Tuesday, December 04, 2007

(185) ஈவெரா கொளுகைப்படி மானமிகு / இனமான தலைவனாவது எப்படி?

மடையா , மக்குன்னு மக்கள் பட்டப்பெயர் சூட்டிக் கலாய்ப்பதில் இருந்து மேம்பட்டு மானமிகு / இனமான என்று அடைமொழியோடு வானவில்லின் ஏதோ ஒரு கலர் துண்டு, சட்டை போட்டு உலா வரணும்னு ஆசைப்படும் மக்களுக்கு உங்கள் கனவு நனவாக இந்த ஐந்து ஸ்டெப் கொண்ட க்ராஷ் கோர்ஸ்.

மானமிகு -இனமான அடைமொழிகொண்ட தலைவன் ஆக ஸ்டெப் 1.

நாய் /பூனை/ஆடு/மாடு/கோழின்னு சகட்டு மேனிக்கு ஏதாவது ஒண்ணை தன் வீட்டில் வளர்க்கிற ஒரு பிரபலமான கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாய்சேகர்/நாய்பாஸ்கர் மாதிரி நபரிடம் கைத்தடியா சேர்ந்துடுங்க.

ஸ்டெப் 2.

பசித்திருந்து, தனித்திருந்து, வாய்ப்புக்கு விழித்திருக்க வேண்டியதில்லை.

அவசியம் மறக்காமல் தங்கள் உடன் எதிர்கால எவிடெண்ஸுக்கு வேண்டி ஒரு ஆளை கம்பெனிக்கு வச்சுக்குங்க!

ஆனா ஒரே ஒரு ஸ்டிரிக்ட் கண்டிஷன்! அவரும் இன்னொரு இனமான -மானமிகு தலைவனாகும் தீவிரமான கனவும்,எண்ணமும்டையவராக இருக்கணும்.

ஸ்டெப் 3:

நீங்க காத்திருந்தது வீண் போகலை. நாய் வளர்க்கும் பார்ட்டி உங்களை தீவனம் வாங்கி வரச்சொல்லிட்டாங்க.

ஸ்டெப் 4:

தெரு முக்கு சந்தைக் கடைக்குப் போய் அங்கேர்ந்து கீரைக்கட்டு /புண்ணாக்கு / நொய்யரிசித்தவிடு / பொறைன்னு எதையும் வாங்காம நோட்டம் விட்டுட்டுவந்துடணும்!

ஸ்டெப் 5:

இப்போ மிருகத்துக்குத் தீவனம் வாங்கிட்டு வரச்சொன்னவர் வெறும் கை வேந்தனா வந்து நிக்கும் உங்களைப் பார்த்து கேட்குமுன் நீங்களே சொல்லிடுங்க

1. நான் ஏன் நாய்க்கு பொறை வாங்கலை தெரியுமா? தமிழினாத்தின் உணவு அரிசிச்சோறு! பொறை வடநாட்டான்களின் உணவான கோதுமையால் செய்யப்பட்டதுன்னு!

முக்கியமா இந்த வரலாற்று இனமானப் போராட்டப் பாசறைப் பயிற்சியை உங்க கூட இருக்குற கூட்டணி ஆள்கிட்ட மேட்டரை அப்டேட் செஞ்சுக்குங்க!

நாளைக்கு நாயைப் பட்டினி போட்டு ஆரம்பிச்சு, பேவரிட் உணவா தந்தூரி ரொட்டி சாப்பிட்டபடிக்கு, இனமான மானமிகு தலைவனா கோலோச்சி 75 வயசு விழாவில் உங்க கோதுமை மறுப்பு கொள்கைப் பிடிப்பைப் பாராட்ட வசதியா இருக்கும்!

என்ன சந்தேகம் நாயைப் பட்டினி போட்டா ப்ளூக்ராஸ்கிட்ட மாட்டிப்போம்னா?

அட நீங்க வேற! நாய்க்கு கிடைக்க இருந்த பாலை கிடைக்க விடாம விழுந்து கெடுத்து நாயைப் பட்டினி போட்டா மானமிகுன்னு பட்டம் தமிழ்நாட்டில் மேடைபோட்டு நாமளே நமக்கு தந்துக்கிட்டதை சிலாகிக்கலாம்!

இந்த விஷயம் தெரிஞ்சா தெருநாய்கூட மதிக்காதுன்னு பொது அறிவு சொல்லுதா?

உங்களோட ஒரே அக்கப்போரா இருக்கு! தெருநாய்கூட மதிக்காத செயலைச் செஞ்சீங்கன்னா நீங்க சந்தேகமே இல்லாம்ம பகுத்தறிவுப் பகலவனின் பிரதான் சீடரா உருவாகிட்டீங்க!

கையைக் குடுங்க கங்கிராஜுலேஷன்ஸ்! நீங்க 101வது மானமிகு-இனமானத் தலைவன் இன் த மேக்கிங்!

குறிப்பு: டிஸ்கி:கி.வீரமணி சாரோட 75வது பிறந்த நாள்விழாவில் அவரது ஈவெரா வின் கொள்கைப்பிடிப்பை முதல்வர் மு.கருணாநிதி பேசிய புளகாங்கித பேச்சுக்கும் இதுக்கும் நோ சம்பந்தம்!


இப்படிக்கு,

வெளியே அதிகம் தெரியாத இன்னொரு மானமிகு-இனமானத் தலைவன்
ஹரிஹரன்

நான் இனமான-மானமிகுவான கதை சிறு குறிப்பாக உங்கள் பார்வைக்கு:
(பசியோடு இருந்த நாய்க்கு தெரு முக்கு நாயர் சாயா கடையில் பால் வாங்காமல் நாயர் தமிழனே அல்ல! மலையாளி என்று கொள்கைப்பிடிப்பைக் காட்டி மானமிகு-இனமானத் தலைவனானவன். எனக்கு இப்போது 39வயது இன்னும் 36 வருடம் கழித்து எனது கொள்கைப்பிடிப்பை எனது கஞ்சாக்கருப்பு மாதிரியான நெடுநாள் தோழனைவைத்து பிரகடனம் செய்வேந் விழாவில் அனைவருக்கும் அருகாமை அச்சுதன் நாயர் கடை சாயாவையும் சப்ளை செய்வேன்

அறிவிப்பு:
இந்த மானமிகு-இனமானத் தலைவன் ஆகும் கோர்ஸ் பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்கவும். கோர்ஸ் உள்ளடக்கம்-மேம்பாட்டுக்கான வாசகர் டிப்ஸ் வரவேற்கப்படுகின்றன.

Monday, December 03, 2007

(184) ஈவெராவின் கொளுகைக் களுதையை 100% பின்பற்றிய வீரமணி...புளகாங்கிதப்படும் கருணாநிதி...

தமிழ்நாட்டின் தற்போதைய டாப் நகைச்சுவை நடிகர் யார்?

கைப்புள்ள வடிவேலுவோ சின்னக் கலைவாணர் விவேக் என்றோ நினைத்தால் தவறு. தமிழக முதல்வர் மு.கருணாநிதி அந்த இடத்தைப் பிடித்துவிட்டார்!

நேற்றைக்கு இந்த சாதனையை கருணாநிதி இப்படி நகைச்சுவையாகப் பேசி நிகழ்த்தியிருக்கிறார்:

பெரியாரின் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர் வீரமணி. பெரியார் தனது நாய் குட்டிக்கு பால் வாங்கிவரும்படி வீரமணியிடம் கூறினார். கடைக்கு சென்ற வீரமணி பால் வாங்காமல் திரும்பி வருகிறார். பெரியார், ஏன் பால் வாங்க வில்லை என்று கேட்டதற்கு பிராமணர் ஓட்டலாக இருந்ததால் வாங்கவில்லை என்று வீரமணி கூறியுள்ளார்.


பெரியார் பிராமணர் ஓட்டலில் எதுவும் வாங்க கூடாது என்று கூறியதற்காக நாய்க் குட்டிக்கு கூட பால் வாங்காமல் வரும் அளவுக்கு அவ்வளவு பிடிவாதமாக கொள்கையை காப்பாற்றியவர் வீரமணி என்கிற போது புளகாங்கிதம் அடைந்தேன்.
என்னையே பாராட்டிக் கொள்கிறேன் எவ்வளவு பெரிய சகோதரனை பெற்றிருக்கிறேன்.


ஈவெராவுக்கு மெய்யாவே கொளுகைன்னு ஒன்னு இருந்துச்சா???
ஈவெராவின் கொளுகையை அவரே பின்பற்ற நினைத்ததில்லை!

எக்ஸாம்பிள்ஸ் சிலது பார்க்கலாம்:

ஈவெராவின் தந்தை வழிச் சொத்து முழுதும் ஈவெராவுக்கு கிடைக்கும்படி நீதிமன்றத்தில் வாதாடி பெற்றுத்தந்தவர் திரு.ராஜகோபாலாச்சாரியார் எனும் பிராமணரே!

கருணாநிதியின் குடும்ப மருத்துவர், வக்கீல், ஆடிட்டர் எல்லோரும் பிராமணர்களே!

பொய்ப் பகுத்தறிவுப்பால் ஊட்டி சமானியத் தமிழர்களை நோஞ்சான் நாய்க்குட்டிகளாக்கிவிட்டு வெட்கம் என்பதே இல்லாமல் எப்படிங்க இப்படி?

மிஸ்டர் ஜோக்கர் கருணாநிதி??? ஷேம் ஆன் யூ!

அடுத்து மூடநம்பிக்கையைப் பற்றி

பெரியாரின் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர் வீரமணி.

எப்படிங்க இப்படி? ஈவெராவுக்கே இல்லாத கொள்கையை எப்படி கண்ணைமூடிக்கொண்டு பின் பற்றி?? யே..அப்பா காமெடி இவ்வளவுக்கு கொட்டிக்கிடக்கு?

அப்புறம் கி. வீரமணி சார். இன்னொருவாட்டி அடுத்தவர்களின் மூட நம்பிக்கை பற்றி நீங்க பேசாதீங்க!

இன்னொரு விஷயம். உங்க நகைச்சுவைக் கூட்டணி நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது. வடிவேலு + விவேக் + கஞ்சாக்கருப்பு காம்பினேஷன் காமெடி எல்லாம் சும்மா ஜூஜூபி!

கங்ராஜுலேஷன்ஸ் டு மு.கருணாநிதி + கி.வீரமணி

கொசுறு நியூஸ்: பொய்ப் பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா எனும் நிரந்தர கொளுகை நகைச்சுவையாளனுக்கு கஞ்சாக்கருப்பு கருணாநிதியும் கைப்புள்ள கி.வீரமணியுமாச் சேர்ந்து பகுத்தறிவு நகைச்சுவைத் தலைநகரமாம் சென்னையில் 95 அடியில் சிலை வைக்கப்போறாங்களாம்.

சப் கொசுறு நியூஸ்: ரஷ்யா, மற்றும் ஐரோப்பாவில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் டிரான்ஸ் மைக்ரேட்டரி பறவைகள் சங்கம் 95அடி உயரமான டாய்லட் வசதியை தங்களுக்கு வழியில் சென்னையில் ஏற்படுத்தித் தருவதற்காக நன்றியை பகுத்தறிவு நகைச்சுவை இளையர்களான கஞ்சாக் கருப்பு கருணாநிதிக்கும் கைப்புள்ள கி.வீரமணிக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன!

அரசியல் திரா"விட" பெத்தடின் பகுத்தறிவுகளின் கொளுகைக் களுதையை நினைச்சு சிரிங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, December 02, 2007

(183) தமிழ் மொழியில் அறிவியல் கல்வி சாத்தியப்படும் அவசியமா?

பிளஸ்டூ வரைக்கும் தமிழ்வழியில் கல்வி கற்று 85% மதிப்பெண் பெற்ற மாணவன் பொறியியல் கல்வி ஆங்கிலத்தில் இருந்ததால் விளங்கிக்கொள்ள இயலாமல் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு மாண்டு போன செய்தியை வைத்து தமிழிலேயே பொறியியல் கல்வி படிக்க வேண்டும் என்று விவாதம் நடக்கிறது.

தமிழிலேயே அனைத்து பொறியியல் துறைகளிலும் கல்வி சாத்தியமா?
ஏரோநாட்டிக், பயோ டெக்னாலஜி, சிவில், கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட் ரிகல், எலக்ட் ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று இந்த அனைத்து பொறியியல் பாடங்களின் தமிழ் வடிவம் அதன் சூத்திரம், சூட்சுமங்கள் என அனைத்தும் தமிழ் மூலத்திலேயே அமைந்து சாமானிய கிராமத்து மாணவர்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம் இருக்கிறதா?

மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களில் தமிழ் எந்த அளவுக்கு இருக்கிறது?

உதாரணமாக வேதியலில் ஹீலியம், ஹைட் ரஜன், நைட் ரஜன், வாயுக்கள் தமிழ்ப்படுத்தப்படுமா மற்றும் வேதிக்குறியீடுகளான H2O, NaCl, K, N, He, போன்றவை தமிழ்நாட்டு லைசன்ஸ் ப்ளேட் ஸ்டைலில் தமிழாக்கப்படுமா?

கணிதத்தில் 1,2 3...9 என்பது தமிழ் எண்களாக்கப்பட்டு தமிழ்படுத்தப்படுமா?
Fourier Transformation, Vector, Aljebra போன்றவை எவ்விதம் பயிலத்தக்கவகையில் முழுமையாய்த் தமிழ்ப்படுத்தப்படும்?

குறைகடத்தி என்று Semi Conductors ஐத் தமிழாக்கித் திருப்திப்பட்டுக்கொண்டு மின்ணணுவியலின் பிரதான விஷயங்களான Thyrister, Silicon Controlled Rectifier, Diac, Triac,Microprocessors, Transistors, இன்ன பிற மின்ணணு குறைகடத்திக் கருவிகள் செயல்படும் முறைகள் விளங்கிக்கொள்ளும் வகையில் தமிழில் பயிலத்தக்கவகையில் முழுமையாகத் தமிழ்படுத்தப்படுமா?

அடுக்களைக் கரப்பான் பூச்சி உயிரியலில் Periplaneta americana என்றழைக்கப்டுவதும், தோட்டத்து செம்பருத்திப்பூ hybiscus Rosa Sinenis என்று அழைக்கப்படுவது தமிழ்வழி அறிவியல் கல்வியமைப்பில் எங்கனம் தமிழ்ப்படுத்தப்படும்?

தாவரவியலின் Malvaceae, Fabaceae, Solanaceae, மால்வேசி, ஃபேபெசி, சொலனேசி இன்ன பிற தாவரகுடும்பப் பெயர்கள் வேசி, ஏசி என்று வசையாய் இருப்பதாய் எண்ண நேரிடும் நிலை தவிர்க்க மால், பெப, சொல என்று குறுக்கப்பட்டு தமிழ்ப்படுத்தப்படுமா?

எலக்ட்ரிகல் டெக்னாலஜியின் அடிப்படை விதிகளான Thevenin's theorem, Norton's theorem என்பவை தேவனின் தியரம், நாட்டார் தியரம் என்று சாதி வளையத்துக்குள் வந்துவிடாமல் தமிழ்ப்படுத்தும் முயற்சியாக அம்பேத்கார், ஈவெரா, தாளமுத்துநடராசர் பெயரிடப்படுமா?

மின்னியலின் மிக அடிப்படை விதியான "ஓம்" விதி Ohm's Law இந்து அடிப்படைவாதம் பேசுவதாக இசுலாமிய-கிறித்துவர் மனம் புண்படும் விதத்தில் அமைந்துவிடுவதை தடுக்கும் விதமாக "சமத்துவ விதி" எனப் பெயரிடப்பட்டு இந்துத்துவத்துக்கு சம்மட்டி அடிதரும் விதம் மதசார்பின்றி தமிழ் படுத்தப்படுமா?

ஜப்பானியர், ஜெர்மானியர், ப்ரஞ்சு, டச்சுக்காரர்கள் தாய் மொழியில் அறிவியலை படிக்கிறார்கள்! எப்படி சாத்தியமாகிறது இந்த தேசங்களில் தாய்மொழிக்கல்வி??
இந்த தேசங்களின் கல்வித் திட்டத்தில் "ஓட்டு" அரசியல் கிடையாது.
தாய்மொழி மெய்யாக பேணப்பட வேண்டும் எனும் அக்கறையில் நாடகத் தன்மை இல்லை.

ஜெர்மனியின் ஆட்சியாளர்கள் ஹெல்முட் கோல் / ஜெர்ஹார்டு ஷ்ரோடர்/ஆஞ்சலா மெர்க்கல் வழி நில், என்று புதிய ஆத்திச்சூடி பாடி இளைஞர்களை ஜெர்மன் மொழி பேண வழி நடத்துவதில்லை.

ப்ரான்சில் ஜாக்குஸ் சிராக் / நிக்கோலஸ் சர்கோஸி வழி நில் என்று பிரஞ்சு ஆட்சியாளர்கள் கதறி கலம்பகம் பாடுவதில்லை!

ஜப்பானிய ஆட்சியாளர்கள் தம் நாட்டு மக்களை டொஷிகி கய்ஃபூ / யூனிச்சிரோ கொய்சூமி வழி நில் என்று வழி நடத்துவதில்லை.

ஜெர்மனி ஹிட்லரை உருவாக்கிய தேசம் என்பது வரலாறு என்ற போதும் ஜெர்மனியின் சகல சாதகமற்ற விஷயங்களுக்கும் / நிகழ்வுகளுக்கும் ஹிட்லரின் சமூகத்தவரே காரணம் என்று 1945ல் இருந்து ஜெர்மனியின் ஆட்சியாளர்கள் பழிசூட்டும் விளையாட்டை மட்டும் விளையாடுபவராக இல்லை.

ஜப்பானின் சமூராய் இனத்தவர் போர்வெறியால் கிழக்கு ஆசியா முழுதும் பல சேதாரங்கள் செய்தவர் என்பது வரலாறு. ஜப்பானின் மீது இரு அணுகுண்டுகள் வீசப்பட, பல லட்சம் ஜப்பானியர்கள் தாய்நாட்டின் ஹிரோஷிமா நாகசாகியில் மடிய நேர்ந்த நிலைக்கு சமுராய் இனத்தவர்களின் போர்வெறியே வித்து. ஜப்பானிய ஆட்சியாளர்கள் சமுராய் இனத்தவரைக் கைகாட்டிப் பழிக்கும் வேலையை 1945ல் இருந்து செய்யவில்லை.

பிரஞ்சு அரசன் பதினாறாம் லூயியின் மோசமான அரசாட்சி ப்ரஞ்சுப்புரட்சி, கலவரத்துக்குக் காரணமானது என்பது வரலாறு. பிரான்ஸில் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் லூயி பரம்பரையினர் மீது பழி போடும் சாதனையை மட்டும் 1800ல் இருந்து செய்ய வில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் சிந்தனையின் தரம், செயல்பாட்டுத் திறமை, ஜெர்மனி, ஜப்பான், ப்ரான்ஸ் தேசத்தின் ஆட்சியாளர்களுடன் ஒப்பீடு செய்யத் தக்க அருகதையுடன் இருக்கிறதா?

அருகதை அற்ற ஆட்சியாளர்களால் ஆளப்படும் தமிழ்நாட்டில் ஆசை மட்டும் இருந்து என்ன பயன்?

"அரசு சொத்தை ஆட்டையா போடணும்னா...அண்ணாவழி நில்" எனும் புத்தம்புதிய அரசியல் திரா"விட" பெத்தடின் ஆத்திச்சூடி படித்து தமிழுணர்வை பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான்!

தமிழிலேயே பொறியியல் கல்வி கற்க அரசியல் சார்பற்ற, சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளில் இருக்கும் அறிவார்ந்த கல்வியாளர்கள் ஒன்று பட்டு பல காலம் உழைத்து பயிலத்தக்க அறிவியல் பதங்களுடனான பாடங்களை உருவாக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் தமிழை விற்கும் கலைநயமிக்க வியாபாரிகள் தமிழுணர்வாளர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் இருந்து தொடரும் நிலை இருக்கும் வரையில் முழுமையான, முறையான தமிழ் வழிக் கல்வி என்பது அடுத்த 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இருப்பதாக உணர முடியவில்லை.

அதுவரையில் அவரவர் வயதுக்கு ஏற்றார்போல இத்தனை ஆண்டுகளாக தமிழ் உணர்வு எனது ரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது என்று சொல்லி நடமாடும் ஊறுகாய் பாட்டில்களாக உலா வரலாம்! (ஊறுகாய்கள் நக்கப்படும் அபாயம் இருப்பதால் டாஸ்மாக் பக்கம் போகும் போது கவனமாயிருக்கவும் )


வரலாற்றுப்பாடத்தில் கடையேழு வள்ளல்கள்னு கம்பீரமா படிச்சது நவீன புவியியல் பார்வை கொண்டு, ஈவெரா தோன்றி 100% சாதியை மறுத்து/ஒழித்து விட்ட தமிழ்நாட்டில் லேட்டஸ்டா சிவாஜி அங்கவை சங்கவை மேட்டருக்குப் பின்னாலே அதியமான், பாரி வள்ளல்களே வன்னியர்னு பின்நவீனமா சிந்திக்க ஆரம்பிச்சாச்சு.

இந்த மாதிரியான பார்வை 100% தமிழ்வழியில் கற்கும் பாடத்திட்டத்தில் பிரதிபலிக்காது என்பதற்கு உத்திரவாதம் மாணவர்களுக்கு உண்டா?

எலக்ட்ரிகல் டெக்னாலஜியின் அடிப்படை விதிகளான Thevenin's theorem, Norton's theorem என்பவை தேவனின் தியரம், நாட்டார் தியரம் என்று சாதி வளையத்துக்குள் வந்துவிடாமல் தமிழ்ப்படுத்தும் முயற்சியாக அம்பேத்கார், ஈவெரா, தாளமுத்துநடராசர் பெயரிடப்படுமா?

மின்னியலின் மிக அடிப்படை விதியான "ஓம்" விதி Ohm's Law இந்து அடிப்படைவாதம் பேசுவதாக இசுலாமிய-கிறித்துவர் மனம் புண்படும் விதத்தில் பெயர் அமைந்துவிடுவதை தடுக்கும் விதமாக "சமத்துவ விதி" எனப் பெயரிடப்பட்டு இந்துத்துவத்துக்கு சம்மட்டி அடிதரும் விதம் மதசார்பின்றி தமிழ் படுத்தப்படுமா?


அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, November 18, 2007

(182) உதவி தேவை: சென்னை சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபருக்கு

இணையத்தில் உலாவரும் இளகிய தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.

இன்றிலிருந்து 365வது நாள் எனக்கு நாய் குணம் ஆரம்பிக்கும் 40 வயது ஆரம்பிக்கும் (இப்பவே அப்படித்தானே எனும் தீர்க்கதரிசி நண்பர்களுக்குச் சொல்ல ஏதும் இல்லை)

இந்தப் பதிவு வாயிலாக சென்னை போரூரில் சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சாதாரண கூரியர் கம்பெனியில் வேலைசெய்துவரும் இளைஞனுக்கு உதவி கோருகிறேன்.

கடந்த 30-அக்டோபர்-2007 அன்று தனியார் கூரியர் கம்பெனியில் வேலை செய்யும் கமல்குமார் எனும் 29வயது இளைஞனை அவர் சென்ற பைக்கை ஒரு வேன் மோதிவிட்டு ஹிட் அண்டு ரன் என நிற்காமல் சென்று விட்டது.

பைக்கில் தலைக்கவசம் அணிந்து சென்றபோதும் ஹெல்மெட்டின் கண்ணாடி தலையில் குத்தி மூளையில் இறங்கி காயப்படுத்தியிருக்கிறது. விபத்து நடந்த போருர் பகுதி பொதுமக்கள் உடனடியாக சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் இருக்கும் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷனில் சேர்த்திருக்கிறார்கள்.

சுந்தரம் மருத்துவமனை அட்மிஷன் கார்டு



சுந்தரம் மருத்துவமனை ரிப்போர்ட்


விபத்தில் சிக்குண்டு தலையில் அடிபட்டு மூளைக்காயம் அடைந்த இளைஞன் கமல்குமார் சாதாரணமான வருவாய் கொண்ட மத்திய தரக்குடும்பத்தினைச் சார்ந்தவர். முறையான மருத்துவம் செய்தால் விரைந்து காயங்களில் இருந்து மீண்டு விடலாம் என்பது மருத்துவமனையினர் நம்பிக்கை. தினசரி ரூ.10,000/- செலவு செய்து சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பொருளாதார சக்தி இல்லாத குடும்பம்.

என்னால் இயன்ற உதவியாகச் சில ஆயிரம் ரூபாய் உதவி செய்திருக்கிறேன். ஊர்கூடி உதவினால் இந்த இளைஞன் காயங்களிலிருந்து மீண்டு மறு வாழ்வு பெறுவார்.

பொருளாதார உதவியாகவோ, சகாயமான - இலவச சிகிச்சையாகவோ உதவும்படி வேண்டுகிறேன்.

உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

திரு செல்வம் Mob: No: 9994477784

திரு கமல்குமார் வீட்டு முகவரி:

V. கமல்குமார்,
1/115 ஈஸ்வரன் கோவில் தெரு,
பாடிய நல்லூர்,
ரெட் ஹில்ஸ்,
சென்னை -600 052
தொலைபேசி: 65379022

இன்னலில் அகப்பட்டுக்கொண்டவர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் இளகிய நெஞ்சங்கள் தமிழ் வலைப்பூக்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன என்பதை உணர்ந்திருப்பதாலேயே இந்தப் பதிவைப் பதிகிறேன்.

நம் போன்ற முகம் அறியாத பல நண்பர்கள் செய்யும் சிறிய அளவிலான பொருளாதார உதவி ஒரு குடும்பத்திற்கு அவர்களது மகனை கொடூர சாலை விபத்தின் படு காயங்களிலிருந்து மீட்டுத்தரும் சக்தி உடையது.

சிகரெட், பான்பராக்,கட்டிங்-குவார்ட்டர், பீட்ஸா-கோக், இன்னபிற லாகிரி வஸ்துக்களை இந்த ஆண்டின் இறுதிவரை பாதியாகக் குறைந்த்துக் கொண்டு அந்த நிதியைக் கொண்டு உதவினால் விபத்தில் படுகாயப்பட்ட இளைஞனுக்கு மறுவாழ்வு தரலாம் என்று உரிமையுடன் கோரிக்கை வைக்கிறேன்.

தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டியும் விபத்தில் சிக்கி தலைக்காயம் அடைந்து அவதியுறும் 29 வ்யது இளைஞன் திரு. கமல்குமாருக்கு கவசமாக இருந்து இணையத்து தமிழன்பர்கள் மூலம் நிதியுதவி-சிகிச்சை உதவி கிட்டச்செய்து காக்குமாறு முருகப்பெருமானை உளமாற வேண்டியபடி எனது இன்றைக்கு எனது 39வது பிறந்தநாள் தினத்தைத் துவக்குகிறேன்.

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, October 23, 2007

(181) இந்தியன் ரயில்வே - பெஸ்ட் ஆஃப் இந்தியா

இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்தியாவை வடக்கில் ஹிமாச்சலில் ஆரம்பித்து - பஞ்சாப் பதன்கோட்டில் இருந்து தெற்காக சென்னைக்கு 2800 கிமீ தூரத்தை ஹரித்வார்-டில்லி வழியாக ரயிலில் 48 மணிநேரம் பயணித்தது தனி அனுபவம்.

ஐரோப்பாவின் மேற்கத்திய லண்டன் நகரிலிருந்து ஐரோப்பாவின் கிழக்கு முனை நகரமான இஸ்தான் புல்லிற்கு இடையே இருக்கும் தூரம் கிட்டத்தட 2700 கிமீ.

லண்டன்(இங்கிலாந்து) - பாரீஸ்(ப்ரான்ஸ்) 350 கிமீ
பாரீஸ் - ம்யூனிச்(ஜெர்மனி) 685 கிமீ
ம்யூனிச்- வியன்னா(ஆஸ்திரியா) 350கிமீ
வியன்னா -ப்யூடாபெஸ்ட்(ஹங்கேரி) 220கிமீ
ப்யூடாபெஸ்ட் - புசாரெஸ்ட்(ரொமானியா)650 கிமி
புசாரெஸ்ட்- இஸ்தான்புல்(துருக்கி) - 445 கிமீ


இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்கு ரயிலில் கிளம்பினால் மூன்று இரவுகள் ரயிலில் பயணிக்க வேண்டும். குளிர்சாதன வசதியுள்ள இரண்டாம் வகுப்பில் ஒரு நபருக்கு 400 யூரோ கட்டணம் 400 x 55 = Rs. 22,000/-

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முதாவியிலிருந்து தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு இடையே இருக்கும் தூரம் 3739 கிமீ 4 நாட்கள் 96 மணி நேரம் பயணிக்க வேண்டும்
கட்டணம் குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் ரூ 2900/-, மூன்றடுக்கு குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் ரூ 1950/- தூங்கும் வசதி இரண்டாம் வகுப்பில் ரூ 690/-

இந்திய ரயில்வே சந்தேகமே இல்லாமல் க்ரேட் ஓவர் ஆல் பெர்பார்மர். (லாலுவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை)

எந்த நேரத்திலும் ஆறு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மேலும் கீழுமாய் டில்லி-சென்னைக்கு இடையே ஓடுகிறது!

டில்லி, சென்னை ரயில்வே ஸ்டேஷன் கேண்டீன்களில் வசூலிக்கும் காசுக்கு ஏற்ற அளவில் உணவுப் பண்டங்களின் தரம் இருக்கிறது.

டில்லி ரயில்வே கேண்டீனில் மண்சொப்புவில் (பாறை)இட்லிக்கு சாம்பார் வாங்கிச் சாப்பிட்டது டிபிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்! (மண் சொப்புவுக்கும் லாலுவுக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு)

தமிழகத்தில் கன்னியாகுமரி, குஜராத் கட்சில் இருக்கும் Okha, இவை இந்தியா தேசத்தின் விளிம்பில் இருக்கும் ரயில் நிலையங்கள்!

ஊட்டி, சிம்லா ரெண்டு இடங்களில் மட்டும் குறுகிய ரயில்பாதை மலை ரயில் இருப்பதாக நம்மில் பலர் நினைப்பதைத் தாண்டி பஞ்சாப் பதான் கோட்டில் இருந்து ஹிமாச்சல் பிரதேஷ் ஜோஹீந்தர் நகருக்கு நேரோ கேஜ் பொம்மை மலை ரயில் ஓடுகிறது.

இந்திய ரயில்வேயின் முழு நெட்வொர்க்கையும் இந்த மேப்பில் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த ஐரோப்பாவின் ரயில் நெட்வொர்க்கை விட மிக விஸ்தாரணமான நெட்வொர்க் இந்தியன் ரயில்வே நெட்வொர்க்.

வால்யூ பார் மணி இந்தியன் ரயில்வேயில் உத்திரவாதம்.

சதாப்தி ரயில்கள் வேகம் + வசதிகளில் மேம்பட்டிருக்கிறது.

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜம்முதாவிக்கு 3739 கிமீ தூரம் ஓடும் நெடுந்தூர வாராந்திர ரயில். திருவனந்தபுரம் - கௌஹாத்தி 3300 கிமீதூரம் ஓடி தெற்கிலிருந்து கிழக்கை இணைக்கிறது.

இந்தியன் ரயில்வேயில் பல்வேறு தரங்களில் பயண வசதி ரயிலில் கிடைக்கிறது.
வரிசைப்படி மிகுந்த முதல் தரமான ரயில் சேவை கிடைப்பது:
முதலிடம்- ராஜதானி துரித ரயில்கள்
இரண்டாம் இடம்- சதாப்தி, ஜன-சதாப்தி துரித ரயில்கள்
மூன்றாம் இடம் -சம்பர்க்ராந்தி துரித ரயில்கள்-
நான்காவது இடம் கரீப் ரத்-ஏழைகளின் ரதம் துரித ரயில்கள்
ஐந்தாம் இடம் - இதர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயில்கள்


இந்தியன் ரயில்வேயில் முன்னுரிமை தந்து அவசரமாக சில மாற்றங்கள் எடுத்துவரவேண்டும்:

1. தற்போது ரயில்களில் நடைமுறையில் இருக்கும் ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லெட் மாற்றப்பட்டே ஆகவேண்டும்.

இந்த ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லட் மாறினாலே ரயில் நிலையங்களில் துர்நாற்றம், ஈக்கள், கொசுத்தொல்லை,பெருச்சாளிகள் தொல்லைகள் 80% குறைந்துவிடும்.

தற்போதைய தினசரி துப்புறவு,சானிடேசன் செலவுகளில் பெரும்பாலானதை அடுத்தகட்ட பயணிகளின் வசதிகளை மேம்படுத்தலாம்.

குறிப்பாக 100% ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கலாம்.

அதிகமான பயணிகள் வந்துபோகும் பிசியான ஸ்டேஷன்களில் கூடுதலாக நாற்றம் குறைந்த பல கழிப்பிடங்கள் ஏற்படுத்திப் பராமரிக்கலாம்.

2. பான்பராக் தயாரிப்பாளர்கள் ரயில்வே ஸ்டேஷன் சுத்தப்படுத்தும் செலவுகளில் 50% ஏற்கவேண்டும் மீதியை சிகரட் தயாரிப்பாளர்கள்+குளிர்பான தயாரிப்பாளர்கள் ஸ்பான்ஸர் செய்யவேண்டும்.

3. பயணிகளில் பான்பராக் போட்டு சகட்டுமேனிக்குத் துப்புபவர்களை அப்போதுதான் பயணிகள் ரயில் வந்து போன ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தின் தண்டவாளத்தை ஒருமணிநேரம் கட்டாயம் சுத்தப்படுத்தும் பொறுப்பைத் தரவேண்டும்.

இந்திய ரயில்களில் ரயில் நிலையங்களுக்குள்ளே பயணிப்பதை / இருப்பத்தைத் தவிர்த்து, இந்தியன் ரயில்வேயின் ரயில்களில் பயணிப்பது இணையற்றது.

இந்திய ரயில்வேயின் ரிசர்வேசனுக்கு இணையில்லை! திறமையாக, விரைந்து செயல்படும் மக்கள் உணரும் சேவைகளில் இந்திய ரயில்வேயின் இணைய முன்பதிவு / எங்கிருந்தும் எந்த ரயிலுக்கும் முன்பதிவு என்பது உலகத் தரமான விஷயம்.

மொத்த ஐரோப்பா ரயில் நெட்வொர்க்கைக் காட்டிலும் பரந்த கட்டமைப்பு, ஸ்டேஷன்கள், ரயில்கள் அதிகம் இருப்பது இந்தியரயில்வேயில். ஆன்லைனில் ரிசர்வேசன் செய்துகொள்ளலாம். உள்ளூர் முகவரி தந்தால் மூன்று நாட்களில் கொரியரில் அனுப்பிவிடுகிறர்கள். இல்லை இந்தியாவில் பயணத்தைத் துவங்கும் நாளில் டில்லி, மும்பாய், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், ஆமதாபாத், கொச்சி போன்ற பெரிய ஸ்டேஷன்களில் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இந்தியா வந்ததும் கலெக்ட் செய்து கொள்ளலாம்!


தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் Pantry Car கல்யாண வீடு மாதிரி பரபரப்பா டீ, காபி,குளிர்பானம், இட்லி, வடை, பொங்கல், சாம்பார், மசால்தோசை, ப்ரட் சாண்ட்விச், மதிய மீல்ஸ், மாலையில் பக்கோடா, மெதுவடை, சிப்ஸ், இரவு சூப் , மீல்ஸ் என்று ரவுண்டு கட்டி விற்பனை செய்கிறார்கள். விலை கொஞ்சம் கூடுதல் என்றாலும் நகரும் ரயிலில் கிடைக்கும் வசதிக்கும் , வெரைட்டிக்கும் சமாதானம் செய்துகொள்ளலாம்.


இந்திய ரயில்வேயின் டெலஸ்கோபிக் கட்டணமுறை இன்னொரு ஆச்சரியம். சென்னை to மதுரை 500கிமீ தூரத்திற்கு ரூ. 230 கட்டணம் சென்னை to ஜம்மு 2800 கிமீ தூரத்திற்கு ரூ 570 கட்டணம். ஒரே தேசமாக இந்திய யூனியனாக இருப்பதால் இந்தக் கட்டணமுறை சாத்தியம்.

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணிப்பதிலே பெரிய மகிழ்ச்சி. பல்வேறு விதமான மக்களோடு 36 மணிநேரம் பயணிக்கும் கலகலப்பு நிறைந்த பெரிய வாய்ப்பு.
வீட்டில் பெரும்பாலானோர் தேர்வான ஏசி பெட்டியைத் தவிர்த்து வெகுஜன கலகலப்பான சூழலை அனுபவிக்க வேண்டி சாதாரண தூங்கும் வசதிப் பெட்டியை வற்புறுத்தியிருந்தேன். நான் சற்று பயந்தது ஜூன் மாத மத்தியபிரதேச, நாக்பூர், ஆந்திரா வெய்யில் உக்கிரத்தை எண்ணியே. தெய்வம் அருள் புரிந்தது. ஜான்ஸியில் பெய்ய ஆரம்பித்த மழை சென்னை வரும்வரை சூரியன் குளிர் மேகத்துகுள்ளேயே இருந்துகொண்டார். இயற்கை அன்னையே மொத்த ரயிலுக்கும் குளிர்சாதனம் செய்து தந்தது.

90களில் இருந்த ரயில் பெட்டிகளை விட புதிய இரண்டாம்வகுப்பு பெட்டிகளில் மினரல்வாட்டல் ஹோல்டர், யுடிலிடி நெட், முகம் பார்க்கும் கண்ணாடி என்று கூடுதல் கொஞ்சம் வசதி செய்து தந்திருக்கிறார்கள். மிக முக்கியமாக அனைத்து பெட்டிகளையும் கரப்பு-பூச்சித்தொல்லையிலிருந்து பெஸ்ட் கண்ட்ரோல் சிலமாதங்களுக்கு ஒரு முறை செய்வது தரும் பலனைக் கொஞ்சம் உணரமுடிகிறது.

இடார்சி தாண்டி விந்திய மலைக்குடைவுகள் வாயிலாக பயணிக்கிறபோது சட்டென்று இருட்டி வெளிச்சம் மீண்டு வருவது மும்பை தடத்தில் லோனாவாலா-புனே ரயில்வே டன்னல்களை நினைவூட்டுகிறது. அப்பர் பர்த்தில் பகலில் ஏறிப் படுத்துக்கொண்டு சடசடசட என்று பாலங்களில் இசை எழுப்பிய படி ரயில் செல்வதை ரசித்தபடி பயணிப்பது அந்த ரயில் அனுபவத்தை நினைவுகளில் பதியவைக்கிறது.

இந்திய ரயில்வேயின் எலக்டிரிக் டிராக்ஷன் (மின்மயமான தடங்கள்) பிரமிப்பு இன்னும் இருக்கிறது. விமானம் தவிர்த்த இந்திய பொது மக்கள் போக்குவரத்தில் சகாயமான விலையில் 125 கிமீ வேகத்தில் தொடர்ந்து செல்ல முடிவது சூப்பர் பாஸ்ட் ரயில்களால் தான்.
புதுடில்லியிலிருந்து சென்னைக்கான 2200 கிமீ தூரத்தை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 9 ஊர்களில் மட்டும் நின்று செல்கிறது.

இந்திய ரயில்வேயின் மிக முக்கியமான ஒரே பெரிய குறை ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லட். மக்களுடன் நேரடியான தொடர்பு இருக்கும் இந்திய அரசுத்துறைகளில் சிறப்பான நிர்வாகத்திறன் இருப்பது முதலிடம் தபால் துறைக்கு இரண்டாவது இடம் ரயில்வே என்பது எனது எண்ணம்.


அன்புடன்,


ஹரிஹரன்

Monday, October 22, 2007

(180) பெஸ்ட் ஆஃப் இந்தியா & பெஸ்ட் ஆஃப் ஐரோப்பா

இமயமலையின் க்ளாசியர் பனிக்கட்டி உருகி கங்கையாக ப்ரவாகமெடுத்து மலையினின்று இறங்கி வெகு வேகத்துடன் பூமியைத் தொடும் இடம் ரிஷிகேஷ்.

ரிஷிகேஷில் இங்கே கங்கை நீர் கலங்கலாக மணல்துகள்களுடனும், கொளுத்தும் 45டிகிரி சம்மர் வெய்யிலிலும் ஆற்றுநீரில் ஐந்து நிமிடம் அமிழ்ந்திருந்தால் உடல் மரத்துப்போகும் குளிர்ச்சியோடு இருக்கிறது. ரிஷிகேஷில் குளித்தால் கண்,மூக்கு, காது எல்லாம் நுண்மையான மண்துகள் மயமாகிவிடும்!

ரிஷிகேஷிலிருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் பூமியில் ஓடி வந்து ஹரித்வாரில் கங்கை நீரில் மணல் துகள் நிறையவே மட்டுப்பட்டு விடுகிறது. கங்கையின் ஆர்ப்பரிக்கும் வேகம் படித்துறையிலேயே தெரியும். பாதுகாப்புக்கு இருக்கும் இரும்புச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு குளித்தல் அவசியம். படித்துறையில் அமர்ந்து கொண்டு ஆற்றின் ஓட்டத்துக்கு குறுக்காக காலை நீட்டினால் காலை ஒடித்துவிடும் வேகத்துடன் ஓடுகிறாள் கங்கை!

டெல்லி வெய்யிலில் அலைந்த சூடு தணிக்கும் படுகுளிர்ச்சியான கங்கைக்குளியல். எண்பதுகளில் பள்ளி கல்லூரியில் படிக்கும் போது கோடை விடுமுறை நாட்களில் வைகையாற்றில் குளித்ததை அடுத்து நான் அதிகமாகக் குளித்தது கங்கையில் தான் (1991, 2007) (ரெண்டு தரத்துக்கே இவ்வளவு பில்டப்பான்னு டென்ஷனாகாதீங்க)

ஹரித்வாரில் கங்கை நீரை பாட்டிலில் பிடித்தால் வேகம் காரணமாக turbidity கலங்கல் அதிகமாக இருக்கிறது. சிலமணி நேரம் கழித்து Crystal clear ஆகிவிடுகிறது மிகச் சொற்பமான வெண்ணிற Sand Residues பாட்டிலின் அடியில்.

குறுகலான வாயுடைய பெட் பாட்டிலில் புரண்டோடும் அதிவேக கங்கையில் பாட்டிலை நீரோடு விட்டுவிடாமல் நீரை ரொப்புவது என்பது தனி அட்வஞ்சர்!

இமயத்திலிருந்து நதியாக உருவாகி வங்காள விரிகுடா கடலில் கலக்கும் வரை கங்கைநதியின் நீளம் 2510 கிமீ. கங்கை நதி உத்ராகண்ட், உத்ரபிரதேஷ், பீஹார், மேற்கு வங்காளம், வங்க தேசம் எனப் பாய்ந்தோடி வளப்படுத்தி கடலில் கலக்கிறது.


ஐரோப்பாவில் டான்பெ Daunbe நதி ஜெர்மனியில் கருங்காடுகளில் உருவாகி மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா முழுவதும் பாய்ந்தோடி நிலத்தால் சூழப்பட்ட கருங்கடலில் கலக்கிறது.

Germany ,Austria, Slovakia, Hungary, Croatia, Serbia, Bulgaria, Romania, and Ukraine என்று 9 தேசங்கள் வழியாக 2850 கிமீ தூரம் பயணிக்கிறது டான்பெ நதி.

இயற்கையை, நதியை தெய்வமாக வழிபடும் சனாதன கலாச்சாரம் நிரம்பியிருந்த பாரதத்தில் ஓடும் கங்கையை காசியில் பாதி எரிந்த பிணங்கள் மிதக்கும் காட்சியாகக் கண்டால் பாரம்பரிய கலாச்சார-தத்துவ பிணைப்பு சிதைந்து போனால், சுயநல சூப்பர்ஸ்டிஷன் மட்டும் நிரம்பிய தினசரி வாழ்வியல் பேணும் மூடர் கூட்டமாக நம்மக்கள் வாழ்வது தெரிகிறது.

