Thursday, September 27, 2007

(177) பெண்ணடிமைத்தனம் made easy to understand

பெண்ணடிமைத்தனம்னு முழங்கி மேம்பட்ட-பெரியாளாகும் பகுத்தறிவு முயற்சி இல்லை இப்பதிவு.

குடும்பத்து மேம்களிடம் டன் கணக்கில் பட்ட அறிவுடன், ஆண்வர்க்கத்தை அவர்கள் வீட்டுக்குள்ளேயே கும்மு கும்முன்னு கும்மி எடுக்கும் பெண்களை, ஆணீய பித்தளைகள் எல்லாம் பெண்ணடிமைத்தனம் செய்தனர் எனும் பரவலான புரட்டை புட்டுவைக்கும் எனது சின்னஞ் சிறு முயற்சி.

உண்மையில் தன்னடிமைத்தனமான பெண்ணடிமைத்தனத்தை made easy to understand விதமாக இப்பதிவு.

அம்மாவாய் சில பல மாதங்கள் முயற்சித்து, தானே முன் நின்று அலசி,தேடித் தெரிவு செய்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக்கி திருமணம் செய்வித்த மகனின் வாழ்க்கையில் திருமணமான சில நாட்களில்(வாரங்களில், மாதங்களில், வருடங்களில்)அதே அம்மா சொல்வது:

மகனே நீ உம் பொண்டாட்டி நட்டுவாங்கத்துக்கு இப்படி ஆட்டமா ஆடுவேன்னு நான் கனவுலேயும் நினைக்கலைடா... (ஆண்)மகனுக்கு ஜென்மச்சனி உச்சத்துக்கு பெயர்கிறது.

இதுக்காடா உன்னை பெத்து வளர்த்து படிக்கவச்சு நானும் உன் அப்பாவும் ஆளாக்கினது? (அப்பாவின் விருப்பம் இல்லாமலே இந்த அம்மா-மருமகள் எனும் இரு பெண்கள் மேட்டரில் அவரும் அய்யோ பாவத்துக்கு உள்ளுக்கு இழுக்கப்படுகிறார்)

அம்மாவுக்கு என்ன ஆச்சு காலங்காத்தால? என்னைத் தாளிக்கிறா? என்று குழம்பிய படியே மகன் தன் அறைக்குள் சென்றால்... அங்கே இன்ஸ்டண்ட் கண்ணீருடன் மனைவி... உங்கம்மா என்னைத்தானே சொன்னாங்க? நீங்க கேட்டுட்டு ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க? ரெண்டு குழந்தைக்கு அப்பா ஆகியாச்சு இன்னும் அம்மாக்கோண்டுவாக அம்மா முந்தானையைப் பிடிச்சுட்டே நடப்பீங்க்களா? என்னை "யார்" என்ன சொன்னாலும் பரவாயில்லையா?

குளிக்க அவசியமில்லாமல் மனைவியின் அங்கலாய்ப்பு அருவியில் குளித்து வரும் (ஆண்)மகன் ஹாலில் அப்பா பேப்பருக்குள் வசதியாக தன்னை மூழ்கடித்துக்கொண்டதில் ஏதோ ஒரு சாமர்த்தியம் இருப்பதை மெல்ல உணர்கிறார்.

இப்படி விடுமுறை தினத்தில் அம்மா, மனைவின்னு ரெண்டு பேரும் எப்படா விடியும்னு காத்திருந்தது இப்படி தன் தலையில் வந்துதான் விடியணுமா?ன்னு க்ராஸ்பய்யரில் மாட்டிக்கொண்டுவிட்ட தன் அவலநிலையை (ஆண்)மகன் நொந்துகொண்டு இருக்கும் போதே தனது மகள் வந்து அன்றைய நாளேட்டில் வந்த க்ராஸ்வேர்டு-குறுக்கெழுத்துப் புதிருக்கு வகபுலரியில் உதவ வேண்டியதை ஏற்காமல் மறுத்த மறுவிநாடி அந்தச் சின்னப்பெண்ணோ, அவள் அம்மாவாகிய தன் மனைவி தந்த பாலபாடம் முன்னெடுத்துச்செல்ல" போ..அப்பா... உங்களுக்கு எதுவுமே தெரியாது" என்ற சர்டிபிகேட் தந்து மும்முனைத்தாக்குதலில் (ஆண்) மகனை ஆழ்த்திடுகிறாள்.

