Monday, April 09, 2007

(146) திருமுருகாற்றுப்படை...நக்கீரர் ..(சு)ப்ரமணியம்

தமிழ் இலக்கியத்தின் தொன்மையான பத்துப்பாட்டு நூல்களில் முதலில் இருப்பது திருமுருகாற்றுப்படை. நக்கீரர் இயற்றிய நூல்.

சிவபெருமான் நேரிடையாகத் தோன்றி தன் நெற்றிக்கண் காட்டியபோதும் தமிழுக்காக, சங்கு அறுக்கும் குலத்தில் நக்கீரர் தான் வந்ததாகச் சங்கரனார் சிவனுக்கு ஏதுகுலம்? என்று தன் சாதியைச் சொல்லி நேர்மையாகச் சிவனோடு வாதாடிய தைரியசாலியான புலவர் நக்கீரர்.

முருகவழிபாட்டை குறவரினத்தவரிலிருந்து அனைத்து சமூகத்தவரும் எப்படி வழிபட்டார்கள் என்பதைச் சொல்லும் நூல் திருமுருகாற்றுப்படை.

நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஷண்முகநாதன், முருகனின், சுப்ரமண்யஸ்வாமியின் ஆறுமுகங்களில் ஒவ்வொரு முகத்திற்கும் அதற்குண்டான சிறப்பைச் சொல்லி விவரிக்கையில் இப்படிச் சொல்கிறார்:

ஒரு முகமம்

மந்திர விதியின் மரபுளி வழா அது

அந்தணர் வேள்வி ஒர்க்கும் மே


விளக்கம்: மந்திரவிதி தப்பாமல், வைதீக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கின்ற வேள்வி, ஹோமங்கள், யாகங்களை கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே ஆறுமுகனுக்கு ஒரு முகம் இருக்கிறது என்கிறார் நக்கீரர்.


சுப்பிரமணியம் பேணுவது "ப்ரமணியம்" என்பதான "வேதநெறியையே"!

சுப்பிரமணியத்தில் "சு" எனும் எழுத்து தவிர்த்து மீதம் இருப்பது "ப்ரம்மணியமே!"

தெய்வங்களில் முருகக்கடவுள் பஞ்சபூதத்தொடர்புடன் அக்கினியின் சொரூபம்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து நெருப்புப் பொறியாகத் தோன்றி வாயுவினால் சுமக்கப்பட்டு சரவணப்பொய்கையில் ஆறுமுகனாகத் தோன்றி பூமி உயர்ந்திருக்கும் மலைகள் எங்கும் நிறைந்து இருப்பவர் முருகக்கடவுள்!

"வேதத்துக்கு முக்கியம் வேள்வி". யாகம், வேள்விக்கு முக்கியம் "அக்கினி". தெய்வங்களுள் சுப்ரமணியம் தான் அக்கினி.

வேத நெறி ஷீணித்தால் அதை மீட்டுப் பேணுவதே முருகக்கடவுளின் முக்கியமான செயலாக இருக்கிறது. திருஞான சம்பந்தர் முருகப்பெருமானின் அவதாரம். சமணர்களோடு வாதாடி வென்றவர் திருஞான சம்பந்தர்! ஆற்றலாக இருந்து ப்ரமணியம் பேணியவர் குமாரசுவாமிக்கடவுள்!

பிராம்மணியத்தை நிலைநாட்டினவர் சம்பந்தர். தமிழ் வேதமான தேவரம் பாடிய திருஞானசம்பந்தர் தன்னை நான்மறை சம்பந்தன் என்றே அழைத்துக்கொள்கிறார்!

வேத நெறி தழைத்தோங்கவே திருஞான சம்பந்தரின் அவதாரம் நடந்தது என்று சொல்கிறார் சேக்கிழார்.


கந்தபுராணம்தான் இருக்கும் புராணங்களிலேயே அதிகமான சுலோகங்களைக்கொண்டது!
வால்மீகி ராமாயணம்,காளிதாசரின் குமாரசம்பவம் என்பவையும் சுப்ரமணியரின் பெருமையைச் சொல்கின்றன.

மயூரவாகனரான குமாரஸ்வாமியின் உருவம் பதித்த மிகப்பழைய நாணயங்கள் வட இந்தியாவின் கோடியில் கிடைத்திருக்கின்றன. இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் வடமேற்குஎல்லை மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட குஷனர் நாணயங்களில் குமாரஸ்வாமியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தன.

ரிக்வேதம் பஞ்ச சூத்திரத்தில் பரமேஸ்வரனை போற்றும் ஸூக்தத்தில் குமாரனை வழிபடும் பிதா எனத் தகப்பன்சாமியாக, சாந்தோக்கிய உபநிடத்தில் சனத்குமார-ஸ்கந்தன் எனக்குறிப்பிடப்பட்டுத் துதிக்கப்படுபவர் சுப்ரமணியர்.

