Thursday, March 29, 2007

(139) சபரி படம்..ஈழஅகதிகளுக்கு ஆதரவுக் குரல்...ஜல்லிகள்

சபரி படத்தில் விசய்காந்த் ஈழ அகதிகள் குறித்து ஆதரவாகப் பேசி இருக்கிறார். பாராட்டுவோம். இது குறித்து லக்கிலுக்கின் இந்தப்பதிவில் பல சொ.செ.சூ ஜல்லிகள்

//முகாமுக்கு வருபவர்களை காவல்துறையினர் நடத்தும் முறை, சோதனை என்ற பெயரில் நடத்தும் அட்டூழியம்//

இந்தப் போலீஸ் டிபார்ட்மெண்ட் தமிழக அரசின் முதல் மந்திரி -கம்- போலீஸ் மந்திரி கையில் தானுங்க இருக்கு! கால் நூற்றாண்டாக கருணாநிதிதானுங்க தமிழ்நாட்டுப் போலீஸ் மந்திரி!! முதல் மந்திரி!!

ஈழ அகதிகளிடம் முறையற்று நடக்கும் காவல்துறையினர் தமிழ் நாட்டுத் தமிழன் இல்லையா?
இல்லை.. ஈழ அகதிகள் முகாமில் பார்ப்பனர்கள் மட்டுமே காவலர்களாக இருக்கின்றார்கள் அதனால் தான் இப்படின்னு சொல்லுவீங்களா?

//அடிப்படை வசதிகளை கூட இந்தியா ஏற்படுத்தித் தர முன்வராத கொடுமை போன்றவைகளை//

கக்கூஸ், குடிநீர், தங்குமிடம் கட்டுவது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா?
பொதுப்பணித்துறை, குடிநீர் வாரியம், கழிவு நீர் அகற்றும் வாரியம், மின்வாரியம் இதெல்லாம் தமிழக அரசுத்துறைகள் இல்லீங்களா?

ராமேஸ்வரம் ஈழ அகதிகள் முகாமில் கக்கூஸ் கட்ட, மின்சாரவசதியுடன் தங்குமிடம் அமைக்க இந்திய மத்திய அரசு தடையாக இருக்கிறதா? அப்போ ஏன் அய்யா தமிழகக்த்து தமிழினத்தலைவர் கருணாநிதி கட்சி பாஜக மத்திய அரசில், சோனியாகாந்தி காங்கிரஸ் மத்திய அரசில் மந்திரிகளாக இருக்கின்றீர்கள்??

கால் நூற்றாண்டாக தமிழகத்தின் முதன்மந்திரியாக தமிழினத்தலைவர் கருணாநிதிதானே இருக்கிறார்!

அடிப்படை கழிவறை வசதிகளுக்கு இந்தியாவை வசதியா வசைபாட வந்துட்டீங்க!

மத்திய அரசில் இந்த ஈழ அகதிகள் அவலநிலை காரணத்துக்காக எத்தனை முறை தமிழினத்தலைவர் கருணாநிதி இதற்குத் தேவையான மந்திரி பதவிகளைக் கேட்டு வாங்கிப் போராடி இருக்கிறார்? ராஜினாமா செய்திருக்கிறார்?

//இந்தியாவிலேயே முதன்முறையாக ஈழத்தமிழ் அகதிகளுக்கு சினிமா எனும் ஊடகம் மூலமாக மிகத்தைரியமான ஆதரவைத் தந்திருக்கும் கேப்டனை எப்படிப் பாராட்டினாலும் தகும்.//

சன் தொலைக்காட்சி ஊடகமே கருணாநிதி கைவசம்! பிரச்சனையை ஏன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,டெல்லி, உலககம் அறியும்படியாகக் காட்டவில்லை? கழிவறை, அடிப்படை வசதியின்மைப் பிரச்சினையைக்கூட ஏன் தமிழ்நாட்டு அரசு தீர்க்கவில்லை?

அப்போ சுத்தமாக தைரியம் இல்லாதவர் கருணாநிதி என்கிறீர்களா?
இல்லை பச்சையான சுயநலவாதின்னு ஒப்புக்கொள்கிறீர்களா?

கால் நூற்றாண்டுகள் முதல் அமைச்சர்-போலீஸ் மந்திரியா இருந்தும் ஈழ அகதிகளுக்கு அடிப்படையாக எதுவுமே உருப்படியாகச் செய்யாமாட்டீங்க ஆனா தமிழினத்தலைவர் பட்டம் மட்டும் வேணும்? சபாஷ் திமுக!

போங்கய்யா! இன்னும் நல்லா ஜல்லி அடிங்க!

அன்புடன்

ஹரிஹரன்

Wednesday, March 28, 2007

(138) காதல்...காதல்.. காதல் போயின் "நோ" சாதல்

காதல்....அத்வைதம் சொல்லுற விஷயமான எல்லோருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதைப் புரிஞ்சுக்காத ஆட்களுக்கும் புரிகிற விஷயம், எல்லோருக்குள்ளும் நீக்கமற நிறைந்திருப்பது! ஆன்மீகம், நாத்திகப்பகுத்தறிவு, ஜாதி, மதம் எனக் கூறுபட்டு,கூறுகட்டி, கூறை விற்கும் எல்லோரையும் அவர்கள் இளமைக் காலத்தில் அடி-துவம்சம் செய்திருக்கும் ஒரு விஷயம் காதல்!

காதல் சூறாவளியில் வீரம் நிறைந்த, பலம் மிக்கவர்கள் வேரறுந்து வீழ்ந்த மரங்கள் மாதிரி சாய்ந்திருக்கின்றார்கள்.

காதல் சைக்ளோனை எதிர்கொள்வதில் பெரும்பாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் நிலை
பத்ம வியுகத்தில் சிக்கிய அபிமன்யு மாதிரிதான்! காதல் வளையத்தின் உள்ளே சுலபமாக நுழைந்துவிடலாம் (ரெஸ்பான்ஸே இல்லைன்னாலும் ஒருதலைக்காதல் என்றவகையில்)

டீன் ஏஜில் ஹார்மோன்கள் காதல் வாழ்த்து ஆரம்பிக்க ஒரு சுபயோகதினத்தில் பஸ் ஸ்டாப்பில், கல்லூரியில், கடைவீதியில், கோடை விடுமுறையில், பணியிடத்தில், நண்பனின் வீட்டில், வசிக்கின்ற தெருவில் எதிர்வீட்டில், அதுவரை கண்ணுக்குத் தெரியாத இந்தக் காதல் இம்சை ஏதாவது ஒரு சப்பை சம்பவத்தால் "டிரிக்கர்" ஆகி அடையாளம் காணப்பட்டு, வெளிப்பட்டு அதன் பின் வேப்பிலை அடிக்காத மண்டைக்குள் மோகினியாய் ஆட்டம் போட்டு அப்பப்பா... இந்தக் காதல் எனும் விஷயம் எத்தனை எழுத்துகொண்டு எழுதினாலும் புரியாது... அனுபவித்தால் மட்டுமே அது என்னவெல்லாம் செய்யும்னு தெரியும்.

காதல் பண்பு ஏற்படுத்தும் ஹார்மோன் சேர்வதால், உடனே உயர் அழுத்தத்தில் 2000 psi ரேஞ்சுக்கு நரம்புகளுக்குள் ரத்தம் சுற்றவைக்கிறதால் தானோ என்னவோ இரத்த Pump ஆகிய இதயம் காதலுக்கான சிறப்புச் சின்னமாகிப் போனது !

ஹார்மோன் கோளாறு எனக் காதல் அறிவியலால் அறியப்படுகிறது. இக்காதல் பலசமயம் ஒருவரது வாழ்வுகுறித்தான குறிக்கோள் அறு திருப்பதிகம் பாடிச் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. இது காதலின் பிழையல்ல... காதலர் பிழை!

காதல் பண்பு ஒருநபரை சிறப்பாகச் செயல்பட வைக்கிறது. இது நான் உணர்ந்த விஷயம் என்பதால் கொஞ்சம் கேரண்டியோடு சொல்கிறேன்! ஒரு காதல் தோற்குமா? ஜெயிக்குமா? என்பதைப் பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கும்! அது பற்றி அப்புறம் பார்க்கலாம்!

மனம் கவர்ந்த பெண்ணின் பெரிய கருவிழிகள் ஒருவனுக்கு உண்மையாகவே மீளச் சிரமம் தரும் சுழல்! லிப்டில், வீட்டில் , அலுவலகத்தில் திடீரெனக் கிடைக்கும் அருகாமைச் சூழலில் உணரும் நறுமணமிக்க மூச்சுக்காற்று வெப்பம் மூர்ச்சை அடைய வைக்கும்!

ஒரே பெண் ஒன்றுக்கும் மேற்பட்டவரின் மனங்களைக் கவரும் வகையில் அமைந்துவிட்டால், குறிப்பாக மாமாவின் ஒரே பெண் அத்தைகளின் மகன்களிடையேயும், அலுவலகத்தில் சக நண்பனோடும் ஏற்படுத்தும் நாகரீகமான போட்டா போட்டி என்பது இன்றைய நவீன சுயம்வரம்! தன்னை அவள் நினைவுகளில் நிலை நிறுத்தும் செயல்கள் , முயற்சித்தல் என்று டபுள் ஓவர்டைம் யோசித்துச் செயலாற்றவேண்டும்!

கஞ்சா மாதிரி போதைவஸ்து அடித்தால் அதை அடிக்கும்போது இருக்கும் மனோபாவம் ஒருவர்க்கு அப்படியே போதை இறங்கும் வரை தொடரும் என்று கேட்டிருக்கிறேன்! சிரித்தால் மணிக்கணக்கில் சிரிப்பது... சோகமாக இருந்தால் தேம்பி அழுவது என்று!

காதல் போதை வேறு வகை! அது வரை தாய், தகப்பன், சகோதரன், சகோதரி என இருக்கும் ப்ரையாரிட்டி வரிசை அழிக்கப்படும். ப்ரையாரிட்டி எனும் குழப்பம் நீங்கும். ஒரே நினைப்புத்தான்... காதல் ... காதல்...காதல் மட்டுமே மனதில் யார் oppose செய்தாலும் மனதில் un-opposed ஆக முதன்மை நிலையில் இருக்கும்.

தகப்பன் ஏற்கனவே கல்லூரிப்படிப்பு விடுதியில் தங்கிப்படித்த காலத்திலேயே பலருக்கும் பாக்கட் மணித் தகறாறில் வில்லன் ஆன நபர். காதல் விஷயம் எக்ஸ்போஸ் ஆனதும் மீண்டும் இந்தத் தகப்பன் -வில்லனின் மறு அவதாரம் சில எபிஸோடுகளில் விஸ்வரூபம் எடுக்கும்! தாய்-சகோதரியின் எமோஷனல் பிளாக் மெயில் ஆரம்பிக்கும். சகோதரனின் வெளியிலிருந்து ஆதரவு ஆறுதல் தரும்!

நண்பர்கள் சுமைதாங்கிக் கல் ஆவார்கள். தினம் இவனுக்கு அலுக்காத அவர்கள் சிதறி ஓட நினைத்தாலும் இவன் தரும் டீ-பொறை போன்ற ஸ்பான்ஸர்ஷிப் காரணங்களால் முடியாத நிலையில் டீ-பொறை வாயில் இருக்கும் வரை இவன் காதல் புராணம் கேட்டு ஆதரவு நல்குவர்!

1)சின்னவயசு ஈர்ப்பு-பள்ளிக்காதல்,
2)கல்லூரி இன்பாச்சுவேசன்,
3)பணிக்கு வநது பொருளீட்டும் நிலையிலிருக்கும் போது எழும் காதல் பண்பு

இந்த மூன்றுவகைக் காதலிலே சிறந்தது எது என்றால் மூன்றாவதைத் தான் நான் ரெக்கமெண்ட் செய்வேன். சுயமாய் பரிசோதனை செய்ததைத்தானே பரிந்துரைக்க முடியும்! மேலும் படிப்பு பாழாகாது இந்த வகையால்! ஜெயித்தாலும் தோற்றாலும் Win-Win சிச்சுவேஷன் இந்த மூன்றாவது வகையில் மட்டுமே சாத்தியம்!

தோற்றாலும் எப்படி Win சிச்சுவேஷன்? இருக்கு! அப்புறமா மெல்லமா வரலாம் காதல் வாட்டர்லூவான இதுக்கு!

காதல் பன்னீரைக் கொஞ்சம் அள்ளித் தெளிக்கலாம் அதுவரை அடுத்த பதிவுகளில்!

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, March 21, 2007

(137a) யாருங்க காரணம்??

பல நாட்கள் பார்க்கின்ற காட்சிகள்தான் என்றாலும் அதை அணுகும் முறையால் அவை புதிய பார்வைக்கோணத்தால் உணர்த்தப்படும் உண்மைகள் உரைத்து உறைக்க உறக்கம் கலைந்த உணர்வு ஏற்படுத்துகின்றன சில சமயம்.

இன்று கண்ட இரு காட்சிகள் காட்சியில் இருப்பவரிடத்தில் என்னை வைத்துப் பார்த்ததில் ஏற்பட்ட எண்ணங்கள் இவை.


காட்சி -1:

சைரன் ஒலிக்க பந்தோபஸ்து பாதுகாப்பு வண்டிகளுக்கிடையே குவைத் சிட்டியிலிருக்கும் தலைமை நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்பட செல்லும் குற்றவாளிகள் ஏற்றப்பட்ட பேருந்து!
உள்ளிருக்கும் எவரையும் காணமுடியாதபடி தகடுகளால் மறைக்கப்பட்ட சிறைத்துறைப்பேருந்து!

உள்ளிருப்போர் மனநிலை எப்படி இருக்கும்? என்ன குற்றங்கள் செய்தவர்கள்? எந்தச் சாலை வழியாகத் தாம் இட்டுச் செல்லப்படுகிறோம் எனும் சிறு தகவல் கூட கிடைக்காத அளவுக்குத் தனிமைப்படுத்தப் படுவோம் என்கிற விஷூவலைசேஷன் திறன் இருந்திருந்தால் தாம் இழக்கப்போகும் விலைமதிப்பற்ற சுதந்திர நடமாட்டம், பேச்சு,உணவு, உடை என எல்லாம் எந்த நொடியில், எந்த காரணத்துக்காக, எதைச் செய்து இப்படித் தாங்களாகவே சிறைப்பட்டுக்கொண்டார்கள்?

இவர்கள் சுதந்திரமின்மைக்கு அவர்களே அன்றி வேறு யார் காரணமாயிருக்கமுடியும்?

காட்சி -2:

கண்ட இந்த இரண்டாவது காட்சி நிறைய நேட்டிவிட்டி கொண்டது!

குவைத் முழுதும் தொலைதொடர்பு கேபிள் பதிப்பு இந்தியாவின் டிசிஐஎல் (டெலி கம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட்)நிறுவனம் செய்துவருகிறது.