ஐரோப்பாவில் நதிகளைப் பேணுகிறார்கள். அனைத்து ஐரோப்பிய பெருநகர்களூடாக நதிகள் ஓடுகின்றன. ஐரோப்பாவில் நதிகளை சாலை, ரயில் போக்குவரத்துக்கு இணையாக முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள்.

கங்கையாவது ஆன்மீகத் தலைநகரமான வாரணாசி நகருக்குள்ளே சுயநல மூடநம்பிக்கையாளர்களால் சில பல கிலோமீட்டர்களுக்கு மாசுபடுத்தப்பட்ட நதியாக இருக்கிறது.

தமிழகத் தலைநகரில் மூட நம்பிக்கைகளை உடைத்த பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் சென்னை நகருக்குள்ளே ஒடுகின்ற கூவம் நதி, அடையாறு நதிகளின் பவித்ரமான தூய நிலையை நினைத்துக்கொண்டேன்!

நதியை தெய்வம் என்று தொழுதவர்களே தமிழர்கள். தெய்வமே இல்லை எனும் கொள்கையுடையோர் ஆட்சிக்கு வந்து 40 ஆண்டுகள் கோலோச்சி தலைநகர் சென்னையின் நதிகளில் இருந்த தெய்வத்தை வெற்றிகரமாக விரட்டிவிட்டார்கள்!

பகுத்தறிவான செயல்பாடுகளால் இன்றைக்கு தமிழ்நாட்டின் எந்த நதிகளிலும் நீர் ஓடினால் அது செய்தி எனும் நிலை! தெய்வம் நீங்கிய ஆட்சிகளால் தமிழகத்து நகரங்களில் ஓடும் நதிகளில் அரசியல் திரா"விட" பகுத்தறிவு மட்டும் நிரம்பி ஓடி பெரிதாய் மணக்கிறது!

எங்காவது ஒரு பெரிய நகருக்குள் நல்ல நீர் நிரம்பி ஓடும் நதிகளைக் காணும்போதெல்லாம் இந்த ஆதங்கம் பெரிதாக எனக்குள் வரும். சென்னையில் வாழும் தமிழனாயிருப்பதில் ஒரு வசதி எனக்கு! வெட்கப்படுவது என்பது மறந்துவிட்டது!

அடுத்த தலைமுறைக்கு நதிகள் மாதிரியான இயற்கைச் செல்வங்களை எப்படி விட்டுச்செல்வது என்பதை ஐரோப்பாவின் டான்பெ நதியைப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

தமிழன் என்ற இன உணர்வுடன், பகுத்தறிவோடு சிந்தித்து திட்டம் தீட்டி தமிழகத் தலைநகர் சென்னையில் இருந்து ஆட்சி நடத்தும் திரா"விட" கட்சியினரது வாழ்நாள் சாதனைகளான கூவம் ஆறு, அடையாறு இவற்றின் நிலையினைப் பார்த்து அடுத்த தலைமுறையினர்க்கு இயற்கைச்செல்வங்களை எப்படியான நிலையில் விட்டுச்செல்லக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

அன்புடன்

ஹரிஹரன்

Sunday, October 21, 2007

(179) தமிழின முப்பாட்டன் இராவணன்..அருணகிரிநாதர் எனும் ஆரிய அடிவருடி!!

தமிழின வரலாறு வலைப்பூ வழியா கத்துக்கிட்டா எங்க ரீச்சாவீங்க? பதில் பதிவின் கீழே!

இட்லிவடையின் இந்தப்பதிவில் படித்த தொல்.திருமாவளவன் தந்த புல்லரிக்கும் வரலாற்று விளக்கம் இது:


"ராமன் என்பவன் யார்? ராவணனை அழிக்க இலங்கைக்கு, குரங்குகளின் துணையோடு படையெடுத்து சென்றவன். ராவணன் யார் ? நம்முடைய முப்பாட்டன். தமிழன், தமிழ்ச்சங்கம் வளர்த்து தமிழை வளர்த்தவன். ஒரு தமிழனை அழிப்பதற்காக வட மாநிலத்தில் இருந்து படையெடுத்துச் சென்ற ராமன், அதற்காக கட்டிய பாலம் ராமர் பாலம் என்றால், நம்முடைய விரோதி கட்டிய ராமர் பாலம் என்று ஒன்று இருந்தால், அதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கவும் தயார்" - விடுதலைசிறுத்தை திருமாவளவன்


இன்றைய எனது இணைய மேய்ச்சலை நீட்டி இன்னொரு சக பதிவர் பதிவிலே போனால் அவர் படித்து மகிழ்ந்த அருணகிரியார் பாடலுக்கு தந்த விளக்கத்தைப் படிக்கையிலே, அருணகிரி எப்படிப்பட்ட பச்சையான ஆரிய அடிவருடி என்பதை தமிழின துரோகியான அருணகிரியின் இந்தப்பாடல் விளக்கிவிட்டது.

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

கொத்தப்பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!


தமிழ்ச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த, தமிழின முப்பாட்டனான இராவணனின் பத்துத் தலைகளையும் வெட்டிச்சாய்த்தவன் முருகப்பெருமான்னு எழுதியிருக்கும் அருணகிரி மட்டும் இன்னிக்கு இருந்திருந்தா சிறுத்தையா பாய்ஞ்சு அவரோட அருணாக்கொடியைப் பிடித்து தலையைச் சுத்தி வீசுவதில் தமிழின எதிரி அருணகிரி தமிழின முப்பாட்டன் இராவணனின் தேசத்தில் போய் விழவேண்டியிருக்கும்!


முத்தமிழுக்கும் முதல்வன் முருகப்பெருமான். முருகன் அக்மார்க்/ISO தரம் பெற்ற ஒரிஜினல் தமிழ்க்கடவுள். ஆகவே முருகப் பெருமான் தமிழின முப்பாட்டன் இராவணனின் பத்து தலைகளைத் தன் கூரிய வேலால் எப்படிக் கொய்திருக்க முடியும்???


அருணகிரிதான் அந்தக்காலத்திலே ஓ போட்ட ஆ.வி.ஞானி ! தமிழின் மீது பற்று இருப்பது மாதிரி தமிழின முப்பாட்டன் இராவணனது பத்துத் தலைகளை தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வைத்தே வேலால் கொய்ய வைத்து மகிழ்ந்திருப்பதைப் பார்த்தாலே லெமூரியாக் கண்டம் மூழ்கி தமிழினம் பிரிந்த வரலாறு புரிபடும்!

இப்படிப்பட்ட தமிழின துரோகியான ஆரிய அடிவருடி அருணகிரிநாதர் திருஅண்ணாமலையின் உச்சியிலிருந்து குதித்தபோது தமிழ்க்கடவுள் முருகன் தோன்றி அவரைக் காத்தது மட்டுமின்றி அருணகிரியின் நாக்க்கில் முத்தமிழின் அப்டேட்டட் வெர்ஷனை கூர்வேலால் என்க்ரிப்ட் செய்தும் விட்டார் என்று புரட்டையும் பரப்பியவர் அருணகிரிநாதர்!


ஆதியிலிருந்தே தமிழனுக்கு நகைச்சுவை அதிகம்! இணையத்தில் இறைந்து கிடக்கிறது தமிழினமான நகைச்சுவைகள்! சிறுத்தை மாதிரி பாய்ந்து தாக்குகிறது சிறப்பான நகைச்சுவை.

குவிஸ் பதில்: தமிழின அரசியல் வாதியின் வரலாற்று விளக்கம் மூலமாக, மேற்கொண்டு இணையத்தில் தமிழ்வலைப்பூ வாயிலாக வரலாற்றைப் படித்தால் நீங்கள் ரீச்சாகும் இடம் சென்னையின் கீழ்ப்பாக்கம், வேலூரின் பாகாயம்!


அன்புடன்

ஹரிஹரன்

Wednesday, October 03, 2007

(178) ஹேப்பி பர்த் டே காந்திஜி!

பாரதத்தின் சுதந்திரப்போராட்டம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் காந்திஜி.

காந்திஜியின் சுதந்திரப்போராட்டங்கள் என்றதும் நினைவுக்கு வருவது உப்புச் சத்தியாகிரகப் போராட்டம்.


இங்கிலாந்தில் இருந்து பாரதம் வரும் கப்பல்களில், சீரான கடல்பயணத்திறக்காக கப்பலின் சீரான எடை நிரவலுக்காக உப்பு மூட்டைகள் கப்பல்களின் அடித்தளத்தில் நிரப்பிக்கொண்டு பாரதம் நோக்கிப் பயணிக்கும்.

இந்தக் கப்பல்கள் இங்கிலாந்துக்கு திரும்பச் செல்லும் போது பாரதத்தின் எண்ணற்ற வளங்களைக் கொள்ளையடித்து மூட்டை கட்டி எடுத்துச் செல்லும்.

இங்கிலாந்தில் இருந்து வந்த கப்பல்களின் மூலம் இப்படி நிறையச் சேர்ந்துவிட்ட உப்பை
என்ன செய்வது என்று யோசித்த ஆங்கிலேய அரசு, பாரதமக்கள் இங்கிலாந்து உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உள்நாட்டு உப்புக்கு வரிபோட்டு உத்தரவு போட்டது.
இதனால் இங்கிலாந்து உப்பு உள்நாட்டு உப்பை விட மலிவான விலைக்கு கிடைக்கும் சூழலை ஏற்படுத்தியது இங்கிலாந்து அரசு.


மூன்று பக்கம் கடல் சூழ்ந்த பரந்து பட்ட பிரிக்கப்படாத பாரத நாட்டில், பாரத மக்கள் ஏன் வெளிநாட்டு உப்பை தங்கள் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் உள்நாடு உப்பு மீது விதிக்கப்பட்ட வரியை நீக்கவேண்டும் என்று காந்தியடிகள் எதிரிப்புத் தெரிவித்தார்.

எதிர்ப்பு தெரிவிப்பதோடு இல்லாமல் ஆங்கிலேய அரசின் உத்தரவைத மீறி, உப்புச் சத்தியாகிரஹம் எனும் சுதேசி உப்புக் காய்ச்சும் போராட்டத்தை காந்தியடிகள் அறிவித்தார்.

ஆங்கில அரசு உப்புப் பெறாத இன்னுமொரு முட்டாள் போராட்டத்தை காந்தியடிகள் முன்னெடுப்பதாக அசட்டையாக நினைத்தது.

12 மார்ச் முதல் 06 ஏப்ரல் வரை 1930 ஆண்டில் காந்திஅடிகள் உப்புக்காய்ச்சும் போராட்ட யாத்திரையை 400 கி.மீ தூரம் நடந்து மேற்கொண்டு தண்டி கடற்கரையில் நடத்தினார். தமிழகத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்புக் காய்ச்சும் போராட்டம் நடந்தது.



தண்டி கடற்கரையில் உப்புக் காய்ச்சும் காந்தியடிகள்

ஆனால் பாரதம் முழுவதும் மக்கள் முழுமையாக இணைந்து போராடும் போராட்டமாக உப்புச்சத்தியாகிரகம் உருவெடுத்தது. பிரிக்கப்படாத பாரதத்தின் முப்புறமும் நிறைந்த பரந்துபட்ட கடற்கரைகள் அனைத்திலும் பாரத மக்கள் கூடிச் சேர்ந்து ஆங்கிலேயர்களின் அரசுக்கு தமது கடுமையான எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவிக்க ஏதுவான எளிமையான போராட்டமாக உப்புச்சத்தியாகிரகப்போராட்டம் வலுப்பெற்றது.

ஆங்கிலேய அரசு மக்கள் மீது மிகவும் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது.
காந்தியடிகள் பாரத மக்களிடையே நடைமுறைப்படுத்திய ஒத்துழையாமை போராட்டத்தில் வெகுஜன மக்கள் திரளாகப் பங்கேற்ற நிகழ்வுகளில் முக்கியமானது உப்புச்சத்தியாகிரகப் போராட்டம்.

கடல்நீரை எடுத்துவந்து கடற்கரையில் ஊற்றுவது என்பது தான் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டம். மிக எளிதான போராட்டம். ஆனால் மக்களின் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் போராட்ட மன உறுதியை பன்மடங்கு ஏற்றிய போராட்டம்.

முதல் நபர் கடல் நீரை எடுத்து வந்து கடற்கரையில் ஊற்றுவார். ஆங்கிலேயபோலீஸ் சட்டத்தை மீறியதற்காக அந்த நபரை தடியால் அடித்து மண்டையை உடைத்து தண்டிக்கும்.

அடுத்ததாகப் போராட்டம் செய்ய வேண்டிய ஆள் (பொதுஜனம்) முதலில் போராட்டம் செய்து வெள்ளைக்காரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடியால் அடிபட்ட நபருக்கு முதலுதவி செய்து விட்டு, அடுத்து தனக்கு இதே நிலை தான் என்பதை அறிந்த, தெரிந்துகொண்ட நிலையில் கொள்கைப் பிடிப்போடு கடல் நீரை எடுத்துவந்து கடற்கரையில் ஊற்றிய படிக்கு உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இப்படி பாரத தேசமெங்கும் அமைதியாக கொள்கையுடன் உப்புக்காகப் போராடும் பல லட்சம் பேரை வெள்ளைக்கார போலீஸ் அடித்து துன்புறுத்தினாலும் இறுதியாக தோல்வி கண்டது.

பல்வேறு சூழல் நிலையில் இருந்த பொது மக்களை கொள்கையால் ஒருங்கிணைத்துச் செல்லும் திறன் அஹிம்சைப் போராட்டத்திற்கு மட்டுமே உண்டு என்று உலகிற்கு உணர்த்தியவர் காந்தியடிகள்.


மதுரை வந்த காந்தி அப்பகுதி மக்கள் வறுமை நிலை கண்டு வருந்தி அவர்கள் நிலை மேம்படும் வரையில் தனக்கு ஆடம்பர உடை தேவையில்லை என்று சொல்லி தனது எஞ்சிய வாழ்நாள் முழுதும் நாலுமுழ வேட்டியே அணிந்தார்.



அரைவேட்டி உடையுடன் இங்கிலாந்து பிரதமர் வீட்டின் முன் காந்தியடிகள்


Ireland, Kosovo, Serbia, Srilanka, Malaysia, மத்திய கிழக்கு என்று பல தேசங்களில் அதன் தலைவர்கள் மதம் கொண்டு மக்களை (தரம்)பிரிக்கையில், பாரதத்தை மதம் கொண்டு முகம்மது அலி ஜின்னாவும், ஆங்கிலேயரும் பிரித்த பின்னரும், மதத்தின் காரணமாக இந்தியாவை விட்டுச் செல்லவேண்டியதில்லை... தொடர்ந்து வசிக்கலாம் என்று இந்தியாவின் பெரும்பான்மை மதத்தினரை மத உணர்வுரீதியாக பெருந்தன்மையாக, சகிப்புத்தன்மையை முன்னெடுக்கவைத்த உண்மையான மக்கள்தலைவர் காந்தியடிகள்.

காந்தியடிகளின் கொள்கைகளால்தான் இன்றைக்கும் பாரத தேசத்தின் வெகுஜன மக்கள் ரசிக்கும் விளையாட்டான கிரிக்கெட்டில் பிற மதத்து அசாருதீன்கள் தலைமையேற்கவும், இர்பான் பதான், ஜாஹீர், முகம்மது கைப்-கள் தொடர்ச்சியாக விளையாடவும், அகம்மதி போன்றோர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, முகம்மது ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதியாக வலம் வர முடிகிறது.

காந்தியடிகளும் (முகம்மது அலி ஜின்னா போன்று) மத ரீதியாக இசுலாமிய மக்கள் பாகிஸ்தான் போயே ஆகவேண்டும் என்று நிலைப்பாடு எடுத்திருந்தால், இன்று இந்தியர்களாக (ஜஹாங்கீர்) ரத்தன் டாட்டா, அப்துல்கலாம், அஜிம் பிரேம்ஜி போன்றோர் நம்மிடையே இருந்திருக்க முடியாது போயிருக்கும். இவர்கள் தத்தம் திறமையால் வெற்றி அடைய அவர்கள் திறமையை மதம் தவிர்த்த மனதால் ஏற்றுக்கொள்ளும்படியான All inclusive Pluralistic சமூகமாக பாரத சமூகம் தொடர முக்கியமான சமயத்தில் தருமமான முடிவை 1947ல் எடுத்த உன்னதமான தலைவர் காந்தியடிகள்.

பாரதத்தின் சனாதன தருமம் என்பது அனைத்தையும் உள்ளடக்கிக்கொள்ளும் all inclusive தன்மை உடையது. காந்தி பாரதப்பிரிவினையின் போது Hindu Exclusive தேசமாக இந்தியா உருவாவதை எதிர்க்கவைத்தது சனாதன தரும all inclusive பாரதப் பாரம்பரிய சித்தாந்தமே.

பாரதத்தின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயரால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு, சாக்குச் சணலில் கைதி உடை அணிந்து உடல் முழுதும் அரிப்பெடுத்து சொறிந்து சொறிந்து உடல் புண்ணாகி சீழ்பிடித்து சிதைந்து மடிந்த பல்வேறு முகம் தெரியாத பாரத சுதந்திரபோராட்ட வீரர்களை காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று நினைத்துக் கொள்கிறேன்.

வெளிஉலக சுதந்திரம் கிடைக்கும் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் டீன் ஏஜ் மாணவனுக்கு முதல் எதிரியாக எள்ளலுக்கு உள்ளாவது அவனது சொந்தத் தந்தைதான்.
இத்தனைக்கும் மகன் கல்லூரிப்படிப்பும் விடுதி வாழ்க்கை என வெளிஉலகில் சுதந்திரமான சூழலில் இருந்து அனுபவம் பெற அடிநாதமாய் இருப்பது தந்தைதான்.

இன்றைய சுதந்திரமான சூழலில், படித்த பாரத தேச இளைஞர்கள் நமது தேசத்தந்தையான காந்தியடிகளை இப்படித்தான் தங்கள் இஷ்டத்துக்குப் பேசுவது என்று ஏகமாக எள்ளி நகையாடுகிறார்கள்.

இருபது ஆண்டுகள் முன்பாக தந்தையின் காசில் விடுதியில் தங்கிப் படித்த கல்லூரி மாணவன் தான் நான். சொந்த அப்பனையே எந்தப் புரிதலும் இல்லாமல், விடுதியிலும் நேரிலுமாக அப்போது நையாண்டிகள் பல செய்தவன் தான் நான்.

காந்திக்கு இருந்த சமூக அக்கறையில் புள்ளி அளவுக்கு இல்லாமலே அவர் செயல்களை ஒப்புக்கொள்ளாது விமர்சித்தவன் தான் நான்.

இன்று என் தந்தை எனது வெளிஉலக, பொருளாதார சுதந்திரம் பெற்றுத் தந்த கல்விக்காகச் செய்த தியாகமும், உழைப்பும், ரத்தத்தை வியர்வையாகச் சிந்திய அருமையை உணர்கிறேன்.

அதே மாதிரியே நமது தேசத்தந்தை காந்தியடிகளின் அருமையை உணர / விமர்சிக்க எவருக்கும் உண்மையில் ஒரு அருகதை வேண்டும் என உணர்கிறேன்.


ஹாப்பி பர்த் டே காந்திஜி!

Let us think of Reflecting some of the Gandhian values in our day to day life.

அன்புடன்,


ஹரிஹரன்

Thursday, September 27, 2007

(177) பெண்ணடிமைத்தனம் made easy to understand

பெண்ணடிமைத்தனம்னு முழங்கி மேம்பட்ட-பெரியாளாகும் பகுத்தறிவு முயற்சி இல்லை இப்பதிவு.

குடும்பத்து மேம்களிடம் டன் கணக்கில் பட்ட அறிவுடன், ஆண்வர்க்கத்தை அவர்கள் வீட்டுக்குள்ளேயே கும்மு கும்முன்னு கும்மி எடுக்கும் பெண்களை, ஆணீய பித்தளைகள் எல்லாம் பெண்ணடிமைத்தனம் செய்தனர் எனும் பரவலான புரட்டை புட்டுவைக்கும் எனது சின்னஞ் சிறு முயற்சி.

உண்மையில் தன்னடிமைத்தனமான பெண்ணடிமைத்தனத்தை made easy to understand விதமாக இப்பதிவு.

அம்மாவாய் சில பல மாதங்கள் முயற்சித்து, தானே முன் நின்று அலசி,தேடித் தெரிவு செய்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக்கி திருமணம் செய்வித்த மகனின் வாழ்க்கையில் திருமணமான சில நாட்களில்(வாரங்களில், மாதங்களில், வருடங்களில்)அதே அம்மா சொல்வது:

மகனே நீ உம் பொண்டாட்டி நட்டுவாங்கத்துக்கு இப்படி ஆட்டமா ஆடுவேன்னு நான் கனவுலேயும் நினைக்கலைடா... (ஆண்)மகனுக்கு ஜென்மச்சனி உச்சத்துக்கு பெயர்கிறது.

இதுக்காடா உன்னை பெத்து வளர்த்து படிக்கவச்சு நானும் உன் அப்பாவும் ஆளாக்கினது? (அப்பாவின் விருப்பம் இல்லாமலே இந்த அம்மா-மருமகள் எனும் இரு பெண்கள் மேட்டரில் அவரும் அய்யோ பாவத்துக்கு உள்ளுக்கு இழுக்கப்படுகிறார்)

அம்மாவுக்கு என்ன ஆச்சு காலங்காத்தால? என்னைத் தாளிக்கிறா? என்று குழம்பிய படியே மகன் தன் அறைக்குள் சென்றால்... அங்கே இன்ஸ்டண்ட் கண்ணீருடன் மனைவி... உங்கம்மா என்னைத்தானே சொன்னாங்க? நீங்க கேட்டுட்டு ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க? ரெண்டு குழந்தைக்கு அப்பா ஆகியாச்சு இன்னும் அம்மாக்கோண்டுவாக அம்மா முந்தானையைப் பிடிச்சுட்டே நடப்பீங்க்களா? என்னை "யார்" என்ன சொன்னாலும் பரவாயில்லையா?