வைதீக நெறியை வளர்க்கவே நீங்கா இளமையுடன் இருப்பவர் குமாரசுவாமியான முருகக்கடவுள். ப்ராம்மணர்கள்-அந்தணர்கள் பற்றி ஒழுகும் வேதநெறியை வளர்க்கிறவர் சுப்பிரமணியர்!

நான்மறை வேதங்கள், அவை சொல்லும் கர்மாக்களை வாழ்த்தி வளர்ப்பது முருகனுக்கே உவப்பான விஷேச காரியம் என திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் சொல்கிறார்!

ஒரு முகமம்
மந்திர விதியின் மரபுளி வழா அது
அந்தணர் வேள்வி ஒர்க்கும் மே

மந்திரவிதி தப்பாமல், வைதீக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கின்ற வேள்வி, ஹோமங்கள், யாகங்களை கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே ஆறுமுகனுக்கு ஒரு முகம் இருக்கிறது என்கிறார் நக்கீரர்.

சிவபெருமானின் நெருப்பு நெற்றிக்கண்ணுக்கு அஞ்சாது வாதிட்ட நேர்மையாளர் நக்கீரர்.
அவரே பிராமணர்கள் விதி தப்பாது நடத்தும் ப்ரமணிய யாக வேள்வி கண்டு இன்புறுவது ஆறுமுகனின் ஒருமுகம் என்று தனது திருமுருகாற்றுப்படையில் சொல்லியிருக்கின்றார்.

தெய்வம், வேதம், சமஸ்கிருதம் மறுக்கும்/வெறுக்கும் தமிழ்நாட்டு பகுத்தறிவு நாத்திகவாதிகள் முருகப்பெருமானை தமிழுக்கு அரசன் என்று ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்!

முருகனான சுப்பிரமணியர் காத்துரட்சிப்பது ப்ரம்மணியம், பிராமணர்கள் பற்றி ஒழுகும் வேதநெறி யாகங்கள் என திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் சொல்லியிருக்கிறார்.

நக்கீரருக்கு நம் தமிழ்நாட்டுப் பகுத்தறிவு நாத்திக அரசியல் திரா"விட"ர்கள் நெருப்புக் காட்டுவார்களா?

இல்லை நக்கீரரும், வேத நெறி, ப்ரம்மணியம் பேணி வளர்க்கும் எம்பெருமான் சுப்ரமணியரும் பார்ப்பன அடிவருடிப் பட்டம் பெறுவார்களா??


அன்புடன்,

ஹரிஹரன்

5 comments:

Hariharan # 03985177737685368452 said...

35205
டெஸ்ட் மெசேஜ்!

ஜடாயு said...

ஹரிஹரன், வேத புராணங்களில் முருகக் கடவுள் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

இந்திய வரலாற்றின் பொற்காலம் என்று கருதப் பட்ட குப்தர் காலத்தின் முக்கியத் தெய்வம் சுப்பிரமணியர் தான். ஸ்கந்த குப்தன், குமார குப்தன், கார்த்திகேய குப்தன் என்று இந்த வமிசத்தின் மூன்று முக்கிய மன்னர்கள் முருகன் பெயரையே தரித்தனர். பின்னர் பௌத்தத்தின் அதீத பரவலால், போர்க்கடவுளாக வணங்கப் பட்ட தேவசேனாபதியின் வழிபாடு வடக்கே குறைந்தது - ஆனால் முழுதும் அழியவில்லை. இன்றும் எல்லா வடநாட்டு சிவன் கோயில்களிலும் ஓரத்தில் முருகன் இருப்பார்.

பிரம்மணியம் என்று இங்கே கூறப்பட்டது பிரம்மத்தை நாடும் வழி என்ற பொருளிலேயே நீங்கள் குறிப்பிட்டதாகக் கொள்கிறேன்.
பிரம்மணியம் என்ற சொல்லை வெறுப்பு ரீதியில் ஆதிக்க சக்தி என்பது மாதிரி பயன்படுத்துபவர்கள், இந்திய ஆன்மிகம் பற்றி ஒன்றும் அறியாதவர்கள்.

Anonymous said...

"..நக்கீரர் சிவனோட வாதாடின சீனெல்லாம் சும்மா சினிமா .." என்றும், இலக்கியத்தில் இல்லை என்றும், "...காமம் செப்பாது கண்டது மொழிதல்.." புலவர் கற்பனையாய் தும்பிக்கு விடுத்த கேள்வி என்றும், சொல்லிக் கேட்டிருக்கிறேன்

AP நாகையா, சிவாஜி கணேசன் டயலாக்கு இலக்கியத்தில் இருந்தால் மேற்கோள் காட்டவும். தெரிந்துகொள்வேன்

புரிதலுக்காக மட்டுமே

அன்புடன்

Hariharan # 03985177737685368452 said...