முன் மதிய நேரத்தில் குவைத் ஸ்டாக் எக்ஸ்சேஞ் அருகே சிக்னலுக்காக டிராபிக்கில் காரில் காத்திருக்கும் போது நடைபாதை ஓரம் தொலை தொடர்பு கேபிளுக்கு எக்ஸ்கவேஷன் வாணம் தோண்டிக்கொண்டிருந்த நபர்கள் பேச்சு கார் கண்ணாடி ஏற்றி இருந்த நிலையிலும் காருக்குள்ளே எனக்குக் கேட்கிறது. எல்லாம் நம் தமிழ் மக்கள்தான். இளம் இருபதுகளில் இருப்பவர்கள். கையில் பிக்காசு, கடப்பாரை கொண்டு கேபிளுக்காகத் தெருக்களிலும், பாலைவனப் பொட்டைக்காட்டிலும் குழிதோண்டி பிசாத்துக் காசு சம்பளம் பெற கடல்தாண்டி வந்து பல்வேறு அவதிப்படுபவர்கள்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் குவைத்தில் ஏதும் இல்லை அடிமையாக இங்கிலாந்துக்கு இருந்தார்கள் கழுதையில் பல மைல்தூரம் குடிநீர் சுமந்து சென்று விற்ற, மீன்பிடித்து, முத்துக்குளித்து, கப்பலை மடக்கி நடுக்கடலில் கொள்ளையடிக்கும் தொழில்கள் செய்த முன்னேறாத சமூகமாக இருந்தது!

இன்று இங்கிலாந்து தம் முன்னோரை, தம் தேசத்தை அடிமைப்படுத்தியது, சுரண்டியது என்று குவைத் ஆட்சியாளர்கள் குடிமக்களுக்குச் சொல்லிக்கொண்டு இல்லை. குவைத் மக்களின் கல்வி பி.எச்டி வரை இலவசம்! எல்லாவிதமான வசதிகளையும் குடிமக்களுக்குச் செய்து தந்திருக்கிறது!

நம்மூர் தமிழ்ப்பற்று, தமிழின, பகுத்தறிவு திரா"விட" இயக்கங்கள் நாற்பதாண்டுகள் ஆட்சியில் 234 தனியார் பொறியியல் கல்லூரிகள் தனியார்வசம் தரப்பட்டு கல்வி வியாபாரமாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தனியார் கல்வி நிறுவனங்களில் 90% திரா"விட" இயக்க அரசியல் வாதிகள் நடத்துவது! பெரும்பணம் இருந்தால் அன்றி உயர் கல்வி படித்தல் சாத்தியமில்லை!

உயர்கல்வி கற்பது தமிழனுக்கு அவனது வளமான எதிர்காலத்துக்கு அவசியம் என்பதை மக்களுக்கு மறைத்துவிட்டு வீணாய்ப்போன பார்ப்பன எதிர்ப்பு, குடுமி அறுப்பு, பூணூல் அறுப்பு, இறை மறுப்பு என்று சமுதாயத்தை வெட்டித்தனமான விரயக்குழியில் தள்ளியதுதான் திரா"விட" இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இந்த நாற்பதாண்டுகளில் சாதித்தது!

குவைத்தின் சாலையில் காரினுள்ளே தமிழக அரசு உதவிகள் செய்யாமல் நிராகரிக்கப்பட்ட நானும் தமிழன், நடைபாதையில் பிக்காசு போட்டுக் குழிவெட்டும் நபர்களும் தமிழர்கள். நான் நிறையப் பொருளாதாரச் சிக்கல்கள் சந்தித்தபடியே கல்வி கற்று, உழைத்து, அலைச்சல் பட்டு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்திருக்கிறேன்!


குவைத் வந்து நடைபாதையில் கேபிளுக்கு குழி தோண்டும் தமிழர்களும் சத்தியமாக மிகக்கடினமாக உழைக்கின்றார்கள். ஆனால் உயரம் எட்டவில்லை! எட்டமுடிவதில்லை தலைமுறைகளாக இவர்களுக்கு ஏன்? தமிழர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திரா"விட" இயக்கத் தமிழின, மானத்தலைவர்கள் சீரிய ஆட்சியில் இருந்தபடியே அடித்தட்டுத் தமிழனுக்குத் தேவை என்ன எனத் தேடித் தேடி, பார்த்துப்பார்த்து எவையெல்லாம் தேவையோ அவையில்லாம் இந்தத் தமிழர்களுக்குத் தந்திருக்கின்றார்கள்! கடந்த நாற்பதாண்டுகளாக!

உடலால் மட்டுமே 100% உழைத்தால் உயரம் தொடுதல் சிரமம்! மூளையைச் செயல்படுத்தி உழைக்க உயர்கல்வி அவசியம். உயரம் தொடுதலில் உயர்கல்வி என்பது ஒரு மிக முக்கியமான பேக்டர். உயர்கல்வி கற்பிக்க தந்தையின் தியாகம் மிக முக்கியமானது.

எனது இன்றைய நிலைக்கு எனது உழைப்பும் காரணம் என்ற போதும் என்னை நிலைநிறுத்த எனது தந்தை மேற்கொண்ட விடாமுயற்சிகள் எனது வெற்றிக்கு அஸ்திவாரம். எனது தந்தை தமிழகத்தைப் பாழ்படுத்திக்கொண்டிருக்கும் அரசியல் திரா"விட" இயக்கங்களில் இல்லாதது, எனக்குக் கல்விக்காக பட்டினி கிடந்தது, புகை, குடி, கூத்து என்று தன்சுகம் கருதாதது முக்கியக்காரணம்.

எனது தாத்தா காலத்தில் என் தந்தை எதிர் கொண்ட வறுமைச் சூழல், என் தந்தையை என் பாட்டி சாணி-வறட்டி தட்டிப் படிக்கவைத்து, என் தந்தை தன் சகோதரர்கள், தன் தமக்கை மகன்(ள்)கள், தன் பிள்ளைகள் என 1970 முதல் 1989 வரையிலான 19 ஆண்டுகளில் என் தந்தை ஒருவரின் அர்ப்பணிப்பு, தன்னலமில்லாத செயல்பாடு, தன் சுகம் மறுக்கும் தியாகத்தால், தமிழகத்தில் அதி தீவிர பிராமண எதிர்ப்பலைவீசும் சூழலில், எந்த சலுகை, அதிகாரம் இல்லாதபோதும் தன் மிகச்சிறிய சம்பளத்தைக்கொண்டு ஒரு 20தனிநபர்கள் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்ற முடிந்தது. கல்வி+ உழைப்பால் பொருளாதார ஒளி உள்வந்து உயர்ந்தவர்களில் நானும் ஒருவன்!

உயரவேண்டும் எனில் தேவை உழைப்பு, அர்ப்பணிப்பு, தொலை நோக்குப் பார்வை. என் தந்தை குடித்து,புகைத்து, சூதாடி, சீரணி அரங்கில் நடக்கும் அரசியல் திரா"விட" சீரழிப்புக் கூட்டத்துக்க்கு ஆர்ப்பரித்து அலைகடலாய் லாரியில் பயணித்து அழியவில்லை! இவை இல்லாததால் என் தந்தையால் ஒரே தலைமுறையில் பலரை மேல் ஏற்றிவிட ஏணியாய் இருக்க முடிந்தது!


நாற்பதாண்டுகளில் இந்த உலகத்துக்கு ஹிட்லரையும், இரண்டாம் உலக யுத்தத்தையும் தந்த ஜெர்மனியில் ஹிட்லரின் வம்சாவளியினரை, பிரிவினரைத் தேடி பழித்துகொண்டிருப்பதை மட்டுமே ஹிட்லருக்குப்பின் வந்த அரசாங்கம் ஜெர்மெனியில் செய்யவில்லை!

ஜப்பான் தனது சமுராய் வீரர்களையும், அவர்கள் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர்மீது தொடுத்த தாக்குதல்களால் சினமுற்ற அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசியது. 90% அழிந்து போன ஜப்பானில் அடுத்துவந்த ஆட்சியாளர்கள் சமுராய் வீரர்களையும், அவர்கள் இனத்தவரை ஜப்பானின் ஹான்ஷி, ஹ்யூஷு, ஹொக்கைடோ- வெங்கும் மேடைகள் அமைத்து கொக்கி போட்டு திருடிய மின்சாரத்தில் செயல்படும் மைக், ஒலிபெருக்கிகள் முன் முழங்கி சமுராய்வீரர்களைப் பழித்தபடி ஊழலைக் கண்டுபிடித்த சர்க்காரியா கமிஷன் சர்க்கார் நடத்தவில்லை! ரோபோக்கள், கார்கள், பைக், டெக்னாலஜி என்று கண்டுபிடித்தார்கள் ஜப்பானியர்கள்!

மேடைதோறும் ஜப்பானில் தாய்மொழியில் கல்வி கற்கிறார்கள்! ஜப்பான் முன்னேறியது!
ஜெர்மெனியில் தாய்மொழியில் கற்றதால் ஜெர்மனி முன்னேறியது! தமிழிலேயே உயர்கல்வி கற்கவேண்டும் என முழங்குவதால் மட்டும் வந்துவிடுமா தமிழரிடம் மாற்றம்??

ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் அழிவைக்கொண்டு வந்த இனப்பிரிவினை நாஜி சிந்தனையை வைத்து பார்ப்பன எதிர்ப்பு எனும் இன வெறுப்பு மட்டும் தினம் டானிக் மாதிரி திரா"விட"க் கொள்கைகளாக ஆட்சியாளர்கள் ஊட்டி வளர்த்தாலோ, பிராமணனின் குடுமி, பூணூலை அறுப்பதாலோ, இந்து தெய்வங்களை செருப்பால் அடிப்பதாலோ, உடைப்பதாலோ, திருவரங்கத்தில் ஈவெராசிலை நிறுவி வழிபடுவதாலோ, அயோத்தியாமண்டபத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசுவதாலோ, தமிழ்நாடு வளம்பெற்று முன்னேறி இன்றைய வளர்ந்த ஜெர்மெனி, ஜப்பான் என ஒருபோதும் ஆகாது. மாறாக ஹிட்லரின் ஜெர்மெனியாகவோ, ஹிரோஷிமா, நாகசாகியாக அழிவு கண்ட ஜப்பானாக சமூக வரலாற்றில் இன்னும் விரைந்து பின்னேறலாம்.

பிரிட்டிஷ்காரர்களின் நிர்வாகத்திறனுக்கு இணையானவர்கள் பகுத்தறிவு அரசியல் திரா"விட" ஆட்சியாளர்கள்! ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்! கண்டிப்பாக!

அடிமை இந்தியாவின் அரசாண்ட பிரிட்டிஷ்காரர்கள் ஃபிஜித்தீவுகளுக்கும், தென் ஆப்பிரிக்கா, டிரினிடாட்,மலேஷியா மற்றும் கரீபியன், இலங்கைத் தீவுகளில் கரும்பு, தேயிலைக்கூலி வேலைக்கு தமிழர்களை அனுப்பிவைத்தார்கள் அன்று.

இன்று பகுத்தறிவுப்பாடை பேசுவோர் ஆட்சி நடத்தி நாற்பதாண்டுகளில் பெரும்பான்மை வெளிநாடுவாழ் தமிழர்கள் குவைத்தில் குழிவெட்ட, மலேஷியாவில் மண் அள்ள, சிங்கப்பூரில் சித்தாள் வேலை செய்ய ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்!

குவைத்தின் நடைபாதைகளில் , மத்திய கிழக்கு எண்ணைய் வயல்களில் குளிர் , மணற்புயல், கடும் வெயிலில் எடுபிடி, கூலிவேலை செய்யும் ஒவ்வொரு அடித்தட்டுத் தமிழனின் மேம்படாத வாழ்வுக்கும் பிரதான காரணங்கள்:

1. நாற்பதாண்டுகளாக ஜெர்மெனியைப்பார், ஜப்பானைப்பார், தமிழனா கொக்கா? தமிழின மான, உணர்வு, பகுத்தறிவு என்றபடியே தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்ச அடித்தட்டுத் தமிழனுக்கு அரசியல் திரா"விட"ப் பெத்தடின் ஏற்றும் கட்சிகள்.

1அ. கல்வியை எட்டாக்கனியாகப் பெரும் செலவு பிடிக்கும் வியாபாரமாக்கிவிட்டு தமிழன் அதை உணராமல் இருக்க திரா"விட"க்கட்சிகள் வீசி எறியும் இலவச வேட்டி, சேலை, செருப்பு, இலவச டிவி, இலவச கோவணங்கள்...இத்யாதிகள்....

1.ஆ. நாற்பதாண்டுகளாக மக்கள் நலத்திட்ட நிதியை ஊழல் செய்து தொலைக்காட்சிகள் குழுமங்கள் அமைத்து 24 மணி நேரமும் சினிமா..சினிமா..சினிமாவுக்கு மக்களை அடிமையாக்கியிருப்பது!

2.தமிழ்நாட்டு திரா"விட"க் கட்சிகளின் முப்பெரும், ஐம்பெரும் விழாவுக்கு பிரியாணி, பேட்டாக்காசுக்காக லாரியில் ஏறி அலைகடலாக ஆர்ப்பரித்துச் சென்னைக்குச் செல்வதைமட்டுமே வாழ்வாகக் கழித்த அவர்கள் தந்தையரும் காரணம்!

3.வாழ்வில் என்னவாக வேண்டும் என்கிற எந்த இலக்கும் இல்லாமல் 13வயதில் ஆரம்பித்து நம்ம ஊரில் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், விஜய்காந்த், இளையதளபதி விஜய், தல அஜித், சிம்பு,தனுஷ், ஆர்னால்டு,ப்ரூஸ் லீ,ஜாக்கிசான், டைட்டானிக் கேட் வின்ஸ்லெட்,த்ரிசா,நயன்தாரா, நமீதா, சிநேகா,வடிவேலு, விவேக்,விஜய டி.ராஜேந்தர்,கஞ்சா கருப்புக்கு ரசிகர்மன்றம், நற்பணி மன்றம், தோரணம், ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோ, கட் அவுட்ன்னு திரிஞ்சு அலைவதில் தன் தனி வாழ்க்கையினின்று தரம் கெட் அவுட் ஆகிறதே எனும் கவனமில்லாத, தன் உயர் கல்விக்குத் தானே கெட் அவுட் சொல்லிவிட்டு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா நாயகர்கள் கட் அவுட் வைக்க ஆற்றலுடன் ஒர்க் அவுட் செய்யும் பெரும்பான்மையான அடித்தட்டுத் தமிழ் இளையர்களின் தொலைநோக்கு!

குவைத் வாழ் தமிழர்களில் 75,000 பேரில் 70-80% பேர் டிராவல் ஏஜன்சியிடம் பணம் கட்டி வந்து கூலி வேலை, டிரைவர், எடுபிடிவேலை இவற்றில் தான் இருக்கின்றார்கள்.

பார்ப்பானும், அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த கட்டுக் குடுமியும், இன்றைக்கும் போடும் பூணூலும் தான் இதற்குக் காரணம் எனும் சிந்தனை அக்மார்க் ஆஸ்திரேலிய தீக்கோழித்தனமானது!

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, March 20, 2007

(137) யார் காரணம்???

பல நாட்கள் பார்க்கின்ற காட்சிகள்தான் என்றாலும் அதை அணுகும் முறையால் அவை புதிய பார்வைக்கோணத்தால் உணர்த்தப்படும் உண்மைகள் உரைத்து உறைக்க உறக்கம் கலைந்த உணர்வு ஏற்படுத்துகின்றன சில சமயம்.

இன்று கண்ட இரு காட்சிகள் காட்சியில் இருப்பவரிடத்தில் என்னை வைத்துப் பார்த்ததில் ஏற்பட்ட எண்ணங்கள் இவை.


காட்சி -1:

சைரன் ஒலிக்க பந்தோபஸ்து பாதுகாப்பு வண்டிகளுக்கிடையே குவைத் சிட்டியிலிருக்கும் தலைமை நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்பட செல்லும் குற்றவாளிகள் ஏற்றப்பட்ட பேருந்து!
உள்ளிருக்கும் எவரையும் காணமுடியாதபடி தகடுகளால் மறைக்கப்பட்ட சிறைத்துறைப்பேருந்து!

