Wednesday, April 18, 2007

(150) சனாதன தர்மம் ...EMG..EEG நியூராலஜி

முதலில் கொஞ்சம் அறிவியல் பார்க்கலாம். Electro Myo Graphy (EMG) மற்றும் Electro Encepelography (EEG) எனும் டெக்னாலஜி மருத்துவத் துறையில் நரம்பியல் நிபுணர்களால் நரம்பு மண்டல, தசை , மூளை செயல்பாடுகள் பற்றி அறிய, சிகிச்சைதரப் பயன்படுத்தப்படும் அறிவியல்.

மனிதனின் இயக்கம் என்பது தசைகளின் ஊடாக மோட்டார் நெர்வ்ஸ் எனப்படும் இயக்க நரம்புகள் மூளையினின்று அவரது ஐம்புலன்கள் தரும் தகவல், மற்றும் அவரது முன் அனுபவம் எனும் டேட்டாபேஸில் இருந்து கிடைக்கும் தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு முடிவாக வெளிப்படும் கட்டளைகள் மின்சாரமாக வெளிப்பட்டு உடலின் பாகங்களில் இருக்கும் இயக்க நரம்புகளைச் செயல்படுத்த வைப்பதால் நடக்கிறது.

சிறு குழந்தை நெருப்பைத் தொட்டு விட்டு , நெருப்பின் சூடு விரலை பொசுக்கியதும்,விரல்நரம்புவழியாக சூடு அபாயம் எனும் தகவல் செல்ல உடனே மூளை விரலுக்கு ஆபத்து என்று கையை உதறி இயக்கி நெருப்பில் இருந்து விலக வைக்கிறது.

அடுத்த முறை குழந்தையின் இந்த சூடுபட்ட அனுபவம் , ஐம்புலனில், ஒன்றான கண் எனும்
புலன் நெருப்பைக் கண்டு அனுப்பும் தகவல் இவற்றால் குழந்தை நெருப்பின் அருகே சென்று தொடுவது இல்லை.

வயதாகி நரம்புத் தளர்ச்சி இருப்பவர்களுக்கு "நெர்வ் கண்டக்டன்ஸ்" எனப்படும் நரம்புகள் மின்சாரம் கடத்தும் திறன் குறைவால் உறுப்புக்களின் ரிப்ளெக்ஸ் எனப்படும் செயல்விரைவுத்தனம் குறைந்து காணப்படும். இதை உறுதி செய்ய ஸ்டிமுலேட்டர் எனப்படும் கருவி கொண்டு செயற்கையாக மூளையின் கட்டளைகள் உருவாக்கும் அளவுக்கான மின்சாரம் Nerve Nodes எனப்படும் நரம்பு முடிச்சுகள் மீது விநாடிக்கும் குறைவான காலத்திற்கு பாய்ச்சப்படும் போது இயக்க நரம்பின் "ரிப்ளெக்ஸ்" கண்டறியப்படும்.

உதாரணமாக உள்ளங்கையின் கீழே, மணிக்கட்டின் பின்புறம் கடிகாரப் பட்டை கட்டும் இடத்தில் இருக்கும் நரம்பு முடிச்சில் ஸ்டிமுலேட்டர் மின்சாரம் பாய்ச்சினால் நம் கட்டுப்பாட்டுல் இல்லாமல் கட்டைவிரல் மட்டும் தனியாக இயங்கும்!

இது நியூராலஜி எனும் நரம்பியல் அறிவியல். இது இப்படியே இருக்கட்டும்.

இந்துமத சனாதனதர்மம் பார்க்கும் முன் இன்னொரு அறிவியல் கோணம்.

சிரிப்பு மற்றும் அழுகை என்பது உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளின் அழுத்தமான வெளிப்பாடுகள். ஒருவரது முன் அனுபவங்கள் என்பதை வைத்தே உணர்வுகள் அழுகையாகவும் சிரிப்பாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன!