சோபாவில் பேப்பர் கொஞ்சம் கீழிறங்கி மறைந்திருந்த அப்பாவின் முகம் கண்கள் அளவுக்குத் தெரிய அந்தக் கண்களில் அதீத அனுதாபம் தென்படுவதாக உணர்கிறார் (ஆண்)மகன்.


மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அம்மா தனியாக இருக்கும் நேரத்தில் மனைவியின் மாமியாராகிய தனது அம்மாவிடம் கட்டாயமாகத் தெரிவித்துவிடும்படி (எச்சரித்து)சொல்லிய கருத்தை தூதுவராக அம்மாவிடம் திக்கித் திணறித் தெரிவித்து முடிக்குமுன்பே... "மகனே உனக்கு இப்படி தலையணைமந்திரம் போட்டு வச்சிருக்காளேடா உம்பொண்டாட்டி... நீயும் அவ போட்ட மந்திரத்துக்கு சாமிவந்த மாதிரி ஆடுறியேடா"-ன்னு அம்மா சாமியாடி முடிக்க...

தன் அறைக்குள்ளே போனால் "மீண்டும் அம்மாக்கோண்டு... உங்களுக்கு எதுவும் தெரியாது" எனும் பட்டம் 1008வது முறையாக தன் குழந்தைகள் முன்னிலையில் தரப்படுவதை நினைத்து மீண்டும் செல்ல பயப்பட்ட நிலையில் தவிக்கும் (ஆண்)மகனை நோக்கி அம்மாவீட்டுக்கு வந்திறங்கிய, அம்மாவின் அணி நிரந்தர சப்போர்ட்டரான தன் சகோதரி
அண்ணா /டேய் தம்பி... நீ கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டன்னு கண்களின் ஷட்டரைத் திறந்து 1-டிஎம்சி இன்ஸ்டண்ட் கண்ணீரை வெளியேற்ற...

அங்கே வந்த அம்மாவோ... சபாஷ் ..வந்தும் வராததுமா கூடப்பிறந்தவளைக் கண்கலங்க வைச்சுட்டயேடான்னு அடுத்த எபிசோடை ஆரம்பிக்க... கிச்சனில் பலமான பல பாத்திரச் சத்தங்கள் செய்தபடியே மனைவி வேலை செய்வதில்- ஈராக்கில் அமெரிக்கா+பிரிட்டிஷ் கண்டுபிடிக்காத WMDயை தான் கண்டுபிடித்துவிட்டதாக மனசுக்குள்ளே உணர்ந்தாலும் ... முந்நாள் ஹீரோவான (ஆண்)மகன் தன் நிலையை WMD விழுந்த ஹிரோஷிமாவாக்கிக் கொள்ள விரும்பாமல் 1500வது முறையாக அடங்கிப்போய் நழுவ...

அப்பா தன்னுடைய எழுபதுவயதில் ஏன் காய்கறி மார்க்கெட்டுக்கு கறிகாய் வாங்க ஒரு நடை, பச்சைமிளகாய்க்கு ஒரு நடை, கறிவேப்பிலைக்கு ஒரு நடை, கீரைவாங்கன்னு ஒரு நடைன்னு லூசுமாதிரி இருக்கிறார் என்பதில் இருக்கும் சூட்சுமம் புரிகிறது. After all it is necessary to get fresh air very often - which is directly to the proportion of number of பெண்மணிகள்(வயது வித்தியாசம் இல்லாமல்) in the home)

இப்போ பெண்ணடிமைத்தனம் அப்டீன்னா என்னன்னு பார்க்கலாம்.

அடிமைத்தனம் அப்டீன்னா என்னங்க?

நம்ம விருப்பத்திற்கு, சொல்லுகிற சொல்லுக்கு வரவேற்பு, மரியாதை இருக்காத நிலையை அடிமைத்தனம்னு சொல்லலாம்.