உள்ளிருப்போர் மனநிலை எப்படி இருக்கும்? என்ன குற்றங்கள் செய்தவர்கள்? எந்தச் சாலை வழியாக இட்டுச்செல்லப்படுகிறோம் எனும் தகவல் கூட கிடைக்காத தனிமைப்படுத்தப் படுவோம் என்கிற விஷூவலைசேஷன் இருந்திருந்தால் இழக்கப்போகும் விலைமதிப்பற்ற சுதந்திர நடமாட்டம், பேச்சு,உணவு, உடை என எல்லாம் எந்த நொடியில் எந்த காரணத்துக்காக எதைச் செய்து சிறைப்பட்டுக்கொண்டார்கள்?

இவர்கள் சுதந்திரமின்மைக்கு அவர்களே அன்றி வேறு யார் காரணமாயிருக்கமுடியும்?

காட்சி -2:

கண்ட இந்த இரண்டாவது காட்சி நிறைய நேட்டிவிட்டி கொண்டது!

குவைத் முழுதும் தொலைதொடர்பு கேபிள் பதிப்பு இந்தியாவின் டிசிஐஎல் (டெலி கம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட்)நிறுவனம் செய்துவருகிறது.

முன் மதிய நேரத்தில் குவைத் ஸ்டாக் எக்ஸ்சேஞ் அருகே சிக்னலுக்காக டிராபிக்கில் காரில் காத்திருக்கும் போது நடைபாதை ஓரம் தொலை தொடர்பு கேபிளுக்கு எக்ஸ்கவேஷன் வாணம் தோண்டிக்கொண்டிருந்த நபர்கள் பேச்சு கார் கண்ணாடி ஏற்றி இருந்த நிலையிலும் காருக்குள்ளே எனக்குக் கேட்கிறது. எல்லாம் நம் தமிழ் மக்கள்தான். இளம் இருபதுகளில் இருப்பவர்கள். கையில் பிக்காசு, கடப்பாரை கொண்டு கேபிளுக்காகத் தெருக்களிலும், பாலைவனப் பொட்டைக்காட்டிலும் குழிதோண்டி பிசாத்துக் காசு சம்பளம் பெற கடல்தாண்டி வந்து பல்வேறு அவதிப்படுபவர்கள்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் குவைத்தில் ஏதும் இல்லை அடிமையாக இங்கிலாந்துக்கு இருந்தார்கள் கழுதையில் பல மைல்தூரம் குடிநீர் சுமந்து சென்று விற்ற, மீன்பிடித்து, முத்துக்குளித்து, கப்பலை மடக்கி நடுக்கடலில் கொள்ளையடிக்கும் தொழில்கள் செய்த முன்னேறாத சமூகமாக இருந்தது!

இன்று இங்கிலாந்து தம் முன்னோரை, தம் தேசத்தை அடிமைப்படுத்தியது, சுரண்டியது என்று குவைத் ஆட்சியாளர்கள் குடிமக்களுக்குச் சொல்லிக்கொண்டு இல்லை. குவைத் மக்களின் கல்வி பி.எச்டி வரை இலவசம்! எல்லாவிதமான வசதிகளையும் குடிமக்களுக்குச் செய்து தந்திருக்கிறது!

நம்மூர் தமிழ்ப்பற்று, தமிழின, பகுத்தறிவு திரா"விட" இயக்கங்கள் நாற்பதாண்டுகள் ஆட்சியில் 234 தனியார் பொறியியல் கல்லூரிகள் தனியார்வசம் தரப்பட்டு கல்வி வியாபாரமாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தனியார் கல்வி நிறுவனங்களில் 90% திரா"விட" இயக்க அரசியல் வாதிகள் நடத்துவது! பெரும்பணம் இருந்தால் அன்றி உயர் கல்வி படித்தல் சாத்தியமில்லை!

உயர்கல்வி கற்பது தமிழனுக்கு அவனது வளமான எதிர்காலத்துக்கு அவசியம் என்பதை மக்களுக்கு மறைத்துவிட்டு வீணாய்ப்போன பார்ப்பன எதிர்ப்பு, குடுமி அறுப்பு, பூணூல் அறுப்பு, இறை மறுப்பு என்று சமுதாயத்தை வெட்டித்தனமான விரயக்குழியில் தள்ளியதுதான் திரா"விட" இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இந்த நாற்பதாண்டுகளில் சாதித்தது!

குவைத்தின் சாலையில் காரினுள்ளே தமிழக அரசு உதவிகள் செய்யாமல் நிராகரிக்கப்பட்ட நானும் தமிழன், நடைபாதையில் பிக்காசு போட்டுக் குழிவெட்டும் நபர்களும் தமிழர்கள். நான் நிறையப் பொருளாதாரச் சிக்கல்கள் சந்தித்தபடியே கல்வி கற்று, உழைத்து, அலைச்சல் பட்டு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்திருக்கிறேன்!


குவைத் வந்து நடைபாதையில் கேபிளுக்கு குழி தோண்டும் தமிழர்களும் சத்தியமாக மிகக்கடினமாக உழைக்கின்றார்கள். ஆனால் உயரம் எட்டவில்லை! எட்டமுடிவதில்லை தலைமுறைகளாக இவர்களுக்கு ஏன்? தமிழர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திரா"விட" இயக்கத் தமிழின, மானத்தலைவர்கள் சீரிய ஆட்சியில் இருந்தபடியே அடித்தட்டுத் தமிழனுக்குத் தேவை என்ன எனத் தேடித் தேடி, பார்த்துப்பார்த்து எவையெல்லாம் தேவையோ அவையில்லாம் இந்தத் தமிழர்களுக்குத் தந்திருக்கின்றார்கள்! கடந்த நாற்பதாண்டுகளாக!

உடலால் மட்டுமே 100% உழைத்தால் உயரம் தொடுதல் சிரமம்! மூளையைச் செயல்படுத்தி உழைக்க உயர்கல்வி அவசியம். உயரம் தொடுதலில் உயர்கல்வி என்பது ஒரு மிக முக்கியமான பேக்டர். உயர்கல்வி கற்பிக்க தந்தையின் தியாகம் மிக முக்கியமானது.

எனது இன்றைய நிலைக்கு எனது உழைப்பும் காரணம் என்ற போதும் என்னை நிலைநிறுத்த எனது தந்தை மேற்கொண்ட முயற்சிகள் எனது வெற்றிக்கு அஸ்திவாரம். எனது தந்தை தமிழகத்தைப் பாழ்படுத்திக்கொண்டிருக்கும் அரசியல் திரா"விட" இயக்கங்களில் இல்லாதது, எனக்குக் கல்விக்காக பட்டினி கிடந்தது, புகை, குடி, கூத்து என்று தன்சுகம் கருதாதது முக்கியக்காரணம்.

எனது தாத்தா காலத்தில் என் தந்தை எதிர் கொண்ட வறுமைச் சூழல், என் தந்தையை பாட்டி சாணி-வறட்டி தட்டிப் படிக்கவைத்து, என் தந்தை தன் சகோதரர்கள், தன் தமக்கை மகன்(ள்)கள், தன் பிள்ளைகள் என 1970 முதல் 1989 வரையிலான 19 ஆண்டுகளில் என் தந்தை ஒருவரின் அர்ப்பணிப்பு, தன்னலமில்லாத செயல்பாடு, தன் சுகம் மறுக்கும் தியாகத்தால், அதி தீவிர பிராமண எதிர்ப்பலைவீசும் சூழலில், எந்த சலுகை, அதிகாரம் இல்லாதபோதும் தன் மிகச்சிறிய சம்பளத்தைக்கொண்டு ஒரு 20தனிநபர்கள் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்ற முடிந்தது. கல்வி+ உழைப்பால் பொருளாதார ஒளி உள்வந்து உயர்ந்தவர்களில் நானும் ஒருவன்!

உயரவேண்டும் எனில் தேவை உழைப்பு, அர்ப்பணிப்பு, தொலை நோக்குப் பார்வை. என் தந்தை குடித்து,புகைத்து, சூதாடி, சீரணி அரங்கில் நடக்கும் அரசியல் திரா"விட" சீரழிப்புக் கூட்டத்துக்க்கு ஆர்ப்பரித்து அலைகடலாய் லாரியில் பயணித்து அழியவில்லை! இவை இல்லாததால் என் தந்தையால் ஒரே தலைமுறையில் பலரை மேல் ஏற்றிவிட ஏணியாய் இருக்க முடிந்தது!


நாற்பதாண்டுகளில் இந்த உலகத்துக்கு ஹிட்லரையும், இரண்டாம் உலக யுத்தத்தையும் தந்த ஜெர்மனியில் ஹிட்லரின் வம்சாவளியினரை, பிரிவினரைத் தேடி பழித்துகொண்டிருப்பதை மட்டுமே ஹிட்லருக்குப்பின் வந்த அரசாங்கம் ஜெர்மெனியில் செய்யவில்லை!

ஜப்பான் தனது சமுராய் வீரர்களையும், அவர்கள் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர்மீது தொடுத்த தாக்குதல்களால் சினமுற்ற அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசியது. 90% அழிந்து போன ஜப்பானில் அடுத்துவந்த ஆட்சியாளர்கள் சமுராய் வீரர்களையும், அவர்கள் இனத்தவரை ஜப்பானின் ஹான்ஷி, ஹ்யூஷு, ஹொக்கைடோ- வெங்கும் மேடைகள் அமைத்து கொக்கி போட்டு திருடிய மின்சாரத்தில் செயல்படும் மைக், ஒலிபெருக்கிகள் முன் முழங்கி சமுராய்வீரர்களைப் பழித்தபடி ஊழலைக் கண்டுபிடித்த சர்க்காரியா கமிஷன் சர்க்கார் நடத்தவில்லை! ரோபோக்கள், கார்கள், பைக், டெக்னாலஜி என்று கண்டுபிடித்தார்கள் ஜப்பானியர்கள்!

மேடைதோறும் ஜப்பானில் தாய்மொழியில் கல்வி கற்கிறார்கள்! ஜப்பான் முன்னேறியது!
ஜெர்மெனியில் தாய்மொழியில் கற்றதால் ஜெர்மனி முன்னேறியது! தமிழிலேயே உயர்கல்வி கற்கவேண்டும் என முழங்குவதால் மட்டும் வந்துவிடுமா தமிழரிடம் மாற்றம்??

ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் அழிவைக்கொண்டு வந்த இனப்பிரிவினை நாஜி சிந்தனையை வைத்து பார்ப்பன எதிர்ப்பு எனும் இன வெறுப்பு மட்டும் தினம் டானிக் மாதிரி திரா"விட"க் கொள்கைகளாக ஆட்சியாளர்கள் ஊட்டி வளர்த்தாலோ, பிராமணனின் குடுமி, பூணூலை அறுப்பதாலோ, இந்து தெய்வங்களை செருப்பால் அடிப்பதாலோ, உடைப்பதாலோ தமிழ்நாடு முன்னேறி இன்றைய ஜெர்மெனி, ஜப்பான் என ஒருபோதும் ஆகாது. மாறாக ஹிட்லரின் ஜெர்மெனியாகவோ, ஹிரோஷிமா, நாகசாகியாக அழிவு கண்ட ஜப்பானாக சமூக வரலாற்றில் இன்னும் விரைந்து பின்னேறலாம்.

பிரிட்டிஷ்காரர்களின் நிர்வாகத்திறனுக்கு இணையானவர்கள் பகுத்தறிவு அரசியல் திரா"விட" ஆட்சியாளர்கள்! ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்! கண்டிப்பாக!

அடிமை இந்தியாவின் அரசாண்ட பிரிட்டிஷ்காரர்கள் ஃபிஜித்தீவுகளுக்கும், தென் ஆப்பிரிக்கா, டிரினிடாட்,மலேஷியா மற்றும் கரீபியன், இலங்கைத் தீவுகளில் கரும்பு, தேயிலைக்கூலி வேலைக்கு தமிழர்களை அனுப்பிவைத்தார்கள் அன்று.

இன்று பகுத்தறிவுப்பாடை பேசுவோர் ஆட்சி நடத்தி நாற்பதாண்டுகளில் பெரும்பான்மை வெளிநாடுவாழ் தமிழர்கள் குவைத்தில் குழிவெட்ட, மலேஷியாவில் மண் அள்ள, சிங்கப்பூரில் சித்தாள் வேலை செய்ய ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்!

குவைத்தின் நடைபாதைகளில் , மத்திய கிழக்கு எண்ணைய் வயல்களில் குளிர் , மணற்புயல், கடும் வெயிலில் எடுபிடி, கூலிவேலை செய்யும் ஒவ்வொரு அடித்தட்டுத் தமிழனின் மேம்படாத வாழ்வுக்கும் பிரதான காரணங்கள்:

1. நாற்பதாண்டுகளாக ஜெர்மெனியைப்பார், ஜப்பானைப்பார், தமிழனா கொக்கா? தமிழின மான, உணர்வு, பகுத்தறிவு என்றபடியே தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சும் அரசியல் திரா"விட"க் கட்சிகள்.

1அ. கல்வியை எட்டாக்கனியாகப் பெரும் செலவு பிடிக்கும் வியாபாரமாக்கிவிட்டு தமிழன் அதை உணராமல் இருக்க திரா"விட"க்கட்சிகள் வீசி எறியும் இலவச வேட்டி, சேலை, செருப்பு, கோவணங்கள்...இத்யாதிகள்....

1.ஆ. நாற்பதாண்டுகளாக மக்கள் நலத்திட்ட நிதியை ஊழல் செய்து தொலைக்காட்சிகள் குழுமங்கள் அமைத்து 24 மணி நேரமும் சினிமா..சினிமா..சினிமாவுக்கு மக்களை அடிமையாக்கியிருப்பது!

2.தமிழ்நாட்டு திரா"விட"க் கட்சிகளின் முப்பெரும், ஐம்பெரும் விழாவுக்கு பிரியாணி, பேட்டாக்காசுக்காக லாரியில் ஏறி அலைகடலாக ஆர்ப்பரித்துச் சென்னைக்குச் செல்வதைமட்டுமே வாழ்வாகக் கழித்த அவர்கள் தந்தையரும் காரணம்!

3.வாழ்வில் என்னவாக வேண்டும் என்கிற எந்த இலக்கும் இல்லாமல் 13வயதில் ஆரம்பித்து நம்ம ஊரில் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், விஜய்காந்த், இளையதளபதி விஜய், தல அஜித், சிம்பு,தனுஷ், ஆர்னால்டு,ப்ரூஸ் லீ,ஜாக்கிசான், டைட்டானிக் கேட் வின்ஸ்லெட்,த்ரிசா,நயன்தாரா, நமீதா, சிநேகா,வடிவேலு, விவேக்,விஜய டி.ராஜேந்தர்,கஞ்சா கருப்புக்கு ரசிகர்மன்றம், நற்பணி மன்றம், தோரணம், ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோ, கட் அவுட்ன்னு திரிஞ்சு அலைவதில் தன் தனி வாழ்க்கையினின்று தரம் கெட் அவுட் ஆகிறதே எனும் கவனமில்லாத, தன் உயர் கல்விக்குத் தானே கெட் அவுட் சொல்லிவிட்டு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா நாயகர்கள் கட் அவுட் வைக்க ஆற்றலுடன் ஒர்க் அவுட் செய்யும் பெரும்பான்மையான அடித்தட்டுத் தமிழ் இளையர்களின் தொலைநோக்கு!

