உரிய உணவு.
சொற்பமான வெகு சிலருக்கு மட்டுமே பாலை செரிக்க முடியாது, பால் ஒத்துக் கொள்ளாது என்ற குறைபாடுகள் இருக்க முடியும். இது தனிநபரின் தகுதிக் குறைவே அன்றி பாலின் குறையாகாது.
ஆகவே பகவத் கீதையை ஆரோக்கியமான புத்தியுள்ள அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
இங்கே அரசியல் திராவிடப் பெத்தடின் தாக்கத்தில் I have gone through Bhagavat Gita many times ... nothing new or useful என்பவர்களுக்குச் சொல்ல விழைவது " Let Bhagavat Gita go through you once... everything will be new and meaningful to you என்பதுதான்!
பகவத் கீதை மாதிரி எவர் மாடர்ன் மானேஜ்மெண்ட் டூல் ஏதுவும் கிடையாது. Be it self management (or ) time management ( or) crisis management (or) workshop on optimizing performance at work பகவான் கிருஷ்ணர் தான் உலகின் Fore most Most Effective மானேஜ்மெண்ட் குரு!
பகவத் கீதை நமது இந்தியப் பாரம்பர்யத்தின் ஒப்பற்ற Manual - gifted to the man kind.
மனுதர்மம் என்றாலே மட்டையடிக்கும் அரசியல் திரா'விட"ப்பெத்த்டின் உபயோகிப்போர் கவனத்திற்கு:
உலகையே கொள்ளையடித்து , ஏமாற்றி, அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன் நாகரீகமாக, நெறியோடு , மனுதர்மத்தோடு சிக்கல்கள் இன்றி சீராக வாழ்ந்த இந்திய வாழ்க்கை அமைப்பினைப் பார்த்து ஏற்படுத்திய Manu-al என்ற நெறிப்படுத்தி/வழிகாட்டும் புத்தகத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையே இந்திய மனு நெறியினின்று வந்ததே!
அன்புடன்,
ஹரிஹரன்
35 comments:
சும்மா டெஸ்ட்க்காக!
//பார்த்தன் என்ற கன்றுக்குட்டியினைக் கொண்டு தூண்டப்பட்டு அனைத்து உபநிஷத்துகள் //
ஹரி...!
எனது அருமை ஆட்டுக் குட்டிகளே ...என்று ஜீசஸ் சொல்வது போல் உள்ளது !
:)
ஆடேங்கப்பா...
மிகவும் அறிவுபூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.
குட்
பகவத் கீதை சூத்திரனுக்கா? பிராமணனுக்கா? யாருக்காக?
To every human beings.
கோவியாரே,
வாங்க. கிருஷ்ணருக்கு கன்றுக்குட்டி, ஜீசஸூக்கு ஆட்டுக்குட்டி.
அப்பப்ப வாங்க ஜிகே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
வாங்க ம்யூஸ்,
//To every human beings. //
Exactly!
பகவத் கீதை என்பதே வெகு அனலடிக்கலாகச் சொல்லப்பட்ட மானுட தத்துவம்.
வருகைக்கு நன்றி. ம்யூஸ். அடிக்கடி வந்து தங்கள் கருத்தைப் பதியவும்.
வாங்க முத்து(தமிழினி),
//மிகவும் அறிவுபூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.//
என்ன வெச்சுக் காமெடி கீமெடி பண்ணலையே :-)))
வருகைக்கு நன்றி. வாங்க அடிக்கடி.
நல்லா எழுதி இருக்கீங்க, அப்படியே முடிஞ்சா "பகவத் கீதை" சுருக்கமாகக் கொடுக்கவும் பாருங்களேன். நேரம் இருந்தால். படிக்கிறவங்க படிப்பாங்க. அது போதுமே!
கீதாஜி,
கீதையின் மற்றும் ஹிந்து மத தத்துவங்கள் பற்றி கண்டிப்பாக நானறிந்ததை எழுத வேண்டும் என விரும்புகிறேன்.
ஹிந்து மதம் பற்றிய அரசியல் மட்டையடி அவதூறுகள் மட்டுமே படித்து அது தான் ஹிந்து மதத்தின் தத்துவம் என்று இருக்கும் சிலருக்காவது பயன் பட்டால் சரி.