குளிக்க அவசியமில்லாமல் மனைவியின் அங்கலாய்ப்பு அருவியில் குளித்து வரும் (ஆண்)மகன் ஹாலில் அப்பா பேப்பருக்குள் வசதியாக தன்னை மூழ்கடித்துக்கொண்டதில் ஏதோ ஒரு சாமர்த்தியம் இருப்பதை மெல்ல உணர்கிறார்.

இப்படி விடுமுறை தினத்தில் அம்மா, மனைவின்னு ரெண்டு பேரும் எப்படா விடியும்னு காத்திருந்தது இப்படி தன் தலையில் வந்துதான் விடியணுமா?ன்னு க்ராஸ்பய்யரில் மாட்டிக்கொண்டுவிட்ட தன் அவலநிலையை (ஆண்)மகன் நொந்துகொண்டு இருக்கும் போதே தனது மகள் வந்து அன்றைய நாளேட்டில் வந்த க்ராஸ்வேர்டு-குறுக்கெழுத்துப் புதிருக்கு வகபுலரியில் உதவ வேண்டியதை ஏற்காமல் மறுத்த மறுவிநாடி அந்தச் சின்னப்பெண்ணோ, அவள் அம்மாவாகிய தன் மனைவி தந்த பாலபாடம் முன்னெடுத்துச்செல்ல" போ..அப்பா... உங்களுக்கு எதுவுமே தெரியாது" என்ற சர்டிபிகேட் தந்து மும்முனைத்தாக்குதலில் (ஆண்) மகனை ஆழ்த்திடுகிறாள்.

சோபாவில் பேப்பர் கொஞ்சம் கீழிறங்கி மறைந்திருந்த அப்பாவின் முகம் கண்கள் அளவுக்குத் தெரிய அந்தக் கண்களில் அதீத அனுதாபம் தென்படுவதாக உணர்கிறார் (ஆண்)மகன்.


மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அம்மா தனியாக இருக்கும் நேரத்தில் மனைவியின் மாமியாராகிய தனது அம்மாவிடம் கட்டாயமாகத் தெரிவித்துவிடும்படி (எச்சரித்து)சொல்லிய கருத்தை தூதுவராக அம்மாவிடம் திக்கித் திணறித் தெரிவித்து முடிக்குமுன்பே... "மகனே உனக்கு இப்படி தலையணைமந்திரம் போட்டு வச்சிருக்காளேடா உம்பொண்டாட்டி... நீயும் அவ போட்ட மந்திரத்துக்கு சாமிவந்த மாதிரி ஆடுறியேடா"-ன்னு அம்மா சாமியாடி முடிக்க...

தன் அறைக்குள்ளே போனால் "மீண்டும் அம்மாக்கோண்டு... உங்களுக்கு எதுவும் தெரியாது" எனும் பட்டம் 1008வது முறையாக தன் குழந்தைகள் முன்னிலையில் தரப்படுவதை நினைத்து மீண்டும் செல்ல பயப்பட்ட நிலையில் தவிக்கும் (ஆண்)மகனை நோக்கி அம்மாவீட்டுக்கு வந்திறங்கிய, அம்மாவின் அணி நிரந்தர சப்போர்ட்டரான தன் சகோதரி
அண்ணா /டேய் தம்பி... நீ கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டன்னு கண்களின் ஷட்டரைத் திறந்து 1-டிஎம்சி இன்ஸ்டண்ட் கண்ணீரை வெளியேற்ற...

அங்கே வந்த அம்மாவோ... சபாஷ் ..வந்தும் வராததுமா கூடப்பிறந்தவளைக் கண்கலங்க வைச்சுட்டயேடான்னு அடுத்த எபிசோடை ஆரம்பிக்க... கிச்சனில் பலமான பல பாத்திரச் சத்தங்கள் செய்தபடியே மனைவி வேலை செய்வதில்- ஈராக்கில் அமெரிக்கா+பிரிட்டிஷ் கண்டுபிடிக்காத WMDயை தான் கண்டுபிடித்துவிட்டதாக மனசுக்குள்ளே உணர்ந்தாலும் ... முந்நாள் ஹீரோவான (ஆண்)மகன் தன் நிலையை WMD விழுந்த ஹிரோஷிமாவாக்கிக் கொள்ள விரும்பாமல் 1500வது முறையாக அடங்கிப்போய் நழுவ...

அப்பா தன்னுடைய எழுபதுவயதில் ஏன் காய்கறி மார்க்கெட்டுக்கு கறிகாய் வாங்க ஒரு நடை, பச்சைமிளகாய்க்கு ஒரு நடை, கறிவேப்பிலைக்கு ஒரு நடை, கீரைவாங்கன்னு ஒரு நடைன்னு லூசுமாதிரி இருக்கிறார் என்பதில் இருக்கும் சூட்சுமம் புரிகிறது. After all it is necessary to get fresh air very often - which is directly to the proportion of number of பெண்மணிகள்(வயது வித்தியாசம் இல்லாமல்) in the home)

இப்போ பெண்ணடிமைத்தனம் அப்டீன்னா என்னன்னு பார்க்கலாம்.

அடிமைத்தனம் அப்டீன்னா என்னங்க?

நம்ம விருப்பத்திற்கு, சொல்லுகிற சொல்லுக்கு வரவேற்பு, மரியாதை இருக்காத நிலையை அடிமைத்தனம்னு சொல்லலாம்.

அம்மா எனும் தானே தேடி,அலசி ஆராய்ஞ்சு, விசாரிச்சு, தேர்ந்தெடுத்துத் தந்த வாழ்க்கைத் துணைவி என்று இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைத்துவிட்டு... பழியை எல்லாம் மகன் மேலே சுமத்துவது... பொண்டாட்டியோட நட்டுவாங்கத்துக்கு ஆடுறவன்...தலையணை மந்திரத்துக்கு மயங்கினவன்ன்னு பழிக்கவேண்டியது,

மனைவி எனும் பெண் கல்யாணமானவுடனே கணவனை அவனது தாயாரிடம் இருந்து கத்தரிக்க ஆனதைச் செய்யவேண்டியது... அம்மாக்கோண்டு என்பது.... அலுவலகத்தில் திறமையான மேலாளராக இருந்தாலும் ...உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...ஒரு மண்ணும் தெரியாதுன்னு கும்ம வேண்டியது...

சகோதரி எனும் பெண் "கல்யாணத்துக்கு அப்புறமா நீ ரொம்ம மாறிட்ட"ன்னு பத்திரம் தரவேண்டியது... கல்யாணமானா.. எப்படி அப்படியே இருப்பது... கணவனாக..குழந்தைகளுக்கு அப்பாவாக என்று முன்னில்லாத கூடுதல் கடமைகள் என பல மாற்றங்கள் வந்துவிட்ட வாழ்க்கை... இதில் எப்படி அப்படியே இருந்து தொடர்வது?

ஒரு ஆணின் வாழ்க்கையில் அம்மா-மனைவி-சகோதரி எனும் பெண்கள் கூட்டணி இப்படி முன்னே போனால் கடிப்பதாக... பின்னே வந்தால் உதைப்பதாக இருந்து அவர்களாக அவர்களை ஆட்டுவித்துக்கொண்டுவிட்டு அய்யோ பெண்ணடிமைத்தனம் என்றால்... அது தன்னடிமைத்தனம்.

தலைமுறை தலைமுறையாக இவ்வளவுக்கு முன்னுக்குப்பின் முரண்படும் அம்மா-மனைவி-சகோதரி எனும் பெண்களது நச்சரிப்புப் பேச்சை ஆண்கள் நாள்போக்கில் சீரியஸாக மதிப்பும் மரியாதையும் தந்து வரவேற்று எடுப்பது குறைவதும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.

குரல் கொடுப்பது என்றால் உண்மையில் பாதிக்கப்பட்ட கல்யாணமாகி, அம்மா-மனைவி-சகோதரியாகிய இப்பெண்களிடம் தினசரி"எமோஷனல் ப்ளாக்மெயில்", எமோஷனல் பிக்பாக்கெட் நிகழ்வுகளில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் அபலை(ஆண்)மகன்களுக்குக் குரல் தருவதே நியாயம்!

இன்னொருதரம் பெண்ணடிமைத்தனம்னு சொல்லுமுன் யோசிங்க ... திருத்திச்சொல்லுங்க.. அது தன்னடிமைத்தனம் என்று!

அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, September 20, 2007

(176) ராமர்பால கட்டுமானப் பணியில் ராமபிரான்

ராம பிரான் சமுத்திரத்தைக் கடந்து லங்கா செல்வதற்கான (ராமர்)பாலம் ஹனுமானின் தீவிர மேற்பார்வையில் வானர சேனைகள் வெகு வேகமாகக் கட்டிக் கொண்டிருக்கின்றன.

வானர சேனைகள் ராம நாமம் எழுதி கடலில் எறியும் பாறைகள் மூழ்காமல் மிதந்து பாலம் அமைக்க அதன் மேல் முன்னேறியபடியே பாலம் கட்டுவது விரைவாக நடக்கிறது.

ராமபிரானும் நேரடியாகக் களத்தில் இறங்கி பாலக்கட்டுமானத்தில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். ஒரு பாறையைத் ராமபிரான் தன் கைகளால் தூக்கி கடலில் எறிய உடனே அது கடல் நீரில் மூழ்குகிறது.

ராம பிரான் யோசித்தபடியே "அனைத்து வானரசேனைகள் கடலிலே எறியும் பாறைகள் மிதக்கிறது, ஆனால் தான் எறிந்த பாறை மூழ்கிவிட்டதே" என்று குழப்பத்துடனும் யாரும் தான் செய்ததைப் பார்த்துவிட்டார்களா எனும் மெல்லிய வெட்க உணர்வுடன் சுற்று முற்றும் பார்க்கிறார் ராமபிரான்.

மானுட உணர்வுகளுடன் தான் இறை அம்சமானவன் என்பதை ஒருபோதும் வெளிப்படுத்திக்கொள்ளாது மானுடனாகவே வாழ்ந்தவன் ராமபெருமான்!

ஹனுமான் ராமபிரான் செய்ததைப் பார்த்தபடியே ராமபிரானின் அருகே வருகிறார்.

அருகே வந்த ஹனுமானிடம் தான் எறிந்த பாறை மட்டும் உடனே கடலில் மூழ்கியதை விவரிக்கிறார் ராமபிரான்.

ஹனுமான் ராமபிரானிடம் சொல்கிறார். "ராமபிரானே பாறைக்கல்லே ஆயினும் அதை நீ கைவிட்டு விட்டால் அது உடனடியாக மூழ்கித்தானே ஆக வேண்டும்" என்று.

Sriராம ஜெயராம ஜெய ஜெய ராம! என்று சொல்லியே ராமபிரானின் அருளைப் பெற்று பேரானந்தத்துடன் வாழ்வோமாக!


அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, September 18, 2007

(175) தந்தையை விபத்தில் இழந்த MCA படிக்கும் கிராமத்து தமிழ்ப்பெண்ணுக்கு Project workக்கு உதவி தேவை

இணையத்து தமிழ் நண்பர்களே! வணக்கம். MCA Final Yearபடிக்கும் தந்தையை விபத்தில் இழந்த ஒரு கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டி இந்தப் பதிவிடுகிறேன்.

குவைத்தில் நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளி திரு.அழகேந்திரன் ராஜபாளையத்தைச் சார்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் குவைத்தில் ஒரு கோரமான சாலைவிபத்தில் அழகேந்திரன் பயணித்த ஜீப்பின் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதி விழுந்து நசுங்கியதில் இதர இரு பயணிகளோடு தானும் அகால மரணமுற்றார்.

அழகேந்திரன் சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்தாலும் கல்வியே அடுத்த தலைமுறையை மேம்படுத்தும் என அறிவுறுத்தியததை ஏற்று தனது மகளை தம் சமூக வழக்கத்தை மீறி உயர் கல்வியான MCA படிப்பில் சேர்த்துப் படிக்கவைத்தார்.

ஏப்ரல் மாதம் MCA தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தந்தை இறந்த நிலையிலும் படிப்பைத் தொடருகிறார். திருவில்லிபுத்தூரில் MCA படிக்கிறார். படிப்பில் 76% மதிப்பெண் இதுவரை பெற்றிருக்கிறார். இவரது MCA படிப்பைத் தொடர என்னால் இயன்ற நிதி உதவியைச் செய்திருக்கிறேன்.

இப்போது இவர் இறுதியாண்டு MCA படிக்கிறார். இறுதியாண்டில் MCA படிப்பின் அங்கமாக Project Work டிசம்பர் 2007 முதல் ஜூன் 2008 வரை கட்டாயமாக முடிக்க வேண்டும். சென்னையில் இருக்கும் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் FREE project work ஆக J2EE அல்லது .Net platformல் தனது Project workஐச் செய்து முடிக்க விரும்புகிறார்.

05அக்டோபர் 2007 க்குள் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து MCA Course final semester - Acedamic Project work செய்ய அனுமதிக்கும் கடிதத்தை இவர் MCA படிக்கும் கல்லூரியில் சமர்ப்பிக்கவேண்டும்.

தமிழ் இணையம் முழுதும் கணிணித்துறையில், பல்வேறு கணிணி, மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இளகிய நெஞ்சங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

தந்தையை இழந்து தவிக்கும் நிலையிலும் தன் தந்தையின் கனவான MCA படிப்பைப் பூர்த்தி செய்ய விழையும் இந்த கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டுகிறேன்.

மேல் விபரங்கள், Resume , MCA கல்வித் தகவல்களுக்கு harimakesh@gmail.com எனும் எனது முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.


அன்புடன்,


ஹரிஹரன்

Thursday, September 13, 2007

(174) ஹரிஹரனின் பார்வையில் தலைநகரம் டில்லி

டெல்லியும் மொகலாயத்தனமான ஆட்சிகளும் பிரிக்கமுடியாத வரலாறு என்பது இன்றளவும் உயிரோட்டத்துடன் இருப்பது நேரடியாகக் கடந்த ஜூன் மாதம் நேரடியாக உணர்ந்தேன்.

டெல்லியின் இந்திரா காந்தி பன்னா(ட்டு)டை விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவுடன் இந்த மொகலாயர்கள் கதை நினைவுக்கு வந்தது.

நெறியற்று, மக்களுக்கு பயனற்ற வகையில் அரசாட்சி செய்த முகலாய அரச தந்தை ஷஜஹான் தனது சாகும் தருவாயில் தன் மகனிடம் எனக்கு நீ மக்களிடையே நல்ல பெயர் வாங்கித்தர வேண்டும் என்று தன் மகன் ஔரங்கசீப்பிடம் கேட்டுக்கொள்ள ஔரங்கசீஃப் நடத்திய கொடுங்கோலாட்சியைக் கண்டு பீதியும் துயரமுற்ற மக்கள் ஷஜகான் எவ்வளவோ பரவாயில்லை இந்த கொடுங்கோலன் ஔரங்கசீப்போடு ஒப்பிடுகையில் என்றனர்.


இந்தியா வரும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் இந்தியாவில் சுற்றுலா செல்லும் மாநிலங்கள் ராஜஸ்தான், ஹிமாச்சல், மற்றும் இதர இமயமலைப் பிரதேசங்களான உத்தராஞ்சல் என வருவோர் அனைவருக்கும் பிரதான இந்திய நுழைவு வாயில் இந்த இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்! இந்தியாவுக்கு தேச அவமானமாக மிக மிக மட்டமான கட்டமைப்பு அடிப்படை வசதிகளுடன் ஔரங்கசீஃப் கொடுந்தொல்லையாகி சென்னையை ஷஜகான் பரவாயில்லையே என உயர்த்திக் காட்டியது எனக்கு!

ஆகஸ்ட் 1991க்கு அப்புறம் டில்லிக்கு ஜூன் 2007ல் தான் வருகிறேன். 91ல் தனியாக உடன்பணி செய்த நண்பனுடன். 2007 ஆறுபேர் கொண்ட மூன்று தலைமுறை கொண்ட பெருங்கூட்டத்துடன் :-)

கால அவகாசமின்மையால் நாங்கள் நேரடியாக குவைத்திலிருந்து டெல்லிக்கும், என் வயதான பெற்றோரை சென்னையில் இருந்து டெல்லிக்கு தனியாக உள்நாட்டு விமானத்தில் வரும்படி செய்து டெல்லியின் விமானநிலையத்திலே சந்தித்துக் கொள்ளும்படியாக எபக்டிவாக கோ ஆட்டினேட் செய்ய டெக்னாலஜி(மொபைல்) உதவியது.

மொழிப்போர் தியாகியாகி ஹிந்தியை நான் எதிர்க்காமல் அரைகுறையாக சிவயோகம் சாரிடம் ஹிந்தி ப்ரவேஸிகா வரையில் பிரைவேட்டாகப் படித்துத் தெரிந்து கொண்டது வெத்துவேட்டாகாமல் டாக்ஸி டிரைவரிடம், உள்ளூர் வணிகர்களிடம் பேசிப் பழகி குறைவாக ஏமாற உதவியது.

ஒரு சொட்டு ஹிந்தி தெரியாமல் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக எனது பெற்றோர் அவ்வப்போது அரிதாரம் பூசாத அவதாரம் எடுத்ததைப் பார்க்கும் போது தமிழ்நாட்டுக்கு ஆஸ்கர் தந்து கட்டுப்படியாகாது என்பதால் தான் தரப்படவில்லை என்று புரிந்தது.

என் தந்தை ஒருபடி மேல் சென்று சரளமான முழுத் தமிழிலே ஹிந்திக்காரனிடம் தான் சொல்ல வந்ததைச் சொல்லி டெல்லியின் ஹிந்திக்காரர்களுக்கு தேசத்தின் மொழிக்கொள்கை, வேற்றுமையில் ஒற்றுமை இவற்றை அடிக்கடி நினைவுபடுத்தும்படி கிலி ஏற்படுத்தினார்!

புதுடில்லி ரயில்வே ஸ்டேஷனுக்குப் "புது" டில்லின்னு தைரியமாகப் பேர் வைத்தவனைத் தேடிக்கொண்டே இருக்கிறேன். புதுப் புது குப்பைகள் நிறைந்த இடத்தில் இருக்கும் ஸ்டேஷன் என்பதால் அப்பெயர் என விளங்கிக் கொண்டேன்!

இந்தியத் தலைநகரிலிருக்கும் தேசிய அவமானம் புது மற்றும் பழைய டில்லி ஸ்டேஷன்கள் இரண்டும்! நிஜாமுதீன் ஸ்டேஷன் போகும் பாக்கியம் கிட்டவில்லை இந்தமுறை.

LNG எரிபொருளாக பொதுமக்கள் போக்குவரத்துவாகனங்களில் பேருந்து, டாக்ஸி,ஆட்டோவில் பயன்படுத்தப்படுவதால் சென்னையை விட வாகனப் புகையால் கண் எரிச்சல் பரவாயில்லை. டெல்லி போக்குவரத்துக்கழக, தனியார் பேருந்துகள் டிபிக்கல் நார்த் இண்டியன் தரம். ஒருசில தாழ்தளப் பேருந்துகள் பரவாயில்லை.

டெல்லிக்காரர்கள் டிராபிக் லைட்டை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையோ என்று நினைக்கிறேன். கனாட் பிளேசிலேயே Might is Right என்பதே டிராபிக் விதியாகக் காணப்பெற்றேன்.

தலைநகர் டெல்லியின் ஒரே போக்குவரத்து சிறப்பு மஞ்சள் லைன், நீல லைன், சிவப்பு லைன் என்று ஓடும் டெல்லியின் நவீன மெட்ரோ ரயில் நெட்வொர்க்! அதிலும் மஞ்சள் லைன் நீல லைன் என இரண்டு மெட்ரோ லைன் சந்திக்கும் ராஜீவ் சௌக் (கன்னாட் ப்ளேஸ்) மெட் ரோ ஸ்டேஷன் அரசியல்வாதிகள் மனதுவைத்து நிதிஒதுக்கி, திட்டம்தீட்டி செல்படுத்தினால் நவீன இந்தியா எப்படி சிங்காரமாக மாறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு. குப்பை இல்லாத, பிச்சைக்காரர் இல்லாத, பான்பராக் எச்சில் இல்லாத அதி சுத்தமான பளிச் ரயில் நிலையங்கள் டெல்லி மெட்ரோ நிலையங்கள் என்பதற்காகப் பாரட்ட வேண்டும்!

விமானநிலையத்துடன் மஞ்சள் லைன், மற்றும் நீல லைன் இணைக்கப்பட்டு 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக நடக்கும் மெட்ரோ ரயில் இரண்டாம் நிலை விரிவாக்கம் டெல்லியை போக்குவரத்தில் ஓரளவுக்கு இன்னும் சிறப்புடையதாக்கும்.

வரலாற்று டெல்லி மொத்த நகரமுமே குப்பை கூளங்கள் நிறைந்த மெகா சைஸ் மியூசியமாக இருக்கிறது! ஜூன் மாத வெயிலில் டெல்லியின் வீதிகளில் வலம் வர ஒரு கொடுப்பினை வேண்டும். எனக்கு நிறையவே இருந்தது அந்தக் குடுப்பினை!

நம்மூர் சித்திரைத் திருவிழாவில் அக்கினிக் குண்டம் இறங்க பயப்படுபவன் டெல்லியின் பல ஸ்தலங்களில் காலணியைக் கழற்றி வைத்துவிட்டு மதிய வெயிலை உள்வாங்கிய கிரானைட், மார்பிள் கற்களில் உரிந்து போன வெப்பத்தடுப்புப் பூச்சால் பூக்குழி இறங்கிய அனுபவமும் பெற்றேன்.

கால்காஜி தாமரைக் கோவிலில் மதிய 2 மணிக்கு ஓஹோய்.. ஏ க்யா ஹை என்று வெயில் கொளுத்தும் படிகளில் ஸ்டெப் டான்ஸாடியபடியே "பஹாய் பாரம்பரிய" வழிபாட்டு அரங்கின் வழிபாட்டு அரங்கத்தின் பெஞ்சில் வெந்து போன நூடுல்ஸாக டெல்லி வெயில் தாக்கத்தின மனதுக்குள் அமைதியாக நொந்தபடி அமர்ந்து வந்தது எக்ஸ்ட்ரீம்லி "ஹாட்& பர்ன்டு" அனுபவம்!

