Sunday, March 11, 2007

(133) ஹரிஹரனின் கருவாச்சி காவியம்

என் கருவாச்சியோடு நவம்பர் 2006ல் இருந்து நான் குவைத்தில் நடத்தும் தேன்நிலவு பற்றி எழுதணும்னு நினைச்சிருந்தாலும் ரொம்பவும் பர்சனலான இந்த விஷயத்தைப் பொதுவில் எழுதலாமான்னு கொஞ்சம் கூச்சம்.

கருவாச்சி மீதான என் கண்மூடித்தனமான காதல் காரணமாக கடைசியா இன்னிக்கு என் மன்ம் கவர்ந்த கருவாச்சி இன்னொருவாட்டி என்னை மயக்கி தன்னைப்பற்றிய பதிவுபோடச்சொல்லி ஜெயிச்சுட்டா. கருவாச்சியின் வெளிப்புற உட்புறக் கவர்ச்சியில் மெய்யாலுமே மதிமயங்கித்தான் கிறங்கிக் கிடக்கிறேன் சில மாதங்களாக!


கருவாச்சி பத்திப் பொதுவா உலவுகிற பல கருத்துக்களை நான் கேட்டிருக்கேன். கருவாச்சிக்கு தாழ்வுமனப்பான்மை ஜாஸ்தி, அவ்வளவு ஈஸியா கருவாச்சிய சமாளிச்சுடமுடியாது. இப்படிக் கண்டமேனிக்கும் கருவாச்சி பத்திக் கேள்விப்பட்டதெல்லாம் நிசம் இல்லீங்க. அனுபவிச்ச உண்மையை வைத்துச் சொல்றேங்க! கருவாச்சியோட பவர் மெய்யாலுமே ஜாஸ்திதாங்க 2400CC!

பெரும்பாலும் தயிர்சாதத்தைப் புளிக்காய்ச்சல் தொட்டுக்கொண்டு சாப்பிடுற நான் 160 Horse power-ல் புலிப்பாய்ச்சல் காட்டும் என்னோட கருவாச்சிய ரொம்ப வியர்க்காமல், விறுவிறுக்காமல் ரொம்பவே ஈடுகொடுத்து சுலபமாச் சமாளிக்கிறேங்க :-))

இந்தக் கருவாச்சிக்கு முன் நான் வைச்சிருந்த தங்கமா, வெள்ளியாவும் வெளி வனப்பில் ஜொலித்த, மற்றும் வெள்ளைக்கார அக்காக்களையும் அவங்களோட அனுபவநினைவுகள் எல்லாத்தையும் இந்தப் புதுக் கருவாச்சி காணாமப் போக வச்சிட்டா!

அதிசயம் இந்தக் கருவாச்சியோடு கண்டிப்பா அடுத்த ரெண்டு வருஷத்துக்கு காண்டிராக்ட் குடித்தனம் நடத்தியாகணும்ன்றதை என் மனைவி, குழந்தைகளும் சந்தோஷமாச் சரின்னு சொன்னது!


ஒரு வளைவில் கருவாச்சி கண்சிமிட்டியபடியே தன் வளைவுகளை வனப்புடன் காட்டுகிறாள்:


கருவாச்சியை இனிமையாக அணைத்து ஆக்கிரமிக்க அழகுணர்ச்சியுடனான கட்டுப்பாடு மற்றும் கேளிக்கை அமைப்புகளின் தோற்றம்:


தன்மடிமேல் சவாரி செய்யற அஞ்சுபேருக்கும் அலுப்பே தெரியாத வண்ணம் ஈடுகொடுத்து கருவாச்சி அம்சமா சமாளிப்பா.



கருவாச்சியோட குரல் ரொம்பத் துல்லியமா இனிமையானது. தன்னை நம்பி சவாரி செய்றவங்களுக்கு ஒரு ஆபத்துன்னா "காற்றுப் பை" பாதுகாப்பு ஹைடெக்கா தருவா!






கருவாச்சி பத்தின கூடுதல் ஹைடெக் விஷயங்கள்:

புத்தம் புதிய 2007 Mitsubishi Galant ES 2400cc
Specifications: S4 MIVEC, 16V, SOHC MPI, Unleaded Max. Output: 170hp/5500rpm, Torque: 23.2 kgf-m/4,000rpm, Power Steering, Central Locking, Power windows, Colour-keyed Power Door Mirrors.

Drive Train/Chassis: ABS with EBD, Cruise Control, 16'' aluminum alloy wheels, full wheel covers, Keyless entry system 2 transmitters, Electronic immobiliser, Front & rear side door impact bars.Automatic Transmission

Exteriors: Windshield shade band, Rear Window defogger with auto off function, Color Keyed front & rear bumpers, Glass antenna, Colour keyed outer door handles, Variable intermittent windshield wipers & washers High Mount stop lamp.

Interiors: 4-spoke urethane steering wheel, Centre display (clock, audio information) Unique audio & HVAC panel, Rheostat, rear seat center armrest with cup holders, AM/FM Radio & CD Player with MP3 accomodation with 6 speakers, fully auto A.C., Heater, Tachometer, Retractable Assist Grip (4pcs), Trunk lid Opener, Driver's & front passenger's front advanced air bags, side air bags, Curtain airbags, Fuel tank capacity 67 litres Model 2007.


ஜப்பானியன் அமெரிக்க அணுகுண்டுகளை ஹிரோஷிமா, நாகசாகியில் வாங்கியது நேற்றைய வரலாறு. இன்றைக்கு ஜப்பானியன் இந்த மிட்சுபிஷி கருவாச்சியைத் தயாரிப்பது தன்னைத் தாக்கிய அதே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்!!

மிட்சுபிஷி கருவாச்சியை ஜப்பானியன் ஜப்பானைத் தவிர்த்துவிட்டு தன்மேல் அணுகுண்டுவீசிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தயாரித்ததை, கிராமத்துத் தமிழக இந்தியன் மத்தியகிழக்கு குவைத்தில் பயன்படுத்துவது எனும் செய்தி பல்வேறு வகையான செய்திகளை, உண்மைகளை உள்ளடக்கியிருக்கிறது!

அன்புடன்,

ஹரிஹரன்

15 comments:

Hariharan # 03985177737685368452 said...

புது பிளாக்கரில் எனது புது ஐடி எண்:
Hariharan # 03985177737685368452
டெஸ்ட் மெசேஜ்!

murali said...

அன்பு ஹரிஹரன்,
என்னமோ ஏதோன்னு
விழுந்து அடிச்சி படிச்ச பிறகு ஹி..ஹி..ஹீ-ன்னு அசடு வழிந்தேன்.

புது பிளாக்கரு,புது பிளாக் கலர் காரு
அசத்தரயே ஹரிஹரா.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

வெங்கட்ராமன் said...

அப்புடியே, நீங்களும் கருவாச்சியும் இருக்குற மாதிரி ஒரு போட்டா போடலாமே. . . . ?

கருவாச்சி கலர்லயும், நீங்க வழக்கம் போல பிலிம் ல இருக்குறமாதிரியும்.

சென்ஷி said...

//என் கருவாச்சியோடு நவம்பர் 2006ல் இருந்து நான் குவைத்தில் நடத்தும் தேன்நிலவு பற்றி எழுதணும்னு நினைச்சிருந்தாலும் ரொம்பவும் பர்சனலான இந்த விஷயத்தைப் பொதுவில் எழுதலாமான்னு கொஞ்சம் கூச்சம்.//

நல்ல வேளை நான் இந்த பதிவ முழுசா படிக்கல :))

நல்லா நக்கலடிக்கிறீங்கோ...

சென்ஷி

Hari said...

செம A

ஐயங்கார் said...

நமஸ்காரம் பிள்ளையாண்டான்,

என்னமோ ஏதொன்னு பதறியடிச்சு வந்தேன்.

Hariharan # 03985177737685368452 said...

//ராகவன் ஐயங்கார் said...
நமஸ்காரம் பிள்ளையாண்டான்,

என்னமோ ஏதொன்னு பதறியடிச்சு வந்தேன்.//

இந்தப் பதற்றம் விடாதுகருப்பு-வையும் விட்டு வைக்கவில்லையா?
:-))

Hariharan # 03985177737685368452 said...