குவைத் வாழ் தமிழர்களில் 75,000 பேரில் 70-80% பேர் டிராவல் ஏஜன்சியிடம் பணம் கட்டி வந்து கூலி வேலை, டிரைவர், எடுபிடிவேலை இவற்றில் தான் இருக்கின்றார்கள்.

பார்ப்பானும், அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த கட்டுக் குடுமியும், இன்றைக்கும் போடும் பூணூலும் தான் இதற்குக் காரணம் எனும் சிந்தனை அக்மார்க் ஆஸ்திரேலிய தீக்கோழித்தனமானது!

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, March 17, 2007

(136) உதயசூரியன் என்றாலே புரட்டு...பொய் என அறியுங்கள்!

பகுத்தறிவு என்று ஒன்று தனித்து இல்லாது போனாலும் பொதுஅறிவு என்பது இருப்பின் உதயசூரியன் எனும் மாயையில் இருந்து விடுபட்டு விடலாம். வற்றாத ஜீவநதியாக பகுத்தறிவு வெள்ளம் பாயும் தமிழ்நாட்டில் உதயசூரியன் என ஏற்படுத்தப்பட்டது வெறும் மாயை என அறிய வேண்டியது ஏன் அவசியம் ஆகிறது?

தினம் காலை எழுந்தவுடன் எப்போதும் உதிக்காதது ஒன்று உதயசூரியன் என்று உதித்துத் தன் அறிவை மறைக்கும் மாயை பற்றி ஒரு நபர் அறிய வேண்டியது அடிப்படைத் தேவை.

பகுத்தறிவு உட்பட எல்லா விதமான அறிவின் மெய்யான ஆசான் பகலவன் எனப்படும் சூரியன். அடிப்படையாகச் சூரியன் பற்றிய தெளிவு இல்லாமல் காலையில் கிழக்கில் உதிப்பது உதயசூரியன் மேற்கில் மறைவது அஸ்தமன சூரியன் என்று நாம் பொதுவாகச் சொல்லிக்கொள்கிறோம்!

உதயசூரியன் எனும் வார்த்தை முதலில் தமிழ்ச்சொல்லா?
இல்லை உதயசூரியன் என்பது 100% சமஸ்கிருத வார்த்தை.
தெள்ளிய தமிழில் உதயசூரியனைக் குறிப்பிட "எழும் ஞாயிறு' எனலாம்."

அப்படியாயின் உண்மையாக ஞாயிறு எழுமா? தினசரி எழுகிறதா ஞாயிறு?

உண்மையாகச் சொன்னால் தமிழ்நாட்டில் இல்லங்கள் தோறும் இருக்கும் "நேற்று கிழமை சனி எனில் இன்று கிழமை என்ன? பதில்: ஞாயிறு" என்கிற கடுமையான புதிர், தத்துவங்களுடனான சிவகாசி தினசரி காலண்டரின் ஞாயிறு வேண்டுமானால் சீலிங்கில் தினசரி தொங்கும் ஃபீலிங் இல்லாதிருக்கும் கேதான் /க்ராம்ப்டன்/ஓரியண்ட்/போலார் மின்விசிறி ஓடும்போது காற்றில் ஆடியபடியே எழும்.

உதயசூரியன் குறித்த வானியல் உண்மை என்ன?
நாம் வாழும் பூமியானது தன்னைத் தானே சுற்றியபடி சூரியனையும் சுற்றி வருகிறது. சூரியன் வெகு உயரத்தில் அப்படியே நிலையாகவே இருக்கிறது. பூமி சுற்றுவதால் சூரியனின் ஒளி எல்லா நேரத்திலும் பூமியின் முழுப்பரப்பின் மீதும் விழுவதில்லை. சூரியனைப் பார்த்திருக்கும் பூமியின் பகுதியில் சூரிய வெளிச்சம் விழும் நேரம் பகல் என்றும், அதேநேரம் சூரியக்கதிர்கள் விழாத, பூமியின் அடுத்த பகுதி சூரியனைப் பார்க்க இயலாத நேரம் இரவென்றும் அழைக்கப்படுகிறது.

நாமிருக்கும் பூமியானது தன்னைத் தானே சுற்றிச் சுழன்று கொண்டே இருப்பதால் பகல், இரவு என்பதாக சூரிய வெளிச்சம் மாறி மாறி பூமிப்பரப்பில் விழுகிறது! இதனால் நமக்கு சூரியன் தினசரி எழுந்து விழுவதாகத் தோன்றுகிறது.

ஆக உண்மையில் சூரியன் எங்கே உதிக்கிறது? உதித்தால் தானே அஸ்தமிக்க?
வானில் இருக்கும் கோள்களில் எப்போதும் நிலையானது சூரியன்.

வான் வெளியில் சூரியனின் இந்த நிலைத்த தன்மையால்தான் இதர நகரும் கோள்களின் ரெபரன்ஸ் பாயிண்ட் என சூரியன் கருதப்படுகிறது. நகராத மையப்புள்ளியாக சூரியன் இருந்துகொண்டு, தன்னைச்சுற்றிவரும் இதரகோள்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு சூரியக்குடும்பம் என அமைக்கிறது.

உண்மையில் பூமியை உள்ளடக்கிய, உண்மையான சூரியக்குடும்பத்தின் தலைமையான சூரியன் உதித்தும், அஸ்தமித்தும் என இருந்தால் வானியல் சூரியக்குடும்பமே குளோஸ்!

அப்போ தமிழ்ச்சொல்லாக இல்லாத, வானியல் நிஜத்தில் இல்லாத உதயசூரியன்? தமிழ்நாட்டில்
உதயசூரியனை இன்றுவரை உண்மை என்று நம்பிய பாட்டாளி முதல் படிப்பாளி ஆகியோர் நிலை?

வேற வழி ஏதும் இல்லை. உதயசூரியன் என்கிற மாயையை நம்பியது தவறு என்று உணர்ந்து சுழலும் பூமியால் விளையும் மாயத்தோற்றமே உதயசூரியன் என்று உங்கள்
கருத்தை உண்மையின் பக்கம் மாற்றிக்கொள்ளுங்கள்.


குறிப்பு:

இது வானியல் வகையிலான உண்மையைச் சொல்லும் பதிவு. உதயசூரியன் கட்சி கருணாநிதி மந்திரிசபையில் மந்திரிகள் ஆக முடியாமல் பாட்டாளியின் கனவு இப்படி வெம்பிய மாம்பழம் ஆகிடுச்சே என ஃபீல் ஆகும் பாமக கட்சி ராமதாஸ் உளைச்சலைச் சொல்லும் பதிவல்ல!

அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, March 15, 2007

(135) பீர்பல் கதைகள்-2

பீர்பல் கதை-பகுதி-1

அக்பரின் அரசவைக்கு அன்று ஒரு வறியவன் வருகிறான். அன்றைக்கு அக்பருக்கு ஏனோ தன்னை நாடிவந்த வறியவனுக்கு நேரடியாகப் பொருளைத் தர விருப்பமிலாது போயிற்று. வறியவனை நோக்கி உனக்கு நான் ஒரு போட்டி வைப்பேன், அதில் நீ வென்றால் உனக்குப் பெரிய பரிசு உண்டு என்கிறார்.

வறியவனுக்கு வேறு வழி இல்லை. எனவே போட்டிக்கு சம்மதிக்கிறான்.

போட்டி : அக்பரின் அரண்மணைக் குளத்தில் நீரினுள் வறியவன் இரவு முழுதும் இருக்க வேண்டும்.அரண்மணைக் காவலர்கள் வறியவன் போட்டியில் வென்றதை நேரடியாகக் குளத்தின் கரையிலிருந்தபடி மேற்பார்வை செய்வார்கள்.

மறு நாள் காலையில் அரசன் வைத்த போட்டியின் படி இரவு முழுதும் குளத்தினுள் நீரில் இருந்துவிட்டு அக்பரிடம் பரிசை எதிர்பார்த்து வறியவன் அரசவைக்குச் செல்கிறான்.
பரிசுக்கு பதிலாக அதிர்ச்சி காத்திருக்கிறது. அரச காவலர்கள் கூற்றுப்படி வறியவன் குளத்தினுள் நீரில் இருந்த போது, குளக்கரையில் இருந்த விளக்குக்கம்பத்தையே பார்த்தபடி இருந்தான். விளக்கின் சூட்டைப் பெற்றதாலேயே வறியவனால் இரவுமுழுதும் நீரில் இருந்தது சாத்தியப்பட்டது எனவே வறியவன் போட்டியில் தோற்றதாகவும், அரச கட்டளையை மீறியதாகவும் அதனால் பரிசுக்கு பதிலாகக் கசையடி தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று அக்பரிடம் காவலர்கள் சொன்னார்கள். கசையடி தண்டனை வறியவனுக்கு வழங்கப்படட்டும் என்று சொல்லிவிட்டு ஓய்வெடுக்க அக்பர் அந்தப்புரம் சென்றார்.

அக்பர் அரசவையினின்று அந்தப்புரம் செல்லும் வழியில் பீர்பல் ஏதோ செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார். அருகே சென்று பார்க்கிறார். உறியடிக்கிற பாணியில் உயரத்தில் பானை ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது கீழே பீர்பல் விறகை எரித்துக்கொண்டிருக்கிறார்.

அக்பர் பீர்பலிடம் என்ன செய்கிறாய் என வினவ, அரசே நான் சமைத்துக்கொண்டிருக்கிறேன் என பதிலளிக்கிறார் பீர்பல். அரசர் எள்ளலுடன் பீர்பல் பானை இவ்வளவு உயரத்தில் இருக்கையில் சாப்பாடு தயாராகாது என்றார்.

பீர்பல் அரசே நேற்றைய போட்டியில் பிச்சைக்காரனுக்கு அவன் குளத்தினுள் நீரில் இருக்கும்போது அவனுக்கு குளக்கரை விளக்கு வெப்பம் தரவில்லையா அதுமாதிரிதான் இதுவும் எனச் சொல்ல அக்பருக்கு பீர்பல் என்ன சொல்கிறார் என்பது புரிகிறது.

அக்பர் அரசவைக்கு விரைந்து வறியவனுக்குத் தந்த கசையடி தண்டனையை நீக்கிப் பரிசுகள் பலதந்து அனுப்பிவைக்கிறார்.

(குறிப்பு: மன்னராட்சி என்றாலே மந்திரிகளுக்கு வாழ்க்கை இப்படியான தினசரி நிகழ்வுகள் நிறைந்ததுதான். அரசன் கோபமடையாமல் அதே சமயம் பாதிக்கப்பட்ட ஏழைக்கு நீதியை நிலைநாட்ட இப்படியாக அனுதினம் தம் நுட்பமான மதியால் உறியடிக்க வேண்டியிருக்கும்)

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, March 14, 2007

(134) கடவுள் எங்கே இருக்கிறார்?!!

கடவுள் எங்கே இருக்கிறார்? ஜிபிஎஸ் சிஸ்டம் மூலமாக அகப்படுமா இறைவன் இருக்கும் இடம்? பெரும்பாலானவர்கள் தேடி அலையும் இந்த இறைவன் பூட்டப்பட்டு இருக்கும் இடத்தின் சாவியைக் கண்டுபிடிக்க புதிய ஜேம்ஸ்பாண்ட் 007 வரணுமா?

இறைவன் எங்கே இருக்கார்ன்னு கண்டுபிடிக்க முதல்ல 916 தர உத்திரவாதம் தரும் தங்க நகைக்கடைக்குள் போகலாம் வாங்க!

தங்க நகைக் கடையின் உள்ளே பல தரப்பட்ட டிசைனில், கைவேலைப்பாடுகள் நிறைந்த நெக்லஸ், ராசிக்கல் பதித்த தோடு, பல்வகையான மோதிரம், நவீன மெஷின் கட் செயின், பாரம்பரிய ரெட்டை வடம் சங்கிலி, மூக்குத்தி, புல்லாக்கு, பல்வகை வடிவங்களில் திருமாங்கல்யம், ஒட்டியாணம், நெத்திச்சுட்டி, ஜிமிக்கி, முருகன் டாலர், கை வளையல்கள் இப்படி எவ்வளவோ நகைகள் பார்க்கிறீர்கள்.

இந்த நெக்லஸ், தோடு, மோதிரம், நவீன மெஷின் கட் செயின், ரெட்டை வடம் சங்கிலி, மூக்குத்தி, புல்லாக்கு, திருமாங்கல்யம், ஒட்டியாணம், நெத்திச்சுட்டி, ஜிமிக்கி, வளையல்கள் முருகன் டாலர் இப்படிக் கேட்டு வாங்கும் நகைகள் அனைத்தும் தங்கத்தின் வடிவங்கள், இவை எல்லாம் தங்கம் என்ற ஒரு சொல்லில் அடங்கிவிடும்.

இறைவன் தங்கம் போன்றே இப்படிப் பல்வகை வடிவங்களில் காணப்படுகிறான்.
16K, 18K,22K, 24K எனப்படுவது எல்லாம் இந்த நகைகளில் இருக்கும் தங்கத்தன்மையினை குறிப்பிடவே!

24காரட் சுத்தத் தங்கம் என்பது 16காரட் ஆக்க தங்கமாக அல்லாதது சேர்க்கப்படுகிறது.

16 காரட் தங்கம் 100% சுத்தத் தங்கம் ஆக வேண்டுமெனில் அதனுள் இருக்கும் தங்கம் அல்லாதது வெளியேற்றப்படவேண்டியது அவசியம்.

தங்கம் என்பது சத்யமானது. அதன் பல்வேறு வடிவங்கள் மாயை அல்லது மித்யா.
பல்வேறு வடிவங்களாக இருந்தாலும் அதுவும் தங்கமே!

ஆக தங்கமே உருவான நகைவடிவம் தங்கத்தைத் தேடி அலைவது அறியாமையாகும்.

இறைவனை உள்ளிருத்திய வடிவங்களாகிய நாம் இறைவனை நீ எங்கே இருக்கிறாய் என ஜிபிஎஸ் சிஸ்டம் வைத்து வெளிப்புறத்தில் தேடும் முயற்சி வீணானது.

எம் ஏழை மக்களிடம் இருந்து சிலரால் பிரிக்கப்பட்ட இறைவன் எங்கோ அடைக்கப்ட்டு இருக்கிறான்... அவனை விடுவிக்கிறேன் என சமூக நீதிக்கா சீற்றத்துடன் கிளம்புவது சட்டைப்பையில் சாவியை வைத்துக்கொண்டு உலகமெல்லாம் அதைத் தேடி அலைவதற்குச் சமமானது.

என்ன குழப்பமா இருக்கா!..சரி. குழம்பிய மனத்தைச் சரி செய்ய காற்றுவாங்க மெரீனா பீச்சுக்குப் போகலாம்... வாங்க!

கடலில் கால் நனைத்தபடியே காலைத் தொடும் அலையை ரசித்தபடி உற்று நோக்குங்கள்.

அலை என்பது இறைவன் எங்கே இருக்கிறார் என்பதை உங்களுக்கு எளிதில் உணர்த்தும்!

10 நிமிடத்தில் எத்தனை ஆயிரம் அலைகள் தோன்றுகின்றன. கடல் என்பதும் அலை என்பதும் வெவ்வேறா? அலை என்று தனித்து ஏதும் இருக்கிறதா?

நிச்சயம் அலை என்ற ஒன்று தனித்து இல்லை!
அலை என்பது கடலின் வெளிப்பாடு! கடலின் வடிவம் அலை!

இறைவன் கடல் மாதிரியானவன். நாமெல்லாம் அலைகள். இறைவனின் வெளிப்பாடுகள்!

அலையாகிய நாம் இறைவனாகிய கடலைத் தேடிக்கண்டுபிடிக்க முயற்சிப்பது எத்துணை அறியாமை!