மாலையில் கைலாஷ் கிழக்கில் இருக்கும் இஸ்கான் கோவிலின் மாலை நேர ஆரத்தி ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டங்கள் மற்றும் உள்ளரங்கு காட்சி அமைப்பு ஸ்பெஷல் எபக்ட் காட்சிகள் பார்வையிடல் ஒரு சிறப்பான அனுபவம்.

தென்னிந்தியக் கோவில்கள் அதன் கருங்கல் சிற்பங்கள் பலநூறு ஆயிரம் வருடங்கள் வெய்யில் மழை தாங்கி நிலைத்து இன்றளவில் கோலோச்சுவதும் அதன் வேத பாரம்பரிய ஸ்தபதி சாஸ்திர ஆர்க்கிடெக்சுரல் எக்ஸலன்ஸின் பெரும் அருமையை நவம்பர் 2005ல் திறக்கப்பட்ட அக் ஷர்தாம் கோவில் கலைவளாகத்தில் மீண்டும் உணர்ந்தேன்.

நவம்பர் 2005ல் திறக்கப்பட்ட அக் ஷர்தாம் கோவில் கலைவளாகத்தில் ஜூன் 2007ல் இரண்டாண்டுகளுக்குள்ளாக பிரதான கோவிலைச் சுற்றிய நீர்நிலையில் அமைக்கப்பட்ட கோமுகங்கள் நீக்கப்பட்டும் நீர்நிலையில் மராமத்து வேலை, வெளிப்பிரஹாரத்தில் இருக்கும் மணற்பாறையில் வடிக்கப்பட்ட பிரதான யானை சிற்பங்கள் வெடித்தும், கீறல் விழுந்தும் என இரண்டே ஆண்டுகளுக்குள் 21ம் நூற்றாண்டு டெக்னாலஜி எட்டம்/பத்தாம் நூற்றாண்டு பண்டைய பாரதத்தின் வேத பாரம்பரியமான ஸ்தபதி சாஸ்திரம் கொண்டு நிறுவப்பட்ட காஞ்சி, மதுரை,மாமல்லபுரம் சிற்ப,கட்டிடக்கலை நுட்பத்திடம் பகிரங்கமாகத் தோற்றுப் போயிருக்கிறது.

என்ற போதும் பாரதப் பாரம்பரிய கட்டிட, சிற்பக்கலையை மீண்டும் வெளியே உணர்த்த அக்ஷர்தாம் கோவில் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. வெயில் விழாத கோவில் உட்புறத்திலிருக்கும் பளிங்குக்கல் சிற்ப வேலைப்பாடுகள் அற்புதம். நுணுக்கமான சிற்பவேலை அதிலும் சீலிங் மார்பிள் கார்விங் நிஜமாக வாய்பிளக்க வைக்கிறது!

எண்டெர்டெயின்மெண்ட் தீம்பார்க் தொழில் நுட்பம் மற்றும் ரொபாட்டிக்ஸ் நவீன பொம்மலாட்ட உத்தியை பாரத பாரம்பரியப் பண்டைக்காலத்தையும் சுவாமி நாரயண் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்த அமர்க்களமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.


வெளியே அடிக்கும் வெயிலுக்கு மிக இதமாக குளிர்சாதன அக்ஷர்தாம் ஐ மேக்ஸ் பெருந்திரை ஸ்பெஷல் எபக்ட் தியேட்டரில் "நீல்கண்ட்" சுவாமி நாராயணனாவது பற்றிய 45 நிமிடப் படம் சிறப்பான தொழில் நுட்பத்தில் இமயமலைகளின் பிரம்மாண்ட கேமரா கோணங்களுடன் கண்ணுக்கும், மனதுக்கும் இதம்!

கூவம் சென்னைக்கு, செங்கோட்டை, அக்ஷர்தாம் வளாகங்களின் பின்னே ஓடும் யமுனை டெல்லிக் கூவம்! சைதாப்பேட்டைக் கூவம் ஆற்று மறைமலை அடிகள் பாலத்தை மூக்கை மறைக்காமல் நடக்கும் சென்னைவாசிக்கு டெல்லி யமுனை தெள்ளிய நதியாகவும் தெரியலாம்! இந்த ஆற்றைச் சாக்கடை ஆக்குவதில் சென்னை ஔரங்கசீஃப்பாகி டெல்லியை ஷஜகான் ஆக்கிகிறது!

செங்கோட்டையைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஆஜ்தக் டிவிக்காக உலக புராதான சின்னங்கள் பட்டியலில் செங்கோட்டை இடம்பெற்றதை ஒட்டி செங்கோட்டை இந்தியாவின் பெருமை என்று என்னைக் கருத்து தெரிவிக்கச் சொன்னார் அந்த நிருபர் பெண்மணி. நான் எனது எண்ணங்கள் அப்படி இல்லை. செங்கோட்டையை இந்தியர்கள் அடிமையாக்கப்பட்ட, வேதனையான கடந்த காலத்தின் எச்சமாகவே என்னால் அடையாளம் காண முடிகிறது. இந்தியனாய் செங்கோட்டையை இந்தியாவின் பெருமையாகவெல்லாம் கருத முடியவில்லை என்றேன். அடுத்த ஆளைப் பார்த்து தனக்கு உவப்பான கருத்தைச் சேகரிக்கச் சென்றுவிட்டார் அந்த பெண் நிருபர்!


கன்னாட் பிளேஸூம், சாந்திபாத்தும் பன்னாட்டு வங்கிகள், அலுவலகங்கள், தூதரகங்கள் என இருப்பதால் புதுடெல்லியாக பளபளப்போடு இருப்பதை ஆர்கேபுரம் மலைமந்திர் முருகனைக் காணப் பயணித்தபோது பார்க்க, உணர முடிந்தது.

மலைமந்திர் முருகப்பெருமான் வெயில் கொடுமை குறைய அருள் புரிந்தார் என்பதை படியேறி மேலே செல்லு முன்பாக கீழே இடும்பன் சன்னதியில் தோகை விரித்தாடி மயில் சொல்லியது. அன்று மாலை மழை பெய்தது டெல்லியில்.

மலைமந்திர் முருகன் கோவில் வளாகத்தில் தமிழ்நாட்டில் இருந்து வரும் குண்டுமல்லிகை கண்டு மகிழ்ந்தவாறே தமிழில் பேரம் பேசி வாங்க வாய்ப்பு என்பதால் என் தாயார்க்குக் கூடுதல் மகிழ்ச்சி (பேரம் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது வேறு விஷயம்)

கன்னாட்ப்ளேஸ் ஹனுமான் கோவிலுக்கு டெல்லிவந்த செவ்வாய்க் கிழமை அன்றே சென்றதைத் தவிர்த்திருக்கலாமோ எனும் அளவுக்கு மிகநெரிசலாய் இருந்தது.

கன்னாட்ப்ளேசில் சீக்கியர் வழிபாட்டுத்தலமான பங்ளாசாகேப் குருத்வாரா சென்றபோது ஏழடி உயரத்திற்கு வாளும், வேல்கம்புமாய் பிரதான கோவில் வாசலில் காவல் இருக்கும் சீக்கியர் சரித்திர காலத்திற்கு இட்டுச்செல்ல ஸ்பார்க்கினார். பக்தர்கள் நடக்கும் பாதையை ஒரு வேண்டுதலாகச் சுத்தம் செய்யும் சீக்கியர்கள், பக்தர்கள் தாகத்திற்கு தண்ணீர்தரும் சீக்கியர்கள் என்று வித்தியாசமான அனுபவம்.

பழைய டெல்லி ரயில் நிலையத்தில் ஜம்மு மெயில் பிடித்துப் பஞ்சாப்-காஷ்மீர்-ஹிமாச்சல் பார்டர் டவுன் பதான்கோட்டில் இறங்கி ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலா-மெக்லோட்கஞ்ச்(Ppper Dharamshala-Mcleodganj) மலைப்பிரதேசத்துக்கு பஸ் பயணம். 110 கிமீ தூரம் 5மணிநேரம் ஒரு டீ பிரேக், ஒரு சிற்றுண்டி ஹால்ட் என படுத்தினார்கள் ஹிமாச்சல் பரிவஹன் நிஹம்(போக்குவரத்து நிறுவனம்)!

டெல்லியில் வெயிலில் காய்ந்ததற்கு பனிமூடிய தௌலாதர் ரேஞ்ச்(Dauladhar Range) இமயமலைச் சிகரங்கள் பின்ணணியோடு மலைமுகட்டில் இருக்கும் ஹிமாச்சல் பெரிய வரப்பிரசாதம் டெல்லியிலிருந்து 700 கிமீ தொலைவு. ஜம்மு 100 கிமி தூரம்தான் பதன்கோட்டிலிருந்து...



அன்புடன்,


ஹரிஹரன்

Wednesday, September 12, 2007

(173) So Called (இந்தியப்) பெண்ணடிமைத்தனத்திற்கு(??) ஆண்கள் மட்டுமா பொறுப்பேற்கவேண்டும்?

பெண்ணடிமைத்தனம் என்கிற விஷ(ய)த்திற்கு ஆண்களை 100% பொறுப்பேற்கச் சொன்னால் அதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது.

ஒரு பெண்ணின் மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்றவாறே பெண்களால் நடைமுறைப்படுத்தப்படும் அடிமைத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்களின் இயற்கையான இயல்பே ஆண்களை விட பலமடங்கு அதிகப்படியாக சுயநலமாக இருப்பது.

குடும்பப் பெண்கள் அவர்கள் வீட்டுத்தேவைக்காக வாங்கிய புடவை, பாத்திரம், பண்டம், நகை,நட்டுன்னு தான் வாங்கிய அனைத்தையும் அப்பார்ட்மெண்டில் அத்தனை ப்ளாட்களில் வசிக்கும் தோழியரிடம் காட்டி பெருமை பறைசாற்றி அடுத்த பெண்களிடையே நமக்கு இப்படி வாழ்க்கை அமையவில்லையே என்று மன நிறைவின்மைக்கு அடிமையாக்கிக் கொள்வது யார் குற்றம்.


குடும்பத்தினுள்ளே இருக்கும் பெண்களால் அவர்கள் பேராசை காரணமாக தொடர் நச்சரிப்பு செய்து ஆண்கள் லஞ்சம் வாங்க, ஊழல் செய்ய என்று உந்து சக்தியாக இருந்து ஊறு விளைவிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியாவில் இந்திராகாந்தி, சோனியாகாந்தி, பிரதீபா பாட்டில், தமிழகத்தில் ஜெயலலிதா, உபியில் மாயாவதி,ராஜஸ்தானில் விஜய ராஜெ சிந்தியா,மம்தா பானர்ஜி, ரேணுகா சௌத்ரி இலங்கையில் பண்டாரநாயகா, சந்திரிகா, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா, பேகம் காலிதா, பாகிஸ்தானில் பெனாசீர் புட்டோன்னு அரசியல் ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் இருப்பது பெண்ணடிமைத்தனம் செய்யும் ஆணாதிக்க ஆண்கள் இருப்பதால்தானே.

ஐ லவ் யூ டார்லிங் எனும்போது ஐ லவ் யூ டூ /டா எனும் acknowledgment இல்லாளிடம் இருந்து வருவது தொடரவேண்டியே சீரியல்கள் பல பார்த்துக்களைத்து முன் தூங்கிப் பின் எழும் மனைவியரைக் காலையில் எழுப்ப "பய"Logical அலாரமாக எத்தனையோ கணவர்கள் ப்ரஷ்ஷில் பேஸ்ட் ரெடியாய் வைத்து பெட்காபி ரெடிசெய்து அட்ஜஸ்ட் செய்து வண்டி ஓட்டுவது பெண்ணடிமைத்தனம் தானே!

பொண்ணு பார்க்கும் / நிச்சயதார்த்தத்தின் போது எம்பொண்ணு செல்லமா வளர்ந்தவ.. நீங்கதான் அணுசரணையா இருக்கணும்னு சொல்லிட்டே அடையாறு ஆனந்தபவன்ல் வாங்கின பஜ்ஜியை பரிமாறியது புரிபடாமல் கல்யாணமாகி வந்தபின்னால் "ஐ நோ ஒன்லி ஹவ் டு குக் ஹாட் வாட்டர்யா" எனும் மனைவி இருக்கின்ற யதார்த்தத்தில் கையில் கத்தி எடுத்த (காய்கறி நறுக்கத்தான்) எதார்த்தம் ஆணாதிக்கம் அன்றி வேறென்ன?

புது மனைவியின் மரணவிலாஸ் சமையலை வீட்டிலும் சமாளித்து அந்த விஷ(ய)த்தை லஞ்ச் பாக்ஸில் கட்டித்தந்து "மிச்சம் வைக்காம சாப்பிடுங்க" என்று சொல்லி இல்லாள் வழியனுப்பியதற்காக, பாதி லஞ்சிலேயே நீர்பெருகிய கண்களினூடே எமனின் பாசக்கயிறும், எருமைக்கொம்பும் தென்பட்டாலும் விக்கலோடு விழுங்கிவிட்டு என்று பல்வகையான பேர்களோடு இருந்தாலும் கணவர்கள் அனைவரும் நீலகண்டன்களாகி நிற்பதுவே நடப்பதுவேக்களாக அணுசரணையாக இருப்பது பெண்ணடிமைத்தனம்தானே!

சீரியஸான விஷயமா பார்க்கலாம். பல குடும்பத்தினுள்ளே பெண்கள் தான் தாம்பத்ய உறவைத் துருப்புச் சீட்டாக, அவர்கள் ஆசையை நிறைவேற்ற வற்புறுத்தி ஆண்களிடம் காரியத்தை சாதிக்கிறார்கள்.

தனது சின்னவீ(ட்)டு (களு)க்காக நம் அரசியல் வாதிகள் / மன்னர்கள் செய்யும் / செய்த சமூக அட்டூழியங்கள் நடவாதிருந்தால் எவ்வளவோ மேம்பட்டு இருந்திருக்கலாம்.

சமூகத்திலே வெகுதியான அளவில் திருமணமான பின்னர் அம்மா(மாமியார்), தங்கை ,மனைவி எனும் உறவுகள் ஒரு சராசரி ஆணை எந்த ஊரில்/நாட்டில் வாழ்ந்தாலும் கீழ்ப்பாக்கம் மானசீகமாகப் போக வைக்கிறதா? இல்லையா?

ஆணாக இருந்ததால் பாரிவள்ளல் முல்லைக்குத் தன் தேரையே தந்து உதவினான். அம்மா-மனைவி-தங்கை எனும் மூன்று பெண்கள் மூன்று முழ முல்லைப்பூவைப் பிரிந்துக்கொள்வதில் சண்டையை ஆரம்பித்து குடும்பம் எனும் தேரையே சாய்த்து, முழுக்குடும்பத்தையுமே பிரிக்கும் வல்லமை பெண்களுக்கே இருக்கிறது.

இவ்வளவு கொடுமை அனுபவித்தும் ஆண் திருந்துகிறானா என்றால் இல்லை.
பெண்கள் பூ போன்ற மென்மையான இதயம் படைத்தவர்கள் என்று வசனம் எழுதுகிறான். திருமணம் என்று உறவு இணையத்திலே வந்து விட்ட ஒவ்வொரு ஆணும் சந்தேகமே இல்லாமல் மசோகிஸ்டுதான் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கருத்து.

குடும்பத்தினுள்ளே பெண்களுக்கு இருக்கும் ஆளுமையே பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. திருமணமான பெரும்பான்மை ஆண்கள் சேர்ந்து வாழ்வதை மட்டுமே விரும்புபவர்கள். ஆணின் குடும்பக் கடமைகளுக்கு ஹவுஸ் வொய்ப்/ வொர்க்கிங் வொய்ப் எனும் பேதமின்றி பெண்களே தங்கள் சுயநலசிந்தனையால் முட்டுக்கட்டை போடுபவர்கள்.

இன்றைக்கு குடும்பத்தில் ஆண்கள் சம்பாதிப்பதோடு பள்ளிக்குக் குழந்தைகளைத் தயார்செய்வதில் பங்களிப்பு, உணவுதயாரிப்பு, வீட்டுவேலை இவைகளில் பங்களிப்பு என்பதை ஆணடிமை என்று முழங்காமல் கடமையாகச் செய்கிறார்கள் என்பதே உண்மை.

இதெல்லாம் நகரத்து ஆண்கள் நிலையாக இருக்கலாம். கிராமங்களில் பெண்களுக்குக் கல்வி இல்லை,வாழ்வியல் உரிமைகள் இல்லை என்போருக்கு தேசமெங்கும் தேநீர்க்கடையகளில் டோர் டெலிவரி வேலைசெய்யும் பையன்கள், பட்டாசுக்கம்பெனியில் வேலைசெய்யும் பையன்களாகிய ஆண்களுக்கும் கல்வி, இதர உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இந்தியாவில் காணாமல் போகும் அப்பாவிப் பெண்களை ஈவு இரக்கமின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதில் அயோக்கிய ஆண்களை மிஞ்சும்விதமாக "அக்கா"க்களின் பங்களிப்பும் மிக அதிகம்!

முள்ளுக்காட்டில் சாராயம் காய்ச்சுவது ஆண்கள் அதை இடுப்பில் உறைகளாக்கி, ரப்பர் டியூப்பில் நகரின் தெருக்களில் ரீடைல் சேல் செய்வது பெண்கள்தானே!

ஆணுக்கும் பெண்ணுக்கும் Equal Rights என்று முழங்குவார்கள் எல்லாம் செய்துவிட்டு ரயில் டிக்கட் ரிசர்வேசனுக்கு பொதுவரிசை என்றால் பெண் என்று ஈவு இரக்கம் இருக்கா பாரு என்று வசை பாடுவார்கள்.

உண்மையில் ஆணடிமையை எதிர்த்து ஆண்கள் போராடினால் Need of the Hour எனும் அர்த்தம் இருக்கும். அதை விடுத்து பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று மசோகிஸ்டாக ஆண்கள் இருந்து குரல் தருவது ஏற்கனவே ஆண்களை மஸ்கிடோவாக நடத்தும் பெண்களிடம் இன்னமும் ஓடஓட விரட்ட ஓடோமாஸ் எடுத்துத் தருவதாகவே இருக்கும்.


குறிப்பு: இது நகைச்சுவைப் பதிவு இல்லீங்க! இணையத்தில்(ஆண்)வர்க்கப் போராட்டம்!

அன்புடன்,


ஹரிஹரன்

Sunday, September 09, 2007

(172) பகுத்தறிவுப் பகலவர் ஈவெரா என்ற அஞ்சுகொலை ஆறுமுகம்

ஈவெரா எனும் பகுத்தறிவுப் பகலவன் எழுந்ததால் தான் சூரியன் அஸ்தமிக்காத பகுத்தறிவு ராஜ்ஜியம் தமிழகத்தில் தோன்றியது என்று கதறும் பகுத்தறிவு ஆட்களே அய்யா பாவமாகி சினிமா செண்டிமெண்ட் ரேஞ்சில் அச்சுப் பிசகாமல் கடல் கடந்தும் இந்துமதம்,பிள்ளையார் சிலை-இவற்றைக் கடைந்தே பகுத்தறிவு"வெண்ணைய்" திரட்டிக் கடைந்தேறுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் மனோஜ் Knight சியாமளன் Sixth sense சினிமாவாக Hollywoodவாயிலாக ஆறாம் அறிவுணர்வைத் உலகிற்குத் தருவதற்கு பலகாலம் முன்னமே நம்ம ஈரோட்டு வெங்காய. ராம்சாமி பகுத்தறிவை மலிவு விலையில் பகுத்தறிவுக்கு ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்து ( திஸ் வேர்ல்டு & அண்டு அதர் காலக்ஸீஸ் ரைட்ஸுடன்) பூமியிலே ஏர்பிடிப்பவனிடமும் ஆகாயத்தில் ஏரோப்பிளேன் ஓட்டுபவனிடமும் ஒரே நேரத்தில் Two way One wire transmission எனும் நானோtechnology மூலமாக பகுத்தறிவு விழிப்புணர்வை நிலைநாட்டியவர்.

பகுத்தறிவு பகலவரு தோன்றிய தமிழகத்திலே வேளாங்கண்ணி மாதா ஐரோப்பாவில் இல்லாத கிறித்துவ தேச்சப்பரத்தில் பவனி வந்ததை Notice செய்யாத பகுத்தறிவு"வெண்ணை" உருகி பார்வை மங்கினாலும், ரமலான் நோன்புக்கஞ்சி பாரம்பரியத்தை- பகுத்தறிவின் பரிந்துரையை வியந்தபடியே, வாழவிடாத போரிலே தொலைந்துபோய்விட்ட தொன்மையான பாரம்பரியத்தை, வசிக்கும் தொலைதேசத்தில் விநாயகர் தேர்ச்சப்பரத்தினை பகுத்தறிவு நோட்டீஸால் நிறுத்தும் முயற்சி - SELF LESS self-respect Matter that got self exported!

மைனர் ஈ.வெ.ராமசாமி சண்டித்தனம் செய்ய
1) பிராமண எதிர்ப்பு
2)இந்துக் கடவுள் எதிர்ப்பு
3)இந்து-தெய்வ இலக்கியங்கள் எதிர்ப்பு
4)வெள்ளைக்கார துரையே இருக்கட்டும்,
5)தமிழர்கள் இசுலாமியராக மாறவேண்டும் -என்று ஐந்துக்கும் மேற்பட்ட பகுத்தறிவுக் கொள்கைகளை வைத்து திராவிட-பகுத்தறிவுக் கொள்கை எழுச்சிக் குழையடிப்புக் கூத்தை தமிழகத்தில் நடத்தினார்/ நடாத்துகிறார்.

ஒரு தமிழ் சினிமாவில் கவுண்டமணி அஞ்சுகொலை செய்த பெரிய தாதா என்கிற பில்டப் தரப்பட்டு பெரிய கித்தாப்புடன் ஊரில் வலம் வருவார்.

அடுத்தடுத்த காட்சிகளில் அஞ்சு கொலை செய்யுமளவுக்கு கவுண்டமணிக்கு வீரதீரம் ஏற்பட்டது எப்படி? அஞ்சு கொலை செய்த விதம் எப்படி? என்று விவரிக்கப்படும் போது கவுண்டமணி தானாக, கொலைகாரத் தொழில், கொள்கைப்பிடிப்புடன் எந்தக் கொலையுமே உண்மையில் செய்திருக்கமாட்டார்.