பிறந்த குழந்தையை எப்போதாவது கொஞ்சம் ஆழ்ந்து உற்று கவனித்து இருக்கின்றீர்களா?? சனாதன தருமத்தை, சனாதன தருமம் சொல்லும் மிக ஆழ்ந்த விஷயங்களை , எந்த விதமான கலப்படம் அற்ற பிறந்த குழந்தை மிக அருமையாக உணர்த்தும். சனாதன தருமம் என்பது சொல்லும் உயர்ந்த விஷயங்கள் பெரும்பாலும் உணரப்பட வேண்டியவை. உருவமாகக் காட்டப்படுவது அவசியமற்றது.

நியூராலஜி எனும் நரம்பியல் அறிவியல் படி பிறந்த குழந்தையின் மூளை முடிவுகள் எடுத்து கட்டளைகள் பிறப்பிக்க முழு வளர்ச்சி அற்றது! கை கால்கள் தானாக அசைக்க இயலாதது!
ஆப்தால்மோலாஜி அறிவியல் படி எதிரில் இருக்கும் எவரையும் பிறந்த குழந்தை அடையாளம் காணாது! ஏனெனில் கண்பார்வை முழுமை அற்றது.

பிறந்த குழந்தைக்கு காது கேட்கும் திறனும் முழுமை அற்றது!

பெற்ற தாயையே பிறந்த குழந்தை உணர்வது வாசத்தினை நுகர்வதனால்தான்!

வாழ்வியல் அனுபவம் என்பது அன்று பிறந்த குழந்தைக்கு, அதுவும் கண் திறக்காது ஒரு நாளில் சராசரியாக 20 மணிநேரத்திற்கும் மேல் உறங்கும் குழந்தைக்கு அனுபவம் எனும் பேச்சு மிக அதிகம்.

பிறந்த குழந்தை தன்னுள் எழும் வயிற்றுப் பசிக்கு "இன்ஸ்டிங்ட்" உணர்வால் அழும். அன்னையிடம் பால் குடித்துவிட்டு உறங்கும்.

அடுத்தமுறை சந்தர்ப்பம் கிடைக்கும் போது, ஆழ்ந்து உறங்கும் ஒரு பிறந்த குழந்தையை தொந்தரவு செய்யாமல் கொஞ்ச நேரம் உற்று நோக்குங்கள். உறக்கத்திலேயே தன் முகமெல்லாம் மலர அகலமாய்த் தனது பொக்கைவாய் விரித்துச் சிரிக்கும்.... சற்று நேரத்தில் முகமெல்லாம் சுண்டிப்போய் உதடுகள் துடிக்க சோகத்தை வெளிப்படுத்தி பல நேரங்களில் தூக்கத்திலேயே வாய்விட்டு அழும்!

எந்த அனுபவமும் நேரடியாகப் பெறத் தன் புலன்கள் எதுவும் முழுமையாகத் தயாராக வளர்ச்சி அடையாத, தன் மூளையின் நினைவுகள் மெமரி இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அன்று பிறந்த பச்சைக்குழந்தையின் முழுமையான உணர்வுகள் வெளிப்படுத்திச் சிரிப்பதும், உதடுகள் கோணி சோகத்தை வெளிப்படுத்துவதும் சோகம் மீறிப்போய் உடன் அழுவதும் எப்படி சாத்தியம்?

முன் ஜென்மத் தொடர்புகளால் இறைவனிடம் இறைஞ்சுகிறது பிறந்த குழந்தை! இதையே உறக்கத்தில் பிறந்த குழந்தை சிரிக்கையில் இறைவன் பூ தருவதால் சிரிக்கிறது, பூவை தராததால் அழுகிறது என்றும் பாட்டி, தாத்தா சொல்வார்கள்!

பொருள் சார் உலகில் குழந்தைப் பிறப்பு கொண்டாட்டத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. கரு உருவாகியதை மசக்கைவாந்தி வந்து அறிவிப்புச் செய்ததும் சந்தோஷம்...குழந்தை பிறந்ததும் பெரும் மகிழ்ச்சி என்பது பொருளியல் உலக நடப்பு.