ஆண்டவனை கண்டுபிடித்து யுரேகா!!..யுரேகா! என்று ஆர்க்கிமிடீஸ் மாதிரி கண்டுபிடித்துவிட்டேன் எனக் களிப்புடன் இதுதான் கடவுள் என்று காட்டிவிட முடியுமா?

கடவுள் எங்கே இருக்கிறார் என்பதே அபத்தமான கேள்வி! எங்கும் வியாபித்திருக்கும் கடவுளை தேடிக்கண்டுபிடித்தல் நடக்கிற காரியமா? கடவுள் காணப்படவேண்டியவர் அல்ல.
கடவுள் உணரப்படவேண்டியவர்!

கடவுளை உணர ஒருநபர் என்ன செய்யணும்? கடவுளை உணர ஒரு நபர்க்கு எதுவெல்லாம் தடையாக இருக்கும்? அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்!

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, March 11, 2007

(133) ஹரிஹரனின் கருவாச்சி காவியம்

என் கருவாச்சியோடு நவம்பர் 2006ல் இருந்து நான் குவைத்தில் நடத்தும் தேன்நிலவு பற்றி எழுதணும்னு நினைச்சிருந்தாலும் ரொம்பவும் பர்சனலான இந்த விஷயத்தைப் பொதுவில் எழுதலாமான்னு கொஞ்சம் கூச்சம்.

கருவாச்சி மீதான என் கண்மூடித்தனமான காதல் காரணமாக கடைசியா இன்னிக்கு என் மன்ம் கவர்ந்த கருவாச்சி இன்னொருவாட்டி என்னை மயக்கி தன்னைப்பற்றிய பதிவுபோடச்சொல்லி ஜெயிச்சுட்டா. கருவாச்சியின் வெளிப்புற உட்புறக் கவர்ச்சியில் மெய்யாலுமே மதிமயங்கித்தான் கிறங்கிக் கிடக்கிறேன் சில மாதங்களாக!


கருவாச்சி பத்திப் பொதுவா உலவுகிற பல கருத்துக்களை நான் கேட்டிருக்கேன். கருவாச்சிக்கு தாழ்வுமனப்பான்மை ஜாஸ்தி, அவ்வளவு ஈஸியா கருவாச்சிய சமாளிச்சுடமுடியாது. இப்படிக் கண்டமேனிக்கும் கருவாச்சி பத்திக் கேள்விப்பட்டதெல்லாம் நிசம் இல்லீங்க. அனுபவிச்ச உண்மையை வைத்துச் சொல்றேங்க! கருவாச்சியோட பவர் மெய்யாலுமே ஜாஸ்திதாங்க 2400CC!

பெரும்பாலும் தயிர்சாதத்தைப் புளிக்காய்ச்சல் தொட்டுக்கொண்டு சாப்பிடுற நான் 160 Horse power-ல் புலிப்பாய்ச்சல் காட்டும் என்னோட கருவாச்சிய ரொம்ப வியர்க்காமல், விறுவிறுக்காமல் ரொம்பவே ஈடுகொடுத்து சுலபமாச் சமாளிக்கிறேங்க :-))

இந்தக் கருவாச்சிக்கு முன் நான் வைச்சிருந்த தங்கமா, வெள்ளியாவும் வெளி வனப்பில் ஜொலித்த, மற்றும் வெள்ளைக்கார அக்காக்களையும் அவங்களோட அனுபவநினைவுகள் எல்லாத்தையும் இந்தப் புதுக் கருவாச்சி காணாமப் போக வச்சிட்டா!

அதிசயம் இந்தக் கருவாச்சியோடு கண்டிப்பா அடுத்த ரெண்டு வருஷத்துக்கு காண்டிராக்ட் குடித்தனம் நடத்தியாகணும்ன்றதை என் மனைவி, குழந்தைகளும் சந்தோஷமாச் சரின்னு சொன்னது!


ஒரு வளைவில் கருவாச்சி கண்சிமிட்டியபடியே தன் வளைவுகளை வனப்புடன் காட்டுகிறாள்:


கருவாச்சியை இனிமையாக அணைத்து ஆக்கிரமிக்க அழகுணர்ச்சியுடனான கட்டுப்பாடு மற்றும் கேளிக்கை அமைப்புகளின் தோற்றம்:


தன்மடிமேல் சவாரி செய்யற அஞ்சுபேருக்கும் அலுப்பே தெரியாத வண்ணம் ஈடுகொடுத்து கருவாச்சி அம்சமா சமாளிப்பா.



கருவாச்சியோட குரல் ரொம்பத் துல்லியமா இனிமையானது. தன்னை நம்பி சவாரி செய்றவங்களுக்கு ஒரு ஆபத்துன்னா "காற்றுப் பை" பாதுகாப்பு ஹைடெக்கா தருவா!






கருவாச்சி பத்தின கூடுதல் ஹைடெக் விஷயங்கள்:

புத்தம் புதிய 2007 Mitsubishi Galant ES 2400cc
Specifications: S4 MIVEC, 16V, SOHC MPI, Unleaded Max. Output: 170hp/5500rpm, Torque: 23.2 kgf-m/4,000rpm, Power Steering, Central Locking, Power windows, Colour-keyed Power Door Mirrors.

Drive Train/Chassis: ABS with EBD, Cruise Control, 16'' aluminum alloy wheels, full wheel covers, Keyless entry system 2 transmitters, Electronic immobiliser, Front & rear side door impact bars.Automatic Transmission

Exteriors: Windshield shade band, Rear Window defogger with auto off function, Color Keyed front & rear bumpers, Glass antenna, Colour keyed outer door handles, Variable intermittent windshield wipers & washers High Mount stop lamp.

Interiors: 4-spoke urethane steering wheel, Centre display (clock, audio information) Unique audio & HVAC panel, Rheostat, rear seat center armrest with cup holders, AM/FM Radio & CD Player with MP3 accomodation with 6 speakers, fully auto A.C., Heater, Tachometer, Retractable Assist Grip (4pcs), Trunk lid Opener, Driver's & front passenger's front advanced air bags, side air bags, Curtain airbags, Fuel tank capacity 67 litres Model 2007.


ஜப்பானியன் அமெரிக்க அணுகுண்டுகளை ஹிரோஷிமா, நாகசாகியில் வாங்கியது நேற்றைய வரலாறு. இன்றைக்கு ஜப்பானியன் இந்த மிட்சுபிஷி கருவாச்சியைத் தயாரிப்பது தன்னைத் தாக்கிய அதே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்!!

மிட்சுபிஷி கருவாச்சியை ஜப்பானியன் ஜப்பானைத் தவிர்த்துவிட்டு தன்மேல் அணுகுண்டுவீசிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தயாரித்ததை, கிராமத்துத் தமிழக இந்தியன் மத்தியகிழக்கு குவைத்தில் பயன்படுத்துவது எனும் செய்தி பல்வேறு வகையான செய்திகளை, உண்மைகளை உள்ளடக்கியிருக்கிறது!

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, March 10, 2007

(132) ஹரிஹரனின் சென்னை சங்கமம்!

1989 ஜூனில் சென்னைக்குள் சைதாப்பேட்டையில் சர்ச் வாசலில் தந்தை பெரியார் பேருந்தினின்று இறங்கியபோது மாலைநேரத்து மாநகரின் பெரிய(!?) சாலைகளும், இடைவிடாத போக்குவரத்தும், நெரிசலான அலைமோதும் மக்கள் கூட்டம் என்ற எல்லாமே மாக்ரோவாகத் தெரிந்தது. கூடவே இந்த மாக்ரோ மாநகரினுள்ளே எங்கே காணாமல் போய்விடுவேனோ :-)) என்ற மெல்லிய கிலி.

சென்னை என்றாலே திரைப்படங்களின் மூலமாக மிகையாகக் காட்டப்பட்ட தகவல்களே அதுவரை சென்னையை எனக்கு உருவகப்படுத்தியிருந்தது. வளசரவாக்கம் செல்லவேண்டும் எனக்கு.

இரவு 9.30மணிக்கு மணிக்கு வடபழனி பேருந்து நிலையத்தில் ஓடிச்சென்று காலியாக இருந்த பணிமனைக்குள் போகவேண்டிய அய்யப்பந்தாங்கல் செல்லும் வழித்தடம் 17JJ/RR/V பேருந்தில் ஏறியது பல்லவனில் முதல் சிறப்பு அனுபவம்.

பல்லவன் பேருந்து சேவைகளாக அப்போது இருந்த R (எம்ஜி)ராமச்சந்திரனையும்,
J என்பது ஜெயலலிதாவையும், V என்பது (ஆர்.எம்)வீரப்பனையும் குறிப்பதான தகவல் என்பது தமிழக அரசியலில் அதுவரை எவ்விதத்திலும் ஈடுபடாத என்னையும் இப்பேருந்துகளில் பயணிப்பதன் மூலம் அரசியலில் வலிந்து வளைத்துபோட்டுக்கொண்டது.

EMU (Electric Multiple Unit) எனப்படும் மின் தொடர்வண்டியும், அதன் பீக் அவர் நெரிசலும், ரயில்பெட்டியின் வாயிலில் பிதுங்கித் தொங்கிக்கொண்டும், நடைமேடையில் பேசியபடியும், சைட் அடித்தபடியேயும், ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் நடைமேடை முக்காலுக்கும் ஓடியபடியே வரும் இளம் வீர சூரர்கள் ஒருநொடி அஜாக்கிரதையால் கூடுதலாக அரை அடிக்கு வெளியே உந்தப்படும் போது மின்கம்பத்தில் மிகக் கோரமாக அடிபட்டு கீழே வீழ்ந்ததை மவுண்ட், கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர் எனப் பல இடங்களில் கண்டு ஆடிப்போயிருக்கிறேன்.

சைதாப்பேட்டை சின்னமலை பேருந்து நிருத்தத்தில் தந்தைபெரியார் பேருந்திலிருந்து இறங்கிய கிரமத்தான் கவனமற்று சாலையைக் கடக்கும்போது பல்லவன் அவன்மீது மோதி பலிகொள்ள அவன் கட்டியிருந்த வேட்டியை உருவிப்போர்த்தியதைக் கண்டது என்பது விபரமறிந்து நான் கண்ட முதல் உயிர்ப்பலி சாலை விபத்து!

வடக்கு உஸ்மான் ரோட்டில் ஒரு நிறுவனத்தில் எனது முதல் இண்டர்வியூ. லிபர்டி நிறுத்தத்தில் இறங்கி கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நடந்து வலது புறம் திரும்பினால் வடக்கு உஸ்மான் ரோடு வந்து விடும். கிராமத்திலிருந்து வந்த முதல் நாள் கோடம்பாக்கம் பாலத்தின் மீது நடக்கையில் கண் எரிச்சல் வாகனப் புகையால். (சென்னை 1989லே இருந்ததுக்கு இப்போ பெருங்கொடுமையாக இருக்கு வாகனப் புகை)

மவுண்ட் ரோடு எல்.ஐ.சிக்கு அருகில் சிம்ஸன் அருகிலிருந்த ஒரு வங்கியில் எனது தூரத்து உறவினர் வேலை செய்கிறார் என்ற தகவல் மட்டும் வைத்துக்கொண்டு வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து சைக்கிளில் முதுகு வேர்வையில் சட்டை ஒட்டிக்கொள்ள நாக்குத் தள்ளியபடியே மிதித்து காமராஜ் அரங்கம் தாண்டி ஜெமினி மேம்பாலத்தில் பலங்கொண்ட மட்டும் சைக்கிளை மிதித்து ஏற நடுப் பாலத்தில் போக்குவரத்துப் போலீஸால் தடுத்து நிறுத்தப்பட்டேன். மேம்பாலத்தில் சைக்கிளில் போகக்கூடாது என்று திருப்பி அனுப்பப்பட பல்வேறு கிளைகளுடனான ஜெமினி ஜங்ஷனைத் தாண்டி மவுண்ட் ரோடை மீண்டும் கண்டு கொள்ள நான் பட்ட பாடு.

மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை சந்திப்பு, கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு இவைகளில் சிவப்பு மஞ்சள் பச்சை என ப்ளாஸ்டிக் பக்கெட் மூடிகளை போக்குவரத்துக் குடையிலிருந்தபடியே காவலர் காட்டியதுதான் அதுவரையிலான நான் பார்த்த "ஸோபிஸ்டிகேட்டட் டிராபிக் மேனேஜ்மெண்ட்"

ஏற்கனவே கிராமத்தான் எல்லாம் கேனைன்னு நினைப்புள்ள அந்த பட்டணத்து தூரத்து உறவினரை சட்டை பேண்ட் எல்லாம் தொப்பலாக வியர்வையில் வழிய வழிய நனைந்த படியே பார்த்துப் பேசிவிட்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் மீண்டும் மவுண்ட் ரோடு எல்.ஐசியிலிருந்து சைக்கிள் மிதித்து வடக்கு உஸ்மான் வந்து சேர்ந்தேன்.

எனது வேலையின் லஞ்ச் பிரேக் ஒருமணி நேரத்தில் இப்படி போகவர 20கிலோமீட்டரருக்கு சைக்கிள் மிதித்து உறவு பேணி கிராமத்தான் கேனைன்னு மீண்டும்நிரூபித்தேன் :-))

ஆரம்ப நாட்களில் சென்னை எழும்பூரில் காஞ்சி ஹோட்டல் அருகே இருந்த ஒரு க்ளையண்டைப் பார்க்க காலையிலே போகச் சொல்லிய மேலாளர் அப்படியே வாயைத் திறந்தவாறே அங்கேயே இருந்திடாதே என்ற போது என் மரமண்டைக்கு ஏதும் புரியாமல் பொத்தாம் பொதுவாக தலை ஆட்டியவாறே ஆட்டோவில் சென்றது முதல் ஆட்டோ பயணம். பிற்பாடு தெரிந்து கொண்டேன் அங்கே சென்னையின் பிரபலமான எத்திராஜ் மகளிர் கல்லூரி இருக்கிறது என்று.

"கெட்டும் பட்டிணம் சேர்" எனும் மூதுரையை கணக்கில் எடுக்காத பணி இடத்தில் இருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒரு நபர் ஏங்க எல்லோரும் ஊர்நாட்லேர்ந்து இங்கவந்து டேரா அடிக்கிறீங்கன்னு என் மாதிரியான கெடாமலே பட்டினம் சேர்ந்தவர்களை நக்கலடித்து ராகிங் வதை செய்வதை ரங்கநாதன் தெருவில் சுகந்தி மேன்சனில் தங்கி இருந்த நாட்களில் கேசரி பவுடர் கலரிலான "ராகிமால்ட்" எனும் பானத்தை வெறுப்போடு மறுத்துப் பார்த்தபடியே 40காசுக்கு ஒரு சிங்கிள்டீ அடித்துக்கொண்டு தீவிரமாக யோசித்திருக்கிறேன்.

பாண்டிபஜார் தி.நாகர் தலைமைத் தபால் நிலையம் அருகே பரபரப்பாகச் செயல்படும் படித்த இளைஞர்களின் கையேந்தி பவனில் மெனுபார்த்து உண்ட தருணங்களை விட கையில் இருக்கும் காசுக்கேற்ற வகையிலான மெனு தேடுவதில் கையேந்திபவனிலும் புரியாத புதிராக இருந்த எனது பொருளாதாரம் இந்தியா மாதிரி கடன்காரப் பொருளாதாரமாக இல்லாதிருக்க முயற்சித்த காலங்கள்!