தென்னந்தோப்பில் கொலைசெய்யப்பட வேண்டி எதிரியிடம் கவுண்டமணி காலில் விழுந்து கெஞ்சிக்கொண்டிருக்கும் போது தென்னைமரத்தில் இருந்து தேங்காய் விழுந்து அகஸ்மாத்தாய் எதிரி மாண்டுபோவார். இப்படி ஒவ்வொரு கொலைக்கும் பிண்ணனியாக இருக்கும் கொள்கைகள் வெளிவரும்.

கடைசியாக அஞ்சுகொலை ஆறுமுகம் என்று கவுண்டமணியின் பெயர்க் காரணமானது அவர் சந்தையிலே ஐந்து தேங்காய் குலைகளைக் களவாடிய குற்றதிற்காக ஐந்துகுலை ஆறுமுகம் என்பது மருவி அஞ்சுகொலை ஆறுமுகமாகியது வெளிவந்து அதுவரை இருந்த கவுண்டமணியின் வீரதீர அஞ்சுகொலை அடைமொழி பில்டப் உடைந்து சுக்குநூறாகும்.

பிராமணர்களின் செருக்கைக் கொலை செய்தவர் - பகுத்தறிவு பகலவரு ஈவெரா

இதிலே பிராமணர்கள் தம்மீது சுட்டிக்காட்டப்பட்ட தவறை தாமாக, தங்களுக்குள்ளேயே முன்வந்து மாற்றிக் களைந்து கொண்டனர், இன்னும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.


இந்துமத தெய்வீகத்தை சிலைகள் உடைத்தே கொலை செய்தவர் பகுத்தறிவு பகலவரு ஈவெரா

பொதுமக்கள் எவர் செய்தது அதிமூடத்தனம் என்று உணர்ந்திருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் தரிசனமும், தமிழகத்து திருவண்ணாமலை கிரிவலமே நலம் தருவது என்று பகுத்தறிந்திருக்கிறார்கள்

ராமாயண,பாரத,திருக்குறளை மலமென உரைத்தே இல்லை என்றாக்கியவர்-பகுத்தறிவு பகலவரு

இரண்டடிக் குறளில் இருக்கும் மணம் ஈராயிரம் அடி பகுத்தறிவு எழுத்து பேச்சில் இல்லை என்றும், எது உண்மையான மலம் என்றும் இன்று மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள்.

சாதியைத் தமிழகத்தில் இருந்து ஓடஓட விரட்டிக் கொலை செய்தவர் -பகுத்தறிவு பகலவரு

பகுத்தறிவு பகலவரு ஈவெரா சீர்திருத்திய பின்பு சாதி தமிழகத்திலே மூலை முடுக்கேல்லாம் அரசியல் ஆதரவுடன் தழைத்திருப்பது மாதிரி வேறெங்கும் காணமுடியாது!

தேர்தல், நலத்திட்டம், ஆட்சி என எதுவும் எது பயன் தரும் சாதி? எது பயந்தரும் சாதி? என்ற கணக்கினை ஆய்வு செய்த பின்னரே நடக்கும்!


அமெரிக்க விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எல்லாம் எங்கள் ஈரோட்டுப் பகலவரு பகுத்தறிவுக் கேண்டீனில் பயின்றவர் (பாசறை பயிற்சி பெஞ்சு எல்லாம் ரெயின்போ கலரில் சாதிக் கட்சிகள் துண்டுகள் போட்டு ரிசர்வ் ஆகிவிட்டபடியால்!) என்று அள்ளிவிட்டாலும் சத்தியமா யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை!

தமிழ்நாட்டின் மக்கள் தம் தலைக்குமேலே அரசியல் திரா"விட" பகுத்தறிவு வெள்ளம் பெருக்கிட்டு ஓடுவதையே கணக்கில் கொள்வதில்லை!

One can Prove his stupidity in two ways:

1. By remaining silent
2. By uttering aloud


வரலாற்றை நோக்குகையிலும், நோட்டீஸடித்துப் பன்னாட்டளவில் பிரகடனம் செய்துவரும் பகுத்தறிவுப் பகலவரின் கிர(ஹ)ணங்கள் சொல்வதிலிருந்தும் விளங்குவது:

தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பகலவரு ஈவெரா என்ற அஞ்சுகொலை ஆறுமுகம் தெரிவு செய்தது இரண்டாம் வகை என்று.

E.V.Ramsamy Proves aloud his stupidity in all of his concepts & contemplations!

தமிழ் இணையம் செய்து கொண்டிருக்கும் பகுத்தறிவுப் பகலவரு ஈவெரா என்ற அஞ்சுகொலை ஆறுமுகத்தின் உண்மையான பகுத்தறிவு வேட்கை, கொள்கைப் பிடிப்பு என்று விடுதலை செய்து இருட்டுக்கருமையை இந்நாள் வரை உணராதோருக்கும் உணரவைப்பதே!

உண்மை எதுவோ அது விடுதலையாகியே தீரும்!

அன்புடன்,


ஹரிஹரன்

Thursday, September 06, 2007

(171) தமிழ்நாட்டில் எருமைகளால் கூட நிம்மதியாக வாழமுடியாத சூழல்!

தமிழ்நாட்டில் எருமைகள் கூட நிம்மதியாக வாழமுடியவில்லை எனும் உண்மையை இந்தச் செய்தி விடுதலை செய்கிறது!

சத்துள்ள பால் தரும் பயனுள்ள இந்த எருமைகளின் பெருக்கம் தமிழகத்தில் குறைந்து பால் உற்பத்தியும் பாதிப்படைந்திருக்கிறது!

பால் உற்பத்தி குறைகிறதே என்று கவலைப்படாமல் தமிழ்நாட்டில் பால்வளத்துறை அமைச்சர் எருமைகள் குறைவு எனும் செய்தியை வாய்ப்பாக வைத்தே பகுத்தறிவு முழக்கம் செய்யப் பார்ப்பார்கள்.

1. "கழக ஆட்சியில் தமிழ்நாட்டில் எமனின் நடமாட்டத்தைக் குறைத்துவிட்டோம்"

2." பாரதத்தின் ஆட்டோமொபைல் தலைநகரம் சென்னை இருக்கும் தமிழகத்தில் எமனே எருமை கிடைக்காமல் சான்ட்ரோ காரில் தான் செல்லும் நிலையை நிறுவி கழக ஆட்சி சாதனை படைத்து இருக்கிறது"


:-))) :-)))

அன்புடன்


ஹரிஹரன்

Wednesday, September 05, 2007

(170) தங்கையைக் கல்யாணம் செய்வதே தமிழினத்துக்கு உகந்தது என்ற பகுத்தறிவுப் பகலவர்ர்ர் ஈவெரா

தமிழர்களுக்குள் எல்லா சாதியினராலும் தமிழர்க்கே உரிய பிரத்யேக திருமணப் பாரம்பரியம் உண்டு.

அக்காள் மகளை முறைமாமன் திருமணம் செய்வது என்பது தமிழரிடையே எல்லா சாதியிலும் இருக்கும் தமிழர் திருமண பாரம்பரியத்தில் தனிச்சிறப்பானது, மிகவும் தொன்மையானதும் கூட.

தமிழகத்திலே இருக்கும் முக்குலத்தோர், செட்டியார், உடையார், வன்னியர், பார்ப்பனர், நாவிதர், கவுண்டர், பறையர்,பள்ளர், சிவாச்சாரியார், முதலியார் , நாடார், மீனவர் என அனைத்து சாதிப்பிரிவினருக்கும் பொதுவான தமிழர் திருமண, தமிழர் கலாச்சார பாரம்பரியம் என்றால் அது அக்காள் மகளை முறைமாமன் திருமணம் செய்வது, அத்தை மகன்/மகள், மாமா மகளை/மகனை திருமணம் செய்வது.

ஆயிரமாண்டுகள் கழித்தும் இன்றும் நடைமுறையில் தமிழர்கள் மத்தியில் போற்றப்படும் தொன்மையான பாரம்பரியமாக அக்காள் மகளை முறைமாமன் திருமணம் செய்வது, அத்தை மகன்/மகள், மாமா மகளை/மகனை திருமணம் செய்வது எனும் பாரம்பரியப் பழக்கம் உதாரணமாக விளங்கி வருகிறது.

அடுத்து தமிழர்கள் குடும்பங்களிடையே நிலவி வரும் மிக முக்கியமான , தொன்மையான பாரம்பரியம் என்பது வீட்டில் உடன் பிறந்த சகோதரி இல்லாது சகோதரர்கள் மட்டுமே உள்ள தமிழர் குடும்பங்களில் சிற்றன்னை / சித்தி மகளை தங்கள் சொந்ததாய் வயிற்றில் பிறந்த உடன் பிறந்த சகோதரியாகக் கருதுவது.


திரா"விட" பெத்தடின் கண்டுபிடித்த பகுத்தறிவு பகலவர்ர்ர்ர் ஈவெரா சொல்லியது :

தமிழினத்துக்கு உகந்தது இசுலாமியமே என்பது!

தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் சித்தி மகளை மணமுடிப்பதை தங்கள் பாரம்பரியமாகக் கொண்டிருப்பவர்கள். நேரடியாகக் கண்டுணர்ந்த அனுபவம் எனக்கிருக்கிறது.


நான் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்ற காலத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து வந்து படித்த இசுலாமிய நண்பன் அவனது சிற்றன்னையின் மகளை முறைப்பெண்ணை வயது வித்தியாசம் காரணமாக மணம் செய்யமுடியாது போயிற்று என்ற போது அதிர்ந்தேன்!

தமிழகத்தில் இருக்கும் சோழர் காலத்துப் புகழுடைய ஜெயங்கொண்டத்தில், இன்றைய காலத்தில் இசுலாமியத்தைத் தழுவியவரது வேரை ஆராய்ந்தால் அது வன்னியர்/உடையார்/அகமுடையார் /ஆதிதமிழர் என்று தமிழகத்தின் மண்ணின் மைந்தர்களான தமிழ்ப் பரம்பரையினையே அடையாளம் காட்டும்.

தமிழர்களிடையே நிலவிவரும் தொன்மையான திருமணப்பாரம்பரியத்தில் தங்கையைத் தாரமாக்கும் பழக்கம் இருந்ததே இல்லை எனத் தெளிவாக அறுதியிடலாம்!

தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள். ஆனால் பகுத்தறிவுப் பகலவர்ர்ர்ர் ஈவெரா & கோ பார்ப்பனரை வந்தேறி என்பார்கள்.

சிற்றன்னை மகளை/தங்கையைத் திருமணம் செய்யும் தமிழர்க்கு ஒப்பாத வந்தேறி திருமணபாரம்பரியத்தவர் நோன்பில் கஞ்சிகுடித்து அது தமிழர் உள்ளத்துக்கும் உடலுக்கும் நல்ல பாரம்பரியம் என்று கருணாநிதி மற்றும் இன்னபிற பகுத்தறிவு, தமிழினமான(??)த் தலைவர்கள் தமிழ்நாட்டில் சமூக நீதி பேசி தமிழர் பாரம்பரியத்தை கலைஞராக இருந்து பேணுவார்கள்!

சிற்றன்னை மகளை /தங்கை உறவை தாரமாக்கிக் கொள்ளும் அன்பில்லா அந்நியர் கலாச்சாரமான இசுலாமிய மரபு தமிழினத்துக்கு உகந்தது என்று பகுத்தறிவு வெங்காயம் ஈவெரா சிபாரிசு செய்கிறார்!

தமிழுணர்வு மிக்க தமிழக/உலகத் தமிழர்கள் தங்கையைத் திருமணம் செய்துகொள்ளும் அந்நிய பாரம்பரியத்தை, அதன் சமூக விளைவுகளை பகுத்தறிந்து பார்க்க வக்கற்ற ஈவெராவைத் தமிழர்தந்தை என்றும், கருணாநிதியை தமிழினத்தலைவன் என்றும் போற்றுகிறார்கள்!


இன்னும் ஒருவாரம் தான் இருக்கிறது இசுலாமிய ரம்ஜான் பண்டிகைக்கு..

தமிழுணர்வு மிக்க திரா"விட" பெத்தடின் தமிழர்கள் அனைவரும் பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா பரிந்துரைத்த சிற்றன்னை மகளை/தங்கையைத் தாரமாக்கிக்கொள்ளும் பாரம்பரியத்தை தமிழகத்துக்குத் தந்த இசுலாமிய ரம்ஜான் நோன்புக்கு கஞ்சி குடிக்க/ மட்டன் பிரியாணிக்கு ரெடியாவதில் பிசியாக இருப்பார்கள்.

வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை. இல்லை எனில் சிற்றன்னை மகளை/தங்கையைத் தாரமாக்கிக்கொள்ளும் பாரம்பரியத்தை தமிழர் கலாச்சாரத்தைச் சிதைப்பதாக உணரக்கூட உதவி செய்யாத திரா"விட"ப்பெத்தடின் பகுத்தறிவுடன் சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்று பாரிவள்ளல் மகள்களை கருப்பாக்கிக் காட்டி தமிழினத்தை இழிவு செய்துவிட்டாய் என்று வலையுலகில் உதார் காட்டுகிறோம்.


தமிழகத்தில் வாணியம்பாடி/ ஆம்பூர் /ஜெயங்கொண்டம்/தஞ்சையில் சிற்றன்னை மகளை/தங்கையைத் தாரமாக்கும் இசுலாமிய பாரம்பரிய திருமண விருந்தின் பிரியாணிக்குள் சிதைக்கப்படும் தொன்மையான பாரம்பரிய தமிழர் கலாச்சாரத்தையைச் சிதைத்துச் சுவைத்தபடி மானமிகு.வீரமணி,தமிக்குடிதாங்கி மருத்துவர் குடிதாங்கி, கறுஞ்சிறுத்தை திருமாவளவன் போன்றவர்கள் தமிழின மான மீட்பு நடத்துகிறார்கள்!

சாமானிய / சாம்பார் தமிழர்களால் வேறென்ன செய்யமுடியும்!

பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா பாசறையில் பயின்ற இந்த தமிழின மானப் போராளிகளுக்கு வீர வணக்கம் செய்வதைத் தவிர!

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, September 02, 2007

(169) தமிழுணர்வு முழங்கும் தமிழ் வலையுலகுக்கு ஒரு வயலும் வாழ்வும் செய்தி

தமிழ் மொழியைக் கேட்டு அதன் அர்த்தம் புரிந்து கொள்ளும் சக்தி இருந்ததற்காக சென்னை மெட்ரோ வாட்டர் / குழாயடி சண்டை நடக்கும் இடங்களில் அரிதாக வருந்தவேண்டிய சூழல் நம்மில் பலருக்கு ஏற்பட்டு இருக்கக்கூடும். அந்தத் தெருவைக் கடக்கும் முன்பே சமாதானம் அடைந்தும் விடுவோம். காரணம் அப்படியான அழுகல் தமிழ்மொழிப் பயன்பாட்டைக் கையாள்வோர் கல்லாமை என உணர்வதால்.

கணிணியில் தமிழ்மொழியைப் படித்து தமிழ்மொழிபேசுவோர் உள்ளத்தில் இருக்கும் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்ததற்காக வெட்கி வெந்து நொந்தேன்.

மனனப் பகுதியாக மதிப்பெண்ணுக்காக மட்டுமே தமிழ் ஆன்றோர் மொழிகளைக் கருதித் தாய்த்தமிழில் பள்ளியில் சொல்லித்தரப்பட்ட கருத்துக்களைக் காற்றில் விடுதலை செய்துவிடுவதால் வெளிப்படும் உண்மை வெளிச்சம் இல்லாத கருமையாக வெளிப்படுகிறது.

எனது பள்ளிக்கூடகாலத்தில் தமிழாசிரியர் எனக்குத் திருத்தமாகச் சொல்லித்தந்த தமிழ் ஆன்றோர் செய்யுளை நினைவு கொள்கிறேன்.


"இன்சொல் விளைநிலமாம் ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவூட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்!"


இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கணிணி நிபுணத்துவம் நிறைந்த உயர்கல்வி கற்ற நம் தமிழ்மக்கள் நிறைந்த தமிழ் வலை உலகில் பதிவர்கள் அனைவராலும் பின் பற்றப்பட வேண்டிய விஷயங்களை ஒரே செய்யுளாக "நச்" என்று நாலுவரியில் நம் தமிழ் ஆன்றோர் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னேயே சொன்னது.

நம்மால் வலை உலகில் பதிவுகளில் தமிழ் வார்த்தைகளாய், வாக்கியங்களாய் வெளிப்படுத்தப்படும் தமிழ் பண்புடன்,நல்ல தமிழாய் நறுமணத்துடன் திகழும்படி பார்த்துக்கொள்வது என்பது "தமிழுணர்வு"க்கு அடிப்படையாக அமைதல் அவசியம்.


அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, August 29, 2007

(168) வளைகுடா இந்தியர் பணத்தில் திளைக்கும் இந்திய வங்கிகளின் கயமை!

வளைகுடா இந்தியர்களுக்கு இந்திய வங்கிகள் வளைத்து வளைத்து செய்யும் மோசடியை கவனிப்போம்.

இந்தியா சென்ற 2006 ஆண்டு பெற்ற ஒட்டு மொத்த அயல்நாட்டு நேரடி இன்வெஸ்ட்மெண்ட் Foreign Direct Investment $ 16 பில்லியன் டாலர்கள்.
அதாவது 16 x 1000 x 1000000 x 41 = Rs.656,000,000,000 = அறுநூற்று ஐம்பத்து ஆறாயிரம் கோடி ரூபாய்கள்.

Bahran, Kuwait, Oman,Qatar, Saudi,UAE நாடுகளில் வசிக்கும் வளைகுடா வாழ் வெளிநாட்டு இந்தியர் இந்தியாவுக்கு 2006ம் ஆண்டில் அனுப்பி வைத்த மொத்த தொகை Total Gulf NRI remittance to India $ 25 பில்லியன் டாலர்கள்.
அதாவது 25 x 1000 x 1000000 x 41 = Rs.1,025,000,000,000/- ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேல்.

Foreign Direct Investment செய்யும் நிறுவனங்கள், நாடுகள், அமைப்புகளுக்கு இந்திய அரசு ஏராளமான சலுகைகள் தருகின்றன.

மேற்கத்திய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் அங்கேயே வீடு, உயர்படிப்பு,என்று சொத்து சௌகர்யங்களுக்கே தங்கள் பணத்தை மேற்கத்திய வங்கிகள் மூலமாகவே 90% பரிவர்த்தனை செய்தபடி அவர்கள் இருக்கும் அயல்நாட்டிலேயே தாங்கள் ஈட்டிய பணத்தைச் செலவிடுகிறார்கள்.

அயல்நாட்டில் உழைத்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு 26 பில்லியன் டாலர்கள் தொகையை (ஒரு லட்சம் கோடி ரூபாய்)அனுப்பும் வளைகுடா இந்தியர்களுக்கு இந்திய அரசாங்கம் ஏராளமான இன்னல்களை மட்டுமே அள்ளித்தருகின்றன.

இந்திய வங்கிகளில் புழங்கும் அயல்நாட்டு இந்தியர் பணத்தில் 70% வளைகுடா வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணமே.


வளைகுடாவில் இருந்து வேலை செய்து பொருளீட்டும் இந்தியர்களில் 90 சதவீதம் இந்திய வங்கிகளின் வாயிலாக மட்டும் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள்.

வளைகுடா ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கிராமங்களில், டவுன் பஞ்சாயத்துகளில் இருக்கும் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள். Foreign Exchange NRI account remittance வங்கிகளின் மாவட்ட தலைமையகத்திற்கு டிராப்ட் தரப்பட்டு வளைகுடா ஊழியரின் ஊர்க்கிளையில் வரவு வைக்க Out station collection charge என்ற வகையில் ஒவ்வொருவரின் பரிவர்த்தனைக்கும் 100 ரூபாய் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. குறைந்தபட்சம் ஒருவாரம் பதினைந்து நாட்கள் வரவு வைக்க ஆகிறது.

வங்கியின் வசம் இருந்த தொகைக்கு 14நாட்கள் வட்டி வீதத்தில் வட்டியும் கணக்குவைத்திருப்பவருக்கு வராது!


இந்திய வங்கிகளில் (டொமஸ்டிக் டெபாசிட்டுகளுக்கு) உள்நாட்டு பண வைப்பு வட்டி 9 %சதவீதம். வளைகுடா வாழ் இந்தியர்க்கு பண வைப்பு வட்டி 5.25%

இந்திய உள்நாட்டுப் பண வட்டி வீதத்திற்கும், வளைகுடா/வெளிநாடுவாழ் இந்தியர் பண வைப்புக்கும் இடையே யான வட்டி வீத வித்தியாசம் 3.75%


ஆனால் இந்திய அரசியல் வா(ந்)திகள், இந்திய வங்கிகளுக்கு வளைகுடா இந்தியர் அனுப்பும் பணத்திற்கு வளைத்து வளைத்து கட்டணம், டெபாசிட்டுக்கு வட்டிக்குறைப்பு என்று சலுகை பறிப்பு திட்டமிட்டு செய்துவிட்டு,பினாமிகள் மூலம் வளைகுடாவில் இருந்து உழைத்துச் சம்பாதித்த பணத்தை அனுப்புபவர்களைக் குறிவைத்து அணுகி, நீங்க ஹவாலா முறையில் அனுப்பினால் எக்சேஞ் ரேட் குறைவு, மறுநாளே பணம் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுவிடும் என்று அரசியல்வா(ந்)திகளின் பினாமிகள் இந்திய வளர்ச்சித்திட்டங்களில் ஊழல் செய்த கறுப்பு பணத்தை வெள்ளையாக்கி (Money Laundering-பணவெளுப்பு)அந்நியச்செலாவணி என்றும், Foreign Direct Investment என்று முகம் மாற்றி வந்து மீண்டும் இந்திய அரசின் வரிச்சலுகைகள் ஏராளம் பெறும் நிலை!