//"..நக்கீரர் சிவனோட வாதாடின சீனெல்லாம் சும்மா சினிமா .." என்றும், இலக்கியத்தில் இல்லை என்றும், "...காமம் செப்பாது கண்டது மொழிதல்.." புலவர் கற்பனையாய் தும்பிக்கு விடுத்த கேள்வி என்றும், சொல்லிக் கேட்டிருக்கிறேன்

AP நாகையா, சிவாஜி கணேசன் டயலாக்கு இலக்கியத்தில் இருந்தால் மேற்கோள் காட்டவும். தெரிந்துகொள்வேன்//

நக்கீரரை நம்மக்களுக்கு நினைவில் எடுத்துவர எளிய டிரிக்கர் என்பதால்//சிவபெருமான் நேரிடையாகத் தோன்றி தன் நெற்றிக்கண் காட்டியபோதும் தமிழுக்காக, சங்கு அறுக்கும் குலத்தில் நக்கீரர் தான் வந்ததாகச் சங்கரனார் சிவனுக்கு ஏதுகுலம்? என்று தன் சாதியைச் சொல்லி நேர்மையாகச் சிவனோடு வாதாடிய தைரியசாலியான புலவர் நக்கீரர்.
//இந்த முன்னோட்டம் வைத்தேன்!

மீதி எல்லாம் இந்திய வரலாற்றில் வடக்கில் குப்தர்கள் குமரனைக் குலதெய்வமாகக் கொண்ட அரசவம்சத்தினர், எம்பெருமான் சுப்ரமண்யம் என்பது ப்ரமண்யம் எனும் வேதநெறிகாப்பதைக் கடமையாகக் கொண்ட கடவுள் என்பதைச் சொல்ல விழைகிறது கட்டுரை!

வடக்கில் நடந்த தொடர் இசுலாமியப் படை எடுப்பு பல இந்து ஆலயங்களை அழித்தொழித்ததில் நடைமுறையில் இன்றைக்கு பிரதானமாக இல்லாமல் இருக்கும் குமர வழிபாட்டை பண்டைய வரலாறு, பழமையான வேத, இலக்கியச் சான்றுகள் கொண்டு
அணுகிப்பார்த்து தமிழகத்து இறைமறுப்புப் பகுத்தறிவுப் புரட்டு ஏற்படுத்தியிருக்கும் மாயையில் இருந்து வெளிவர வேண்டும்.

தமிழகத்தில் முருகன், ஷண்முகன், குமரன்,சுப்ரமணியம் வடக்கில் குமாரசாமியாக இருப்பவரும் ஒன்றே!

முருக வழிபாடு/குமரக்கடவுள் வழிபாடு இந்தியாவெங்கும் இருக்கும் ஒன்றே!

கர்நாடகத்திலும் சுப்ரமண்யா என்று புகழ்பெற்ற குமரக் கடவுள் வழிபாட்டுத்தலம் இருக்கிறது!

அப்புறம் அவர் ஏபி நாகையா இல்லீங்க. அவர் ஏபி நாகராஜன்!

கருப்பு said...

//பாசத்தை இப்படிப் பொழிஞ்சா என்ன செய்ய?? நல்லா இரு சாமி!//

பரவாயில்லையே ஹரிஹரன். அன்றைக்கு பிராமனரைப் பார்த்து மற்றவன் சாமின்னு கூப்பிட்டான். இன்றைக்கு ஒரு சூத்திரனைப் பார்த்து பிராமனர் சாமி என்று அழைப்பதைக் கேட்டு என்காது புளகான்கிதம் அடைகின்றது! ரொம்ப நன்றி.

//சரி பகுத்தறிவுக் கருப்பு குமரக்கடவுள் கனவில் "புரூப் ரீடிங்" செய்த கலக்கல் இராம.நாராயணன் டைப் கதையை/நிகழ்வு/சம்பவத்தை மட்டும் நம்புவது/சார்பு எடுப்பது ஏன்?//

பகுத்தறிவையும் நாத்திகத்தையும் ஏன் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்? பெரியாரைப் பிடிக்கும் அல்லது அவரின் கொள்கைகள் பிடிக்கும் அனைவருமே நாத்திகர்கள் என்று உங்களுக்கு யார் சொன்னா? குலக்கல்வியை ஆதரித்த ராஜாஜியா? இல்லை மொட்டைத்தலையன் சோமாறியா?