திநகர் தபால் நிலையத்தின் முன் இருந்த கையேந்தி பவனுக்கும், ராஜா தெருவின் அடுத்த முனையில் ப்ரில்லியண்ட் டுடோரியல்ஸ் முன்னாலிருக்கும் கையேந்திபவனுக்கும் விலை வித்தியாசம் தெரியாமல் சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் (கட்டாயமாகப் பொருளாதார இழப்பால் உந்தப்பட்ட) நடத்திய விரத அனுஷ்டிப்பு கையேந்தி பவன்களிலும் இருக்கும் பேதம், பாகுபாட்டை உணர்த்தியது!

சென்னை எனக்கு உணர்த்தியவை, நான் சென்னையில் உணர்ந்தவை அடுத்து வரும்....

அன்புடன்,

ஹரிஹரன்

(131) அதர் ஆப்ஷனில் என்பெயர் நம்பரில் கும்மியடித்த நபருக்கு நன்றி நன்றி!

முத்துக்குமரனின் இப்பதிவில் எனது பெயர் புரோபைல் நம்பருடன் போலியாகப் பின்னூட்டமிட்ட அந்த அறிமுகமில்லாத அன்புள்ளத்திற்கு நன்றி!

எனது போட்டோ புரைபைலில் இல்லாததும் இது அதர் ஆப்ஷனில் எனது பெயர் புரோபைல் நம்பர் பயன்படுத்தி சில அதி நல்ல உள்ளங்கள் செய்த இச்செயலை முத்துக்குமரன் முதல் கொண்டு இந்த இரு பின்னூட்டங்களுக்குச் செவிமடுத்து பதிலளித்த மூத்த, இளைய வலைஞர்கள் தங்கள் கவனத்தில் கொள்ளாது ஒரிஜினல் ஹரிஹரன் என எண்ணி இந்த ஹரிஹரனுக்கு கண்டனக் கும்மி அடித்தது என்பதை எம்பெருமான் முருகனைத் அடியேன் பகுத்தறிவுப் பாடை கொண்டு பயன்படுத்தி, அணுகியதற்கு எனக்குக் கிட்டிய ஊழ்வினையாக எடுத்துக்கொள்கிறேன்!

//அரசியல் திரா"விட" பெத்தடின்கள் தமிழ் கடவுள் முருகனை பெரிய யோக்கியமாக சித்தரித்து சித்து விளையாட்டு விளையாடும் அயோக்கியதனத்தை ஐம்பது நூற்றாண்டுகளாக நடத்தி வருவதை பகுத்தறிந்து தமிழ் கடவுள் முருகன் ஒரு காமாந்தகன் என்றொரு பதிவு போட்டிருக்கிறேன். படிக்கவும். முருகன் குறத்திமகளை வண்புணர்ந்ததை பற்றியும் எழுதி இருக்கிறேன். முருகன் பிராமணன் அல்ல என்பதையும் திரா"விட" பெத்தடின்கள் உணரவேண்டும்.//

//நான் அந்த பதிவு போட்டதுமே நான் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் எதிர்பாராவிதமாக திரா"விட" பெத்தடின்களும் மகிழ்ச்சி அடைந்து விட்டார்கள். திரா"விட" பெத்தடின்கள் என்ன செய்தாலும் எரிச்சல் அடைய மறுக்கிறார்கள் என்பதாலும், சில ஆரிய அன்பர்கள் மனம் புண்பட்டதாலும் அந்த பதிவினை முருகன் அருளால் நீக்கிவிட்டேன்.//

முத்துக்குமரன் போன்ற மூத்த வலைஞர்களுக்கு கண்டனக்கும்மி ஆரம்பிக்கும் முன் கண்டனத்திற்கான கருத்து ஒரிஜினல் பதிவருடையதா என ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள் என்பது எனது வேண்டுகோள்.

கந்தசாமிக் கடவுளே அதர் ஆப்ஷனில் எனது பெயர், புரொபைல் நம்பர் கொண்டு கும்மியடித்த பகுத்தறிவு அனானிக்கு கொஞ்சூண்டு பொது அறிவு கொடு!

அன்புடன்

ஹரிஹரன்

Friday, March 09, 2007

(127) திருக்குறள் - பகுத்தறிவு - உலகத் தமிழனின் இரு கண்கள்

அரசியல் திரா"விடம்" பேசும் தமிழகத்துத் தலைவர்கள் பல தலைமுறைகளாகக் கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லி வருவது அய்யன் திருவள்ளுவர் ஈன்ற உலகப் பொதுமறை திருக்குறளும் ஈரோடு ஈன்ற அய்யாவினால் கிடைக்கப் பெற்ற பகுத்தறிவும் உலகத்தமிழனின் இரு கண்கள் என்பதே.

கிறிஸ்து, கிரிகோரியன் ஆண்டுக்கு இணையாகத் தமிழ் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு என்று சொல்வது, குமரிக்கடலிலே 133 அடிக்கு சிலை என அய்யன் திருவள்ளுவருக்கு ஒருபக்கம் நடக்கிறது. அடுத்த பக்கம் பகுத்தறிவுப் பகலவன் என ஈவெராவைச் சொல்லி துதி,வழிபாடு நடக்கிறது 128 ஈவெரா சிலைகள் வைக்க ஏற்பாடுகள் என தமிழனின் இருகண்களாக அய்யனையும் அய்யாவையும் சொல்லி வெண்ணை ஒருகண்ணிலும், சுண்ணாம்பு ஒரு கண்ணிலும் என தமிழன் பார்வைக் கோளாறுடன் போராடுவதை ஆராய்வோம்.

அய்யன் திருவள்ளுவர் உலகப் பொதுமறை திருக்குறளில் என்ன சொல்கிறார் என்பதை அய்யா பகுத்தறிவு சொன்னதோடு பொருத்திப் பார்க்கலாம்.

படித்துப் பார்த்துவிட்டு உலகத் தமிழனின் எந்தக் கண் "பூ"விழுந்த கண் என்று சீர்தூக்கிப் பார்க்கவும்.
----------------------------------------------------------------------------------
வெறுப்பு-இகல்-Hatered பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் வெறுப்பு-இகல்-Hatered பற்றிச் சொன்னது:


851. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பா¡¢க்கும் நோய்.

விளக்கம்: வெறுப்பு என்பது கொடும் நோய் அது பிரிவுணர்வையும் மிகக் கெட்ட எண்ணங்களையும் அனைத்து பக்கங்களிலும் பல்கிப் பெருகச்செய்து கேடுவிளைக்கும்.

Hatred is a plague that divides 851
And rouses illwill on all sides.

இன்சொல் பற்றி ஈவெரா பாசறை அமைத்துப் பரப்பிய பகுத்தறிவு:

1. பாம்பையும் பார்ப்பனனையும் பார்த்தால் பாம்பை விடு பார்ப்பனனை அடித்துக்கொல்!

----------------------------------------------------------------------------------

பெண் மாண்பு பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் பெண் மாண்பு பற்றிச் சொன்னது:

57. சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

விளக்கம்: சிறை வைத்துக் காப்பதால் என்ன பயன்? பெண்கள் தங்கள் நிறைமாண்பு காத்தலே தலைமையானது.
Of what avail are watch and ward? 57
Their purity is women's guard.

பெண் மாண்பு பற்றி ஈவெரா பாசறை அமைத்துப் பரப்பிய பகுத்தறிவு:
1. கற்பு என்பது பெண்களுக்கு அவசியமற்றது.
2. பெண்கள் கள்ளப்புருஷன் வைத்துக்கொள்ள வேண்டும்.
3. கண்ணகி, கற்பு என்பவை ஏமாற்று

கண்ணகி, கற்பு பற்றி ஈவெரா வின் கீழான எண்ணங்களும் கற்பு பற்றிய குஷ்பூ பேச்சுக்கு பகுத்தறிவுக் குஞ்சுகள் வெளக்கமார் போராட்டம் நடத்தியதும் தனிச்சுவையானது

-------------------------------------------------------------------------------------

இனிய சொல் பேசுதல் பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் இன்சொல் பேசுதல் பற்றிச் சொன்னது:

100. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
Leaving ripe fruits the raw he eats 100
Who speaks harsh words when sweet word suits.

விளக்கம்: பேச / விவாதிக நல்ல வார்த்தைகள் இருக்க கொடிய வார்த்தைகள் பேசுவது என்பது கனிந்த கனிகள் இருக்கக் கசக்கும் காயை உண்பதற்குச் சமம்!

இன்சொல் பற்றி ஈவெரா பாசறை அமைத்துப் பரப்பிய பகுத்தறிவு:

1. பாம்பையும் பார்ப்பனனையும் பார்த்தால் பாம்பை விடு பார்ப்பனனை அடித்துக்கொல்!
2. பார்ப்பனப் பெண்களை தேசிய உடமை ஆக்கு!

----------------------------------------------------------------------------------

உடல்-உள்ளத் தூய்மை வாய்மை பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் உடல்-உள்ளத் தூய்மை-வாய்மை பற்றி சொல்லுவது:

298. புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்.

விளக்கம்: ஒருவனுக்கு நீரினால் உடல் தூய்மை கிடைக்கும். உண்மை பேசுவதால் உள்ளத் தூய்மை கிடைக்கும்.

Water makes you pure outward 298
Truth renders you pure inward.



உடல்தூய்மை- வாய்மை பற்றி ஈவெரா பகுத்தறிவாக வாழ்ந்து காட்டியது:

1) குளிப்பதை நான் வெறுக்கிறேன். அதை ஒரு தொல்லையாகவே பார்க்கிறேன் என்றவர் ஈவெரா.

2)பிள்ளையார் சிலையை தெருவில் உடைத்துவிட்டு தன்வீட்டில் ரகசியமாக பிள்ளையாரை வணங்கியவர்!

3)வெங்காயமே வித்து என்கிற எளிய உண்மையை விடுதலை செய்யாமல் உண்மை, விடுதலை, மேடைகள் வாயிலாக இந்துமதம் வித்தற்ற வெங்காயம் எனச்சொல்லி வெங்காயத்தில் விதை தேடிய வீரியம் மிக்க விஞ்ஞானி!
-------------------------------------------------------------------------------

புலால் உண்ணாமையில் அய்யன் வள்ளுவர் VS அய்யா பகுத்தறிவு


அய்யன் திருவள்ளுவர் புலால் உண்ணாமை பற்றிச் சொன்னவை:

254. அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்.

விளக்கம்: உயிரைக் கொல்லுதல் இரக்கமற்ற செயல், உயிரைக் கொன்று சாப்பிடுதல் என்பது ஈனமானது.
If merciless it is to kill, 254
To kill and eat is disgraceful.


260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

விளக்கம்:. கொல்லாதவனை, புலால் உணவை மறுத்தவனை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும்
All lives shall lift their palms to him 260
Who eats not flesh nor kills with whim

257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்: .
ஒருவன் புலால் உண்ணாமல் இருக்க புலால் என்பது இன்னொரு உயிரின் "புண்" எனத் தன் மனதால் உணரவேண்டும்From eating flesh men must abstain 257
If they but feel the being's pain

புலால் உண்ணாமை குறித்து ஈவெரா காட்டிய பகுத்தறிவு:

1)கொன்றால் பாவம் தின்றால் போச்சு!

2)ஆடு, மாடு, கோழி எல்லாம் மனிதன் கொன்று தின்பதற்காகத்தான்!

3)மாட்டுக்கறி ஈவெராவின் சிறப்பு விருப்ப உணவு!

-------------------------------------------------------------------------------
பார்ப்பனர்-அந்தணர் பற்றி அய்யன் வள்ளுவர் VS அய்யா பகுத்தறிவு


அய்யன் வள்ளுவர் பார்ப்பனர்-அந்தணர் பற்றிச் சொன்னது

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

விளக்கம்: எந்த உயிருக்கும் கேடுவிளைவிக்காமல் அறவழி வாழ்பவர்கள் அந்தணர்கள்.

134. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

விளக்கம்: பார்ப்பனன் வேதத்தை மறந்தாலும் ஏற்கலாம். ஆனால் பார்ப்பனனாக இருக்கவேண்டிய ஒழுக்கமின்றி வாழ்ந்தால் கேடு.

560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

விளக்கம்: கொடுங்கோல்அரசன் காக்கவில்லை எனில் பசுக்கள் பால் குறைந்து தரும், வேதநெறி ஒழுகி அறுவகைத் தொழில் செய்வோர் வேதம் மறப்பர்.
The *six-functioned forget their lore 560
Cows give less if kings guard no more.
* the six functions are: learning, teaching, giving,
getting, sacrificing, kindling sacrifice.
These are duties of Vedic savants

பார்ப்பனர்-அந்தணர் பற்றி அய்யா பகுத்தறிவு தமிழகத்தில் ஈவெரா பாசறை அமைத்துச் சொல்லித் தந்த அரசியல் திரா"விட" பகுத்தறிவு சொல்வது:

1. பார்ப்பனன் பாம்பை விடக் கொடிய விஷம் பொருந்தியவன்.
2. சமூகத்தில் சமநிலை வரவேண்டுமெனில் வேதம் ஓதும் பார்ப்பனனை மலம் அள்ள விடு!
3. வேதம் ஓதும் அந்தணர் மீது தாக்குதல் நடத்தி குடுமி, பூணூல் அறுத்து எறி!
------------------------------------------------------------------------------------

1330 குறள்கள் இயற்றிய பரந்து பட்ட பார்வை கொண்ட பச்சைத்தமிழனான
அய்யன் திருவள்ளுவருக்கு வேதநெறி, பார்ப்பனர்கள்,வழிபாடுகள் மற்றும் அஸ்வமேத யாகம் குறித்து இன்றைய ஈவெரா வழிவந்த நபர்களின் பகுத்தறிவுப் புரிதல்கள் இல்லை என்பது அவரது குறட்பாக்களே விடுதலை செய்கிற உண்மை!

(அய்யனைப் பச்சைத் தமிழன்னு சொல்லாம் தானே:-)) அட காமத்துப்பால் களவியல், கற்பியல் என்று எழுதியிருக்காருங்க அய்யன் வள்ளுவர்)

எந்த விதமான தயக்கமும் இன்றி உலகப்பொதுமறை இயற்றிய அய்யன் திருவள்ளுவரை ஒருகண்ணாக ஏற்றுக் கொள்கின்றீர்களா? சரி. அப்போ வாழ்நாள் முழுதுமாகப் பொய்மையைப் பகுத்தறிவு என்று ஈவெரா பிதற்றியதை இன்னொரு கண்ணாக ஏற்றுக்கொண்ட பூவிழுந்த கண்ணின் கதி?

ஒரு கண் மட்டும் உலகத் தமிழனுக்குச் சரியான பார்வை தருமா?
பூவிழுந்த பொய்ப் பகுத்தறிவுக்கண்ணை நம் தாய்த்திருநாட்டில் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த சனாதனதர்மம் எனும் லேசர் டிரீட்மெண்ட்டில் சரி செய்துவிடலாம்.

சந்தேகம்-1
திருக்குறள் இனி உலகப் பொதுமறை என பகுத்தறிவுகள் ஏற்குமா?

சந்தேகம்-2
இனி அய்யன் திருவள்ளுவரும் பார்ப்பனீய அடிவருடி பட்டம் சூட்டப் படுவாரா?

அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, March 08, 2007

(130) இந்து தரும முருக பக்தர்கள் மன்னிக்கவும்!