இந்திய வங்கிகளில் ஊழல் அரசியல்வா(ந்)திகள் ஆதரவும் ஆசியும் பெற்ற புண்ணாக்குத் தொழிலதிபர்கள் பெற்ற கடன்கள் வராக்கடனாக நிலுவையில் நின்றுபோய்விட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்களை இந்திய வங்கிகள் மீட்க வக்கில்லை! வெக்கமும் இல்லை!

வளைகுடா நாடுகளில் ஐம்பது டிகிரி வெய்யிலில், பாலைவனத்தில் உண்மையாய் வியர்வை உருக உழைத்து ஊருக்கு அனுப்பும் பணத்திற்கு உரிய பலனை இந்திய வங்கிகள் தர மறுக்கின்றன!

வளைகுடாவாழ் இந்தியர்கள் அனுப்பும் ஆண்டுத்தொகை ஒரு லட்சம் கோடியின் மீது இந்த 3.75% டெபாசிட்வட்டி வீத பேதத்தைக் கணக்கிட்டால் வரும் வித்தியாசம் 3,843,350,000/- ஆண்டுக்கு 384 கோடி ரூபாய்கள், டிராப்ட் கலெக்சன் என்று 15 நாட்கள் தாமதத்திற்கான வட்டி இழப்பைச் சேர்த்தால் இன்னும் பலகோடி ரூபாய்கள் சேரும்.

வளைகுடா இந்தியர்கள் அனுப்பும் 26 பில்லியன் டாலர்கள் பணத்திற்கு இந்திய வங்கிகள் டெபாசிட் வட்டி குறைப்பு, டிராப்ட்கள் நிறுத்திவைக்கப்படும் குறைந்த காலத்திற்கு வட்டி தராத மோசடி என்பவைகளின் மதிப்பைக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு நூறுகோடி ரூபாய் என்று கணக்கில் கொண்டாலும் இதைவைத்து வளைகுடாநாடுகளில் பல இன்னல்களிடையே கட்டுமான வேலை செய்யும் பல லட்சம் இந்தியர்களின் அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரிகள் ஆண்டுக்கு 4 என்ற வீதம் மாநிலத்திற்கு மாநிலம் இந்திய அரசு துவங்கலாம்.

உருப்படியாக இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை அனைத்து தளங்களிலும் மேம்படுத்த நல்லதாக எதையுமே யோசிப்பதில்லை, ஒன்றைக்கூட நல்லதாக செயல்படுத்துவதில்லை இந்திய அரசியல்வா(ந்)திகள். இவர்கள் செய்வதெல்லாம் இந்தியர்களை ஒற்றுமையாக இருக்கவிடாமல் மதம், சாதி, இனம் என்று பல்வேறு வகையில் கூறுபோட்டு மக்களின் உழைப்பினை ரத்தத்தை உறிஞ்சுவது மட்டுமே!

அன்புடன்,


ஹரிஹரன்

Tuesday, August 28, 2007

(167) கம்யூனிஸம் = கயமைத்தனம் + களவாணித்தனம்

பள்ளிக்கூட காலங்களில் கம்யூனிஸம் பற்றிக் கேள்விப்பட ஆரம்பித்த விஷயங்கள் எனது பதின்ம வயதில் பள்ளிச் சிறுவனாக இருந்த போது ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.

சோவியத் ரஷ்யாவில் எல்லோருக்கும் கம்யூனிஸ அரசாங்கமே ரொட்டி இலவசமாகக் கிடைக்கும் வகையில் ஆங்காங்கே மாஸ்கோ நகரத்தின் சாலை சந்திப்புகளில் கண்ணாடி அலமாரிகளில் ரொட்டிகளை அடுக்கி வைத்திருப்பார்கள், அலமாரியைப் பூட்டக்கூட மாட்டார்கள் என்று கம்யூனிஸ அரசின் சாதனைகள் காதில் வந்து விழும்.

ரொட்டி என்றாலே 25 பைசாவுக்கு கிடைத்த பன் ரொட்டியும் அதன் மீது அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு செர்ரியும் நினைவுக்கு வரும். பொய்யாக காய்ச்சல் என்று சிவப்பு செர்ரி வைத்த பன் ரொட்டிக்காக தவமிருந்திருக்கிறேன்.

இந்தியாவில் ஒரு பன் ரொட்டிக்கே பெற்றோரிடம் நாம் மன்றாட வேண்டியிருக்கிறது. மாஸ்கோவில் மட்டும் பிறந்திருந்தால் சாலை ஓரங்களில் அலமாரிகளில் இருந்து தேவையான ரொட்டியை எடுத்துக் கொள்ளும் பாக்கியம் இருந்திருக்கும் என்று எண்ணிக்கொள்வேன்.

இதற்கு மேலாக சோவியத் ரஷ்யாவின் தலைவர்கள் பெயர்கள் குருசேவ், கோர்பசேவ் என்று இருந்து என்னை கம்யூனிஸ்ட் ரஷ்யர்களை தமிழகத்தின் காராசேவ், சீனிசேவ் பண்டங்களுடன் தொடர்புடையவர்களாகக் கருத வைத்து ஒரு ஸ்பெஷல் அந்நியோன்னியத்துடன் மனதில் நினைக்க வைத்தது!

இந்திய ரஷிய ராஜாங்க உறவுகள் புரிபடும் முன்பே போடி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் மலையாகக் குவித்துவைக்கப்பட்ட சீனிச்சேவ், காராச்சேவ்களில் கம்யூனிஸ்ட் ரஷ்ய தொடர்பு இந்திய கிராமங்கள் வரையில் ஊடுருவியிருப்பதை உணரவைத்தது.

பள்ளி இறுதி வகுப்பு கோடை விடுமுறைக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சியில் மாஸ் மசாலா பால் சாம்பிளைச் சுவைத்துவிட்டு அங்கே இருந்த ஒரு புத்தகக்கடை/ கம்யூனிஸ மிர் பப்ளிகேசன்ஸ் பதிப்பகத்தின் மிக மலிவான விலையிலான புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது தமிழ்வாத்தியார் திரு.சுப்பிரமணி சொல்லித் தந்த தமிழ்நடையில் இல்லாத எழுத்துநடையில் எழுதப்பட்டிருந்தது கண்டு குழம்பினேன்.

மிர் பப்ளிகேசன்ஸ் புத்தகங்களில் கையாளப்பட்ட தமிழ் "ஜுனூன்" தொலைக்காட்சி தொடரில் பயன்படுத்தப்பட்ட கையாலாகத தமிழின் முதல் மூலம்!

பிற்பாடு 89-90ல் காராச்சேவ் தலைமையில் மன்னிக்கணும்... கார்ப்பசேவ் தலைமையிலான சோவியத் சிதறுண்டு போனபோது மாஸ்கோ எந்த திசையிலிருக்கிறது என்பதே தெரியாத நிலையிலும் ஏதோ ஒரு மெல்லிய சோகம்!

பிறகு ரஷ்யாவினுள்ளே நடக்கும் விஷயங்கள், செய்திகளாக உலக மீடியாவில் மெல்ல வெளிவரத் துவங்கியது. ஒரு ரஷிய ராணுவ வீரனுக்கு மாத சம்பளமாக ஒரே ஒரு தர்பூசணிப்பழம் மட்டுமே தரப்பட்டது என்று 1991-ல் வந்த செய்தி துணுக்குற வைத்தது.

அடுத்தடுத்து ரஷ்யாவைப் பற்றி வந்த செய்திகள் கம்யூனிஸ ரஷிய அரசாங்கத்தின் சாதனைகளை பறை சாற்றியது. பொதுவுடமை கம்யூனிஸ ரஷ்யப் பெண்கள் மிகுந்த தனியுடமைக்காக பொருளீட்டும் வாழ்க்கை வழியாகத் தேர்ந்தெடுத்தது விபச்சாரத்தை!

90களின் மத்தியில் பஹ்ரைன் தலைநகரில் நான் தங்கியிருந்த ஹோட்டலின் லிப்டில் கட்டுப்பாடு ஒழுக்கம் மிகுந்த சவுதிநாட்டினர் சிலர் உடைந்த ஆங்கிலத்தில் கேட்டது " வேர் ஆர் த ரஷ்யன் கேர்ள்ஸ்?" ரஷ்யாவின் நிலை நினைத்து நொந்தவாறே ஹோட்டல் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது டெலிபோன் ஒலித்தது. எடுத்தால் அடுத்த முனையில் ஹஸ்கி வாய்சில் ஒரு ரஷிய அழகி எனது மாலைப்பொழுதை மகிழ்வூட்ட ரேட் ஒப்பித்தாள்!!


அமெரிக்கா இந்தியாவைத் தாக்கினால் ரஷ்யா உடனடியாக இருந்த இடத்திலிருந்தே பட்டனை அமுக்கி மிஸைல் அனுப்பி இந்தியாவைக் காக்கும் என்று கம்யூனிஸ ரஷ்யாவின் தொழில்நுட்ப உறவு அருமை பற்றிச் சிலாகிப்பார்கள் இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள்.

ரஷ்யாவின் டகால்டி தொழில் நுட்பம்.

இந்திய ராணுவத்திலிருக்கும் , பயிற்சியின் போது தினத்திற்கு ஒன்றாக விழுந்து நொறுங்கும் ரஷ்ய மிக் 25 போர்விமானங்கள் ரஷ்ய தொழில் நுட்பத்தின் இன்னொரு அனுபவரீதியாக உணர்ந்த உதாரணம்.

கம்யூனிஸ ரஷ்யாவின் அணுசக்தி தொழில் நுட்பம் பொதுவுடமை ரஷ்யர்களுக்கே புரிபடாதது என்பது 1986 ல் செர்னோபில் அணு உலை வெடிப்பு நடந்து உலகுக்கு வெளிப்படுத்தியது.


2004ல் நார்வே-ரஷ்ய எல்லையில் பேரண்ட் கடலின் ஆழத்தில் ரஷ்யாவின் Kursk அணுசக்தி நீர்மூழ்கி Submarine 118 ரஷ்ய ராணுவவீரர்களுடன் சிக்குண்டபோது ரஷ்யா அவர்களை மீட்கத் திணறிய பாடு, இரண்டு வாரம் முயன்று முடியாமல் நார்வே தந்த உதவியை ஏற்காமல் 118 வீரர்களும் மாண்டனர். கடைசியில் நார்வே உதவியோடு முழுகிப்போன Kursk அணுசக்தி நீர்மூழ்கி Submarine ஐ மேலே கொண்டுவந்தனர்.


ரஷியாவின் ஆட்டோ மொபைல் தொழில் நுட்பம் என்பது 200% டகால்டி தொழில் நுட்பம் என்பதில் ஐயம் இல்லை.

1970 பியட் நிறுவன technology பயன்படுத்தும் கார்தான் இன்றும் ரஷியாவின் தேசிய கார்! லாடா LADA என்ற கண்றாவி கார், ஜீப் இவைதான் ரஷ்யாவின் தயாரிப்பு!

லெனின், ஸ்டாலின் என்று பொதுவுடமை கம்யூனிஸம் பேசியே அழிந்த ரஷ்யாவின் பொருளாதாரம் இன்றைக்கு மேம்படத் துவங்கியிருப்பதற்கு காரணம் தனியுடமை அமெரிக்காவின் ஈராக் போரால் பீப்பாய் 12 டாலரிலிருந்து 70 டாலருக்கு மேலெழும்பிய கச்சா எண்ணைய் விலை!

பொதுவுடமை கம்யூனிஸம் பேசியே சிதைந்துபோன ரஷியாவின் பெரும் நிதி தேவைப்படும் விண்வெளி ஆராய்ச்சிக்கு பணமுடை நேர்ந்தபோது அமெரிக்க தனியுடமை தொழிலதிபர்களை பத்துலட்சம் டாலர்கள் கட்டணத்தில் சுற்றுலாவுக்கு விண்வெளிக்கு அழைத்துச்சென்றது!

ரஷ்யாவின் கம்யூனிஸம் வீழ்ந்த பின்னும் கயமைத்தனம் இன்னும் முழுமையாகப் போகவில்லை! 2003ல் ரஷ்ய மிகப்பெரும் தனியார் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவரான மிகையீல் கோட்ரோவோஸ்கியை ரஷ்ய அரசியலில் தனியுடமைப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டியதற்காக வரி ஏய்ப்பு என்கிற போர்வையில் Yukos Petroluem எனும் தனியார் நிறுவனத்தை அரசுடமையாக்கி சிதைத்து, நிறுவனத்தின் தலைவரை எட்டு ஆண்டுகள் சிறைக்குள் வைத்திருக்கிறது ரஷ்ய அதிபர் விளடிமிர் புடின் அரசு.

இன்றைக்கு ஆர்டிக்கின் பனிக்கடல் அடியே ரஷ்ய தேசியக்கொடியைப் பதித்து அதனடியே இருக்கும் பெரும் பெட் ரோலிய வளத்துக்கு பண்டைய ரஷ்ய ஜார்மன்னர்கள் பாணியில் ரிசர்வ் செய்து சர்ச்சையை, நிஜமான Cold warஐ ரஷ்யா ஆரம்பித்துவைத்திருக்கிறது!


ரஷ்யா இன்னமும் வெளிப்படையாகப் புரிந்துகொள்ளும்படியான தேசமாக இல்லை.
இரும்புத்திரை போர்த்திய தேசமாகவே ரஷ்யா இன்றும் தொடர்கிறது.


குவைத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ரஷ்ய நர்ஸ் ஒருவர் இந்தியன் என்பதால் என்னிடம் மெனக்கெட்டுப் பேசி தான் "மேட் இன் இந்தியா" உடைகள் அணிந்து வளர்ந்ததை, ராஜ்கபூர், அமிதாப் பச்சன் படங்கள் பார்த்திருப்பதை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார்.

ரஷ்யர்கள் வாங்கியது இந்திய உடைகளை மட்டுமே.. ரஷ்யர்கள் ரசித்தது ராஜ்கபூரையும், அமிதாப்பையும் மட்டுமே! இந்தியர்கள் எத்தனை நூறு மிக் 25 போர்விமானங்கள் ரஷ்யாவிடமிருந்து வாங்கி தினத்துக்கு ஒன்றாக இந்திய ராணுவத்தில் பயிற்சியின் போது விழுந்து நொறுங்குவதைப் பார்க்கிறோம்.

மரியா ஷரபோவா, ஆன்னா கார்னிகோவா போன்ற ரஷ்ய டென்னிஸ் வீராங்கனைகளை இந்தியர்கள் வோட்காவை அடித்தபடியே ரசித்து என்ற அளவில் இந்தியா-ரஷ்யாவுடனான உறவுக்கு பதில் மரியாதை செலுத்துவதோடு இருக்கட்டும்.

அணுசக்தி தொழில் நுட்பத்திற்கு அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்தியாவுக்கு அவசியம்.

இந்தியா எப்படியும் அணுசக்தி மற்றும் இதர தொழில்நுட்பத்தை வெளியே இருந்துதான் வாங்கவேண்டும் எனும் போது நல்லதாக வாங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்!

நல்ல தொழில்நுட்பத்தை இந்தியா வாங்க முட்டுக்கட்டையாக இருக்கும், இந்தியாவில் இன்னமும் உலகளவில் காயலான் கடைக்குப் போய்விட்ட பொதுவுடமை கம்யூனிஸம் பேசும்
பரதன், சீதாராம் யச்சூரி, பிரகாஷ்கராத், ஜோதிபாசு,புத்ததேவ் போன்றவர்களை பொதுவுடமை-கம்யூனிஸ தெய்வங்களான லெனின், ஸ்டாலின்,மாவோ, காஸ்ட்ரோ, சேகுவேரா, தோன்றிய தேசங்களான ரஷ்யா,சீனா, கியூபா,பொலிவியா போன்ற பொதுவுடமை கம்யூனிசகொள்கையால் பிரகாசிக்கும் தேசங்களுக்கு 14 ஆண்டுகள் புனிதப் பயணிகளாக அனுப்பிவைப்போம்!

இந்த களவாணித்தனம் + கயமைத்தனம் = கம்யூனிஸம் பேசித்திரியும் காம்ரேடுகள் 14 ஆண்டுகள் கம்யூனிஸ கொள்கை நிறுவிய காம்ரேடு தெய்வங்கள் பிறந்த தேசங்களுக்கான புனிதப்பயணத்திலிருந்து திரும்பி வரும்போது 2020ல் காம்ரேடுகள் தொல்லையில்லா இந்தியா கலாம் கனவுகண்டபடி தொழில்நுட்பத்தில், அனைத்துவிதத்திலும் வல்லரசாகாவிட்டாலும் கண்டிப்பாக முன்னேறி இருக்கும்!

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, August 27, 2007

(166) வளைகுடா நாடுகளில் தற்கொலை செய்துகொள்ளும் இந்திய ஊழியர்கள்

இரு நாட்களுக்கு முன்பாக அல் ஜசீரா ஆங்கில தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான Blood Sweat and Tears எனும் நிகழ்வு வளைகுடா நாடுகளில் கட்டுமான வேலைகளில் சிக்கிக்கொண்டு கொத்தடிமைகளாக்கப்பட்டு அல்லலுக்கு உள்ளாகும் உழைப்பாளர்களைச் சந்தித்து அவர்களது நிலையினைச் சித்தரிக்கும் நிகழ்ச்சி.

குறிப்பாக அமீரகம் எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் கட்டுமானத் துறையில் ஊழியர்களாக 70 சதவீதம் இருக்கும் இந்தியர்கள், இதர துணைக்கண்டத்தவரின் அடிப்படை நலன் மிக மோசடி செய்யப்படும் சூழ்நிலையை வெளிச்சம் போடுகிறது இந்த நிகழ்வு.

செல்வக்குமார் எனும் 22 வயது தமிழ் இளைஞன் லேபர் கேம்ப்பில் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதற்குக் காரணம் டிராவல் ஏஜெண்டுக்குத் தரவேண்டிய 65000 ரூபாய் கடன் சுமை, வேலை செய்த நிறுவனம் ஒன்பது மாத சம்பளம் தராதது, உடல்நலக்குறைவுக்கு மருத்துவம் பார்க்க கையில் காசு இல்லாத நிலை.

இந்த ஆண்டு துபாயில் இந்திய தூதரகத்தில் பதிவான இந்திய ஊழியர் தற்கொலைகள் நூறுக்கும் மேல். கடந்த ஆண்டினை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகம்.

அதாவது சராசரியாக மாதத்திற்கு 10 இந்தியர்கள் துபாயில்(அமீரகத்தில்) ஏஜண்ட் கடன் தொல்லை, பலமாதங்கள் சம்பளம் கிட்டாமை, அடிப்படை தங்குமிட, உணவு, மருத்துவ வசதிகள் கூட கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான செல்வக்குமார் மாதிரியான நபர்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனங்களில் பிரதானமானது Ambe International என்பது. மோசடி செய்யப்பட்டு, ஏமாற்றப்பட்டு துபாய் வந்து சேர்ந்து பலமாத சம்பளம் கிடைக்காமல் நூற்றுக்கணக்கில் செல்வக்குமார்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.


நரைத்த தாடியுடன் கண்களில் சோகமுமாய் செல்வக்குமாரின் தந்தையும், தளர்ந்துவிட்ட தாயும் சுவரில் மாட்டப்பட்ட சந்தனப்பொட்டுவைத்து, மாலையிடப்பட்ட படத்திலிருக்கும் 22வயதில் துபாயில் தூக்கிட்டுக்கொண்டு மடிந்துபோன தன் மகனைக் கடைசியாகச் சந்தித்தது- இரண்டாண்டுகளுக்கு முன்பாக நிலத்தை விற்றுக்காசாக்கிக்கொண்டு ஏஜெண்டை சந்தித்து துபாய்க்கு பயணப்படுவதற்கு முன்பாக!

அல்ஜசீரா தொலைக்காட்சி ரகசிய கேமராக்கள் கொண்டு படம் பிடித்த விபரங்களுடன் இந்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க புகார் தந்திருக்கின்றார்கள்.

இந்தியாவில் பணிக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டுகள் அனைவரும் அரசியல் தொடர்புடையவர்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வா(ந்)திகள் தொடர்புள்ள பத்து தொலைக்காட்சிகளும் இருபத்து நாலுமணி நேரமும் சினிமா, குத்துப்பாட்டு, மடத்தனமான சீரியல்கள் என்பதான நிகழ்வுகளை மட்டுமே மக்கள் அக்கறையோடு தொலைபரப்பும்.

ஆட்சி,அதிகாரத்தில் இருக்கும் இந்திய / தமிழக அரசியல் கட்சிகள் அல்ஜசீராவின் ரகசிய கேமராவில் படம்பிடிக்கப்பட்ட ஏஜெண்டுகள் க்ளிப்பை இன்னொரு செல்வக்குமாராக இந்தியர்/தமிழர் மோசடி விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் நிலை மாற்றிட ஆவன செய்வார்களா??

இல்லை அரசியல் கட்சிகள் தங்களது வழக்கமான உத்தியான கட்டிங்/கமிஷன் ரேட்டை உயர்த்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு வளைகுடா வேலைக்கு கல்வி அறிவு குறைந்த கிராமத்து மக்களை இன்னும் தொடர்ச்சியாக மோசடி செய்தபடியாக ஆட்களை அனுப்புவதைச் செய்தபடியே இருக்கப்போகிறார்களா??

துபாயில் வேலைசெய்யும் ஏழு இலட்ச இந்தியர்களில் 80% கிட்டத்தட்ட ஐந்து லட்சம்பேர் கட்டுமான உழைப்பாளர்கள்! மிக மிகக் குறைவாக மாதம் 500 திர்ஹாம் அளவில் இவர்கள் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும் தொகை 500 x 500000 x16 = Rs. 4,000,000,000 (நானூறு கோடி ரூபாய்) ஒரு ஆண்டுக்கு 400 x 12 = 4800 கோடி ரூபாய்!


சம்பாதித்த காசை அயல்நாட்டின் பச்சை அட்டை நிரந்தர குடிமை பெற்று அயல் நாட்டிலேயே முடக்கி செத்தாலும் அயல்நாட்டிலேயே புதைக்க வேண்டும் என்று விரும்பும் பேராசியர் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் மரணித்தால் ஒன்பது பேருக்கு அரசு செலவில் விமான டிக்கெட் தரும் பகுத்தறிவு அரசியல்வா(ந்)திகள் நிறைந்த நாடு நம் இந்தியாவாகத்தான் இருக்கும்!