//அப்புடியே, நீங்களும் கருவாச்சியும் இருக்குற மாதிரி ஒரு போட்டா போடலாமே. . . . ?

கருவாச்சி கலர்லயும், நீங்க வழக்கம் போல பிலிம் ல இருக்குறமாதிரியும்.//

வெங்கட் ராமன்,

போடலாம்தான். ஆனா அந்தப் போட்டோவை வைத்து ஆபாசமாக கும்மியடிப்பாங்களேன்னு தான் தவிர்த்தேன்!

என்ற போதும் தங்கள் அவாவை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் :-))

லக்கிலுக் said...

//ராகவன் ஐயங்கார் said...
நமஸ்காரம் பிள்ளையாண்டான்,

என்னமோ ஏதொன்னு பதறியடிச்சு வந்தேன்.//

இந்த ராகவன் ஐயங்கார் நான் அல்ல :-))))

கால்கரி சிவா said...

ஹரி , எங்கிட்டெயும் ஒரு கருவாச்சி இருக்குப்பா. குவைத்திலே பரவாயில்லே வெள்ளை டிரஸ்லே ஆம்பிளேயும் கருப்பு டிரஸ்லெ பொம்பளயும் இருப்பா. மழையும் பனியும் பெய்யாது. மழையும் பனியும் பெஞ்சா கருவாச்சி அதிகமா அழுக்காயிடுரா. அவளை திரும்ப கருப்பாக்க படாத பாடா இருக்குப்பா
இதே வெள்ளிகாரி சிம்பிளப்பா லைட்ட தண்ணியே அடிச்சா பளிச்சுன்னு ஆய்ட்ரா?

புதுகாரை பத்திரமா ஓட்டி நால்லாயிருப்பா

Hariharan # 03985177737685368452 said...

//எங்கிட்டெயும் ஒரு கருவாச்சி இருக்குப்பா. //

வாங்க சிவா,

நீங்களும் கருவாச்சி காவியம் படைக்கிறீர்களா?!! நல்லது

//மழையும் பனியும் பெஞ்சா கருவாச்சி அதிகமா அழுக்காயிடுரா. அவளை திரும்ப கருப்பாக்க படாத பாடா இருக்குப்பா//



மெய்யாலுமே அவ்வப்போது அடிக்கும் புழுதிக்காத்துல என்னோட கருவாச்சிய பளபளப்புக் குறையாம மினுமினுப்போடு மெயிண்டெய்ன் செய்யறதுக்குள்ள மூச்சு வாங்கிடுது!

Hariharan # 03985177737685368452 said...

//என்னமோ ஏதோன்னு
விழுந்து அடிச்சி படிச்ச பிறகு ஹி..ஹி..ஹீ-ன்னு அசடு வழிந்தேன்.//

முரளிதரன்,

ரொம்ப"ஏ" எதிர்பார்த்தீங்களோ?!!

Hariharan # 03985177737685368452 said...

//நல்ல வேளை நான் இந்த பதிவ முழுசா படிக்கல :))

நல்லா நக்கலடிக்கிறீங்கோ...,,

சென்ஷி,

பதிவை முழுசாப் படிக்கலைன்னு நீங்களும் நல்லா நக்கலடிக்கிறீங்களே!! :-))

Hariharan # 03985177737685368452 said...

//Hari said...

செம A

//

இப்படியெல்லாம் கருவாச்சியைக் கண்ணு வைக்காதீங்கப்பா:-))

Hariharan # 03985177737685368452 said...

லக்கிலுக் said...
//ராகவன் ஐயங்கார் said...
நமஸ்காரம் பிள்ளையாண்டான்,

என்னமோ ஏதொன்னு பதறியடிச்சு வந்தேன்.//

இந்த ராகவன் ஐயங்கார் நான் அல்ல :-))))


லக்கி,

இவர் யாரு? விடாது கருப்பு சதீஷ்? இல்லை மகேந்திரன்? என எண்ணிய என்னைத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி!
:-))