அரசியல் திரா"விட"ப் பகுத்தறிவுகளுக்கு பதில் என்பதை விட இந்து தரும வழி நடக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு மன அதிர்வைத் தரும்படியான வகையில் அமைந்துவிட்ட முருகக் கடவுள் குறித்த பகுத்தறிவு வழியிலான பார்வைக்கோணத்தில் எழுதப்பட்ட முந்தைய பதிவு "உறைய வைக்கப்பட்டு" திரும்பப் பெறப்படுகிறது. பார்வையாளர்களது பார்வையிலிருந்தும் அப்ப பதிவு நீக்கப்படுகிறது எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கந்தசாமிக் கடவுளிடமும் சனாதன இந்து தருமத்தின் படி நடக்கும் கந்தனின் பக்தர்களிடமும் மன அதிர்வு ஏற்படுத்தும் விதத்தில் சென்ற பதிவிட்டதற்காக நிபந்தனை அற்ற மன்னிப்பைக் கோருகிறேன்.

சுட்டிக்காட்டி இடித்துரைத்த ஆன்மீக அன்பர்க்கு என் நன்றிகள் பல.

முருகா! உடன் இருந்து உடனே வழிகாட்டி என் தவறைத் திருத்திய வடிவேலா! கந்தசாமிக் கடவுளே! உன் கருணையே கருணை!

Monday, March 05, 2007

(128) பூணூல் அணிவது சாதி அடையாளமா?

பூணூல் என்பது பிராமணர்கள் மட்டுமே அணிவது சாதித் திமிர் காரணத்தால் தானே?

பூணூல் எனும் 8ம் நம்பர் நூல் அணிவதால் மட்டுமே ஒருவர் சமூகத்தில் உயர்ந்தவரா?

இந்து தருமத்தைப் பேணுபவர்கள் ஏன் பூணூல் அணிய வேண்டும்?

இந்துக்களில் பெரும்பான்மையாகப் பிராமணர்கள் மட்டும் தொடர்ச்சியாகப் பூணுல் அணிவது ஏன்?

இப்படிப் பூணூலைச் சுற்றி சுற்றப்பட்ட கேள்வி நூல்கள் சிக்கலான நூல்கண்டு மாதிரி இன்றைக்குக் காணப்படுகிறது.

கேள்வி-1: பூணூல் பிராமணர்கள் மட்டுமே அணிய வேண்டியதா?

பதில்: இல்லை. இந்து தருமத்தினைப் பின்பற்றும் அனைவரும், ஆண், பெண் பால் வேறுபாடு இன்றி அணியப்பட வேண்டியது பூணூல். வேத காலத்தில் அப்படியே அனைவரும் அணிந்திருந்தனர்.

கேள்வி-2: பூணூல் ஏன் பிராமணர்களிடையே மட்டுமே அணியும் வழக்கமாக இருக்கிறது?

பதில்: இது ஈவெரா ஏற்படுத்திய குழப்பத்தால் ஏற்பட்ட நிலை. பிராமணர்கள் ஆசிரியராகவும், இறைப்பணியிலும் இருந்த அந்தணர்கள் ஈவெராவினால் விழைந்த குழப்பத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நமது பாரம்பரியத்தை இன்னும் இறந்த பாரம்பரியமாக மியூசியம் சென்று விடாமல் காக்கின்றனர். செட்டியார், ஆசாரியார் என பிராமணரல்லாதவர்களும் பூணூல் அணிகின்றனர்.

கேள்வி-3: பூணூல் எனும் அடையாளம் சொல்வது என்ன?

பதில்: பூணுல் என்பது மூன்று நூல் ஒரு முடிப்பில் முடிந்தாக அமைப்பில் காணப்படுகிறது. இந்த முடிப்பு பிரம்ம முடி என்று அழைக்கப்படும். பிரிக்கவே முடியாத முடிப்பு எனச் சொல்லப்படும். முடிக்கப்பட்ட இந்த மூன்று நூல் கயிறுகள் உபநயனத்தின் போது அணிவிக்கப்படுபவருக்கு அவரால் தப்பிக்க முடியாத, மூன்று பிரிக்கமுடியாத சமூக பந்தங்களையும், அதற்குச் செய்நன்றி காட்டவேண்டிய கடமையையும் அந்த நபர்க்கு உணர்த்துவது.

பூணூலின் முதல் நூல் கயிறு: வேதம், உபநிடம், வாழ்வியல் நெறி, தருமங்களை உபதேசித்த பல்வேறு ரிஷி, முனிவர்கள், ஆசிரியர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய நன்றியை மறக்காமல் நினைவு படுத்துவது. குருபரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியைக் குறிப்பது.

பூணூலின் இரண்டாம் நூல் கயிறு: தான் தோன்றக் காரணமான தனது முன்னோர்களை, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் அவர்க்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடனையும் நினைவு படுத்துவது. குலப்பரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியைக் குறிப்பது.

பூணூலின் மூன்றாம் நூல் கயிறு: தான் வாழ உதவும் தேவதைகளான (இயற்கை) நீர், நிலம், காற்று,சூரியன், ஆகாயம், எனும் பஞ்சபூதமாகிய தேவதைகளுக்கு ஒரு நபர் செலுத்த வேண்டிய நன்றியை நினைவு படுத்துவது.

இந்த மூன்று விதமான நன்றிக் கடன்களை ஒருவன் எப்படித் திருப்பிச் செலுத்த வேண்டும்?

குருபரம்பரைக்கான நன்றிக்கடனை அவர்கள் அருளிய வேதம், வாழ்வியல், உபநிடத்தத்துவங்களைக் கற்று அறிந்து சமூகத்தில் தன்னைச் சுற்றி இருக்கும் பிறரோடு அந்த அறிவைப் பகிர்ந்து கொண்டு வழி வழியாக இந்த நல்ல நெறிகள் தழைக்க தானும் இரு கருவியாகப் பயன்படுவதன் மூலம் குரு பரம்பரைக்கான நன்றி திருப்பிச்செலுத்தப்படுகிறது.

குலப் பரம்பரைக்கான நன்றிக்கடனை முன்னோர்கள், பெற்றோர் நற்சொல்ல்லுக்குக் கட்டுப்பட்டு நடத்தல் மூலமும், முறையான வகையில் தன் சந்ததியைப் பெருக்குவதன் மூலமும் சமூகத்தில் நெறியான வாழ்வு வாழ்ந்து காட்டுதல் மூலமும் கருவியாக ஒருவன் செயல்படுவதன் மூலம் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

மூன்றாவதான தேவதை (இயற்கை) களுக்கான நன்றிக்கடனை நதி, குளம், ஏரி என நீரை, ப்ராண வாயு நிறைந்த காற்றை, பூமியை, ஆகாசத்தை, நெருப்பு சக்தியை அசுத்தப்படுத்தாமல் பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கு நீர், நில, காற்று, வெளி,வளங்கள் பயன்பாட்டுக்கு இருக்கும் வண்ணம் வனம் அழிக்காது மரம் வைத்து என பஞ்ச பூத தேவதைகளிடமிருந்து தான் பெற்று வாழ்ந்ததை தான் உருவாக்கிய அடுத்த தலைமுறை அதே செறிவோடு பயன்படுத்த தர ஒருவன் தன்னைக் கருவியாக்கிச் செயல்படுவதால் தேவதைகளுக்கான நன்றிக்கடன் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

ஆக பூணூல் அணிவது எனும் சடங்கு மூலம் பாலகனாக இருக்கும் ஒரு சிறுவனுக்கு அவனுக்கான கடமைகள் என்ன என்பதை எடுத்துரைக்கும் நிகழ்வான உபநயனத்தில் பாலகன் எனும் பிறப்பு முடிந்து இந்தச் சமூகக் கடமைகள் கற்பிக்கப்பட்டு ஒருவன் புதிய பிறப்பு எய்துகிறான்.

பூணூல் என்பது சாதி அடையாளம் என்று அறியப்பட்டிருப்பது கேவலமான திரிபு.

மெய்யாகப் பூணூல் என்பது ஒரு நபரின் சமூகக் கடமையை தினமும் நினைவூட்டும் இந்து தருமப்படியிலான அணியக்கூடிய செயல்பாட்டு ரிமைண்டர்.

காயத்ரி மந்திரம் என்பது ஒருவனுக்கு சீர்தூக்கிப்பார்க்கும் சிந்தனையை, அறிவைத் தரும்படி சூரியக்கடவுளிடம் வேண்டும் மந்திரமே. சிந்தனை செறிவோடு இருந்தால் தான் கடமைகள் செவ்வனே சமுதாயத்தில் ஆற்ற முடியும்.

ஏழுமுதல் பதிமூன்று வயதுக்குள் உப நயனம் செய்யப்பட வேண்டும் ஒரு நபருக்கு. ஏழு வயதில் போட்ட பூணூல் அப்படியே இருந்துவிட முடியாது. உடல் வளர்ச்சியாலும், நூல் பழையதாவதாலும் உபநயனம் நடத்திப் போட்ட பூணூலைக் கழற்றி எறிந்து விட்டு பூணூல் அடையாளமாக நினைவூட்டும் கடமைகளை மறந்து விடக்கூடாது என்பதால் ஆவணி அவிட்டம் என்று வருடம் ஒருநாள் பூணூல் மாற்றி அதன் மூலம் ஒருவன் தனக்குப் புகட்டப்பட்ட கல்விவழி அறிந்த கடமைகள், நன்றிக்கடன் திருப்பிச் செய்தலை நினைவில் புதுப்பித்துக் கொள்கிறான்.



பூணூலின் மூன்றாம் நூல் நன்றிக்கடன் திருப்பிச் செலுத்தல் என்பதில் ஓசோன் படல ஓட்டை, கியாட்டோ புரோட்டோகால், க்ரீன் ஹவுஸ் வாயுக்கள், க்ளோபல் வார்மிங், கூவம், அடையாறு நதிகள் சாக்கடை ஆக்கம், பொதுவில் எங்கும் சிறுநீர் கழிப்பது, ரயில்வே டிராக் பக்கம் எங்கும் மலம் கழிப்பது, சென்னைக் காற்றில் கார்பன் துகள்கள், முகமூடி, முழுநீளக்கையுறைத் தேவைகள் என பஞ்சபூதங்களை சுயநலமாக நசித்து அடுத்த தலைமுறைக்கு பஞ்சபூதங்களின் பஞ்சம் பூதாகாரமாக ஆக்கிய சுயநலமனிதச் செயல்பாடுகள் உள்ளடங்கி இருப்பது சனாதன தருமம் எவ்வளவுக்கு இயற்கையைத் துதித்துப் பாதுகாக்கச் சொல்லுகின்ற மிக உயர்ந்த சுற்றுச்சூழல் புரோட்டோகால் என்பதைத் தெளிவுபடுத்தும்.

ஆக பூணூல் என்பது இந்து தருமத்தைப் பின்பற்றும் எல்லோராலும் பாகுபேதமின்றி அணியப் படவேண்டியது. சனாதன தருமப் பாரம்பரியம் என்பது சரியாகப் புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் அவரால் ஆன முயற்சிகளைச் செய்யவேண்டும்.

ஆக ஆவணி அவிட்டம் ஒரு பண்டிகையா? பூணூல் 8ம் நம்பர் நூலுக்கு இவ்வளவு மரியாதையா? என்றெல்லாம் சவுண்டு விடும் பகுத்தறிவுகளுக்கு : ஆவணி அவிட்டம் உண்மையில் உலக அளவில் கொண்டாடப்பட வேண்டிய சமூக வாக்குறுதி நினவூட்டல் திருவிழா!

எனவே அனைவரும் வாருங்கள்... இந்து தருமத்தில் இருப்போர் அனைவரும் பூணூல் அணிவோம்... புவனம் காப்போம்! இந்து தருமப்படியான "ஆச்சாரியர்-முன்னோர்-சுற்றுச்சூழலுக்கான தேங்க்ஸ் கிவிங் டே"ஆன ஆவணி அவிட்டம் கொண்டாடுவோம்!

குறிப்பு:
ஏதோ என்னாலான வகையில் நான் நமது சனாதன தருமத்தினை உரைத்த குருபரம்பரைக்குப் பட்ட நன்றிக்கடன் திருப்பிச் செலுத்துவதாக நான் கற்ற உயரிய இந்து தரும அறிவைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:-))


அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, March 04, 2007

(126) அய்யன் திருவள்ளுவரின் இரட்டை நாக்கு

இணையம்-வலைப்பூ-பதிவுகள் வழியாக தமிழகத்தின் அரசியல் திரா"விட" பகுத்தறிவு எனக்கும் பீடித்ததில் உலகப்பொதுமறையாம் திருக்குறள் அளித்த அய்யன் திருவள்ளுவரின் அதிகார இரட்டை நாக்கு சில அதிகாரங்களில் எனக்குப் புலப்பட்டது.

எனது கடவுள் நம்பிக்கையும், இறை வழிபாடும் துணையாக வந்ததால் நல்லவேளையாகத் நான் தப்பிப் பிழைத்தேன்!

380. ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று
சூழினும் தான்முந் துறும்.


விளக்கம்: விதியினும் வலிமை மிக்கது ஏதும் உண்டோ? மனிதனுடைய முயற்சியினும் வலிவுடையது விதி என்கிறார் அய்யன் திருவள்ளுவர்.
What power surpasses fate? Its will 380
Persists against the human skill.

620. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.


விளக்கம்: சோம்பல் விடுத்து முயற்சியால் உழைத்துக் களைப்பவர்கள் விதியையும் பின்னுக்குத் தள்ளிவிடுவர் என்கிறார் திருவள்ளுவர்.

Tireless Toiler's striving hand 620
Shall leave even the fate behind.

அய்யன் திருவள்ளுவரின் அப்பட்டமான மோசடியைப் பார்த்தீர்களா? தனது 380வது குறளில் விதிதான் வலியது என்றும், மனித முயற்சியை முறிக்கும் வல்லமை கொண்டது விதின்னு விதிக்கு துதி பாடிவிட்டு அய்யன் திருவள்ளுவர் 620வது குறளில் அந்தர்பல்டி அடித்து சோம்பித்திரியாது உழைத்தால் அவர் பின் ஓடி ஒளிந்து கொள்ளும் விதி என்கிறார்.

அரசியல் திரா"விடம்" பேசும் பகுத்தறிவுகளின் பகவத் கீதை ஆராய்ச்சி-அனாடமி-டிசெக்சன் என்பதன் படி பகவத் கீதை என்பது பார்ப்பனீய வர்ணாசிரமத்தை நிறுவி, பதவி, அரசுக்காக கொலை செய்யத் தூண்டும் நூலை கிருஷ்ணன் சொன்னான் எனும் அளவுகோல் வைத்து அளந்தால் அய்யன் திருவள்ளுவர் அய்யோ என்று திரு திருன்னு வல்லமை இழந்து பேசா நா இரண்டுடையாய் போற்றி-க்குத் தகுதி உடையவர் ஆகிறார் இல்லையா?

திரா"விட" பகுத்தறிவுக்கு ஸ்டிரிக்ட்டாக "கெட் அவுட்" சொல்லி ஒருவன் தனது இயல்பான பொது அறிவோடு திருக்குறளைப் படித்தால் திருவள்ளுவர் சொல்வது புரியும். விதியை யாருக்கு, எப்போது, எந்தச் சூழலில் சொல்கிறார் என்றும் புரியும்.

380வது குறளில் தன்னால் இயன்ற எல்லாவிதமான முயற்சிகளும் முயன்று செய்துவிட்டும் தோல்வியைத் தழுவிகிற சூழலில் அய்யன் திருவள்ளுவர் அவனைத் தோளில் தட்டிக்கொடுத்து " அய்யா மனித முயற்சியினும் விதி பெரியதல்லவா" என்று தேறுதல் சொல்வது புரியும்.