அம்மா எனும் தானே தேடி,அலசி ஆராய்ஞ்சு, விசாரிச்சு, தேர்ந்தெடுத்துத் தந்த வாழ்க்கைத் துணைவி என்று இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைத்துவிட்டு... பழியை எல்லாம் மகன் மேலே சுமத்துவது... பொண்டாட்டியோட நட்டுவாங்கத்துக்கு ஆடுறவன்...தலையணை மந்திரத்துக்கு மயங்கினவன்ன்னு பழிக்கவேண்டியது,

மனைவி எனும் பெண் கல்யாணமானவுடனே கணவனை அவனது தாயாரிடம் இருந்து கத்தரிக்க ஆனதைச் செய்யவேண்டியது... அம்மாக்கோண்டு என்பது.... அலுவலகத்தில் திறமையான மேலாளராக இருந்தாலும் ...உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...ஒரு மண்ணும் தெரியாதுன்னு கும்ம வேண்டியது...

சகோதரி எனும் பெண் "கல்யாணத்துக்கு அப்புறமா நீ ரொம்ம மாறிட்ட"ன்னு பத்திரம் தரவேண்டியது... கல்யாணமானா.. எப்படி அப்படியே இருப்பது... கணவனாக..குழந்தைகளுக்கு அப்பாவாக என்று முன்னில்லாத கூடுதல் கடமைகள் என பல மாற்றங்கள் வந்துவிட்ட வாழ்க்கை... இதில் எப்படி அப்படியே இருந்து தொடர்வது?

ஒரு ஆணின் வாழ்க்கையில் அம்மா-மனைவி-சகோதரி எனும் பெண்கள் கூட்டணி இப்படி முன்னே போனால் கடிப்பதாக... பின்னே வந்தால் உதைப்பதாக இருந்து அவர்களாக அவர்களை ஆட்டுவித்துக்கொண்டுவிட்டு அய்யோ பெண்ணடிமைத்தனம் என்றால்... அது தன்னடிமைத்தனம்.

தலைமுறை தலைமுறையாக இவ்வளவுக்கு முன்னுக்குப்பின் முரண்படும் அம்மா-மனைவி-சகோதரி எனும் பெண்களது நச்சரிப்புப் பேச்சை ஆண்கள் நாள்போக்கில் சீரியஸாக மதிப்பும் மரியாதையும் தந்து வரவேற்று எடுப்பது குறைவதும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.

குரல் கொடுப்பது என்றால் உண்மையில் பாதிக்கப்பட்ட கல்யாணமாகி, அம்மா-மனைவி-சகோதரியாகிய இப்பெண்களிடம் தினசரி"எமோஷனல் ப்ளாக்மெயில்", எமோஷனல் பிக்பாக்கெட் நிகழ்வுகளில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் அபலை(ஆண்)மகன்களுக்குக் குரல் தருவதே நியாயம்!

இன்னொருதரம் பெண்ணடிமைத்தனம்னு சொல்லுமுன் யோசிங்க ... திருத்திச்சொல்லுங்க.. அது தன்னடிமைத்தனம் என்று!

அன்புடன்,

ஹரிஹரன்

10 comments:

Hariharan # 03985177737685368452 said...

39,850
டெஸ்ட் மெசேஜ்!

Srikanth said...

Feels like watching a tamil TV serial... mmm... any note on women at workplace?

Hariharan # 03985177737685368452 said...

Sriகாந்த்,

வாங்க.

டிவி சீரியல் மாதிரி பெண்ணடிமைத்தனமும் சீரியஸான சீரியல் மேட்டர்தானே.

மெய்யாக எவர் சார்பு நிலையும் எடுக்காமல் ஆண்மகன் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்து கவனித்தால் பெண்களிடையே அடுத்த பெண்கள் பற்றியதாக அவர்கள் மனதில் நிலவும் சிந்தனைகள், குணாதிசயங்கள், அவைகளை நிறைவேற்றிட முழுமூச்சாக நிர்பந்தித்தல் என்பவையே பெண்ணடிமை/ தன்னடிமைத் தனத்திற்கு பிரதான காரணங்களாக இருக்கின்றன.

வேலையில் இருக்கும் பெண்கள் பற்றி??

சில ஆண்டுகள் முன் நான் வேலைசெய்த நிறுவனத்தின் பிரிவுக்குத் தலைவராக (நிர்வாக இயக்குநரின் சகோதரியானதால்) பெண்மணி பொறுப்பேற்றார்.