வளைகுடா கட்டுமான வேலைக்கு நிலத்தை விற்று ஏஜெண்டுக்குப் பணம் கட்டி விமான டிக்கெட் எடுத்து வந்து துபாயிலிருந்து தன் தாய் நாட்டிற்கு மாதம் நானூறு கோடி நிதியைத் தன் ரத்தம் சிந்தி 50மாடிக் கட்டிடத்தின் மீதும், ஐம்பது டிகிரி வெய்யிலிலும், கட்டுமானப் பணி நடக்கும் இடத்திலேயே காற்றடித்து மண் விழுந்த நிலையில் மதியச் சாப்பாட்டை சாப்பிட்டு உழன்றபடியே உழைத்து அனுப்பி வைக்கும் செல்வக்குமார் மாதிரியானவர்களை தளரவைத்து, மனமுடைந்து தற்கொலை செய்ய வைப்போம்!

அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, August 23, 2007

(165) குடிதாங்கி ராமதாசு சிவாஜி பட "அங்கவை.. சங்கவை" மேட்டரில் கப்சிப் ஏன்?

சிவாஜி திரைப்படத்தில் அங்கவை சங்கவை என்று பாரிவள்ளலின் மகள்கள் பெயர் கொண்ட பாத்திரங்கள் தமிழர் மாண்பை குறைத்துவிட்டதாக எழுந்த தமிழர் எழுச்சியில் குடிதாங்கி ராமதாசு இன்று வரை ஏன் கப்சிப் என்று இருக்கிறார்!

கொஞ்சம் உற்று நோக்குவோம்!

கடையேழு வள்ளல்களில் முதன்மையானவன் பாரி வள்ளல். பாரிவள்ளலின் வள்ளல் தன்மையை தமிழ் மக்களிடையே பறைசாற்றும் நிகழ்வு எது?

சாலையோரத்தில் படர்வதற்குப் பிடிமானம் இல்லாமல் தவித்த ஒரே ஒரு முல்லைக் கொடிக்குத் தன் தேரையே தந்து முல்லைக்கொடி படர வழிவகை செய்த செயல் மூலம் தமிழர்களுக்குப் பாரிவள்ளல் அறிமுகமாகிறார்.

அப்படியே ஜூம் பண்ணுங்க குடிதாங்கிக்கு (விஜய்காந்த் ஸ்டைலில் ஜூம் என்று சொல்லவும்)

குடிதாங்கி ராமதாஸை தமிழர்கள் மத்தியில் பெருவாரியாக அறிமுகப்படுத்திய நிகழ்வு எது?

தமிழகத் தலைநகருக்கான பிரதான சாலையின் இருமருங்கும் நன்கு வளர்ந்த மக்களுக்கு நிழல் தரந்துகொண்டிருந்த ஓராயிரம் மரங்களை வெட்டி வீசிய வன்முறைச் செயல்!

முல்லைக்கொடிக்குத் தனது தேரை தாரைவார்த்துத் தந்த பாரிவள்ளல் குடிதாங்கியைப் பொறுத்த அளவில் பிழைக்கத் தெரியாத ஆள்!

குடிதாங்கி சந்தன மரவெட்டி வீரப்பனுக்கு / வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு உச் கொட்டி அனுதாபம் தெரிவித்தது என்பது இருவரும் மரவெட்டியாய் ஒத்த செயல் செய்ததாலேயே!

வீரப்பன் காட்டுக்குள் சந்தன மரவெட்டி!
குடிதாங்கி ராமதாசு ரோட்டில் புளியமரவெட்டி!

அங்கவை.. சங்கவையின் தந்தை பாரிவள்ளலோ ஒரே ஒரு முல்லைக் கொடிக்குப் போய்த் தனது தேரைத் தந்தவர்!

இப்பச் சொல்லுங்க... தன் அளவுக்கு ஓரளவுக்காவது ஒத்து இருக்கும் இன்னொரு மரவெட்டிக்குத்தான் மனமிறங்கி குரல் கொடுப்பேன் என்று கொள்கைக்குன்றாக குடிதாங்கி ராமதாசு இருப்பது தவறா?


அன்புடன்,

ஹரிஹரன்

(164) தைலபுர குடிதாங்கி ராமதாசு அடிக்கடி கட்சி தாவுவது ஏன்?

பாமக நிறுவனர் குடிதாங்கி ராமதாசு அரசியலில் ஒரு கட்சி விட்டு அடுத்த கட்சி தாவி பலன் பெறுவதில் உலகிலேயே சாதனை படைத்தவர்.

இப்படி கட்சித்தாவி உலக சாதனை படைக்கும் ஆற்றல், திறன் எங்கிருந்து வந்தது குடிதாங்கி ராமதாசுக்கு? வேறென்ன வாஸ்து தான்!

திண்டிவனத்தில் இருந்தபோது இல்லாத ஆற்றல் தைலாபுரத்தில் குடிவந்தபின் குடிதாங்கிக்கு வந்தது என்பது மெய்தானே?

தைலாபுரம்...தைலபுரம்...தைலம்.. நீலகிரித்தைலம்...

நீலகிரித் தைலம் தயாரிப்பு பற்றி பள்ளிக்கூடத்தில் நாம் படித்திருக்கிறோம்.

ஒவ்வொரு நெடிதுயர்ந்த யூகலிப்டஸ் மரங்களில் மீதும் ஏறியவர் இலைகளைப் பறித்து கீழேபோட்டு விட்டு, மீண்டும் மீண்டும் மரத்தில் இறங்கி ஏறாமல் ஒரு மரத்தில் இருந்தபடியே அடுத்த மரத்திற்கு வானரங்கள் போல் தாவி மீண்டும் இலைகளைப் பறிப்பார்கள்
பறித்த இலைகளை வேகவைத்து வரும் நீராவியைக் குளிரவைத்தால் நீலகிரித்தைலம் தயார்!

இப்போ தைலபுரதோட்ட வாசியான குடிதாங்கி இராமதாசு தமிழக அரசியலில் செய்வதை ஒப்பு நோக்குங்கள்: முதலில் அதிமுக உடன் சட்டமன்ற தேர்தலுக்குக் கூட்டணி, பின்பு திமுகவுடன் பாரளுமன்றக்கூட்டணி, பிறகு அன்புச் சகோதரியுடன் கூட்டணி, அப்புறம் தமிழினத்தலைவருடன் கூட்டணி...பாஜகவுடன் மத்தியில் உறவு , காங்கிரசுடன் மாநிலத்தில் உறவு...

தாவு தாவு என்று தாவித் தாவியே அ முதல் ஃ வரையிலான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு பின்பு விமர்சனங்களால் வேகவைத்து கூட்டணி உறவு, ஆதரவு தொடரும் என குளிரவைத்து கமிஷன், பதவிப் பலன் பெறுவது!

தைலபுர ஸ்தல வாச வாஸ்து புராணத்தில் சூட்சுமமாக குடிதாங்கி ராமதாஸின் அரசியல் வஸ்து அடங்கியிருக்கிறது.

அலோபதி டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் ஹோமியோபதி / நாட்டுமருத்துவ நீலகிரித் தைலமகிமை அறிந்தவர் குடிதாங்கி ராமதாசு!


அன்புடன்,


ஹரிஹரன்

Wednesday, August 22, 2007

(163) பாமக விலிருந்து ராமதாஸ் விலகல்

குமுதம் ரிப்போர்ட்டரில் குடிதாங்கி ராமதாஸிடம் கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: எதிர்காலத்தில் விஜய்காந்தின் தேமுதிகவுடன் கூட்டணி வைக்குமா பாமக?

குடிதாங்கி ராமதாஸ் பதில்: பாமக எந்த நடிகருடனும் கூட்டணி வைக்காது!

பெரிய மருந்து தமிழ்க்குடிதாங்கி ராமதாஸ் அவர்களின் மாஸ்டர் பீஸ் நடிப்புகளில் தமிழகம் கண்டு ரசித்த காட்சிகள்/நிகழ்வுகள் சில:

1)அரசியல் கூட்டுக்களவாணிக் கூட்டணி நடிப்பு...
2)பொங்குதமிழ் இயக்கம் அமைத்து தமிழைப்பாதுகாப்பதான நடிப்பு...
3)மரவெட்டி டூ பசுமைத்தாயக அக்கறை நடிப்பு...
4)தன் குடும்பத்தினர் எந்தப் பதவியிலும் இருக்கமாட்டார்கள் என்ற தன் சத்தியம் மீறி அன்புமணியை மத்திய அமைச்சர் பதிவியில் வைத்து அழகுபார்க்கும் தான் தான் தன் சமூகத்தினர்க்கு சத்தியம் செய்தது - மீறினால் தனக்கு முச்சந்தியில் சவுக்கடி தண்டனை அறிவித்தது என்பதை மறந்த நடிப்பு...

இப்படி இயற்கையான நடிப்புத் திறன் நிறைந்த அரசியல் நடிகர் குடிதாங்கி ராமதாஸ் நடிகர்களுக்கும் பாமகவுக்கும் கூட்டணியோ தொடர்போ இருக்காது என்று செல்ஃப் ஹிட் செய்து பாமகவிலிருந்து தன்னை விலக்கி கொண்டுவிட்டாரா???

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, August 21, 2007

(162) இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடரக் காரணம் பஞ்சாப் சர்தார்ஜிக்கள்

இலங்கைத் தமிழர் பிரச்சினை ஏன்? என்பது அனைத்து 100% அக்மார்க் இலங்கைத் தமிழருக்குமே ஒருமித்தபடி என்னன்னு இன்றளவில் 100% தெரியாத விஷயம்.

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் இன்றையக்கு இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கும் என்று வை.கோ சொல்லியிருக்கிறது செய்தி.

இந்திரா காந்தியை சர்தார்ஜிக்கள் துப்பாக்கியால் சுட்டுத் தீர்த்துக்கட்டியதால் இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்படமுடியவில்லை.

ஆக இன்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீராமல் தொடருவதற்குக் காரணம் இந்திரா காந்தியைக் கொன்ற சர்தார்ஜிக்கள் தான் காரணம்...

சர்தார்ஜிக்கள் என்றாலே ஜோக்குதான்.

1984ல் இந்திரா காந்தியைச் சுட்டுக்கொன்ற சர்தார்ஜி(களு)க்கே தெரிஞ்சிருக்காது 2007ல் வை.கோ ஜோக்கடிப்பதிலே சர்தார்ஜியை மிஞ்சிடுவாருன்னு :-))


குறிப்பு: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எனக்கு ஒரு கருத்தும் கிடையாது!


அன்புடன்,


ஹரிஹரன்

(161) அங்கவை...சங்கவை...இங்கவை...வை ராஜா வை..தமிழ் உண(ர்)வு

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் நடிக்க இரண்டு கோடி சம்பளம் வாங்குகிறாராம்.
நல்லா இருக்கட்டும். எல்லா வளத்துடனும் சிறப்புடன் வளமா வாழ வாழ்த்துவோம்.

நேற்று இரவு சன் டிவியில் வந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் வடிவேலுவின் சூப்பர் ஹிட் நகைச்சுவைக் காட்சிகளை தொகுப்பாளினி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். எந்த திரைப்படத்தில் இந்த நகைச்சுவைக்காட்சி என்று தெரியவில்லை. சாராம்சம் இதுதான்:

வடிவேலு ஒரு முடிதிருத்தும் கடைக்கு வருகிறார். நாவிதர் கடையின் உள்ளே ஒருவருக்கு சவரம் செய்துகொண்டிருக்கிறார்... கடையின் வெளியே பெஞ்சில் ஒருவர் அமர்ந்து தினசரி செய்திகளை சத்தமாகப் படித்தபடியே வடிவேலுவிடம் பேச்சு கொடுக்கிறார்.

செய்தித்தாள் படிப்பவர் : (உரத்த குரலில்) சுனாமி சேதாரங்களை அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் பார்வையிட்டார்... வடிவேலைப் பார்த்து கிளிண்டனைத் தெரியுமா?

வடிவேலு: அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க..

செய்தித்தாள் படிப்பவர்: கிளிண்டனைத் தெரியாமல் ஏன் சலூனுக்கு வந்தாய்?
மீண்டும் செய்தி படிப்பதைத் தொடர்கிறார்... சதாம் உசேனைத் தூக்கில் போட்டது சரியா?
வடிவேலைப் பார்த்து சதாம் உசேனைத் தெரியுமா?

வடிவேலு: அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க.. கடைவீதியில் கறிக்கடை வைத்திருக்கும் உசேனைத் தெரியும்

செய்தித்தாள் படிப்பவர் : சதாம் உசேனைத் தெரியாமல் ஏன் சலூனுக்கு வந்தாய்?

டென்சனான வடிவேலு: உனக்கு முனியாண்டியைத் தெரியுமா?

செய்தித்தாள் படிப்பவர்: யார் முனியாண்டி எனக்கு ஏன் தெரியணும்?

வடிவேலு : உன் மனைவியை உனக்குத் தெரியாமல் ஒருவருஷமாக "வைத்துக் கொண்டிருக்கும்" முனியாண்டி உன் மனைவியோடு ஓடிப்போயிட்டிருக்கிறான்..

இதைக் கேட்டதும் அய்யோ ஓசம்மா...மோசம் போயிட்டியேன்னு ஓடுகிறார் செய்தித்தாள் படித்தவர்..

ஓடு ஓடிப்போய் ஓசூர் எக்ஸ்பிரஸ்லே போய்த் தேடுன்னு டிப்ஸ் வேறு வடிவேலு தருகிறார்.

அடுத்து நாவிதர் வடிவேலிடம் : முனியாண்டி தான் அந்தாளோட பொண்டாட்டியை வைச்சிட்டுருக்கான்னு எப்படி உங்களுக்குத் தெரியும்?

வடிவேலு: அது உன் பொண்டாட்டியை வைத்துக்கொண்டிருக்கும் இந்த ஆறுமுகம் சொல்லித்தெரியும்..

நாவிதரும் சவரம் செய்துகொண்டிருந்த ஆறுமுகம் என்ற நபரும் அலறியபடியே ஓடுகிறார்கள்.


மழைத்துளி விழுந்த தார்ச்சாலை நிறத்தில் இருக்கும் அக்மார்க் தமிழன் வடிவேலு, தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை மண்ணின் மைந்தன் வடிவேலு, இரண்டுகோடி ரூபாய் சம்பளம் வாங்கியபடியே தமிழ்த் திரைப்படங்களில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க மனைமாட்சியை
இந்த அளவுக்குப் பெருமைப்படுத்தியிருக்கக்கூடாது!


அடுதத கொடுமை தொகுப்பாளினியின் அறிவிப்பு... நேயர்களே வைகைப்புயலின் இந்த காமெடி சீனை ரசித்து மனம் விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பீர்கள் அடுத்து சந்திக்கும் வரை பை..பை..

இதே வடிவேலு கிரி எனும் படத்தில் தன் தமக்கையை வைத்துப் பிழைப்பதாக கேடுகெட்ட கலாச்சாரப் பிழையுடன் கூடிய நகைச்சுவையை!! செய்திருப்பார்! வாழ்க வடிவேலு! இன்னும் இதுமாதிரியான நகைச்சுவைகாட்சிகளை பெருவாரியாக ரசித்து தமிழ்மக்களாகிய நாம் வடிவேலுவின் சம்பளத்தை இரண்டு கோடி ரூபாயிலிருந்து நான்கு கோடி ஆக்குவோம்!


இன்னொரு சினிமா நகைச்சுவை காட்சியில் சாமி, பூதம் இவைகளில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவா(ந்)தி மணிவண்ணன் நகைச்சுவை பாத்திரங்களில் உச்சத்தில் இருந்து நடித்த போது வந்த ஒரு படத்தின் நகைச்சுவைக்காட்சியில் உதிர்த்த முத்து இது:

ஒரு குடியிருப்பில் ரெண்டு சிறுவர்களிடம் பேசும் காட்சி:

மணி வண்ணன் : டேய் தம்பி அது யார்ரா உங்கூட இருக்கும் பையன்?

சிறுவன் : என் தம்பி

மணி வண்ணன் : என்ன வயசுடா உன் தம்பிக்கு?

சிறுவன் : ரெண்டு வயசுஆகுது

மணிவண்ணன் : எப்படி? உங்கப்பன் துபாய்க்குப் போய் மூணு வருஷமாச்சு... உன் தம்பிக்கு ரெண்டு வயசா? எப்படி? குழப்புறயே...!!


சின்னக் கலைவாணர் விவேக் ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் கறுப்பு மனைவி, கறுப்பு புருஷனுக்கு கலரான குழந்தை பிறந்ததால் எழுந்த சந்தேகத்தினை கறுப்பு பலப்பம் கறுப்பு சிலேட்டில் எழுதும் போது வெள்ளை நிறத்தில் எழுத்து உருவாவதைக் காட்டி பஞ்சாயத்து செய்துவிட்டு... அந்தப் பெண்ணிடம் ப்ரௌன் நிறத்தில் குழந்தை வேணும்னா எங்கிட்ட வான்னு வெட்கப்பட்டுக்கொண்டு சொல்வார்..

இன்றைக்கு அடல்ட்ரி தான் தமிழ் சினிமாவின் மச் டிலைட்டட் & அல்டிமேட் நகைச்சுவை!

வள்ளுவர் போன்ற தமிழ் ஆன்றோர்கள் மனைமாட்சி குறித்துச் சொன்னதெல்லாம் இன்றைக்கு தமிழர்கள் எல்லோருக்கும் பொருந்துமான்னு கேள்வி வருது.

சிவாஜி படத்து அங்கவை.. சங்கவை மேட்டரை வைத்து சுஜாதாவை வை.. ராஜா வை... உன் பதிலை இங்கவைன்னு பாமரத்தனமா அசுர ஓசையுடன் தமிழுணர்வு பொங்க வலைப்பதிவில் எழுப்புகிறோம்!

சிவாஜியில் நடிகை ஸ்ரேயாவின் நெகிழ்ந்த மேலாடை வழியே வெளித்தெரியும் அங்கங்களைக் கண்டு மகிழ்ந்த படியே ஸ்ரேயாவின் திறந்த மனத்தைப் பாராட்டிக்கொண்டே அண்ணாமலையில் நேற்றைய அண்ணி குஷ்பூ மாதிரி இன்றைய அண்ணி ஸ்ரேயா ஆவதற்காக மணிமேகலைப்பிரசுர சினிமாப் பிரபலங்கள் முகவரிகள் புத்தகத்தில் ஸ்ரேயாவின் சென்னை/ஹைதராபாத் இல்லம் தேடி ஸ்ரேயா அண்ணியின் இளைத்த உடல் தேறி வர சாத்துக்குடி, ஹார்லிக்ஸ் சகிதம் நிற்பவர்கள்தானே தமிழர்களாகிய நாம்!

கூடையில் என்ன பூ குஷ்பூ என்ற வரிகளை வகைக்கு ஏற்ப புரிந்து கொண்டு கோவில் கட்டி வழிபட்ட நவீன பாரம்பரியம் தமிழர்களாகிய நமது பாரம்பரியம்! அடுத்த தலையாய கடமை புது அண்ணி ஸ்ரேயாவுக்குத் தமிழகத்தில் சிலை எடுப்பதுதானே!


வைகைப்புயல் வடிவேலின் தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய மனைமாட்சியை பாலியல் இச்சை வக்கிர வடிவமைப்பு நகைச்சுவைக்காட்சியை நயந்து ரசித்த தமிழர்களாகிய நாம்...

பகுத்தறிவு வா(ந்)தி மணிவண்ணனின் கணவன் மனைவி பிழைப்பு காரணமாக பிரிந்து வாழும் சூழலை மங்கி, மாசுபட்ட மனைமாட்சியாய் சித்தரித்த சீக்குப்பிடித்த நகைச்சுவைக் காட்சியை ரசித்த தமிழர்களாகிய நாம்..

இன்ன பிற நடிகர்களின், திரைப்பட கர்த்தாக்களின் பாலியல் வக்கிர, மனைமாட்சி மாசு நிறைந்த காட்சிகளை கைதட்டி விசிலடித்து ரசிக்கும் தமிழர்களாகிய நாம்...

இன்றைக்கு வலையுலகில் அசுரத்தனமான ஓசையுடன் பாமரத்தனத்துடன் பாரிவள்ளலின் மகள்கள் அங்கவை சங்கவையை கருப்பாக்கிக் காட்டி பார்ப்பனராகிய, திருவரங்கத்து அக்கிரஹார சுஜாதா மட்டம் தட்டிவிட்டார் பொங்கி எழுங்கள் என்று அறைகூவுகிறோம்!

ரெண்டு கோடி சம்பளம் தந்து வடிவேலு, விவேக் போன்றோர் தமிழர் பாரம்பரிய மனைமாட்சியை நெறியற்ற வாழ்வியலாகச் சித்தரிக்கும் செய்தியை அங்கீகரித்து கைதட்டி விசிலடித்து மகிழும் பகுத்தறிவுத் தமிழர்களாகிய நமக்கு அறைகூவும் அருகதை நமக்கு இருக்கிறதா!!


சுஜாதா-ஷங்கரின் சிவாஜி அங்கவை.. சங்கவை கருப்பு மேக்கப் காட்சியோடு பாரிவள்ளல் மகள்களை இணைத்து தமிழர் பாரம்பரியத்துக்கு பார்ப்பன சுஜாதாவால் இழுக்கு எனும் அறைகூவல் எழுப்புவோர்க்கு இருப்பது தமிழுணர்வு என்பதை விட இவர்களுக்குத் தமிழால் உணவு எனும் உண்மை விடுதலையாகிறது!

தமிழர்களின் கரிய நிறம் சிறுமையானது அல்ல! beauty is only Skin deep!

ஆனால் வெகுதியான தமிழர் சமூக, மனைமாட்சி, வாழ்வியல் நிகழ்வுகளின் பாரம்பரியத்தினைச் சிதைப்போரை மறுப்பதை மறுத்து, சாதி, அரசியல் கொண்டு கறுப்புத் திரை போட்டு மூடியபடி அறைகூவுவது என்பது you RACE to ERACE the true heritage of your own RACE! என்பதாகவே இருக்கும்!

அன்புடன்,

ஹரிஹரன்