620வது குறளில் காலை 10மணி வெயில் முகத்தில் விழத் தூங்கி வழிந்து சோம்பிச் செயல் பட்டுவிட்டு தோல்வியைச் சந்திக்கும்போது எல்லாம் என் தலைவிதி என்று சொல்பவனுக்கு அய்யன் திருவள்ளுவர் அதிரடியாகச் "சோம்பலின்றி, உழைத்துக் களைத்துச் செயல்படுபவனாயிரு...விதி உன்பின்னே ஒளிந்து கொள்ளும் என்று கடிந்து கொண்டு சொல்கிறார் என்பது பொது அறிவோடு நோக்கினாலே புரியும்.

வள்ளுவர் இருவிதமாக விதியைப் பற்றிச் சொன்னது என்பது குணாதிசயங்களால் வேறுபட்டு அதனால் வேறு வேறு மனோநிலைகள் கொண்ட மனிதர்களின் முற்றிலும் வேறுபட்ட செயல்பாடுகளை முன்கூட்டியே நினைவில் இருத்தி அவரவர்க்கு உகந்ததைப் பின்பற்றி மேம்படவேண்டும் என்பதாலேயே.

அரசியல் திரா"விட"ப் பகுத்தறிவோடு , பகவான் கிருஷ்ணன் -பகவத்கீதை வர்ணாசிரமம் போதிக்கும் கொலைநூல் மட்டையடி அளவுகோல் கொண்டு அளந்து அய்யன் வள்ளுவர் தன் திருக்குறள் மூலம் கர்ணம் / அந்தர்பல்டியடித்து ரெட்டைநாக்கு காட்டியிருக்கிறார் என்போமா?

ஈவெரா தந்த பகுத்தறிவும்- உலகப் பொதுமறை திருக்குறளும் உலகத் தமிழனின் இருகண்கள்.

உலகப்பொதுமறை படித்து அறிய பொது அறிவு போதும். மறை கழன்று அவதிப்பட வேண்டும் என்றால் பகுத்தறிவை நாடவும். :-))

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, March 03, 2007

(125) கடவுள் வெங்காயம் - வெங்காயம்-ஈவெரா

வெங்காயம் ஈவெரா இந்துமதமும் அதன் கடவுளர்களும் வெங்காயம் மாதிரி வித்து இல்லாத, வெறும் தசைன்னு தத்து பித்துன்னு தத்துவ முத்து உதிர்த்ததை பகுத்தறிவுகள் இந்த அறிவற்ற உரையை அறிவுரைன்னு கும்மியடிப்பது காமடியா இருக்கிறது.

ஈவெராவின் பகுத்தறிவு அறிவுரை:

* எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே வெங்காயம் என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது. வெறும் தசை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம். அதாவது உயிரற்ற உடல், விதை இல்லாதது. உரிக்க உரிக்க தோலாகவோ, தசையாகவோ வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையாய் முடிவது என்று பொருள்.

ஐயா பகுத்தறிவுகளா, மற்ற காய்கனிகளுக்கு வித்து என்று தனியாக வேண்டும். மீண்டும் முளைத்து வருவதற்கு. ஆனால் வெங்காயத்துக்கு அப்படி ஏதும் இல்லை. ஏன்னா வெங்காயத்தில் அனைத்தும் வித்து. மொத்த வெங்காயமே வித்து. அதாவது மொத்தமுமே உயிருள்ளது. விதை என்று தனியாகத் தேவைப்படாதது.

இந்து மதமும், சனாதன தருமமும் வெங்காயம் மாதிரியே தோல், தசை, வித்துன்னு தனியாக பாகுபாடு இல்லாது நேற்றைய தசை இன்றைய தோலாக மாதிரி பாதுகாப்புச் செய்ய தோலும் தசையும் இணைந்து மொத்தமாக் வித்தாகி தொடர்ந்து முளைத்துக்கொண்டே இருக்கும்.

தலையில் பகுத்தறிவு கொதித்துப் பொங்கி வழியும் போது கண்ணை மறைத்துக் குருடனாக்கும். மொத்தமும் விதையான வெங்காயத்தில் விதையைத் தேடித் தேடியே உரித்து உரித்து ஓய்ந்து மாய்ந்து போகவைக்கும் பகுத்தறிவு.

பொது அறிவு இருந்தால் வெங்காயம் என்பதே விதை தான் என்பது தெரியும்!
அது மாதிரி இந்துமதம், சனாதன தருமத்தில் கடவுள் இருப்பு என்பதும் எங்கும் நிறைந்தது என்பதும் புரியும்.


அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, March 01, 2007

(124) பகுத்தறிவு சுனாமி தமிழகத்தில் ஒழித்த சாதி பேதம்

விளாங்குடி பாண்டியன் டூரிங் டாக்கீஸ். ஊருக்கு வெளிப்புறமாக டிடிஎஸ் எபெக்ட் அமையப்பெற்ற திரையரங்கு என்பதைச் சொல்லும் விதமாக குழாய் ரேடியோ ஸ்பீக்கர்கள் மூங்கில் கம்பத்தில் கட்டப்பட்டு இருந்தது.


தினசரி ரெண்டு காட்சிகள்தான். வாரவிடுமுறை ஞாயிற்றுக்கிழமை மட்டும் மூணுகாட்சிகள் ஓடும் டூரிங் திரையரங்கம் பாண்டியன்.

அன்றைக்கு ஞாயிறு மத்தியான மேட்னி ஷோவின் ரெண்டாவது இடைவேளையின் போது புரொஜெக்டர் ரூமில் அடுத்த ரீலை மாட்டிக் கொண்டிருந்தார் திரையரங்க மேலாளர் கம் ஆபரேட்டர் கம் பார்ட்னரான பாண்டியன்.

பழைய டப்பிங் திரைப்படங்கள் அடிக்கடி ஓடும் திரையரங்கம். திரையரங்க பார்ட்னர் பாண்டியன் சல்லிசாக வந்த பழைய டப்பிங் மலையாள மம்மூட்டி நடித்த திரைப்படம் இப்படி திடீர்ன்னு தீமூட்டி விவகாரம் ஆக்கும்னு எதிர்பார்த்திருக்கவில்லை.

மீண்டும் சாதிப்புழுதியைக் கிளப்பி முன்போல் புகழுச்சிக்கு எப்படியாவது வரவேண்டும் என்ற பசியோடு காத்திருந்த பழுப்புச்சட்டைப் பகுத்தறிவுக் கட்சிக்கு நகரத்துக்கு வெளியே விளாங்குடி பாண்டியனில் ஓடும் பழைய மலையாள டப்பிங் திரைப்படத்தை வைத்து சாதிபேதத்தின் மீது மீண்டும் விளக்கு வெளிச்சம் போடக் கிடைத்த சந்தர்ப்பம் என்று உடனடியாகச் செயலில் இறங்கியது.

பழுப்புச்சட்டைப் பகுத்தறிவு இயக்கக் கதிரவனுக்கு போன் போட்டான் சக போராளி பரமு. கதிரவா எங்கே இருக்க? இப்போ தமுக்கம் "தேவர்" சிலை அருகே இருக்கேன் வர்ற வழியில் சிம்மக்கல்ல "நாடார்" ஹார்டுவேர்ஸ் கடையில் கருப்பு பெயிண்ட், பிரஷ் வாங்கிட்டு ஒரு பத்துநிமிஷத்தில் அரசரடியில் இருப்பேன்.. வந்ததும் உடனே ஊர்வலமாக் கிளம்பிடலாம்.. பேனருக்கு மல்லுத்துணி "செட்டியார்"கடையில வாங்கிக்கோன்னு போன் இணைப்பைத் துண்டித்தான்.

அவசர அவசரமாக எதிர்ப்பு வாசக பேனர்கள் தயார் செய்யப்பட்டன. கருப்பு பெயிண்ட், தார் டப்பாக்கள் சகிதம் கிளம்பினர் ரெண்டு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் விளாங்குடி பாண்டியன் திரையரங்கை நோக்கி.

அரசரடியிலிருந்து ஆட்டோவில் வந்த பகுத்தறிவுத் தோழர்கள் காளவாசலில் காத்திருக்கும் சகாக்களுடன் கூட்டமாகச் சேர்ந்து பேனர்களுடன் நடக்க ஆரம்பித்தனர். ஃபாத்திமா பெண்கள் கல்லூரி அருகாமையில் கூடுதலாக வீரம் குரலில் தெறிக்க ஆர்ப்பாட்ட கோஷங்கள் முழங்யபடியே முன்னேறினர்.

பகுத்தறிவுப் போராட்டத் தோழர்களில் ஒருவனான பரமு வழியில் எதிர்ப்பட்ட சாலையோர பனைமரத்தடியில் இருந்தவாரே எல்லோருக்கும் அருள்பாலிக்கும் "வழிவிடும் பெருமாளிடம்" தான் பங்கேற்கும் பகுத்தறிவு ஆர்ப்பாட்டம் வெற்றியடைய வேண்டும் என மனமுருக வேண்டிக்கொண்டான்.

பரமுவின் பழுப்புச்சட்டை பகுத்தறிவுச் சீருடையால் மதிய வெய்யில் உண்மையாகவே கொளுத்தியதில் வியர்வை விடுதலை அடைந்து சட்டை முதுகோடு ஒட்டிக்கொண்டது (பரமு பகுத்தறிவுக் கொள்கையில் ஒட்டிக்கொண்டமாதிரி).

பரவை, சமயநல்லூர், சோழவந்தான் செல்லும் 29 நம்பர் நகரப்பேருந்துகளும் வாடிப்பட்டி விரையு, 71ம் வழித்தடப் பேருந்துகளிலும், திண்டுக்கல் செல்லும் வயிரவன், நல்லமணி, சோலைமலை பேருந்துகளின் பக்கவாட்டில் தட்டி போராட்டத்தை, ஆர்ப்பாட்டத்தை வலுப்படுத்தியபடியே விளாங்குடி பாண்டியன் திரையரங்கை முற்றுகையிடுகின்றார்கள்.

சாதிப்பெயர் பெயராகக்கொண்ட திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கம் ஒழிக! திரைப்பட இயக்குனர் ஒழிக! அதில் நடித்த பார்ப்பன அடிவருடி மம்மூட்டி ஒழிக என கோஷமிட்டபடியே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்தச்சொல்லி பரமுவுடன் நான்கைந்துபேர் சென்று ஆபரேட்டர் ரூம் கதவைத் தட்டி குரலெழுப்புகின்றார்கள்.

அடுத்தகுழு கையோடு எடுத்துவந்த கருப்பு பெயிண்டால் ஓடிக்கொண்டிருக்கும் டப்பிங் மலையாள மம்மூட்டி பட போஸ்டர்களில், நகரும் விளம்பரத்தட்டியில் இருக்கும் திரைப் படத்தின் பெயரின் மீது கரிபூசி அடிக்கின்றார்கள். திரையரங்க வளாகத்தில் இருக்கும் போஸ்டர்களைக் கிழிக்கின்றார்கள்.

மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி நடித்த "அய்யர் தி கிரேட்" திரைப்பட போஸ்டருக்குக் கறுப்பு பெயிண்ட் அடித்துப் போராட்டக்குழு சாதி ஒழிப்புச் செய்ததில் "தி கிரேட்" என ஆக்கி கிரேட் ரெவல்யூஷன் செய்த திருப்தி அடைந்தனர்.

போராட்டாம், ஆர்ப்பாட்டம் எனத் தகராறு பெரிதாகி போலீஸ் கீலீஸ் வந்தால் டூரிங் பெர்மிட்டை எடு காலாவதியாகி ரெண்டாண்டு ஆச்சே என்று செலவு பெரிதாகவருமே என்பதால் வந்த பதபதைப்புடன் ஓடோடி வந்த திரையரங்க பார்ட்னர் பாண்டியன் போராட்டக் குழுவின் தலைவனான கதிரவனை இன்ஸ்டண்ட் அன்பால் கிரஹணம் போல் அரவணைத்தார்.
அடுத்த ஷோவுக்கு படத்தை மாற்றுவது என்று ஒப்புக்கொண்டார்.

மலையாள டப்பிங் படமான, சாதிபேதத்தைத் தூண்டிடும் படமான, சமூகப் பிளவுக்கு வழிகோலும் திரைப்படமான "அய்யர் தி கிரேட்"டுக்கு எதிராக ஆர்ப்பரித்து, விழிப்புணர்வுடன் போராடிய பழுப்புச்சட்டைப் பகுத்தறிவு இயக்கக் கதிரவனையே அடுத்த ஷோவுக்கு வேறு திரைப்படங்கள் இரண்டில் ஒன்றை மாற்றாகத் தெரிவு செய்ய வேண்டினார் பார்னர் பாண்டியன்.

பழுப்புச் சட்டை பகுத்தறிவுக் கதிரவனுக்குப் பாண்டியன் டூரிங் திரையரங்க பார்ட்னர் பாண்டியன் மாற்றாகத் தந்த படங்கள் : 1. தேவர் மகன் 2. சின்னக் கவுண்டர் 3. கவுண்டர் பொண்ணா கொக்கா?

பார்ட் டைமாக "பரவை சரக பாயும்புலி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளலரான" பகுத்தறிவுக் கதிரவனுக்கு தேவர்மகனாக ஆரம்பித்து சண்டியராக விவகாரமாகி விருமாண்டியாகி தற்போது பத்து அவதாரம் எடுத்துவரும் கமலஹாசன் காலடிமண்ணைப் போற்றிப்பாடுவதா என எண்ணங்கள் ஓடியது.

போராட்டம் ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டு ஏற்பட்ட சமரசத்தைத் தெரிவிக்கும் விதமாக பார்னர் பாண்டியன் அருகாமை புரோட்டா ஸ்டாலில் இருந்து அவசரமாகத் தருவித்த பரோட்டா, குஸ்கா, சிக்கன் லெக் பீஸை சுவைத்தபடியே பகுத்தறிவுக் கதிரவன் அய்யர் தி கிரேட்டுக்கு மாற்றாகப் தெரிவு செய்த படம் "சின்னக் கவுண்டர்".

சிக்கன் லெக் பீஸ் எலும்பு பீஸ் பீஸாகும் படி கடித்தபடியே பகுத்தறிவுக் கதிரவர் சொன்னார்: "பாண்டிண்ணே சின்னக்கவுண்டர்ல நம்ம "கவுண்ட"மணியோட காமடி சூப்பர்ன்னே... சுகன்யா தொப்புள்ள பம்பரம் விடுற சீன் சூப்பரா இருக்கும்ணே! அதுக்காவே நாலுவாட்டி பார்க்கலாம்ணே!

திரையரங்க பார்னர் பாண்டியன் மெதுவாகத் தனக்கு மட்டும் கேட்கும் குரலில் ( போலீஸ் வந்து டூரிங் பெர்மிட் காலாவதின்னு அஞ்சாயிரம் குடு.. பத்தாயிரம் குடுன்னு அஞ்சாமக் கேப்பானுங்க... பகுத்தறிவோட ஏதோ நான் இப்பச் செயல்பட்டதால் புரோட்டா, குஸ்கா, கோழிக்கால்ன்னு அறுநூத்தம்பது ரூவாயோட போச்சு)

மாலைச்சுடரொளியில் செய்தியாக வந்தது விளாங்குடியில் பழுப்புச்சட்டை இயக்கத்தார் பகுத்தறிவுக் கதிரவனாக ஆர்ப்பரித்துப் போராடிச் சாதி பேதம் ஒழித்தனர் என்று.


அன்புடன்,

ஹரிஹரன்