இப்போது முன்வினை,பூர்வ ஜென்ம பாப, புண்ணியம் காரணமாக மீண்டும் மனிதப் பிறப்பெடுத்த இந்த ஆத்மாவின் அவஸ்தையைத் தாயின் கருப்பையில் விஸ்தாரமாக, விஷூவலாகக் கொஞ்சம் காண்போம்!

தலைகீழாகத் தொங்கிய நிலையிலும், ஒன்பதுமாதம் கைகால்கள் முடக்கப்பட்டும், மலம், மூத்திரம் நிறைந்த கருப்பையில் அடைக்கப்பட்டும், உணவுக்குக் கெஞ்சிக்கொண்டும், போதும்! இந்த வேதனையில் இருந்து என்னை ரட்சித்து வெளிக்கொணர்வாய் இறைவா என்று இறைவனிடம் இறைஞ்சியபடியே வெளியே வந்து பிறக்கிறது அந்த ஆத்மா பிறந்த குழந்தையாக!

40 நாட்கள் வரையில் பிறந்த குழந்தையாக புதிய வடிவெடுத்து வந்த ஆத்மா இறைவனோடு தொடர்பில் இருந்து நல்ல தருமத்தை, கர்மாக்களைச் செய்வேன் என்று இறைவனிடத்தில் வாக்குத் தந்து இந்த உலகியல் வாழ்வில் தாயை முதலாக முகம்பார்த்து அடையாளம் கண்டு சிரிக்கிறது! தாய் அறிமுகப்படுத்த தந்தையை அடையாளம் காண்கிறது... கிலு கிலுப்பைச் சத்தம் கேட்டுத் திரும்புகிறது.... மெல்ல மெல்ல இறைவனுக்குத் தான் செய்து தந்த சத்தியவாக்கை மறந்து "பூர்வஜென்ம" வாசனைகள் வசத்தில் காமம், குரோதம், லோபம், மோகம் என்று லயிக்கிறது!

எல்லாமே காட்சியளிப்பதாக, கண்ணுக்குப் புலப்படும் ஸ்தூலமாக இந்த உலகில் கிடைப்பதில்லை. கண்ணுக்குப் புலப்படாத, உணரக்கூடிய சூட்சுமமாக பல விஷயங்கள் நிறைந்திருக்கின்றன!

கண்ணுக்குத்தெரியும் நூறு கோலிக்குண்டுகள் பார்வையிலிருந்து ஒளித்து வைத்து மறைக்கப்பட்டால் நூறு என்று எண்ணிக்கையில் இருந்தும் மறைபடும்!
திறந்த நிலையில் இருக்கும் ஒரே ஒரு கற்பூரம் பார்வையில் இருந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் கற்பூரம் இருப்பது உணரப்படும்!

வாசத்தால் உணரப்படும் கற்பூரம் என்பது subtler than கோலிக்குண்டு! பார்க்கமட்டுமே முடிந்த கோலிக்குண்டு என்பது Gross !

எப்போதும் Gross body is Controlled by subtler body!
இறைவன் உணரப்பட வேண்டியவன்! The subtlest of all and All Pervading!

நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவன், எல்லோருக்கும் உள்ளாக ஆத்மாவாக இருப்பவன், இருக்கும் அனைத்தும் இறையே!

இந்தியப் பாரம்பரியமான சனாதன தருமம் என்பது மிக ஆழ்ந்த உயர் நிலை அறிவியல்!
போற்றுங்கள் சனாதன தருமத்தை! வாழுங்கள் சனாதன தருமம் சொல்லும் வாழ்வியல் தத்துவங்கள், வேதநெறிகளின் படி! பயன் பெறுவீர் மேம்படுவீர் சனாதனத்தின் துணைகொண்டு!



அன்புடன்,


ஹரிஹரன்

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

35881
டெஸ்ட் மெசேஜ்!

கோவி.கண்ணன் said...

புத்தாண்டு வாக்குறுதியை காப்பாத்திட்டிங்க.

நல்லது! பாராட்டுக்கள் !!

ஆதிவாசிகள் துக்கமாக இருக்கிறார்களா ? மகிழ்ச்சியாக இருக்கிறார்கள ? - எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம்.