Manual என்பது கை சம்பந்தப்பட்ட லத்தீன மொழி வார்த்தையிலிருந்து வருவது. Main என்று பிரெஞ்சில் கூறுவார்கள். கையேடு என்பது தமிழாக்கம் அதற்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க டோண்டு சார்,
கையேடு என்பது கை வைத்து பக்கம் பார்த்து எது எங்குள்ளது என்று விரைந்து அறிய உதவும் குறிப்புகளின் "நெறிப்படுத்தப்பட்ட" தொகுப்புத்தானே?
சூப்பரப்பூ....! நல்ல கருத்துகள்..!
பூக்குட்டி,
தங்கள் பாராட்டுப்பூ மழைக்கு நன்றிகள்
ஆனால் கீதையை பாப்பான்கள் மட்டுமே புகழ்வது ஏன்?
வர்ணாசிரமம் இருப்பதாலா?
//ஆனால் கீதையை பாப்பான்கள் மட்டுமே புகழ்வது ஏன்?//
அப்படின்னு நீங்க நினைக்கின்றீர்கள்.
//வர்ணாசிரமம் இருப்பதாலா?//
வழக்கமான அரசியல் திரா'விட'ப் பெத்தடின் தாக்கத்திலான மட்டையடி
எனிவே வருகைக்கு நன்றி திரு.ஆப்பு
//தங்களுக்கு வசதியாக உண்மையான context ஐ மறைத்து கும்மியடிகிறது.
//
ஹரி, தமிழ்மனத்தில் கூட இப்படி செய்யபார்த்தனர்.
ஒருத்தர் ரிக் வேதங்களில் இருந்து ஒரு quote கொடுக்குறாரு அதுக்கு என்ன உன்மையான அர்த்தமுன்னு பார்க்கலாமுன்னு கூக்கிள் பன்னினா அவர் சோல்லுற அத்தியாயமே அந்த வேதத்தில கிடையாது. :))
வாருங்கள் சமுத்ரா,
மெக்காலே கல்வி, பிழைப்புவாத, அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கொள்கை இயக்கங்களின் தவறுதலான வழிநடத்தலில் ஹிந்து தத்துவங்கள், இந்தியப் பாரம்பர்யம் மீது வீண் கற்பனையான அவதூறுகள் சொல்லப்பட்டு வருகின்றன.
கீதையினை இன்ஸ்பிரேஷனாக வைத்து பல மானேஜ்மெண்ட் குருக்கள் பல புஸ்தகங்கள் எழுதியிருக்கின்றனர்.
விரைவில் அமெரிக்கர்கள் கீதைக்குப் பாடெண்ட் உரிமை கோரினாலும் கோருவார்கள் மஞ்fஅள்,வேம்பு, பாஸ்மதி அரிசி மாதிரி.
அயல் நாட்டானுக்கு தெரிகிறது நம் ஹெரிடேஜ் வளம்.
தற்போது அமெரிக்கர்களே ஆரியன் இல்லை என்று சொல்ல ஆரம்பத்திருக்கின்றனர். இனி அறிவு சீவிகள் ஒத்துக்கொள்வார்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஹரி...
திரா'விட'ப் பெத்தடின்னு அடிக்கடி சொல்லுறீங்களே. சூப்பர் கிரியேட்டிவிட்டின்னு உங்களுக்குள்ளேயே நெனைப்பா?
வேற யாரும் உங்க கிரியேட்டிவிட்டிய அவ்வளவு சிலாக்கியமா பார்க்குற மாதிரி தெரியலையே?
அது இருக்கட்டும் நீங்க "ஆறிய" பெத்தடின் போட்டிருக்கீங்களா?
வணக்கம் லக்கிலுக். வாருங்கல்.
//திரா'விட'ப் பெத்தடின்னு அடிக்கடி சொல்லுறீங்களே. சூப்பர் கிரியேட்டிவிட்டின்னு உங்களுக்குள்ளேயே நெனைப்பா?//
அரசியல் திரா'விட'ப் பெத்தடின் என்பதுதான் நான் சொல்லிவருவது. இதில் அரசியல் என்பது முக்கியம் விடுபட்டிருக்கிறது உங்கள் சுட்டலில்.
//வேற யாரும் உங்க கிரியேட்டிவிட்டிய அவ்வளவு சிலாக்கியமா பார்க்குற மாதிரி தெரியலையே?//
அது பற்றிய கவலை எனக்கில்லை லக்கி.
//நீங்க "ஆறிய" பெத்தடின் போட்டிருக்கீங்களா?//
பெத்தடின் எனக்கு ஒத்துக்காது லக்கி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் சம்ஸ்கிரிதம் பக்கம் போனதில்லை என்பதால் (கேட்டு தான் பழக்கம்) பகவத்கீதையை தமிழில் தான் படித்தேன்.
அதில் சாராம்சம் மட்டும் இருந்ததால் இந்த அளவுக்கு விபரம் இல்லை.
குடத்தில் தண்ணி கம்மியாக இருந்தா தான் "தளும்பும்"...
சில பேர் மனிதனாக இருந்து இதை படிக்கிறாங்க சிலர் இதை படித்து மனிதனாக முயற்சிக்கிறாங்க,
பலர்...??
வாங்க குமார்,
கீதையை எந்த மொழியில் படித்தாலும் அதன் சாராம்சம், தத்துவம் ஒன்றுதான். என்ன ஒரே ரிஸ்க் மொழிபெயர்ப்பாளரின் புத்தி தூய்மை தரத்தை பாதிக்கலாம்.
சார்வாகன் என்ற போர்வையில் எதை வேண்டுமானாலும், எவ்வளவு தரம் தாழ்ந்தும் கேட்கலாம் என்பது புத்தி தூய்மையின்மையையே காட்டும்.
அம்மாதிரி தூய்மை குன்றிய சார்வாக(!?) புத்தியுடையோர் ஜம்ப்லிங்கங்களாக பிழைப்புவாதத்திற்காக குதியாய் குதிப்போரது ஜல்லியடிப்பில் ஒப்பற்ற நம் பகவத்கீதையைப் முறையாக படிப்பது என்பதிலிருந்து விலகிச்செல்வதனால் இன்ட்டாலரன்ஸ் எகிறிப்போயிருப்பதுதான் நிதர்சனமாகியிருக்கிறது.
வருகைகும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கிருஷ்ணா,
கீதையைப் வெறுமனே படிப்பதனாலான பலனை விட கீதையின் படி நடப்பதினாலேயே மனிதர்களுக்குப் பலன் அதிகம்.
அரசியல் திரா'விடம்' பேசும் பெரியோர் மற்றும் குஞ்சுகள் உட்பட!
வருகைக்கும் கருத்தினைப் பகிர்ந்தமைக்கும் நன்றி.
//அம்மாதிரி தூய்மை குன்றிய சார்வாக(!?) புத்தியுடையோர் ஜம்ப்லிங்கங்களாக பிழைப்புவாதத்திற்காக குதியாய் குதிப்போரது ஜல்லியடிப்பில் ஒப்பற்ற நம் பகவத்கீதையைப் முறையாக படிப்பது என்பதிலிருந்து விலகிச்செல்வதனால் இன்ட்டாலரன்ஸ் எகிறிப்போயிருப்பதுதான் நிதர்சனமாகியிருக்கிறது//
சரியாகச் சொன்னீர்கள் ஹரிஹரன்..
ஆனா இந்த அரசியல்,திராவிடீயம் "பெதடின்" விட
மோசமான போதைப் பொருள்..அதான் நம்ம திராவிட குஞ்சுகள்
அடிக்கடி paranoid schizophrenia வந்து உளறிவிட்டு போகும்.
நீங்க உங்க வழியிலே நேர்மையாக உறுதியோட போங்க.
அன்புடன்,
பாலா
வாருங்கள் பாலா,
தூய்மையான புத்தி என்பது தொடர்ச்சியாக மெனக்கெட்டு தினசரி முறையாக முயன்று வருவாதால் கிடைப்பது.
வீட்டைச் சுத்தம் செய்வது எவ்வளவு அவசியமோ அத்தனைக்கும் மனதைச் சுத்தம் செய்வதும் அவசியம்.
4வாரம் விடுமுறையில் செல்லும் போது சோபா போன்ற பொருட்கள் மீது பிளாஸ்டிக் கவர் போட்டு தூசித் தாக்கத்தினைக் குறைக்க எத்தனிக்கும் நம்போன்றவர்கள் 40ஆண்டுகள் அரசியல் திரா'விட' பெத்தடின் ஆட்சி மாயை ஏற்படுத்தியிருக்கும் தத்துவ தூசிமண்டலத்தினின்று பகவத்கீதைகொண்டே மீண்டு வரமுடியும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இங்கு கிருஷ்ணா என்ற பெயரில் பின்னூட்டமிட்டது போலி.
விடாது கருத்தாக இப்பதிவினைப் படித்துப் பின்னூட்டமிட்ட ஆப்பும் கூகிளால் ஓரடுக்கு திரையிடப்பட்ட போலியே.
கவனம்!
luckylook said...
//திரா'விட'ப் பெத்தடின்னு அடிக்கடி சொல்லுறீங்களே. சூப்பர் கிரியேட்டிவிட்டின்னு உங்களுக்குள்ளேயே நெனைப்பா?
வேற யாரும் உங்க கிரியேட்டிவிட்டிய அவ்வளவு சிலாக்கியமா பார்க்குற மாதிரி தெரியலையே?//
லக்கி நீங்க சிலாக்கியமா பார்க்குற வேற யாரும்-ன்றது நமக்கு நாமே திட்டத்தின் படி தனது பதிவைச் சிலாகிக்கும் ...பேரவை, ...கழகம், ...பாசறை, ...மன்றம், ...படை போன்றவை,
ஆதம்பாக்கதிலிருந்து கொண்டு அவுஸ்திரேலியா, ஜெர்மனி கிளைகள் என்பது மாதிரியான சிலாக்கியங்கள்,
முத்தாய்ப்பாக சுயமாய் சுனாமியாக உருவெடுத்ததாக சிலாக்கியமாய் தனக்குத்தானே ரசிப்பது என்பது மாதிரியான சிலாக்கியங்களைச் சொல்கிறீர்களா?
இம்மாதிரி சிலாக்கியங்களுக்கு பதிவிக்குச் செலவிடும் உழைப்பை விட கூடுதலாக உழைக்க வேண்டும்... எனக்குச் சரிப்படாது லக்கி.
ஹரிஹரன் அவர்களே, கீதை மனிதகுலம் முழுமைக்குமான தெய்வ நூல். சின்மயா மிஷன் அற்புதமாக வெளியிட்டிருக்கும் கீதைப் பதிப்பில் முதலில் உலகின் எல்லா மொழிகளிலும் "சர்வ தர்மான் பரித்யஜ்ய" சுலோகத்தின் மொழிபெயர்ப்பைப் போட்டிருக்கிறார்கள் (சில பைபிள் புத்தகங்களில் இருப்பது போல), இதை உணர்த்துவதற்காகவே.
ஆனால் கெட்ட புத்தியுடையவர்கள் கீதையைப் படித்து அதில் 4-5 இடங்களில் வர்ணப் பாகுபாடு பற்றிய சிறு குறிப்பு வருவதை வைத்து அது சாதீய புத்தகம் என்றெல்லாம் துஷ்பிரசாரம் செய்கிறார்கள்!
"இதி மே ந அதபஸ்காய ந அபக்தாய கஸ்சன" என்று பகவான் சொன்னது இதற்காகத் தான் - "இந்த தெய்வீக ஞானத்தை தவம் இல்லாதவனுக்கும் பக்தி இல்லாதவனுக்கும் தர வேண்டாம்" என்று.
//
நமக்கு நாமே திட்டத்தின் படி தனது பதிவைச் சிலாகிக்கும்
//
கிழிஞ்சது கிருஷ்ண கிரி. இத்த வெச்சுத்தான் லக்கி செஞ்சுரி, டபுள் செஞ்சுரி அடிக்குதா.. எல்லாம் கலைஞர் ஆரம்பித்து வைத்து " நமக்கு நாமே" திட்டமா?
வாருங்கள் ஜடாயு,
கண்டிப்பாக கீதையை மனித சிந்தனை உடைய எல்லோரும் படிக்க வேண்டிய நூல்.
இதைப்படிக்க தகுதியே தூய்மையான மனம் ஒன்றே.
வர்ணப்படுத்துதல் - நெறிப்படுத்துதல் என்பதன் கான்டெக்ஸ்ட் பகுத்தறிவு ஏகபோக உரிமைக் கழகங்கள் மாதிரி வசதிக்கு எடுத்துக்கொண்டு பேசுபவர்களுக்கு சொல்ல ஒன்றுமில்லை.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ஷங்கர்,
//இத்த வெச்சுத்தான் லக்கி செஞ்சுரி, டபுள் செஞ்சுரி அடிக்குதா.. எல்லாம் கலைஞர் ஆரம்பித்து வைத்து " நமக்கு நாமே" திட்டமா?//
சீரணி அரங்கத்தில் நடக்கும் கழக கூட்டங்களுக்கு உடன்பிறப்புகள் லாரியில் பிரியாணி, பேட்டாக்காசுக்கு பகுத்தறிவோடு அலைகடலென திரள்வது மாதிரி,
இணையம் வலைப்பூவில் நமக்கு நாமே திட்டப்படி சிலாக்கியங்கள் நான் கேட்கவில்லை என்றாலும் உனக்கு இம்மாதிரி சிலாக்கியம் இல்லியேன்னு கேள்விக்கணை வேறு.
நல்ல தீக்கோழித்தனமான சிலாக்கியம் போங்க!
//ஆனால் கெட்ட புத்தியுடையவர்கள் கீதையைப் படித்து அதில் 4-5 இடங்களில் வர்ணப் பாகுபாடு பற்றிய சிறு குறிப்பு வருவதை வைத்து அது சாதீய புத்தகம் என்றெல்லாம் துஷ்பிரசாரம் செய்கிறார்கள்!
//
ஜடாயு ஐயா. 'சதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்' என்ற ஒரே இடத்தைப் பற்றி மட்டுமே எனக்குத் தெரியும். அங்கும் விளக்கமாக 'குண கர்ம விபாகச' - குணத்தையும் தொழிலையும் வைத்து வந்த பிரிவுகள் என்றே தெளிவாகச் சொல்கிறார்; பிறப்பின் அடிப்படையில் என்று சொல்லவில்லை.
நீங்கள் 4 - 5 இடங்களில் என்று சொல்லியிருக்கிறீர்கள். வேறு எங்கெங்கு என்று சொல்கிறீர்களா?
ஹரிஹரன்,
//சீரணி அரங்கத்தில் நடக்கும் கழக கூட்டங்களுக்கு உடன்பிறப்புகள் லாரியில் பிரியாணி, பேட்டாக்காசுக்கு பகுத்தறிவோடு அலைகடலென திரள்வது மாதிரி//
தப்பு ஹரிஹரன்,
நம்ம லக்கி, பிரியாணிக்காகவா ஜால்ரா போடறார்? லக்கி திராவிட பெதடின் ரொம்ப ஏத்தின்டவர்..மூன்றெழுத்தில் அவர் மூச்சு இப்போ..ஜால்ரா தான் அவர் மூச்சு,கடமை எல்லாம்.
பாலா
//நம்ம லக்கி, பிரியாணிக்காகவா ஜால்ரா போடறார்?//
பாலா நான் சொல்வது
சீரணியரங்கில் நடக்கும் சீரிய பேச்சைக்கேட்க உடன்பிறப்பு இழுவைக்காரணியாக பிரியாணியும் பேட்டாக்காசும் டூல்ஸ் ஆக இருக்கிறது!
இணையத்தில் கூட்டம் கூட்ட நமக்கு நாமே திட்டம் பின்னூட்டக்கூட்டம் கூட்ட!
//லக்கி திராவிட பெதடின் ரொம்ப ஏத்தின்டவர்..மூன்றெழுத்தில் அவர் மூச்சு இப்போ..ஜால்ரா தான் அவர் மூச்சு,கடமை எல்லாம்.//
இருக்கலாம். அவருக்குச் சரின்னு பட்டதைச் லாபகரமானதைச் செய்கிறார்.
Post a Comment