அலுவலகத்திற்கும், அவர் இல்லத்து அடுக்களைக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நிர்வாகம் செய்தார். அவர் வருமுன்பாக ஆறுஆண்டுகள் ஒரே ஆளாக இருந்து பல சிக்கல்களை சமாளித்த அனுபவம் எனக்கிருந்தும், இந்தப் பெண்மணியின் கோமாளித்தனமான, அடுக்கடுக்கான அடுக்களை முடிவுகளால் , அந்தப் பெண்ணால் அடுக்களையாக மாறிப்போய்விட்ட அலுவலகத்தில் நொந்தகுமாரனாகி, அடுத்த ஆண்டிலேயே வேறு வேலை மாற்றிக்கொண்டேன்.

எனது பார்வையில் ஒருவர் பெண் அதிகாரியிடம் வேலை செய்ய நேர்வது என்பது முன் ஜென்ம சாபம்
:-(

Women getting to Work place என்பது பற்றி சிறு குறிப்பு வரையலாம் என்று இருக்கிறேன்.

Srikanth said...

//
Women getting to Work place என்பது பற்றி சிறு குறிப்பு வரையலாம் என்று இருக்கிறேன்.
//
கொஞ்சம் பார்த்து செய்யுங்க, காலம் கெட்டு கிடக்கு...
ம்.. யாராவது பூனைக்கு மணி கட்டிதானே ஆகணும் :)

Hariharan # 03985177737685368452 said...

Women getting to Work place-அதாவது பெண்கள் தங்களது பணி செய்யும் இடத்துக்குப் பயணப்படுகையில் என்பது பற்றி சிறு குறிப்பு வரையலாம் என்று இருக்கிறேன்.

Never Drive behind a Women என்பதாக பூனைக்கு மணிகட்டும் பதிவு போட எண்ணம் :-))

மங்களூர் சிவா said...

சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ரொம்ப............

ரொம்ப பயமுறுத்தறிங்க...........


கண்ணா பிண்ணாவென பயத்துடன்
மங்களூர் சிவா

மங்களூர் சிவா said...

இந்த போஸ்ட்டை அப்படியே காப்பி பண்ணி யூஸ் பண்ணிக்கிறேன் உங்க அனுமதியோட

அனுமதித்ததுக்கு நன்றி

Hariharan # 03985177737685368452 said...

//சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ரொம்ப............

ரொம்ப பயமுறுத்தறிங்க...........


கண்ணா பிண்ணாவென பயத்துடன்
மங்களூர் சிவா//

சிவா,

பயப்படாதீங்க!

இனிஷியல் காது இருந்தால் (K-காது) கொஞ்சமா ஐம்புலன்களை அடக்கும் திறன்...இந்த விஷயத்தில் பெரிதும் உதவும்.

கும்மியெடுக்கும் மூவர் கூட்டணி மேட்டரில் எனக்கு காது திடீர்ன்னு பென்சில்ல போட்ட கோடு மாதிரி மாறி
விடுவதால் பிழைத்துக்கிடக்கிறேன்:-))

வெற்றிகரமான திருமண வாழ்வுக்கு ஒன்லைன் டெக்னிக் தீம் ஒன்று சொல்லட்டுமா?

(செவி) இருந்தும் இல்லாதிரு :-))

மங்களூர் சிவா said...

//
கும்மியெடுக்கும் மூவர் கூட்டணி மேட்டரில் எனக்கு காது திடீர்ன்னு பென்சில்ல போட்ட கோடு மாதிரி மாறி
விடுவதால் பிழைத்துக்கிடக்கிறேன்:-))
//
இப்படி பட்ட கேடுகெட்ட பிழைப்பு வேண்டுமா என ஒரு கணம் யோசனையாக இருக்கிறது

Hariharan # 03985177737685368452 said...

மங்களூர் சிவா,,

அடிக்கடி வாத-பிரதிவாதம்னு கருத்தைப் பரிமாறிக்கொள்ளும் தம்பதியர் தான் நெடுநாள் இணைந்து வாழ்கிறார்கள்.

யோசிக்கும்போது இதையும் கணக்குல எடுத்துக்குங்க.

எனது இந்த முந்தைய பதிவில் திருமண வாழ்க்கை எப்படி மனிதனுக்கு அவன் மனம் பக்குவமடைய உதவுகிறது என்று கொஞ்சம் சொல்லியிருக்கிறேன்.

இதையும் படித்துப்பாருங்கள்.