//அனைத்து தரப்பு மக்களிடமும் சமூக இணைப்பை பாரத பாரம்பரியக் கல்வி, இறைவழிபாடு வாயிலாக பல பிராந்தியங்களில் பாரதம் முழுக்க ஏற்படுத்தியிருந்த ஒரே மொழி சமஸ்கிருதம் தான் கருப்பு.//

சமஸ்கிருதம் உலகில் எத்தனை பேருக்கு தெரியும்கறீங்க? உலக மக்கள் தொகையில் 0.0000000000000000000000001 சதம் கூட இருக்காது. வேறு எதுக்கெல்லாம் பயன்படுது உங்க தேவமொழின்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. கோயிலில் பிச்சை எடுக்க மட்டும்தானே அது பயன்படுது? அன்றைக்கு வடமொழியில் இருந்த புத்தகம் பிடிக்காமல்தானே முருகன் தமிழில் எழுதச் சொன்னார்? எங்கள் மொழி தெரியாத அல்லது பிடிக்காத எந்த கடவுளும் எங்களுக்குத் தேவையில்லை ஹரிஹரன். பாப்பான் வருகைக்கு முந்தி இந்தியாவில் வடமொழி இல்லை என்பதாவது உமக்கு தெரியுமா?


//உறவு இணைப்பை ஏற்படுத்தும் எதுவும் தெய்வீகமானது தான்.//

ஆனால் எத்தனை பிராமணர்கள் திராவிடனோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டீர்கள்? தலையில் பிறந்தேன், மார்பில் பிறந்தேன், காலில் பிறந்தான்னு ஏன் பிரித்து வைத்தீர்கள்? இப்படிப் பிரித்துப் போடச் சொன்னது கடவுள்தான் என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை ஹரிஹரன்.

//பண்டைய பாரதத்தில் பெரும்பான்மையானோரால் பேசப்பட்ட மொழியாக சமஸ்கிருதம் தெய்வீகமானதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு ஒரு காரணம்.//

மறுபடியும் ஜோக் அடிக்கிறீங்க. எந்த மன்னனுக்கு சமஸ்கிருதம் தெரியும் ஒரு சில பார்ப்பன மன்னர்களைத் தவிர? மன்னராட்சியில் பிராமனரைத் தவிர வேறு எந்த சமூகம் வடமொழி பயின்றது? பண்டடய பாரத்தில் சமசுகிரதம்தானதிகம் பேசப்பட்டது என்பதற்கான ஆதாரம் ஏதும் உண்டா?

//முருகக்க்கடவுளை திரா"விட" மொழிப்போர் தியாகி ஆக்கிவிட்டு மொழிப்போர் தியாகி பென்ஷன் தர முயற்சிப்பது தெரிகிறது.//

சும்மா இருந்த முருகப் பெருமானுக்கு குளிப்பாட்டி பூணூல் போட்டு அவரை நீங்கள் பாப்பார சாமியாக்கினீர்கள். நான் அவரை எந்த இனத்துக்குள்ளும் சேர்க்கவில்லை. தமிழ் மொழிக்காகத்தான் உயர்த்திப் பேசியுள்ளேன் இப்பதிவில்!

//சுப்பிரமணியரான முருகக்கடவுள் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொல்லியிருப்பதை எனது இப்பதிவில் பார்க்கலாம்://

வந்து படித்துப் பார்த்தேன். அது நக்கீரன் சொன்னது இல்லை. ஹரிஹரன் சொன்னது.

//
காத்தும் கருப்பும் ஓயட்டும்! //

கருப்பு ஓய்ந்தால் பிராமனர் மறுபடி மக்களை ஜாதியால் பிரித்து கூறு போடுவரே?


//சுப்பிரமணியம் பேணுவது "ப்ரமணியம்" என்பதான "வேதநெறியையே"!//

இதனை சரி என்றே வைத்துக் கொள்வோம். சேரியில் பிறந்த சுப்பிரமணியன் என்ற சிறுவனை பார்ப்பனர்கள் தொட மறுப்பது ஏன்?

//சுப்பிரமணியத்தில் "சு" எனும் எழுத்து தவிர்த்து மீதம் இருப்பது "ப்ரம்மணியமே!"//

அப்படியானால் காஞ்சி காமகேடி சூப்புரமணி ஏன் களி தின்னார்? அந்த முதல் எழுத்து 'சு'-வுக்கான முழு அர்த்தம் என்னவோ?

//தெய்வங்களில் முருகக்கடவுள் பஞ்சபூதத் தொடர்புடன் அக்கினியின் சொரூபம்.//

அதனால்தான் குறத்தி வள்ளியை தீண்டத் தகாதவராகவும் பார்ப்பன தெய்வானையை தெய்வமாகவும் மதிக்கின்றனரா பார்ப்புகள்?