நாகரீகனவான்கள் ஆகிய நமக்கு இன்பம் துன்பம் எல்லாமே நாம் சார்ந்துள்ள சமூக அமைப்புகள் வழங்கும் பரிசுமட்டுமின்றி நாம் அதை எவ்வாறு ஏற்கிறோம் என்பதைப் பொருத்து இருக்கிறது. ஓரே மாதிரி பிரச்சனையில் சிலருக்கு கோபம் வரலாம் சிலருக்கு வராமலேயே போய்விடலாம்.

எனக்கு சிலதெல்லாம் தன்மைகள் போல தெரிகிறது பருந்துக்கு பயந்து ஒழியும் கோழிக்குஞ்சு... இது போல் பிறப்பில் அடிப்படை பாதுகாப்பு தொடர்பு உள்ள குணங்கள் இருக்கின்றன. அது போலத்தான் பிறந்த குழந்தைகள் உணர்வுகளின் முக அசைவும்.

எனக்கு தெரிந்த கருத்துக்களைச் சொன்னேன். உங்கள் கட்டுரையை மறுக்கும் நோக்கம் எதுவுமில்லை.

Unknown said...

திருந்தவே மாட்டேன்ற முடிவோட இருக்கீங்க இல்ல :-)))

//.. இந்த வேதனையில் இருந்து என்னை ரட்சித்து வெளிக்கொணர்வாய் இறைவா என்று இறைவனிடம் இறைஞ்சியபடியே வெளியே வந்து பிறக்கிறது அந்த ஆத்மா பிறந்த குழந்தையாக!//

அப்படீன்னு கொழந்தை சொல்லுச்சா?

கருப்பையில் குழைந்தைக்கு வேதனையே கிடையாது.தண்ணீர் சூழ நடுவில் குஜாலா இருக்கும் உள்ள.

குழந்தை உள்ளே இருக்கும் போதே தாயின் உணர்வுகளுக்கு ஏற்ப அசைந்து கொடுக்கும். கொஞ்சம் அறிவியலும் படிங்கசார்.

//...நல்ல தருமத்தை, கர்மாக்களைச் செய்வேன் என்று இறைவனிடத்தில் வாக்குத் தந்து இந்த உலகியல் வாழ்வில் தாயை முதலாக முகம்பார்த்து அடையாளம் கண்டு சிரிக்கிறது! //

:-))
எந்த இறைவனிடம்.
மத்த மதத்துக்காரர்களுக்கும் குழந்தை பிறக்கிறது தெரியுமா?

Hariharan # 03985177737685368452 said...

//கருப்பையில் குழைந்தைக்கு வேதனையே கிடையாது.தண்ணீர் சூழ நடுவில் குஜாலா இருக்கும் உள்ள.//

கல்வெட்டு சார்,

குழந்தை கருப்பைக்குள்ளேயே அதன் கழிவையும் வெளித்தள்ளி, கருமையான தன் கழிவை தன் வாயில் புகுத்தியபடியே பிறந்த குழந்தை என இதுவும் குஜால் தானா??

//எந்த இறைவனிடம்.
மத்த மதத்துக்காரர்களுக்கும் குழந்தை பிறக்கிறது தெரியுமா? //

இறைவன் ஒருவன் தானே! மதம் இறைவனைச் சென்றடையும் மார்க்கங்கள். இதில் சிறப்பான சித்தாந்தங்கள் அடங்கியது சனாதன மார்க்கம்!

//திருந்தவே மாட்டேன்ற முடிவோட இருக்கீங்க இல்ல//

இந்த ஜென்மத்தில் இல்லை :-))))

Ungal Nanban said...

அற்புதமான பதிவு..
பாராட்டுக்கள் ஹரி...

சுப.செந்தில் said...

ஹரி சார் உண்மயிலேயே ஒரு நல்ல கருத்தை முன் வைத்த உங்கள் பதிவு பாரட்டுக்குரியதே!
அதிலும் உங்கள் பலூன் மாமாவுக்கான பதில் பின்னூட்டத்தில் நிக்கிறீங்க!

மங்களூர் சிவா said...

சார் முடியலை..........

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா